Jump to content

யூரோ தாக்குப்பிடிக்குமா?


Recommended Posts

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன்பெறு தகமை குறைக்கப்படலாமென Standard & Poor's எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன்பெறு தகமை நிலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படலாமென Standard & Poor's நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன்பெறு தகமை நிலை தற்போது, triple A என்ற அதி உயர் மட்டத்தில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள, யூறோ நாணயத்தைப் பயன்படுத்தும் 17 நாடுகளில் 15 நாடுகளின் கடன்பெறு தகமை நிலை குறைக்கப்படும் சாத்தியம் உள்ளதென இந்த வார ஆரம்பத்தில் அந்த நிறுவனம் அறிவித்தது. பிறசல்ஸில் இன்று ஆரம்பமாகி, நாளை முடிவடையவுள்ள ஐரோப்பிய ஒன்றிய மகாநாட்டின் பின்னர் றோ வலய நாடுகளின் கடன்பெறு தகமை குறித்து முடிவு செய்யப்படுமெனவும், அதன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன்பெறு தகமை குறித்து முடிவு செய்யப்படுமெனவும் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Standard & Poor's குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஐரோப்பிய மத்திய வங்கி, இன்று அதன் பிரதான வட்டி வீதத்தைக் குறைக்குமென எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10334

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புதிய ஒப்பந்தம் !

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பொருளாதார ஒன்றியமாக மாற்றாவிட்டால் இன்று தோன்றியுள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாதென்று ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும், பிரான்சிய அதிபரும் கடந்த சில தினங்களாக கூறிவந்தார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடனைக் கொடுத்துவிட்டு அவர்கள் போன போக்கிலேயே விட்டால் கொடுத்த பணத்தையெல்லாம் நாசமாக்கிவிட்டு மறுபடியும் தலையை சொறிந்தபடி நிற்பார்கள். ஆகவே யூரோ நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட 17 நாடுகளுக்கும் முதற் கட்டமாக பொருளாதார யூரோ வலயம் ஒன்றை அமைப்பது அவசியமானது. வெறுமனே கடன் கொடுத்த நாட்டை மட்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அது பாரபட்சமாக அமையும், ஆனால் பொதுவான பொருளாதார யூரோ வலயம் பாகுபாடற்றதாக இயங்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த விடயத்தில் தற்போது தலைவர்களிடையே ஓர் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதில் உள்ள முக்கிய விதிகள் வருமாறு :

01. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.

02. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது வரவு செலவுத்திட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது 0.5 வீதத்திற்கு மேலோ கீழோ பற்றாக்குறை போகக்கூடாது.

03. அனைத்து நாடுகளுக்கும் சமமான விதிகளே இருக்கும்

04. பற்றாக்குறை 3 வீதத்தை தாண்டினால் தண்டம் விதிக்கப்படும்

05. பெரியளவில் பற்றாக்குறை ஏற்பட்டு உதவி பெற்ற நாடுகள் யூரோ கமிசனின் ஆலோசனைகளை பெற்று பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

டந்த இரண்டு தினங்களாக புறுக்சல்சில் நடந்த மாநாட்டின் பின்னர் தலைவர்கள் இந்த இலக்கை எட்டித் தொட்டுள்ளனர். சுனாமியில் சிக்குப்பட்ட நாய் அதை எதிர்த்து நீந்தவா முடியும் என்ற நிலையில் நீரோடு போவது போல நாடுகள் வேறு வழி தெரியாது இழுவுண்டு போவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

http://www.alaikal.com/news/?p=90343

Euro crisis: Eurozone deal reached without UK

EU members which use the euro have agreed to a tax and budget pact to tackle the eurozone's debt crisis.

But a German and French attempt to get all 27 EU states to back changes to the union's treaties was dropped after objections from the UK.

Prime Minister David Cameron had insisted on an exemption for the UK from some financial regulations.Instead, eurozone members and others will adopt an accord with penalties for breaking deficit rules.

http://www.bbc.co.uk/news/world-16104089

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பிரித்தானியா என்ன சபையை குழப்புது போலைகிடக்கு?

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார சீரமைப்பு முயற்சிகள் தோல்விப்படியில்..

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மந்தத்தை நிவர்த்தி செய்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக சந்தித்து கடந்த இரு நாட்களாக ஒரு பொதுவான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தற்போது பயனற்றுப் போயுள்ளது. தற்போதைய நிலையில் 27 அங்கத்துவ நாடுகளில் 17 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ பாவணையில் இருப்பதும், ஏனைய 10 நாடுகள் தம் தம் நாணயங்களையும் பாவணையில் வைத்திருக்கின்றனர்.

தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் யாப்பில் சில விடயங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இந்த 17 நாடுகளின் கோரிக்கையாக இருப்பதோடு இதற்கு முன்னோடியாக யேர்மனி, பிரான்ஸ் நாடுகள் இந்த வேலைத் திட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், தமது வருடாந்த வரவு செலவு திட்டத்தில் சய ( – ) வருமாயின், ஐரோப்பிய ஒன்றியம் நேரடியாக தலையிடுவதோடு, சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்கு வழி வகுத்துக் கொடுப்பதே ஒன்றியத்தின் நோக்கமாகும்.

இந்த விடயத்துக்கு ஓன்றிய நாடுகளின் ஆதரவு உண்டா?

ஒன்றிய நாடுகளுக்கு இடையே ஆதரவு உண்டா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால் இதை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என யேர்மனி நாடு ஒற்றக்காலில் நிற்பதும், இன்கிலன்ட் நாடு இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என நேரடியாகவே கூறிவிட்டது.

எமது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விரும்புகின்றது, ஐரோப்பிய சந்தை மிகவும் முக்கியமானது, இங்கே எமது அதிகாரமும் முக்கியமானது ஆனால் எமது தேசிய அதிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என இன்கிலன்டின் பிரதமர் டேவிட் கமரோன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.

யுரோ நாணயத்தை வைத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிலமை என்ன?

யுரோ நாணயத்தை பாவணையில் வைத்திருக்கும் 17 நாடுகள் ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது, இன்னும் விரிவாகச் சொல்லப் போனால் யேர்மனியின் கோரிக்கைகளை ஏற்று யாப்பில் மாற்றங்களை செய்வதற்கு இணைங்கியுள்ளனர். இங்கே எட்டப்படும் தீர்வுகள் 17 நாடுகளுக்கு மட்டுமல்ல, யுரோ நாணயத்துக்குள் வராத 10 அங்கத்துவ நாடுகளும் தாம் விரும்பும் பொழுது இணைந்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.

தற்போது நடந்து முடிந்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரண்டு பிரிவாகப் பிரிந்துள்ளனர். 17 நாடுகள் யுரோ நாணயத்தை பாவிக்கும் நாடுகளாகவும், 10 நாடுகள் யுரோ நாணயத்தை பாவிக்காத நாடுகளாகவும், இனி வரும் காலங்களில் இந்த 17 நாடுகளின் அதிகாரங்கள், முடிவுகள் முன்னிலமைப் படுத்தப்படும் எனவும் ஏனைய 10 நாடுகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை எனவும் கூறப்படுகின்றது.

Link to comment
Share on other sites

சரி, ஐரோப்ப ஒன்றியத்தின் எதிர்லாம் தான் என்ன?

தற்போதைய நிலையில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பிரிவாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிந்துள்ளன என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 17 நாடுகள் ஒரு குழுவாகவும், 9 நாடுகள் ஒரு குழுவாகவும், இறுதியாக இன்கிலன்ட் தனியாக ஒரு குழுவாகவும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் இருந்தே இன்கிலன்ட் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு மூச்சாக செயல் படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த வண்ணமே உள்ளது. தமது சொந்த நலன்களை மட்டும் கவனத்தில் கொண்டுள்ளனர் எனவும் தொடர்ந்தும் காலணித்துவ நாடாக தம்மை காட்டிக் கொள்ள விரும்புகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. ஐரோப்ப ஒன்றியத்தின் யாப்பு மாற்றங்கள் சம்பந்தமாக இன்கிலன்ட் எடுத்த முடிவு மேல் குறிப்பிட்ட விடயங்களை சரி என்று சொல்ல வைத்துள்ளது.

இது இப்படி இருக்க இந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இணைவதற்கு இன்னும் பல ஐரோப்பிய நாடுகள் விண்ணப்பித்துள்ளதோடு, நாம் எப்போ ஒன்றியத்துக்குள் அங்கத்துவ நாடாக வருவோம் என காத்திருக்கின்றனர். எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் வௌ;வேறு வேகத்தில் ஓடினாலும் மொத்த ஐரோப்ப ஒன்றியம் என்று வரும் பொழுது தொடர்ந்தும் உலகத்தில் மற்றய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது அதிகாரம் கூடிய ஒன்றியமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த யாப்பில் எதை மாற்ற விரும்புகின்றனர் அல்லது புதிதாக சேர்க்க விரும்புகின்றனர்?

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பொருளாதாரத்தை ஒழுங்காக கடைப்பிடிக்காத பச்சத்தில், இந்த நாடுகளுக்கு சில தடைகளை விதிப்பது மற்றும் இந்த நாடுகளின் தேசிய வரவு செலவு திட்டத்தில் நேரடியாக தலையிடுதல் போன்றவை புதிதாக ஐரோப்பிய ஒன்றிய யாப்பில் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர்.

http://www.alaikal.com/news/?p=90472

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

இலங்கை யூரோவில் சேர வாய்ப்புக்கள் என்ன?

சும்மா கோத்து விடலாமேண்டுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு பிறக்கட்டும், புது வழி காட்டட்டும்

புத்தாண்டுப் பிறப்பு என்பது ஒரு நாட்காட்டியின் முடிவும், புதிதாக பயன்படுத்தப்போகிற மற்றொரு நாட்காட்டியின் வருகை என்பதைத் தவிர, அதற்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? என்று வினவுபவர்கள் உண்டு.

ஆனால் ஒரு புதிய ஆண்டின் பிறப்பில் நல்லது நடக்கும், நல்லதே நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு கொண்டாடும் மக்களே உலகெங்கிலும் அதிகம். தங்களாலும், தாங்கள் தேர்வு செய்யும் அரசுகளாலும், அரசமைப்பின்படி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி நிர்வாகத்தாலும் பல பத்தாண்டுகளாக எதையும் சாதிக்காத நாடுகளில் காலத்தையும், அதன் மாற்றத்தையும் நம்பிக்கையோடு மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே புத்தாண்டு பிறப்பு என்பது, அது தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், ஆங்கில புதிய ஆண்டாக இருந்தாலும், தைப் பிறப்பாக இருந்தாலும் அதற்கு மக்கள் மனதில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

அப்படி ஒரு எதிர்பார்ப்போடுதான் நாளை பிறக்கிறது 2012. ஒவ்வொரு ஆண்டையும் விட அடுத்துப் பிறக்கும் ஆண்டின் மீது அதிகமான நம்பிக்கை ஏற்படுகிறது. அதுவே நாளை பிறக்கும் புதிய ஆண்டின் மீதும் உள்ளது. இன்றோடு முடியும் கி.பி. 2011ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக - 2008ஆம் ஆண்டைப்போல் - உலகிற்கு மிக மோசமான ஆண்டாக இருந்தாலும், இந்த ஆண்டு பல எழுச்சிகளை மானுடத்தில் ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னமைந்த அரசுகளில் பல ஜனநாயக அரசுகளாக தங்களைக் கூறிக்கொண்டாலும், அரசமைப்பிலும் ஆட்சி முறையிலும் அவை வெகுசன விரோத அரசுகளாக இருந்தன. அதன் விளைவாக மக்கள் நலன், உரிமை, எதிர்காலப் பாதுகாப்பு ஆகிய முக்கிய அடிப்படைகள் புறக்கணிப்பட்டது. இந்த ஏற்பட்ட குமைச்சல் இந்த ஆண்டில்தான் ஜனநாயகப் புரட்சிகளாக வெடித்தது. மல்லிகைப் புரட்சியாக டூனிசியாவில் வெடித்தது. அது பெரும் மக்கள் புரட்சியாக எகிப்து அரசுக்கு எதிராக மலர்ந்தது. பல பத்தாண்டுகளாக, உலகின் முதன்மை வல்லரசின் துணையுடனும், இராணுவத்தின் ஆதரவுடனும் நிகழ்ந்துவந்த சர்வாதிகார அரசு வீழ்ந்தது. ஹோஸ்னி முபாரக் அயல் நாட்டிற்குத் தப்பி சென்றதால் பிழைத்தார். இப்போது அங்கு உண்மையான ஜனநாயக அரசு அமைவதற்கான செயல்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

எகிப்தைத் தொடர்ந்து மேலும் பல மத்திய கிழக்காசிய நாடுகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சி வெடித்தது. சிரியா, லிபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஒடுக்குமுறையில் கொல்லப்பட்டனர். ஜனநாயகத்தைத் தவிர அனைத்தையும் தனது மக்களுக்கு அளித்த லிபிய அதிபர் கர்னல் முவம்மர் கடாஃபியின் 40 ஆண்டுக்கால ஆட்சி முடிவிற்கு வந்தது. தனது நீண்ட கால எதிரியை வீழ்த்த சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த அமெரிக்க வல்லரசு, நேச நாடுகளுடன் இணைந்து அரசுக்கு எதிரான படைகளுக்கு முழு ஆதரவு அளித்து கடாஃபியின் ஆட்சி அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமின்றி, அவரை கொடூரமாக கொலை செய்து பழி தீர்த்துக்கொண்டது.

எகிப்தைப் போலவே, லிபியாவிலும் அந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக ஆட்சி அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஏனெனில் தனக்குத் தோதான, லிபியாவின் எண்ணெய் வளங்களை வளைத்துப் போட வழி விடும் ஒரு அரசை - அங்குள்ள கட்சிகளைக் கொண்டு உருவாக்கிய பின்னரே தேர்தல் நடத்த அமெரிக்க சம்மதிக்கும் என்பதை அறியாதார் யாரும் இருக்க முடியாது. ஆயினும், ஒரு சர்வாதிகார ஆட்சியை ஒன்றிணைந்து வீழ்த்தும் வல்லமைப் பெற்ற மக்கள் சக்தியால், சர்வதேச சர்வாதிகாரத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க முடியாதா என்ன?

எனவே, மத்தியக் கிழக்காசியாவிலும், வட ஆப்ரிக்காவிலும் உருவான மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் மற்ற பல அரசுகளுக்கு மட்டுமின்றி, ஆட்சித் தலைமைகளை கைக்குள் போட்டுக்கொண்டு அந்நாட்டு வளங்களைச் சுரண்டிக் கொழுக்கும் வல்லரசுகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், கடன் சுமை மிகப் பெரிய அச்சுறுத்தலாகி கிரீஸ் நாட்டை ஆட்டம் காணச் செய்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவின் வலிமையான நாடான இத்தாலியின் பொருளாதாரமும் திண்டாட்டத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள கடன் சுமை (Dஎப்ட் Bஉர்டென்) இந்தியா உள்ளிட்ட உலகப் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. 2008ஆம் ஆண்டில் வீட்டுக் கடன் சிக்கலால் உருவான பொருளாதாரப் பின்னடைவை விட மிகப் பெரிய பின்னடைவு கடன் சுமை அழுத்தத்தால் ஏற்படும் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

ஜனநாயகப் புரட்சிகள், பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றோடு உலகின் நீண்ட கால போர்க்களங்களாகியுள்ள ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கப்போகிறது என்பது இந்த ஆண்டின் முக்கிய எதிர்ப்பார்ப்பாகும். பாகிஸ்தானின் ‘நட்புடன்’ ஆப்கானிஸ்தானில் தனது ‘பயங்கரவாத ஒழிப்புப் போரை’த் தொடங்கிய அமெரிக்கா, இன்று பாகிஸ்தானிற்குள் தனது ஆளில்லா விமானங்களை செலுத்தி குண்டு வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், அதன் உச்சகட்டமாக ஒரு தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் கொல்லப்பட்டதும் அவர்களுக்கு இடையிலான உறவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதனை இரு நாடுகளும் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அதுவே உண்மையாகும். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசை வலுப்படுத்திவிட்டு வெளியேறுவது என்கிற அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.

2003ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பு செய்த ஈராக்கில் இருந்து எவ்வாறு வேறு வழியின்றி வெளியேறியதோ, அதேபோல் ஆப்கானிஸ்தானில் இருந்தும் அது வெளியேறும் நிலை உறுதியாகியுள்ளது. இதன் மூலம் ஆயுத வல்லமையைக் கொண்டு அமைதி ஏற்படுத்துவது என்பதும், ஜனநாயக அரசை உருவாக்குவது என்பதும் இயலாத காரியம் என்பது நிரூபணமாகியுள்ளது. அமைதியும், ஜனநாயகமும் மக்கள் சக்தியால் மட்டுமே நிகழ்த்தப்பட முடியும் என்பது 6 மாத கால புரட்சியால் எகிப்தில் சாத்தியமாகியுள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் ஆதரித்த இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற முனைப்பு இந்த ஆண்டில் எள் முனை அளவிற்குக் கூட சர்வதேச நாடுகளால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மனித உரிமைகள், மானுடச் சட்டங்கள், பிரகடனங்கள் ஆகியன பற்றி அன்றாடம் பேசும் உலக நாடுகள், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மட்டும் பேசத் தயங்குகிறார்கள். போஸ்யாவில் இருந்து சிறிபிரின்னிசா முகாமில் 8,000 முஸ்லீம்கள் செர்பிய இராணுவம் கொன்றொழித்ததை இனப் படுகொலை என்று கூறி, அந்நாட்டு அதிபரையும், கொல்வதற்கு உத்தரவிட்ட ஜென்ரல் ராட்கோ மிலாடிச்சையும் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ள சர்வதேசமும், அதன் சட்டங்களும், ஒன்றே முக்கால் இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தத் தயக்கம் காட்டி நிற்கின்றன.

மகிந்த ராஜபக்ச ஒரு தேர்ந்த அரசியல்வாதி, இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று ‘ஜனநாயக' ரீதியாக அதிபராகியுள்ளார். தன் மீதும், தனது அரசு மீதும் கூறப்படும் குற்றச்சாற்றுகளுக்கு சமீபத்தில் பேட்டியளித்த ராஜபக்ச, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் குண்டு வீசி அன்றாடம் மக்களைக் கொன்றுக்கொண்டிருப்பவர்கள்தான் எனது அரசைப் பார்த்து போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு எந்த ஒரு அரசும் பதில் கூறவில்லை. குற்றவாளிகள் நிறைந்த சமூகத்தில் நேர்மையாளன் பைத்தியக்காரன்தானே? அந்த நிலைதான் ஈழத் தமிழ் மக்கள் பட்ட துயரத்திற்கு நியாயம் கிடைக்காமல் தடுக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகளால் நாட்டின் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கிறது. ஊழல் முறைகேடுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட நட்டம் பல இலட்சம் கோடிகளைத் தாண்டியுள்ளது. 65 ஆண்டுக்கால ஜனநாயக இந்தியாவிற்கு இதுவும் ஒரு சாதனையே. சுவிஸ் வங்கிகளின் இரகசியக் கணக்குகளில் கருப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ள நபர்களின் பட்டியலில் இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பெயரும் உள்ளதென மாநிலங்களவையில் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அமைச்சருமான ராம் ஜெத்மலானி குற்றஞ்சாற்றினார். அதனை மறுக்கு முடியாத மத்திய அரசு, குற்றச்சாற்றை திரும்பப் பெறுங்கள் என்று மன்றாடுகிறது!

உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வக்கற்றதாக இந்நாட்டு நடுவன் அரசு உள்ளது. பொருளாதார நிபுணர்களை பிரதமராகவும், திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராகவும் கொண்டுள்ள மத்திய அரசால், காய்கறி, பழ வகைகள், பால், முட்டை விலைகளைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதார சீர்த்திருத்தத்தின் மூலம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற இந்த மாமேதைகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ஆக சரிந்துள்ளது. ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்த ஜப்பானுடன் ஒப்பந்தம் போடுகிறது மன்மோகன் சிங் அரசு.

இப்படி திரும்பிய திக்கெங்கிலும் இருளாய் படர்ந்துள்ள நிலையில்தான் 2012 பிறக்கிறது. இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளாவிய பொருளாதாரம், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியன மந்திரங்களாக இருந்த நாடுகளில் இந்தப் பொருளாதார சிதைவு கருக்கொள்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. இதில் இருந்து ஒரு புதிய பொருளாதார பார்வை பிறக்கலாம், அது நாடுகளுக்கிடையிலான நிறுவன பொருளாதார உறவைக் காட்டிலும் சிறந்ததாகவும் அமையலாம், இன்றுள்ள பல சிக்கல்களுக்குப் புதிய தீர்வுகளையும் தரலாம். எல்லாம் காலத்தின் கையிலும், இறைவனின் சித்தத்திலும் உள்ளது என்று கருதுவோம்.

இருளுக்கு முடிவு உண்டு. அது ஒளியால் பிறக்கும். அந்த நம்பிக்கையோடு 2012ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

http://tamil.webduni...111231064_2.htm

டிஸ்கி:

நமக்கெல்லாம் கையில் வீக்கம் காலில் வீக்கம் என்றாத்தான் தெரியும்... அதற்கு IODEX தடவி படுத்துடுவோம் ஆனால் உலக பொருளாதார நிபுணர் தமிழீழ நிதியமைச்சர் தோழர் அக்கூதா அவர்களுக்குதான் பணவீக்கத்தை பற்றி தெரியும்.. ஆக தோழரது ஆய்வுக்காக இது இணைக்கபடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்குச் சந்தையில் அயல்நாட்டினர் முதலீடு செய்ய அனுமதி

இந்திய பங்கு சந்தையில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இந்திய நிறுவனங்களின் மீதான மூலதனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தனியாக முதலீடு செய்வதற்கு 5 சதவீதமும், கூட்டாக முதலீட்டு செய்வதற்கு 10 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் குறிப்பிட்ட சில திட்டங்களில் 13 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) மூலம் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்திய மூலதனச் சந்தையை விரிவுபடுத்தவும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.40,000 கோடி கடன் திரட்ட மத்திய அரசு முடிவு

எதிர்பார்த்த அளவிற்கு வரி வருவாய் கிடைக்காததையடுத்து, நீண்ட கால பத்திரங்களை விற்று சந்தையில் இருந்த ரூ.40,000 கோடிக்கு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது மட்டுமின்றி, குறைந்த கால கருவூலப் பத்திரங்களை விற்று மேலும் ரூ.65,000 கோடி நிதித் திரட்டவும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதன் மூலம் சந்தையில் இருந்து பெறும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி நிதி திரட்ட வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 5 இலட்சம் கோடி ரூபாய் கடன் பத்திரங்களின் மூலம் நிதி திரட்டியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சந்தையில் வாங்கும் கடன் அளவு 4.6% என நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 5.5% கடந்துள்ளது.

நிதியமைச்சகம் கடன் திரட்ட விற்கும் நீண்ட கால பத்திரங்களுக்கு 8.79% வட்டி தருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் சந்தையில் இருந்து திரட்டும் கடன் கடந்த ஆண்டை விட 25% கூடுதலாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு சந்தையில் இருந்து பெறும் கூடுதல் கடன் பங்கு சந்தைகளில் எதிர்மறையாக வினையாற்றும் என்று கூறப்படுகிறது.

நன்றி வெப்துனையா

டிஸ்கி:

உலக பொருளாதார நிபுணர் ஆய்வுக்காக இங்கு இணைக்கபடுகிறது

Link to comment
Share on other sites

இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாகிறது..

brik-300x211.png

BRIC பிறிக் நாடுகள் என்ற குறியீட்டு சொற்களில் பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளும் இடம் பெறுகின்றன. மேலை நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்குப்பட இந்த பிறிக் நாடுகள் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அமைவாக இந்த நாடுகளும் பாரிய முன்னேற்றமடைந்து வந்தன.

சீனா அடைந்த முன்னேற்றம் உலகத்தை அதிசயிக்க வைத்தது. அதுபோல இந்தியாவின் மேலதிக வருமானமும், பொருளாதார வளர்ச்சியும் பாரிய முன்னேற்றமடைந்தது. மேலும் பிரேசில் வேகமாக வளர்ந்து ஆறாவது முக்கிய பொருளாதாரத்தை பிடித்தது. ஆனால் இப்போது நிலமை மறுபடியும் மாற்றமடைய தொடங்கியுள்ளது.

பிறிக் நாடுகளில் முதலிட்ட மேலை நாடுகள் தற்போது அந்த முதலீடுகளை மெல்ல மெல்ல திருப்பப் பெற்று வருகின்றன. இதில் முக்கியமான நாடு இந்தியாவாகும். இந்தியாவில் போட்ட முதலீட்டை மேலை நாட்டு முதலீட்டாளர்கள் மெல்ல மெல்ல திரும்பப் பெற்று வருகிறார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தில் இதன் தாக்கம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் கடுமையான வீசா கட்டுப்பாடுகள், தமது நாட்டின் பொருளாதாரம் வெளியே செல்லக்கூடாதென்ற இறுக்கம் யாவும் அந்த நாட்டில் முதலிட விரும்ப முடியாத சூழலையே ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்திய பங்குச் சந்தை 24 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளமையும் வெளிநாட்டவரின் வெளியேற்றத்திற்கு அதி முக்கிய காரணமாகும்.

அடுத்து இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. வங்கிகள் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன. இதனால் விலை உயர்வு, தொழில்களை விருத்தி செய்ய முடியாத நிலை போன்ற மோசமான சூழல் உருவாகியுள்ளது. ஆகவே இந்தியாவை கை கழுவுவது நல்லது என்ற கருத்து நிலவுகிறது.

மேலும் ரஸ்யாவின் ரூபிள் நாணயம் பெறுமதி இறங்கக் கூடிய அபாயம் தெரிவதால் அங்கிருந்தும் முதலீட்டாளர் வெளியேறுகிறார்கள்.

அடுத்து சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டதாகும். ஐரோப்பாவில் உள்ள பொருளாதார நெருக்கடி சீன இறக்குமதிகளை குறைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. ஆகவே சீன பொருளாதாரத்தின் எதிர்காலமும் நிச்சயமற்றுள்ளதால் ஐரோப்பிய முதலீட்டாளர் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

இந்த பிறிக் நாடுகளில் தற்போது பிரேசில் மட்டும் உருப்படியான நிலையில் இருக்கிறதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.alaikal.com/news/?p=92808

Link to comment
Share on other sites

யூரோ என்பது முழுமையாக இல்லாமல் போகாது. இன்றுள்ள நாடுகளின் அங்கத்துவம் போய், சிறியளவில் நாடுகளை கொண்டிருக்கும்.

யூரோ பணம் குறையும் என எதிர்பார்ப்பதால், சேமிப்பு உள்ளவர்கள் அதை அமெரிக்க

டாலரில் வைத்திருக்கலாம்.

Dollar drubs Euro

The European common currency will fall to parity with the US dollar by year's end.

The European Central Bank will be left with little choice in saving banks and their sorry sovereigns other than to print, print, print euros, and more of something almost always leads to a lower price.

- Brian Sullivan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பணவீக்கத்தை உயர்த்தும் சீனா!

டெல்லி: இந்தியாவுக்கான ஏற்றுமதிப் பொருள்களின் விலையை சீனா அதிகரித்துவிட்டதுதான் இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயரக் காரணம் என பொருளாதார கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்திய உற்பத்தி துறைக்கு தேவையான பொருட்களில் 25 சதவீதம் சீனாவிலிருந்தே இறக்குமதியாகிறது. மேலும் இந்தியாவில் விற்பனையாகும் 3ல் ஒரு பொருள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுதான்.

இதை நன்கு உணர்ந்துள்ள சீனா, கடந்த ஆண்டு முதல் இந்தியாவுக்கான தனது ஏற்றுமதிகளின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்தி வந்துள்ளது. இறக்குமதி விலை அதிகரிப்பால் உள்நாட்டு தயாரிப்பிலும், நேரடி விற்பனையிலும் சீன பொருட்கள் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்துகின்றனர்.

உணவு பணவீக்கம் அல்லாத மற்ற பொருட்கள் அடிப்படையிலான பணவீக்க உயர்வுக்கு சீனாவும் முக்கிய காரணமாக உள்ளது. அத்துடன், கடந்த 6 மாதங்களில் இந்திய ரூபாய்க்கு இணையாக சீன கரன்சி மதிப்பு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, இறக்குமதி செலவு அதிகரிப்பு, தொழிலாளர் கூலி உயர்வு ஆகியவற்றால் இந்தியாவில் பொருட்கள் விலை உயர்ந்து பணவீக்க அதிகரிப்புக்கு காரணமாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2011/10/18/rising-export-prices-china-inflation-pressure-india-aid0136.html

டிஸ்கி:

உலக பொருளாதார நிபுணர் .. தமிழீழ நிதியமைச்சர் அவர்களின் ஆய்வுக்காக இங்கே இணைக்கபடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி..''எப்ப பார்த்தாலும் நெகடிவா பேசி கடுப்பேத்துறான், யுவர் ஆனர்''!!

வட்டியைக் கூட கட்ட முடியாதவர்களுக்கு எல்லாம், கடன்களை அள்ளித் தந்து (subprime lending), திவால் ஆயின அமெரிக்க வங்கிகள். தாங்கள் திவால் ஆனதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் கீழே இழுத்துவிட்டன.

இதையடுத்து 2008ம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் உருக்குலைந்து, உலகளவில் எதிரொலித்து, லட்சக்கணக்கானோரின் வேலைகளைப் பறித்தது. பெருமளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்படப் போகிறது என்ற அச்சம் பரவினாலும், நல்ல வேளையாக, அந்த பொருளாதார சிக்கலில் இருந்து அமெரிக்கா ஓரளவுக்கு வேகமாகவே வெளியே வந்து கொண்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா தட்டுத்தடுமாறி எழுந்துவிட்டாலும், அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கம், ஐரோப்பாவில் நிலைமை மகா மோசமாக உள்ளது.

கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, யூரோவின் மதிப்பைச் சரித்து, அந்த கரன்சியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளையும் சிக்கலில் இழுத்துவிட்டுவிட்டது.

மேலே சொன்ன நாடுகளின் வளர்ச்சி விகிதம் என்னவாக உள்ளது என்று தெரியுமா.. கிட்டத்தட்ட 0%. அதாவது, இன்னும் கொஞ்சம் சறுக்கினால், மைனஸ் வளர்ச்சி விகிதத்துக்குள் போய்விடும் நிலைமை. இந்த 'பிக்ஸ்' (Portugal, Italy, Ireland, Greece and Spain நாடுகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து 'PIIGS' என்று 'அன்போடு' அழைக்கின்றனர் உலக சந்தைகளில்) நாடுகள் கிட்டத்தட்ட பொருளாதாரத் தேக்க நிலைக்குள் போய் விட்டன என்றே கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த ஐரோப்பாவின் உற்பத்தி மதிப்பில் (GDP) 25 சதவீதத்தை பூர்த்தி செய்வது இந்த 'பிக்ஸ்' தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இங்கு ஏற்படும் பொருளாதாரத் தேக்கம் ஐரோப்பாவின் பலமிக்க பொருளாதார சக்திகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்தையும் சேர்த்து பதம் பார்க்கப் போவதும் நிஜம்.

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் முக்கியமான வருவாய், மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி மூலம் தான் வருகிறது. இப்போது, பெரும் கடன் சிக்கலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை குறைக்க ஆரம்பித்துவிட்டதால், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் ஏற்றுமதி மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதியும் சரிந்துவிட்டது. ஆக, ஐரோப்பாவில் சில நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ஒட்டு மொத்த யூரோ நாடுகளையும் சரிய வைத்து, அமெரிக்காவையும் தாக்கிவிட்டது.

அமெரிக்காவில் தங்களது உற்பத்தி மையங்களை வைத்துள்ள பல ஐரோப்பிய நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. இதனால், அமெரிக்காவில் ஐரோப்பிய நிறுவனங்கள் மூலம் உருவான வேலைவாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டன.

எனவே அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கமும் (அமெரிக்கா) இந்தப் பக்கமும் (ஐரோப்பா) பிரச்சனை. இந்தப் பிரச்சனைகள் அடுத்து ஆசியா உள்ளிட்ட நாடுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதும் உண்மை.

ஆசிய நாடுகளுக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. அடுத்ததாக ஆசிய நாடுகளில இருந்து இறக்கமதிகளையும் ஐரோப்பிய நாடுகள் குறைக்க ஆரம்பித்தால், இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் மீண்டும் ஒரு 2008ம் ஆண்டு பொருளாதார சிக்கலை சந்திக்க வேண்டி வரலாம்.

''எப்ப பார்த்தாலும் நெகடிவாகவே பேசி கடுப்பேத்துறான், யுவர் ஆனர்'', என்று என் மீது கோபம் வரலாம்.

ஆனால், இந்தப் பொருளாதார சிக்கலில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு தீர்வையும் முன் வைக்கிறார்கள் மாபெரும் பொருளாதார நிபுணர்கள். அவர்கள் சொல்வது இது தான்.

ஐரோப்பிய மத்திய வங்கியான ECB நிறைய யூரோ கரன்சியை அச்சடிக்க வேண்டியது, அந்தப் பணத்தை வைத்து பிக்ஸ் நாடுகள் வெளியிடும் கடன் பத்திரங்களை (bonds) மொத்தமாக வாங்கிப் போட வேண்டியது, இதனால் கடன் பத்திரங்களின் மதிப்பு உடனடியாகக் கூடும், எப்போது கடன் பத்திரங்களின் மதிப்பு அதிகரிக்கிறதோ, அதில் முதலீடு செய்வோரின் ஆர்வம் அதிகமாகும், அதாவது அதிகமான பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவர், இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் வந்து குவியும், இதனால் வங்கிகளுக்கு அரசு தரும் கடனுக்கான வட்டியைக் குறைக்கலாம், குறைந்த வட்டிக்கு பணம் கிடைத்தால், வங்கிகளும் குறைந்த வட்டிக்கு அதை நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும், இதனால் சந்தையில் பணப் புழக்கம் பெருகும், பொருளாதார நெருக்கடியும் கட்டுக்குள் வரும்.

இது தான் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் பல தீர்வுகளில் ஒன்று.

அரசே காசை அச்சடித்து பிரச்சனையை தீர்ப்பதா.. இது துக்ளக் யோசனை மாதிரியல்லவா இருக்கிறது என்று நினைக்காதீர்கள். 2008ம் ஆண்டு பொருளாதார சிக்கலின் உச்சத்தில் அமெரிக்கா இருந்தபோது அந் நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி இதைத் தான் செய்தது. டாலர்களை அச்சடித்து குவித்து, தனது பொருளாதார சிக்கலை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்து காட்டியது.

ஆனால், அமெரிக்கா ஒரே நாடு.. ஒரே டாலர்.. அச்சடித்து தீர்த்துவிட்டார்கள். ஆனால், யூரோ ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. கூடுதலாக அச்சடிக்கப்படும் யூரோவால் ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து போன்ற இப்போது பொருளாதார பிரச்சனை இல்லாத நாடுகளிலும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் வரலாம். அதாவது சந்தையில் பணம் நிறைய இருந்தால், பொருட்களின் விலை உயரும். 'பிக்ஸ்' நாடுகளைக் காப்பாற்ற நாங்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும் என இந்த நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம்.

இதனால் வேறு ஏதாவது தான் செய்ய வேண்டும் என்று மண்டையை குழப்பிக் கொண்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்.

http://tamil.oneindia.in/editor-speaks/2012/01/europe-heading-into-recession-2012-aid0090.html

டிஸ்கி:

உலக பொருளாதார நிபுணர் மற்றும் தமிழீழ நிதியமைச்சர் அவர்களின் ஆய்வுக்காக இணைக்கபடுகிறது

Link to comment
Share on other sites

ஒன்பது யூரோ நாடுகளின் அரச பத்திரங்கள் தரம் குறைப்பு

அமெரிக்க நிறுவனமான எஸ் அண்ட் பி ஒன்பது யூரோ நாடுகளின் கடன் பத்திர தரத்தை குறைத்துள்ளது.

- பிரான்ஸ், ஆஸ்திரியா இரண்டும் அதியுயர் தரமான இணை இழந்துள்ளன

- ஜெர்மனி இன்னும் தரத்தை கொண்டுள்ளது

- பிரான்ஸ், ஆஸ்திரியா, மோல்டா, சிலவோக்கியா, சிலவேனியா ஒரு படியாலும்

- இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், சைப்பிரஸ் இரண்டு படியாலும் குறைக்கப்பட்டுள்ளன

http://ca.reuters.com/article/businessNews/idCATRE80C1BC20120114

Link to comment
Share on other sites

கடன் தகைமை நிர்ணயிக்கின்ற ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் நிறுவனம் பிரான்ஸுடைய கடன் தகைமையை மூன்று ஏ என்ற அதிகபட்ச மதிப்பெண்ணிலிருந்து குறைத்திருக்கும் நிலையில், பிரஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சரியான பாதையில்தான் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரஞ்சுப் பிரதமர் ஃபிரான்சுவா ஃபிய்யோன் வாதிட்டுள்ளார்.

"கடன் தகைமை குறைக்கப்பட்டதால் பிரான்ஸுக்கு பாதிப்பில்லை"

பிரான்ஸில் பட்ஜெட் பற்றாக்குறைகளை குறைப்பதற்கும் தொழிற்சந்தையை மறுசீரமைப்பதற்குமான சீர்திருத்தங்களை பிரான்ஸ் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கடன் வாங்குவதற்குரிய தகைமை தொடர்பில் பிரான்ஸ் இதுநாள் வரை பெற்றிருந்த மூன்று ஏ (AAA)என்ற மதிப்பெண்ணிலிருந்து அது கீழே இறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்ற பிரச்சாரத்தை செய்கின்ற முயற்சியில் பிரஞ்சு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனலாம்.

பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களும், கடன் குறைப்பு முயற்சிகளும் திட்டமிட்டபடி தொடரும் என்றும் அது கூறியுள்ளது.

யூரோ புழங்கும் நாடுகள் பலவற்றிலும் எழுந்துள்ள நெருக்கடிதான் பிரான்ஸின் கடன் தகைமை குறைக்கப்படுவதன் காரணம் என்று பிரஞ்சு பிரதமர் பிரான்சுவா ஃபிய்யோன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.

கடன் தகைமையை நிர்ணயிக்கும் நிறுவனம், பிரான்ஸினுடைய பொருளாதாரக் கொள்கைகளினால் அதிருப்தி அடைந்து பிரான்சுடைய மதிப்பெண்ணைக் குறைத்திருக்கவில்லை, ஆதாலால பிரான்ஸ் தற்போது முன்னெடுத்துவரும் பொருளாதாரக் கொள்கைகள் தொடரவே செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டுக்குள் பிரான்சின் அரசு வரவு செலவுக் கணக்கில் துண்டு விழும் தொகையை இல்லாது செய்வதோடு செலவுகள் போகவும் கையில் நிதி மிஞ்சும் என்கிற வகையில் செய்வதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக பிரஞ்சு அரசாங்கம் கூறுகிறது.

சிக்கலில் சர்கோஸி

பிரான்ஸில் அடுத்த அதிபர் தேர்தலுக்கு சரியாக இன்னும் நூறு நாட்களே இருக்கும் நிலையில், அதன் கடன் தகைமை குறைக்கப்பட்டுள்ளதென்பது பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸிக்கு பெரும் அரசியல் பின்னடைவாக வந்துள்ளது.

சர்கோஸி மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வாய்ப்புகளை இது சிக்கலாக்கிவிடும் என்று கருதப்படுகிறது.

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டுவிட்டார் என்று சொல்வார்களே அது இந்த விஷயத்தில் சர்கோஸிக்குப் பொருந்தும் எனலாம். ஏனென்றால் பிரான்ஸினுடைய கடன் தகைமை மூன்று ஏ மதிப்பெண்ணிலிருந்து குறைக்கப்பட்டால், அரசியல் ரீதியில் தனது கதை முடிந்துவிட்டதாக அர்த்தம் என்று அவரே கூறியதாக ஒரு சில வாரங்கள் முன்புதான் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் இன்று அது நிஜமாகிவிட்ட நிலையில், இது ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை என்று நாட்டு மக்களை ஆசுவாசப்படுத்தும் வேலையில் அவர் இறங்கியுள்ளார்.

http://www.bbc.co.uk...ditrating.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணெய்க்காக ஈரானுக்கு பணம் அனுப்ப இந்தியா படும் பாடு!

10-oil4-300.jpg

அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை இறுக்கி, அந் நாட்டின் மத்திய வங்கியோடு பணப் பரிமாற்றம் செய்யவும் தடை போட்டுள்ளதால், அந் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ளன.

ஈரானிடம் வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு அந் நாட்டின் மத்திய வங்கியிடம் தான் டாலர்களில் பணம் செலுத்த வேண்டும். தினந்தோறும் ஈரானிடம் இருந்து 3,70,000 பேரல் கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா இதற்காக மாதந்தோறும் அந்த நாட்டுக்கு பல்லாயிரம் கோடிகளை டாலர்களில் செலுத்தி வருகிறது.

இதற்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள ஈரானின் இஐஎச் பேங்க் (EIH Bank) மூலமாக இந்தியா பணத்தை செலுத்தி வந்தது. இங்கு, டாலர்களில் இல்லாமல் யூரோ கரன்சி மூலமாக ஈரானுக்கு பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தி வந்தன.

ஆனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் ஐரோப்பாவும் சேர்ந்து கொள்ள, ஜெர்மனியும் கையை விரித்துவிட, இந்த வழியும் மூடப்பட்டுவிட்டது.

இதையடுத்து துருக்கியின் ஹல்க் பேங்க் (Halk bank) மூலமாக ஈரானுக்கு இந்தியா பணத்தை அனுப்பி வந்தது. ஆனால், அமெரிக்காவின் நெருக்குதலையடுத்து, இந்த வேலையை இனியும் செய்ய முடியாது என்று துருக்கி கூறிவிட்டது.

இதையடுத்து ரஷ்யா உள்ளிட்ட ஈரானுக்கு மிக நெருக்கமான, அதே நேரத்தில் அமெரிக்கா- ஐரோப்பாவுக்கு அஞ்சாத நாடுகள் மூலமாக ஈரானுக்கு பணம் செலுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. ஆனால், ரஷ்யாவும் உதவ முன் வராவிட்டால், வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு டாலருக்குப் பதிலாக ரூபாயையே தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம் இந்திய வங்கிகளில் கணக்கைத் துவக்க வேண்டும். ஈரானிடம் வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்தியா, இந்தக் கணக்குகளில் தனது பணத்தை (ரூபாயாகவே) செலுத்தும்.

இந்தப் பணத்தைக் கொண்டு இந்தியாவிலிருந்து தனக்குத் தேவையான பொருட்களை ஈரான் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இந்தப் பணத்தை வைத்து இந்தியாவிடமிருந்து ஆயுதங்கள் எதையும் ஈரான் வாங்க முடியாது. உணவு தானியங்கள், கருவிகள், எந்திரங்களைத் தான் வாங்க முடியும்.

இந்தத் திட்டம் குறித்து ஈரானுடன் பேச விரைவில் மத்திய நிதி அமைச்சகம், வர்த்தகத்துறை, எரிசக்தித்துறை, வெளியுறவுத்துறை, ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வரும் 16ம் தேதி ஈரானுக்குச் செல்ல உள்ளது.

தேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையிலான இந்தக் குழு இந்தியாவில் தரப்படும் ரூபாயைக் கொண்டு ஈரான் எதை எதை வாங்கலாம், எதை செய்யக் கூடாது என்று ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலுடன் ஈரானுக்கு செல்லப் போகிறது இந்தக் குழு.

செளதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு மிக அதிகமான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி மூலம் தான் ஈரான் தனது 60 சதவீத வருவாயை ஈட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/editor-speaks/2012/01/india-exploring-ways-making-oil-payments-to-iran-aid0090.html

டிஸ்கி:

உலக பொருளாதார நிபுணர் .. மற்றும் தமிழீழ நிதியமைச்சர் அவர்களின் ஆய்வுக்காக இங்கே இணைக்கபடுகிறது.. வருங்காலத்தில் இந்த மாதிரி சிக்கல் ஈழத்தில் வரும் போது எடுக்க வேண்டிய பிர் காஸ்ன்ஸ் நடவடிக்கைக்கு உதவும்...

Link to comment
Share on other sites

புரட்சி,

ஈரான் மீது ஆயுத போரை விட பொருளாதார தடையையே மேற்குலகம் / இஸ்ரேல் விரும்புகிறது. ஈரானில் தங்கியுள்ள சீனா, இந்தியா (சிங்களம்) ஆகியன வேறு வழிகளை பார்க்கும்படி கேட்கப்பட்டுள்ளன. உருசியா மட்டுமே தன்னகத்தே போதுமான கச்சாய் எண்ணெய் கொண்டுள்ளதால் வாய் திறந்து ஆதரவு தருகின்றது.

மேனன் தலைமையில் ஈரான் சென்று ஆயுதங்களை வாங்காதீர்கள் என கேட்டால் அதை அவர்கள் செய்யப்போவதும் இல்லை அதை மேற்குலகம் அனுமதிக்கப்போவதும் இல்லை. அவர்கள் சிங்களம் வந்து மன்னார் வளைகுடாவில் கண்டுபிடித்த மசகு எண்ணெயை கிண்டி எடுப்பதே மேல் :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.