Jump to content

கடல்நாகம் சடை விரிக்கும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

img4999f.jpg

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடிகண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

நல்ல படம் valvaizagara, என்ன பாதி வழியில் நிற்காமல் கடலுக்குள் போய் விழு என்று சொல்கின்றீர்களா அந்த பெண்ணை உங்கள் signature ல்

நீங்களும் சடை விரிச்ச மாதிரிதான் உங்கட படத்தை எடுத்திருகிங்க, எந்த beach ல் எடுத்திங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்படத்தில் நிற்பதே நான்தானே என்னைப் போய் நானே சாகடிப்பேனா உடையார்? :rolleyes:

கருத்தை எழுதிய பின்தான், படத்தை உங்கட சிரிச்ச பழைய முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தேன், நல்லா இருக்கு, எனக்கும் கடற்கரையில் தனிய இருக்கதான் விருப்பம், Mount Lavinia Hotel மூலையில் கடலுக்குள் சின்னப் பாறை இருக்கு அதில் மாலை நேரங்களில் போய் இருப்பது வழக்கம், என்ன ஒரு சுகம், அந்த சுகம் இனி 80ல் தான் கிடைக்குமே தெரியா

post-8644-0-13728100-1313808259_thumb.jp

Link to comment
Share on other sites

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

நன்றாக இயற்கையை ரசிக்கும் உள்ளங் கொண்டவர்களில் கவித்துவம் நிறைந்திருப்பதில் ஆச்சரியமில்லைத்தான்..... ! :)

Link to comment
Share on other sites

படம் தெளிவாய் இல்லை வேறை படம் போடவும். <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இயற்கையை ரசிக்கும் உள்ளங் கொண்டவர்களில் கவித்துவம் நிறைந்திருப்பதில் ஆச்சரியமில்லைத்தான்..... ! :)

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் தெளிவாய் இல்லை வேறை படம் போடவும். <_<

எதற்கும் கண்ணாடியை அணிந்துகொண்டு பாருங்கள் சாத்ஸ்.

Link to comment
Share on other sites

கவிதையும் புகைப்படமும் நன்றாக உள்ளன.

அந்தப் பெண்ணின் உடை இன்னும் அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் புகைப்படமும் நன்றாக உள்ளன.

அந்தப் பெண்ணின் உடை இன்னும் அழகு.

:o :o :o

Link to comment
Share on other sites

அக்கா.. படம் நால்லாயிருக்கு..! :)

அதுசரி.. கடல்நாகம் சடைவிரிக்கிறது என்றால் கடல் அலையா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. படம் நால்லாயிருக்கு..! :)

அதுசரி.. கடல்நாகம் சடைவிரிக்கிறது என்றால் கடல் அலையா? :unsure:

நன்றி இசை

கடல்நாகத்தின் சடை என்று அலையைத்தான் குறிப்பிட்டேன்...

முக்கிய குறிப்பு

கடல் நாகத்தின் சடை எங்கே என்று கேட்கக்கூடாது அதிகாலையில் இந்தப்படம் எடுக்கும்போது கடல்நாகம் சடையை ஒடுக்கிவிட்டது ^_^

Link to comment
Share on other sites

கடல் நாகம் என்ற பதம் கடலைக்குறிப்பதாக எனக்குப் படவில்லை. அலை என்பதும் கடல் தான் (ஒருவருடன் கோபம் போட்டுவிட்டு அவருடயை மூக்குடன் மட்டும் நட்புப்பாராட்ட முடியாததைப் போல ☺ ) என்பதால் அலையையும் அந்தப்பதம் குறிக்கமுடியாது. நாகம் என்று மட்டும் கூறப்பட்டிருந்தால் கடல் நாகமாக உருவகப்படுத்தப்படுவதாகக் கருதலாம். ஆனால் கடல் என்ற வார்த்தையும் கூட வருவதால் இது கடலுடன் தொடர்பு பட்ட கடலிற்குப் புறம்பான ஏதோ ஒன்றாகவே இருக்க முடியும். அந்தக் கடலுடன் தொடர்பு பட்ட ஆனால் கடல் அல்லாதது எது என்று படத்தைப் பார்த்தபடி தேட முடியவில்லை ஏனெனில் படத்தில் தெரியும் கடல் தவிர்ந்த அனைத்தையும் மீறி தலைவிரிநத்த மனிதப் பெண் போன்று தெரியும் நிழல் உருவில் காட்சி குவிகிறது. படமும் நிழலாகக் காட்டப்படுவதால் நாகம் என்ற பதம் நிழல் உருவிற்கே மேலும் பொருந்துகிறது.

தலை விரிப்பு என்பது சுதந்திரத்தினைப் பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படலாம் கோபத்தையோ போராட்டத்தையோ குறிப்பதாகவும் பார்க்கப்படலாம். அல்லது இயற்கையில் தலை விரிந்து வளர்;ந்து தான் இருக்கமுடியும் என்பதால் இயற்கையாகவும் பார்க்கப்படலாம். நாகம் என்பது பொதுவில் பயம் சார்ந்து மனிதர்களால் நோக்கப்படுவதாலும் (நல்ல பாம்பு என்று வணங்குவது கூட பயம் சார்ந்து தான்) இக்கவிதை மனிதர்களிற்கானது என்பதாலும் ஒருவேளை இங்கு குறிப்பிடப்படும் தலைவிரிப்பில் ஒரு கோபம் அல்லது பயப்படுத்தல் அடியிழையாய் இருக்கமுடியுமோ என்று தோன்றுகின்றது. ஆனால் அந்தக் கோபமும் கூட சுதந்திரமாக வெளிப்படுத்தப்படக்கூடிய சுற்றாடல் என்பதால் சுதந்திரமும் பொருந்துவதாகவே இருக்கிறது.

ஆனால் இந்த நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசிப்பதற்கு இந்தக் காட்சிக்குள் அகப்படாவிடினும் பிறிதொரு பாத்திரம் இருந்தேயாகவேண்டும். அந்த மூன்றாம் பாத்திரம் அல்லது அந்த பாத்திரத்தின் உரையாக எழுதப்பட்டதாகவே இக்கவிதை அதிகம் ஒத்துப்போகிறது. ஏனெனில் இங்கு இரசிக்பபடவேண்டியதாய் சிபாரிசு செய்யப்படுவது நிழல் உரு. அந்த உருவை ரசித்தபடி அந்த உருவிற்குப் புறம்பாக கண்ணாடி மணலில் கால் புதைத்தபடி நடப்பதற்கு அழைப்பது இந்த மூன்றாம் பாத்திரம் என்பது உடனடியாக ஒத்துக்கொள்ளக்கூடியது.

ஆனால் எஸ்.ஜே.சூரியாவின் படத்தில் நீல நிறத்தில் உலாவக் கூடியதைப் போன்று, ஒருவேளை நிழல் உருவின் மனம் உருவின் மனதில் இருந்து ஒரு பிரதியாக வெளிக்கிளம்பித் தன்னைத் தானே இரசிப்பதும் சாத்தியப்படலாம் தான். இலக்கியத்தில் narcisism (Narcissus நாசிசிசஸ் என்ற கிரேக்க இலக்கிய பாத்திரம் நீரில் தெரிந்த தனது அழகில் மயங்கி நீரோடையினை விட்டுவிலக முடியாது தனது விம்பத்தை இரசித்தபடியே இருந்து உயிர் நீத்த கதை உள்ளடங்கலாக ☺ ) நிறையவே இடம்பெற்றும் உள்ளது தான்.

மொத்தத்தில் இதை வாசித்த மாத்திரத்தில் சஹாராவிற்குத் தோன்றக் கூடியதாய் எனக்குத் தோன்றுவது, பாத்தமா இரசிச்சமா என்றில்லாமல் ஆராயுறன் பேர்வழி என்று எத்தனைபேர் தான் கிழம்புவாய்ங்களோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் ஆழமான ஒரு பார்வை அண்ணா.

வேறு வார்த்தை சொல்ல தெரியவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் விடியலை தொட... நடைப் பயணம் போகிறாள்... வழி நெடுகும்... தடைகளை அறியாமலே..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

எதற்கும் கண்ணாடியை அணிந்துகொண்டு பாருங்கள் சாத்ஸ்.

சாஸ்திரி அண்ணாவிற்கு கண் வடிவாய் தெரியுது ஆனால் தப்பிலிக்கு தான் பூத கண்ணாடி வேண்டூம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ, கடல் நாகம் தெரியவில்லை. கடல்கன்னி கண்ணி வைத்துவிட்டுக் காத்திருப்பது போலத்தான் தெரிகின்றது (பார்வையில் குறைபிடிக்கவேண்டாம். எக்ஸ்ரே கதிர்கள் போன்று ஊடுருவும் கண்கள் உள்ளன!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பாத்தால் சடைநாகத்துக்கு சிலையும் வைப்பாங்கள் போலை கிடக்கு

Link to comment
Share on other sites

ஆனால் தப்பிலிக்கு தான் பூத கண்ணாடி வேண்டூம் :lol:

இன்னும் மேன்பட்ட தொலை நோக்குப் பார்வை தேவை எனச் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

img4999f.jpg

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

கடல் நாகம் என்ற பதம் கடலைக்குறிப்பதாக எனக்குப் படவில்லை. அலை என்பதும் கடல் தான் (ஒருவருடன் கோபம் போட்டுவிட்டு அவருடயை மூக்குடன் மட்டும் நட்புப்பாராட்ட முடியாததைப் போல ☺ ) என்பதால் அலையையும் அந்தப்பதம் குறிக்கமுடியாது. நாகம் என்று மட்டும் கூறப்பட்டிருந்தால் கடல் நாகமாக உருவகப்படுத்தப்படுவதாகக் கருதலாம். ஆனால் கடல் என்ற வார்த்தையும் கூட வருவதால் இது கடலுடன் தொடர்பு பட்ட கடலிற்குப் புறம்பான ஏதோ ஒன்றாகவே இருக்க முடியும். அந்தக் கடலுடன் தொடர்பு பட்ட ஆனால் கடல் அல்லாதது எது என்று படத்தைப் பார்த்தபடி தேட முடியவில்லை ஏனெனில் படத்தில் தெரியும் கடல் தவிர்ந்த அனைத்தையும் மீறி தலைவிரிநத்த மனிதப் பெண் போன்று தெரியும் நிழல் உருவில் காட்சி குவிகிறது. படமும் நிழலாகக் காட்டப்படுவதால் நாகம் என்ற பதம் நிழல் உருவிற்கே மேலும் பொருந்துகிறது.

தலை விரிப்பு என்பது சுதந்திரத்தினைப் பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படலாம் கோபத்தையோ போராட்டத்தையோ குறிப்பதாகவும் பார்க்கப்படலாம். அல்லது இயற்கையில் தலை விரிந்து வளர்;ந்து தான் இருக்கமுடியும் என்பதால் இயற்கையாகவும் பார்க்கப்படலாம். நாகம் என்பது பொதுவில் பயம் சார்ந்து மனிதர்களால் நோக்கப்படுவதாலும் (நல்ல பாம்பு என்று வணங்குவது கூட பயம் சார்ந்து தான்) இக்கவிதை மனிதர்களிற்கானது என்பதாலும் ஒருவேளை இங்கு குறிப்பிடப்படும் தலைவிரிப்பில் ஒரு கோபம் அல்லது பயப்படுத்தல் அடியிழையாய் இருக்கமுடியுமோ என்று தோன்றுகின்றது. ஆனால் அந்தக் கோபமும் கூட சுதந்திரமாக வெளிப்படுத்தப்படக்கூடிய சுற்றாடல் என்பதால் சுதந்திரமும் பொருந்துவதாகவே இருக்கிறது.

ஆனால் இந்த நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசிப்பதற்கு இந்தக் காட்சிக்குள் அகப்படாவிடினும் பிறிதொரு பாத்திரம் இருந்தேயாகவேண்டும். அந்த மூன்றாம் பாத்திரம் அல்லது அந்த பாத்திரத்தின் உரையாக எழுதப்பட்டதாகவே இக்கவிதை அதிகம் ஒத்துப்போகிறது. ஏனெனில் இங்கு இரசிக்பபடவேண்டியதாய் சிபாரிசு செய்யப்படுவது நிழல் உரு. அந்த உருவை ரசித்தபடி அந்த உருவிற்குப் புறம்பாக கண்ணாடி மணலில் கால் புதைத்தபடி நடப்பதற்கு அழைப்பது இந்த மூன்றாம் பாத்திரம் என்பது உடனடியாக ஒத்துக்கொள்ளக்கூடியது.

ஆனால் எஸ்.ஜே.சூரியாவின் படத்தில் நீல நிறத்தில் உலாவக் கூடியதைப் போன்று, ஒருவேளை நிழல் உருவின் மனம் உருவின் மனதில் இருந்து ஒரு பிரதியாக வெளிக்கிளம்பித் தன்னைத் தானே இரசிப்பதும் சாத்தியப்படலாம் தான். இலக்கியத்தில் narcisism (Narcissus நாசிசிசஸ் என்ற கிரேக்க இலக்கிய பாத்திரம் நீரில் தெரிந்த தனது அழகில் மயங்கி நீரோடையினை விட்டுவிலக முடியாது தனது விம்பத்தை இரசித்தபடியே இருந்து உயிர் நீத்த கதை உள்ளடங்கலாக ☺ ) நிறையவே இடம்பெற்றும் உள்ளது தான்.

மொத்தத்தில் இதை வாசித்த மாத்திரத்தில் சஹாராவிற்குத் தோன்றக் கூடியதாய் எனக்குத் தோன்றுவது, பாத்தமா இரசிச்சமா என்றில்லாமல் ஆராயுறன் பேர்வழி என்று எத்தனைபேர் தான் கிழம்புவாய்ங்களோ :)

இந்த இரண்டு வரிக்கு இவ்வளவு பெரிய பொழிப்புரையா? திருக்குறளுக்குக் கூட இவ்வளவு விளக்கம் இருந்ததில்லையே...

இருந்தாலும் சரியாத்தான் சொல்லியிருக்காய்ங்க.. :)

நீங்கள் குறிப்பிட்ட இந்த வாசகத்தைப் பார்த்தால் சும்மா போறவர்களையும் கிளம்புங்கைய்யா என்று கிளப்பி விடுகிற மாதிரி இருக்கிறது இன்னுமொருவன்..... :icon_mrgreen:

இது ஆரம்பமா அல்லது அறிவுரையா? :blink:

Link to comment
Share on other sites

img4999f.jpg

கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி

கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

எனக்கென்னவோ சகாரா வல்வைக் கடற்கரையில் தனிமையில் நின்று தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு நிற்பது போன்றுள்ளது :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நாகம் என்ற பதம் கடலைக்குறிப்பதாக எனக்குப் படவில்லை. அலை என்பதும் கடல் தான் (ஒருவருடன் கோபம் போட்டுவிட்டு அவருடயை மூக்குடன் மட்டும் நட்புப்பாராட்ட முடியாததைப் போல ☺ ) என்பதால் அலையையும் அந்தப்பதம் குறிக்கமுடியாது. நாகம் என்று மட்டும் கூறப்பட்டிருந்தால் கடல் நாகமாக உருவகப்படுத்தப்படுவதாகக் கருதலாம். ஆனால் கடல் என்ற வார்த்தையும் கூட வருவதால் இது கடலுடன் தொடர்பு பட்ட கடலிற்குப் புறம்பான ஏதோ ஒன்றாகவே இருக்க முடியும். அந்தக் கடலுடன் தொடர்பு பட்ட ஆனால் கடல் அல்லாதது எது என்று படத்தைப் பார்த்தபடி தேட முடியவில்லை ஏனெனில் படத்தில் தெரியும் கடல் தவிர்ந்த அனைத்தையும் மீறி தலைவிரிநத்த மனிதப் பெண் போன்று தெரியும் நிழல் உருவில் காட்சி குவிகிறது. படமும் நிழலாகக் காட்டப்படுவதால் நாகம் என்ற பதம் நிழல் உருவிற்கே மேலும் பொருந்துகிறது.

தலை விரிப்பு என்பது சுதந்திரத்தினைப் பிரதிபலிப்பதாகவும் பார்க்கப்படலாம் கோபத்தையோ போராட்டத்தையோ குறிப்பதாகவும் பார்க்கப்படலாம். அல்லது இயற்கையில் தலை விரிந்து வளர்;ந்து தான் இருக்கமுடியும் என்பதால் இயற்கையாகவும் பார்க்கப்படலாம். நாகம் என்பது பொதுவில் பயம் சார்ந்து மனிதர்களால் நோக்கப்படுவதாலும் (நல்ல பாம்பு என்று வணங்குவது கூட பயம் சார்ந்து தான்) இக்கவிதை மனிதர்களிற்கானது என்பதாலும் ஒருவேளை இங்கு குறிப்பிடப்படும் தலைவிரிப்பில் ஒரு கோபம் அல்லது பயப்படுத்தல் அடியிழையாய் இருக்கமுடியுமோ என்று தோன்றுகின்றது. ஆனால் அந்தக் கோபமும் கூட சுதந்திரமாக வெளிப்படுத்தப்படக்கூடிய சுற்றாடல் என்பதால் சுதந்திரமும் பொருந்துவதாகவே இருக்கிறது.

ஆனால் இந்த நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசிப்பதற்கு இந்தக் காட்சிக்குள் அகப்படாவிடினும் பிறிதொரு பாத்திரம் இருந்தேயாகவேண்டும். அந்த மூன்றாம் பாத்திரம் அல்லது அந்த பாத்திரத்தின் உரையாக எழுதப்பட்டதாகவே இக்கவிதை அதிகம் ஒத்துப்போகிறது. ஏனெனில் இங்கு இரசிக்பபடவேண்டியதாய் சிபாரிசு செய்யப்படுவது நிழல் உரு. அந்த உருவை ரசித்தபடி அந்த உருவிற்குப் புறம்பாக கண்ணாடி மணலில் கால் புதைத்தபடி நடப்பதற்கு அழைப்பது இந்த மூன்றாம் பாத்திரம் என்பது உடனடியாக ஒத்துக்கொள்ளக்கூடியது.

ஆனால் எஸ்.ஜே.சூரியாவின் படத்தில் நீல நிறத்தில் உலாவக் கூடியதைப் போன்று, ஒருவேளை நிழல் உருவின் மனம் உருவின் மனதில் இருந்து ஒரு பிரதியாக வெளிக்கிளம்பித் தன்னைத் தானே இரசிப்பதும் சாத்தியப்படலாம் தான். இலக்கியத்தில் narcisism (Narcissus நாசிசிசஸ் என்ற கிரேக்க இலக்கிய பாத்திரம் நீரில் தெரிந்த தனது அழகில் மயங்கி நீரோடையினை விட்டுவிலக முடியாது தனது விம்பத்தை இரசித்தபடியே இருந்து உயிர் நீத்த கதை உள்ளடங்கலாக ☺ ) நிறையவே இடம்பெற்றும் உள்ளது தான்.

மொத்தத்தில் இதை வாசித்த மாத்திரத்தில் சஹாராவிற்குத் தோன்றக் கூடியதாய் எனக்குத் தோன்றுவது, பாத்தமா இரசிச்சமா என்றில்லாமல் ஆராயுறன் பேர்வழி என்று எத்தனைபேர் தான் கிழம்புவாய்ங்களோ :)

இன்னுமொருவன் அலை என்றால் கடல் என்று எப்படி முடிவுகட்ட முடியும்? அலையை உடனடியாக உணர்த்தக்கூடிய ஒரு இடமாக கடல் இருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்காக அலை என்றால் கடல் என்று பொருள் கொள்ள முடியாதென்று எனது சிற்றறிவுக்குப் படுகிறது. நாகம் படம் எடுப்பதைத்தான் அதிகம் இரசிக்கிறோம். நாகம் வெறுமனே சுருண்டு கிடந்தால் கவனத்தைக்கவருவதில்லை அது போலத்தான் கடலில் அலைகள் உருவாகி எழுவதைத்தான் அதிகம் இரசிக்கிறோம் எந்தவித அசைவும் அற்று தடாகத்தில் தேங்கிய தண்ணீர்போன்று இருந்தால் அதனை இரசிக்கமுடியாது. இன்னுமொருவன் உங்களுடைய பிரத்தியேக பார்வை அதிசயிக்கத்தக்கதாக இருந்தாலும் இந்த வரிகளை எழுதியவளாகையால் உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை.

அடுத்து நாகம் என்பதை பயத்தின் குறியீடாக உங்கள் பார்வை செல்கிறது. இங்குதான் கற்பனை வெளியும் நியத்தின் உருவும் விலகிக் செல்கின்றன.

கொடிய விடத்தைக் கக்கும் பாம்பைக் கண்டால் கவியுள்ளங்கள் அச்சமுறும் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு சிநேகத்துடன் அரவணைக்க நினைக்கும். (என்னுடைய சிறிய வயதில் என்வீட்டில் நிறையப் பாம்புகள் உலாவும் அசையாமல் இருந்து இரசித்திருக்கிறேன்) கோபம் ஊட்டப்படும்போதுதான் நாகம் படத்தை விரிக்கும். இங்கு இந்த இயங்கு நிலையை உணர்வுக்குப் அப்பால் நின்று தரிசிக்க விழைகிறேன் நாகம் படம் விரிப்பது மட்டும்தான் என் கண்களுக்குப் புலப்படுகிறது. அதையே கடலில் எழும் அலைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தப் படத்தில் அந்த அலைகள் இல்லை என்பதை ஏற்கனவே இசைக்குத் தெரிவித்துள்ளேன் கவனிக்கவும்.

அந்தக் கோபமும் கூட சுதந்திரமாக வெளிப்படுத்தப்படக்கூடிய சுற்றாடல் என்பதால் சுதந்திரமும் பொருந்துவதாகவே இருக்கிறது.

உங்களுடைய கருத்திற்குப் பிற்பாடுதான் ஓ.. இப்படியும் ஒரு பக்கம் மிக நெருக்கமாக பொருந்துகிறது என்பது என் கவனத்தில் கிட்டியுள்ளது.

நீங்கள் குறிப்பிடும் கிரேக்க இலக்கியம் பற்றி எனக்குத் தெரியாது அநேகமாக "கலை மானின் கொம்புகளின் கதையைப்' போன்றதாக இருக்கக்கூடும் என்று என்னுடைய ஊகிப்பு கூறுகிறது. என்னுடைய ஊகிப்புச் சரியாயின் இந்த இடத்தில் இந்த இரண்டு வரிகளுக்குள்ளேயோ அல்லது இந்த நிழலுருவத்திற்கும் அவற்றுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித கருத்தியலும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசிப்பதற்கு இந்தக் காட்சிக்குள் அகப்படாவிடினும் பிறிதொரு பாத்திரம் இருந்தேயாகவேண்டும். அந்த மூன்றாம் பாத்திரம் அல்லது அந்த பாத்திரத்தின் உரையாக எழுதப்பட்டதாகவே இக்கவிதை அதிகம் ஒத்துப்போகிறது. ஏனெனில் இங்கு இரசிக்பபடவேண்டியதாய் சிபாரிசு செய்யப்படுவது நிழல் உரு. அந்த உருவை ரசித்தபடி அந்த உருவிற்குப் புறம்பாக கண்ணாடி மணலில் கால் புதைத்தபடி நடப்பதற்கு அழைப்பது இந்த மூன்றாம் பாத்திரம் என்பது உடனடியாக ஒத்துக்கொள்ளக்கூடியது.

இந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் ஏனெனில் இக்கவிதை வரிகள் ஏற்கனவே ஒரு முழுமையான கவிதையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரு வரிகள்

எழுதாத பக்கமொன்று எனக்காக வைத்திரு!

notebook-pen-heart-ayumi-flickr.jpg

வசந்தத்தைத் தேடும் குயிலே! - உன்

வாசல் வருவேன்.

பாலையை குயிலொன்று

வசந்தமென்று அழைப்பது....

அமிழ்த மொழிக்கு எப்படிச் சாத்தியமாயிற்று?

குளிர்ச்சி தரும் தென்றல்

நான் பேசும் பொழுதில் மட்டும்,

அனல் கொட்டித் தழுவுவதை - உன்

காற்றாடி வேகத்தால் காதிற்குள் கேட்டுள்ளேன்.

உன் நெஞ்சறை யாகத்தில்

தீய்ந்த மணம் உண்மைதான், இருப்பினும்

பல பீனீக்ஸ் சிறகடிப்பின்

புழுதியைத்தானே நாசி உணர்கிறது.

நெருஞ்சியை நொறுக்கி

சிரிக்கின்ற பூக்கள் உனக்கானது...

உணர்கின்றேன்.

என்றோ ஒருநாள்......

உனைக்காண வருவேன்.

எனக்காக.......,

இதயத்தில் எழுதாத பக்கமொன்று வைத்திரு.

பனித்துருகும் விழிக்குளத்தில்

குளித்தெழும் அந்நாளில்...,

புலன்களால் உணரமுடியாத....

புதுக்கவிதை எழுதவேண்டும்.

கடல் நாகம் சடைவிரிக்கும்

காட்சியினை இரசித்தபடி,

கண்ணாடி மணல்வெளியில்

கால் புதைய நடக்கவேண்டும்.

வெண்ணிலா எங்கேனும்

வெட்கத்தில் முகம் புதைக்க, - உன்

முன்னைநாள் காதல்பற்றி

முழுக்கதையும் அறியவேண்டும்.

புன்னகையின் ஒளிவட்டம்

கொடுப்புக்குள் ஒழிய, -உன்

கண் மலரும் அக்கணத்தை,

காத்திருந்து பருகவேண்டும்.

புலரும் பொழுதொன்றில்,

செட்டை நீவும் புலுனிகள்போல்

அலரும் பொழுதன்றில்,

அகம் விரித்துப் பழகவேண்டும்.

அதுவரை,

உன் உதிரப்பூவை

உசுப்பி அசைக்க,

தினம் தினம் கவி கொண்டு அழுத்துவேன்.

தாங்கிக்கொள்! smile.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆழமான ஒரு பார்வை அண்ணா.

வேறு வார்த்தை சொல்ல தெரியவில்லை. :)

:icon_mrgreen:

தேசத்தின் விடியலை தொட... நடைப் பயணம் போகிறாள்... வழி நெடுகும்... தடைகளை அறியாமலே..! :)

:rolleyes: நல்ல தம்பி.

எனக்கென்னமோ, கடல் நாகம் தெரியவில்லை. கடல்கன்னி கண்ணி வைத்துவிட்டுக் காத்திருப்பது போலத்தான் தெரிகின்றது (பார்வையில் குறைபிடிக்கவேண்டாம். எக்ஸ்ரே கதிர்கள் போன்று ஊடுருவும் கண்கள் உள்ளன!)

சாதாரணமாக நெடுக்குதான் முன் ஜாக்கிரதையாக இருப்பார் எப்போதிருந்து நீங்கள் ? :icon_mrgreen:

சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கு? :D

நல்லா இருக்கு என்றுவிட்டு இந்த லொள்ளுச் சிரிப்பு எதற்கு? :mellow:

போற போக்கை பாத்தால் சடைநாகத்துக்கு சிலையும் வைப்பாங்கள் போலை கிடக்கு

ஐயோ கு.சா அண்ணை எனக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. சடைநாகத்திற்கு எப்படி சிலை வைப்பது? :lol:

இந்த இரண்டு வரிக்கு இவ்வளவு பெரிய பொழிப்புரையா? திருக்குறளுக்குக் கூட இவ்வளவு விளக்கம் இருந்ததில்லையே...

இருந்தாலும் சரியாத்தான் சொல்லியிருக்காய்ங்க.. :)

தெரியேல்லையா குட்டி?

கிறுக்குகளைத் திருத்துவதற்கு இன்னுமொருவன் பாரிய முயற்சி எடுத்திருக்கிறார். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.