Jump to content

எச். பி. (HP) இன் வெப் ஓஎஸ்(WebOS) வெளியேற்றம்


Recommended Posts

எச். பி. இன் வெப் ஓஎஸ் இன் வெளியேற்றம்

கணணி உலகில் ஒரு பெரிய நிறுவனமான ஹ்லேட் பக்கெட் (Hewllet Packard) நிறுவனம், தனது 'வெப் ஓ எஸ்' (web OS) இனை கரு மென்பொருள் இயக்கியாக (operatin system) கொண்ட உபகரணங்களை செய்யப்போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதனால் இதன் பலகை கணணிகள் விலைகள் பெரியளவில் சரிந்தன.

16GB பலகை கணணிகள் 99USD க்கும், 32GB பலகை கணணிகள் 149USD க்கும் விற்பனையாகின.

கிட்டத்தட்ட 300USD குறைத்து இவை விற்கப்பட்டன. இதனால் பல இடங்களில் சில மணித்தியாலங்களிலேயே இவை முடிந்துவிட்டன. பலகை கணணிகள் விடயத்தில் ஆப்பிள் நிறுவனமே முன்னணியில் உள்ளது.

எச். பி. இன் கைத்தொலைபேசிகளும் இதனால் பாதிக்கப்படும்.

அதேவேளை ஒட்டு மொத்த தனது கணனி வியாபாரத்தை பிரித்து தனி நிறுவனமாக இயக்க உள்ளது.

இதனால் நிறுவனம் பெரிய பயன் அடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் இதன் பங்கை வெள்ளிக்கிழமை விற்றனர், 20 வீதம் வரை இதன் பெறுமதி சரிந்தது. ORACLE நிறுவனம் எச்.பி. இனை வேண்டக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.thestreet...=FREE&cm_ite=NA

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.