Jump to content

கடாபியின் கடைசி நாட்கள்?


akootha

Recommended Posts

கடாஃபியிடம் எவ்வளவு செல்வம் உள்ளது?

நிதி வெளிப்படைத்தன்மைக்காக குரல்கொடுக்கும் மைப்பான குளோபல் விட்னஸ், லிபிய அரசாங்கத்தின் ஒரு சின்ன அங்கமான லிபிய முதலீடுகள் அமைப்பு மட்டுமே சென்ற வருடம் அறுபத்து நான்கு பில்லியன் டாலர்கள் நிதியை தன் வசம் வைத்திருந்தது என்று கூறுகிறது.

இந்த தொகையுமேகூட மொத்த சொத்தில் வேறு ஒரு துளியாக மட்டும் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

லிபியா முதலீட்டு அமைப்பு என்பது லண்டனிலும் பிற இடங்களிலும் உள்ள அலுவலகங்கள் வசமுள்ள உத்தியோகப்பூர்வ நிதி ஆகும்.

இந்த நிதியின் வரவு செலவுக் கணக்குகள் பகுதியளவில் மேற்குலக நிறுவனங்களால் தணிக்கை செய்யப்படுகின்றன. லிபியாவுக்கு என இதுமாதிரியான வேறு பல முதலீட்டு நிதிகளும் உள்ளன. அவற்றில் இந்த அளவுக்கு கூட வெளிப்படைத்தன்மை கிடையாது.

தற்போது லிபியாவில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் வாழுகின்ற அந்நாட்டின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், தான் அறிந்த வகையில் லிபியாவுக்கு வெளிநாட்டு நாணயமாக இருக்கும் நிதிக் கையிருப்பு மட்டுமே 168 பில்லியன் டாலர்கள் வரும் என்று கூறுகிறார்.

லிபியாவுக்கு மேலும் சொத்துகள் இருக்கின்றன. லிபியாவுக்கு உள்ளேயே மிகப் பெரிய முதலீடுகளும், வங்கிக் கணக்குகளும் இருக்கின்றன. இவற்றில் லிபிய தினார்களாக நிதி வைக்கப்பட்டிருக்கலாம்.

இறுதியாக இன்னொரு விஷயத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும், முவம்மர் கடாஃபி பல ஆண்டுகளாக சஹாரா பாலைவனத்துக்கு தெற்காக இருக்கக்கூடிய நாடுகளில் பெருமளவில் முதலீடு செய்து வந்துள்ளார்.

இந்த முதலீடுகளில் சிலவற்றுக்கு குறிப்பாக தொலைதொடர்பு, விவசசாயம் போன்ற துறைகளில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு முறையான ஆவணங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட நாடுகள் இந்த முதலீடுகளை பெரிதும் வரவேற்றும் இருந்தன.

ஆனால் மறுபுறம் கிளர்ச்சிக் குழுக்களுக்கு நிதி வழங்குதல் போன்ற கணக்கில் வராமலும் இரகசியமாகவும் பணப் போக்குவரத்து நடந்துவந்திருக்கவே செய்கிறது.

http://www.bbc.co.uk/tamil/global/2011/08/110830_libyamoney.shtml

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடாபியின் படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 3 மகள்மாரையும் கௌரவ கொலை செய்த தந்தை

9/1/2011 11:42:44 AM

லிபிய மிஸ்ரடா நகரை கைப்பற்றும் நடவடிக்கையின்போது அந்நாட்டு தலைவர் கேணல் மும்மர் கடாபிக்கு விசுவாசமான படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தனது இளவயது மகள்மார் மூவரை தந்தையொருவர் கழுத்தை வெட்டி கௌரவக் கொலை செய்தமை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புதன்கிழமை "த டெய்லி மெயில்' ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மிஸ்ரடா நகரில் கடாபியின் ஆதரவு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலின் போது, தொடர்ந்து இரு வார காலமாக அந்நகர் லிபியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன்போது கடாபியின் படையினர், நூற்றுக்கணக்கான மக்களை மனிதக் கவசங்களாக பயன்படுத்தியுள்ளனர்.

மிஸ்ரடா நகரின் புறநகரப் பகுதியிலுள்ள தொமினியா எனுமிடத்தில் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது, 17 வயது மற்றும் 18 வயதுடைய மூன்று சகோதரிகள் கடாபியின் ஆதரவு படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேற்படி சகோதரிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையை தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட பாரிய அவமானமாக கருதிய அவர்களது தந்தை, தனது கையாலேயே தனது மகள்மார் மூவரையும் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் மேற்படி நகரிலுள்ள முன்னணி மனித உரிமைக் குழு மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இரு சிறுவர்களை பீரங்கிகள் மீது பலவந்தமாக அமரச் செய்த கடாபியின் படையினர் அச்சிறுவர்களது குடும்பத்தினரிடம், ""நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள். நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தினால், நீங்களும் இறப்பீர்கள்'' என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அத்துடன் கடாபியின் படையினர் ஆரம்பப் பாடசாலையொன்றை தடுப்பு நிலையமாக மாற்றி 14 வயது மதிக்கத்தக்கவர்கள் உள்ளடங்கலான சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடாபி பாலியல் வல்லுறவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் தனது படையினருக்கு பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை விநியோகித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

அதே சமயம் கடாபி தனது படையினருக்கு மிஸ்ரடா நகரிலுள்ள பொதுமக்களை பட்டினியால் வாடச் செய்ய உத்தரவிட்டமை தொடர்பான ஆவணப் பிரதிகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பிராந்திய மனித உரிமை குழுவினர் அறிக்கையிட்டுள்ளனர்.

கடாபியின் படையினர் மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவர்களை தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும் கடாபியின் படையினர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிட்டுள்ளது.

http://www.virakesar...asp?key_c=33593

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்ரபோல் கடாபியை தேடுவதாக அறிவித்துள்ளது

சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றின் பிடி ஆணைக்கு அமைய இன்ரபோல் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. லிபிய முன்னாள் சர்வாதிகாரி கேணல் கடாபி அவருடைய மகன் செய்ப் அல் இஸ்லாம், உளவுப்பிரிவு தலைவர் அப்துல்லா சனுசி ஆகியோரை தேடுவதாக அறிவித்துள்ளது.

லிபியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மொத்தம் 30.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த மரணங்கள் தொடர்பான போர்க்குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே இவர்களை உடனடியாக கைது செய்யும் முஸ்தீபுகளில் இன்ரபோல் இறங்கியுள்ளது. இதன் பொருட்டு சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கடாபியை மறைத்து வைத்திருப்போருக்கு பாரிய சவாலாகியுள்ளது. இன்ரபோலுடன் தொடர்புடைய 188 நாடுகளுக்கும் உலகம் முழுவதும் தேடப்படும் மிக மிக முக்கிய நபர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் எந்த நாட்டின் எல்லையை இவர்கள் கடந்தாலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று இன்ரபோல் தலைவர் றொனாலட் நோபல் அறிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=81778

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாபின் கடாஃபி, கியூபாவின் ஃபிடல் கஸ்ரோ போல்... வாழ்ந்திருக்க வேண்டிய மனிதன்.

தன்னாலை தான்... கெட்டான் கடாஃபி. அழிந்து போக வேண்டிய மனிதன்.

Link to comment
Share on other sites

பிறான்ஸ் மற்றும் பிரித்தானிய தலைவர்கள் லிபியத் தலைநகர் ரிறிப்போலி சென்றடைந்தார்கள்.

main_9260.jpg

பிறான்ஸ் ஜனாதிபதி நிக்கொலா சார்கோசியும், பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமெரூனும் லிபியத் தலைநகர் ரிறிப்போலியைச் சென்றடைந்தார்கள்.

சார்கோசி, கமெரூன் ஆகியோருடன் நேட்டோ அமைப்பின் முக்கிய தலைவர்களும் அங்கு செல்கிறார்கள். லிபியா மீது படை நடவடிக்கை எடுக்கும் பிறான்ஸ் ஜனாதிபதி சார்கோசியின் முடிவில் கணிசமான செல்வாக்குச் செலுத்தினாரெனக் கருதப்படும் தத்துவவியலாளர் பேர்ணாட் ஹென்றி லெவியும், சார்கோசியுடன் செல்வாரென எதிர்பார்க்கப்பட்டது.

லிபியாவின் தேசிய இடைக்கால சபை உட்பட்ட மோமர் கடாஃபிக்கு எதிரான அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேட்டோத் தலைவர்கள் சந்திப்பார்கள். ரிறிப்போலியைச் சென்றடைந்துள்ள சார்கோசியும், கமெரூனும் பின்னர் பெங்காசி நகரிற்கும் செல்வார்கள். இதேவேளை, மோமர் கடாஃபியும், அவரது ஆட்சியின் உயர் அதிகாரிகளும், லிபிய அரசின் தங்கக் கையிருப்பு முழுவதையும் எடுத்துச் சென்றார்களென தேசிய இடைக்கால சபை தெரிவித்தது. மோமர் கடாஃபியைக் கைது செய்வதற்கு ஆயுதங்களும், படை நடவடிக்கை மூலமான உதவியும் தேவைப்படுவதாக சபை தெரிவித்தது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9260

Link to comment
Share on other sites

Canada to re-open embassy in Libya

Updated: 2011-09-14 09:51

(Xinhua)

OTTAWA - The Canadian government has sent a team of diplomats into Tripoli to make preparations for re-opening Canada's embassy there and resume diplomatic relations, Foreign Minister John Baird announced Tuesday.

In a brief statement to reporters outside the House of Commons, Baird said Canada now has diplomatic relations with the rebel regime that continued to fight Muammar Gaddafi for control of the north African country.

The team, led by Canadian Ambassador to Libya Sandra McCardell, entered Tripoli over the weekend. It has set up a temporary headquarters because the Canadian embassy, which was damaged in the recent fighting in Tripoli, would need repairs and furbishing.

No exact date for the re-opening of the Canadian embassy in Libya is given for the time being.

More diplomats would soon be sent to Tripoli to open trade and consular offices.

Baird said he didn't expect Gaddafi could re-take power in Libya. "Gadhafi is almost universally isolated. He and those closest to him are on the run."

Canada was one of the North Atlantic Treaty Organization (NATO) countries that supported rebel groups fighting Gaddafi's regime through the spring and summer.

Canada sent six fighter planes and a frigate to join the US, British and other NATO forces. A Canadian general has been leading the NATO mission.

Baird announced Canada would release some $2.23 billion of frozen Libyan assets to the National Transitional Council, the government that has been established by the anti- Gaddafi forces, for humanitarian aid.

"These funds will help the Libyan people in the short and medium term, whether it's helping to pay for police officers or teachers, restoring electricity or water, or helping to ensure hospitals have what they need to operate, this money will help the new government of Libya get back on its feet," Baird said.

"While security still remains a challenge on the ground, life is slowly returning to normal in Tripoli," he said.

"Citizens are resuming their daily activities, the availability of goods is improving and vital services are in the process of being restored in the capital," said Baird, adding the new Libyan regime has not yet shown how it would govern the country, but Canada and other NATO partners expect it to "fulfill its commitments to freedom, to democracy, to human rights and to the rule of law."

http://www.chinadaily.com.cn/world/2011-09/14/content_13682727.htm

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடாபியின் பிரச்சாரப் பீரங்கி கைது

September 30, 2011

musa-300x219.jpg

கடாபியின் பிரச்சார பீரங்கியாக விளங்கியவரும், பொய்களை கூச்சமின்றி எடுத்து வீசக்கூடியவருமான முஸ்தாபா இப்ரகீம் கடாபி எதிர்ப்புப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிற்றா நகரில் இருந்து மிஸ்ராற்றா நகருக்கு தப்பி ஓடிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டதாக ரி.என்.சி போராளிகளின் ஸின்ரன் பிரிகேட் படைப்பிரிவினரின் கட்டளைத் தளபதி முஸ்தாபா பின் டரீப் தெரிவித்தார். இவர் தற்போது வீட்டுக்காவில் வைக்கப்பட்டுள்ளார். கடாபியின் படைகளை நோக்கி நேற்றும் நேட்டோ படைகள் குண்டு வீச்சுக்களை நடாத்தின. கடாபி தமக்கு சில கி.மீ தொலைவிலேயே பின்வாங்கி செல்வதாக போராளிகள் கூறுகிறார்கள். கடாபிக்காக போராடும் கூலிப்படைகள் ஆங்காங்கு கைது செய்யப்பட்டு வருகின்றன.

இது இவ்விதமிருக்க ஏமன், சிரியா நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கான விசைகள் வேகமாக தொழிற்பட ஆரம்பித்துவிட்டன. சிரியா நாட்டில் ஆர்பாட்டம் என்ற போர்வையில் அமெரிக்க தூதராலயம் மீது தாக்குதல் நடாத்த எத்தனிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பலத்த கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=83847

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடாபி படைகள் தோல்வியின் கடைசி விளிம்பில்

கடாபி பிறந்த நகரான சிற்றாவில் மணற்புயல் காரணமாக நிறுத்தப்பட்ட போர் தொடர்ந்து வேகமாக நடைபெறுகிறது. இன்று சிற்றா நகரின் முக்கிய விரைவுச் சாலையை போராளிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளார்கள்.

கடாபியின் படைகள் போர் நடத்தும் கடைசி பாக்கெட் இதுவாகும். இதற்குள்ளும் அவர்கள் தோல்வியை தழுவியபடி உள்ளனர்.

மேலும் சிற்றா நகரின் மையம் வெறும் கால் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சிறிய பகுதி என்று போராளிகள் படைத்தரப்பு தளபதி நாஸர் அபு சைன் தெரிவித்துள்ளார். நேற்று வீசிய மணற் புயல் காரணமாக கடாபி படைகள் வேகமாக முன்னேறி நகர மையத்திற்கு வந்தனர். அதன் பின்னர் மேலை நாடுகளின் உதவியோடு 100 கவச வாகனங்கள், அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு புதிய வீறுடன் சண்டை ஆரம்பித்தது. இப்போது அல்லா ஓ அக்பர் என்றபடி போராளிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே கடாபியின் இறுதி நகரமாகும். ஆனாலும் கடாபியின் படைகள் மிகச் சிறப்பாகவும் படிமுறையாகவும் போரிடுவதை மேலை நாடுகள் இதுவரை மறுக்கவில்லை. உலகத்தை எதிர்த்து ஆறு மாத காலம் அவரது படைகள் தாக்குப் பிடித்தது பெரிய விடயமாகும்.

http://www.alaikal.com/news/?p=84636

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.