Jump to content

தங்கபாலு விலகினார்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

497d71db-0dd1-4ded-a85d-4ab2b98163ab_kvt.jpg

காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாறிப் போய் விட்டதைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தங்கபாலு.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிரட்டி, உருட்டி, விரட்டி 63 தொகுதிகளை சப்ஜாடாக வாங்கிய காங்கிரஸ் கட்சி, உட்கட்சிப் பூசல், ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவது, போட்டி வேட்பாளர்கள், துரோகம், முதுகில் குத்துவது, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. வெறும் 5 தொகுதிகளில் மட்டும் இக்கட்சி வெற்றி பெற்றது.

அதை விட கேவலமாக கட்சித் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் படு தோல்வியைச் சந்தித்துள்ளார்.

கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தங்கபாலு செய்த மோசடித் தனம், வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் காசு வாங்கி விட்டதாக எழுந்த புகார்கள் போன்றவை காரணமாக தங்கபாலு மீது காங்கிரஸார் கடும் காட்டத்துடன் இருந்தனர்.

தற்போது காங்கிரஸ் கட்சி கேவலமாக தோற்றுப் போய் விட்டதால் தங்கபாலு டீசன்ட்டாக பதவி விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் பெற்ற முடிவுகளுக்குப் பொறுப்பேற்று நான் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். விரைவில் எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பவுள்ளேன் என்றார்.

காங்கிரஸ் மேலிடம் தன் மீது கை வைப்பதற்கு முன்பு தானே விலகி விடுவது நல்லது என்று நினைத்தே தங்கபாலு இந்த முடிவை அறிவித்திருப்பதாக தெரிகிறது.

-நன்றி தற்ஸ் தமிழ்-

Link to comment
Share on other sites

சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு-இளங்கோவன் ஆதரவாளர்கள் பயங்கர அடிதடி

சென்னை: காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும், இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் நடந்தது. அதில் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. வேட்டிகள் கிழிந்தன.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்தார்.

இது குறித்துக் கேள்விப்பட்டதும் இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசுகளும் வெடித்தனர்.

இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க இளங்கோவன் ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர் மணிப்பால், கோபி, பூக்கடை வேலு ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

ஆனால், அவர்களை உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்களான சந்திரன் உள்ளிட்டோர் தடுத்தனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

இளங்கோவன் ஆதரவாளர்கள் சந்திரனை அடித்து உதைத்தனர். இதையடுத்து தங்கபாலு ஆதரவாளர்கள் பதிலுக்கு திருப்பித் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர அடிதடி ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்து கீழே தள்ளி மிதித்துக் கொண்டனர்.

சிலர் தப்பி சத்தியமூர்த்தி பவனுக்குள் ஓட, அவர்களை உள்ளேயும் விரட்டிச் சென்று தாக்கினர். இதில் கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலி, மேஜைகளும் உடைக்கப்பட்டன.

இதையடுத்து பிற நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சண்டை நடந்தபோது தங்கபாலு சத்திமூர்த்தி பவனுக்குள் தான் இருந்தார். அவர் வெளியே வரவில்லை.

தங்கபாலு ராஜினாமா செய்ததை கேள்விபட்டதும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.

கோவையில் தங்கபாலு கொடும்பாவி எரிப்பு:

இந் நிலையில் கோவையில் தங்கபாலுவின் கொடும்பாவியை தொண்டர்கள் எரித்தனர். கோவை காந்திபுரத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் தங்கபாலுவிற்கு எதிராக கோஷமிட்டபடி தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்தனர். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/05/14/thankabalu-elangovan-supporter-exchange-blows-aid0090.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வேணும்

எல்லாம் திருப்பி கிடைக்கும்

எமது அழிவுக்கு காரணமானவர்கள் அழிவார்கள். அதை நாம் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

ஈழ விவகாரத்தில் தமிழினத்திற்குச் செய்த துரோகம்

கொங்கு மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளில் ஒன்றைக்கூட காங்கிரஸால் ஜெயிக்க முடியவில்லை. போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் மோசமான தோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ்.

கொங்கு மண்டலம்

கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்குமண்டலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றைக் கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ். திருச்செங்கோடு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், அவினாசி, ஊட்டி, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய 9 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் ஆகும்.

வீணானது ராகுலின் பிரச்சாரம்

ராகுலின் செல்லப்பிள்ளைப் பட்டியலில் இருக்கும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய ராகுலே ஈரோட்டிற்கு வந்து பிரச்சாரம் செய்தார். ராகுலின் பிரச்சாரமும், இளங்கோவனின் ஆதரவும் கைகொடுக்கும் என்ற கனவில் மிதந்த யுவராஜாவிற்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

விடியல் சேகர், எம்.என். கந்தசாமி, யுவராஜா, மயூரா கந்தசாமி, கோவை தங்கம், செல்வகுமார் போன்ற பிரபலமான முகங்களே தோல்வியைத் தழுவி இருப்பது தொண்டர்கலை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

என்ன காரணம்?

ஈழ விவகாரத்தில் தமிழினத்திற்குச் செய்த துரோகம், திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் பிரம்மாண்ட ஊழல்களின் மீதான எரிச்சல், மோசமான உட்கட்சி பூசல், தங்கபாலுவைப் போன்ற காமெடியான தலைமை, பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை தமிழகம் முழுவதிலும் தோல்வியை ஏற்படுத்திய பொதுவான காரணங்கள் என்றாலும் கொங்குமண்டலத்தின் பிரச்சனைகள் எதையுமே காங்கிரஸ் கண்டு கொள்ளாததை இப்பகுதியில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

உள்ளூர் பிரச்சனைகள்

மின் பற்றாக்குறை கொங்குமண்டலத்தின் உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது, திருப்பூரின் சாயக்கழிவு நீர் பிரச்சனை, நூல் விலை உயர்வு, லாரி தொழில் எதிர்கொண்ட பிரச்சனைகள், விவசாயிகள் எதிர்கொண்ட சவால்கள் என கொங்குமண்டலத்தின் பிரச்சனைகள் எதையும் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் கொங்கு மண்டலத்தின் எந்த பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாத காங்கிரஸை மக்கள் துரத்தியடித்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

http://www.alaikal.com/news/?p=69792

Link to comment
Share on other sites

தோல்விக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது குறித்து அக்கட்சியின் தமிழக மூத்த தலைவர்களிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது தலைமைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சியின் உயர்நிலைக் குழுவின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஐந்து மாநில சட்டப் பேரவையின் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சி காங்கிரஸ் என்ற நிலைமை தற்போது தலைகீழாக மாறி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸின் தற்போதைய நிலை பிகார் மாநிலத்தைப் போல் ஆகிவிட்டது. இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசலே. இது போன்ற பூசலுக்கு இடம் கொடுக்க எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது என்ற முடிவை காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

குறிப்பாகத் தமிழகத்தைச் சார்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், தேசிய அளவில் பிரபலமானவருமான ஒருவரின் மகன், கட்சியின் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, கட்சியின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த ஐந்து ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைக் கூட தேர்ந்தெடுக்க முடியாத நிலைமை கட்சித் தலைமைக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

தேர்தலுக்காக கட்சியால் வழங்கப்பட்ட நிதி சரிவர வேட்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைமைக்கு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் யார் காரணம் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வரும் 22 ஆம் தேதி தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அதற்குப் பிறகு கட்சியிலும், மத்திய அமைச்சரவையிலும் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதிய பொறுப்பாளர், மாநிலத் தலைவர் ஆகியோரை நியமிக்க இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.alaikal.com/news/?p=70061

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.