Jump to content

தி.மு.க. கூட்டத்தில் தனுசுக்கு கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தி.மு.க. கூட்டத்தில் தனுசுக்கு கண்டனம் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் மன்மதராசா பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந்தது.

நடிகர் தனுஷ் ஆபாசமாக நடிப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட்டுக்கோட்டையில் தி.மு.க. கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. பேச்சாளர் வெற்றி கொண்டான் நடிகர் தனுசை கடுமையாக சாடினார். வெற்றிகொண்டான் பேசிய தாவது:-

சினிமா பார்க்க தியேட்டர் பக்கம் போகவே இந்தக் காலத்தில் தயக்கமாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னாள் ஒரு படம் பார்க்க போனேன். அதில் ஒல்லியாக நடித்த நடிகரும் ஒரு பெண்ணும் `மன்மதராசா' பாட்டுக்கு கட்டிப் பிடித்து ஆடினார்கள்.எனக்கு திகைப்பாய் இருந் தது.

அந்த பெண் `தாயேண்டா' என்று கத்த நடிகரோ மடியில் தூக்கிவைத்துக் கொண்டு அந்த நடிகையை எதோதோ செய்கிறார். ஒரு அறைக்குள் செய்ய தயங்கும் கூத்துக்களை அவர் திரையில் செய்கிறார்.

நடிகர் யார் என்று கேட்டேன். சூப்பர் ஸ்டார் மருமகன் என்றார்கள். இளைய தலைமுறைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க இந்த ஒரு நடிகரே போதும்.

ரஜினிகாந்த் தமிழ் நாட்டின் மேல் ரொம்ப பாசம் வைத்துள்ளார். அவர் மருமகனான தனுஷ் இப்படியெல்லாம் நடிக்கலாமா தனுஷ் நடித்த எந்த படமாவது பார்க்கும்படி உள்ளதா எல்லாமே கருமப்படம்.

சமீபத்தில் வெளியான அதுஒரு கனாக்காலம் படத்தில் கவர்ச்சி பெண் கூட கட்டிப்பிடித்து அந்த மூடிலேயே வீட்டு வேலைக்கு வரும் பெண்ணை கசமுசா செய்கிறார். என்ன கருமம் பாருங்கள் . வயசு பிள்ளைகளுக்கு தனுஷ் கற்றுக் கொடுப்பதை பார்த்தீர்களா?

இவ்வாறு அவர் பேசினார்.

வெற்றிகொண்டான் பேச்சுக்கு ரஜினி, தனுஷ் ரசிகர் மன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தஞ்சாவூர் மாவட்ட ரஜினி காந்த் ரசிகர்மன்ற பொதுச் செயலாளர் ஹுமாïன் `நாகரீகம் கெட்டுப் போய் வெற்றி கொண்டான் பேசி உள்ளார் என்று கண்டித்துள்ளார். அவர் பேச்சுக்கு தடை விதிக்காட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

தனுஷ் தந்தையான டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-

தனுஷ் ஒரு நடிகர் டைரக்டர் சொல்லி கொடுப்பதை செய்கிறார். தனுஷ் விருப்பப்பட்டு ஆபாசமாக நடிப்பது போல் வெற்றிகொண்டான் வம்புக்கு இழுத்துள்ளார். ஆபாசம் என்று நினைத்திருந்தால் தனுஷ் படங்களை மக்கள் ரசித்து இருப்பார்களா?

தனுஷ் நடித்த எத்தனையோ படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது. அவற்றை வெற்றி கொண்டான் பார்த்திருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறி னார்.

maalaimalar.com

http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1&

Link to comment
Share on other sites

ஆபாசம் என்று நினைத்திருந்தால் தனுஷ் படங்களை மக்கள் ரசித்து இருப்பார்களா?

தமிழ் நாட்டில் "அவளோட ராவுகள்" "பாவம் கொடூரன்" போன்ற படங்கள் கூடத்தான் சக்கை போடு போட்டன... அதற்காக அந்த படங்களை எல்லாம் பக்தி படங்களாக எடுத்துக் கொள்ளலாமா?

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் "அவளோட ராவுகள்" "பாவம் கொடூரன்" போன்ற படங்கள் கூடத்தான் சக்கை போடு போட்டன... அதற்காக அந்த படங்களை எல்லாம் பக்தி படங்களாக எடுத்துக் கொள்ளலாமா?

ஏன் அஞ்ஞரபெட்டிக்குள்ளே, இவள் எண்ட காமுகியை விட்டுவிட்டீர்கள். :P :P

Link to comment
Share on other sites

ஈழத்திலும் மலையாள படங்கள் சக்கை போடு போட்டனவா என்ன?

ஏனப்பு நாம் கிணத்து தவளையா? நாம் இந்தியா வந்திருக்கக்கூடாதா? :P :P :P

Link to comment
Share on other sites

அட்றா சக்கை !! அட்றா சக்கை !! அட்றா சக்கை !!

உப்பிடி ஒரு தமிழ் படம் எல்லோ வந்தது. :P :P :P

Link to comment
Share on other sites

ஆமா... இந்தியா வந்து.... :lol::lol::lol:

நீர் சொன்ன படங்களை பாக்கிறதுதான் முதல் வேலை, லக்கிலுக் என்ன அதில பாத்தவர், அவரது கலாரசனை எப்படி பட்டது என்று அறிய வேண்டும். :P :P :P

Link to comment
Share on other sites

நன்றி திரு பிருந்தன் அவர்களே....

நான் மலையாள திரைப்படங்களை பார்ப்பதில்லை என்று மட்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

நன்றி திரு பிருந்தன் அவர்களே....

நான் மலையாள திரைப்படங்களை பார்ப்பதில்லை என்று மட்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...

நீங்கள் சொன்ன படங்களை ஒதுக்கிவிட்டால், மலையாளத்தில் அருமையான படங்கள் இருக்கே. பல தேசிய விருதுபெற்றபடங்கள், செயற்கையாக இல்லாது இயற்கையாக படமெடுக்கூடியவர்கள் மலையாளிகள், என்று கூறுகிறார்களே. நல்லவை உங்களுக்கு பிடிக்காதா? நல்லவற்றை நீங்கள் பார்க்க மாட்டீர்களா? :wink:

Link to comment
Share on other sites

இப்போதய மலையாள திரைபடம் எல்லாம் தமிழ் படத்தின் மறு பதிப்பு போல தான் உள்ளது. ஷகிலா காலத்துக்கு பின்

மலையாள திரைபட உலகம் மாறி விட்டது.

Link to comment
Share on other sites

நல்ல படங்கள் கொரிய மொழியில் கூட வருகிறது... அவற்றையெல்லாம் நீங்கள் தேடிப் போய் பார்க்கிறீர்களா என்ன?

தமிழ் படம் பார்ப்பதற்கே நேரம் கிடைக்க மாட்டேங்குது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.