Jump to content

மாந்தோப்பும் மலரும் மானிடரும்..!


Recommended Posts

kuruvi68jb.jpg

குருவி ஒன்று தான் வாழ

தேடியது ஒரு தோப்பு

வந்தது மாந்தோப்பு

வரவினில் கண்டது

ஓர் மலர்

மலரிடை மலர்ந்தது

வாழ்வெனும் வசந்தம்

மலரதும் குருவியதும்

படைக்குது ஒரு காவியம்

அது...

மாநிலத்தில் மானிடர் தாம்

கண்டிடாத புனித காவியம்.

தோப்பருகே ஒரு குடிசை

அங்கும் வாழுது

ஒரு கூட்டம்..!

வஞ்சகமும் பொறாமையும்

அவர்தம் மனங்களில்

கறுவும் மனதை அடக்க முடியா

கலங்கி நிற்குது அவர் சித்தம்..!

கற்பனையில் கூட

அடுத்தவன் வீழ்ச்சியில்

அகம் மகிழவே துடிக்குது..!

பாவம் அவர்

அறிவிருந்தும்

அறியாமையில்...!

தோப்பிருந்த குருவியது

மனமிரங்கி

மலருடனிணைந்து

பாவப்பட்டவர் மீது

ரட்சிக்கிறது

மானிடா....

மனமதில் அமைதி கொள்

வாழ்வதில் சிறப்பாய்

மாற்றானை உன்னில் தரிசி

உன்னை மாற்றான் மதிப்பான்..!

அன்றி...

வாழ்வில் நீயே

உன்னை மிதிப்பாய்

உன் நினைவுகள்

ஓர் நாள்

உன் நிஜம் அழிக்கும்...!

தவறுதலான இங்கு இடப்பட்டுவிட்டது..! தவறுக்கு வருந்துகின்றோம்..! - இது பொழுதுபோக்கில் இக்கிறுக்கல் தவறுதலாக இடப்பட்ட போது எழுதப்பட்ட குறிப்பு

Link to comment
Share on other sites

டோன் வொறி சின்னப்பு..உங்கள் ஆசைக்கு இங்கும் இடப்பட்டுள்ளது. அவர்கள் உங்கள் கருத்தை கவிதைப்பகுதியில் எழுதியதுக்குள் நகர்த்தி விட்டு இதை அகற்றுவார்கள். :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலரும் குருவியுமிணைந்தே

படைக்கட்டும் காவியம்...

மனித மனங்களும்...

மாறட்டும்....

நிழல்கள் நிஜமல்ல

நிச்சயம் ஓர் நாள் அழியுமென்று

ஆறாவது அறிவுடனே...

ஐந்தறிவின் பெயர்கொண்டு

வடித்திட்ட கவிதை சுூப்பர்

தொடரட்டும் உங்கள்..

கவி.....

Link to comment
Share on other sites

அழகான வரிகளில் நிஐ வாழ்க்கையை பற்றி சொல்லி இருக்கிறீர்கள் குருவிகள். நல்லாய் இருக்கின்றது.

தொடர்ந்து எதரிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோப்பிருந்த குருவியது

மனமிரங்கி

மலருடனிணைந்து

பாவப்பட்டவர் மீது

ரட்சிக்கிறது

அப்ப குருவியும் மலரண்ணியும் சிவனும் சக்தியுமாகி அற்பமானிடர் எம்மையெல்லாம் இரட்சிக்க அவதரித்துள்ளனர். எல்லோரும் உங்கள் பாபங்களைப் போக்க குருவியையும் மலரண்ணியையும் வணங்கி குருவிக்கடவுளின் அறிவுரைகளைக் கேட்டு, அவற்றின்படி நடந்து, மற்றவர்களையும் நடக்கத் தூண்டி வாழக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்

Link to comment
Share on other sites

விமர்சனம் தந்த கள உறவுகளுக்கு நன்றிகள்..! :P

குருவிகளின் கிறுக்கலை நகர்த்திய மதனுக்கு நன்றிகள்... இங்கும் இரு தலைப்புகள் உண்டு...அதையும் ஒன்றாக்கி விடுங்கள்..! :P :idea:

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=162068#162068

சில்கு.. கவிதைப் பகுதிக்க போட வேண்டியது தவறுதலா பொழுது போக்கிற்க போட்டுது.. அதுதான் சுட்டிக்காட்டி இருக்கல்ல..!

காவியம்.. புனிதம் அதெல்லாம் அந்தக் குருவிக்கும் மலருக்குமே வெளிச்சம்..மனிதர்களால் உணரக்கூட முடியாத புனிதம் அங்கு உணரப்பட்டிருக்கலாம்..! மலர் ஒன்று மலர்ந்ததும் அதிகாலையில் அதைப் பார்கும் போது வரும் புனிதத்தன்மை..மாலையானதும் வராது. அதைச் சிலர் உணரலாம்..அதுபோல ஒரு நுட்பமான புனித உணர்வாக இருந்திருக்கும்..! குருவி - மலர் என்றாலும்..அதுகளுக்கும் ஒரு புனிதம் இருக்கும்...அது மனிதரால் அடையமுடியாததாக இருக்கலாம்...நீங்கள் மனிதர்தானே நிச்சயம் அந்தப் புனிதத்தை உணர முடியாது போல..! அப்ப குருவி சொன்னதும் நியாயம் தான்..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுபடி மாந்தோப்பா.. வாழ்த்துக்கள் குருவிகள். பாவம் சிலருக்கு ரென்சன் கொடுக்கிறயளே.. :wink: :P

Link to comment
Share on other sites

இந்த தலைப்பை பொழுதுபோக்கு பிரிவில் இருந்து கவிதை பகுதிக்கு நகர்த்திட்டு சென்ற போது இங்கு ஏற்கனவே அதே தலைப்பு இருந்ததை கவனிக்கவில்லை. இப்போது இரண்டு தலைப்பையும் இணைத்துள்ளேன். இதனை தனிமடல் மூலம் சுட்டிகாட்டிய கள நண்பருக்கு நன்றி. காலதாமதமாக இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை வாழ்த்துக்கள் அண்ணா

Link to comment
Share on other sites

நல்ல கவிதை வாழ்த்துக்கள் அண்ணா

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்..! :P

Link to comment
Share on other sites

நன்றாகவுள்ளது கவிதை. ஆனால் உரியவர்களுக்குப் புரியுமா??

Link to comment
Share on other sites

குருவி அண்ணா கவிதை நல்லாயிருக்கு

அதென்ன நீங்க கவிதை எழுதினா மட்டும் விமர்சனம் காரமா இருக்கு

Link to comment
Share on other sites

குருவி அண்ணா கவிதை நல்லாயிருக்கு

அதென்ன நீங்க கவிதை எழுதினா மட்டும் விமர்சனம் காரமா இருக்கு

நன்றி தங்கையே..! :P

அது ஒன்றுமில்ல.. பக்கத்து தலைப்புகளில என்ன மிளகாய் அரைக்கிறீங்கள் என்று கேட்டீங்க என்று வையுங்க...அவையள் இங்காலும் தூவி விட்டிருவினம்..! :wink: :(

---------------

வசம்பு உங்கள் கருத்துக்கும் நன்றி..! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை ரொம்ப நல்லாாாாாாாாாா இருக்கு குருவுி அக்காாாாாாா....... பின்னிட்டீங்க போங்க..............சுப்பர்...... தொடர்ந்து எழுதுங்கக்கா...........உங்கட கவிதைகள வாசிக்க ஆவலா இருக்கிறன்.........

Link to comment
Share on other sites

நன்றி பூனைக்குட்டி...உங்கள் கருத்தூஊஊஊஊஊ க்கு..! :wink: :lol:

நன்றி கவிதன்...என்னடா வந்ததும் வராததுமா கவிக்குட்டி பூட்டுப் போட்டுட்டே என்றிருந்தம்..விரைவா திறந்திட்டீங்கள். :wink: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.