Jump to content

ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி!

கலாநிதி செ.யோகராசா

ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன.

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (ஐஐ) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூகஇ யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (ஐஐஐ) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.

நிலைமை மேற்கூறியவாறாக அண்மைக்கால ஆய்வுகள் மேற்கூறிய முன்னோடிகளுக்குச் சமாந்தரமாக வேறு சில எழுத்தாளர்களை (எ-டு: ''ஆனந்தன்'' ''சுயா'') இனங்காட்டுகின்றன. இவர்களது படைப்புக்கள் சமகால சமூகப் பிரச்சினைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக இத்தகையவருள் ஒருவரான ''ஆனந்தன்'' 1939இலேயே முற்போக்கான சிந்தனையோடு சாதிப்பிரச்சினையின் கொடூரத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணின் பிரச்சினையை மண் வாசனையோடு முதன் முதல் எழுதியவர் ~ஆனந்தன்| எனலாம். ஆக இங்கு நாம் நினைவுகூற வேண்டியது யாதெனில் இலங்கையர்கோன் சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகியோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக சமூக நோக்கும் யதார்த்தப் பாங்கும் கொண்ட இன்னொரு போக்கு சமகாலத்தில் நிலவி வந்துள்ளது என்பதே!

இதே காலப்பகுதியில் முப்பதுகளளவில் மலைநாட்டிலும் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சி ஒன்று மின்னல் கீற்றுப்போல தோன்றியது. கோ.நடேசஐயர் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றி ஓரிரு கதைகள் எழுதியதாக அறிய முடிகின்றது. (எ-டு: திரு.இராமசாமி சேர்வையின் சரிதம்) ஆயினும் அவரது முயற்சியும் அதன் தொடர்ச்சியும் (கே.கணேஸ் ஓரிரு கதைகள் எழுதியிருப்பினும்) தொடர்ந்து பரந்து ஒளிவீசியதாக (இன்றுவரையான ஆய்வின்படி) கூறமுடியாதுள்ளது.

இனி நாற்பதுகளுக்கு வருவோம். மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள் மீண்டும் எமது கவனத்திற்கு உட்பட வேண்டியவராகின்றனர்.

இவர்கள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களாகின்றனர். முன்னர் ~ஆனந்தன்| முதலானோர் அமைத்த பாதையை அகலப்படுத்தி ஆழப்படுத்தி வைக்கின்றனர். இத்தகையவர்களுள் அ.செ.முருகானந்தன்இ வரதர் அ.ந.கந்தசாமி சொக்கன் தாழையடி சபாரெத்தினம் கனகசெந்திநாதன் என நாம் நன்கறிந்தவர்களோடு இதுவரை நன்கறியப்படாத முக்கியமான சிலரும் (எ-டு:கு.பெரியதம்பி) அடங்குவர். இவர்களது கதைக@டாக தமிழ்ச் சமூகம் நவீனநாகரீகததிற்கு முகம் கொடுப்பதும் (நவீன நாகரீகத்தின் குறியீடாக மோட்டார் வண்டி வருகைஇ தேர்தல் முறை அரச உத்தியோகம்இ நகர உருவாக்கம்இ பணத்தின் ஆதிக்கம்) சமகால சமூகப் பிரச்சினைகளும் (சாதிஇ சீதனம்இ கோயில்வரிஇ சிறுகதைஇ பொருளாகின்றன. இப்போதுதான் ஈழத்து எழுத்தாளரது சிறுகதை மெல்ல மெல்ல ஈழத்து மண்ணுடன் சுவறத் தொடங்கியது. இவ்வாறு மறுமலர்ச்சி எழுத்தாளர் அமைத்த தளமே அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் கம்பீரமாக நடந்து செல்ல வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடற் பாலது.

இதுவரைக் கவனித்த சிறுகதை வளர்ச்சிப் போக்குகள் பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இது காரணமாக ஏனைய பிரதேச இலக்கிய வளர்ச்சி அன்றைய யாழ்ப்பாண ஆய்வாளர்களினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது என்று விசனிக்கும் ஆய்வாளர் எம்மிடையே உள்ளனர். அத்தகைய விசனத்தில் அர்த்தம் எதுவுமில்லை. உண்மைநிலை வேறு. ஈழத்தில் நவீனத் தன்மை (ஆழனயசன்வைல) யின் வரவு எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே காலத்தில் ஏற்படவில்லை. வௌ;வேறு காலப் பகுதிகளிலே ஏற்பட்டது. நவீனத் தன்மை ஏற்பட்ட பின்னர் அசமத்துவ வளர்ச்சி நிலையே காணப்பட்டது. நவீன தன்மை யாழ்ப்பாணத்திலே முதலில் ஏற்பட்டமையால் நவீன இலக்கிய வளர்ச்சியும் அங்கே முதலில் ஏற்பட்டிருந்தது.

அது பற்றிய ஆய்வுகளும் முதலில் இடம்பெற்ற அத்தகைய ஆய்வுகளிலேயே ஈடுபட்டோர் (ஏனைய பிரதேசங்களின் அசமத்துவ வளர்ச்சி நிலை காரணமாகவும் நவீன இலக்கிய ஆக்கங்கள் பத்திரிகைகளிலே வெளிவந்தமை தவிர நூற்றொகுப்புக்களாக வெளிவராத காரணத்தினாலும் ஏனைய பிரதேசம் பற்றிய ஆய்வுகளில் ஆரம்ப நிலையில் கவனம் செலுத்தினரல்லர். நிற்கஇ நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிறுகதை இலக்கிய முயற்;சி கால்கொள்கிறது. முதலில் சா.இ.கமலநாதன் (வித்துவான் சா.இ.கமலநாதன்)இ சிவா (வா.சிவசுப்பிரமணியம் ஆசிரியர்) புரட்சிக்கமால் ஆகியோரும் (இவர்கள் சில கதைகளையே எழுதியுள்ளனர்) பின்னர் அருள் செல்வநாயகம்இ பித்தன் ஆகியோரும் சற்றுப்பின் அப்துஸ்ஸமதுஇ செ.இராசதுரைஇ எஸ்.பொ.நவம்இ அன்புமணிஇ தங்கன்இ ஆ.பொன்னுத்துரை முதலானோரும் இம் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேற்குறித்த மட்டக்களப்புப் பிரதேச எழுத்தாளருள் பித்தன்இ எஸ்.பொ.நீங்கலாக ஏனையோரது படைப்புக்களை நுனுகி நோக்கும் போது அவற்றிலே இரு வேறு பாணிகள் இழையோடுவதை அவதானிக்கலாம். ஒன்று ''கல்கிஇ பாணி. மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகப் பாணி இவ்விருவகைப் பாணி. சார்ந்த படைப்புக்களிலும் தமிழக இந்தியச் சூழலே இடம்பெற்றிருந்தன. ஈழத்துப் பின்னனியிலே எழுதினாலும்கூட அவை (ஈழத்துப் பத்திரிகை காரரினாலே'') மாற்றத்துக்குள்ளாகின. இவ்விடத்தில் அப்துஸ்ஸமதின் நினைவலைகள் நினைவிற்கு வருகின்றன.

''அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கமாக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள்இ கல்முனைஇ திருகோணமலை என்றும் நூர்ஜகானின் தந்தை போடியார் இப்றாஹ{ம் என்றும் மற்றும் காரியாலயம் லிகிதர் மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால் பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட்டுஇ விந்தியமலை என்றும் ஜமீன்தார்; இப்றாஹ{ம் என்றும் ஆபிஸ் குமாஸ்தாஇ ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப்பட்டன'' இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளரது சிறுகதைகளுள் பித்தன் கதைகள் தனித்துவமானவை. (1948 அளவிலே எழுதத் தொடங்கிய இவரது தொகுப்பு 1994ல் வெளிவந்தமை காரணமாக ஆய்வாளரது கவனத்திற்கு உட்படுத்தப்படாதவர் பித்தன். இவர் கதைகள் பற்றிய விரிவான ஆய்வுஇ பண்பாடு 15இ1997 இதழில் இக்கட்டுரையாளரினால் எழுதப்பட்டுள்ளது) பின்வரும் விதங்களில் விதந்துரைக்கப்பட வேண்டிவை.

(அ.)மட்டக்களப்பு பிரதேச மக்களது பிரச்சினைகள் முக்கியமானதொன்றான ஏழ்மைஇவர் கதைக@டாக சிறப்பாக வெளிப்படுகின்றது. (ஆ).முஸ்லிம் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் முதலாக இவர் கதைகழூடாக தத்துரூபமாகவும்இ துணிகரமான முறையிலும் (எ-டு: பாதிக் குழந்தை) வெளிப்படுகின்றன) (இ) (முஸ்லிம்) பெண்களது மென்மையான மன உணர்வுகள் திறம்பட வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு நோக்கும் போது யாழ்ப்பாண மறுமலர்ச்சி எழுத்தாளரது ஆரோக்கியமான போக்கு மட்டக்களப்பிலே பித்தனது எழுத்துக்களின் ஊடாகவே புலப்படுகின்றது எனலாம்.

எஸ்.பொ.ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களது வாழ்வினையும் மண் மணம் கமழ தமது சிறுகதைகள் ஊடாகப் பதிவு செய்தவர். அத்துடன் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டவர்.

திருகோணமலைப் பிரதேசமும் நாற்பதுகளின் பிற்பகுதிகளிலேயே சிறுகதை உலகினுள் பிரவேசிக்கின்றது. வ.அ.இராசரெத்தினத்தினூடாக முதன் முதலாக மூதூர்க் கிராம விவசாயிகளின் வாழ்வு இலக்கியமாகியது. தவிர பின்வரும் விடயங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படும் போதுதான் இக்கட்டுரையின் நோக்கம் முழுமையடையும் என்று கருதுகின்றேன்.

(அ) ~ஈழகேசரி|யில் லலிதாஇ சாவித்திரிஇ ராஜேஸ்வரிஇ வசந்தாஇ லேகினிஇ பிறேமாஇ கமலம்இ கோணேசப்பிள்ளை முதலான பெயர்களில் பலர் சிறுகதை எழுதியுள்ளதாகத் தெரிகின்றது. இவர்களுள் பெண் எழுத்தாளர் யாவர்? அவர்கள் எழுதியவை யாவை?

(ஆ).திருகோணமலையிலிருந்து நாற்பதுகளின் இறுதியளவில் அ.செ.முருகானந்தம் நடத்திய ~எரிமலை| சிறுசஞ்சிகையில் சிறுகதை எழுதியோர் யாவர்?

(இ).நாற்பதுகளின் இறுதியிலே மண்டூரிலிருந்து வெளியான ~பாரதி| சிறுசஞ்சிகைப் போட்டியொன்றினை நடத்தியுள்ளது. இதில் பங்கு பற்றியோர் யாவர்? இச்சஞ்சிகையில் எழுதிய எஸ்.எம்.ராஜுஇ பாஞ்சாலிஇ கிரிஜா என்போர் யாவர்?

ஈ. நாற்பதுகளின் இறுதியளவில் புரட்சிக்கமால் எழுதிய இரு சிறுகதைகள் புரட்சிகரமான போக்குடையன.

அயல்வீட்டிலுள்ள (சகோதர முறையான) இளைஞனொருவனை சமூக எதிர்ப்பிற்கு அஞ்சாது திருமணம் செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும்இ பொருந்தா மணங்காரணமாக கணவனைக் கொலை செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும் அக்கதைகளிலே சந்திக்கின்றோம். புரட்சிக்கமால் பல சிறுகதைகள் எழுதியதாகக் கூறப்படுகின்றது.

இவை பற்றிய விபரம்?

எவ்வாறாயினும்இ ஐம்பதுகளின் ஆரம்பமளவிலேயே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஆழத்தையும் அகலத்தையும் பரவலான நிலையையும் எட்டியுள்ளமை மேற் கூறியவற்றிலிருந்து புலப்படுத்துகின்றன. இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நினைவு கூரும் போது?

(அ) முப்பதுகளளவிலே இலங்கையர் கோன் முதலானோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இன்னொரு போக்கு நிலவி வந்துள்ளமையும்இ

(ஆ) மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளமையும்இ

(இ) நாற்பதுகளின் பிற் கூற்றிலேயே மட்டக்களப்புஇ திருகோணமலைப் பிரதேசங்களில் சிறுகதை முயற்சிகள் இடம் பெற்றுள்ளமையும்இ

(ஈ) ஆய்விற்குட்பட வேண்டிய வேறு முக்கிய விடயங்கள் உள்ளமையும் தெளிவாகின்றன.

ஆயினும் ஐம்பத்தைந்தளவில் மேற்கூறிய நிலைப்பட வளர்ச்சி கண்ட ஈழத்துச் சிறுகதை பக்குவ நிலை எய்துவது அறுபதுகளிலாகும். அது ஒரு புறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளினாலும் மறுபுறம் மு.தளையசிங்கம் போன்ற எழுத்தாளர் ஒரு சிலரினாலும் ஏற்பட்டமை நினைவு கூரத்தக்கது.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

Link to comment
Share on other sites

மேகநாதன் நல்ல ஆய்வுக்கட்டுரையை இங்கு இனைத்துள்ளீர்கள். சிறுகதையின் வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டோம். நன்றிகள்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.