Jump to content

கணினி ஓவியம் (digital imaging)


Recommended Posts

இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள படங்க கணினி மூலம்

உருவாக்கப்பட்டவை. நிழற்படங்கள் சிலவற்றை பயன்படுத்தி

இவற்றை உருவாக்கியிருக்கிறேன். ஒவ்வொரு digital images

செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை

எவ்வளவாக இருக்கும் என்பதை ஊகித்து சொல்லுங்கள்

பார்ப்போம். இந்த படங்களில் என்ன விடயங்கள்

வெளிப்படுகின்றன? படத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது - உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

படம் 1:

palmen_screen_167.jpg

படம் 2:

strand_screen_311.jpg

படம் 3:

luft_screen_587.jpg

மேற்கண்ட படங்களுக்கும், என்னால் உருவாக்கப்பட்ட இன்னும் சில படங்களுக்குமான ஈழத்துக் காட்சிப்படங்களை தந்துதவிய மகிழன் அண்ணாவுக்கு (அருச்சுனா இணையத்தளம்) இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகள். அதேபோல் படங்கள் தேடுவதில் உதவிபுரிந்த குளைக்காட்டானுக்கும், அருவிக்கும் மனமார்ந்த நன்றி. :lol:

Link to comment
Share on other sites

இளைஞன் நன்றாக இருக்கிறது. படங்களை எண்ணி ஆறுதலாக சொல்லுகிறேன். :lol:

கருத்து: புலம் பெயர் இளைஞனின் புலம் பெயர் வாழ்சூழலையும், தாயகம் சார் வாழ் சூழலையும் ஒப்பு நோக்கல் என்று சொல்லலாமா?? என்னவோ நீங்களே சொல்லிடுங்க பிறகு.

Link to comment
Share on other sites

படங்கள் 3ம் அருமையாக இருக்கு... முதல்ப்படத்தில 5 படம் வெளிப்படையாத்தெரியுது...! ஆனால் பின்னணி நிறப்படங்கள் எல்லாம் சேர்த்திருந்தால் படங்கள் கூடுதலாக இருக்கும்...! உண்மையில் எத்தினை படங்கள் இளைஞன்..??? :P :P :P ஏழு படங்களா..???

Link to comment
Share on other sites

இளைஞன் கார் நிக்கிற மாதிரி தெரிதே. அது ஓடுதா நிக்குதா. இல்லப்பா கார் சில்லு சுத்துற மாதிரி தெரியல அதுதான் கேட்டன் :wink: :roll:

நிக்கிற கார் இப்படி புகை கக்குதா :roll:

பிறகு சொல்லக்கூடாது அது ஸ்ராட் பண்ணி நிக்குது எண்டு :twisted:

Link to comment
Share on other sites

இளைஞன் கார் நிக்கிற மாதிரி தெரிதே. அது ஓடுதா நிக்குதா. இல்லப்பா கார் சில்லு சுத்துற மாதிரி தெரியல அதுதான் கேட்டன் :wink:  :roll:  

நிக்கிற கார் இப்படி புகை கக்குதா :roll:  

பிறகு சொல்லக்கூடாது அது ஸ்ராட் பண்ணி நிக்குது எண்டு :twisted:

அந்தப் பொம்பிளைப் பிள்ளை போகுது எண்டும் பாக்காமல் இப்பிடித்தண்ணி அடிச்சுக் கொண்டு போறார் போலவும் கிடக்கு... கவனம் பிள்ளை கல்லால எறியமுன்னம் ஓடித்தப்ப வேணும்... :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

நன்றி அனைவரது கருத்துக்களுக்கும்.

குளைக்காட்டான், நீங்கள் சொன்ன கருப்பொருள் சரியானதே. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்த இளைஞன் ஒருவனின் தாயகம் மீதான மோகம் தான் கருப்பொருள்.

தல, எத்தனை படங்கள் என்று பின்னர் சொல்கிறேன். ஒவ்வொரு படத்திலம் என்னெ்ன படங்கள் தனிப்படங்கள் என்று சொல்லுங்கள் பார்ப்பம். :lol:

அருவி, சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். கார் சில் சுத்துவது போன்று செய்யவில்லை. அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதை விட வேறு சில லோஜிக் பிழைகளும் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம். :lol:

Link to comment
Share on other sites

அந்தப் பொம்பிளைப் பிள்ளை போகுது எண்டும் பாக்காமல் இப்பிடித்தண்ணி அடிச்சுக் கொண்டு போறார் போலவும் கிடக்கு... கவனம் பிள்ளை கல்லால எறியமுன்னம் ஓடித்தப்ப வேணும்... :wink: :lol::lol:

ஆகா, காருக்குள் ஆளே இல்லை அதை கவனிக்கவில்லையா தல? :lol:

Link to comment
Share on other sites

படம் 1 - இரண்டு பிரதான காலநிலைகளை வலையங்களைப் பிரதிபலிக்கிறது..! இடைவெப்ப வலைய தாவரங்களும் குளிர்காலம்.. மற்றும் மத்தியகோட்டு வெப்பவலையத்துக்குரிய தாவரங்களும் காலநிலையும்...!

படம் 2 - ஒருவரின் சிந்தனையில் இருவேறு காலநிலைக்குரிய பொழுதுபோக்கு வழிமுறைகளைச் சொல்வதாக நோக்கலாம். அதாவது பனிச்சறுக்கல்..வின்ரரில்...! அவரே சமரில்..பீச் பற்றியும்...அனுபவங்களை ஒப்பீட்டு ரீதியில சிந்திப்பதாக..!

அல்லது வின்ரரில் ஒரு பனிச்சறுக்கலில் ஈடுபடுவரை நோக்கி இன்னொருவர் தனது சமர் பற்றிய எண்ணங்களை மீட்பதாகவும் சொல்லலாம்.

படம் 3 -

நமக்கு மூன்றிலும் படம் 3 மிகப் பிடிச்சிருக்கு.. அழகாக சூழல் (வளி) மாசடைதல் வழி முறைகளையும் அவற்றில் எது ஆதிக்கமானது என்பதையும் சொல்லி...அதன் விளைவுகளையும் சொல்கிறது..! அத்தோடு தொழிற்சாலை மயமாக்கத்தின் பின் முன்னான இயற்கைச் சூழல் மாற்றம் பற்றியும் சொல்வதாக ஒரு பார்வையில் சொல்ல முடியும்...

இன்னொரு பார்வையில் கிராமியச் சூழலில் பசுமைக்குள் உள்ளவர் கைத்தொழில்புரட்சி நோக்கி பயணிக்கும் போது காணும் மாற்றங்கள் மற்றும் அவை தரும் விளைவுகள் பற்றி சொல்வதாகவும் நோக்கலாம்..!

படம் 1 இல் - குறைந்தது 4 படங்கள்

படம் 2 இல் - குறைந்தது 2 படங்கள்

படம் 3 இல் - குறைந்தது 7 படங்கள்..!

Link to comment
Share on other sites

அருவி, சரியாகக் கவனித்திருக்கிறீர்கள்.  கார் சில் சுத்துவது போன்று செய்யவில்லை. அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதை விட வேறு சில லோஜிக் பிழைகளும் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.  :lol:

நானும் சொல்லுறன்...!

சக்கரம் சுத்தவில்லை சரி.........! அதோடு கார் சக்கரம் போன அடையாளம் புல்மீது இல்லை...

கார் ஒரு பக்கம் சரிந்ததுபோல ஒரு நிலை எடுத்து இருக்கு (வில்லுத்தகடு உடைஞ்சிட்டுதோ தெரியல ) :wink: :lol::lol:

மேகம் கறுத்திருக்கும் போது தெளிவான பளீர் எண்ற பச்சை நிறத்திலான புல் வெளி... அனேகமாய் கரும் பச்சையாக இருக்க வேண்டும்...

சுத்தாமலே தண்ணீரை வாரியடிக்கும் சக்கரம்... ( எதோ றோபோ கார் போல கிடக்கு)... :lol: அப்படிக் சீரூந்து தண்ணீருக்குள்ளால் ஓடினால் கலங்காத தண்ணீர்...

தண்ணீரின் பிரதிபலிப்பு தலைப்புக்கு சம்பந்தமாய் இருப்பதால் அது சரியானதே.... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படங்கள் இயற்கைத் தன்மையை எதிர்பார்த்து வரையப்பட்டிருக்கவில்லை என நினைக்கின்றேன். அப்படியாயின் பருவகாலங்களின் இணைப்புக்கள் முரண்பட்டவையாக காட்டப்பட்டிருக்காது. எனவே இது தவறுகளாக கொள்ள வேண்டியதில்லை.

வாழ்த்துக்கள் இளைஞன். சிறப்பான இணைப்பிற்கு.

Link to comment
Share on other sites

முதலாவது படத்தில் 7 இமேஜ் எண்டு நினைக்கிறன்!

பின்னணி- ஐரோப்பிய-ஹைவே போல இருப்பது 1

கார்-கண்ணாடி-2

அதில் தெரியும் காரின் விம்பம்-3

அதுக்கு மேல சாம்பல் கலர் ஸ்பிரே-4

அதுக்கு மேல உள்ள பள்ளம் திட்டு போல் உள்ளது-5

பனைமரங்கள்-6

அதனோடு சேர்ந்த மண்தரை-7

2 வது படத்தில 5 இமேஜ் -

----------------------------

பனியில அவர் சறுக்கி வாறது 1

-மனிதமுகம்-2!!!

அவர் அணிந்து இருக்கும் மூக்கு கண்ணாடி-3 !!

அதில் தெரியும் காட்சி-4!!!

அதுக்கு மேல பெயின்ரிங் ல போய்- வெள்ளை நிறத்தால ஸ்பிரே பண்ணி இருக்கு-5!!!

3 வது படத்தில 7--இமேஜ்

----------------------------

தொழிற்சாலைகள்-1

பின்னால தெரியுற மேகம்- 2

கார் விடுற புகைல இருந்து - தொழிற்சாலை விடுற புகையையும் அதே மாதிரி செய்திருக்கிங்க- போதா குறைக்கு புகை விடுற குழாய்க்கு மேலயும்- புகை கலர் அடிச்சு இருக்கிங்க- :wink:

அது- 3!!

கார்- 4!!

ஈழத்து பட நிழல் - 5!!

அதுக்கு மேல வெள்ளை ஸ்பிரே பண்ணி இருக்கிங்க அது-6!!

7-புல்தரை!!

ஒரு கணிப்புதான் செய்தன் - விடையை சீக்கிரமா சொல்லிடுங்க இளைஞன்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது என்ன software பாவித்து இதை வரைந்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் செய்துபார்க்கலாம் :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும்.

பிறிதொரு பொழுதில் உங்கள் கருத்துக்களுக்கு விளக்கமாக

பதில் எழுதுகிறேன்.

அருண் adobe photoshop மென்பொருள் பயன்படுத்திய இந்த படங்கள் (வெட்டு, ஒட்டு, சுத்தம்) செய்யப்பட்டன.

Link to comment
Share on other sites

ஆகா..இளைஞன்..படங்களை ரொம்ப அழகாக இணைத்துள்ளீர்கள்..அதிலும் கடைசி படம் நன்றாக இருக்கின்றது.. :lol: வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது , வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

தல சரியாகவே கண்டுபிடித்திருக்கிறீர்கள். தண்ணீர் கலங்கினால் தண்ணீரில் தெரிகிற காட்சி தெளிவில்லாமல் போய்விடும் என்பதால் அதனை கலங்கச் செய்யவில்லை. செயற்படுத்துவதற்கு முதலான திட்டமிடலில் சிற்றுந்து தண்ணீர் மேல் இல்லாமல் புற்தரையில் தான் இருந்தது. உண்மைதான் புற்தரையில் அடையாளமே இல்லை. சில்லுச் சுழலவில்லை. அதுதவிர காரின் விம்பம் சாதுவாக தண்ணீரில் தெரிவது போல் செய்திருக்கலாம்.

தூயவன் யதார்த்தம் பற்றியே சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதைப் போல் யதார்த்தம் இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இருவேறு சூழலை, உண்மையில் சாத்தியமில்லாததை ஒரு படத்துக்குள் கொண்டுவருவதே நோக்கம்.

படங்களுக்கான கருப்பொருள் மோகம்.

நான் அதனை தாயகத்தின் மீதான மோகம் என்பதாகவே பொருள்பட செய்திருந்தேன்.

சில படங்களில் சில மேலதிகமாக சில விடயங்களையும் சொல்ல முற்பட்டுள்ளேன்.

உதாரணமாக சுத்தமான காற்று, நீர், வெளிச்சம் போன்றவையை மையப்படுத்தியாதாகவே அமைத்திருந்தேன்.

முதலாவது படத்தில் ஏழு படங்கள் என்பது சரியானதே.

1. பனிபடர்ந்த மரங்கள் அடங்கிய காட்சி

2. நெடுஞ்சாலையும் சிற்றுந்தும் (கண்ணாடியும்)

3. ஈழத்துக் காட்சியில் வானம்

4. ஈழத்துக்காட்சியில் பனைமரங்கள்

5. ஈழத்துக்காட்சியில் தார்வீதி

6. கண்ணாடியில் விழுந்துள்ள நீர்த்துளிகள்.

7. பனித்துகள்கள் (இது கிராபிக் முறையில் செய்யப்பட்டது.)

இரண்டாவது படத்தில் ஏழு படங்கள்

1. சறுக்கி வருபவர்

2. பின்னே தெரியும் வீடும், மலையும்

3. கண்ணாடி அணிந்திருக்கும் முகமும், கண்ணாடியும்

4. அவரணிந்திருக்கும் தொப்பி

5. கடலும் கரையும் தென்னைமரங்களும்

6. வானம்

7. பனித்துகள்கள் (இது கிராபிக் முறையில் செய்யப்பட்டது)

மூன்றாவது படத்தில் ஒன்பது படங்கள்

1. பின்னே இடதுபக்கம் தெரிகிற தொழிற்சாலைகள்

2. வலது பக்கம் தெரிகிற தொழிற்சாலைகள்

3. கருமுகில்கள்

4. நீர்

5. பெண்

6. பனை

7. வானம்

8. புற்தரை

9. தெறிக்கின்ற தண்ணீர் (இது கிராபிக் முறையில் செய்யப்பட்டது)

இந்தப்படங்களே பயன்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு படங்களும் சூழலுக்கு ஏற்றவகையில் சுத்தம் செய்யப்பட்டன. நிறங்கள், வெளிச்சம் - நிழல், அளவு போன்றன சரிசெய்யப்பட்டன.

நன்றி சகி, ஹரி

3 ஆவது படத்துக்கு பயன்படுத்தப்பட்ட படங்கள்:

all3_622.jpg

உருவாக்கப்பட்ட ஈழத்துக்காட்சி

sl_33-kcyxcopie_207.jpg

செயற்படுத்துவதற்கு முதலான திட்டமிடல்

scribbles1_280.jpg

மற்றையவை பற்றி பின்னர்...

Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நண்றி இளைஞன்...! நானும் செய்து பாக்கனும் போல ஒரு ஆசை சரிவந்தால் கொண்டுவந்து போடுகிறேன் இல்லாட்டால் அடக்கிவாசிக்கிறன்.. :P :P :P

Link to comment
Share on other sites

:)

மிகவும் இலகுவான விடயமே. உங்களிடம் கற்பனை வளம் இருக்குமானால், adobe Photoshop மென்பொருளை இலகுவாகப் பயன்படுத்தி Digital Image செய்யலாம். இந்தப் பகுதியை Adobe Photoshop பற்றிய சந்தேகங்களுக்கானதாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதாவது கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால், adobe photoshop மென்பொருளில் உதவிகள் தேவைப்பட்டால் இங்கே எழுதுங்கள். நான் அறிந்ததை, எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

கட்டாயம் நான் வந்து கேட்பேன் இளைஞன்... உங்களுக்கு அலுப்பு இருக்கு... :P :P :P

அதோடு உங்களுக்கு Macromedia Flash, (Player) பற்றிதும் அதோடு அத்தகய அனிமேசன்ஸ் நிறுவத் தெரியுமா..??? எனக்கு ஆலோசனை வேண்டும்..!

Link to comment
Share on other sites

என்னிடம் உண்மையா கார் படம் இருக்கு அதை எப்படி கையால் வரைந்த படமாக மாற்றுவது.

Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நன்றி இளைஞன். நேரம் கிடைக்கும் போது முயற்சித்துப் பார்க்கிறேன். சீம் வெரி இன்ரஸ்ட்டிங் :P :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.