Sign in to follow this  
ரதி

எனக்குப் பிடித்த பாடல்கள்

Recommended Posts

வணக்கம் இந்தப் பகுதியில் நான் பார்த்து,கேட்டு,ரசித்த பாடல்களை இணைக்கப் போகிறேன்.உங்களுக்கு நான் இணைக்கும் பாட்டு பிடித்திருந்தால் பாட்டினை ரசியுங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

ஆனால் தயவு செய்து உங்களுக்கு பிடித்த பாட்டினை கொண்டு வந்து இதில் இணைக்க வேண்டாம்.ஏன் என்டால் எனக்குப் பிடித்த பாட்டுகள் எது என்று உங்களுக்குத் தெரியாது :)

இந்தப் பாடல் வருடம் 16 படத்தில் இடம் பெற்றது.கேஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடியது[எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவர் தான் முதன்மையானவர்.]அவருக்கு தேசிய விருது இந்தப் பாட்டுக்கு கிடைத்தது என நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

நான் விரும்பிக்கேட்கும் பாடலில் ஒன்று. இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸின் குரலில் வரும் பாட்டுக்கள் நன்றாகத்தான் இருக்கும், எனினும் பாடலைப் பார்க்குமளவிற்கு பாடல் காட்சி நன்றாக வரவில்லை. மற்றது கிழட்டு சார்லியை இளைஞனாகக் காட்டுவது ஒட்டவில்லை!

Edited by கிருபன்

Share this post


Link to post
Share on other sites

கிருபனுக்கும்,கறுப்பிக்கும் நன்றிகள்.

இந்தப் பாட்டு வித்தியாசகரின் இசையில் மனோ,சொர்ணலதா ஆகியோர் பாடி உள்ளார்கள்.கர்ணா படத்தில் இந்தப் பாட்டு இடம் பெற்றது...இந்தப் பாட்டை யார் எழுதியது எனத் தெரியாது ஆனால் பாட்டு வரிகள் நன்றாக உள்ளது

Share this post


Link to post
Share on other sites

இந்த பாட்டின் இசையும்,பாட்டும்,பரத்,கோபிகாவின் நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் நானும் இந்த பாட்டில் பங்கு பற்றி உள்ளேன் :lol:

http://www.youtube.com/watch?v=zfmfpEfGupE

Share this post


Link to post
Share on other sites

அது மட்டும் இல்லாமல் நானும் இந்த பாட்டில் பங்கு பற்றி உள்ளேன் :lol:

ஒஹோ. படகில துடுப்புப் போடுவதுதான் நீங்களோ! :lol:

Share this post


Link to post
Share on other sites

முதல் பாடலும் இந்தப் பாடலும் நன்றாக உள்ளது தொடருங்கள்...

ஒஹோ. படகில துடுப்புப் போடுவதுதான் நீங்களோ! :lol:

:lol::D

பாடல் வரிகளை சொல்லி இருப்பார் போல... :rolleyes::unsure:

Share this post


Link to post
Share on other sites

பாடல் வரிகளை சொல்லி இருப்பார் போல... :rolleyes::unsure:

:D லஜ்ஜாவதி என்றால் என்ன அர்த்தம்?

Share this post


Link to post
Share on other sites

:D லஜ்ஜாவதி என்றால் என்ன அர்த்தம்?

அது யாருக்கண்ண தெரியும்? :lol:

லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே என்று வரிகளில் வருகிறதே... :D

Share this post


Link to post
Share on other sites

லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே என்று வரிகளில் வருகிறதே... :D

பாடலில் வரும் கோபிகா ரதிமாதிரி அசத்துறாதான். ஆனால் யாழ் ரதியைப் பார்த்தவன் அசந்து மூர்ச்சையாயிடுவான். :lol:

Share this post


Link to post
Share on other sites

லஜ்ஜாவதியே

அண்மைய தமிழ் துள்ளல் பாடல்களில் பிடித்தமானதொன்று. Jassie Gift இன் இசையும், குரலில் உள்ள கனமும் ஆளுமையும் வியக்க வைக்கின்றன. audio வில் கேட்க நன்றாக இருக்கும்.

ஏனோ காட்சிப்படுத்திய விதம் பிடிக்கவில்லை. துள்ளல் rage பாடல் ஒன்றுக்கு கும்மி அடிப்பது போன்றதொரு உணர்வு.

Share this post


Link to post
Share on other sites

அது யாருக்கண்ண தெரியும்? :lol:

லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே என்று வரிகளில் வருகிறதே... :D

குட்டி சரியாக சொன்னார்

பாடலில் வரும் கோபிகா ரதிமாதிரி அசத்துறாதான். ஆனால் யாழ் ரதியைப் பார்த்தவன் அசந்து மூர்ச்சையாயிடுவான். :lol:

ரதியை நேரில் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் :lol:

Share this post


Link to post
Share on other sites

தளபதி படத்தில் இடம் பெற்ற நட்புக்கு இலக்கணமாய் விளங்கும் இந்தப் பாட்டும் எனக்கு பிடிக்கும் :D

http://www.youtube.com/watch?v=Wz_rkfs-2SY

Share this post


Link to post
Share on other sites

மைனா படத்தில் டி.இமான் இசையில் நரேஸ் ஜயர்,சாதனா சர்க்கம் பாடிய இந்தப் பாட்டும் கேட்கவும்,பார்க்கவும் இனிமையானது...அமலா போல் பார்க்க சோக்காய் இருக்கிறார் :D

Share this post


Link to post
Share on other sites

மணிசர்மா இசையில் யூத் பட‌த்தில் ஹ‌ரிஸ் ராகவேந்திரா பாடிய "சக்கரை நிலவே" என்ற பாட‌லும் எனக்கு மிகவும் பிடிக்கும்...வைர‌முத்து எழுதிய வரிகள் இனிமையானது

Share this post


Link to post
Share on other sites

ரிதம் படத்தில் உன்னிமேனன் பாடிய இந்தப் பாட்டும் கேட்க இனிமை

Share this post


Link to post
Share on other sites

தங்கச்சி...தலைப்பு தொடங்கேக்கை நான் நினைச்சன் ஏதோ சமூகசேவைமனப்பான்மையோடை அஞ்சாறு சீர்திருத்தபாட்டுக்கள் வருமாக்குமெண்டு...இப்பதெரியுது தங்கச்சிக்கு என்னபிரச்சனையெண்டு? :lol:

Share this post


Link to post
Share on other sites

ரதி மொட்டையாக பாட்டுக்களை இணைக்காமல் யார் பாடியது எந்த படம் பாடல் வரி போன்றவற்றையும் இணைக்கவும்.

Share this post


Link to post
Share on other sites

நேற்று திண்ணையில் யூலிகணபதி படம் பற்றி பார்த்தேன்.த ரப் (பொறி) என்ற ஆங்கில படத்தின் அப்பட்ட கொப்பி அது .ரப் மிகமிக நல்ல ஒருபடம் அது பார்க்கும் போது இதை தமிழில் எடுத்தால் எப்படி இருக்கும் என நான் நினைத்ததுண்டு ஆனால் பாலு மகேந்திரா சொதப்பிவிட்டார்.ஜேம்ஸ் கானும்,கத்தி பேட்ஸ்சும் நடித்த அருமையான ஒரு படம் அதுவும் அந்த கால் வெட்டும் காட்சி இன்னமும் மனதில்.

Share this post


Link to post
Share on other sites

ரதியை நேரில் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் :lol:

உயிரையா?????????????

Share this post


Link to post
Share on other sites

தங்கச்சி...தலைப்பு தொடங்கேக்கை நான் நினைச்சன் ஏதோ சமூகசேவைமனப்பான்மையோடை அஞ்சாறு சீர்திருத்தபாட்டுக்கள் வருமாக்குமெண்டு...இப்பதெரியுது தங்கச்சிக்கு என்னபிரச்சனையெண்டு? :lol:

அண்ணா சமூகத்தை சீர் திருத்தும் அளவிற்கு நான என்னும் வளரவில்லை :)

Share this post


Link to post
Share on other sites

ரிதம் படத்தில் உன்னிமேனன் பாடிய இந்தப் பாட்டும் கேட்க இனிமை

இசையும் கதையில் வாறமாதிரி ஏன் பிடித்தது என்று ஒரு சிறு விளக்கம்தந்தால் நல்லா இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

ரதி மொட்டையாக பாட்டுக்களை இணைக்காமல் யார் பாடியது எந்த படம் பாடல் வரி போன்றவற்றையும் இணைக்கவும்.

ஈழப்பிரியன் நான் படத்தின் பெயரையும்,பாடியவர்களது பெயரையும் எழுதித் தான் இணைக்கிறேன் ஆனால் பாட்டின் ஆரம்ப வரிதான் எழுதவில்லை இனி மேல் எழுதுகிறேன்.

உயிரையா?????????????

:lol: :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

ரதியை நேரில் பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் :lol:

இதயம் படம் மாதிரி எனக்கு இளகின இதயம். :wub: "நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவேண்டும்" என்று "பார்க்க வா" எனக் குறிப்பால் உணர்த்தியும் பார்த்தால் உயிர்போய்விடும் என்பதால் பார்க்காமல் இருக்கின்றேன். :lol:

Share this post


Link to post
Share on other sites

நீ வருவாய் என்னும் படத்தில் இருந்து எஸ் ஏ ராஜ்குமாரின் இசையில் ஹரிகரன் பாடிய இந்தப் பாட்டு கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்..

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே

.காதலிக்கும்,திருமணத்திற்கு காத்திருக்கும் எனது சகோதரங்கங்களுக்கு இந்தப் பாடலை அர்பணிக்கிறேன் biggrin.gif

Edited by ரதி

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this