Jump to content

பயணம் .....................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய இந்த பயணம் உண்மையில் மகிழ்ச்சியானது அல்ல பேசியதெல்லாம் வெறும் இழப்புக்கள் பற்றியதே .அதிலிருந்து அடுத்தது என்னவென்பதும்தான். மற்றும்படி மணியனின் வாசிங்டன் திருமணம் போல் சுவாரசியமாக என்னால் எழுத முடியாது யதார்த்தத்தினை மட்டுமே எனது எழுத்து நடையில் எழுதத் தெரியும். ஆனால் எமக்கென ஒரு நாடு கிடைத்திருந்தால் எனது 20 வருடகால அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்து அதற்கான குறிப்புக்களையும் சேர்த்து வைத்திருந்தேன்.அப்படி எழுதியிருந்தால் மேலும் பல தகவல்கள் வெளிவந்திருக்கும் ஆனால் என்னடைய சேகரிப்பு குறிப்பக்கள் அனைத்தையும் நான் அழித்து இரண்டு வருடங்களாகிறது. மிகுதி ஞாபகங்களும் என்னுடனேயே அழிந்து போகட்டும். :(

இதைத்தான் அண்டு தொடக்கம் எங்கடை இனம் செய்துகொண்டு வருது!

உள்ளதை வெளியிலை சொல்லாமல் அடக்கி அமுக்கி வாசிக்கிறது .........வெளியிலை இருக்கிற சனம் ஒண்டும் தெரியாமல் அல்லோகலப்பட்டு அலைஞ்சு அவதிப்பட்டு திண்டாட வேண்டியதுதான்.

இதெல்லாம் எங்களுக்கு புதுசில்லை......

திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி நாயனார் எண்டு கொஞ்சப்பேர் பேய்க்காட்ட வெளிக்கிட்டு... அது இப்பவும் தொடர்கதையாய் போகுது.......அங்கை சிங்களவன் யாழ்ப்பாணத்தை சிங்களமயமாக்க முதல் ஆராவது.....அடுத்த கட்டத்தை அறுத்துறுத்து சொல்லொங்கோப்பா?

Link to comment
Share on other sites

  • Replies 283
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோ என்னுடைய இந்த பயணம் உண்மையில் மகிழ்ச்சியானது அல்ல பேசியதெல்லாம் வெறும் இழப்புக்கள் பற்றியதே .அதிலிருந்து அடுத்தது என்னவென்பதும்தான். மற்றும்படி மணியனின் வாசிங்டன் திருமணம் போல் சுவாரசியமாக என்னால் எழுத முடியாது யதார்த்தத்தினை மட்டுமே எனது எழுத்து நடையில் எழுதத் தெரியும். ஆனால் எமக்கென ஒரு நாடு கிடைத்திருந்தால் எனது 20 வருடகால அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்து அதற்கான குறிப்புக்களையும் சேர்த்து வைத்திருந்தேன்.அப்படி எழுதியிருந்தால் மேலும் பல தகவல்கள் வெளிவந்திருக்கும் ஆனால் என்னடைய சேகரிப்பு குறிப்பக்கள் அனைத்தையும் நான் அழித்து இரண்டு வருடங்களாகிறது. மிகுதி ஞாபகங்களும் என்னுடனேயே அழிந்து போகட்டும்.

சாத்திரியார்,உங்கள் எழுத்து நடையோடும், அனுபவங்களோடும் ஒப்பிடும் போது, நான் இன்னும் சிறு குழந்தை!

கு.சா சொல்வது போல இது எங்கள் இனத்தின் சாபக்கேடு! இறந்த உடல்களைத் தாழிகளில் போட்டுத் தாட்டுவைத்தனர் எங்கள் மூதாதையர்! இதற்கான ஆதாரங்கள் இன்றும் 'சாட்டியிலும்', வன்னியிலும் உள்ளன.ஆயினும் வட இந்தியக் கலாச்சார ஊடுருவல் இதை அழித்து விட்டது.எங்கள் உடல்களை எரித்து விடுவதால், எங்கள் மூதாதைகளின் பாரம்பரியங்களும், நினைவுகளும் அதனுடன் சேர்ந்தே எரிந்து விடுகின்றது.

புத்தனின் பல்லும்,தலைமயிருமே சிங்களத்தின் கொள்கைகளை இன்னும் வகுக்கின்றன.அவரது அறிவுறுத்தல்கள் காற்றில் பறக்க விடப்பட்டமை, வேறொரு கதை!

அவுஸ்திரேலியாவின் ஐரோப்பிய சரித்திரம் இருநூறு வருடங்கள் மட்டுமே!

அவர்கள் ஒரு தடியை நட்டு, அது கப்டின் குக் வந்திறங்கிய இடம் என்று அதற்கு ஒரு 'புனிதத்துவத்தை' உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

எங்கள் வரலாறுகள் குமரிக் கண்டத்தின் கடல் கோளுடன், அழிந்து விடவில்லை. உங்களைப் போன்றவர் எழுத்துக்களும்,நினைவுகளும் கொஞ்சமாவது எமது இளசுகளின் மனதில் படிந்து எமது வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி நிற்கும்! வேதங்கள் 'கேள்வி' வழியாகத் தான் வளர்ந்தன. அதே போல் எங்கள் பழைய நினைவுகள் எந்தக் காரணம் கொண்டும் அழிக்கப் படக் கூடாது!

நல்லதோ, கெட்டதோ, அழிவோ அல்லது ஆக்கமோ, அவை பாதுகாக்கப் பட வேண்டும்!

அழிவே புதிய யுகப் பிறப்பின் ஆரம்பம்! உங்கள் குறிப்புக்களை, இனியாவது அழிக்காதீர்கள்!

இது ஒரு அன்பான வேண்டுகோள் மட்டுமே!!!

Link to comment
Share on other sites

மறுநாள் மனிதம் அமைப்பின் இயக்குனர் அக்கினி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க வருவதாக கூறியிருந்தேன்.அவரின் அலுவலகம் ஜெமினிகாலனியில் இருந்தது.காலை ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தபடி அண்ணா மேம்பாலம் பக்கத்திலை ஜெமினி காலனி போங்க என்றேன்.ஆட்டோ அண்ணாசாலையல் புகுந்து மேம்பாலம் நோக்கி போய்க்கொண்டிருந்தது ஆட்டேவில் வெளியே பார்த்துக்கொண்டே போனேன்.முகத்திலடித்த அண்ணாசாலைக்காற்று ஆயிரமாயிரம் பழைய நினைவலைகளை மனதில் துண்டுக்காட்சிகளாய் மாற்றி மாற்றி போட்டுக்கொண்டே போனது.அண்ணாசாலையின் இரு மருங்குமே 5 ருபாய்க்கு பாட்டெழுதுவதற்காக சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பசொத்துக்களாகவே மாறியிருந்தது.ஆட்டோ மேம்பாலத்தின் கீழே திரும்பி ஜெமினிகாலனி முன்னால் நின்றது.இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும் இந்தியாவிலேயே எல்லா மானிலங்களையும்விட தமிழ்நாட்டில்தான் ஆட்டோவிற்கு அதிகளவு பணம் வாங்குகிறார்கள்.யாரும் மீற்றர் போடுவதில்லை.குறைந்த சவாரிக்கட்டணம் 50 ருபாய்.பணத்தை ஆட்டோவிற்கு கொடுத்துவிட்டு அக்கினி அவர்களின் அலுவலகத்திற்குள் நுளைந்தேன்.

அக்கினி சுப்பிரமணியம் மனிதம் என்கிற அமைப்பினை நடாத்துபவர்இவர்கள் மனிதவுரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக குரல்கொடுத்து வருபவர்கள்;.உலகம் முழுதும் தமிழர்கள் எங்கெங்கு பாதிக்கப்படுகிறார்களோ அவர்களிற்கான முதற்குரலாக மனிதம் அமைப்பின் குரல் ஒலிக்கும்.ஈழத்தமிழர் விகராத்திலும் இவர்களின் குரல் ஒலிப்பதுடன் பல உதவி நடவடிக்கைககளையும் செய்து வருகின்றனர்.அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களிற்கான உதவிகள் செய்ததற்காக சந்தேகத்தின் அடிப்படையில் அக்கினி அவர்களும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலை இலங்கையரசு திருப்பியனுப்பியிருந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே.அந்தக்கப்பல் தனது இயங்கும் காலம் முடிவடைந்து பாகங்களாக உடைக்கும் நிலையிருந்த ஒரு கப்பல் அது தனது இறுதி பயணமாகத்தான் வன்னி நோக்கி சென்றிருந்தது.

அது திருப்பி அனுப்பப்பட்டதும்.வன்னி மிசன் நடவடிக்கையை செய்தவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் கப்பலில் உள்ள பொருட்களை இந்தியாவில் எங்காவது இறக்கிவிட்டு கல்கத்தாவில் உள்ள ஒரு கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு அதனை அனுப்பத் தீர்மானித்திருந்தனர். அந்தத் தகவல் கிடைத்ததையிட்டே சாந்தி ரமேஸ் அவர்கள் பேரீச்சம் பழத்திற்கு போகும் வணங்காமண் கப்பல் என்றொரு கட்டுரையை எழுதி இங்கு யாழ் இணையத்திலும் வெளியிலும் பலர் அவரை திட்டித்தீர்திருந்தனர். http://www.yarl.com/forum3/index.php?showtopic=60292&st=0&p=523337&hl=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D&fromsearch=1&#entry523337 கப்பல் கல்கத்தா நோக்கி செல்ல புறப்பட்டபொழுதுதான் தமிழ்நாட்டிலிருந்த ஈழ ஆதரவு அமைப்புக்கள் மற்றும் மனிதம் அமைப்பு என்பன இந்தக்கப்பல் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள். வணங்காமண் கப்பலை இலங்கையரசு திருப்பிய செய்தியறிந்ததும் கருணாநிதியும் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்.வணங்காமண் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு கிடைக்கவேண்டும் எனபதே அந்த அறிக்கையாகும்.அந்த அறிக்கையை உடனடியாக சாதகமாக பயன்படுத்த நினைத்தது மனிதம் அமைப்பு.கருணாநிதியை உடனடியாகவே சந்தித்த அக்கினிஅவர்கள் கப்பலை சென்னை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு அனுமதி வாங்கியதோடு வன்னி மிசன் குழுவுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி வேலைகள் வேகமாக நடந்தது.கப்பலில் உள்ள பொருட்கள் இறக்கப்பட்டு வேறொரு கப்பலில் மாற்றி இந்திய செஞ்சிலுவைச்சங்கத்தினரின் உதவியுடன்.பொருட்கள் இலங்கைக்கு அனுப்பட்டது.இந்த நடவடிக்கைக்குப்பின்னால் மனிதம் அமைப்பு பெருமளவு உழைத்திருந்தது.

ஆனால் வணங்காமண் கப்பலில் சென்ற நிவாரண உதவிப்பொருட்கள் வினியோகிக்கப்படாமல் இன்னமும் திருகோணமலையில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச்சங்க கட்டிடத்தில் கிடந்து வீணாய் போய்கொண்டிருக்கின்றது என்பது வேறுகதை. அங்கு வேலைசெய்யும் ஒரு தமிழர் அந்த பொருட்கள் வீணாய் போவதுபற்றி கவலைப்பட்டு அதனை ஏதாவது வழிபண்ணி மக்களிற்கு கிடைக்கச்செய்யமுடியாதா என பல மின்னஞ்சல்கள் எனக்கு அனுப்பியிருந்தார். எனது சக்திக்கு மீறி எல்லா பிரச்சைனைகளிற்குள்ளும் தலையை விட முடியாது என்பதால் மின்னஞ்சலை படித்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டேன்.

மே 18 முள்ளிவாய்க்கால் யுத்தத்தம் முடிவடைந்த பின்னர் வடகிழக்கு மனிதவுரிமை மையத்தின் (North East Secretariat On Human Rights - NESOHR)உறுப்பினர்கள் இருவர் காயமடைந்த நிலையில் சில வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவிகளுடன். வெளிநாட்டிற்கு தப்பிவந்திருந்தனர். இந்த அமைப்பின் இயக்குனராக இருந்தவர்தான் கிளி பாதர் என்றழைக்கப்பட்ட மரியாம்பிள்ளை கருணாரத்தினம் அடிகளார்.ஏப்பிரல் 20 2008 அன்று தேவாலயமொன்றில் ஞாயிறு பூசையினை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது மல்லாவி வவுனிக்குளம் வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியால் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டடார்.இதே அமைப்பில் இயங்கிய பிறவுண் அடிகளாரும் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார். இவர்கள் இலங்கையில் நடந்த தமிழர்கள் மீதானஅனைத்து படுகொலைகளையும் முறைப்படி நேரடி சாட்சியங்களோடு உலக மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் சுமார் 5 வருடங்களாக உழைத்து ஆவணத்தை முழுமை செய்திருந்தனர்.அவற்றி பல அவ்வப்பொழுது வெளியே ஊடகங்களிற்கும் மனிதவுரிமை அமைப்புகளிற்கும் அனுப்பியிருந்தனர்.ஆனால் அதனை முழுமையான ஒரு ஆவணமாக்கி வெளியிடுவதற்கிடையில் வன்னியில் யுத்தம் மேசமடைந்துவிட்டிருந்தது.அந்த யுத்தத்தில் ர் தப்பிவந்த நபர் முதலில் அக்கினி சுப்பிரமணியத்துடன் தொடர்புகொண்டுவிட்டு பின்னர் என்னிடமும் தொடர்பு கொண்டிருந்தார்.

தப்பிவந்த நபர் எனக்கு ஏற்கனவே தெரிந்தவர்தான். தங்களது 5 வருட உழைப்பு வீண்போய்விடக்கூடாது அதே நேரம் இலங்கையில் நடந்த தமிழர் மீதான படுகொலைகள் பற்றிய முறையான பதியப்பட்ட ஆவணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவே எப்பாடு பட்டாவது இதனை வெளியிடுங்கள். ஆவணங்கள் அனைத்தும் பகுதி பகுதிகளாக ஒரு மின்னஞ்சலில் சேகரித்து வைத்திருக்கிறேன் அதனை எம்மிடம் தருவதாக கூறியிருந்தார்.அவர் சேகரித்த ஆவணத்தின் சில பகுதிகள் வன்னியில் செல்லடியில் அவரது கணணியுடன் அழிந்து போய்விட்டிருந்தது.ஆனால் 90 வீதமான பகுதிகள் எமக்கு கிடைத்தது. அவற்றை படித்தமே எப்பாடு பட்டாவது அதுவெளியில் வரவேண்டுமென தீர்மானித்தோம். அதனை வெளியிடுவதற்கான பொருளாதார மற்றும் விளம்பர உதவிகள் பலரிடம் கேட்டிருந்தோம்.இங்கு யாழிலும் அதன் விபரங்களை நான் ஆரம்பத்தில் இணைத்திருந்தேன்.யாருடைய உதவிகளும் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாது ஆவணங்கள் எமது கைகளிற்கு கிடைத்திருக்கின்றது என்பதனை அறிந்த புலம்பெயர் தேசியத்தூண்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலுள்ள புலிகள் அமைப்பின் ஏக பிரதிநிதிகளும் அதனை எப்படியாவது பறித்தெடுத்துவிடலாமென பல பாடுபட்டனர்.அதுபற்றி நடந்த விவாதங்கள் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அனைத்தும் சேகரித்தே வைத்துள்ளேன். ஆவணத்தை பறிக்க முடியாமல் போன கோபத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஜரோப்பாவில் உள்ள தேசியத்து பூசாரிகள் ஒரு கேவலமான வேலையையும் செய்தனர். அதாவது தப்பிவந்த வடகிழக்கு மனிதஉரிமை மையத்தின் அந்த உறுப்பினர் ஒரு ஆயுதப்பயிற்சி பெற்று சண்டையில் நின்ற ஒரு புலிஉறுப்பினர் எனவே அவர் ஆபத்தானவர் என இங்குள்ள அகதிகள் விவகாரங்களிற்கு பொறுப்பான அமைச்சகத்திற்கும் காவல்துறைக்கும் கடிதம் அனுப்பிவிட்டிருந்தனர். அதன் பின்னர் பல விசாரணைகளின் பின்னர் அவரிற்கு அகதி அந்தஸ்த்தும் கிடைத்து இப்பொழுது அவர் தானுண்டு தன்வேலையுண்டு என்று வாழ்கிறார்.

.இப்படியாக இரண்டரை மாதஉழைப்பின் பின்னர் புத்தக வேலைகளை அக்கினி சுப்பிரமணியம் சாந்திரமேசுடன் நானும் சேர்ந்து இரண்டரை மாதகாலமாக இரவுபகலாக வேலை செய்தோம்.ஆவணம் பலரால் பலவித ஒழுத்துருக்களில் கணணிதட்டச்சு செய்யபடடிருந்தது. அத்தனையையும் நானும் சாந்தி ரமேசும் பகிர்ந்தெடுத்து யுனிகோட்டில் தட்டச்சு செய்தோம். பின்னர் நாங்கள் அக்கினி அவர்களுடன் சேர்ந்து மூவருமாக சரி பிழைகளை திருத்தினோம்.இப்படியாக இரண்டரை மாதஉழைப்பின் பின்னர் மனிதப் படுகொலைகள் 1956 2008 என்கிற புத்தகம் மனிதவுரிமை வாதியன மருத்துவர் எலின்சாண்டாவின் முன்னுரையுடன் 360 பக்கங்கள் தாங்கி மனிதம் வெளியீடாக ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்தது. புத்தகங்கள் உலகிலுள்ள அனைத்து மனிதவுரிமை மையங்கள் மனிதவுரிமை வாதிகள் அரசியல் வாதிகள் ஆகியோரிற்கும் தொடர்ச்சியாக எம்மால் அனுப்பிவைக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றது. இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு எம்முடன் இணைந்து ஜெர்மனியை சேர்ந்த தேவிகா கங்காதரனும் பொருளாதார ரீதியான சத்தியசீலன் அண்ணா(முன்னைநாள் தமிழர் மாணவர் பேரவை நிறுவனர்)ஆகியேரது உதவிகள் குறிப்பிடத்தக்கவை. ஆரம்பத்தில் பல மொழிகளிலும் இதனை வெளியிடத் தீர்மானித்திருந்தாலும் பொருளாதார நிலை காரணமாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கள் வெளிவராமல் நிற்கின்றது வேதனையான விடயம்.அது மட்டுமல்லாது புலம்பெயர் தேசமெங்கும் தமிழ்தேசியம் பேசுவோரும் தேசிய ஊடகங்கள் என்போரும் எவருமே இந்தப் புத்தக்தினை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடவேண்டும்.இன்று இலங்கையரசின் மீது விசாரணை வேண்டும் என கோரும் தமிழ் தேசிய வாதிகள் கையில் உள்ள வெண்ணையை விட்டு காடுமேடெல்லாம் அலைகின்ற கதையாய் வெறும் அறிக்கைகள் மட்டும் வருகின்றது எம்மவரது செயற்படுகள் இப்படியிருக்க விகடன் நிறுவனம் 2010ம் ஆண்டிற்கான சிறந்த வெளியீடு என்கிற விடுதினை இந்தப் புத்தகத்திற்கு தந்து கொளரவித்திருக்கின்றது. அதே நேரம் ஈழத்து எழுத்தளரும் முன்னைய நாள் புலிகள் அமைப்பு போராளியுமான சோபா சக்தி என்பவர் மட்டும் இந்தப் புத்தகம் பற்றிய அவசியத்தையும் தன்னுடைய பார்வையையும் எழுதியுள்ளார். சோபா சக்திக்திக்கும் எனக்குமான முரண்பாடுகள் நீண்டது என்றாலும் இப்படியானதொரு பொது விடயத்தில் அவரை பாராட்டத்தான் வேண்டும். தொடரும்.......

இந்தப் புத்தகம் பற்றிய மேலதிக விபரங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65653

http://www.manitham.net/index.php?option=com_content&view=article&id=190:-1956-2008-ponguthamilcom&catid=36:artrep&Itemid=55'>http://www.manitham.net/index.php?option=com_content&view=article&id=190:-1956-2008-ponguthamilcom&catid=36:artrep&Itemid=55

http://www.manitham.net/

http://www.tamilwin.org/view.php?2a36QVl4b43P98g04bcuIPZde2eD1GG2cd2EipD2e0dTZLuSce03g2FP2cd4Vjo6a0

http://www.puthinappalakai.com/view.php?20091227100245

சோபா சக்தியின் பார்வை

http://www.shobasakthi.com/shobasakthi/?p=634

DSCF0268.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவணத்தை பறிக்க முடியாமல் போன கோபத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ஜரோப்பாவில் உள்ள தேசியத்து பூசாரிகள் ஒரு கேவலமான வேலையையும் செய்தனர். அதாவது தப்பிவந்த வடகிழக்கு மனிதஉரிமை மையத்தின் அந்த உறுப்பினர் ஒரு ஆயுதப்பயிற்சி பெற்று சண்டையில் நின்ற ஒரு புலிஉறுப்பினர் எனவே அவர் ஆபத்தானவர் என இங்குள்ள அகதிகள் விவகாரங்களிற்கு பொறுப்பான அமைச்சகத்திற்கும் காவல்துறைக்கும் கடிதம் அனுப்பிவிட்டிருந்தனர்.

பழிவாங்குதல் என்ற ஒரு நர மாமிச உணர்வு, எங்கள் இனத்திலும், இந்தியாவிலும் மிகவும் அதிகம்!

தமிழ்ப் படங்களின் அடிப்படைக் கதைகளே இந்தப் பழிவாங்கும் உணர்வை அடிப்படையாகக் கொண்டதே!

அநேகமான எங்கள் உணர்வுகள் ஒரு வட்டத்தை விட்டு வெளியே விரியாமல் இருக்க இந்தக் 'கறை' காவுவதும் ஒரு காரணம்!

உங்கள் கதையைப் படிக்கும் போது, எம்மையறியாமலே ஒரு 'தன்னிரக்கம்' எம்மை ஆட்கொள்ளுகின்றது!

தொடருங்கள் சாத்திரி!

Link to comment
Share on other sites

...இங்கு யாழிலும் அதன் விபரங்களை நான் ஆரம்பத்தில் இணைத்திருந்தேன்.யாருடைய உதவிகளும் கிடைக்கவில்லை. ...

சாத்திரியார் :)

நீங்கள் உதவி கேட்ட அந்தக்காலத்தில் அக்னியுடன் தொடர்புகொண்டு பண உதவி செய்ய முன்வந்தேன். அவர் தந்த இந்திய வங்கிக் கணக்கிற்கு இணயத்தினூடாக‌ பணம் அனுப்பும் போது ஏதோ சிக்கல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக அவருடன் தொடர்பு கொள்ள அவரும் அதைத் தீர்க்க முற்பட்டார். இருந்தும் அது சரிவராமல் போக அவரைத் தொடர்ந்து தொல்லை தர மனம் வரவில்லை. அதோடு விட்டுவிட்டேன். ( இதை அவர் பிழையாக எடுத்துக் கொண்டாரோ என்று வருந்தியிருக்கிறேன்.)

இதே போல் இரண்டு வருடங்களிற்கு முன் Poet (ஜெயபாலன்) இற்கும் அவரின் பாடல் முயற்சி ஒன்றிற்கு ஆதரவாக அவர் தந்த பிழையான வங்கிக் கணக்கிலக்கத்திற்கு பணம் அனுப்பி அது எங்கெங்கோ எல்லாம் போய் வெட்டு மேல் வெட்டு வாங்கி மீண்டும் திரும்பிய போது உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆகி இருந்தது.

ஒரு யோசனை சொல்வேன் தயவுசெய்து பிழையாக எடுக்க வேண்டாம். உதவி கோரும் போது ( பிறருக்காகத்தான் கேட்கிறீர்கள்...இருந்தும்... ) அந்த உதவி வரும் வழியில் இடஞ்சல்கள் இருக்காவண்ணம் ஒரு நல்ல வழியை உதவுபவர்களுக்கு காட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

சாத்திரியார் :)

நீங்கள் உதவி கேட்ட அந்தக்காலத்தில் அக்னியுடன் தொடர்புகொண்டு பண உதவி செய்ய முன்வந்தேன். அவர் தந்த இந்திய வங்கிக் கணக்கிற்கு இணயத்தினூடாக‌ பணம் அனுப்பும் போது ஏதோ சிக்கல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக அவருடன் தொடர்பு கொள்ள அவரும் அதைத் தீர்க்க முற்பட்டார். இருந்தும் அது சரிவராமல் போக அவரைத் தொடர்ந்து தொல்லை தர மனம் வரவில்லை. அதோடு விட்டுவிட்டேன். ( இதை அவர் பிழையாக எடுத்துக் கொண்டாரோ என்று வருந்தியிருக்கிறேன்.)

இதே போல் இரண்டு வருடங்களிற்கு முன் Poet (ஜெயபாலன்) இற்கும் அவரின் பாடல் முயற்சி ஒன்றிற்கு ஆதரவாக அவர் தந்த பிழையான வங்கிக் கணக்கிலக்கத்திற்கு பணம் அனுப்பி அது எங்கெங்கோ எல்லாம் போய் வெட்டு மேல் வெட்டு வாங்கி மீண்டும் திரும்பிய போது உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆகி இருந்தது.

ஒரு யோசனை சொல்வேன் தயவுசெய்து பிழையாக எடுக்க வேண்டாம். உதவி கோரும் போது ( பிறருக்காகத்தான் கேட்கிறீர்கள்...இருந்தும்... ) அந்த உதவி வரும் வழியில் இடஞ்சல்கள் இருக்காவண்ணம் ஒரு நல்ல வழியை உதவுபவர்களுக்கு காட்ட வேண்டும்.

நீங்கள் உதவ முயற்சித்தற்கு நன்றிகள். புத்தகத்தை முடிந்தளவு இரண்டு மொழிகளில் கொண்டுவந்தாயிற்று இனி அது பற்றிய எந்த முயற்சிகளும் செய்வதாயில்லை.காரணம் மிக மோசமான கசப்பான அனுபவங்கள்தான்.யாராவது ஆர்வமுள்ளவர்கள் முன்வந்தால் மற்றைய மொழிபெயர்ப்புக்களை தரலாம் .அவர்கள் அதனை புத்தகமாக அடித்து வெளியிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

நான் இங்கு எதுவும் எழுதவில்லை

காரணம் தாங்கள் அரசியலையும் பகிடியையும் சேர்த்து எழுதுவதால்.....?

இங்கு அது இரு வகையாகவும் பதிலளிக்கப்படுகிறது.

ஆனால் என்னால் எமது அரசியலை அந்த பார்வையில் பார்க்க முடியவில்லை. பார்க்கவும் கூடாது என்று நினைக்கின்றேன்.

குறையாயின் மன்னிக்கவும்.

நன்றி.

Link to comment
Share on other sites

சாத்திரி

நான் இங்கு எதுவும் எழுதவில்லை

காரணம் தாங்கள் அரசியலையும் பகிடியையும் சேர்த்து எழுதுவதால்.....?

இங்கு அது இரு வகையாகவும் பதிலளிக்கப்படுகிறது.

ஆனால் என்னால் எமது அரசியலை அந்த பார்வையில் பார்க்க முடியவில்லை. பார்க்கவும் கூடாது என்று நினைக்கின்றேன்.

குறையாயின் மன்னிக்கவும்.

நன்றி.

விசுகு எனக்கு தற்சமயம் சிரத்தையான அரசியல் எழுதவும் விருப்பமில்லை எனவேதான் நகைச்சுவையாக கலந்து எழுதுகிறேன். ஆனால் அரசியல் என்பது ஒரு மனிதனின் பிறப்பிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறதே. அதே நேரம் இங்கும் சரி வெளியிலும் சரி யாரையும் நோகடிப்பதும் என் நோக்கமல். அது எனது நோக்கமாகவிருந்தால் அனைத்தையும் விலாவாரியாக முன்பு போல் எழுதியிருப்பேன்.யாரை நொந்து என்ன பயன் எனவே யாராவது மனம் நொந்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனிவரும் காலங்களில் தீவிரஎழுத்துக்களை தவிர்த்து பயணத்தை தொடர்கிறேன்.நன்றி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி

எல்லாம் முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.

வேண்டுமானால் எமக்காக போராடிய எல்லோரும் முடிந்திருக்கலாம். ஆனால் எமது இலட்சியம் கனவு கனவுக்கான காரணங்கள்.............. அப்படியேதான் இருக்கின்றன. அவை இருக்கும்வரை நாம்போராடியே ஆகவேண்டும். மீண்டும் இவை வீறுகொண்டெழ அல்லது வேறுவழிகளில் எழ சில நாட்களாகலாம். வருடங்களும் ஆகலாம். தற்போதைக்கு அந்த நம்பிக்கைகளை சிதைக்காமல் பாதுகாப்பதே முக்கியமானது. நன்றி

Link to comment
Share on other sites

அக்கினி அவர்களது அலுவலகத்தில் பல்வேறு விடயங்களையும் கதைத்துவிட்டு மதியம் எங்காவது உணவகத்தில் சாப்பிடலாமென முடிவெடுத்தோம்.இன்று வேறு ஏதாவது முக்கிய நிகழ்வுகள் இருக்கிறதா என என்னிடம் அக்கினி கேட்டார்.இல்லையண்ணா சென்னை வந்ததிலிருந்தே சீரியசான ஆக்ளையே சந்தித்து கதைத்தது ஒரே ரென்சனாகவே போய்க்கொண்டிக்கு எனவே இண்டைக்கு பிறீயாக இருக்கலாமெண்டு முடிவெடுத்திருக்கிறன். இண்டைக்கு ஒரு படம் பாக்கலாமெண்டு முடிவெடுத்திருக்கிறன் ஏனெண்டால் சென்னை வந்தவர்கள் படம் பார்க்காமல் போவது பாரிஸ் வந்தவர்கள் ஈபிள்கோபுரத்தை பார்க்காமல் போனது மாதிரி முட்டாள்தனம் எனவே சாப்பிட்டுவிட்டு படத்திற்கு போகலாமென்றேன். நானும் அகன்ற திரையில் படம் பார்த்து பல வருடங்களாகியிருந்தது. 3 வருடங்களிற்கு முன்னர் லண்டன் போயிருந்தபொழுது நண்பர்களான பார்த்தி மற்றும் பாரதியுடன் (ஒரு பேப்பர்) கமலின் தசாவதாரம் படம் தான் திரையில் பார்த்தது.

அதுமட்டுமில்லாமல் படங்களின் மீதான எனது ஆர்வமும் குறைவு பலர் பார்த்து இது நல்லபடம் என்று சொன்னால்தான் கணணியில் தேடிப்பார்ப்பதுண்டு. படம் பார்க்கலாம் என்றதும் ஆடுகளம் நன்றாய் ஓடிக்கொண்டிருக்கிறது ஆடுகளம் பார்க்கலாமா என்றார். ஜயோ அண்ணை ஆடுகளம் நான் கணணியிலை வந்த கள்ள சிடியிலை பாத்திட்டன் என்றேன் நல்லகாலம் ஜெயபாலன் பக்கதில் இருக்கவில்லை. வேறு சில படங்களின் பெயர்களை சொன்னார் பயணம் படமும் அப்பொழுதான் வெளியாகிருந்தது பயணம் படம் என்றதும் எங்கோ செய்திகளில் பிரகாஸ்ராஜ் நடித்திருப்பதாக படித்த ஞாபகம்.தமிழ் படங்களில் வித்தியாசமான வில்லன் ஹீரோ பாத்திரங்களில் சத்தியராஜ் ரகுவரனிற்கு அடுத்ததாக எனக்கு பிடித்தவர் பிரகாஸ்ராஜ். எனவே பயணம் வந்த இடத்தில் இன்னொரு பயணத்தையும் பாத்துவிட்டுபோலாமென முடிவெடுத்து பயணம் படத்திற்கு டிக்கற் எடுக்கச் சொன்னேன். பயணம் படத்திற்கு சத்யம் தியேட்டரில் இணையம் ஊடாக அனுமதி சீட்டை (ரிக்கற்) பதிவு செய்துவிட்டு மதிய சாப்பாட்டிற்காக ஆந்திரா ஸ்பெசல் உணவகம் ஒன்றினுள் நுளைந்தோம்.அக்கினி அவர்களே ஓடர் கொடுத்தார் ஆடு கோழி மீன் காய் கறியென வந்துகொண்டிருந்தது.எல்லாத்தையும் உள்ளே இறக்கிவிட்டு கடைசியாய் தயிருடன் சோற்றை இறக்க முடியாமால் பேய்விட்டது. பிசைந்துவிட்டு வைத்துவிட்டேன். அதற்கு பிறகும் வாழைப்பழம் இனிப்பு என்று வந்துகொண்டிருந்தது.சாப்பிடும் பொழுது மீன் குழம்பு ஒன்று புளிமாங்காய் போட்டு செய்திருந்தார்கள் அதை சுவைத்துவிட்டுஅண்ணா இது நல்லாயிருக்கே என்றதும் ..இதுதான் விரால் மீன் இது இலங்கை இந்திய கடல்லையில்தான் இது அதிகமாக அகப்படும் சுவையை போலவே விலையும் அதிகம் இதற்காகத்தான் எங்கள் மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று சூடுபட்டு இறந்து போகிறார்கள் என்றார்.

சாப்பிட்டு விட்டு கொஞ்சம் உலாவிவிட்டு சத்யம் தியேட்டரிற்குள் நுளைந்தோம். தியேட்டர் ஜரோப்பிய தரத்திற்கு இணையாக நன்றாக திருத்தியிருந்தார்கள். பெரியளவு கூட்டம் இருக்கவில்லை ஆனால் படம் ஆரம்பிப்பதற்கு விளக்குகளை அணைத்து சிறிது நேரத்திலேயே எங்கேயோ காத்திருந்த இளையவர் கூட்டம் மட மட வென நுளைந்தார்கள்.பெரும்பாலவர்கள் கல்லூரி மாணவர்கள் புத்தகப்பைகளுடன் வந்திருந்தார்.அப்பொழுதான் எனக்கு புரிந்தது. அன்று பாசாலைக்காலங்களில் களவாக படம் பாரக்கப் போவதற்காக நாங்கள் பாவித்த அதே ரெக்னிக்தான் இவர்களும் பாவிக்கிறார்கள்.விளக்குகள் அணைந்ததும் இருட்டில் ஆளாளிற்கு அடையாளம் தெரியாமல் புகுந்து கொள்கிறார்கள்.ஆனால் இன்று இவர்களோ கைத்தொலைபேசி வெளிச்சத்தில் இடங்களை தேடிப்பிடித்து அமர்கிறார்கள்.அன்று நாங்கள் தடக்கி விழுந்து யாருடையாவது காலை மிதித்து திட்டுவாங்கித்தான் இடத்தில் அமரவேண்டியிருந்தது.அதுமட்டுமில்லை இன்றைய இளைஞர்கள் சோடிகளாக பெண் நண்பிகளுடன் வந்திருந்தார்கள்.

அன்று நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இருக்கவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்டுகொண்டிருக்கும் பொழுதே படம் ஆரம்பமானது. படத்திற்கு கதையை எழுதியவர் கதைக்காக பெரிதாய் கஸ்ரப்பட்டிருக்கமாட்டார். இரண்டுவரியில் கதை என்பது போல இவர் இந்தியாவில் நடந்த இரண்டு சம்பவங்களை கலந்து கதையாக்கிருந்தார். ஒன்று தலிபான்களால் இந்திய விமானம் கடத்தப்பட்டது.இரண்டாவது சம்பவம் பாகிஸ்தான் சிறுமி ஒருத்திக்கு இதயஅறுவை சிகிச்சை இந்தியாவில் நடந்தது. இரண்டு சம்பவங்களையும் இணைத்து கடத்தப்பட்ட விமானத்தில் அறுவைச்சிகிச்சை முடிந்து பாகிஸ்தான் திரும்பும் சிறுமியும் தாயுடன் இருக்கிறாள். உண்மைச்சம்பவத்தில் இந்திய அரசு தலிபான்களின் கட்டளைக்கு அடிபணிந்து அவர்கள் கேட்ட நபர்களை விடுதலை செய்து பயணிகளை மீட்டது. ஆனால் இது சினிமாவாயிற்றே .அப்டியெல்லாம் காட்ட முடியுமா?? அதனால் ஒரு கொமாண்டோ தாக்குதல் மூலம் பயணிகளை மீட்கிறார்கள். இதுதான் கதை .ஆனால் படத்தில் உள்ள நகைச்சுவை காட்சிகளிற்காக படத்தை பார்க்கலாம்.அடுத்ததாக இந்தப் படத்தில் பாடல்கள் எதுவும் இல்லாதது பெரும் ஆறுதல். இல்லாட்டி அங்கிருந்து சுவிற்சலாந்திற்கோஅல்லது நியூசிலாந்திற்கோ போய் வந்திருக்கவேண்டும். படம் முடிந்ததும் அக்கினி அவர்கள் அன்றிரவு உணவிற்கு தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருந்தார்.மதியம் சாப்பிட்து செமித்தால் கட்டாயம் வருவதாக கூறிவிட்டு எனது அறைக்கு திரும்பினேன். மாலை சில நண்பர்களை ஒரு உணவு விடுதியில் சந்தித்து உரையாடினேன் நான் சென்னையில் நின்றிருந்த நேரம்தான் பார்வதி அம்மாவின் சாம்பல்( அஸ்தி )மெரினா கடற்கரையில் கரைத்த நிகழ்வு நடந்திருந்தது. ஏன் அந்த நிகழ்விற்கு வரவில்லையென பலரும் கேட்டனர்.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிலரை சந்திப்பதற்கு எனக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை அதனை தவிர்ப்பதற்காகவே நான் அங்கு வரவில்லையென அவர்களிற்கு தெளிவு படுத்தினேன்.இரவு அக்கினி அவர்களின் வீட்டில் அன்பான உபசரிப்போடு இரவு உணவை முடித்துவிட்டு விடைபெற்று வெளியே வந்தபொழுது என்னுடன் கூடவந்திருந்த நண்பன் என்iனைப்பார்த்து எங்போறது என்றான்.வேறையெங்கே அறைக்குத்தான் என்றேன். சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அறைக்கா அப்ப ஒண்டுமே இல்லையா என்றான். சாப்பிட்டாச்சே சாப்பிட்டு எப்பிடி தண்ணியடிக்கிறது என்றேன் அட இதெல்லாம் பெரிய விசயமா போத்திக்கிட்டு படுத்தாலென்ன படுத்திட்டு போர்த்தினாலென்ன இல்லாட்டி தூக்கம் வராது வாடா என்றான். டாஸ்மாஸ்க்கை மன்னிக்கவும் தமிழ்நாட்டில் நின்றபடி அதுவும் கலைஞர் ஆட்சியில் டாஸ்மாக் என்றது அழைக்கலாமா எனவே மது அருந்துகூடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்......தொடரும்..

DSCF0179.jpg

Link to comment
Share on other sites

அதே நேரம் ஜ.நா சபையால் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கை வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம் (இப்பொழு வெளியாகிவிட்டது) அப்படி அறிக்கை வெளியானாலும் அது எவ்வளவு தூரம் போர்க்குற்ற விசாரணையாக மாறும் என்பது சந்தேகமானதொன்றாகவே இருந்தது. அப்படி வெளியாகும் அறிக்கையை பாவித்து அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை செய்யலாம் என்பது பற்றியும் விவாதித்தோம். இறுதியாக எம்மால் மனிதம் வெளியீடாக வெளியிடப்பட்ட இலங்கை மனிதப் படுகொலைகள் 1956 ... 2008 என்கிற ஆவணப் புத்தகம் ஒன்றினையும் மகேந்திரன் அவர்களிற்கு கொடுத்தேன்.

ஜயா சாத்திரியார் இதுமாதிரி வேண்டாத வேலைகளில் இனியும் காலத்தை கடத்தாமல் பேசாமல் நீங்களும் ஊருக்கு போய் உறவுகளை அல்லது உங்களிற்கு காணி சொத்து ஏதாவது இருக்கும் அவைகளை போய் பாரக்கிற வழியை பாருங்கள். போக தயக்கமெண்டால் நான் இந்த சமர்லீவிற்கு திரும்ப போக இருக்கிறேன் பேசாமல் என்னுடன் வாருங்கள் மகிந்தாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு ஜாலியாய் ஊருக்கு போய் விட்டு வரலாம்.ஏனென்றார் இங்கு வீரம் பேசும் பலர் இதைத்தான் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ஜயா சாத்திரியார் இதுமாதிரி வேண்டாத வேலைகளில் இனியும் காலத்தை கடத்தாமல் பேசாமல் நீங்களும் ஊருக்கு போய் உறவுகளை அல்லது உங்களிற்கு காணி சொத்து ஏதாவது இருக்கும் அவைகளை போய் பாரக்கிற வழியை பாருங்கள். போக தயக்கமெண்டால் நான் இந்த சமர்லீவிற்கு திரும்ப போக இருக்கிறேன் பேசாமல் என்னுடன் வாருங்கள் மகிந்தாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு ஜாலியாய் ஊருக்கு போய் விட்டு வரலாம்.ஏனென்றார் இங்கு வீரம் பேசும் பலர் இதைத்தான் செய்கிறார்கள்.

உங்கள் ஆலோசனைகளிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்.ஜாலியாய் ஊர் சுத்த ஆசைதான் ம்;;;;......................... :lol: :lol:

Link to comment
Share on other sites

எல்லாம் சரி, பொம்யையில இறக்கிவிட்ட மனிசின்ர சிலவனைக் காணெல்ல, மனிசி காசையெல்லாம் கரியாக்க போகுது...

Link to comment
Share on other sites

எல்லாம் சரி, பொம்யையில இறக்கிவிட்ட மனிசின்ர சிலவனைக் காணெல்ல, மனிசி காசையெல்லாம் கரியாக்க போகுது...

நீங்கள் இபப்டி சொல்லுறீங்கள் ஆனா மனுசிக்காரியை வேண்டும் என்றே கோவில் திருவிழாவில் தொலைத்தது போல் மனைவியின் தம்பியாரிடம் ஒப்படைத்து விட்டு தான் சென்னையில் சில **** இடங்களைஆரச்சி நடந்ததாகவும் கதை அடிபடுது..........

DSCF0179.jpg

இது மனதில் வேற ஆசை இருக்கு என்பதை வெளீக்காட்டுகிறது.

பிரேமானந்தா

நித்தியானந்தா

சாந்திரியானந்தா அல்லது ஸ்யாமனந்தா..............

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜெயலலிதா ஆட்சியமைக்கப்போகிறார் என்பது மகிழ்ச்சியான செய்திதான் ஆனாலும் அவர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதும் கொஞ்சம் யேசிக்கவைக்கும் விடயங்கள்.ஏனெனில் கூட்டணி கட்சிகளின் ஆலேசனை இல்லாமல் அவர் தனியானவே முடிவுகளை எடுக்கலாம்.காங்கிரசுடனும் இணையலாம். அல்லது ஜெயலலிதாவை உள்ளே இழுப்பதற்கோ அடக்கி வைப்பதற்கோ அவரது பழைய வழக்குகள் எதையாவது நோண்டலாம்.அரசியலில் எதுவும் எந்தநேரமும் நடக்கும். ஆனாலும் வென்றவர்களிற்கு எனது வாழ்த்துக்களை மின்னஞ்சல்களின் அனுப்பிவைத்தேன். அதே நேரம் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய காலங்களில் நான் முன்னர் குறிப்பிட்டது போலவே தி.மு.க.கூட்டணியா அ.தி.மு.க கூட்டணியா வெல்லும் என்பதே பெரும் குழப்பமாகவே இருந்தது. கருத்துக்கணிப்புக்கள் பெரும்பாலும் தி.மு.க கூட்டணியே வருமென தெரிவித்திருந்தது. தி.மு.க விடம் முக்கியமாக ஊடக பலம் பண பலம் இருந்தது. அதே நேரம் தேர்தல் கமிசன் தனது சட்டங்களை கடுமையாக கடைப்பிடித்திருந்தது பணம் கொடுத்தல் இலவச பொருட்கள் கொடுத்தல்.இரவிரவாக பிரச்சாரம் செய்தல்.கட்டவுட் வைப்பது போஸ்ரர் அடித்தல் தடை.சாராயக் கடைகளை பூட்டுதல் என்று பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டுருந்தனர்.பெரிய வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை.

இதுவும் தி.மு.க வின் தகிடுத்தனங்களை கட்டுப்படுத்தியிருந்ததுஆனால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.காரணம் தமிழின உணர்வாளர்களின் பிரச்சாரங்கள் என்பதையும் தாண்டி தமிழ்நாடு காங்கிரஸ்காரரின் உட்பூசல் போட்டி அங்கு பகிரங்கமாக நடந்தது. தங்களிற்குள்ளேயே அடித்துக்கொண்டு சட்டையை கிழித்துக்கொண்டார்கள். பல இடங்களில் தங்கபாலுவின் கொடும்பாவியை காங்கிரசாரே கொழுத்தினார்கள். போஸ்ரர் உண்ணாவிரதம்.கொடும்பாவி எரிப்பு வீதி மறியல் என காங்கிரசிற்கு எதிராக காங்கிரஸ் காரரே போராடிக்கொண்டிருந்தனர். காங்கிரசிற்கு எதிரா பிரச்சாரம் செய்துகொண்டிருந்த ஒரு பொறியிலாளர் ராகேஸ் என்னை சந்திக்க வந்தவிடத்தில் சொன்ன வசனம் அண்ணே காங்கிரசிற்கு எதிராக நாங்கள் பெரிதாய் ஒண்ணும் பண்ணத் தேவையில்லை அவங்களே அடிபட்டு தோத்து போயிடுவாங்கண்ணே என்றார்..இனி தொடரிற்கு போகலாம்.

அன்று சென்னையிலிருந்து பெங்களுர் புறப்படவேண்டும். இரயிலில் ரிக்கற் எடுத்திருந்தேன் நள்றிரவு இரயிலேறினால் காலை பெங்களுரை அடைந்து விடலாம்.பெங்களுரில் நிற்கும்பொழுது ரங்கநாத்தையும் சந்திக்கலாமென நினைத்து சுசியை ரங்கநாத்திற்கு போனடித்துப்பாரக்கச்சொல்லி சென்னேன்.ரங்கநாத் இந்தப்பெயரும் எம்மவர்களிற்கு பழக்கமானதொரு பெயர்தான்.காரணம் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜன் குழுவினர்(ஒற்றைக்கண் சிவராசன்)இவரது வீட்டில்தான் தங்கியிருந்தபொழுது போலிசால் சுற்றி வழைக்கபட்டதில் தற்கொலை செய்துகொண்டனர். பின்னர் ரங்கநாத்தும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை பெற்று சிறையில் இருந்து வெளிவந்தவர். விசாரணை காலங்களின் பொழுது இவரிற்கு போலீஸ் முட்டிக்கு முட்டி தட்டி விழையாடியதில் மூட்டு வலிக்கு மூலிகை வைத்தியம் செய்வதற்காக கேரளாவிற்கு அடிக்கடி போய்வந்துகொண்டிருக்கிறார்.

நான் தொலைபேசியடித்த நேரமும் கேரளாவிற்கு போய்விட்டிருந்தார். இரண்டு வருடத்திற்கு முன்னர் ராஜீவ் கொலையில் காங்கிரஸ் காரர்களின் கை உள்ளது எனவே அவர்களை விசாரிக்கவேண்டும் என்று ஒரு பரபரப்பு அறிக்கையும் விட்டு இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அவருடன் கதைக்கும் பொழுது அடுத்த அறிக்கை எப்போவிடப்போறிங்க என்று கேட்டதோடு நான் கர்நாடகாவில் ஒரு வாரம் நிற்பேன் முடிந்தால் சந்திக்கலாமெ கூறி விடைபெற்றேன்.அன்றிரவு சுசி என்னை கொண்டுவந்து இரயிலேற்றி விட்டிருந்தார். இங்கு சுசீந்திரன் பற்றி இன்னொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். அது என்னவெனில் இராஜீவ் காந்தி கொலையை பின்னணியாக கொண்ட கதையை வைத்து வேறு மொழியில் வெளியான படத்தை தமிழில் குப்பி என தயாரித்து வெளியிட்டிருந்தார். அதனை தயாரித்திருந்தவரும் இவரே. எனவே அவரிடம் குப்பி தயாரிச்சீங்க அடுத்தது என்னபடம் தயாரிக்கப்போறீங் என்று கேட்டதற்கு நகைச்சுவையாய் அடுத்ததாய் குப்பி கடிக்கலாமெண்டிருக்கிறேன் என்றார். ஏனென்றால் குப்பி படம் அவரிற்கு கொடுத்திருந்த அனுபவங்கள் அப்படியானது. எம்மவர்கள் வெளிநாடுகளில் சாதாரண இந்திய மசாலா படங்களை வெற்றிபெற வைத்து கோடி கோடியாய் தயாரிப்பாளர் சம்பதிக்க வழி காட்டுவார்கள் ஆனால் குப்பி எல்லாளன் போன்ற படங்கள் வியாபார ரீதியில் தோல்வியில் முடிந்திருந்தது.ஆகவே புலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் தாயகம் தேசியம் பற்றிய உணர்வு அதிகம் என்கிற போலி மாயையும் இங்கு உடைபட்டுப் போகின்றது.

இங்கு இந்திய இரயில்வேயை பற்றியும் எழுதவேண்டும். இந்திய இரயில்களில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை ஏசி இரயில்கள் கூட அழுக்கானதாகவே இருக்கிறது கழிப்பறையை பற்றி சொல்லவே வேண்டாம். உள்ளை போனாலே சத்தி(வாந்தி)தான் வரும்.கழிப்பறை விடயத்தில் இந்தியாவில் மனில வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒரே ஒற்றுமை பொதுக்கழிப்பறை எல்லாமே மோசமானதாகவே இருந்தது. சுத்தம் செய்வதே கிடையாது என நினைக்கிறேன். இந்திய இரயில் பயணத்தில் எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமும் ஒன்று கிடைத்தது அது பெல்கம்மிலிருந்து பூனேக்கு போகவேண்டியிருந்ததால்.

இரவுப்பயணம் கையை காலை நீட்டி சுகமாக படுத்தபடி செல்லலாமென நினைத்து இரயிலில் படுக்கை வண்டி பதியலாமென பெல்கம் இரயில் நிலையத்திற்கு சென்றேன். கர்நாடகாவில் இரயில் உடனடி பயணங்களிற்கான பதிவுகள் செய்யமுடியாது. ஒரு மாதத்திற்கு முன்னரேயே பதிவு செய்து வைக்கவேண்டும் பின்னர் உள்ள இடங்கள் அனைத்தையும் அதற்கென உள்ள முகவர்கள். முகவர்கள் என்று சொல்ல முடியாது தரகர்கள் பதிவுசெய்து வைத்துவிடுவார்கள் கடைசி நேரத்தில் அவசரமாக வரும் பயணிகள் றிக்கற் கேட்டு இல்லையென திரும்பும் பொழுது இரயில் நிலையத்திற்கு வெளியே நின்றபடியே அதிக விலைக்கு இடங்களை விற்பதுதான் இவர்களது வேலை. சினிமா கள்ள றிக்கற் விற்பதுபோன்றதுதான் இதுவும். இதில் இரயில்வே நிருவாகத்திற்கும்.இவர்களிற்கும் மட்டுமல்லாது இரயில்வே போலிஸ் என தொடர்புகள் உண்டு.நான் ரிக்கற் வாங்க இரயில் நிலையம் சென்றபொழுதே உனக்கு உள்ளை றிக்கற் கிடைக்காது வெளியிலை வாங்கலாமென்றான். எனக்கு இலஞ்சம் கொடுப்பதில் விருப்பம் இல்லை எனவே எதற்கும் முயற்சி பண்ணி பாக்கலாமென நினைத்து போய் ரிக்கற் வாங்குமிடத்தில் பூனேக்கு படுக்கை இடங்கள் பதியவேண்டும் என்றேன். எப்பொழுது என்றார் நாளையிரவு என்றேன். நாளையிரவா இடமில்லை என்றார்.

படுக்கை வசதியில்லாவிட்டால் பரவாயில்லை சாதாரண இருக்கை இருக்கா என்றேன். வெளியூர்காரனா?? பதிவுகள்குறைந்தது ஒரு மாதத்திற்கு முதல் செய்யவேண்டும் வேண்டுமென்றால் றிக்கற் இடம் கிடைத்தால் இருந்து போ அல்லது நின்றபடிபோ என்று அலட்சியமாக பதில் சொன்லி விட்டு என்னை தள்ளி நிக்க சொல்லிவிட்டு அடுத்தவருடன் கதைக்க ஆரம்பித்து விட்டார். பத்துமணித்தியால பயணத்தை நின்றபடி போகச்சொல்கிறானே என்று கேபம் வந்தது ஆனாலும் போன இடத்தில் எங்கள் கோபம் ஒன்றும் ஆகாது என்று எனக்கு தெரியும்.. முதலேயே சொன்னன் கேட்டியா வா போய் ஏஜெண்டை பிடிக்கலாமென்றவன் அங்கேயே நின்ற ஒரு தரகரை பிடித்து இரண்டு றிக்கற் வேண்டுமென்றான்.பெவளியே நில்லங்கள் என்று பணத்துடன் போனவன் 5 நிமிடத்தில் இரண்டு றிக்கற்றுடன் வந்தான் அவனது இலஞ்சம் ஒரு இடத்திற்கு 150 ருபாய்கள். றிக்கற் வாங்கியாகி விட்டது மறுநாள் பூனேக்கு புறப்படதயாராகி இரயிலில் எமது பெட்டியை தேடிப்பிடித்து ஏறியாகி விட்டது.அந்தப் பெட்டியில் எமது இலக்க இடத்தை தேடிப்போனால் அங்கு எமது படுக்கை இடத்தில் இருவர் இருந்தார்கள் நான் அவர்களிடம் எனது றிக்கற்ரை காட்டி இது எனது இடம் என்றேன் அதற்கு அவனும் தனது றிக்கற்றை தூக்கி காட்டி இது எனது இடம் மூன்று மாதத்திற்கு முதலேயே பதிந்து வைத்திருந்தேன் என்றான். அதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது இது எனது இடம் எனறவும் அவன் ஏதோ கிந்தியில் எகிறினான். பதிலிற்கு எனது மனைவியும் கிந்தியில் எகிறவே உடைனையே எங்களை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது கொஞ்சம் சாந்தமான அந்த கிந்திவாலா சரி ரி.ரி.ஆர் வரட்டும் என்றான் அதுவரை படுக்கை இருக்கையாக இருக்கட்டும் அதிலேயே எம்மையும் இருக்கச்சொன்னான். எம்மை சுற்றி நின்ற கூட்டத்திற்கும் கிளைமாக்ஸ் இல்லாமல் படம் முடிந்தது போல ஏமாற்றத்தில் அவரவர் இடங்களிற்கு போய்விட்டார்கள். பிறகுதான் தெரிந்தது அதே பிரச்சனை எமக்கு மட்டுமல் பலரிற்கு ஒரே இடம் இரண்டுதடைவை விற்கப்பட்டிருந்தது. பலரும் ரி.ரி.ஆரின் வரவை எதிர்பார்த்து அவர் வருவாரா??என காத்திருந்தனர்.

என்ரை மனிசியோ றிக்கற் வித்த புரோக்கரை ஆசை தீர தமிழில் திட்டிக்கொண்டேவந்தாள். எமக்கருகில் வந்தவர் மனிசியிடம் என்னம்மா பிரச்னை என்றார். வந்தவர் தமிழர் மதுரைக்கார். அவரிற்கு நான் தமிழில் பிரச்னையை சொன்னேன் உடனையே என்னிடம் யவ்னாவா??என்றார்.ஓம் என்றேன் பாத்தீங்களா பேச்சை வைச்சே பிடிச்சிட்டமில்லை என்று பெருமையாக சொன்னவரிடம் நீங்க மதுரை பக்கமா என்றேன். சிரித்தார் நாங்களும் பேச்சை வைச்சே புடிச்சிடுவம்மில்லை..

றிக்கற்ரை பரிசோதித்தவர் கொஞ்சம் பொறுங்க பதிவு செய்த யாராவதுவராமல் இருந்தால் அந்த இடத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று விட்டு போனவர்.ஒரு மணித்தியாலத்தல் திரும்பி வந்தார்.இன்னொரு பெட்டியில் ஒரே ஒரு இடம் மேலே இருக்கின்றது படுக்க முடியாது இருந்து போகலாம் என்றார். இருந்து போய் சேர்ந்தாலே போதும் என்று அந்த இடத்தில் தாவி ஏறி அமர்ந்து பயணத்தை தொடர்ந்தோம். இடமே கிடைக்காதவர்கள் கிடைத்த இடங்களில் நடைபாதையில் என சரிந்து படுத்துக்கொண்டார்கள். அதிகாலை 5 மணியளவில் பூனேயை வந்தடைந்தோம் இரயில் கதவைத்திற்நததும் மூத்திர நாற்றம் முகத்திலறைந்து வரவேற்றது. பூனே வரவேற்கின்றது (பூனே சுவாகதே ) என்று கிந்தியில் அறிவிப்புவேறு.. தொடரும்........

images-2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது எதோ ஒரு கவலை எனக்கு ஏற்படுகின்றது.

பெங்களுர் தமிழர்களின் பிரதேசம் இந்தியா சுதந்திரமடைந்து இந்தியாவை மொழிவாரி மானிலங்களாக பிரித்தபொழுது பெங்களுர் கன்னட மானிலத்திற்குள் சேர்க்கப்பட்டு விட்டது.பெங்களுரில் இன்னமும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.டோனியலும் தமிழன்தான். திருப்பதி ஏழுமலையான்கூட தமிழர்தான் இப்பொழுது கன்னடம் பேசுகிறார்.

தெழுங்கு பேசுகிறார். ஆந்திர மானிலத்துக்கு திருப்பதியான் சொந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனவே அவரிடம் குப்பி தயாரிச்சீங்க அடுத்தது என்னபடம் தயாரிக்கப்போறீங் என்று கேட்டதற்கு நகைச்சுவையாய் அடுத்ததாய் குப்பி கடிக்கலாமெண்டிருக்கிறேன் என்றார்.

தமிழ் மசாலா படங்கள் எங்கள் டேஸ்டையே மாத்தி விட்டது சாத்திரியார்!

உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

விடை பெற முன் ஒரு கேள்வி மட்டும்!

உங்கள் மனைவியும் ஹிந்தியில் எகிறுவாவா?

Link to comment
Share on other sites

விடை பெற முன் ஒரு கேள்வி மட்டும்!

உங்கள் மனைவியும் ஹிந்தியில் எகிறுவாவா?

புங்கையூரான் எகிறுவாவா என்று கேட்டீங்கள். சாத்திரியின் மனைவி கிந்தி , தெலுங்கு , மலையாளம் ,தமிழ் ,ஆங்கிலம் ,பிரெஞ்ச் என அசத்துவா.

Link to comment
Share on other sites

அன்றிரவு சுசி என்னை கொண்டுவந்து இரயிலேற்றி விட்டிருந்தார். இங்கு சுசீந்திரன் பற்றி இன்னொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். அது என்னவெனில் இராஜீவ் காந்தி கொலையை பின்னணியாக கொண்ட கதையை வைத்து வேறு மொழியில் வெளியான படத்தை தமிழில் குப்பி என தயாரித்து வெளியிட்டிருந்தார். அதனை தயாரித்திருந்தவரும் இவரே. எனவே அவரிடம் குப்பி தயாரிச்சீங்க அடுத்தது என்னபடம் தயாரிக்கப்போறீங் என்று கேட்டதற்கு நகைச்சுவையாய் அடுத்ததாய் குப்பி கடிக்கலாமெண்டிருக்கிறேன் என்றார். ஏனென்றால் குப்பி படம் அவரிற்கு கொடுத்திருந்த அனுபவங்கள் அப்படியானது.

images-2.jpg

எங்கள் இனத்துக்காக தனது வாழ்வை இழந்தவர்களுள் சுசியும் ஒருவர். எங்கள் மாவீரர்கள் போராளிகளுக்கு நிகரான பங்களிப்பை ஈழவிடுதலைக்காகச் செய்த அற்புதமானவர்.

83இலிருந்து தனது சிறைவாழ்வு 2009மே வரையுமான அவரது உழைப்பு என பலவிடயங்களை அவ்வப்போது பகிரும் போது இத்தகைய ஒரு மனிதனுக்கு நாங்கள் கைமாறாக எதையும் செய்யவில்லையென்ற வேதனையே மிஞ்சும்.

இன்றும் நாட்டைவிட்டு வெளியேறிய போராளிகளுக்கும் மக்களுக்கும் தனது சக்திக்கு மேற்பட்டு சேவையாற்றும் சுசியை என்றென்றும் நன்றியுடன் நினைவு கொள்வோம்.

Link to comment
Share on other sites

வாசிக்கும் போது எதோ ஒரு கவலை எனக்கு ஏற்படுகின்றது.

தெழுங்கு பேசுகிறார். ஆந்திர மானிலத்துக்கு திருப்பதியான் சொந்தம்.

நன்றிகள் கந்தப்பு :)

எனவே அவரிடம் குப்பி தயாரிச்சீங்க அடுத்தது என்னபடம் தயாரிக்கப்போறீங் என்று கேட்டதற்கு நகைச்சுவையாய் அடுத்ததாய் குப்பி கடிக்கலாமெண்டிருக்கிறேன் என்றார்.

தமிழ் மசாலா படங்கள் எங்கள் டேஸ்டையே மாத்தி விட்டது சாத்திரியார்!

உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

விடை பெற முன் ஒரு கேள்வி மட்டும்!

உங்கள் மனைவியும் ஹிந்தியில் எகிறுவாவா?

மனிசி கிந்தியிலை இலக்கணத்தோடை எகிறும் எனக்கும் கொஞ்சம் வரும் ஆனால் பிழையாய் கதைத்து எதுக்கு அடிவாங்குவான் எண்டு கம்மெண்டு இருந்திடுவன். :lol: :lol:

எனவே அவரிடம் குப்பி தயாரிச்சீங்க அடுத்தது என்னபடம் தயாரிக்கப்போறீங் என்று கேட்டதற்கு நகைச்சுவையாய் அடுத்ததாய் குப்பி கடிக்கலாமெண்டிருக்கிறேன் என்றார்.

தமிழ் மசாலா படங்கள் எங்கள் டேஸ்டையே மாத்தி விட்டது சாத்திரியார்!

உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

விடை பெற முன் ஒரு கேள்வி மட்டும்!

உங்கள் மனைவியும் ஹிந்தியில் எகிறுவாவா?

மனிசி கிந்தியிலை இலக்கணத்தோடை எகிறும் எனக்கும் கொஞ்சம் வரும் ஆனால் பிழையாய் கதைத்து எதுக்கு அடிவாங்குவான் எண்டு கம்மெண்டு இருந்திடுவன். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அட சாஸ்த்ஸ் அண்ணா சூப்பர்...இப்ப தான் பாத்தன்...

உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை....

Link to comment
Share on other sites

சாத்திரியார் எப்போதும் உண்மையை தானே சொல்லுவார் எழுதுவார் படிக்கும் போது வேதனை தான் முந்திக்கொண்டு வருகிறது

அருமையாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்..........தொடருங்கள்!!!!!

Link to comment
Share on other sites

கடந்த பதிவில் பெங்களுரிற்கு புறப்பட்டநான் புனேயில் கொண்டுபோய் விட்டு விட்டேன். எனவே பழையபடி பெங்களுரிற்கே வருவோம். பெங்களுரை காலை இரயில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்தது அங்கு என்னுடைய நண்பர் எனக்காக காத்திருந்தார். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. சீருடையில் போலிஸ் வண்டியிலேயே என்னை அழைத்துப்போக வந்திருந்தார். அவர் தற்சமயம் காவல்துறையில் உயர்பதவியென்றில் இருப்பதால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புகருதி அவர் பெயரை இங்கு தவிர்த்து போலிஸ் காரர் என்றே எழுதுகிறேன். அவரது வாகனத்தில் ஏறும்போது "வேறு ஏதாவது வாகனம் கொண்டுவந்திருக்கக்கூடாதாய்யா?? என்னை அரஸ்ற்;பண்ணிக்கொண்டு போறமாதிரியே இருக்கு என்றேன் "அவரிடம்.போலிஸ் வண்டியில் பந்தாவா போறமே எண்டு நினைப்பீங்க எண்டு பாத்தால் இப்படி நினைக்கிறீங்களே.எப்பவுமே திருடனுகளுக்கு போலிசை பாத்தாலே அரஸ்ற்பண்ணிடுவாங்களோஎன்கிற பயம்தான் என்றபடியே சிரித்தார்.

இதைவிட வாயை வைச்சுக்கொண்டு சும்மாயிருந்திருக்கலாம்.

அவரிற்கு அன்று வேலைநாள் என்பதால் என்னை விவேவக் நகரில் இருக்கும் நண்பர் வீட்டில் இறக்கிவிடும்படி கூறியிருந்தேன் அவரிற்கு வேலை முடிந்ததும் மாலை பெங்களுர் மஜெஸ்ரிக் சிற்றியில் சந்திப்பதாக முடிவுசெய்திருந்தோம். விவேக்நகரில் உள்ள அரசகுடியிருப்பில் போலிஸ்வண்டி நுளைந்து நின்றது. அங்கிருந்த பலர் போலிஸ்வண்டி ஏன்இங்கு நிற்கிறது என்கிற கேள்விக்குறியுடன் எட்டி எட்டி பார்த்தனர். எனது போலிஸ் நண்பனிடம் மாலை சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டு நான் போக வேண்டிய மாடிக்குடியிருப்பை நோக்கி நடந்தேன்.பலரது கண்களும் என்னையே பார்த்படி இருந்தது.அந்தக் கண்களிற்கு சொந்தக்காரர்கள் சிலர் நானும் போலிஸ்காரனாயிருப்பனோ??என நினைத்திருக்கலாம்.அல்லது யாரே ஒரு திருடன் போலிஸ் கொண்டுபோய் விசாரித்துவிட்டு கொண்டுவந்து விட்டிருக்கிறான்கள் என்றும் நினைத்திருக்கலாம்.ஆனால் ஏரியாவிற்கு புதிசாயிருக்கிறானே யாராயிருக்கும் என்கிற கேள்வி அவர்களது பார்வையிலேயே தெரிந்தது. எனது நண்பன் ஒரு மாடிக்குடியிருப்பில் குடியிருக்கிறான் அவனும் மனைவியும் வேலைக்கு போகின்றவர்கள்.ஒரேயொரு மகள் பாடசாலைக்கு போகிறவள். எனவே வீட்டு திறப்பை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு போவதாகவும் அவர்களிடம் விபரம் சொல்லியிருப்பதாகவும் மத்தியானம் வந்துவிடுவதாகவும் முதலேயே தொ.பேசியில் சொல்லியிருந்தான். பெங்களுரில் பெரும்பாலானவர்கள்வெளிநாட்டைப்போலவே குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகிறார்கள்.

இல்லாவிட்டால் பெங்களுரின் வீட்டு விலைவாசியை சமாளிக்க முடியாது.அவன் சொன்னபடி அவனது பக்கத்து வீட்டு அழைப்பு மணியை அமத்தினேன்.கதைவைத்திறந்த அம்மணியிடம் நான் ஆங்கிலத்தில் பாக்கியாவின் நன்பண் வீட்டு சாவி வேண்டுமென்ற என்னை மேலும் கீழும் பார்த்தவர் தமிழில் பாரிசிலை இருந்து வந்தவங்களா என்றார் அவரது கேள்வி சந்தேகமாயிருந்தது.ஒரு நிமிசம் என்று உள்ளே போனவர் எனது நண்பனிற்கு போனடித்து கதைத்துவிட்டு என்னிடம் தொ.பேசியை நீட்டினார் நான் வாங்கி காதில் வைத்ததும் வந்துட்டியா சாவியை வாங்கி போய் வீட்டிலை றெஸ்ற் எடு கொஞ்ச நேரத்திலை வந்திடறேன் என்றான்.பின்னர் தொ.பே வாங்கி நான் சரியான ஆள்தானா என உறுதி செய்தபின்னர் சாவியை நீட்டியபடி சாறிங்க என்றார். றெம்ப ஊசாராய் இருக்கிறாங்க என்று நினைத்தேன். சிலவேளை எனது கோலத்தை பார்த்ததும் பாரிசில் இருந்து வந்தவர் போல இல்லாமல் சென்னை பாரிஸ் கோணரில் இருந்து வந்தவர்போல இருந்திருக்கும்.

வீட்டில் போய் கொஞ்சநேரம் நித்திரை கொண்டுவிட்டு மதியமளவில் வந்த நண்பனுடன் சேர்ந்து சாப்பிட்டு அவனுடன் அரட்டையடித்துவிட்டு மாலை 6 மணியளவில் மெஜிஸ்ரிக் சிற்றி போவதற்காக பஸ்சில் ஏறினேன்.பஸ் வாகன நெரிசல்களில் மணிக்கு 10கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருந்தது அது அன்றைய எமது சி.ரி.பி பஸ்சை நினைவிற்கு கொண்டுவந்தது. இந்தியாவிலேயே தரமான அரசு பஸ் என்று பார்த்தால் தமிழ்நாட்டிற்கு முதலிடம் கொடுக்கலாம் தரமானதாக இருந்தது.பஸ் மெஜிஸ்ரிக்கை அடைவதற்கு முன்னர் அந்த பேலிஸ்காரரைப்பற்றியும் கொஞ்சம் உங்களிற்கு சொல்லிவிடலாம்.இவரும் ஒரு தமிழ் உணர்வாளர்தான் 84 களில் புலிகளின் மூத்த தளபதிகளின் ஒருவரான புலேந்திரன் பெங்களுரில் சிலகாலம் தங்கியிருந்தார் அன்றைய காலகட்டத்தில் புலேந்திரனின் நெருங்கிய நண்பராக இருந்தவர். தொடர்ச்சியாக ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு உதவிகள் செய்துவந்தவர் ராஜீவ்காந்தி கொலையை அடுத்து ராஜன்(சிவராசன்) குழுவினர் பெங்களுரில் வந்து தங்கியிருந்தனர். ஆனால் ஏற்கனவே பெங்களுரில் ஒரு வீட்டில் புலிகள் அமைப்பினை சேர்ந்த காயடைந்து சிகிச்சை பெறுபவர்கள் வேறு வேலைகளிற்காக தங்கியிருந்தவர்கள் என ஏழுபேர் கொண்ட குழுவென்று தங்கியிருந்தனர்.இவர்களிற்கு ராஜன் குழுவினர் பெங்களுர் வந்த விடயம் தெரிந்திருக்கவில்லை.

ராஜன் குழுவினர் போலிசாரால் சுற்றிவழைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஊடகங்கள் வாயிலாகவே இவர்களிற்கு தெரியவந்தது. அந்தச் சம்பவத்தையடுத்து பெங்களுரில் தமிழர்களிற்கெதிரான கலவரம் ஒன்றும் வெடித்தது தமிழர்கள் எல்லாமே புலிகள் என்கிற தோரணையில் தங்கள் தலைவனை கொன்றவர்கள் என கன்னடர்கள் குறிப்பாக காங்கிரசார் தமிழர்களை தாக்கத் தொடங்கினார்கள் சிவாஜி நகரில் இருந்த பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். எங்கும் போலிஸ் காவல் தேடுதல் என நடந்து அங்கு தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் பலரும்கைது செய்யப்பட்னர். ஏழுபேர் பற்றிய விபரங்களை கிட்டு எனக்கு அறிவித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.அப்பொழுது அந்த பேலிஸ்கார நண்பருடன் நான் தொடர்பு கொண்டு அந்த ஏழுபேரையும் பாதுகாக்கும்படி கேட்டிருந்தேன். அவரும் அந்த ஏழு பேரையும் பத்திரமாக கர்நாடகத்தின் கிராமப்புறமான சிக்மங்களுர் பகுதியில் கொண்டுபோய் தங்கவைத்திருந்து நிலைமைகள் சீரானதும் அவர்கள் அங்கிருந்து வெளியேற உதவியிருந்தார். அவர்களில் சிலர் இலங்கைக்கும் மற்றையவர்கள் வெளிநாடுகளிற்கும் வந்துவிட்டார்கள்.இப்படி அவர் செய்த உதவிகள் பல.அந்த போலிஸ்காரரும் பல ஊராக வேலைபார்த்து இப்பொழுது மீண்டும் பெங்களுரிலேயே ஒரு அதிகாரியாகி வந்திருக்கிறார். இராஜீவ் காந்தி சம்பந்தமான விடயங்கள் சிலவற்றையும் எழுதலாமென நினைக்கிறேன்.இந்தக் கொலை பற்றி பல்லாயிரம் கட்டுரைகளும் பல புத்தகங்களும் வெளிவந்து விட்டன இன்னமும் வரலாம். சிலர் எழுதியவற்றை படித்தால் சிரிப்பு வரும். அந்தக் கொலை பற்றிய விசாரணைகளில் இருந்த ஒரு அதிகாரியும் ஒரு சிடி வெளியிட்டிருந்தார் பெயர் ஞாபகத்தில் இல்லை அதில் இராஜீவ் காந்தி கொலையை பொட்டம்மானும் பிரபாகரனும் யாழ்ப்பாணத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் திட்டமிட்டனர் என சொல்லிருந்தார். எனக்குத் தெரிந்து யாழ்ப்பாணத்தில் பனங்கூடலும் ஈச்சம் பத்தை அல்லது நாயுருவிப் பத்தையுமே உள்ளது. அடர்ந்காடு எங்கே இருக்கு என்று மண்டையை போட்டுடைத்தேன்.

இப்படி விறுவிறுப்பிற்காக பலரும் பலவிடையங்களை கற்பனைகளாக சேர்த்தே எழுதியிருந்தனர். ஆனால் விசாரணை அதிகாரிகளுள் ஒருவராக இருந்த ரகோத்தமன் எழுதிய புத்கத்தில் பலவிடயங்களை மிகைப்படுத்தல் இல்லாமல் எழுதியிருந்தாலும். டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலிற்கு உதவியவர்கள் பற்றிய விடயங்கள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை அது மட்டுமல்லாது இந்த திட்டத்தில் வேறு அமைப்புக்கள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் வேறு பெரும்புள்ளிகள் என்பவர்களின் தொடர்புகள் என்பன பற்றி பல பொதுவான சந்தேகங்களை தீர்க்காமல் தனியாக முழுக்க முழுக்க புலிகளின் சதித் திட்மே அதற்கு சிலர் உதவினார்கள் என முடித்திருக்கிறார்.ஆனால் ராஜீவ் காந்தியை கொல்லும் திட்டத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மூன்று மானிலங்களில் மூன்று குழுக்களாக திட்டமிடலை மேற்கொண்டனர். மூன்றில் எது மிக சாதகமாக அமைகிறதோ அதனை இறுதித் தெரிவாக்கலாமென புலிகளின் தலைமை முடிவெடுத்திருந்தது.டெல்லியில் ஒரு குழுவும் ஆந்திராவில் ஒரு குழுவும் தமிழ்நாட்டில் ஒரு குழுவும் இயங்கியது. டெல்லியில் இருந்த குழுவை வழிநடத்தியவர் சிறி என்பவர் இவர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்தவர் ஒரு சீக்கிய பெண்ணை மணமுடித்திருந்தார் இவரிற்கு டெல்லியில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் டெல்லியில் புலிகள் அமைப்புடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் வேற்று மொழிக்காரர்களும் இயங்கியதால் பொதுவாக ஆங்கிலம் நன்றாக கதைக்கத்தெரிந்த ஒருவர் புலிகள் அமைப்பிற்கு தேவையாக இருந்தது அதற்காக கனகரத்தினம் அவர்களை புலிகள் அமைப்பு டெல்லிக்கு அனுப்பிவைத்தது கனகரத்தினம் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாவார். அடுத்ததாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இயங்கிய குழுக்ளைபற்றி அடுத்த தொடரில் பார்ப்தோடு இந்திய இராணுவ வருகையுடன் சம்பந்தமேயில்லாத ஜெயலலிதாவின் பெயரையும் புலிகளின் கொலைப்பட்டியலில் இணைந்தது பற்றியும் எழுதுகிறேன்.

நான் மஜெஸ்ரிக் சிற்றி வந்திறங்கிவிட்டேன்.போலிஸ்காரருடன் மஜெஸ்ரிக் பகுதியில் இருந்த பார் ஒன்றில் புகுந்து தாக சாந்தி செய்துவிட்டு வருகிறேன். பொறுத்திருங்கள் தொடரும்.........

பிற் குறிப்பு இராஜிவ் காந்தி பற்றிய சம்பவத்துடன் சிலரது பெயர்களை நேரடியாக குறிப்பிட்டு எழுதியுள்ளேன் காரணம் அவர்கள் தற்சமயம் உயிருடன் இல்லையென்பதாலேயே அவர்களது பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.உயிருடன் இருப்பவர்கள் பெயர்கள் அவர்களது பாதுகாப்புகாரணங்களிற்காக தவிர்க்கப்படும். நன்றி

DSCF0240.jpg

தண்ணியடித்த மதுபானச்சாலை

DSCF0242.jpg

பெங்களுர் மஜெஸ்ரிக் சிற்றி பஸ் நிலையம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சாத்திரியார்! இந்த ராஜீவ் காந்தியின் கொலைப் பழி முழுவதும் புலிகள் தலையிலே போடப்பட்டுள்ளது. அது தான் சிங்களத்தினதும், இந்தியாவினதும் பெரு விருப்பாகும். ஆனால், எனக்கு என்றுமே இந்தக் கருத்தில் உடன் பாடு இருந்ததில்லை.இதனால், யாழ் களத்திலும் பல உறவுகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்! பல பேரிற்கு ராஜீவ் காந்தி ஒரு தொந்தரவாக இருந்தார்.புலிகளுக்கும் இவரை அகற்ற வேண்டிய தேவை இருந்தது! கொலையில் புலிகள் ஒரு பங்காளிகளாக இருந்திருக்கலாம்! ஆனால், இதில் ஈடுபட்ட பலர்,இன்னும் பெரிய மனிதர்களாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எனது பணிவான கருத்து! உங்கள் தொடர், இதை ஓரளவாவது தெளிவு படுத்தும் என எண்ணுகின்றேன்.

சிலவேளை எனது கோலத்தை பார்த்ததும் பாரிசில் இருந்து வந்தவர் போல இல்லாமல் சென்னை பாரிஸ் கோணரில் இருந்து வந்தவர்போல இருந்திருக்கும்.
Link to comment
Share on other sites

ஆமா சாத்திரி . நீங்கள் போகும் பயனம் முழுவதும் ஒருவர் உங்களை பின் தொடர்ந்து வருகிறார் யார் அவர்? கண்ணாடி எலலம் போட்டுக் கொண்டு வெள்ளை. சிகப்பு என நிற உடுப்பு எல்லாம் போட்டுக் கொண்டு போட்டோ எல்லாம் எடுத்து உங்கள் கட்டுரையில் இடக்கிட வருதே ?

ராஜிவு கொலையை புலிகள் செய்யவில்லை என்று எழுத போறிங்கள் போல? :lol::D கவனமாக எழுதுங்கோ........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.