Sign in to follow this  
Rasikai

பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்

Recommended Posts

o ஸ்ராலின் அண்ணா

ஒரு உருவாக்கம் செய்வதற்க்கு ஊக்குவிப்பதற்க்கு இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.அதை புல இளைஞன் கடைப்பிடித்து நன்மை அடைகிறான்...ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது.

உருவாக்கம் செய்யிறதுக்கு பயனுடையதா இருக்குிறது சரி. என்னத்த பெருசா உருவாக்கி தமிழாக்களுக்கு முன்னால வச்சிட்டீங்க? ஏதோ ஒண்டிரண்டு காய்ஞ்சு போன உருவாக்கங்கள வச்சுக்கொண்டு பெருமையடிக்காதேங்கோ. இத்தனை பேர் பாவிக்கிற இணையத்தில ஒண்டு இரண்ட கணக்குக்காட்டி இணையம் நன்மையளிக்குது எண்டா என்னத்த சொல்ல.

இலமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளி கொணரமுடிகிறது .முன்னரென்றால் சின்னபயலே உனக்கு புரியாதாடா என்று உந்த அரை குறை விற்ப்பனர்கள் அவனது கனவுகளை இலைமறைகாயான திறமைகளை முளையிலையே நசுக்கிவிடுவார்கள்..

அண்மையில் சினிமா சம்பந்தமான கொசுறு செய்தி வாசித்தேன்.காதல் கடிதம் புலம் பெயர் இளைஞர்களால் தாயரிக்கப்படும் படம்...அப்படத்தின் கவிஞன் இசையைப்பாளர் உதயாவை இணையத்தில் சந்தித்து தனது ஆற்றலை காட்டி வாய்பை பெற்றார் கூறப்படுகிறது...பலரது உண்மையான திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகிறது கோடம் பாக்கத்தின் கதவுகளை மீறி உட்புகுவதற்க்கு கஸ்டப்படுவேளையில் புல இளைஞனுக்கு தனது ஆக்க சக்தியை வெளியிட கை கொடுக்கிறது .இதே போன்றே லண்டன் ஈழ தமிழ் ஆகாஸ் என்ற நடிகரும் சுகாசினியிடம் இணயம் போல தொடர்பு கொண்டு வாய்ப்பு பெற்றாரென்று கூறப்படுகிறது.

திரும்பவும் அதான். எத்தனையோ இலட்சம் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பாவிக்கிற இணையத்தில நன்மையடைஞ்சவையெண்டு ஒரு 10 பேரத்தான் உங்களால காட்ட முடியும். ஆனா சீரழிஞ்சவை எண்டு ஆயிரக்கணக்கில எங்களால காட்ட முடியும். ஒருத்தரில்ல சமூகம் ஒட்டுமொத்தமும் தான் சமூகம். ஒரு நன்மையடைஞ்சாள வச்சுக்கொண்டு ஒட்டுமொத்த இளைஞர் சமூகமும் நன்மையடையினம் எண்டுறத விளையாட்டுக்கு நீங்க சொன்னதாத்தான் எடுக்கலாம்.

தாயகத்தில் சிறுவயதிலிருந்து கபொத உயர்தரம் வரை வெறும் ஒப்பிப்பிப்பதையூடாகவும் மீள் நினைவு செய்யுமுறையையூடாகவும் பாடவிதானத்துக்குட்பட்ட தூடாகவும் தான் கல்வியாக தந்து கொண்டிருந்தார்கள்...ஆனால் பல்கலை செல்லும் போது தான் அங்கே புதிய கல்வி முறை காத்திருக்கிறது அங்கே பேராசிரியர் சிறியவழி நடத்தலையே தருகிறார் மிகுதி அவனே தரவுகளே தேடி தொடரபாடல்கள் மூலமும் தானே கற்று கொள்ள வேண்டியவனாகிறான் .இந்த தீடிரென்ற ஏற்படும் புதியமுறைக்கு சிரமத்துக்குள்ளாகிறாகிறார்

Share this post


Link to post
Share on other sites

o நாரதர் அண்ணா

இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?

இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?

அண்ணா நாரதர் அண்ணா இணையம் சீரழிக்குது எண்டு எங்கட அணி வாதாடேல. இணையத்தால் சீரழிகிறார்கள் எண்டு தான் சொல்லுறம். குற்றங்கள் செய்யிறவையும் குற்றவாளிதான் குற்றவாளிக்கு துணை செய்யிறவையும் குற்றவாளியள் தான். அப்பிடித்தான் இணையத்தையும் பார்க்க முடியும் எண்டுறத விளங்கிக்கொள்ளுங்கோ. தகவல்கள மட்டும் காவிச் செல்லேல. தகவல்களோட சேர்த்து சீரழிவுகளையும் காவிச் செல்லுது அண்ணா. சீரழிப்பதுக்கான காரணியா எடுக்கேலாது தான். ஆனா சீரழியிறதுக்கான காரணி எண்டுறது தான் தலைப்பு.

ஆனால் இணயதில் நாம் விரும்புவதை ஒரு சில சொடுக்குகளுக்குள் எம்மால் பெற முடிகிறது.அத்தோடு பெறப்படும் விடயமானது அந்த நிமிடதிற்கு பொருத்தமான விடயமாக இருகிறது.அத்தோடல்லாமல் பெறப்படும் தகவலை நாம் எமக்கு ஏற்றவாறு மாறுபாடு அடயச் செய்யக் கூடியதாக இருகிறது.

நாரதர் அண்ணா இப்பிடி உண்மையள ஒத்துக்கொண்டு உங்கட அணிக்கே துரோகம் செய்யலாமா? நாம் விரும்புவதை எண்டு சொன்னா எங்களுக்குள்ள நிறைய விருப்பங்கள் இருக்கு. எல்லாத்தையும் வெளில சமூகத்துக்கு பயந்து செய்ய முடியாம பலர் இருக்கினம். அப்பிடியான சீர்கேடுகள எல்லாம் இணையத்தில சில சொடுக்குகளில தீர்த்து கொள்ள சந்தர்ப்பமளிக்கப்படுது எண்டுறத ஒத்துக்கொண்டதுக்கு எப்பிடி என்ர நன்றிய சொல்றதெண்டு தெரியல. பெறப்படுற விசயங்கள எங்களுக்கேற்ற மாதிரி மாத்திக்கொள்ளலாம் எண்டுறீங்க. அதுக்கென்ன அர்த்தம்? திரிபுகள் செய்யிற சீரழிவையும் இணையம் கொடுக்குது எண்டுறதது தானே?

அது மட்டுமா ஒருவர் தானே செய்திகளை ,படைப்பிலக்கியங்களை ஆக்கக் கூடிய வல்லமயை அது வளங்கி உள்ளது.இங்கே எதிரணியில் வாதாடும் அன்பர்கள் கவிதை எழுதக் கூட அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

செய்தியள படைப்பிலக்கியங்கள ஆக்குறதுக்கு வல்லமை வழங்கியிருக்கெண்டுறீங்க. ஆனா அந்த படைப்புகளின்ர தரம் எந்தளவில இருக்கு? வாற கவிதையள் சமூக சிந்தனையோடயா வருது? அப்பிடி வாற கவிதையள் எத்தனை இருக்கும்? இணையத்தில காதலிச்சு எழுதுற கவிதையளும் -முக்காவாசி ஒப்பாரியும் சுய புலம்பல்களுந்தான்- தோத்துப்போனா பிறகு எழுதுறதுகளும் தான் கனக்க. ஏற்கனவே சொல்லிட்டன். வேற ஒரு இணையப்பக்கத்தில இருந்து எடுத்துக்கொண்டு வந்து இன்னொரு பக்கத்தில போட்டு தன்ர கவிதையெண்டுறது. அதுக்கு பத்துப்பேர் கூடிநிண்டு நல்லாருக்கு அக்கா அல்லாட்டி அண்ணா எண்டுறதும் வாழ்த்துக்கள் எண்டு சொல்லி வழியுறதும் இங்க நடக்கிற கதைதானே. இணையத்தில இருக்கிற சுதந்திரத்த ஆக்குறதுக்கு எங்கட இளைஞர்கள் பயன்படுத்துறேல அழிக்கிறதுக்கு தங்கள சீரழிக்குறதுக்கு தான் பயன்படுத்துகினம்.

Share this post


Link to post
Share on other sites

o இரசிகை அக்கா

இணையத்தால் மட்டுமே புலம்பெயர்ந்த இளைஞர்கள் உயர்கிறார்கள் என்றோ உயர்ந்தார்கள் என்றோ நாம் சொல்லவில்லை. இணையம் என்பது இளைஞர்களின் சிந்தனைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்கிறோம். அவர்களின் உழைப்புக்கு பக்கதுணையாக இருக்கிறது (பக்கதுணையாக இருக்கிற ஏனைய காரணிகளோடு) என்றே சொல்கிறோம். தல அவர்கள் எழுதிய மேற்கண்ட கருத்தின் மூலம் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக்கொள்கிறார். சொந்த உழைப்பால் அதாவது சொந்தச் செயற்பாட்டால் தான் ஒருவர் போற்றப்படுகிறார். அப்படியாயின் அதிலிருந்து இன்னொன்றையும் நாம் விடையாகப் பெறலாம். அது யாதெனின், ஒருவர் தனது சொந்த செயற்பாட்டால் தான் தீமையடைகிறார் அல்லது சீரழிந்து போகிறார் என்பதே அது ஆகும். இது இப்படியிருக்க இணையத்தின்மீது உங்கள் பாவங்களை சுமத்துவது எந்தவகை நியாயம் என்று சொல்லுங்கள். எதிரணியினரின் வாதங்கள் எப்படியிருக்கிறதென்றால் எல்லாக் குற்றங்களையும் தாம் செய்துவிட்டு கடவுளின் மேல் பழியைப் போடுவதைப் போல் உள்ளது. தமது பிழைகளால் தாம் அனுபவிக்கிற துன்பத்துக்கெல்லாம் "எல்லாம் அவன் செயல்" என்று அடி முட்டாள்தனமாக சொல்லிவிட்டு தம்மை பொம்மைகளாகக் காட்டிக்கொள்ளும் எதிரணியனரை என்னவென்பது?

என்னக்கா இப்பிடிச் சொல்லிப்போட்டியள். இப்ப பாருங்கோ உங்கட தலையில நீங்களே மண்ணை அள்ளிப் போட்டிட்டியள். எப்பிடியெண்டு கேக்குறியளா? இளைஞர்களின் உழைப்புக்கு பகு்கதுணையாக இளைஞர்கள் இருக்கெண்டு சொல்லுறியள். அதமாதிரித் தான் இளைஞர்களின் சீரழிவுகளுக்கும் இணையம் பக்கதுணையாக இருக்கெண்டு நாங்கள் சொல்லுறம். வளர்ச்சிக்கு பக்கதுணையாக இருக்கிறத விட சீரழிவுக்கு பக்கதுணையாக இருக்கிறது தான் அதிகமோ அதிகம். குற்றஞ்செய்யிறவைக்கு உதவி செய்யிறவையும் குற்றவாளியெல்லோ. -இத முதலும் ஆருக்கோ சொல்லிட்டன் எண்டு நினைக்கிறன்- சரி அதுக்கென்ன நீங்களும் திரும்பத் திரும்ப ஒண்டத்தானே சொல்லுறியள். பறவால்ல.

இல்லாத கடவுளில எங்கட பாவத்த கொட்டுறது நீங்க சொல்ற மாதிரி அடிமுட்டாள்தனமா இருக்கும். ஆனா இருக்கிற இணையத்தில நடக்கிற குற்றங்களுக்கு அத காரணமாக் காட்டுறதில ஒண்டும் அடிமுட்டாள்தனமிருக்கிற மாதிரி எனக்கெண்டாத் தெரியல. நீங்கள ஆடுறவரைக்குந்தான் நீங்க மனுசர். நீங்க எப்ப இன்னொண்டால ஆட்டுவிக்கபடுறீங்களோ அண்டைக்கே நீங்க பொம்மை ஆகிடுவீங்க. மதுபானம் குடிக்கிறவை குடிச்சிட்டு தெளியினம். மதுபானத்தில குளிக்கிறவை? அதான் இணையத்தில பெரும்பாலான ஆக்களுக்கு நடக்குது.

தல அவர்கள் தனது வாதத்தின் மூலம் தெட்டத் தெளிவாக பல வாக்குமூலங்களை அளித்துள்ளார். இணையம் ஒன்றையும் புதிதாக செய்துவிடவில்லை என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் ஏற்கனவே சீரழிந்து போய் இருக்கிறவர்களை மேலும் சீரழிக்கவில்லையென்று அல்லது தீமைகளை செய்யவில்லை என்று சொல்கிறார்.

தல அண்ணா சொன்னதையே ஒழுங்கா வாசிச்சு விளங்கிக்கொள்ள முடியல. இதுக்குள்ள நன்மை நன்மையெண்டு துள்ளிக்குதிக்கினம். -இணையம் ஒன்றையும்(ஒரு நன்மையையும்)புதிதாக செய்துவிடவில்லை- எண்டுதான் சொன்னவர்.

வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், நூல்நிலையங்களும் ஒன்றாய் உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? - உங்கள் மூளைக் கலன்களின் மீது சத்தியம் செய்யுங்கள்!!! பணம் செலவழித்து எத்தனை பத்திரிகைகளைத்தான் வாங்குவது? அதிலும் எமக்கு அவசியமற்ற தகவல்களையும் சேர்த்து வாங்குகிறோம். ஆனால் இணையத்தில் வேகமாக பத்திரிகைச் செய்திகளைப் பெற்றுக்கொள்கிறோம் - பல்வேறு தரப்பு நியாயங்களையும் அறிந்துகொள்கிறோம் - எமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து படிக்கிறோம் - பணச்செலவு மிச்சம் - உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்கிறோம்.

நீங்கள் சொன்னதுமட்டுமா உங்கட கண்ணுக்கு முன்னால திரையில விரியுது? நீங்க சொன்னதுகளில இருந்த கெட்டவையெல்லாம் பலமடங்கு பல்கிப் பெருகி தன்னோட இன்னும் கனக்க கூட்டாளிகளையும் கூட்டிக்கொண்டு வந்து உங்கட திரையில பாய் விரிச்சு படுத்துக் கிடக்கிறது உங்களுக்கு விளங்கேலயா? மற்றது உதுகளெல்லாம் விரிஞ்சா போல உதுகள எல்லாம் நன்மைக்குத்தான் பயன்படுத்துகினம் எண்டு யார் சொன்னது. வேகமாப் படியுங்கோ அதோட வேகமா போடோணுமெண்டு செய்தியள பிழை பிழையா போடுறதையும் படியுங்கோ.

சோம்பேறித்தனத்தை இணையம் தான் இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டிகளின் முன்னிருந்து பெறாத சோம்பேறித்தனமா? ஐயா சோம்பேறித்தனமென்பது உங்கள் உங்கள் மனம், உடல் சார்ந்தது. அதை வழிநடத்தவேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது - இணையத்திடமில்லை. எங்கள் அணியில் நாரதர் தெளிவாக ஒரு கருத்தை முன்வைத்தார். செய்வதெல்லாம் செய்திட்டு "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்று கல்லை நோக்கி கைகாட்டுவீர்கள் - ஏனென்றால் கல் திருப்பிக் கதைக்காது என்கிற நம்பிக்கையில்.

சரிங்கோ அக்கா சோம்பேறித்தனத்த இணையம் அறிமுகப்படுத்தேல. ஆனா சோம்பேறித்தனத்த மேலும் வளர்த்துவிட்டிருக்கெண்டு சொல்லுறம். சரிங்கோ சோம்பேறித்தனம் மனமும் உடலும் சார்ந்தது எண்டு வைச்சுக்கொள்ளுவம். மனத்திலயும் உடலிலயும் நடக்கிற மாற்றங்களுக்கு எது காரணம்? சூழல்தானே? சூழலெண்டேக்க அதுக்குள்ள இணையத்தின்ர சூழலும் வருது தானே? அதால மனுசரின்ர மனசக் கெடுத்து சோம்பேறித்தனத்த கொடுக்கிற சூழல இணையம் உருவாக்கியிருக்கு எண்டு சொல்லுறம். கல்லு கடவுள் உதாரணங்களெல்லாம் மொக்குத்தனமான உதாரணம். கல்லையும் இணையத்தையும் ஒப்பிடுறியள். பல ஆயிரக்கணக்கா செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிற இணையத்தை கோயில் மூலக்குள்ள எதுக்குமே உதவாம வைச்சிருக்கிற கல்லோட ஒப்பிட்டு இணையத்தாலயும் இளைஞர்களுக்கு நன்மையில்லையெண்டுறத திரையில வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறியள்.

அது தவறானது.... மற்றய ஊடகங்கள் போலவே இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றன... உதாரணமாக அரபு நாடுகளில் பாலியல் சம்பந்தமான தளங்களுக்கு தடை இருக்கிறது. ஏன் தமிழ் நாட்டிலும் பாலியல் தளங்களை தடை செய்ய நடவெடிக்கை எடுக்கவுள்ளார்கள் ( ஆதாரமில்லாத செய்தி என்று சொல்ல வேண்டாம். அண்மையில் ஜெயா கூறியது தான் ) மிக அண்மையில் GOOGLE க்கும் சீனா நாட்டுக்கும் ஒரு கருத்து வேறு பாடு பற்றி அனேகமானோர் கேள்விபட்டு இருக்கலாம். இதை விட அனேகமான நாடுகளில்.. ஒருவரின் இணைய நடவடிக்கைகள்.. அந்த நாட்டு பொலீசாரினால் சேகரிக்கப்பட்டு.. கோப்பாக பேணப்படுகின்றன. எப்போது அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரோ... அப்போது அவரை பிடிப்பதற்கு அவை வழிவகுக்கும். ஆகவே தூயவன் சொல்வது போல மற்றய ஊடகங்கள் கட்டுப்படுத்த படுகின்றன.. இணையம் கட்டுபடுத்த படுவதில்லை என்பது தவறானது.

ஹா ஹா! ஹி ஹி! ho ho! he he! நல்லாச் சிரிச்சிட்டன் அக்கா. வயிறு நோகுது அக்கா நீங்க சொன்ன நகைச்சுவையைக் கேட்டு. அரபு நாடுகளில இருந்து பல பாலியல் தளங்கள் வெளில வருகுதே. அந்தத் தடையெல்லாம் தாண்டித்தானே? இருக்கிற தடையளையும் தாண்டி அரபு நாடுகளில இருக்கிற ஆக்கள் வெளில இருந்து பொற பாலியல் தளங்களயும் பாக்கினமே? அதெப்படியெண்டு சொல்லுங்கோவன். அதெல்லாம் விடுங்கோ. ஐரோப்பாவில தடை இருக்கா? அமெரிக்காவில தடை இருக்கா? ஒஸ்ரேலியால தடை இருக்கா? இங்க எல்லாம் தடையள் இல்லத்தானே. அப்ப அதால சீரழிஞ்சு போவினந்தானே. சட்டவிரோதத்த செய்யிறது மட்டும் சீரழிவில்ல. சட்டவிரோத செயல்களால அழியுறதும் சீரழிவுதானக்கா. இணையம் கட்டுப்படுத்தப்படுதெண்டே வச்சுக்கொள்ளுவம். ஆனா மற்றைய ஊடகங்கள மாதிரி கட்டுப்படுத்தக்கூடிய நிலமை இணையத்தில இல்லையக்கா. சூரியனை நீங்க போர்க்கிற போர்வையால மூடி மறைக்கிற மாதிரித்தான் உந்தக் கட்டுப்பாடுகள்.

அப்படி சொல்ல முடியாது. ஒரு தளத்தை ஒரு நாட்டில் தடை செய்தால். அது அந்த நாட்டில் வேலை செய்யாது. அப்படி செய்ய முடியும். ஒரு நாட்டில் உள்ள கருத்துக்கு எதிரான தகவல்களை தேடி பெற முடியாது செய்யவேண்டும் என்று அரசு விரும்பினால். Google போன்ற தேடல் தளங்களுடன் பேசி அதை செய்து கொள்ளலாம். அயிரக்கணக்கான மடல்களை பிரித்துபடிப்பது கடினம் தான். ஆனால் ஒரு வேலை தளத்தில் தனி மடல் பார்த்தால்.. அல்லது அனுப்பினால்.. அதை மேலதிகாரிகள் பார்வையிடலாம். உங்களது இணைய புரொவீடர்களால் உங்கள் தனிமடல்கள் பார்வையிடப்படலாம். எல்லா தனிமடல்களையும் பார்ப்பது நேரவிரயம் தான். தெரிவு செய்யபட்ட மடல்களை மட்டுமே. அவ்வாறு மடல்களை தெரிவு செய்வதற்கும் சில முறைகளை கையாளுகிறார்கள்.

சரி ஒரு தளத்த தடை செய்தா அதே விசயத்த இன்னொரு பக்கத்தில போட்டு அந்த நாட்டுக்குள்ள கொண்டரலாந்தானே? ஏன் வேற நாட்டில இருக்கிற ஆள் கூகிளில தேடியெடுத்து தடைசெய்த நாட்டுக்குள்ள தடைசெய்யப்பட்ட விசயங்கள அனுப்பலாந்தானே மின்னஞ்சலில? இதெல்லாம் இணையத்தால சீரழிஞ்சுபோற இளைஞர்களுக்கு தெரியாதா என்ன? அதுசரி நீங்க சொல்றதெல்லாத்தையும் தாண்டி இங்க பலவிசயங்கள் எப்பிடி பரிமாறப்படுது? அக்கா இப்ப ஒராள் மதுபானம் குடிக்கிறார். வீட்டில குடிக்கவேண்டாமெண்டுகினம். ஆள் வெளில போய்க் குடிக்கிறார். ஆளிட்ட காசு இல்ல. கடையில காசு இல்லாம தரமாட்டினம். ஆள் கேக்குறார். அவை குடுக்கல. அவர் கடையில களவெடுக்கிறார். முதல்தரம் தப்பிட்டார். பிறகு அடுத்தமுறையும் காசில்லாம கடையில களவெடுக்கலாம் எண்டுற துணிவு வருது. திரும்ப போறார் திரும்ப களவெடுக்கிறார். இந்தமுறை போத்தலோட சேர்த்து சிப்ஸ் பக்கற்றையும் எடுக்குறார். இந்தமுறையும் தப்பிட்டார். அடுத்தமுறை பெரிய திட்டம்போட்டு போறார். ஆனா எடுத்துக்கொண்டு வரேக்க பிடிபட்டிட்டார். காவல்துறை கைதுசெய்யுது. போய் இருந்திட்டு வெளில வாறார். இப்ப காசு குடுத்துத்தான் வாங்கணும். ஆனா காசு இல்ல. வீட்டுக்கு போறார். வீட்டில இருக்கிற சாமான்கள திருடி விக்கிறார். அதில வாற காசில வாங்கிக் குடிக்கிறார். இப்பிடிக் கொஞ்சநாள் செய்தார். வீட்டில மனுசி பிள்ளையள் சொல்லிப் பார்த்தும் கேக்கல. ஆள வெளில விட்டாச்சு. இப்ப வெளில வந்திட்டார். தனிய இருக்கிறார். வெளில போற வாற ஆக்களிட்ட பிச்சை எடுக்கிறார். கடையில வாங்கிக் குடிக்கிறார். இப்பிடி ரண்டு மூண்டுதடவை பிச்சை எடுக்கிறது நடந்திச்சு. ஆனா போகப்போக பிச்சை போட ஒருத்தரும் வரல. இவர் குடிக்கிறதுக்குத்தான் வாங்குறார் எண்டு தெரிஞ்சிட்டு. ஒருத்தரும் குடுக்கல. அதால ரோட்டுல போறாக்களிட்ட திருட வெளிக்கிடுறார். அதுகும் இரண்டு மூண்டு தடவை உதவிச்சு. பிறகு ஆக்களிட்ட கேக்குறார். குடுக்கேல எண்டோடன கத்தியெடுத்து ஒராள குத்துறார். காவல்துறை வருது. பிடிக்குது. சிறைக்கு போறார். :(

இந்தக்கதையில இருந்து உங்களுக்கு என்ன விளங்குது?

தயவு செய்து கருத்துக்களை வடிவாக வாசியுங்கள். எம் எஸ் என் சாட் தளம் வேறு, எம் எஸ் என் மஸெஞ்சர் வேறு. சாட் தளத்தை பாலியல் பரிமாற்றங்கள் காரணமாக மூடிய மைக்ரோ சொப்ற்... ஏன் மஸெஞ்சர்களை மூடாமல் புதிய புதிய வேர்சனை அறிமுகம் செய்கிறது. இதுதான் விஸ்ணு கூறியது. தூயவனுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மசெஞ்சர்கள் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறவில்லையா?? உண்மையில் பார்த்தால் மெஸெஞ்சர்ளில் தான் இதற்கான வாய்ப்புகள் அதிகம் ( வீடியோ வசதியை இங்கே சொல்லாம் )

பாத்திங்களா. நல்ல அக்கா. மெசெஞ்சர்மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடக்குதெண்டு நீங்களே சொல்லுறியள். பிறகு சீரழிக்கேல எண்டும் சொல்லுறியள். அப்ப பாலியல் துஸ்பிரயோகம் சீரழிவில்லையெண்டுறியளா? மெசெஞ்சர்களில வாய்ப்புகள் அதிகம் எண்டுறியள். பிறகென்ன எப்படா வாய்ப்பு வரும் பாவிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிற இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தானே.

அது போலத்தான்.... தூயவன் இணையம் இல்லாத காலங்களில் தேசியம் வளரவில்லை என்று யார் சொன்னது?? இப்போது இணையப்பயன்பாடு தேசியத்தின் வளர்ச்சியில் இன்னும் ஒரு தோள் குடுத்து இருக்கிறது... என்று தான் நாம் கூறுகிறோம்...

வணக்கம்! தலைப்புச்செய்திகள். வாசிப்பது பூனைக்குட்டி. யாழ்களத்தில் இப்போது நடக்கின்ற பட்டிமன்றத்தின் தலைப்பு -இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்து வாழும் இளையோர்கள் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிகிறார்களா? என்பதாகும்- நன்றி. விரிவான செய்திகள் விரைவில் தொடரும்.

நாங்க கதைச்சுக்கொண்டிருக்கிறது தமிழீழத்த பற்றியில்ல. புலம்பெயர்ந்து வாழுற இளைஞர்கள பற்றி. சரி ஏதோ கதைச்சிட்டியள். நானும் பதில் சொல்லிட்டு போறன். தேசியத்தின்ர வளர்ச்சிக்கு தோள் மட்டுந்தான் குடுக்குது. ஆனா இளைஞர்களின்ர சீரழிவுக்கு முழுசா அள்ளிக்குடுக்குது.

யாழ் வீதியில் வெறு வேலையாக அவசரமாக போகும் போது எதிரே இருக்கும் கல்லில் நாம் கவனிக்காமல் தான் மோதுகிறோம் தூயவன். இதில் நான் சொல்ல வருவது 2 விடயம்... வேறு வெலையாக போகும் போது தான் நமக்கு குறுக்கே கல் இருக்கிறது. நாம் கவனிக்காமல் தான் கல்லில் மோதுகிறோம். யாரும் காலையில் எழுந்து யாழ் வீதில கல் இருக்காம் தூயவன் சொன்னவர்.. அதில மோதுவம் என்று போவதில்லை. வேறு வேலையாக செல்லும் போது குறுக்கே வருவது அது.

ஆனால்.... இணையத்தில் ஆபாசத்தளங்கள் கணணியை இயக்கி இணையத்துக்குள் பாடசாலை ஒப்படை செய்ய போகும் போது தானாக வருவதில்லை. இளையோர்கள் தாமாகவே அங்கே போகிறார்கள். அப்படி இல்லை தாமாகவே விளம்பரங்கள் தோன்றுகின்றன என்று யாரோ சொன்ன நினைவு. நீங்கள் முதலில் அப்படியான தளங்களுக்கு போய் இருந்தால் தான் அப்படியான விளம்பரங்கள் தோன்றும். அல்லது ஆபாச தளங்களின் உறவு தளங்களுக்கு போனால் தான் அப்படியான கற்கள் உங்களுக்கு தோன்றும். அதை விட ஆபாசங்களை தடை செய்ய கணணிகளில் முடியும் . அப்படியான விடயங்களை மேற்கொண்டு அப்படியான கற்களை நீங்கள் அப்புறப்படுத்தலாம். ஆகவே தூயவன் நாரதர் சொல்ல நினைத்தது..... இணையத்தில் கல் தானாக எமது முன் தோன்றுவதில்லை... யாழ் வீதி மாதிரி. நாமாக தான் தேடி போகிறோம். இணையத்தில் சடப்பொருட்கள் இல்லாத நாம் தான் ஆபாசங்களை.... சீர்கேடுகளை தேடிப்போகிறோம். இப்போது நாரதர் கூறியதை பாருங்கள் உங்களுக்கு சரியாக தோன்றும்.

இருக்கிற படியாத்தானே தேடி போகினம் அக்கா? இல்லாட்டி ஏன் போகினம்? இங்க அதுகள தடைசெய்யிறது பிரச்சனையில்ல. ஆனா எத்தனை இளைஞர்களுக்கு அதுகள தடை செய்ய விருப்பம் வருமெண்டு சொல்லுங்கோ. அதுகள தேடித் திரியிற பருவத்தில எல்லாத்தையும் வீட்டு அறைக்குள்ள நீங்க சொன்னமாதிரி திரையில கொண்டு வந்து நிப்பாட்டி வச்சா அவையேன் அதுகள தடை செய்யினம். அக்கா மதுபானக் கடையுக்குள்ள போய் குடிக்காம நிக்கிறவை ஒரு சில ஆக்கள் தான் இருப்பினம். எல்லாரும் அப்பிடி இருக்கிறேல. அதால வாய்ப்புகள் கொடுத்த குற்றங்கள் செய்யிறதுக்கும் சீரழிஞ்சுபோறதுக்கும் அநேகமான ஆக்கள் தயாராத்தான் இருக்கினம். நீங்க தேடிப் போறீங்களோ அது தானா வருதோ மொத்தத்தில அது அங்க இருக்கு அதுவும் எல்லாரும் காணுற இடமா திறந்துகிடக்கு. அதான் பிரச்சனை. அக்கா கல்லு எங்களில வந்து மோதினா என்ன கல்லில நாங்கபோய் மோதினா என்ன காயம் வரப்போறது எங்களுக்குத்தானே. அப்ப நாங்க என்ன சொல்லுவோம் கல்லால காயம்பட்டிட்டு எண்டுதானே சொல்லுவம். இப்ப நாங்க சொல்லுறது உங்களுக்கு விளங்குதோ?

இங்கே எய்தவன்.. தானாக சீர்கேடுகளை தேடும் இளையவன். ஆகவே இணையம் சீரழிக்கவில்லை. கெடுகிறேன் பந்தயம்பிடி என்று திரியும் இளையவர்கள் தான் தாமாகவே கெட்டு போகிறார்கள். இணையத்தில் அறிவு பசியை போக்குபவர்கள் பயன் பெற்று மேலே சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

என்னத்த சொன்னாலும் கேக்கமாட்டியள். என்ன செய்யிறது போதையில இருக்கிறியள். நாங்க சொல்லுறது ஏறவா போகுது. ஏதோ கடமையெண்டு ஒண்டு இருக்கெல்லோ.

ஒரு மரம் பட்டுப்போகோணுமெண்டாலும் அதுக்கு நீங்க சொன்ன புறக்காரணியள் வேணும். நீங்க அழுறீங்க கண்ணீர் வருதெண்டா தானாவா வருது? ஏதோ ஒண்டு நடந்திருக்கோணுமெல்லோ. தூசு விழுந்திருக்கணும். மனசு கவலைப்பட்டிருக்கணும். நீங்க உணர்ச்சிவசப்பட்டிருக்கணும். இப்பிடி ஏதாவது காரணமிருக்கணும். தூசு விழுறது புறக்காரணி ஆனா மனசு கவலைப்படுறது சொந்தக்காரணமெண்டு சொல்லவாறியள்தானே? மனசு எதுக்கு கவலைப்படுது யாராவது பேசியிருப்பினம். ஏதாவது ஒண்டு வெளில நடந்திருக்கும். இதுகள் புறக்காரணியள் தானே. இதமாதிரித்தான் ஒராள் கொலை செய்யுதெண்டா சும்மா தன்ரபாட்டுக்குபோய் செய்யுறாரா? அவர் அத செய்யிறதுக்கு ஏதோ ஒரு காரணமிருக்குந்தானே? ஏதோ ஒண்டு அவருக்கு தூண்டுகோலா இருக்குந்தானே? சும்மா காரணமில்லாம சிலபேர் செய்யுறவையெண்டு நீங்க சொல்லலாம். அவைக்கு மனநோய். அப்ப தாங்களா கெட்டுப்போற இளைஞர்களுக்கு மனநோயெண்டுறியளா? சரி அப்படி மனநோயால சீரழிஞ்சு போகினம் எண்டு சொன்னா அந்த மனநோய்க்கு என்ன காரணமெண்டு பார்ப்பமன்? மனநோய் எதால வந்திச்சு? அதத்தான் அது இணையத்தால வந்திச்சு எண்டு நாங்க சொல்லுறம். இண்டைக்கு புலம்பெயர்ந்த நாடுகளில -இளைஞர்கள் சீரழிஞ்சுபோறதுக்கு- புறக்காரணிகளில முக்கியமான ஒரு இடத்தில இந்த இணையமும் இருக்கெண்டுறது வேதனையான உண்மையெண்டுறம்.

இந்த ஆண்டுக்குரிய மிகப்பெரிய நகைச்சுவை (சிறந்த நகைச்சுவை 2006). அதென்ன முதிர்ந்த வியாபாரி? முதிர்ந்த வியாபாரி இளைஞராக இருக்க முடியாதா? - தொழில் உதவியாளர்களும், பணியாளர்களும், பொறியியலாளர்களும் இளைஞர்களாக இருக்க முடியாதா? -இவர்களின் தொழில்ரீதியான செயற்பாடுகளுக்கு இணையம் தன்னாலான பங்களிப்பை செய்யவில்லையா?

எந்தளவு பெரிய தத்துவத்த தல அண்ணா சொல்லியிருக்கிறார். அத ஆழமா பாத்து புரிஞ்சுகொள்ளாம நகைச்சுவையெண்டு போட்டியள். பறவால்ல உங்கட அரைவேக்காட்டுத்தனத்துக்காக நாங்க கவலைப்படுறம்.

முதிர்ந்த எண்டு தல அண்ணா சொன்னது வயசுபோன ஆக்கள எண்டு நீங்களா ஏன் எடுத்துக்கொள்ளுறியள். அறிவில முதிர்ந்தவையா இருக்கலாம். அனுபவத்தால முதிர்ந்தவையா இருக்கலாம். ஆளுமையில முதிர்ந்தவையா இருக்கலாம். இப்பிடியானவைக்கு இணையம் பிரச்சனையா இருக்காம இருக்கலாம். ஆனா இப்பிடி முதிர்ந்தவை எங்கட இளமாக்களில எத்தினை பேர் இருக்கினமெண்டு கணக்குப்பார்த்து சொல்லுங்கோவன்.

Share this post


Link to post
Share on other sites

புலம்பெயர்ந்ததால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாசிக்கும் பெற்றோர்களுக்கு அறிவில்லையா? நல்ல கண்டுபிடிப்பு. ஐயா நடுவர் அவர்களே, சிற்றுந்து ஓட்டத் தெரியாத பெற்றோர்கள் நிறைய பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். அவர்களுக்கு புலம்பெயர் சிற்றுந்து ஓட்டுனருக்கான விதிமுறைகள் தெரியாது தான். ஆனாலும் சிற்றுந்தில் பயணிக்கும் போது "கவனமா ஓட்டு தம்பி", "பார்த்துப் போ ராசா", "சிவப்பு விழுந்திட்டு", "வேகத்த கொஞ்சம் குறை" போன்ற பல அறிவுரைகளைக் கேட்கலாம். ஆக ஆபத்துகள் இருக்குமிடத்து அறிவுரைகளையும் கண்காணிப்புகளையும் பெற்றோர்கள் செய்யட்டும், செய்யத் தவறின் அது இணையத்தின் தவறல்ல. கடவுள் சிலையில் தலையைக் கொண்டு போய் முட்டினாலும் ஆபத்துத்தான்.

இதுதானுங்கோ இந்த நூற்றாண்டின்ர பென்னாம் பெரிய நகைச்சுவை. எந்தநேரமும் அம்மாவும் அப்பாவும் பிள்ளை போற இடத்துக்கெல்லாம் காரில போய்த் திரியினம் தானே. ஆர் கண்டது பக்கத்தில அம்மா அப்பா இருக்கேக்கயும் வேகமா ஓட்டுற ஆக்கள் இருக்கினந்தானே. அப்பிடி ஒட்டிக்கொண்டு போக கடைசில பிள்ளையோட சேர்ந்து அம்மா அப்பாவும் பரலோகம் போகவேண்டிய நிலைமை வருதோ யார் கண்டிச்சினம். புலம்பெயர்ந்த நாடுகளில எந்தநேரமும் பிள்ளைக்கு பக்கத்தில நிண்டு அறிவுரை சொல்லுற அளவில தாய்தகப்பன்ர நிலமை இல்ல. கண்டிச்சு அடிச்சு திருத்துறதுக்கும் புகலிடச் சூழலில இடமில்ல. இப்பிடியான நிலைமையில இணையம் மோசமா இளைஞர்கள பாதிக்குது. சரி வீட்டில பிள்ளை நாள்முழுக்க இணையத்தில என்ன செய்யுது எண்டுற சநஇதேகத்தில தாய்தகப்பனும் இணையத்தை நிப்பாட்டி வைக்கினம் எண்டு வைச்சுக்கொள்ளுவம். internet cafe எண்டு இப்ப வீதிக்கு வீதி பல இடங்களில இருக்குத்தானே. இதுகளில சீரழிவு விசயங்கள செய்யிறதுக்கு தடையில்லாம வாய்ப்புகள் நிறைய கொடுக்கப்படுதுதானே.

புத்தகத்தில வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது கடினம். இணையத்தில் வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது மிக இலகு. வேகமாகவும், நேரம் செலவளிக்காமலும் தகவல்களையும் பயனுள்ள விடயங்களையும் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா? படித்தபாடம் மனதில் நிற்பதற்கு அது எவ்வளவு வேகமாக கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. பாடம் பிடித்ததாக இருக்குவேண்டும். படிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்குவேண்டும். அப்பதான் பாடம் மனதில் நிற்கும். இலகுவாகக் கிடைப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? அப்படியென்றால் எதையும் சிக்கலானதாகவும், சிரமப்பட்டதாகவும் செய்யத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? தன்நம்பிக்கையை இணையம் வளர்க்கவில்லை என்று சும்மா மேலோட்டமாக சொன்னால் எப்படி? பக்கத்தில் இருந்து பரீட்சை எழுதும் நண்பனின் திறமையில் நம்பிக்கை வைத்து பரீட்சை எழுதுகிற இளைஞர்கள் போன்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இணையம் தன்நம்பிக்கையை வளர்க்கவில்லை என்றுதானே சொன்னீர்கள். தன்நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று சொல்லாதவரையில் சீரழிந்துபோகவில்லை என்பதாக உறுதிப்படுத்திக்கொள்ளமுடி

Share this post


Link to post
Share on other sites

உ) முடிவு

இணையம் என்கிற சக்திவாய்ந்த ஊடகத்தை புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழ் இளைஞர்களில் பலர் தவறான முறையில் பயன்படுத்தி சீரழிந்துபோகிறார்கள். சீரழிவு என்பது ஏதோ ஒருவகையில் நிகழ்வதில்லை. அது பலவழிகளில் நிகழ்கிறது என்பதை மேற்கண்ட ஒரு சில விளக்கங்களின் மூலம் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஒப்பீட்டளவில் நன்மையடைகிற இளைஞர்களைவிட இணையத்தால் சீரழிந்துபோன - போகிற - இளைஞர்கள் தான் அதிகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல சீரழிவு என்பது தீமையடைவது மட்டுமல்ல. இளைஞர்கள் நன்மையடைவது தடைப்படும் என்றால் அதுவும் சீரழிவுதான்.

Share this post


Link to post
Share on other sites

ஊ) நன்றி

இந்த பட்டிமன்றத்தில் நானும் பங்குகொள்ள அனுமதித்த இரசிகை அக்காவுக்கு நன்றி.

இந்த பட்டிமன்றத்துக்கு களம் அமைத்துத்தந்த யாழ் களத்துக்கும் மோகன் அண்ணாவுக்கும் நன்றி.

நான் எழுதிய இந்தக் கருத்துக்களை வாசித்து அவற்றிலிருந்த எழுத்துப்பிழைகளையும் வசனப்பிழைகளையும் திருத்தி சரியான தமிழ்ச் சொற்களை மாற்றியும் தந்த துஷ்யந்தனுக்கும் நன்றி.

தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

புூனைக்குட்டி! புூனைக்குட்டி!! புூனைக்குட்டி!!!

வணக்கம்

இதுவரை நடைபெற்ற வாதங்களும், தொகுப்புரைகளும் 179 பக்கங்களை எட்டிவிட்டன. அதிலே புூனைக்குட்டி வைத்த வாதம் மட்டும் 52 பக்கங்கள்! ஆரம்பம் - தொடக்கம் தொடங்கி, முடிவு வரை அனைவரது வாதங்களையும் அலசி ஆராய்ந்து தனது வாதத்தை மிகவும் விபரமாக எழுதிவைத்துள்ளார்.

தலையங்கமே தமக்கு வலுச்சேர்க்கின்றது என்று ஆரம்பித்தார். சீரழிவுகள் உடலியல், உளவியல், ஒழுக்கவியல், சமூகவியல், பொருளாதாரவியல் என்பனபோல் பிரித்து அலசுகின்றார். எதிரணியினரின் வாதங்களுக்கு நல்ல சாட்டையடியும் கொடுத்துள்ளார்.

உளவியல் மாணவியான இவரால் இணையத்தால் ஏற்படும் உளவியல், உடலியல் தாக்கங்களை நன்றாக அறிய முடியும் என்பது உண்மை. மலிவாகப்பெறப்படும் கணனிகளால் பார்வை பழுதாகின்றது, உடல் வெப்பநிலை பாதிக்கப்படுகின்றது, உடல்நிலை பாதிப்புக்கள் என்பன ஏற்படுகின்றன என்றார். இணையத்தால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களைப்போல் ஆக்கப்படுகின்றார்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார். அப்படியா? இவர் கூறுவதை நம்பலாமா? எதிரணியின் என்ன கூறப்போகின்றீர்கள்?

முகமூடி நபர்களால் களத்தில் மனக்கசப்புக்கள், ஏமாற்றங்கள், பகையுணர்வுகள் ஏற்படுகின்றன. ஆபாச வார்த்தைகள் பகிரங்கமாகவே பலருடனும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. கட்டுப்பாடற்ற அநாமதேயர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால் இளைஞர்களின் மனதை பாலியல் வக்கிரம் நிறைந்ததாக மாற்றுகின்றது. இவர்களுடன் பரிமாறும் நிழற்படங்கள் துர்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கிடையே ஏற்படும் இணையக்காதலுக்கும், பின்னர் பாலியல் உறவுக்கும் இது இலகுவாக வழிவகுக்கின்றது. இதனால் ஏற்படும் விபரீதங்கள் பலவாகி இறுதியில் தற்கொலைக்கும் வழிவகுக்கின்றது என்கிறார். அவற்றிற்கு உண்மையில் நடந்த உதாரணங்களும் சில தந்தார். அருகிருக்கும் சமூகத்திலிருந்து விலகுவதற்கும், பணவிரயம் செய்வதற்கும், தாய்மொழிப்பயிற்சியைக் கறைப்பதற்கும் இணையம் துணை போகின்றது என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.

பெண்கள் கருத்தியல் வன்முறைகள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன என்றார். எதிரணித்தலைவர் இளைஞனின் கருத்திற்கு, முகமூடி உறவுகள் ஆணா பெண்ணா? இளைஞரா முதியவரா? யார் யார் என்று அறியமுடியாமல் இருக்கிறதென்றார். சரி, எனக்கொரு சந்தேகம். இளைஞனை "அண்ணா" என்று அப்படி அவ்வளவு நம்பிக்கையோடு அழைக்கிறார்? அவர் ஓர் "அண்ணி" யாக இருந்தால்? (சும்மா பேச்சக்குத்தான் கேட்டேன்)

சாதி, சமைய பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகின்றவைகளையும், யாழ் களத்திலேயே மதவெறியைக் காட்டி நிற்கும் கருத்துக்களையும் நான் காட்டத்தயார் நீங்கள் தயாரா? என்கிறார். புத்தகங்களில் இருப்பவைபோல் இணையத்தில் இருப்பவை உண்மையில்லை, தேடியெடுப்பதும் கடினம் என்கிறார் உண்மையா?

முன்னர் சினிமா நடிக, நடிகைகளின் படங்களை புத்தகங்களுள்ளும், அறைச்சுவர்களிலும் ஒட்டி வைத்திருந்தார்கள். விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தினால் இப்போது கணனித்திரையிலே போட்டு வைக்கிறார்கள். அம்மா அப்பாவினுடைய படங்களை எத்தனைபேர் போட்டு வைத்திருக்கின்றார்கள் என்றும் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்.

எதிரணியினர் குறிப்பிட்ட TYO அமைப்புக்களில் இணையத்தளங்களைப் பார்க்குமாறு கூறியதற்கு அங்கே ஆக்கபுூர்வமான எதுவுமில்லை என்றார். அப்படித்தானா?

விரிவுரைக்குப் போகாத மாணவர்களை பிறகு பிறகு என்று சொல்லிச்சொல்லி சோம்பேறி ஆக்கும் என்கிறார். தமக்காகவும், சொந்தங்களுக்காகவும், நாட்டுக்காகவும் ஓடியோடி உழைக்கும் புலம்பெயர் பெற்றோருக்கு மேலும் ஒரு வேலையை அதாவது அவர்களின் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் கஸ்டத்தையும் கொடுக்கலாமா? என்;பதுபோல் கேட்கிறார்.

இணையத்தருட்டு, இணைய எழுத்துச்சுதந்திரம் பற்றிச் சாவல் விடுகிறார். எதிரணியினரே அவர் கேட்பதுபோல் எழுதமுடியுமா? சினிமாச் சீரழிவுகள் வேறு, இணைய சீரழிவுகள் வேறு என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

மரணப்படுப்கையில் இருந்த தமிழ் இன்று சுடுகாட்டை நோக்கிப் போகின்றதா? அவசரத்தில் எழுதினாலும் தமிழைக்கொலை செய்யக்கூடாது என்று எண்ணினால் அதனை யாராலும் செய்யமுடியும் என்றே நான் எண்ணுகிறேன்.

கவனிப்பாரில்லையா? இப்படியே போனால் தமிழ் புதைகுழிக்குள்ளே போகும் அல்லது சாம்பலாகிப்போய்விடும் என்கிறார். சுடுகாட்டிற்குப் போனால் இப்படியான ஒன்றில்தானே முடியும் பிறகென்ன சந்தேகம்?

தமிழை தவறாக எழுதக்கூடாது என்கின்ற புூனைக்குட்டியின் இந்தக் கருத்தையும் நான் முழுதாக வரவேற்கின்றேன். எழுத்துப்பிழை ஏற்பட்டால் பொருட்பிழையும் கூடவே வரும்தானே! இதற்கு உதாரணமாக உங்கள் வசனத்தையே எடுத்துக்காட்டுகிறேன்.

2. உளவியல் தாக்கங்கள்

இதிலே இரண்டாவது பந்தியில்:- நேரடியாக இணையத்தை போதைப்பொருளோடு உப்பிட முடியாத போதும்... என்று வருகின்றது. இங்கே ஒப்பிட முடியாத போதும் என்று வந்திருக்க வேண்டும். ஒ வை, உ என்று எழுதியதால் பொருளே வேறுபட்டு நிற்கின்றது. (இதனை நான் முன்னர் கவனித்தபோதும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் இதுபற்றி என்னையே கேள்வி கேட்டதால்தான் எடுத்துக் காட்டினேன்)

நல்ல நண்பர்கள் கிடைக்காத நச்சுப் பாலமான இணையத்தில் இளைஞர்கள் தேடுவது முதலாவது காதல்தான் என்று கூறி, எதிரணி அஜீவனின் வயதையே சந்தேகக்கண்ணோடு பார்ப்பதுபோல் தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல் களத்தில் முகமூடி உறுப்பினர்கள் பலர் மனித உணர்வுகளையே மதிப்பதில்லை என்கிறார் உண்மையா? அடுத்த அறையிலேயே இருந்துகொண்டு அண்ணனும் தங்கையும் இணையத்திலே கடலைபோட்டுக் காதலித்த கொடுமையை கேள்விப்படவில்லையா? எதுக்கும் எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள் என்கிறார் குட்டிப்புூனை.

பகட்டானவைகளைப் பார்த்து மயங்குபவர்கள் தாங்களல்ல என்கிறார். நிகழ்காலத்தை விடுத்து எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணபவர்களும் தாங்களல்ல என்கிறார். தமிழ் நெட்டும், புதினமும்தான் நம்பிக்கையான தளங்களா? நடுவீட்டு நாட்டாமையாக வந்து உட்கார்ந்துவிட்ட இணையத்தளங்களின் தீமைகளால் சீரழிந்துபோனவர்களின் எண்ணிக்கை நன்மையடைந்தவர்களைவிட பன்மடங்காகும் என்று கூறி "வெளுத்ததெல்லாம் பால்" என்று நம்பவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். பழமை - புதுமை, தலிபான் - தமிழீழம் இரண்டிற்குமுள்ள வேறுபாடுகளையும் குறிப்பிட்டார்.

நன்மை அணியினர் நன்மையடைகின்றார்கள் என்று சொல்வதற்கு எதுவுமேயில்லை, சும்மா வார்த்தைகளால் கோலம் போடாது வாதங்களை முன்வையுங்கள் என்று நினைவுூட்டவும் சொல்கிறார்.

இணையத்தைப் பாவிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் இளையோரின் எண்ணிக்கையை இரண்டு இடங்களில் இரண்டுவிதமாகக் குறிப்பிட்டிந்தாலும் அதனால் சீரழிந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் என்கிறார்.

நாரதருக்கு நன்றியும் சொல்கிறார். இல்லாத கடவுளில் பாவத்தைக்கொட்டுவது முட்டாள்தனம். இருக்கும் இணையத்தை ஆதாரமாகக் காட்டுவது அப்படியல்ல என்கிறார். எதற்குமே உதவாத ஆலய ஆதிமுலத்தில் இருக்கும் கல்லை (கடவுளை) இணையத்திற்கு ஒப்பிடுவது மொக்குத்தனம் என்கிறார். (இதனால் எத்தனைபேர் வரிந்து கட்டிக்கொண்டு வரப்போகிறார்களோ தெரியாது).

ஆடினால் மனுசர், ஆட்டப்பட்டால் பொம்மை, கண்ணுக்கு முன்னால் விரியும் திரையில் கெட்டவைகள் எல்லாம் கூட்டாளிகளோடு வந்து பாய் விரித்துப்படுத்திருக்கின்ற

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு பட்டிமன்றத்தை ஒருங்கமைத்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இரசிகைக்கும் எவர் என்ன சொன்னாலும் சாலமன் போல் நீதியில் தவற மாட்டோம் என நடுவர் பணியை ஏற்றிருக்கும் செல்வமுத்து அண்ணா மற்றும் தமிழினிக்கும் என்னைவிட வயதால் இளையவரென்றாலும் தன் திறைமைகளால் என்னையே பிரமிக்க வைத்த எமதணித்தலைவர் இளைஞனுக்கும் என் சக அணித் தோழர்களுக்கும் எதிரணியிலிருந்தாலும் என்றும் தன் கருத்துக்களால் எனைக் கவரும் சோழியானுக்கும் ஏதோ முடிந்த வரை முனகிப் பார்ப்போம் என வந்திருக்கும் ஏனைய எதிரணித் தோழர்களுக்கும் இப்படி நாமெல்லாம் கூத்தடிக்க இடமளித்த களப்பொறுப்பாளர் மோகனுக்கும் ஏனைய நிர்வாகத்தினர் மற்றும் எம்மை எல்லாம் உற்சாகப்படுத்தி வழி நடத்தும் ஏனைய கள உறவுகளுக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்னதான் இருந்தாலும் புூனைக்குட்டி நடுவர்களை இப்படி குளுக்கோஸ் எடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கக் கூடாது. தொடர்ந்து அவர் போல் நானும் நீட்டி முடக்கி பக்கம் பக்கமாக கருத்தெழுதினால் நடுவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலையே ஏற்படும். எனவே முடிந்த வரை சுருக்கமாகவும் எதிரணியினருக்கு புரியும் வண்ணமும் எனது கருத்துக்களை வைக்க முயல்கின்றேன்.

பட்டிமன்றத்தின் தலைப்பான புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிந்து போகின்றார்களா? என்பதைப் பற்றிக் கருத்துக்கள் தந்த எதிரணியினர் தலைப்பை விட்டு விலகி எமதணியினர் நொண்டி நொண்டி நடப்பதாக குற்றம் சாட்டிக் கொண்டு தாமும் தமது பங்கிற்கு தாண்டித் தாண்டி நடந்துள்ளனர்.

நடுவர்களே சிறிது விளக்கத்திற்காக நான் தலையங்கத்தை விட்டு வெளியில் சென்று சில நடைமுறைகளை சொல்ல விரும்புகின்றேன். எமது சமுதாயத்தை எடுத்துப் பார்த்தால் அதில் முன்னேறி நல்ல நிலையிலிருக்கும் எவரும் சமுதாயமும் தன் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று சொல்ல முன் வருவதில்லை. ஆனால் தன் தவறுகளால் சீரழிந்து பாதிக்கப்பட்டால் சமுதாயம் தான் தன்னைச் சீரழிதத்தாக சொல்லத் தொடங்கி விடுவார்கள். தம் தவறுகளை உணர்வதற்கோ ஒத்துக் கொள்வதற்கோ முன்வர மாட்டார்கள்.

அதே போல் காதல் என்றதும் எமது ஞாபகத்திற்கு வரும் காவியங்கள் எவை

1) அம்பிகாவதி - அமராவதி

2) லைலா - மஜ்ணு

3) சலீம் - அனார்கலி

4) ரோமியோ - யுூலியற் போன்றன தானே !!

இவையெல்லாம் வாழ்க்கையில் தோல்வியில் முடிந்த காதல் கதைகள் தானே? ஏன் ஷாஜகானின் தாஜ்மகால் கூட அவனின் காதல் வெற்றிக்காக கட்டப்பட்ட மாளிகையல்ல காதல் மனைவியின் பிரிவினால் கட்டப்பட்ட கல்லறை தானே??எங்காவது காதலில் ஜெயித்து அதன் காவியங்களை படித்துள்ளீர்களா?? அதனால் காதலில் ஜெயித்தவர்களே இல்லையென்று சொல்லிவிட முடியுமா?? ஜெயித்தவர்கள் திருமணமாகி தம் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து மேலும் மேலும் தம் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றார்கள். தோற்றவர்கள் எதிரணியினர் போல் புலம்பியதாலேயே வந்தது தான் மேலேயுள்ள காவியங்கள்.

ஏதிரணியினர் சிலர் சொன்னார்கள் எமதணித்தலைவர் இளைஞன் இணையத்தால் ஜெயிக்கவில்லை தன் திறைமையினால்தான் ஜெயித்தவர் என்று. உண்மைதான் திறைமை இல்லாத எவருக்கும் என்னதான் உதவி கிடைத்தாலும் அவர்களால் சாதிக்க முடியாது. ஆனால் திறைமையான ஒருவருக்கு இணையம் போல் ஊக்குவிப்பான ஒரு ஊடகம் கிடைக்கும் போது தன் திறைமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள முடிகின்றது. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே திறைமைசாலிகளாக வெளிவந்திருக்கின்றார்களா?? குறிப்பிட்ட சிலர் தானே சாதிக்கின்றார்கள். அதனால் அந்த வகுப்பாசிரியர் சரியில்லை என்று ஆகிவிடுமா?? அது போல் இளைஞனுக்கும் தன் திறைமைகளை வளர்க்கவும் திறைமைகளை வெளிக்காட்டவும் களமமைத்துக் கொடுத்ததே இணையம் தானே. இணையத்தில் பலர் அவரின் படைப்புகளைப் பார்த்து வாழ்த்தியதால் தானே அவரால் பல திறைமையானவர்களின் முன்பாகவே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட முடிந்தது. முன்பு ஒரு பட்டிமன்றமென்றால் 50 அல்லது 60 வயதைக் கடந்தவர்கள் நடுவர்களாக இருக்க அதே வயதையொத்தவர்களே பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். இன்று அந்நிலை மாறி இளையவர்களே நடாத்தக் கூடிய துணிவைக் கொடுத்தது இணையம் என்றால் அது மிகையாகாது. சிறுபிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என்று முன்பு பெரியவர்கள் சொல்லிச் சொல்லியே பல இளைஞர்கள் தம் திறைமைகளை வெளிக் கொண்டு வர முடியாமலிருந்தது. ஆனால் இணையம் வந்த பின் தமக்கென ஒரு களமமைத்து அதில் தமது திறைமைகளை எவரின் தடையுமின்றி பதிய முடிந்தது. அவற்றைப் பார்த்த பின் தான் பல பெரியவர்கள் தாம் ஆலம்விதையை மூடப் பார்த்த முட்டாள்த் தனத்தை புரிந்து கொண்டார்கள். அதனால் பலர் அவர்களை ஊக்கப்படுத்த முன் வந்துமுள்ளார்கள்.

இன்று புலத்தில் இளைஞர்களால் படைக்கப் பட்ட கதையோ அல்லது கவிதையோ அச்சேற்றி புத்தகமாக வெளியிடுவதில் சிரமங்கள் எல்லோரும் அறிந்ததே. அப்படி அச்சேற்றி புத்தகமாக்குவதற்கு தேவையான பணம் புத்தகமாக்கினால் எப்படி விற்பனையாகுமோ என்ற பல பிரைச்சினைகளின் மத்தியில் இணையமொன்றே அவற்றை மின்னு}ல்களாக வெளிவர உதவியது. அது பெற்ற வரவேற்புகளால் புத்தகங்களாகவும் பின் வெளிவந்தன. சிலர் இணையத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் வருவதாக சொன்னார்கள். இருக்கலாம் ஏன் புத்தகங்களில் அப்படிப் பிழைகள் ஏற்படவில்லையா?? இணையத்திலாவது பிழைகளை உடன் திருத்தி விட முடிகின்றது. ஆனால் புத்தகங்களில் அடுத்த பதிப்பில் தான் திருத்தலாமென்ற உண்மை கூட இவர்களுக்கு புரியாமல் போயுள்ளது. பழமொழி ஒன்று சொல்வார்கள் ஒரு வேடம் போட்டால் அது போலவே செய்து காட்ட வேண்டுமென்று. அது போலவே இன்று எதிரணித் தலைவர் சோழியானின் நிலைமையும். பல இளையோரின் படைப்புக்களை மின்னு}ல்களாக்கி இணையத்தில் தரவேற்றி அவர்களை ஊக்குவித்தவரே இன்று வேடம் போட்டு வித்தை காட்ட வேண்டியுள்ளது. அது போல் தமது அணி சார்பாக இறுதியாக கருத்தை திறைமையாக கருத்து வைக்கும் குருவிகளை வைக்கும் படி கூறினார். குருவிகளின் திறைமையை சோழியான் உணர்ந்து கொண்டதே இந்த இணையத்தின் பயன் பாட்டால்த் தானே. அது போல் புூனைக்குட்டி கருத்து வைத்ததும் தான் அசந்து விட்டதாக ஓடோடி வந்து கூறினார். முன்பின் தெரியாத முகமறியாப் பலரை சோழியான் வாழ்த்த வழிசமைத்துக் கொடுத்தது எது?

இணையமும் ஒரு ஊடகம் என்ற ரீதியில் பார்க்கும் போது கூட அது மற்றைய ஊடகங்களிலிருந்து மிகவும் மாறுபட்டே காணப்படுகின்றது. தொலைக்காட்சியோ அல்லது வானொலியோ அல்லது பத்திரிகையோ அவை தருவதைத்தான் நாம் பார்க்க முடியும். இல்லாவிட்டால் மூட வேண்டியது தான் ஆனால் இணையமோ எமக்கு என்ன தேவையோ அதை பெற்றுக் கொள்ள வழியமைக்கின்றது. ஒரு இளைஞன் படித்துக் கொண்டிருக்கும் போது தனக்கேற்படும் சந்தேகத்தைப் புத்தகங்களில் தேடி நேரத்தை வீணடிக்காமல் கூகுளில் சென்று குறிப்பிட்ட அந்த விடயத்தை சில நொடிகளில் பெற்று விட முடிகின்றது. பிழையான தகவல்களும் வருகின்றன என்று குறை சொல்பவர்களே தொடர்ந்து பிழையான தகவல்கள் தரும் இணையப் பக்கங்கள் நிலைத்து நிற்காமல் போய்விடும் அதனால் அவர்கள் தவறுகள் ஏற்பட்டால் அவற்றை திருத்தியே வருகின்றனர் தவறுகள் என்பது எல்லா இடங்களிலும் எல்லா விடயங்களிலும் ஏற்படக் கூடிய ஒன்றே.

மேலும் சிறார்களின் தாய்மொழிக் கல்வியிலும் இணையம் பல வகையிலும் உதவி புரிகின்றது. பொதுவாக ஐரோப்பாவில் மொழிக்கல்வியை விளையாட்டுடன் சேர்த்தே கற்பிப்பார்கள். அதுபோல் தமிழ்மொழிக் கல்வியையும் விளையாட்டுடன் கற்பிப்பதற்காக நிறையவே இணையத்தில் வந்து அவை சிறார்களையும் கவர்ந்துள்ளன. ஆதனால் சிறார்களும் தமிழ் நெடுங்கணக்கின் பயமின்றி அதனை ஆவலாக கற்கவும் ஆரம்பித்துள்ளனர். இப்படி எவ்வளவோ நன்மைகளை பட்டியலிட்டுக் கொன்டே செல்லலாம்.

அதேபோல் இணையத்தில் ஆபாசங்கள் பற்றி பலர் எழுதிச் சென்றனர். அவற்றை மனக்கட்டுப்பாடு இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாமென எமது அணி சொல்லியபோது எம்மவர்களுக்கு மனக்கட்டுப்பாடு இல்லை எனச் சிலர் சொன்னார்கள். உண்மைதான் மனக்கட்டுப்பாடு இல்லாதவன் சீரழிந்து போவதற்கு இணையம் ஏன் அவன் சிந்தனைகளே போதுமே. ஆக ஏற்கனவே மனக்கட்டுப்பாடு இல்லாமல் சீரழிந்தவர்கள் தான் இணையத்தை சீரழிக்கப் பார்க்கின்றார்களே தவிர இணையத்தால் அவர்கள் சீரழியவில்லை.

அதுபோல் நாம் எமது கணனியிலேயே தெவையில்லாத ஆபாச விளம்பரங்கள் வருவதை நிறுத்த முடியும். எமது வளர்ச்சிக்கு எது தேவையோ அதனை மட்டும் உள்வாங்கி எம் வாழ்வையும் சீராக்க முடியும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கும் போது கெட்டவை மட்டுமே சிலர் கண்களுக்குத் தெரிகின்றன என்றால் அது இணையத்தின் கோளாறு அல்ல பார்ப்பவரின் பார்வையில் கோளாறு. இப்போ எதிரணியினர் செய்வதுதான் கனியிருப்பக் காய் கவர்வதோ?

இணையத்தால் நிறையச் செலவுகள் ஏற்படுகின்றது என்றார்கள் சிலர். ஆபாசங்களை தரிசிப்பதற்கு ஏற்படும் செலவுகளை விட அறிவுகளை பெருக்கிக் கொள்வதற்கு ஏற்படும் செலவு சொற்பமானதே. அது போல் எந்த விடயத்தையும் ஏதாவது ஒன்றை இழந்துதான் பெற்றுக் கொள்ள முடியும். எந்தவித இழப்புமில்லாமல் ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ள முடியுமா?? மீன் பிடிப்பவன் கூட து}ண்டிலில் சிறு மீனையோ அல்லது புழுவையோ செருகித்தான் பெரிய மீனைப் பிடிக்கின்றான்.

எனவே தெளிவான சிந்தனை உள்ள எவரையும் இணையம் என்ன எவையுமே ஒன்றும் செய்து விட முடியாது. தம் பலவீனங்களால் சீரழிந்து போவோரே மற்றைவை மேல் பழி போட்டு தமது சீரழிவுகளுக்கு வலுச் சேர்க்கப் பார்க்கின்றார்கள் என்ற உண்மையை வலியுறுத்திக் கூறி சந்தர்ப்பத்திற்கு நன்றியும் கூறி எனது கருத்தினை முடிக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் வந்தோர் அனைவருக்கும் வணக்கம், எல்லோருக்கும் வணக்கம் என்பதோடு தமது வாதங்களை ஆரம்பித்தனர். ஆனால் வசம்பு அப்படியில்லாமல் முன்னர் வந்தவர்கள்போல் வணக்கமும், நன்றியும் சொல்லி ஆரம்பித்தார். எல்லாம் நன்றாகவே இருக்கின்றன.

எதிரணியினர் தலைப்பை விடுத்து தாண்டித்தண்டி நடந்தார்கள் என்றார். பொதுவாக தமது நிலை உயரும்போது சமுதாயத்தைப் போற்றுவதில்லை ஆனால் தமது நிலை தாழும்போது அவர்கள் து}ற்றத் தவறுவதுமில்லை என்று அழகாகக் கூறினார். இந்தக் காதலர் தினத்திலே, தோல்வியைத் தழுவிய உலகக் காதலர்களை உள்ளடக்கிய காவியங்களை எதிரணியினருக்கு உதராணம் காட்டினார். அப்படியென்றால் எதிரணியினரும் இங்கே காவியம் படைக்கப்போகிறார்களா?

தனது அணித்தலைவர் இளைஞனின் திறமையை வளர்க்க களம் அமைத்துக்கொடுத்தது இணையம்தானே என்றும், இணையத்திலே சாதனை புரிந்தது அவரது திறமையினாலேதான் என்று எதிரணியினர் கூறுவதை ஒரு வகுப்பிற்கு ஒப்பட்டு விளக்குகிறார். "சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சோராது" என்று கூறிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று அறுபதைக் கடந்தவர்களுக்கு ஓர் அறையும் விடுகிறார். (களத்தில் அறுபதைக் கடந்த பெரியவர்கள் இருந்தால் அவரை மன்னிக்கவும்).

முகம் காணாத கள உறவுகளின் திறமைகளை அறியவும், இணையவழி மின்னு}ல்கள் சமைக்கவும் இணையம்தானே உதவுகின்றது. இதனை எதிரணித்தலைவரே முன்னின்று செய்தபோதும் இப்போது வேடமிட்டு வித்தை காட்டுகிறார். கள உறவுகளுக்கு அறிவுரை சொல்லவும், அவர்களிடம் அறிவுரை கேட்கவும் இணையமில்லாவிட்டால் என்ன செய்ய முடியும்? என்று கேட்கிறார். இது நியாயமான கேள்விதானா?

"கூகுளில்" புகுந்தால் எதுவும் இலகுவாகும். நேரமும் மிச்சமாகும் என்கிறார். மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள்தான் சீரழிகிறார். இதனை விடுத்து இணையம்தான் சீரழிக்கிறது என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது வாழ்வை வளமாக்க வேண்டியவைகளை மட்டும் உள்வாங்கவேணடும். இணையத்திலேயுள்ள நல்லனவற்றை நீக்கி, தீயனவற்றை நோக்குபவர்களுடைய பார்வைகளில்தான் கோளாறு என்று ஒரு பிடி பிடிக்கிறார்.

இந்த உலகில் எதையும் செலவின்றிப் பெறமுடியாது. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை அடையலாம். அதாவது "இறால் போட்டுத்தான் சுறா பிடிக்க வேண்டும்" என்று கூறி, தெளிவான சிந்தனையுடன் இருங்கள். உங்கள் பலவீனங்களால் நீங்கள் சீரழிவதற்கு மற்றவர்மேல் பழிபோடாதீர்கள் என்று எதிரணியினருக்கு கூறுகிறார்.

இவற்றையெல்லாம் எதிர்த்து வாதிட குருவிகளே பறந்து வாருங்கள். விரைந்து வாருங்கள். இறுதியாக உங்கள் அணித்தலைவர் வரமுன் உங்கள் வந்து வாதத்தை வையுங்கள்.

நன்றி

குறிப்பு: நேற்று எழுதிவைத்த எமது தொகுப்புரையை யாழ் களத்திற்குள் நுழைய முடியாமல் போனதினால் முன்வைக்க முடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

பட்டிமன்ற நடுவர்களான தமிழினி அவர்களுக்கும் செல்வமுத்து ஐயா அவர்களுக்கும் எதிரணி அங்கத்தவர்களுக்கும் மற்றும் எமதணி அங்கத்தவர்களுக்கும் தமிழ் தாயின் இனிய நற்றமிழ் வணக்கங்கள்.

எமதணியினர் சிறப்பான வாதங்களை ஏலவே தந்துவிட்ட நிலையிலும் பூனைக்குட்டி ஒரு கட்டுரையையே சமர்ப்பித்து விட்ட நிலையிலும் எமது வாதத்தை எதிரணி நண்பர் வசம்புவின் வாதத்தோடுடொட்டி சுருக்கிக்கொண்டு பட்டிமன்றம் விரைந்து முடிவுறுத்தப்பட எம்மால் இயன்ற பங்களிப்பை நல்கிக்கொள்கின்றோம்..!

இங்கு பேசப்படும் தலைப்பு... புலம்பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்... என்பதே..! அந்தப் புலம்பெயர் வாழ் இளையோரில் தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த இளையோரை மையப்படுத்தியே வாதம் நகர்த்திச் செல்லப்படுகிறது என்பதில் ஐயமில்லை..!

வாதத்துக்குள் செல்ல முன்னர் சில பதங்கள் தொடர்பில் வரையறைகளை செய்து கொண்டு வாததை நகர்த்துவது சாலச் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றோம்..! அந்த வகையில்...

இளையோர் - என்பதை மானுடவியல், உடற்கூற்றியல் மற்றும் உளவியல்படி பகுத்துக் கொண்டால் 11 தொடக்கம் 18 வரை ரீன் ஏஜ் ( (Teenagers) இளையோர் என்றும் அதன் பின்னர் எல்லோரும் அடல் (Adult) - முதிர் மனிதர்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றனர். இந்த அடல்ற் பகுதிக்குள் சில பிரிவுகள் இருக்கின்றன அதில் இளம் அடல்ற் (Young Adult) வருவது 18 - 39 வயதிற்குள்..! இந்த வகைகளின் கீழ் முதலில் இளையோரை வகைப்படுத்திக் கொள்வோம். ( முளையத்தில் இருந்து இறப்பு நிலைவரை மனித நிலை மாற்றங்களை கற்றறிந்த வகையில் பல நூல்களில் குறிப்பிட்டதன் படி இத்தரவுகள் தரப்படுகிறது. தேவையென்றால் நடுவர் Human development and Psychology எனும் நூலைப் புரட்டினாலும் இந்தத் தரவுகளை ஆதாரத்தோடு நோக்கலாம்.)

அடுத்து..புலம்பெயர் இளையோர் - இதில் புலம்பெயர் இளையோர் எனப்படுபவர்கள்..யார்..??! தாயகத்தில் பிறந்து இங்கு புலம்பெயர்ந்த ரீன் ஏஜ் ஆட்களா அல்லது இள முதிர் பருவ மனிதர்களா..??! அல்லது தாயகத்தில் இருந்து புகலிடம் நோக்கி குடிபெயர்ந்தவர்களுக்கு புகலிடத்தில் பிறந்தவர்களா..??! இந்தத் தலைப்புக்குள் வாதாட இந்தக் கேள்விகளுக்கு தெளிவான விடை அவசியம். காரணம் இது தமிழர்கள், தமிழ் சார்ந்த இணைய ஊடகம் தொடர்பான விவாதம் என்ற வகையிலும் கருத்துப் பரிமாறப்பட்டுள்ளது. நாங்கள் "புலம்பெயர்ந்த இளையோர்" என்ற பதப்பிரயோகப்படி தாயகத்தின் அடையாளங்களுக்கான அல்லது அவற்றுடனான தொடர்புகளை (அது மொழியாக இருக்கட்டும்..பண்பாடு பழக்க வழக்கமாக இருக்கட்டும்..வாழ்வியல் முறையாக இருக்கட்டும்...எந்த வகையிலும்) தங்களோடு சிறிதள வேணும் வைத்திருக்கும் இளையோரை (ரீன் மற்றும் இளம் முதிர் மனிதர்களை ) இதற்குள் அடக்கிக் கொள்கின்றோம்..!

இணைய ஊடகம் - இதில் இன்ர நெட் மற்றும் இன்றா நெட் இவை இரண்டையும் அடக்கிக் கொள்வோம்..! இன்ரநெட் (Internet) உலக வலைப்பின்னலூடும்.. இன்றாநெட் (Intranet) உள்ளக வலைப்பின்னலாகவும் கணணிகளூடு தரவுத் தகவல் பரிவர்த்தனைகளூடு தொடர்புகளை மேற்கொள்கின்றனர்..! இதில் இன்ரநெட் அநேகராலும் இன்று விரும்பி உபயோகிக்கப்படுகிறது.

இணைய ஊகத்தில் உள்ள தகவல்களின் தரவுகளின் நம்பகத்தன்மை - இது தமிழ் மொழி மூலம் இணையத் தரவுகளுக்கு தகவல்களுக்கு என்று மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உள்ள அநேக இணையத் தரவுகள் தகவல்களுக்கு 100% நம்பகத்தன்மை இல்லை இதை பலரும் அனுபவங்களினூடு கண்டறிந்திருப்பர். உதாரணத்துக்கு பல்கலைக்கழகங்களில் படிப்பவர்கள் இது தொடர்பில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இன்று Plagiarism என்பது மிகப் பெரிய அளவில் பல்கலைக்கழகங்களில் கல்விசார் நிர்வாகத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிற ஒரு விடயம். காரணம் மாணவர்கள் கூகிளில் தேடி அதில் தரப்படும் தரவுகளை அப்படியே வெட்டி ஒட்டி விளக்கமின்றி தவறான நேர்மைக்கு மாறான ஆக்கங்களை சமர்ப்பித்து வருவதாலாகும்..!

இணைய ஊடகத்தின் பெறுநிலை - புலம்பெயர்ந்த மேற்கு நாடுகளில் இணைய ஊடகத்துக்கு பஞ்சமில்லை. ஆனால் பாவனையாளர்கள் எங்கிருந்து இணையத்தை உபயோகிக்கிறார்..அவர்கள் பாவிக்கும் இணைய இணைப்பு உள்ள சூழல் எத்தனையன என்பவை அவர்களின் இணையச் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்துகின்றன..!

உதாரணத்துக்கு ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் ஒரு மாணவன் இணையத்தில் உலா வரும் போதும் நண்பர்களோடு இணைந்து உலா வரும் போதும் அவனின் செயற்பாடுகள், நோக்கங்களில் தெளிவான வேறுபாடுகளை அவதானிக்கலாம். இங்குதான் தவறுக்கான சந்தர்ப்பங்கள் உருவாகப்படுகின்றன..! எல்லா மனிதரும் புதிய "காட் டிஸ்க்" போல மூளையோடு - மனதோடுதான் பிறக்கின்றனர்..ஆனால் பிறந்த பின் மூளையில் - மனத்தில் பதியப்படும் சமூகத்தின் செயற்பாடுதான் அவனின் சிந்தனைப் போக்கைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் ஒரு சிலர் எங்கோ ஒரு மூலைக்குள் உயர் மனித விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்துவிடுவதால் அது வாழும் சந்ததிகளை மற்றும் புதிய சந்ததிகளை வினைத்திறனுடன் அதிக அளவில் போய்ச் சேராது. சமூகத்தில் அநேகர் எதைச் செய்கின்றனரோ அதுதான் வாழும் சந்ததியிலும்,புதிய சந்ததியிலும் பிரதிபலிக்கும்..!

அதேபோல் மனிதனும் ஒழுக்கத்தோடு வாழ்வதிலும் ஒழுக்கமின்றி வாழ்வதிலேயே அதிகம் நாட்டம் காட்டுகிறான். காரணம் மனிதனும் ஒரு விலங்குதானே..! என்னதான் பகுத்தறிவால் அறிவியல் பூர்வமாக ஒழுக்க சீலத்துடன் சிந்தித்தாலும் எல்லா மனிதர்களாலும் அவரவர்க்குள் வாழும் விலங்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் கிடைத்திடுமா என்ன...அது தனி மனிதர்களின் மனப்பலம், பலவீனம் சார்ந்ததும் இருக்கிறது...! எனவே ஒருவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவன் வாழும், செயற்படும் சூழலின் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுபடும்..! ஆகவே அமைய வேண்டிய சூழல் சிந்தனைகளைச் சீராக்க வல்லனவனாக பெறப்படும் சிந்தனைகளை சீராக்கவல்லனவாக அமைக்கப்பட வேண்டும்...!

அந்த வகையில் இணைய வசதிகள் வழங்கப்படும் இடங்களும் அமைய வேண்டும்...ஆனால் அப்படியா அமைந்திருக்கின்றதன. இன்ரநெற் கபேக்களில் சென்று தமிழ் பேசும் இளையோர் செய்யும் கூத்துக்களைப் பாருங்கள்...புரியும்..!

எனி எமது விவாதக் கருப்பொருளுக்கு வருவோம்.. இங்கு எதிரணியில் கருத்தாடியவர்களின் மொத்தக் கருத்தையும் 3 பிரதான பிரிவுகளுக்குள் அடக்கலாம்..

1. இணையம் புலம்பெயர் இளையோரின் தற்சிந்தனைகளுடான தன்னார்வப் படைப்புக்கள் எந்த வடிவிலும் வெளிப்படவும் வெளிச்செல்லவும் உள்வாங்கப்படவும் வகை செய்கிறது.

2. கல்விசார் நடவடிக்கைகளுக்கான விடயங்களை தேடல் செய்யவும் குறுகிய காலத்துள் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும், இலக்குகளை விரைந்து சிரமமின்றி எட்டவும் உதவுகிறது.

3. வாழ்வியல் நிலையில், இணையத்தில் சற்றிங் மற்றும் ஏனைய வழிகளிலான கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் இளையோர் தமக்கிடையே சகல மட்டங்களிலும் சகல விதமான கருத்துக்களையும் பரிமாறி எல்லைகளற்ற சமூக நிலைகளை ( டேற்றிங் இணைகள்..காதல் இணைகள்..காம இணைகள்..இதை விட நல்ல நட்புள்ள நிலைகள்..பின்னர் அவையே நடபற்ற நிலைகளாக...என்று நேரத்துக்கு ஏற்ப மனநிலைக்கு ஏற்ப கட்டுப்பாடின்றி மாற்றப்பட) மனம் போன போக்கில் அவற்றை தேவைக்கு ஏற்ப தக்க வைத்து வாழ வழிசெய்கிறது.

முதலில் இணையத்தில் இளையோரால் வைக்கப்படும் கருத்துக்களின், ஆக்கங்களின் தன்மைகள் பற்றிப் பார்ப்போம்... புலம்பெயர்ந்த இளையோரில் தமிழ் தெரிந்த தமிழர்கள் மட்டுமே தமிழ் இணைய ஊடகத்திற்கு தங்கள் பங்களிப்பை அதிகம் நல்கி வருகின்றனர். மற்றவர்கள் தாங்கள் அறிந்த அல்லது பயன்படுத்தும் மொழிமூல இணைய ஊடகங்களில் மட்டுமே தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர். எனவே அவர்களை இங்கு கொண்டு வருதல் நமக்கு பொருத்தமில்லாத விடயம். காரணம் நமக்கு டொச்சில என்ன எழுதி இருக்கென்று படிச்சு புரியத் தெரியாது. இல்லை தெரிஞ்சவரைக் கேட்டாலும் அவரும் படிச்சிட்டு உண்மைதான் சொல்லுறாரா என்பதற்கு உத்தரவாதமில்லை..! எனவே அவர்களை இங்கு விவாதத்துக்குள் உள்ளெடுப்பதைத் தவிர்ப்போம்..!

உலகெங்கும் ஈழத்தில் இருந்து கிட்டத்தட்ட 10- 15 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

குருவிகள் முதலில் புலம்பெயர் இளையோர் என்பவர் யார்? முதியோர் என்பவர் யார்? என்பதற்கு மானுடவியல், உடற்கூற்றியல், உளவியல் எனப் பகுத்து ஆதாரங்களேடு விரிவாக விளக்குகிறார். அடுத்து "இன்ர நெட், இன்றா நெட்" என்றால் என்னவென்றும் தெளிவாக விளக்குகிறார். ஆரம்பமே நன்றாக இருக்கின்றது.

"Hard Disc" போல மூளையை உடைய மனித சமுதாயத்தில் ஒருசிலர் மட்டும் உயரிய மனித விழுமியங்களைக் காப்பாற்றுவது போதாது என்கிறார். சகல வசதிகளும் பெற்றுள்ள இந்த மனிதன் என்னும் விலங்கு தனது மனக்கட்டுப்பாடின்மையால் ஒழுக்கமின்றி வாழத் தலைப்படுகிறான், இதற்கு இணையம் துணைபோகின்றது, புலம்பெயர் இளையேரின் சகலவிதமான படைப்புக்கள் வெளிவரவும், பகுப்பாய்வுக்கு உட்படாத தவறான சிந்தனைகள் உள்வாங்கப்படுவதற்கும், இன, சமூக விரேத நிலைகளைத் தோற்றுவிப்பதற்கும், கட்டுப்பாடற்ற கருத்துப்பரிமாறல்கள் நடைபெறவும் இணையம் காரணியாகின்றது என்கிறார்.

ஒருவருள் எழும் கருத்துக்களை அறிவியல், சமூகவியல் ரீதியாக இணையத்தில் ஆராய யாருமே இல்லாததால் காதலர் தினத்தன்றுகூட காதல் என்ற ஓர் அற்புதமான உணர்வுநிலையை இணையத்தில் வழியே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பல இஞைர்களை, தவறான வழியில் நடக்க ஊக்கிவிக்கின்றது என்று ஆதங்கப்படுகிறார். ஏற்றுக்கொள்ளலாமா?

இணையத்தின் ஊடாக சுடப்பட்ட கணனி மென்பொருள் விற்பனை, கணனி நோயைப் பரப்பும் கிருமிகளின் ஊடுருவல் என்பன பல தீங்குகளை விளவிக்கின்றது. மாணவர்களின் சுயதேடலை முடக்கி, மற்றவரின் முயற்சியில் பட்டம்பெற முயலும் மனப்பாங்கை ஊக்குவிக்கின்றது என்று தன் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். "நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள்" போல இப்போது இணையத்தில் முளைத்துள்ள பல பல்கலைக்கழங்கள் சமூக விருத்திக்கு உதவாமால் தமது பொருள் விருத்தியிலேதான் ஊக்கமெடுக்கின்றார்கள் என்கிறார். உண்மையா?

இன்று நன்மை என்று கருதுவதெல்லாம் நாளை தீமையாகவும் மாறலாம் அல்லவா? அதற்கு உதாரணமாக ரஸ்யாவிலே நிகழ்ந்த லெனின் புரட்சியை உதாரணம் காட்டுகிறார். அமெரிக்க அரசாங்கம் இன்று இணையம் என்ற ஊடகத்தை அறிமுகப்படுத்தி, இளையோர்களை சுகபோகத்திற்கு அடிமையாக்கி, தனது அரசியல் பொருளாதார இலக்குகளை இலகுவாக எதுவித புரட்சிகளுமின்றி அடைந்துகொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் ஓரினச் சேர்க்கை போன்ற தேவையற்றவைகளை வாழ்வில் நலிந்தவர்களிடையே பரப்பி அவர்களைக் குழப்பியும் விடுகிறார்கள். மேற்குலகுகளில் இருந்து வருபவைகளெல்லாம் அமிர்தமென்று எமது இளையோர்கள் நம்புகிறார்கள், அதனால் சீரழிகிறார்கள். தெரிந்துகொண்டே இவற்றை வெளிவிடும் நிறுவனங்கள் இடையிடையே தீமை வருகின்றது என்று கூறி அவற்றை நிறுத்தப்போவதாக ஏமாற்று நாடகமும் ஆடுகிறார்கள் என்கிறார்.

உலகத்தையே தனது கைக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்க அரசு செய்த, செய்கின்ற இணையவழிச் சீரழிவுகளை அழகாக விளக்கமாகத் தந்திருக்கிறார் குருவிகள். இணையம் ஒருபோதும் புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களுக்கு நன்மை அளிக்காது என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு நாம் அடிமையாகக்கூடாது என்பதுபோல் தனது வாதத்தை மிகவும் ஆணித்தரமாக வைத்துள்ளார்.

இவரின் தமிழ் ஆற்றல் நன்றாகவே இருக்கின்றது. அலசி ஆராயும் திறனும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது. வாழ்த்துக்கள்!

இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. இனி ஒருங்கிணைப்பாளர் இரசிகை அறிவித்ததன்படி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை வைக்கவும்.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

மதிப்புக்குரிய பட்டிமன்ற நடுவர்களுக்கும், இதிலே கலந்து கொண்டு ஆணித்துரமாக தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறிய யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்!

புலம்பெயர் வாழ் தமிழ் இளையோகளையும் இணைய ஊடகத்தால் எழும் விளைவுகளையும் பற்றி பேச வந்து, இணைய ஊடகம் ஏற்படுத்தும் பொதுவான தீமைகளையும் எமது அணியிலுள்ளவர்கள் மிகவும் தெளிவாகவும், உண்மைத்தன்மையுடனும் இங்கே விளக்கியதோடு அல்லாமல், அந்த இளையோரில் ஒரு பகுதியினராகிய தமிழர்கள் எவ்வாறு எப்படி பாதிப்புறுகிறார்கள் என்பதையும் தெள்ளத்தெளிவாக இங்கே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

ஒரு குடம் பாலில்ஒரு துளி விசம் சேர்ந்தால் அந்த பால் முழுவதுமே விசமாகிவிடும். ஆனால் தமிழ் இளைஞர் சமூகத்திலே இணைய ஊடகமானது ஒரு துளி விசத்தையா தந்திருக்கிறது. எத்தனையோ ஆயிரமாயிரம் இளைஞர்கள் சிந்தை மழுங்கி, கந்தையாகிச் சீரழிய பல்லாயிரம் வழிகளைக் காட்டி நிற்கிறது இந்த இணைய ஊடகம் என்பதை எமது அணியினர் திறமையுடனும் பொறுப்புணர்வுடனும் இங்கே பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

"எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்... " என்று ஒரு கருத்தை வைத்தார் அனீதா அவர்கள். ஆனால் பல் மொழித் தளங்களில் பயனுள்ள விடயங்களை அறிந்து கொண்டாலும்.. தாய்மொழி அறிவோ, ஆர்வமோ இன்றேல் அதனால் என்ன பயன்? ஒருவனால் அவனது உறவுகளுக்கோ, சமூகத்துக்கோ, இனத்துக்கோ எவ்வித பயன்பாடுமின்றேல் அவன் வாழ்வதால்தான் என்ன பயன்? இணைய ஊடகத்தால் அவன் பெற்ற அறிவானது, அவனுக்கு எந்தளவு பயனை அளிக்கப்போகிறது.. இவர்கள் பெற்ற அறிவானது இவர்களுக்கு ஒரு பதவியையோ அல்லது உத்தியோகத்தையோ பெற்றுத் தந்து, சீதனச் சந்தையிலே அவர்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பேற்படுத்தப் போகிறது. அவ்வளவுதான். ஆக, இதுவும் ஒரு தீமைக்குத்தானே வழிகோலுகிறது?!

"கனம் நடுவர் அவர்களே திரு.சோழியன் அவர்களின் வாதத்தின் மீதான என்னிடம் உள்ள கேள்விகள் இவை:

* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?

*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?

*கண்காணிப்பாளர்களற்ற ???????? சாட்ரூம் என்ற ஒன்று வந்தபின்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா?

*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?

நீங்கள் இணையதளங்களில் உள்ள பாதிப்பு என்று சொல்லவந்தது ...

அதன் மொத்த பகுதியின் சிறு அம்சம்! ஆகவே ஒன்றை வைத்து பலதை தீர்மானிப்பது எப்படி இருக்கிறதென்றால்...

காகங்கள் கறுப்பானவை-ஆகவே

கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!

என்பது போல் உள்ளது! " இது வர்ணன் அவர்களது பதிவு.

தாங்கள் கேட்ட எல்லாமே இருந்தன. ஆனால் மற்றவர்களது பார்வையின் முன்னால் இருந்தன. மற்றவர்களால் அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் முற்கொள்ளப்படும் அளவிற்கு இருந்தன. தடுக்க முடியாமல்போகும்போது, 'காவாலி... சண்டியன்.. ' என்ற சொற்பதங்களால் விமர்சிக்கப்பட்டு, தீமைக்குள்ளிருந்து வெளியே வரமுடியாதவனை மற்றவர்களுக்கு இனங்காட்டுவதற்குரிய வழிகள் நிறையவே இருந்தன. அதனால் சமூகமானது வேண்டாதனவற்றை விலத்தி நடக்க வழியிருந்தது. ஆனால் இணையத்தளங்களால் பாதிப்புறுபவர்களைப்பற்றிய விபரங்களும் தகவல்களும் நாலுசுவர்களுக்குள்ளேயே இரகசியமாக்கப்படுவதால்.. ககைளைக் காண்பதென்பது இலகுவான விடயமல்லவே. இப்படியான களைகளால் விளையும் விபரீதம்.. நிகழ்ந்து முடிந்த பின்னால், அதிலிருந்து மீள்வதென்பதும் சுலபமானதல்லவே!!

* இணையத்தளங்களால் இளைஞர்கள் ஒருவித போதை நிலையை அடைகிறார்கள். அதாவது அடிமை நிலையை அடைகிறார்கள். குறிப்பிட்ட சில தளங்கள் இயங்காவிடில் அவர்கள் தவிப்பதை பலரும் அவதானிக்க முடியும்.

* இணையம் இளைஞர்களை ஒரே இடத்தில் நிலைநிறுத்தி சோம்பேறியாக்குகிறது.

* தணிக்கையற்று வக்கிரமான செய்திகளையும் வீடியோ படங்களையும் தருகிறது.

* இணைய ஊடகமானது தேடலற்ற தன்மையை உண்டாக்குகிறது.

* புதியதொரு கலாச்சார சூழலை உருவாக்குகிறது.

* நேரத்தை வீணாக்குகிறது.

* உடலியல் உளவில் சமூகத் தாக்கங்கள் ( பூனைக்குட்டி அவர்களது விரிவான விளக்கங்கள்)

* சுதந்திரம் என்ற பதத்திற்கே பல தவறான அர்த்தங்கள் திட்டமிட்டவாறு இணைய ஊடகங்கள் மூலமாக விதைக்கப்படுதல்

இவ்வாறு பல்வேறு தீமைகளை எமது அணியினர் மிகவும் விளக்கமாக முன்வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் யாபேருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்து, உற்சாகமாக எதிர் கருத்துகளை வைத்து எமது அணியினர் பல உண்மைகளை வெளிக்கொணர வகைசெய்த மாற்று அணியினருக்கும் வாழ்த்து கூறி விடைபெறுகிறேன். நன்றி.

(தாமதத்திற்கு மன்னிக்கவும். இணைய ஊடகம்தான் சீரழிக்கிறதென்றால்.. வருத்தமும் சீரழிக்கப் போகிறேன்னு என்னுடன் சண்டை பிடிக்கிறது. அதனால் தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.)

Share this post


Link to post
Share on other sites

மதிப்புக்குரிய நடுவர்களுக்கும், உற்சாகமாகவும் - உறுதியாகவும் எமதணியின் நிலைப்பாட்டை இடித்துரைத்த எனதணித் தோழர்களுக்கும், எதிரணியின் குரலாய் ஒலித்த சோழியான் அண்ணாவுக்கும், இணையம் இளையோரை சீரழிக்கிறது என்று ஒப்பாரி வைத்து ஓய்ந்த எதிரணியினருக்கும், நமது கருத்துமோதல்களை களையாமல் படித்துக்கொண்டிருக்கும் யாழ்களப் பாவனையாளர்களுக்கும் மறுபடியும் எனதணி சார்பில் அன்பும் பண்பும் கலந்த வணக்கங்கள்.

எனதணி சார்பில் எமது கருத்துக்களை எல்லாம் தொகுத்து எதிரணியினருக்கு கடைசி வாய்ப்பாக மறுபடியும் இங்கே தொகுத்தளிக்க முனைகிறேன்.

மொழி

இணையத்தால் மொழி சீரழிகிறது என்கிற வாதத்தை முன்வைத்திருந்த எதிரணியினருக்கு - மொழியின் வளர்ச்சிக்கு இணையத்தின் ஊடாக இளையோரின் பங்கு எப்படியானது என்று எமது அணி ஆணித்தரமாகக் கூறியது:

உலகளாவிய வலைப்பின்னலால் உருவானது இணையம் என்கிற ஊடகம். அந்த வகையில் உலக மொழிகளின் உறவாடல்களும், வளங்களைப் பகிர்தலும் அதனூடே நிகழ்கின்றன. இணையம் ஊடாக சாத்தியப்பட்டுள்ள உலகளாவிய தொடர்பாடல்களும், கருத்துப் பகிர்வுகளும், எண்ண வெளிப்பாடுகளும் ஒரு மொழியின் வளத்தை மெருகேற்றுகின்றன. அந்த வகையில் பாவனையாளர்களின் - குறிப்பாக இளைஞர்களின் எழுத்தாளுமை அல்லது மொழியாளுமை விரிவடைகிறது. இதனடிப்படையில் பார்ப்போமாயின் - இளையோரால் மொழியும், மொழியால் இளையோரும் - ஒரு சுற்று வட்டத்தில் பயனடைந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை எமது அணியினர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்கள்.

இன்னும் சிலபத்து ஆண்டுகளில் அழிந்து போய்விடக்கூடும் என்று கருதப்பட்டுக்கொண்டிருக்கி

Share this post


Link to post
Share on other sites

இறுதியாக - உறுதியாக - எமது கருத்து

:: இணையமானது இளையோர்க்கு பல நன்மைகளை அளிக்கிற ஒரு ஊடகம். அதன் "ஊடாக" நிகழ்த்தப்படக்கூடிய சில தீமைகளைக் காரணம் காட்டி நன்மையடைவதை தடுத்தல் மாபெரும் தவறாகும்.

:: தீயவற்றை தவிர்த்துவிட்டு நல்லவற்றை எடுங்கள் - அன்னப் பறவை போன்று. உங்கள் வாழ்வு சிறக்கவேண்டுமென்றால் உங்களுக்கு எது தேவையானது என்பதை நீங்கள் தானே தீர்மானிக்க வேண்டும்.

:: இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.

இணைய ஊடகம் உலகத்தை ஆளும்.

:: பொருளாதாரம் -மருத்துவம் - இலக்கியம் - பன்னாட்டுத்தொடர்பு - கலை - தொழில்நுட்பம் - பத்திரிகைத்துறை - அரசியல் - ஆன்மீகம் - புவியியல் - உயிரியல் - தாவரவியல் - விண்ணியல் விநோதங்கள் - இசை - கற்கைநெறி - கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் - திரைத்துறை - வரலாறு - இயற்கை பற்றிய ஆய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இணையம் நன்மையளிக்கிற ஊடகமாக திகழ்வதை எவ்வளவுதான் நீங்கள் மறைத்தாலும், மறுத்தாலும் அதுதான் உண்மை.

:: முள்ளு குத்துமென பயந்தால் அழகு ரோஜாவை பறித்து காதலிக்கு கொடுக்க முடியுமா?

பாம்பு கொத்துமென பயந்தால் வயலில் இறங்க முடியுமா? முள்ளுக் குத்துமென்று பயந்தால் முத்தெடுக்க முடியுமா? நன்மைகளை அடையும் போது சில தீமைகளையும், தடைகளையும் எதிர்நோக்கவேண்டியிருக்கும

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்.

பட்டிமன்றம்.. ஆமை வேகத்தில் முடிவைத்தொட்டிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இழப்பின் மத்தியிலும் தன் கடமையை சரிவரவே செய்து முடித்த நடுவர் ஆசிரியருக்கும், பல இடையூறுகளுக்கு மத்தியிலும்.. இரு அணிகளுக்கும் ஒரு பாலமாய் நின்று பட்டி மன்றத்தை வழிநடத்தி முடித்திருக்கும் இரசிகைக்கும், இரு அணிகளையும் வழி நடத்திய அணித்தலைவர்களிற்கும், அசராது கருத்துக்களை வைத்த இரு அணி உறுப்பினர்களுக்கும்... பாராட்டுக்களும் நன்றிகளும்.

ரசிகை அந்தரப்படுகிறாரே என்ன வரப்போகிறது என நினைத்து ஆசிரியருக்கு உதவியாக இருக்கிறேன் என்று சாதாரணமாய் கூறிவிட்டேன். ஆசிரியர் பிரிவுத்துயரில் தற்காலிகமாக பிரிந்திருந்த போது. நான் தனித்து விடப்பட்டேன். வருவதை எதிர்கொள்வதற்கு நான் தயாராகி இருந்த போதும். சிறிது பதட்டம். வாதாட வந்திருக்கிறவர்கள் எல்லாரும் பெரியவர்கள். நானோ சிறியவள் இருந்தாலும் நான் வைத்த கருத்துக்களையும்

பொறுத்துக்கொண்டீர்கள் நன்றி.

இந்தப் பட்டிமன்றமானது ஓர் ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் என்ற எண்ணமே அன்றி போட்டியாக யாரும் கருதியிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. சிறப்பான கருத்துக்களை சிறப்பாக வைத்துச்சென்றீர்கள். இனி கருத்திற்குள் செல்வோம்;

எங்கள் பட்டிமன்ற தலைப்பு.. "புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" என்பதுவே... ஒவ்வொரு அணியின் கருத்துக்களையும் பார்க்கும் போது.. தங்கள் தரப்பு விவாதத்தை ஆணித்தரமாக அடித்துக்கூறியிருக்கிறார்க

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this