Sign in to follow this  
தூயா

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது

Recommended Posts

அப்பம் தயாரிக்கும் முறை

*********************** - தலைப்பை திசைமாற்றும் கருத்து நீக்கப்படுகிறது - யாழினி

அப்பம் எல்லாம் செய்து சாப்பிட்டும் இருப்பினம் இனி சும்மா நகைசுவையாய் பேசினா தப்பா? :cry:

வாங்கோ யாழ்ப்பாணம் பக்கம் வருவிங்கள் தானே? அப்போ ஈ.பி.டி.பி ட சொல்லி கொடுத்து விடுறன் :twisted:

என்னது தலைப்பை திசை மாற்றினீங்களா வினித் :shock:

எப்படி? "குரக்கன் புட்டு தயாரிக்கும் முறை" எண்டு எழுதினீங்களா? :roll: :wink:

என்னாங்கடா இது அப்பத்தை பத்தி பேசினாலும் வெட்டுறாங்க - குப்பத்தை பத்தி பேசினாலும் வெட்டுறாங்க :x :?

Share this post


Link to post
Share on other sites

தோசை சுடும் போது அல்லது அப்பம் சுடும் போது அவை சட்டியில் ஒட்டாமலிருக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் பாதித்துண்டின் வெளிப்பக்கத்தில் முள்ளுக்கரண்டியை குத்தி கைபிடியாக வைத்துக் கொண்டு உள் பகுதியால் எண்ணெய்யை தொட்டு சட்டியில் தடவி விட்டு இப்போது சுட்டுப் பாருங்கள் சட்டியில் ஒட்டவே ஒட்டாது.

நல்ல காலம் தம்பி எண்ணெயை தொட்டு சட்டிலை தடவச் சொன்னீர் நான் நினைச்சன் மனிசிலை தடவுறதோ எண்டு அது சரி நான் செய்யிற முறையையும் சொல்லுறன் ஒட்டாமல் இருக்க சட்டிலை கொஞ்ச உப்புக்கல்லைப் போட்டு வறுத்திட்டு பிறகு மாவை ஊத்திறனான்.........சும்மா அந்தமாதிரி எடுபடும்

Share this post


Link to post
Share on other sites

தோசை சுடும் போது அல்லது அப்பம் சுடும் போது அவை சட்டியில் ஒட்டாமலிருக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் பாதித்துண்டின் வெளிப்பக்கத்தில் முள்ளுக்கரண்டியை குத்தி கைபிடியாக வைத்துக் கொண்டு உள் பகுதியால் எண்ணெய்யை தொட்டு சட்டியில் தடவி விட்டு இப்போது சுட்டுப் பாருங்கள் சட்டியில் ஒட்டவே ஒட்டாது.

வசம்பு நீங்கள் சொன்னது நல்லமுறை- நிறையபேர் பாவிக்கிறது- அதேநேரம்- வெங்காயத்தையும் பாவிக்கலாம் நீங்க சொன்ன முறையில்-!

கொஞ்சம் நல்ல வாசமும் வரும்! 8)

Share this post


Link to post
Share on other sites

ஆஹா ஆஹா நளபாகம் நாங்களும் சமைப்போம்...போட்டி போட்டுக்கொண்டு அள்ளி விடுறாங்கப்பா...

ம்ம்ம்ம் பொண்ணுங்களுக்கு தெரியாதது எல்லாம் ஆண்களுக்கு தெரிஞ்சு இருக்கு சபாஷ்.... :lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

சுண்டல்- புலம்பெயர்ந்த நாடுகளில ஆண்கள்தான் சமையலில் - எக்ஸ்பேர்ட்- இல்லையா? அது தானா வந்த திறமை இல்ல- நூறு கறி சட்டியை எரிய வைச்சு - கடைசியா நாங்களா கண்டு பிடிச்ச திறமை :wink: :wink: :lol:

Share this post


Link to post
Share on other sites

எரிய வைச்சா இல்ல எறிய வைச்சா? :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

எரிய வைச்சா இல்ல எறிய வைச்சா? :lol:  :lol:

இரண்டும் தான்.. எரிஞ்சா.... எறியதானே வேணும்....இதை போய் பப்ளிக் ல கேட்டுக்கொண்டு........ :cry:

Share this post


Link to post
Share on other sites

சுண்டல் சுடாமல் சுயமாக எழுதியது:

ஆஹா ஆஹா நளபாகம் நாங்களும் சமைப்போம்...போட்டி போட்டுக்கொண்டு அள்ளி விடுறாங்கப்பா...

ம்ம்ம்ம் பொண்ணுங்களுக்கு தெரியாதது எல்லாம் ஆண்களுக்கு தெரிஞ்சு இருக்கு சபாஷ்.... :lol::lol::lol:

அப்பு சுண்டல் சமையலில் ஆண்களின் திறைமையைக் காட்டியவர் நளன் என்பவர் தான். அதனால் தான் சமையலை நளபாகம் என்கிறார்கள்............ :P :lol: :P :D

Share this post


Link to post
Share on other sites

ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:

இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது

:wink: :wink: :wink:

நல்ல சட்டி எண்டாலும் முதல் 2,3 அப்பம் கொஞ்சம் ஒட்டி பிரச்சனை குடுக்கிறதே..அதைத்தான் சொன்னேன்..

ஆனால் உங்களுக்கு என்னைப்பார்த்தா எப்பவும் நக்கலாத்தான் தெரியுது...ஆன்டி ஓட ஒரு அப்பொய்ன்மென்ட் வைக்கணும்.. :evil:

Share this post


Link to post
Share on other sites

சுண்டல் சுடாமல் சுயமாக எழுதியது:

ஆஹா ஆஹா நளபாகம் நாங்களும் சமைப்போம்...போட்டி போட்டுக்கொண்டு அள்ளி விடுறாங்கப்பா...  

ம்ம்ம்ம் பொண்ணுங்களுக்கு தெரியாதது எல்லாம் ஆண்களுக்கு தெரிஞ்சு இருக்கு சபாஷ்.... :)  :D  :D    

அப்பு சுண்டல் சமையலில் ஆண்களின் திறைமையைக் காட்டியவர் நளன் என்பவர் தான். அதனால் தான் சமையலை நளபாகம் என்கிறார்கள்............ :P  :D  :P  :D

:oops: :oops: :oops:

Share this post


Link to post
Share on other sites

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது :P .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு

ம் அதுவும் சரிதான் அப்போ ஈஸ்ட் தான் ஒரே வழி.

உங்களைதான் இளைய தளபதி என்று கூப்பிட்டேன் குளம். தெரியாத மாதி கேக்காதீங்க :wink:

Share this post


Link to post
Share on other sites

ம் அதுவும் சரிதான் அப்போ ஈஸ்ட் தான் ஒரே வழி.

உங்களைதான் இளைய தளபதி என்று கூப்பிட்டேன் குளம். தெரியாத மாதி கேக்காதீங்க :wink:

ஓ குளம் அண்ணாதான் யாழ் கள இளைய தளபதியா :P :P

செய்முறைக்கு நன்றியண்ணா :P

Share this post


Link to post
Share on other sites

என்ன அப்பம் இன்னும் புளிச்சு கொண்டு இருக்கு யாராவது சுட்டு முடியுங்கோப்பா :evil: :evil:

Share this post


Link to post
Share on other sites

அப்பம்!!

 
 
Capture-74.jpg

 

 

தேவையானவை

பச்சரிசி – அரை கிலோ
புழுங்கல் அரிசி – அரை கிலோ
தேங்காய்ப்பால் – 2 கப்
சமையல் சோடா,உப்பு – தேவையான அளவு
உளுந்து – 1 கைப்பிடி
வாழைப்பழம் – 1

செய்முறை:

அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து கிரைண்டரில் வாழைப்பழமும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.இரவு படுக்ககும் முன் உப்பும் ,சோடா மாவும் கலந்து வைக்கவும். காலையில் அப்பச்சட்டியில் அப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

https://newuthayan.com/story/15/அப்பம்.html

 

 

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

 

எல்லோரும் விரும்பும் உணவு ஆப்பம் . அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ.சூப்பர்ர். வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது. உடலுக்கும் நல்லது.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml)
உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது)
ஆப்பசோடா / சமையல் சோடா : 2 சிட்டிகை
உப்பு : சிறிது
தேங்காய் : 1
சர்க்கரை : தேவைக்கேற்ப
கவனிக்க : மேலுள்ள கைப்பிடி அளவிற்கும், படம் 2ல் உள்ள பிடிக்கும் வித்தியாசம் இருக்கு. படம் 2ல் இருப்பதைப்போல அளவெடுக்கக்கூடாது.

செய்முறை

பச்சரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக 2-3 மணிநேரம் ஊறவைத்து, வெண்ணெய்ப்போல அரைத்து, மாவிற்கு தகுந்த உப்பில் கால் பகுதி மட்டும் சேர்த்து கரைத்து வைத்துவிடவும். இரவே மாவை தயார் செய்து வைத்துவிடவும்.

காலையில், 4-5 கரண்டி மாவை வேறொரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் விட்டு தோசைமாவை விட சற்றே நீர்க்க கரைத்து, சமையல் சோடா சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

ஆப்பத்திற்கு என தனியாக நான்ஸ்டிக் வாணல் இருக்கிறது, எனக்கு
தோசைக்கல்லிலேயே (சற்று குழிவானதாக இருக்கவேண்டும், நான் ஸ்டிக் தோசைக்கல் இதற்கு சரிவராது) செய்து பழகிவிட்டதால், வாணல் பயன்படுத்துவதில்லை.

வாணல்/தோசைக்கல் எதுவாக இருந்தாலும் நன்கு சூடானவுடன் லேசாக எண்ணெய்த்தொட்டு தேய்த்துவிட்டு, (நான்ஸ்டிக் வாணலிற்கு எண்ணெய் தேவையில்லை) நடுவில் மாவை ஊற்றி, வேகமாக எடுத்து ஒரு சுற்று சுற்றி தோசை போல வடிவம் வரசெய்துவிட்டு, நடுவில் தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை ஊற்றி, சரியான அளவு மூடியால், மூடிவிட வேண்டும்.

முதலில் தீ பெரியதாகவும், ஆப்பம் ஊற்றியப்பிறகு தீயைக் குறைத்துவிடவும், 1-2 நிமிடத்தில் வெந்துவிடும், திருப்பிப்போடாமல் எடுத்தால் ஆப்பம் ரெடி.. !!
தேங்காய் பால் செய்முறை : தேங்காய்யை கீணி, சிறுத்துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியானவுடன், தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.

மாவு சலிக்கும் சல்லடையை ஒரு அகலமானப்பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்தக்கலவையைக் கொட்டி பாலை பிழிந்து எடுக்கவும். பிழிந்த தேங்காய்யை திரும்பவும் ஒரு தரம் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, இன்னொரு முறை பாலை பிழிந்து எடுக்கவும்.

பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். ஆப்பம் தயார் செய்யும் முன்பே தேங்காய் பாலை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.

ஆப்பம் சுட்டு எடுத்தவுடன், ஓரங்கள் மடங்கிய தட்டில் வைத்து, தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.1487243718-7373.jpg

 

 

https://tamilbeauty.tips/37351

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this