Jump to content

யூரோ தாக்குப்பிடிக்குமா?


Recommended Posts

ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாக பிளவுபடப்போகிறது எச்சரிக்கை

இதுவரை காலமும் கிழக்கு – மேற்கு என்று பிளவுபட்டுக்கிடந்த ஐரோப்பிய ஒன்றியம் இனி வடக்கு தெற்கு என்று இரண்டாகப் பிளவுபடப்போகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்புல நாடுகள் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்டு பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்தது தெரிந்ததே. இந்தவகையில் கிரேக்கத்தைப் போல பாரிய பின்னடைவை இத்தாலி சந்தித்துள்ளது. வெளிப்படையாக பேசப்படாவிட்டாலும் மிக மோசமான பின்னடைவு இத்தாலிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியமும், ஐரோப்பிய ஒன்றியமும் இத்தாலியின் உண்மையான பொருளாதார நகர்வை கண்காணிக்க வேண்டுமென நேற்று முன்தினம் அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பு வடக்கு – தெற்கு நாடுகளின் நம்பிக்கையீனத்தின் பாரிய வெளிப்பாடே என்று டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழக பேராசிரியர் மர்லீனா வின்ட் இன்றைய காலைச் செய்திகளுக்கு தகவல் தந்துள்ளார்.

மேலும் கிரேக்கத்தின் பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் பாப்பன்டுரு வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் மிகவும் வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றியம் வடக்கு – தெற்காக பிளவுபடும் என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் யூரோ நாணயத்தை ஏற்றவை ஏற்காதவை என்ற இருவேறு பிளவுகளில் சிக்குண்டுள்ளன. பிரான்சிய அதிபர் ஸார்கோஸி, ஜேர்மனிய சான்சிலர் எஞ்சலினா மேர்க்கல் இருவரும் திரை மறைவில் காய்களை நகர்த்துவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.

http://www.alaikal.com/news/?p=87047

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

பொருளாதாரப் பிரச்சினையை நீக்குவதற்கு தேசிய ஒருமைப்பாட்டு அரசொன்று உருவாக்கப்பட வேண்டுமென கிரேக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

கிரேக்க நாட்டின் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதில், அந்த நாட்டின் பிரதமர் ஜோர்ஜ் பப்பன்ட்றியோ (George Papendreou) கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றார்.

மேலும், ஐரோப்பிய வலய நிதிமீட்புத் திட்டத்தை அங்கீகரிப்பதற்காக தேசிய ஒருமைப்பாட்டு அரசொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியிருக்கின்றார.

இதுதொடர்பாக, கிரேக்க ஜனாதிபதி கரொலொஸ் பப்பலியாசுடனும் (Carolos Papoulias) பிரதமர் பப்பன்ட்றியோ பேச்சுக்களை நடத்தி வருகின்றார்.

எனினும் பப்பன்ட்றியோவின் கீழான கூட்டணியில் தாம் இணைய முடியாதெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

நேற்றிரவு பப்பன்ட்றியோவின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் குறுகிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரதமர் பப்பன்ட்றியோ, கிரேக்கத்தின் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

பிரதமர் ஜோர்ஜ் பப்பன்ட்றியோ பதவி விலக வேண்டுமென, கடந்த சில நாட்களாக அவரது கட்சி உட்பட பல தரப்புக்களிலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9867

Link to comment
Share on other sites

ஐரோப்பிய யூனியனின் அழுத்தம் காரணமாக ஒரு கூட்டமைப்பு அரசுக்கு கிரேக்கம் இணக்கம்

அதிபர் ஜோர்ஜ் பற்பண்டறேயஸ் இராஜினாமா செய்யலாம் என பலரும் எண்ணினர். ஆனால் அது நடக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் மேலும் ஒரு சிக்கலை விரும்பவில்லை. அதன் காரணமாக எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

Greece seals deal on new coalition under EU pressure

Greece's politicians agreed on Sunday to form a unity government to approve a euro zone bailout, with Prime Minister George Papandreou due to step down to break an impasse after the EU demanded its parties join forces to avert bankruptcy.

Discussion on who would lead the new government would continue on Monday, the office of the Greek president said after the European Union gave Greece 24 hours to show how it will enact its 130 billion euro emergency funding package.

http://ca.reuters.co...E7M601O20111107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்கத்திலை அரசியல் மாற்றம் வந்துட்டுது போலை கிடக்கு.....

Link to comment
Share on other sites

கிரேக்கம் இந்த வாரம் கொஞ்சம் அமைதியாகும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால், ஏற்கனவே இத்தாலி பற்றி பேசப்படுகின்றது. இது கிரேக்க பிரச்னையை விட பெரியது.

For Markets in Europe, the Focus of Fear Moves to Italy

European efforts to solve a growing sovereign debt crisis have failed to quell market unease on the Continent, and the skepticism over Greece points to continued volatility this week.

Among fresh warning signs, Italy’s cost of borrowing has jumped to the highest rate since the country adopted the euro. Others signs include pressures building in the plumbing of Europe’s banking system. While those pressures are not yet at the levels experienced during the 2008 financial crisis, when some markets in the United States froze altogether, they are high enough to cause worry, analysts say.

http://www.nytimes.com/2011/11/07/business/in-europe-anxious-market-shifts-focus-to-italy.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலேயே 3 வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட.. இத்தாலியில் பெரும் பொருண்மிய நெருக்கடி. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில்...

Italy government borrowing rates hit euro-era high

The Italian government's borrowing cost has risen in early trade as fears grow over political uncertainty in Rome.

The yield on Italian 10-year bonds rose from 6.37% to a euro-era high of 6.64%.

It is feared that Italy, the eurozone's third biggest economy, could become the next victim of the debt crisis. PM Silvio Berlusconi faces a crunch vote on public finance on Tuesday.

European shares also fell in morning trade with markets in London, Frankfurt and Paris all down more than 1%.

The main Italian index, the FTSE MIB, was also down 1.1%, while the Spanish Ibex fell 2.5%.

Concerns over Italy are overshadowing developments in Greece, where Prime Minister George Papandreou has agreed to stand down.

Mr Papandreou sealed a deal with the opposition to form a new coalition government to approve an EU-IMF bailout package.

Once the vote has been passed, it will open the way for Greece to receive the next 8bn euro tranche of bailout loans.

The deal was welcomed by investors, with the main Athens bourse up 2%, lifted by the banking sector. Shares in Alpha Bank were up 7.8% while Hellenic Postbank rose 11.4%.

http://www.bbc.co.uk...siness-15617132

Link to comment
Share on other sites

'கிரேக்கில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் உருவாக்கம்! - பதவி விலகினார் பிரதமர் பாப்பண்ட்ரியோவ்!!

கிரேக் எதிர்கொண்டுள்ள கடன் சிக்கலுக்கு தீர்வு காண முடியாத நிலையில், அந்நாட்டுப் பிரதமர் ஜோர்ஜ் பாப்பண்ட்ரியோவ் பதவி விலகியுள்ளார்.கிரேக் நாடாளுமன்றத்தில் 04ஆம் திகதி இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குறைந்த வித்தியாசத்தில் பிரதமர் ஜோர்ஜ் பாப்பண்ட்ரியோவ் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், கிரேக்கின் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க, எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஒன்றை உருவாக்க ஜோர்ஜ் பாப்பண்ட்ரியோவ் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஐரோப்பிய கடன் மீட்சி உதவித் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு ஏற்றவகையில் குறுகிய கால தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்க ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக கிரேக்கின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ரனிஸ் சமராஸ் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஆளும் சோசலிஸ்ட் கட்சிக்கும், புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கிரேக்கிலல் தேர்தல் இடம்பெறும் வரை தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஒன்றை உருவாக்குவாது தொடர்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பிரதமர் எவர் என்பதை இவ்விரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படவில்லை.</p>

அதேவேளை, கிரேக்கின் துணைப் பிரதமராக தற்போது பணியாற்றும் இவன்சலோஸ் வெனிசிலோஸ் தேர்தலுக்குப் பின்னரும் துணைப் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அத்துடன், கிரேக்கின் பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி நடத்துவது என்றும் இப்பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது.

இதனிடையில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கின் பிரதிநிதியாக இருந்த மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய மைய வங்கியின் லூக்காஸ் பாப்பாடெமாஸ், ஐரோப்பிய குறைதீர்ப்பாளர் நிக்கி போரோஸ் டைமண்டரோஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையளராக இருந்த ஸ்டாவ்ரோவ் டிமாஸ் ஆகியோரின் பெயர்களை இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பிரதமாராக எவர் தெரிவு செய்யப்படுகின்றார் என்பது இன்று மாலை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரேக்கத்தின் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதே தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.c...66-ddfa264f2fc3

Link to comment
Share on other sites

தனது பெரும்பான்மை பலத்தை இழந்த இத்தாலிய அதிபர் பெர்லஸ்கோனி - நிபந்தனையுடன் இராஜினாமவுக்கு சம்மதம்?

தனது கட்சிக்காரர் எட்டுப்பேர் எதிர்க்கட்சியுடன் வாக்களித்ததை அடுத்து பாராளுமன்றத்தில் பலத்தை இழந்த இத்தாலிய அதிபர் நிபந்தனையுடன் இராஜினாமவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 1.9 த்ரிலியங்கள் கடனுள்ள இத்தாலி, கிரேக்க நாடு போன்று அதன் கடனை செலுத்த வாங்கும் பண வட்டி வீதம் அண்மைக்காலமாக கூடிவந்தது. அந்த நிலையில் பலரும் இத்தாலியில் மாற்றங்ககளை எதிர்பார்க்கிறனர்.

இத்தாலி உலகில் ஏழாவது பெரிய பொருளாதார பலமுள்ள நாடாகும்.

Link to comment
Share on other sites

Italy borrowing costs hit record 7%

http://www.bbc.co.uk/news/business-15652708

இத்தாலி நாட்டின் அரச பத்திரங்களின் வட்டிவீதம் அதிகரித்தது. இத்தாலியால் தனது பெரும் கடனை அடைக்க முடியாது என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.

இது ஜெர்மனி மீது இன்னும் சுமையை கூட்டியுள்ளது. ஆனால் ஜெர்மனி உதவுமா? இல்லை இத்தாலி வங்குரோத்தாகுமா?

Link to comment
Share on other sites

திங்களன்று இத்தாலிய அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டிவிகிதங்கள் 1சதவிகிதம் உயர்ந்து 6.68 என இருந்தன; இது ஆபத்தான பகுதி எனக் கருதப்படுகிறது. வட்டிவிகித அதிகரிப்பு இரு காரணிகளால் வந்துள்ளது.

ஒரு பெரிய நிதி நெருக்கடிக்கான சூழ்நிலை இத்தாலியில் ஏற்கனவே உள்ளன. இத்தாலிய பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கி (ECB)வாங்காமல் இருந்திருந்தால், வட்டி விகிதங்கள் அயர்லாந்து, போர்த்துக்கல் பிணை எடுப்புக்களால் தூண்டவிடப்பட்டிருந்த உயர்ந்த மட்டங்களை அடைந்திருக்கும். ஆனால் ECB பத்திரங்களை வாங்கியதும் ஒரு இடைக்கால நிறுத்தம்தான், ஏனெனில் ஜேர்மனி காலவரையறையற்றுத்தான் தன்னுடைய ஆதரவை விரிவாக்கத் தயாராக இல்லை என்பதை வலியுறுத்தி வருகிறது.

பைனான்ஸியல் டைம்ஸ் கூறுவதாவது: “6 சதவிகிதம் மற்றும் கூடுதல் என்ற மட்டத்தில், எதிர்மறை பின்னூட்டல்கள் என அழைக்கப்படுபவை களத்தில் நுழைந்து இத்தாலி அல்லது பிற ஐரோப்பியப் பகுதி நாடுகளிலுள்ள அரசாங்கக் கடன் பத்திரங்கள் இன்னும் விற்பனை செய்வதை விரைவுபடுத்தும் வகையில் தூண்டிவிடக்கூடும்.

EFSF ஆனது இத்தாலியக் கடன் சந்தைக்கு ஆதரவு கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை; அது இப்பொழுது கிட்டத்தட்ட 1.9 டிரில்லியன் யூரோக்கள் என்ற அளவில் உள்ளது. நிதிய அமைப்பின் இரண்டாவது மிகப் பெரிய உத்தரவாதம் அளிக்கும் நாடான பிரான்சின் இயலுமை பற்றிய தொடர்ந்த சந்தேகங்களால் அது குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது; ஏனெனில் பிரான்ஸ் தன்னுடைய மூன்று A கடன் தர மதிப்பை பிரான்ஸ் தக்க வைத்துக் கொள்ளமுடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

EFSF இடம் நிதியச் சந்தைகள் கொண்டுள்ள மிகக் குறைந்த நம்பிக்கை,கடந்த வாரம் அது தேவை இல்லை என்னும் காரணத்தால் 5ல் இருந்து 3பில்லியன் யூரோக்களைத் திரட்டுவது என்று அதன் முயற்சிகளை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. யூரோப் பகுதி நெருக்கடியைத் தீர்ப்பதற்குபெரும் ராக்கட்டுகள்தேவை என்று கூறப்பட்டாலும், EFSF ஒரு தண்ணீர் துப்பாக்கி” என்றுதான் வர்ணிக்கப்படுகிறது.

G20 மாநாட்டில், EFSF ற்குக் கூடுதல் நிதியைப் பெற விரும்பும் யூரோப்பகுதி நாடுகளின் முயற்சிகள், IMF மூலம் பங்களிப்புக்கள் அல்லது நேரடியாக என்னும் வகையில், பெரும் தோல்வியைக் கண்டன. ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கூறியது போல், “தாங்கள் பணம் கொடுக்க முன்வருவோம் என்று கூறும் நாடுகள் இங்கு எவையும் இல்லை.”

IMF மூலம் கூடுதலான நிதி அளிப்பதற்கு எதிர்ப்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தலைமையில் வந்தது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன், “எந்த நாடு எத்தனை கொடுக்கும் என்பது பற்றித் தெளிவு இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை வரையறை செய்தல் மிக மோசமானது ஆகும். IMF ன் வேலை தொந்தரவிற்கு உட்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதுதான், ஆனால் நாணய முறைக்கு ஆதரவு கொடுப்பது அல்ல” என்றார்.

சில BRIC நாடுகள் தன்னார்வத்துடன் பணத்தை அளிக்கும் என்றுகூட நம்பப்பட்டு இருந்தது. ஆனால் சீனர்கள் எவ்வளவு நிதி கொடுக்க முடியும் என உறுதியாகக் கூறுவதற்குமுன் தங்களுக்கு இன்னும் தகவல்கள் தரப்பட வேண்டும் எனக் கூறிவிட்டனர். பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரௌசெப் இன்னும் அப்பட்டமாக ஐரோப்பியச் சக்திகள் பரந்த ஆதரவு கோரி நிற்பது பற்றிக் கூறினார்: “EFSF க்கு நேரடியாக நிதி கொடுக்க எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை; அந்நாடுகளே (ஐரோப்பிய நாடுகளே) அதைச் செய்யவில்லை என்றால், நான் ஏன் உதவ வேண்டும்?”

நிதிய வட்டங்களில் ஐரோப்பிய உச்சிமாநாடுகள் இன்னும் பரந்த நெருக்கடி தோன்றுவதற்கான சூழலைத் தோற்றுவித்து விட்டன என்பது குறித்து நிதிய வட்டங்களில் பெருகிய கவலைகள் உள்ளன. மோர்கன் ஸ்ரான்லியின் உலகப் பொருளாதாரப் பிரிவின் தலைவராக இருக்கும் Joachim Fels நான்கு மாதங்களுக்குள் ஜேர்மனியும் பிரான்ஸும் இப்பொருள் பற்றிப் பேசுவதையேஒரு தடை” என்பது போல் நடந்து கொள்ளுகின்றன என்று எச்சரித்தார்.

Link to comment
Share on other sites

Italy panic wipes $31b from market

http://www.perthnow.com.au/business/business-old/market-plunges-3pc-on-italy-fears/story-e6frg2qu-1226191005626

கடந்த ஓரிரு நாட்களில் பங்குகளில் மற்றும் அதைவிட பல மடங்கு பெரிய அரச பத்திரங்கள் கொண்ட சந்தையில் இழக்கப்பட்ட தொகை முப்பது பில்லியங்களுக்கும் மேலானது.

ஆனால், இத்தாலி ஒரு பெரிய பொருளாதாரம் எனவும் சிறிய நாடுகளையே வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய நாடுகள் இதை அனுமதிக்காது என சாராரும்;

இத்தாலியை காப்பாற்ற ஜெர்மனி இல்லை அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளால் மட்டுமே சாத்தியம் எனவும் அவர்கள் இதை செய்யும் சாத்தியம் இல்லை என மறு தரப்பும் வாதிடுகிறது.

Link to comment
Share on other sites

கிரேக்கத்திற்கு புதிய பிரதமர் நியமனம்

நீண்ட பேச்சுக்கள், அதிருப்திகளுக்கு பின்னர் கிரேக்கத்திற்கான புதிய பிரதமர் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கி உப தலைவர் லூக்காஸ் பாமடெமோஸ் இப்பதவியை ஏற்றுள்ளார். இவர் ஏற்கெனவே கிரேக்கத்தில் நன்கு அறியப்பட்ட ஒருவராகும்.

கடந்த 2002 ம் ஆண்டு காலமுதலே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தபடியே கிரேக்க பொருளாதார பணிகளை அவதானித்து வந்தவராவார். நாளை மதியம் ஒரு மணியில் இருந்து கூட்டரசாங்கம் தனது பணியை ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை அனைத்து கட்சிகளும் ஏற்று கையெழுத்திட வேண்டும். அதற்கு ஏற்பவே நிதியை ஐரோப்பிய ஒன்றியம் விடுவிப்பு செய்யும். அதேவேளை இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி பொரும்பான்மை இழந்துவிட்டமையால் அவர் அதிக காலம் பதவியில் நீடிக்க வேண்டிய தேவையில்லை என்று அந்த நாட்டின் அதிபர் கூறினார்.

http://www.alaikal.com/news/?p=87523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக பொருளாதார நிபுணர் தோழர் அகூதா சொன்னால் சரியாகத்தான் இருக்கம் .. :D

Link to comment
Share on other sites

அதியுயர் வட்டி வீதத்துடனும் இத்தாலி தனது நாட்டின் கடன்பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு விற்றது. அதனால், பங்கு சந்தைகளில் இன்று உயர்வு ஏற்பட்டது.

அதேவேளை ஒரு புதிய அரசும் அங்கு அமைக்கப்படவுள்ளது.

Italy Sells All Bills Offered With Yield Below Yesterday’s Euro-Era Record

Italy sold 5 billion euros ($6.8 billion) of one-year bills, the maximum for the auction, and demand rose as the Treasury lured investors with the highest yield in 14 years after debt-crisis contagion sent borrowing costs to records.

The Rome-based Treasury sold the bills to yield 6.087 percent, the highest since September 1997 and up from 3.57 percent at the last auction on Oct. 11. Demand was 1.99 times the amount on offer, compared with 1.88 times last month. The yield on Italy’s benchmark 10-year bond fell below 7 percent after the auction from a euro-era record 7.45 percent.

http://www.bloomberg.com/news/2011-11-10/italy-sells-5-billion-euros-of-12-month-bills-at-highest-rate-in-14-years.html

Link to comment
Share on other sites

சிக்கன நடவடிக்கைகளை அறிமுகம் செய்வது குறித்து, இத்தாலியின் செனற் சபையில் விவாதம் இடம்பெற்றது.

மீட்புக்கடன் ஒன்றைப் பெறவேண்டிய தேவையைத் தவிர்ப்பதற்கு அத்தகைய சிக்கன நடவடிக்கைகள் உதவுமென அந்நாட்டின் அரசு நம்புகிறது.

அரசு முன்வைத்துள்ள சிக்கன நடவடிக்கைகள் செனற்சபையிலும், நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையிலும் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், பிரதம மந்திரி சில்வியோ பெர்லஸ்கோனி பதவி விலகுவாரெனவும், திங்கட்கிழமை புதிய அரசு பதவியேற்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Italy Senate Approves Economic Reform

Link to comment
Share on other sites

சில்வியோ பலர்ஸ்கோனி பதவி விலகும் கடைசி நிமிடங்கள்

சென்ற வாரம் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி பெரும்பான்மையை இழந்தது தெரிந்ததே. உடனடியாக பதவி விலகாமலே தாமதம் செய்த பலர்ஸ்கோனி இன்று தனது பதவி விலகலை நாட்டின் அதிபரிடம் சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிரணியினர் புதிய பிரதமரை அடையாளம் காட்டியுள்ளனர். இன்றுள்ள நிலையில் நாட்டை சரியான பாதையில் நடாத்தக் கூடியவர் மரியோ மொன்ரி என்றும் தெரிவித்துள்ளனர்.

பதவி விலகிச் செல்லும் பலர்ஸ்கோனி அரசியலில் இருந்து விரைவாக அப்புறப்படுத்தக் கூடிய ஒருவரல்ல. நாட்டின் பெரும்பாலான தொழில்கள், சொத்துடமைகளுக்கு உரிமையாளர். நாட்டின் ஊடகத்துறை, தொலைக்காட்சிகள், பாரிய பத்திரிகைகள் எல்லாம் இவருக்கு சொந்தமானவையே, உதைபந்தாட்டக் கழகங்கள் கூட இவரால் வாங்கப்பட்டுள்ளன. பாரிய தொழில் நிறுவனங்கள் உட்பட திரைப்படங்களை வாடகைக்கு விடும் பிளக்போஸ்டர் கடைத் தொகுதிகள் வரை இவருக்கு சொந்தமானவை.

மேலும் இத்தாலியின் பொருளாதாரத்தை லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியுடன் தொடர்புபடுத்தி 22 வீதமான எரிபொருளை லிபியாவில் இருந்து இறக்கி நாட்டின் பொருளாதாரத்தை சுழல வைத்தவர். கேணல் கடாபிக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு ஐ.சி5 ரயில் வண்டியையே பரிசாகக் கொடுத்தவர். கடாபியின் வீழ்ச்சி இத்தாலிய பொருளாதாரத்தில் விழுந்த பாரிய அடியாகும். கடாபியின் கதை முடிந்தபோது 320 பில்லியன் யூரோ பற்றாக்குறையோடு அந்த நாட்டின் பொருளதாரம் பாதாளத்தில் விழுந்தது.

கிரேக்கத்தில் நடந்த அதே நாடகம் இங்கும் அரங்கேறியுள்ளது. கிரேக்கப் பிரதமரின் பதவியை சீவிய பொருளாதாரம் இப்போது பலர்ஸ்கோனியின் பதவியையும் சீவியுள்ளது. மேலும் இத்தாலியின் தென்பகுதி பொருளாதாரம் போதை வஸ்த்து கடத்தலால் மையம் கொண்டுள்ளது. பலர்ஸ்கோனி என்ற பெரும் பணக்காரர், மதத்திற்கான வத்திக்கான் பேரரசு, அதற்குள் விளையாடும் அமெரிக்கா ஆகிய முக்கோண திசைகளைச் சுற்றி ஓடும் இத்தாலிய பொருளாதாரம் இதுவரை தனிநபர்களால் சுழற்றப்பட்டு வந்த பொருளாதாரமாகும். அதை மீட்பதும் கொண்டு நடாத்துவதும் பலர்ஸ்கோனியைத் தவிர மற்றவர்களால் முடியுமா என்பது கேள்விக்குறியே. விலகிப் போகும் பலர்ஸ்கோனி பின்பக்க வழியால் மறுபடியும் பதவிக்கு வந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத ஒரு பெண் பித்தரின் கடைசிப் பொழுதுகள் இவையாகும்.

http://www.alaikal.com/news/?p=87626

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000_Rupee.jpg

அப்படியே காந்தி நோட்டு எப்ப புட்டுகொள்ளும் ....என தெளிவாக ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஒன்று எழுதி போடுங்க பொருளாதார நிபுணர் தோழர் அகூதா அவர்களே.. ! :) :)

Link to comment
Share on other sites

பதவியை துறந்தார் இத்தாலிய பிரதமர், மக்களோ பூரிப்பில்

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடந்த, ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில், இத்தாலி தன் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதில் எதிர்க்கட்சிகள் எதுவும் ஓட்டளிக்கவில்லை. பெரும்பான்மை இழந்து விட்ட நிலையில், பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா செய்வதாக ஒப்புக் கொண்ட அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஜியோர்ஜியோ நெப்போலியட்டானோவிடம் கொடுத்தார். மீண்டும் பிரதமர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பெர்லுஸ்கோனி அறிவித்திருந்தது குறிப்படத்தக்கது.

Link to comment
Share on other sites

சீனாவின் பொருளாதாரத்திலும் அதே மேலைத்தேய தவறுகள்..

இன்றைய மேலைத்தேய பொருளாதாரம் பாதாளத்தில் விழ வங்கிப் பணத்தை தப்பாக பயன்படுத்தியது முக்கிய காரணமாகும். வங்கிகளில் பணி புரியும் ஊழியரே கமிஷனுக்குக் கடன் எடுத்துக் கொடுத்து வங்கிகளை திவாலாக்கியது இதுவரை வெளிவராத இரகசியமாகும்.

இதுபோன்ற கிருமிகள் தொற்றாத காரணத்தால் நிமிர்ந்து நின்ற சீனா, கடந்த 2008 ம் ஆண்டில் இருந்து அதே மேலைத்தேய தவறுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

சீனாவின் வங்கிகள் தனியாருக்குக் கடன் கொடுக்கும்போது அவர்களின் வீடுகளின் பெறுமதிக்கு மேலாக கடனை வழங்கியுள்ளன. இப்போது சீனாவின் வீட்டுப் பெறுமதிகள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளன. கொடுத்த கடனை வீட்டை ஏலம் விட்டாலும் திருப்பி பெற முடியாதளவுக்கு இந்த வீழ்ச்சி காணப்படுகிறது. மேலும் கத்துக்குட்டிகளான சீன அரசியல்வாதிகள் வங்கிச் செயற்பாடுகளுக்குள் மூக்கை நுழைத்து அரச தாபனங்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அதிக நிதியை வங்கிக் கடனாக பெற்றுக் கொடுத்துள்ளனர். இப்போது வங்கிகள் பணத்தை வெளியில் விட்டுவிட்டு வசூலிக்க முடியாத அவலத்திற்குள் வந்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நிபந்னை போல ஒன்பது வீதமான இருப்பை நிலையாக வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணமும் சீன வங்கியாளரிடம் இருக்கவில்லை. இந்த அவலமே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மடைத்தனமான அவலமாகும். இப்போது சர்வதேச நாணய நிதியம் தலையிட்டு சீன வங்கிச் செயற்பாடுகள், பொருளாதார ஒழுங்கமைப்புக்களில் உடன் மாற்றம் செய்ய வேண்டுமென்று கேட்டுள்ளது. சீனப் பொருளாதாரம் வளரும் என்ற கருத்து பொய்த்து அது சுருங்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.alaikal.com/news/?p=87950

Link to comment
Share on other sites

பிரிட்டன் வங்கிகள் கடன் வழங்குவதில் கட்டுப்பாடு

சென்ற வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கு அமெரிக்க வங்கிகள் பெரும் அச்சம் வெளியிட்டிருந்தன, இப்போது அதே கருத்தை பிரிட்டன் வங்கிகளும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் யூரோ நாணயம் பாவனையில் உள்ள யுரோ சோன் பகுதியில் உள்ள 17 நாடுகளிலும் உள்ள வங்கிகளுக்கு வழங்கிய கடனை பிரிட்டன் வங்கிகள் 24 வீதத்தால் குறைப்பதாக அறிவித்துள்ளன. பிரிட்டனின் பாரிய கடன் வழங்கும் வங்கிகளான பார்க்லஸ், எச்.எஸ்.பி.சி, லோயட், றோயல்வங்கி ஆகியனவே இந்த முடிவை எடுத்துள்ளன.

தற்போது ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குள் தேவையற்ற விதத்தில் மாட்டிக்கொள்ள இந்த வங்கிகள் விரும்பவில்லை. மேலும் எச்.எஸ்.பி.சி வங்கி கடன் வழங்கும் அளனை 40 வீதத்தால் குறைத்து பெரும் இறுக்கமான கொள்கையை வெளியிட்டுள்ளது. அத்தோடு கிரேக்க, ஸ்பானிய வங்கிகளுக்கான கடன் பணத்தை அடியோடு நிறுத்தியுள்ளது.

ஐரோப்பிய பொருளாதாரத்தில் இது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. மேற்கண்ட பெறுமதி கூடிய நாணயமாற்று கொண்ட வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் பணத்தைப் பெற்று காலமோட்டி வந்த ஐரோப்பிய வங்கிகள் பல திண்டாட்டமான நிலைக்கு வந்துள்ளன. மேலும் வரும் யூன் மாதத்திற்குள் ஒன்பது வீத வைப்பை காட்டாவிட்டால் மூடப்பட வேண்டிய நிலையில் உள்ள பல வங்கிகள் பிரிட்டன் வங்கிகளிடம் கடன் பெற்று தலையைக் காப்பாற்றவும் முடியாத நிலை உருவாகியுள்ளது.

http://www.alaikal.com/news/?p=88275

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குத்தியடிச்சாலும்...பிரான்ஸ்காரனும் ஜேர்மன்காரனும் தங்கடை பவரை ஐரோப்பா இல்லை உலகம் முழுக்க காட்டுறாங்கள்...சொன்னாலும்...சொல்லாட்டிலும் இவங்கள் பயங்கரவிசயகாரங்கள்....சும்மா சொல்லக்கூடாது இவங்களிட்டை விசயமும் இருக்கு....... :)

Link to comment
Share on other sites

இருபது பிரபல்யம் வாய்ந்த பொருளாதார நிபுணர்களை ராய்டர்ஸ் செய்தித்தாபனம் 'யூரோ சான்' (Euro Zone) நீடிக்குமா என அபிப்பிராயம் கேட்டு கருத்து கணிப்பு ஒன்றை நடாத்தினார்கள். அதில் பதினான்கு பேர் இதே கட்டுமாணத்தில் அது நீடிக்காது என கூறினார்கள்.

ஆனால், யூரோ பணம் நீடிக்கும் எனவும் அவ்வாறு நிகழ சில நாடுகள் இந்த யூரோ கட்டமைப்பில் இருந்து வெளியேறவேண்டும் எனவும் கூறினார்கள்.

கடந்த புதன்கிழமை ஜெர்மனி நாட்டின் கடன்பத்திரங்கள் கூடிய வட்டிவீதத்துடன் விலைப்பட்டது முதலீட்டாளர்கள் மத்தியில் பெருகிவரும் விசனத்தை காட்டுவதையும், அவர்கள் இந்த பிரச்னைக்கு ஜெர்மனி தலைமையில் ஒரு முடிவை எதிர்பார்கிறனர் என்ற செய்தியையும் சொல்லியுள்ளார்கள்.

கிரேக்க நாட்டை அகற்ற வேண்டும் என எழுவர் கூறினார்கள்.

Euro zone unlikely to survive intact: Reuters poll

The euro zone is unlikely to survive its sovereign debt crisis in current form, according to a majority of leading economists and former policymakers polled by Reuters.

Fourteen out of 20 prominent academics, former policymakers and independent thinkers polled over the last 10 days agreed the euro zone's make-up would change.

A new "core" euro zone with fewer members received qualified backing from 10 economists as a possible solution, with seven of them saying Greece should be excluded from it.

http://finance.yahoo.com/news/euro-zone-unlikely-survive-intact-173009818.html

Participants:

Octavio de Barros, Bradesco; Pierpaolo Benigno, LUISS Guido Carli; Mario Blejer, ex-president of the Central Bank of Argentina; David Blanchflower, Dartmouth College; Francois Bourguignon, Paris School of Economics; Bronwyn Curtis, HSBC Global Research; Fredrik Erixon, European Center for International Political Economy; Mohamed El-Erian, PIMCO; Martin Feldstein, Harvard University; Robert H. Frank, Cornell University; James K. Galbraith, University of Texas at Austin; Daniel Gros, Center for European Policy Studies; Takatoshi Ito, University of Tokyo; George Magnus, UBS Investment Bank; Yuri Okina, Japan Research Institute; Luca Paolazzi, Confindustria; Michael Pettis, Peking University; Lucrezia Reichlin, London Business School; Jeffrey Sachs, Columbia University; Mark Thoma, University of Oregon

Link to comment
Share on other sites

ஜேர்மனி, பிறான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு.

இத்தாலியின் பிரதம மந்திரி மாரிறோ மொன்ரி, ஜேர்மனி, பிறான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கிறார்.

ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேர்கல், பிறான்ஸ் ஜனாதிபதி நிக்கொலா சார்கோசி ஆகியோருடன் மொன்ரி நடத்தும் சந்திப்பின்போது, இத்தாலியின் நிதி நெருக்கடி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பன குறித்து ஆராயப்படும்.

ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியைத் தணிக்கும் நோக்குடன், தனித்தனியாக ஒவ்வொரு நாடும் கடன் முறிகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக, ய+றோ வலய நாடுகள் அனைத்துக்கும் பொதுவாக அவற்றை விற்பனை செய்வதற்கு பிறான்ஸ் ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேர்கல் அதனை எதிர்க்கிறார்.

ஒன்றினைந்து கடன் முறிகள் விற்பனை செய்யப்பட்டால், செலவினத்தைக் குறைக்கவேண்டிய நாடுகள் மீது போதுமான அழுத்தம் ஏற்படாதெனவும், அதன் காரணமாக நடவடிக்கை எடுப்பதை அந்த நாடுகள் தள்ளிப்போடக்கூடுமெனவும் மேர்கல் கருதுகிறார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10121

Link to comment
Share on other sites

பூட்டிய அறைக்குள் ஐரோப்பிய தலைவர்கள் மீது அமெரிக்கா நெருக்குதல்

ஐரோப்பிய ஒன்றியம் தனக்குள் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக வலியுறுத்தியுள்ளார். தற்போது ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பராக் ஒபாமா, கிளரி கிளின்டன் இணைந்து பூட்டிய அறைக்குள் பேச்சுக்களை நடாத்திக் கொண்டிருக்கிறார்.

இத்தாலி, ஸ்பானியா, கிரேக்கம், போத்துக்கல் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க வேண்டும். யூரோ நாணய வலயம் சந்தித்துள்ள நெருக்கடிக்கு பொருத்தமான முடிவு காணாவிட்டால் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பாதகமாக அமையும். ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் கையில் வைத்திருக்கும் சேமிப்பை வெளியில் எடுத்து பிரச்சனைக்கு தீர்வு கண்டேயாக வேண்டுமென வலியுறுத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நேரடியான அழுத்தம் ஐரோப்பிய தலைவர்களுக்கு பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் பத்திரிகையாளருக்கு ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=89310

Link to comment
Share on other sites

ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராகிறது சீனா

ஏறத்தாழ ஐரோப்பாவை விலைக்கு வாங்க தயாராவிட்டது சீனா என்று இன்றைய ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தொழில் அமைச்சர் சான் டெமிங் அடுத்த ஆண்டு தனது பரிவாரங்களுடன் ஐரோப்பா வருகிறார். சீனாவின் பாரிய முதலீடுகளை ஐரோப்பிய மண்ணில் இறக்குவதற்கு அவர் வருகிறார். முதல் கட்டமாக 2.200 பில்லியன் குறோணர் பெறுமதியான முதலீட்டை சீனா செய்ய இருக்கிறது. இதுவரை சீன முதலீடுகளுக்கு தடை போட்டுவந்த ஐரோப்பா வேறு வழியற்ற நிலையில் தனது கதவுகளை திறந்துவிடுகிறது.

ஐரோப்பாவில் அமெரிக்க – பிரிட்டன் முதலீட்டு முறைகளை தழுவியே சீனாவும் முதலிட வருகிறது. இந்த முதலீடுகள் தொழிற்பட ஆரம்பித்தால் ஏறத்தாழ ஐரோப்பாவின் ஈரல்க்குலை சீனாவின் சிகப்புக் கரங்களுக்குள் சிக்குப்பட்டுவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை நேற்று முன்தினம் வெளியான ஓஈசிடி அறிக்கை ஐரோப்பாவின் பொருளதாரம் மட்டுமல்ல பிரிட்டனின் பொருளாதாரமும் மீண்டும் ஒரு தடவை வீழ்ச்சித்தடத்தில் குப்புற விழப்போகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பிரிட்டன் பாரிய வேலை நிறுத்தங்களை சந்திக்கும் விளிம்பு நிலையில் நிற்கிறது என்றும் எச்சரித்துள்ளது.

தற்போதைய உலகப் பொருளாதார நிலையையும், அதன் மந்தமான போக்கையும் உணர்ந்து சீனா, இந்தியா இரண்டு நாடுகளும் நடக்க வேண்டுமென உலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. சீனா இந்த எச்சரிக்கையை புரிந்து கொண்டளவுக்கு இந்தியாவால் புரிய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓஈசிடியின் எதிர்கால உலகப் பொருளாதாரம் பற்றிய விலாவரியான நோக்கு என்ற புதிய நூல் எதிர்கால பொருளாதாரப் போக்கை தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. அலையின் உச்சியில் நிற்கும் ஒரு கப்பல் பொத்தென கீழே வந்தது முதல் வீழ்ச்சியாகும். அப்படி வீழ்ந்த பொருளாதாரம் அடுத்த அலையில் ஏறாமல் மறுபடியும் வீழ்வது பெரும் சோகமாகும்.

http://www.alaikal.com/news/?p=89362

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.