Jump to content

படுகொலைகள்

Recommended Posts

விடுதலைப் போராட்டத்தின் நீண்டகால ஆதரவாளர் சிங்களப் படையால் சுட்டுக்கொலை

[வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 15:31 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக நீண்டகாலமாக தீவிரமாக செயற்பட்டு வந்த படைப்பாளர் பொன் கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சிங்களப் படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மக்கள் வங்கியின் காங்கேசன்துறைக் கிளையின் முகாமையாளரான இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து பணிபுரியும் வங்கிக்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து சென்ற சிங்களப் படைக் கொலையாளிகள் சுட்டுப்படுகொலை செய்தனர்.

தமிழினத்தை அழித்தொழிக்கும் வகையில் சிறிலங்கா அரசின் படைகள் கொலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக தீவிரமாக உழைப்பவர்களை படுகொலை செய்து வருவதில் அது ஈடுபட்டு வருகின்றது.

இப்படுகொலை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பொன். கணேசமூர்த்தியை சிங்கள இனவாதம் சுட்டுப்படுகொலை செய்துள்ளது.

பொன். கணேசமூர்த்தி தன் பாடசாலை வயது முதல் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக உழைத்து வந்த இவர் சாத்வீகப் போராட்ட காலம் முதல் தமிழீழ விடுதலைப் போராட்டக் குறிக்கோளில் தீவிரமாக இயங்கி வந்தார்.

1965 காலப் பகுதியிலிருந்து விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்பு அளித்து வரும் இவர் நேரடியாகவே சிங்கள இனவாத அரசுக்கு எதிராக தன்னுடைய விடுதலைக்கான செயற்பாடுகளை அன்றிலிருந்து தொடக்கினார்.

அதிலும் குறிப்பாக அன்று முதல் தன் கலைப் படைப்புக்கள் வழியாக மக்களிடம் விடுதலைக்கான கருத்துகளை விதைத்து வந்தார்.

பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் புலிகளின் குரல் வானொலியில் "இலங்கை மண்", "வைகறை" ஆகிய தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார்.

புலிகளின் குரலில் தற்போது "பொன்பரப்பித்தீவு என்ற இலங்கை மண்ணில் தமிழரின் தொன்மையை நிறுவும் இவரின் தொடர் நாடகம் ஒலிபரப்பாகி வருகின்றது.

புலிகளின் குரலில் வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.

விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் "தூரம் தொடுவானம்" என்ற நாவல், "துளித்துளியாய் வைரங்கள்" தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி, "எடுக்கவோ தொடுக்கவோ" கவிதைத்தொகுதி ஆகியன இவரால் வெளியிடப்பட்டுள்ளன.

இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்ட இவரின் "இலங்கை மண்" நாடகம் வெளியீட்டுக்காக நூலுருப் பெற்றுள்ளது. "வரலாறு சொல்லும் பாடம் நூலை" உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார்.

நிதர்சனம் தயாரிப்பில் "மண்ணுக்காக" என்ற வீடியோ திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.

வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.

தாயக விடுதலைப் ராட்டத்துக்காக தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர் பொன். கணேசமூர்த்தி.

http://www.eelampage.com/?cn=27985

Link to comment
Share on other sites

  • Replies 126
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.