Jump to content

மாவீரர்களின் வரலாறுகள்


Brinthusha

Recommended Posts

  • Replies 67
  • Created
  • Last Reply

நர்மதா நன்றிகள். தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி , நன்றி நர்மதா..தொடர்ந்து மாவீரர்களின் வரலாறுகளை இணையுங்கள். வாசிக்க ஆவலாய் இருக்குறோம்...! :P

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

லெப்டினன் கேணல் சுபன்

supan1dl.jpg

விநாசித்தம்பி சுந்தரலிங்கம்

கள்ளியடி இலுப்பைக்கடவை

மன்னார்

வீரமலர்வு 21-07-1965

வீரமரணம்25-09-1992

மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள் சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும் மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும் கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும் கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார் இறுதியாக 25.09.92அன்றுஇ பூநகரியில்இ பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில் இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள் 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபனும் மேலும் 5 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தது போதும். என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள் உண்ணாவிரதம்இ சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.

1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால் பதித்துக் கொண்டிருந்தது இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

'சுபன்' தமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டுஇ ஆடி மாதம்இ 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும் மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர் சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய் விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன் இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும் பின்னர் விசேட கொமாண்டோப் பயிற்சியையும் முடித்து தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடு தோள் நின்று போராடினார். சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும் மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும் கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும்இ 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.

தகவல் : Maaveerarkal - Heroes

மூலம் : Erimalai

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் தங்கவேல்

majthankeshmi5.jpg

1971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர்.

இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டும் வந்தது. இக் காலப்பகுதியில்தான் இவன் எமது நாட்டில் நடக்கும் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்ற நோக்குடன் இவன் தனது நண்பர்களிடம் 'மச்சான் நாம் அடிமைகளாய் வாழ்கிறதை விட விடுதலைக்காய் போராடி சாவதுமேல், நான் ஒரு முடிவு எடுத்திட்டன் நான் இயக்கத்திலை இணையப் போறன்" என்று கூற அவனுடன் நண்பர்களான 2ம் லெப் நவாசும், லெப்ரினன் றொபேட்டும் 1988 இல் இணைந்து எமது அமைப்பில் பதிவாகினர். பதிவானதும் இவனுக்கு தங்கேஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டு மன்னாரில் 9 வது அணியில் பயிற்சி பெற்றான்.

இவன் பயிற்சி முகாமில் திறமையாக பயிற்சி பெற்று பொறுப்பாளர் மத்தியில் நற்பெயருடன் விளங்கியவன். பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைத்திட்டத்திற்காய் தனது சொந்த கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான். இவன் தனது கிராம மக்களுக்கு எங்கள் அமைப்பைப் பற்றியும், எமது போராட்டத்தையும் தெளிவு படுத்தியவன். அத்தோடு இவன் நின்று விடவில்லை. இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் அப்போது மன்னார்த்தீவுப் பொறுப்பாளராக இருந்த லட்சுமன் அண்ணனுடன் இவனை விட்டார். அங்கும் பொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்தான்.

அக்காலப் பகுதியில் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அந்நேரம் மன்னார் பழைய பாலம் என்னும் இடத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் மீது தாக்குதல் நடாத்த பொறுப்பாளர்களால் திட்டம் தீட்டப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இத்தாக்குதலில் தங்கேசும் பங்குபற்ற அனுமதி கிடைத்தது. இத்தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இம்முகாம் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இவன் திறமையாக செயல்பட்டு களமாடினான். அத்துடன் மன்னாரில் நடை பெற்ற பல தாக்குதல்களில் தனது திறமைகளை வெளிக் கொணர தவறவில்லை. இதற்காக தளபதியிடம் பாராட்டுக்கள் பல பெற்றான். இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் 1991ல் தன்னுடன் தங்கேசை எடுத்துக் கொள்கிறார். இந்நேரம் சிலாபத்துறைக்கு கொண்டச்சியிலிருந்து வரும் இராணுவத்திற்கு தாக்குதல் நடாத்த சுபன் அண்ணாவால் திட்டம் வகுக்கப் படுகின்றது. இக்தாக்குதலுக்கு தங்கேசின் திறமையான செயல்கனைக்கண்டு தங்கேசை ஒரு குழுவிற்கு அணித்தலைவனாக அனுப்புகின்றார். இத்காக்குதலிலும் தங்கேஸ் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. இத்தாக்குதலில் இவன் விழுப்புண் அடைகின்றான். பின் 1992 காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியால் இவன் வேறு துறைக்கு விடப்படுகின்றான். இங்கும் இவனது திறமைகள் வெளிபடுத்தப்பட்டு வளர்க்கப் படுகின்றது. அத்துறையிலும் இவனது திறமைகளைக்கண்டு பொறுப்பாளர்களின் பாராட்டைப் பெற்று ஓர் படி வளர்கின்றான். அதன் பின்பு தங்கேஸ் தாக்குதல்களுக்கு செல்ல வேண்டும், எதிரியை எல்லையை விட்டு என்ற நோக்கத்துடன் தான் தாக்குதல்களுக்கு செல்வதற்கு பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கின்றான். இவனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அப்போது மன்னார் மாவட்ட சிறப்புதளபதியாக இருந்த யான் அண்ணன் அவனை தாக்குதல் குழுவில் குறிப்பிட்ட சில அணிகளுக்கு பொறுபாளனாக விடுகின்றார். இந்நேரம்தான் பூநகரி தவளைத்தாக்குதல் திட்டமிடப்பட்டு தாக்குதலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் தங்கேஸ் மிகவும் திறம்பட தனது அணிகளை நகர்த்தி தாக்குதல்களை வேகப்படுத்திய வேளை எதிரியின் தாக்குதலால் காயமடைகின்றான்..

பின் 1994ல் மாவட்ட சிறப்பு தளபதியால் மாவட்ட வேவு அணிக்கு இரண்டாவது பொறுப்பாளனாக தங்கேஸ் விடப்படுகின்றான். தாக்குதல்களில் மட்டுமல்ல வேவு வேலைகளிலும் எதிரியின் காவலரன்களுக்கு அண்மையில் சென்று வேவு பார்த்து வந்தான். பின் மாவட்ட சிறப்புத் தளபதியின்; மெய்க்காப்பாளனாக இவன் தேர்ந்து எடுக்கப்படுகின்றான். இதன் பின்பு இவன் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி தாக்குதல்களை நடாத்துவதற்கு சிறப்புத்தளபதி அனுமதிக்கின்றார்.

அதன்படி இவனும் பல தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றான். இவ்வேளையில் தான் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இனஅழிப்பை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை. இத் தாக்குதலில் ஓர் அணியை வழிநாடாத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதை இவன் மிகுந்த சந்தோசத்துடன் ஏற்று தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தனது கட்டுபாட்டினுள் வைத்திருக்கின்றான். இதற்கு முன் நடாத்தப்பட்ட இடிமுழக்க நடவடிக்கையில் தலையில் விழுப்புண் அடைந்தும் அவன் சளைக்கவில்லை. அக்காயத்துடன் தனது மக்கள் விடுதலை பெற வேண்டும், தனது மண் பறி போகக் கூடாது என்ற சிந்தனையுடன் மழை என்றும் பராது தனக்குரிய கடமைகளை செய்தவண்ணமே காணப்பட்டான்.

இந் நேரம்தான் எமக்கு தாங்கமுடியாத சோகம் ஒன்று காத்திருந்தது. 10.11.1995 அன்று தங்கேசின் வோக்கி அலறுகிறது. 'கலோ தங்கேஸ்" தங்கேஸ் தனது வோக்கியை எடுத்துக் கதைக்கிறான். அந்நேரம் எதிரியானவன் தனது தாக்குதலை அதிகரிக்கின்றான். தங்கேஸ் அவசரமாகவும் தனது உறுதி தளராத குரலிலும் கூறுகிறான். 'அண்ணை என்ர உயிர் இருக்குமட்டும் எதிரி ஒரு அங்குலம் தானும் அரக்க முடியாது. வேறை ஒன்றும் இல்லை. நன்றி அவுட்" என்ற பதிலே தங்கேசுவிடம் இருந்து கிடைத்தது. அதன் பிறகு தங்கேஸ் கட்டளைகளைப் பிறப்பித்தவாறு எதிரியின் தாக்குதல்களை முறியடித்தவாறு எதிரிமீது தாக்குதல் தொடுக்கின்றான். இந்நேரம் எங்கிருந்தோ வந்த எதிரியின் எறிகணை தங்கேசின் அருகில் விழ்ந்து வெடிக்கின்றது. அவ் இடத்தே தங்கேஸ் சத்தமின்றி இப் புனித மண்ணை முத்தமிடுகின்றான். தான் நேசித்த காதலித்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் அம் மண்ணிலேயே மடிகின்றான்.

தங்கேஸ் சாகவில்லை. சரித்திரமாகிவிட்டான்.

எழுதியவர். போராளி சு.கீரன்.

Link to comment
Share on other sites

இனிய பணி நர்மதா!

தொடருங்க கந்தப்பு அவரவர்கள் தங்கள் விருப்ப படி தனித்தனியாக பதியாமல் இங்கேயே தொடர்ந்து பதிந்தால் நன்று. வேறுபதிவுகளில் உள்ள மாவீரர் வரலாறுகளை இங்கே இணைத்து விட்டால் நல்லம். மட்டுறுத்தினர்களே

Link to comment
Share on other sites

நர்மதா உங்கள் பணி மிக முக்கியமானதாகும், பாராட்டுக்கள் கந்தப்பு எனது கருத்து என்னவென்றால், இயன்றளவு இவர்கள் மாவீரர்களாகிய வாரத்தில் பதிவு செய்தீர்களென்றால் இவர்களுக்கு எங்கள் நினைவஞ்சலியை செலுத்தவும் வசதியாகவும் இருக்குமல்லவா?

உண்மையில் எனக்குப் பிடித்த பகுதியே இதுதான்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

இங்கும் ஓரளவு தகவல்கள் இருக்கின்றன உங்களுக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளலாம்.

http://maaveerarkal.blogspot.com/

Link to comment
Share on other sites

மாவீரர்களின் வரலாறுகளை இத்தளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்:

http://www.eelatamil.net/index.php?option=...7&Itemid=39

Link to comment
Share on other sites

காலங்களில் கரையாத காவியங்கள்

ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள்.

இவரகளது வரலாறுகள் சிறியவர்களும் அறிந்துகொள்ளவேண்டும். இவர்கள் தியாகங்களை அறிந்துகொள்பவர்கள் நாட்டுப்பற்றாளர்களாகவும் நல்லவர்களாகவும் வளர்வார்கள்.

நன்றி

நர்மதா

இதிலும் மாவீரர் வரலாறுகள் சில

http://eelam.tamilpower.com/maaveerar.htm

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ரமணன்: ஒருபார்வை

சர்வதேசக் கண்காணிப்புடனான சமாதானம் தமிழர்கள் முதுகிலே மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

இது நடைமுறையில் இருந்து வரும் போர் நிலையின் தீவிரத்தைப் பறை சாற்றுவதுடன் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டையும் எண்ணவோட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள். இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர். அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார்.

மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வுத் நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார். மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர். கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்யமுனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு.

சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது. அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.

தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவண்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார்.

அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதியைக் கொன்றிருப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கான சிறிலங்கா தரப்பின் தீர்வுமுறை முன் வைக்கப்பட்டிருப்பதாகவே தமிழர் கருத இடமுண்டு.

-மட்டக்களப்பு - ஈழநாதம்

படைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன் - பொட்டு அம்மான்

கேணல் ரமணனின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக இணைக்க நான் விரும்பினேன். ஆனால் மாவட்ட தேவை கருதி அங்கொரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராகத் தனித்துவமாகச் செயற்பட்டு வந்தார் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.

அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.

குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.

கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.

தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்

*வீரமரணம்-26.9.2001

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாPகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.

பதின்நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை. ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி. 14 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே தினத்தில் தான் மேற்கொண்ட அநாகாPகச் செயலால் தமக்கெதிராகப் போராடும் ஈழமக்களது உணர்வுகளையும், போரிடும் வீரியத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன சிங்களப் படைகள்.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி 'கடற்புறா' என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர். இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது. 1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக 'சயனைட்' அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா வெகு விரைவில் பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

-எரிமலை

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் மில்ரன் - புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி

"தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்." அவனது பள்ளித் தோழி விமலா அப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், "அவனோட ஆரெண்டு இல்லை - எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்."அவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, உள்ளார்த்த அன்புடன் பழகிய அவனது உள்ளத்து அன்பே வசீகரத்தின் காரணமெனலாம்.

அவன் பிறந்து வளர்ந்த அவனது சொந்தக் கிராமத்தின் மூட நம்பிக்கைகளும் அவனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்தாலும், தன் பதினெட்டு வயதில் தேர்ந்தெடுத்த புரட்சிகரமான பாதை அவனுள் முற்போக்கான சிந்தனைக்கு வழிகாட்டியதென்றே கூறவேண்டும்.

அவன் போராளியாகி பொறுப்பாளனாகி சீ.டி -125 உந்துருளியில் வீட்டுக்குப் போனால், அங்கு இன்னமும் பழமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் அம்மா, அப்பாவுடன் புதுமை பற்றிய வாக்கு வாதங்கள்தான்.

"உந்தக் காட்டைக் கட்டிப் பிடிக்கிறதை விட்டுட்டு றோட்டுக்கு வாங்கோ" அவனது வீடு ஏ-9 வீதிக்கருகில் வருவதற்கு அவனது வாதம்தான் காரணமாயிற்று.

ஆரம்பத்தில் விவாதங்கள் இருப்பினும் பிற்காலத்தில் அவனது கட்டளையின் கீழ் 'வீடு' வந்ததென்றே கூறல் வேண்டும். அவனது கட்டளைகளில் பிரதானமானது "வீட்டுக்கு வாற போராளிகளுக்கு தேநீர் கொடுத்து, சாப்பாடு கொடுத்து அனுப்பவேணும். அவையளும் உங்கட பிள்ளைகள்தான்."

இந்த உணர்வானது இயக்கத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே அவனிடம் குடிகொண்டிருந்தது.

1989 அவன் இயக்கத்துக்கென வந்து வருடம் ஒன்று கடந்திருந்தது.

பாலமோட்டை, கொந்தக்காரக்குளப் பகுதியில் அணி ஒன்றின் பொறுப்பாளனாய் அவன் நடமாடும் செய்தி, உறவினர் வாயிலாக பெற்றோரின் காதுகளை எட்டியது.

'இந்தியப் படைகளினது கண்களில் மண்ணைத் தூவி நடமாடும் தன் பிள்ளையைப் பார்ப்பது அவ்வளவு உசிதமல்ல' என்று தெரிந்தும் பெற்றோரின் மனசு அதற்கு இடங்கொடுக்கவில்லை.

தமது வசதிக்கேற்ப சிறு பலகாரப் பொதியுடன் அவன் நடமாடும் கிராமங்களில் அவனைத் தேடினர் பெற்றோர்.

சில வாரங்கள் கழித்து அவர்களிடம் அவன் வந்தான்.

"அம்மா, நீங்கள் என்னைத் தேடித் திரியிறது எனக்கு எப்பவோ தெரியும். என்னைக் காணவில்லை என நீங்கள் போவியள் எண்டு நினைச்சன். ஆனால் நீங்கள் என்னைக் கண்டுதான் போறதெண்ட முடிவோட நிக்கிறியள்... அம்மா, என்னைப்போலதான் என்னோட நிற்கிற பெடியளும் தங்கட அம்மா, அப்பாவைப் பார்க்காமல் நிக்கினம்... என்னை மட்டும் பார்க்க வந்திருக்கிறது சரியில்லை அம்மா. அதுவும் நான் இரு அணிக்குப் பொறுப்பாக இருக்கிற இந்நிலையில்... நினைக்கவே மனம் ஏற்குது இல்லையம்மா."

அவனது முதிர்வான சில நிமிடப் பேச்சு அம்மாவை கண்கலங்கி நிற்கவைக்க... "அம்மா நான் போயிற்று வாறன் - உந்தப் பலகாரப்பொதி எங்கள் எல்லோருக்கும் போதாது - இனி சந்தர்ப்பம் கிடைச்சா எல்லோருக்கும் சேர்த்துச் செய்து வாங்கோ" அவன் சென்று அடர்ந்த காட்டினுள் முழுமையாக மறையும்வரை அம்மா பார்த்துக் கொண்டேயிருக்க, "அவன் போராட என்று புறப்பட்டவன், தன்ர கடமையை முடிச்சு வீட்டுக்கு வருவான்" என அப்பாதான் அம்மாவின் கையைப் பிடிச்சு கூட்டிவந்தார்.

அம்மா சந்திச்சு சில மாதங்களின் பின்பு, "கொந்தக்கார குளப் பகுதியில இந்தியனாமிக்கும், எங்கட பெடியளுக்குமிடையில சண்டையாம், பெடியளிலையும் இழப்பாம்" அயலவரின் செய்தியால் அம்மா ஒடிந்துபோனா. அம்மாவை நிமிர்த்தும் செய்தி சிலவாரங்கள் கழித்துத்தான் வந்தடைந்தது.

தேசியத் தலைவருடன் மேஜர் மில்ரன்

அந்தச் சம்பவம் பற்றி அவன் இப்படித்தான் விபரிப்பான், "சுடலைக்குள்ள கிடந்தால் ஆரும் வரமாட்டாங்கள் எண்டு சுடலைக்க கிடக்கப் போய், இந்தியன் ஆமி 'பிறன்' எல்.எம்.ஜீ யால போட்டானே ஒரு போடு. சன்னம் ஒண்டு என்ர கையை முறிச்சுக்கொண்டு போயிற்று. அதில இருந்து இந்தியன் ஆமிக்கு நாங்கள் வைச்ச சங்கேதப் பெயர் (CODE NAME) 'சுடலைப்பேய்.'

அந்த நேரத்தில், அடர்ந்த காட்டினுள் உள்ள முகாம்களுக்கான வழங்கல்கள் அனைத்தும் நகருக்குள்ளிருந்து, கிராமப்புறத்துக்காகி அங்கிருந்து முதுகுச் சுமையில்தான் காட்டினுள் செல்லும்.

நிலத்தில் கொட்டுண்டும் தானியங்களை காட்டுக்கோழி அல்லது மயில் பொறுக்காது விடின், ஐம்பது கிலோ அரிசிக்காகக்கூட இரத்தம் சிந்தவேண்டிய அபாயகரமான சூழலில் அவனது முள்ளந்தண்டும் நூற்றுக்கணக்கான மூட்டைகளைச் சுமந்து போராளிகளுக்கான வழங்கல்களை எடுத்துச் சென்றிருந்தது.

இறுக்கமான அந்தப் போர்ச் சூழலில் ஊருக்குள் நடமாடும்போது அசாதாரணமான மறைப்பிடமே வாழ்விடமாக மாறும். நான்கு அடி சதுர இடத்தினுள் ஆறடி உடலை மறைத்து துயிலவேண்டிய நிர்ப்பந்தம் எழும். அப்பொழுதுகளில் எல்லாம், "ஆம்பிளப்பிள்ளை எண்டால் காலை நீட்டி நிமிர்ந்து படுக்கவேணும் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்."

"இப்ப அப்பா வந்து பார்த்தார் எண்டால் 'ஆம்பிளப் பிள்ளையெண்டால் குறண்டிப் படுக்கவும் பழகவேணும்' எண்டு சொல்லுவார்." என முடிப்பான்.

கடினமான வாழ்வை, இக்கட்டான ஆபத்தான நிலைமையை, தளம்பாது மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவனே போராளி என்ற தகுதியைப் பெறுவான் என்ற அடிப்படையில் அவனிடமும் 'அது' நிரம்பியே காணப்பட்டது.

அதனால்தான் மாங்குளம், கனகராயன்குளம், பன்றிக்கெய்தகுளம் என தன் அணியை வழிநடத்தி இந்தியப் படையினருடன் போரிட அவனால் முடிந்தது.

இந்தியப் படைகள் எமது மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட 1990களில் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்பட்ட போராளிகளினுள் அவனும் ஒருவன்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் கைக்கூலிகளாய்ச் செயற்பட்டோர், இன்னும் செயற்பட இருப்போரை களைந்து போராட்டத்தை வீறுகொள்ள வைக்கவேண்டிய பாரிய பொறுப்பு புலனாய்வுத்துறையின் மிக முக்கிய பணியாகியபோது, அவை சார்ந்த பணிகளே அவனுக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்டதெனினும், அவன் தன்னை போர்க்குணம் மிக்க போராளியாக உருவாக்கியிருந்தமை, புலனாய்வுத்துறைச் சண்டை அணித் தளபதிகளில் ஒருவனாக அவனை மாற்றியது.

போர்க்குணத்துடன் (MORALE) உற்சாகத்துடன் போராளிகளை வைத்திருந்து வழிநடத்துவது, என்பதில் லெப்.கேணல் கோபியைப்போல் அவனும் பேசப்பட வேண்டியவனே.

இந்தியப் படையுடனான போர்க் காலத்தில் எதிரியின் வரவை எதிர்கொள்வதற்காய் துப்பாக்கியின் விசை வில்லினுள் சுடுவிரலை வைத்தபடியே நடமாடும் அவனது விழிப்புணர்வு அவனது வாழ்வில் தொடர்கதையே.

"துப்பாக்கியை விட்டுட்டு விலகக்கூடாது...

"படுக்கும்போது துப்பாக்கி எடுக்கக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும்..." போன்ற கட்டளைகளுடன் கோல்சர் கட்டும் முறை, துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய முறை, அதன் துப்பரவு, பயிற்சிகள், தண்டனைகள் என தனது போராளிகளை எப்போதும் உசாருடனேயே வைத்திருப்பான்.

இந்தியப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் தன் துப்பாக்கியை இழந்த ஆனந்தன்- பிறிதொரு நாள் இந்தியப் படையினரிடமிருந்து துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றுவதற்காகத் தன் உயிரையே இழந்த கதையை, அவன் தன் போராளிகளுக்கு அடிக்கடி நினைவு படுத்துவான்.

இந்தியப் படையினருடனான சண்டையில் முறிந்த கை வீங்க வீங்க சக போராளிகளுடன் இணைந்து பங்கர் வெட்டுவது தொடக்கம் சமையல் வரை போராளிகளுடன் ஒருவனாக நிற்பான். எதிரி 'எவ்வாறெல்லாம்' நகருவான் நாம் 'எவ்வாறெல்லாம்' பதிலடி கொடுக்கவேண்டும், அவை பற்றிய கதைகளைத் தவிர அம்முகாமில் வேறு கதைகள் வருவது மிகக்குறைவு.

போராளிகளுக்குரிய நேரத்திட்டமிடலை அவனேதான் போட்டுக் கொடுத்து, அவர்களுடன் நின்று பணியினைக் கவனிக்கும் அவனது செயல், லெப்.கேணல் கோபியின் வழிகாட்டலில் கற்றுக் கொண்டதொன்று. புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாதுகாப்பு அணியினை வழிநடத்தும் பொறுப்பினை எடுத்து சில வாரங்களின் பின், ஒருநாள் அவரிடம் 'வேண்டிக் கட்டிக்கொண்டு' இப்படித்தான் என்னிடம் கூறினான்.

"ஒவ்வொரு போராளியும் பொறுப்பாளராய் வருமுன் சில மாதங்களேனும் - அவருக்குப் பக்கத்தில நிற்கவேணும் - அப்பதான் அவருடைய எதிர்பார்க்கையை விளங்கிக்கொண்டு பெடியளையும் வழிநடத்துவினம், தங்களையும் வழிநடத்துவினம்."

அவனின்ர வாகன ஓட்டத்தைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டும். வாகனம் வலம், இடம் என சின்ன ஆட்டத்தோட வேகமாய் வருகுதெண்டால் அவன்தான் ஓடிவாறான் என்று ஊகிக்கிறது அவ்வளவு சிரமமான விடயமல்ல.

"மாட்டின்ர நாணயத்தைப் பிடித்த கை 'ஸ்ரேறிங்'ஐப் (STEERING) பிடித்தால், இப்படித்தான் வாகனம் ஆடி ஆடி வரும்" எண்டு லெப்.கேணல் கோபி கிண்டலடித்தால் "ப்பூ... இதை இன்னொருத்தர் சொன்னால் கேட்கலாம்" என மறுத்தான் போட்டு விடுவான்.

ஒரு சமயம் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அவனது கிராமப் பக்கம் வந்தவேளை அவனது வீட்டில்தான் மதியச் சாப்பாடு.

இந்தச் செய்தியை அவனது காதில் நான்தான் போட்டது.

"அம்மா நல்லாச் சமைச்சவவே, உறைப்பை சற்று கூடுதலாய்ப் போட்டிப்பாவே, சோறு என்ன அடிப்பிடிக்காமல் இருந்திச்சோ?" அவனது ஆதங்கம் எனக்கும் புரிய அதிகநேரம் எடுக்கவில்லை. உண்மையில என் வாழ்நாளில் அவனது அம்மாவின் கைபட்ட சமையலைவிட உருசையான சாப்பாட்டை இன்னும் கண்டதில்லை. எண்டாலும் "சமையல் அவ்வளவு வாய்ப்பில்லைத்தான்" என்ற பொய்யை வேண்டுமென்றே அவனுக்குச் சொன்னேன்.

"நீ இயக்கத்துக்குப் போய்த்தான் சமையல் படிச்சனி. நீபிறக்கிறதுக்கு முதலே நான் சமையல் படிச்சனான்" இப்படித்தான் தாயிடம் பின்னொரு நாளில் அவன் வேண்டிக் கட்டியதாய்க் கேள்வி.

பிற்காலத்தில் புலனாய்வு நிர்வாகப் பணிகளினுள் உள்வாங்கப்பட்டான். வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேதான் அவனது பணி.

அச்சமயம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வன்னியைச் சொந்த இடமாகக்கொண்ட ஒரு போராளி, வன்னியில் உள்ள தன் தங்கையை பாடசாலை ஒன்றில் சேர்ப்பதற்குக் கதைத்துவிட்டு வாருங்கள் என்பதை மட்டுமே சொல்லிவிட, அவளைப் பாடசாலையில் சேர்த்துவிட்டு அந்தச் செய்தியை தொலைத்தொடர்பு சாதனத்தினூடாக அறிவித்த அவனது செயல் போராளிகளுடனான நேசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

1995, யாழ் இடம்பெயர்வின் பின் எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் - புலிகளின் பலம் எதுவென நிரூபிக்கவும் - நீண்ட கடற்றொடர் ஒன்றினைக் கைப்பற்றவும் திட்டமிடப்பட்ட முல்லைச் சிங்களப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 01 தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சிகள் ஆரம்பமாகியிருந்த வேளை.

இரகசிய பயணம் ஒன்றிற்கான ஆவணங்களை தயார்செய்து கொண்டிருந்த அவனும் சண்டையின் முக்கியத்துவம் கருதி, புலனாய்வுத்துறைத் தாக்குதல் படையணியுள் உள்வாங்கப்பட்டான்.

'பயிற்சி' நினைச்சுப் பார்க்க முடியாத அப்படி ஒரு கடும் பயிற்சி. சில மாதங்கள் நீண்ட பயிற்சி. பல படைணிகள் ஒன்று சேர்ந்திருந்த தளத்தில் புலனாய்வுத்துறைப் படையணியும் பயிற்சியில் முன்னணிவகிக்க ஊக்கியானவர்களுள் அவனும் ஒருவன்.

வட்டுவாகல் பாலத்தின் வலதுபக்க முன்னணி காவலரணின் தடையுடைத்து உட்புகும் அணி ஒன்றின் பொறுப்பாளர் அவன்.

18.07.1996 அதிகாலை முதலில் சண்டையைத் தொடங்கும் அணிகளில் அவனது அணியும் ஒன்று. களம் திறந்த பொழுதில் எதிரியின் கடும் எறிகணை வீச்சில் - எறிகணை ஒன்று அவனருகே வெடிக்க அவன் எடுத்துச் சென்ற 'ரோப்பிற்ரோ' (Torpedo) அவனுடன் வெடிக்க தடைகளுடன் அவனது உடலும் தகர்ந்து போயிற்று. வெற்றிக்காக உழைத்து - அந்தச் செய்தியைக் கேட்குமுன் வீரச்சாவினைத் தழுவிய ஆயிரமாயிரம் மாவீரர்களினுள் அவனும் ஒருவன் ஆனான்.

அவனது உடல் அடையாளமின்றிப் போனதால், அவன் உயிர்நீத்த இடத்திலிருந்து இடுப்புப்பட்டி, கோல்சர், இன்னும் சிதறல்களை தேடித்தேடி எடுத்த அவனது தந்தை 'அவன் போராட என்று புறப்பட்டவன் தன் கடமையை முடித்து வீடு வருவான்' என்ற நம்பிக்கையுடன் இருக்க, அவனது படத்துக்கு விளக்கேற்றச் சென்றால், பல்லி சொல்லித் தடுப்பதாக அம்மா சொல்லுறா.

'குறி' சொல்பவன் ஒருவன் அண்ணன் உயிருடன் இருப்பதாகவும் மற்றொருவன் 'இல்லை' எண்டும் மாறிமாறி சொல்வதாக அன்புத் தங்கை சொல்கிறாள்.

அவன் இன்னமும் அவர்களுள் ஒருவனாக வாழ்கின்றான் . அதனால்த்தான் இன்னும் அவர்களால் அவனது இழப்பை ஏற்க முடியவில்லை. நான், மாவீரர் நாள் அன்று அவனது உடலை விதைத்த, கிளிநொச்சி துயிலும் இல்லம் சென்றேன் - அவனுக்கு விளக்கெரிக்க நிறையப்பேர் நின்றார்கள். அவனது பெற்றோரைத் தவிர.

சி.மாதுளா

- சூரியன்

Link to comment
Share on other sites

இங்கே தமிழிழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு படுத்துவோம் உங்களுக்கு தெரிந்ததை மாவீரர்களின் வரலாறுகளை இங்கே பதியுங்கள்

நர்மதா நல்ல முயற்சி தொடருங்கள்...தீயினில் எரியாத இத் தேசத்தின் தவப்புதல்வர்களை நினைவு கூருவோம்...

Link to comment
Share on other sites

வீரவேங்கை நிதி

Written by மண்டைதீவு

Aug 28, 2007 at 07:59 AM

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.

அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.

புலிப்படை நிதி இறந்து விட்டான் என்றே கூறப்படுகிறது. அன்றைய நேரத்தில் மரண நிகழ்வு என்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில்தான் இருந்தது.இளம்வயது, வாழ வேண்டிய காலம். இப்படி மரணித்துப் போவதா? என்று மக்கள் கலக்கத்தோடு கண்கலங்கித் திரிகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் தேவாலயத்துக்குப் போகும்போது ஒரு பையோடு சந்தியில் நிற்கும் நிதி.

அப்போது புலிப்படையைப் பார்க்க ஆவல். நாம் நேரத்திற்கு கோயிலுக்குப் போவதாகக் கூறிவிட்டு சந்தியில் நிற்கும் புலிப்படையினரைத் தள்ளி நின்றே பார்ப்போம். சிலர் நெருங்கி நின்று கதைப்பார்கள். நாமும் மெதுவாகக் கிட்டச் சென்று நிற்போம்.

சில நாட்கள் போனபின் சந்தியில் சிரித்து நின்ற நிதியின் வீரமரணம் பற்றி போஸ்ரர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எங்கள் மனம் எதையோவெல்லாம் யோசித்து கலங்கிக் கொண்டே இருந்தது.

ஏன் இறந்தான் நிதி ? பிரபாகரனால் ஏன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ? மரணம் என்பது என்ன ? நாம் ஏன் வாழ்கின்றோம் ? எப்படியான நிலையில் தமிழினம் இருக்கிறது ? தமிழனுக்கு என்ன நடக்கிறது ? எமக்கு யார் விடுதலை பெற்றுத் தற்தவர்கள் ? விடுதலையில் நாம் வாழ்கின்றோமா ? சிறீலங்கா அரசின் கொடுமைபற்றி புரியாத நிலையில் கிடந்த மக்களுக்கு நிதியின் வீரமரணத்தின் பின்தான் தமிழனின் நிலை எப்படியுள்ளது என்று தெரியவந்தது. எமக்கும் அன்று தெரியவந்தது.

ஒரு புலி வீரமரணம் அடையும் போது மேலும் பல புலிகள் பாசறையை நோக்கி வருவார்கள் என மேஜர் அசோக் அண்ணன் அன்று எங்களுக்கு அடிக்கடி கூறுவார். அது உண்மை. நிதி அண்ணனின் வீரமரணத்தின் பின் என் மண் எவ்வளவோ துரித வளர்ச்சி பெற்று வருகிறது. போராட்டத்தில் இன்று அத்தனைக்கும் காரணம் அண்ணன் காட்டிய வழியில் நின்று போராடி வீர மரணத்தைத் தழுவிய மாவீரர்கள். களத்தில் நின்று போராடும் போராளிகளே.

மன்னார் மண் முதல் முதல் கண்ட களப்பலியில் நிற்கும் நிதி, அன்சார் ஆகிய மாவீரர்களின் தியாகம் இன்று எம்மை பலப்படுத்தி வளரச் செய்துள்ளது. அன்சார்( நிக்கலஸ் மைக்கல் குருஸ் ) எனும் போராளி தெல்லிப்பளையில் நடந்த முற்றுகையின் போது போராடி வீரச்சாவடைந்தான். நிதி, அன்சார், எம் மாவீரர்கள் எம் மண்ணுக்கு ஒளிவிளக்காக நின்று மெழுகுவர்த்தியாக உருகியவர்கள்.

எமது இயக்கத்தில் முதல் முதல் வீரமரணமடைந்த சங்கர் அண்ணன்: அதே ஞாபகத்தில் என மன்னார் மண் இழந்த மாவீரர்கள் தமக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் அல்ல. தம் மண், இனம் விடுதலை பெறவேண்டும் என எண்ணி சாவுக்கு மத்தியில் நின்று போராடி, எம்மையும் எம் மண்ணையும் பாதுகாத்து தங்கள் உடல்களை எமக்காப் புதைத்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் நாமும் விடுதலை பெறும் வரை தொடர வேண்டும். அவர்களின் இலட்சியமும் கனவும் நிறைவேறி எம் மண் விடுதலை பெற நாமும் எமக்காக களத்தில் விழுந்த மாவீரர்களின் ஆயுதத்தை எடுத்து களத்துக்குப் புறப்படுவோம். வா நன்பனே ! இன்று புதை குழியில் இருக்கும் மாவீரன் நிதியின் வரலாற்றைப் படிப்போம். நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளைப் பற்றிச் சிந்திப்போம். எங்களுக்காக எம் மண்ணைப் பாதுகாக்கும் புனிதப் போரில் நாளாந்தம் வீரமரணமடையும் மாவீரனின் பாதையில் சேர்வோம் என உறுதி எடுப்போம். விடுதலை பெற ஒவ்வொருவரும் போராட வேண்டும். போர்களம் வா தமிழா !

எஙகள் நிதி எமக்காக மடிந்தான். எங்கள் நிதி தன்னை விட மண்ணை அதிகம் நேசித்தவன். எங்கள் நிதி தன் குடும்பத்தை விட தமிழ் மக்களை நேசிததவன். நிதியின் பாதையில் நானும் செல்வேன் என உறுதி எடுப்போம். ஐயம் இல்லை எமக்கு.

சந்திரவதனா

http://www.mandaitivu.com/index.php?option...1&Itemid=39

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

லெப்.கேணல் சாந்தகுமாரி: சூசையப்பு மோறாயஸ் றமணி

-மகிழ்நிலா

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.

புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.

இம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசங்களை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி கேணல். யாழினி (விதுஸா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்க, இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று, தானும் சண்டையில் கலந்து கொண்டாh . சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி கேணல் யாழினி அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத்திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற சந்தோசத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார்.

இவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் சூசையப்பு தம்பதிகளுக்கு 1972ம் ஆண்டு 7ம் மாதம் 19ம் திகதி மகளாய்ப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் றமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா இராணுவத்தினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக பாசமுடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் என்பவர் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டிலேயே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார்.

இவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளி அனுபவமோ படிப்புவாசமோ பெரியளவில் அறியாதவர். ஆனால் அனுபவத்தால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி, ஒவ வொரு காவலரணாகச் சென்று எல்லாப்போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால், அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார்.

பயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ் கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி, ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித்தாக்குதல், மின்னல், கஜபார, பலவேகய -02, மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க, தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ்தேவி எதிர் நடவடிக்கையிலும், எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட 'தவளை' நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவைகருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது.

1995ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப்போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார்.

'இடிமுழக்கம்' என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01,02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப்போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரைகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி, பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும அவ விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை அவதானிப்பதுமாக கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது.

சாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர், "என்ன சாந்தகுமாரி? கையில் காயமா?" எனக் கேட்டபடி அருகில் வந்தார்.

"ஒன்றும் இல்லையக்கா" என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் "ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்" என்றார் தன் வழமையான சிரிப்புடன.

தன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இரவில் வேவுக்கு சென்று எதிரியின் பிரதேசத்துக்கும், எமது பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை அவதானிப்பு இடத்தில் இருந்து அவதானித்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார்.

சூரியகதிர் - 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் - 01 நடைபெற்ற காலப்பகுதியில் சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி முல்லைத்தள மீட்பின் பின் அங்குள்ள கண்ணிவெடி, மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01,02,03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பிரதேசம் மீது தாக்குதலை செய்வார். அவ வளவுதான், அலறித்துடித்து எதிரியானவன் எமது பிரதேசம் மீது தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதலோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்வான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்த குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார்.

ஒருநாள், அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து, "அப்பாடா! இப்பத்தான் நிம்மதி" என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் அனுபவத்தால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் அனுபவமே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது.

இவ் வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத்தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பிரதேசத்திற்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு, கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார்.

இவர் சிறந்த துப்பாக்கிச்சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும்.

இவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி- பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர், மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக்காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார்.

இவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும்.

வோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தாh பின் 1999ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப்பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப்பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் "நத்தாருக்கு என்ன விசேடம்" எனக் கேட்க, "பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து, 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்" என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார்.

உலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார்.

அந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்த எமது பிரதேசத்துள் நுழைய, இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவா ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி, அங்கிருந்த கட்டளை அதிகாரியோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார்.

ஓயாத அலைகள் - 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஆர்வத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச்சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதே கள முனைக்குச் சென்றார்.

2000ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு பிரதான பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் நித்திரைக்குச் செல்வார்.

ஓயாதஅலைகள் - 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் உக்கிரமாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார்.

நாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை, பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன.

முதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட, "அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ, இறங்குங்கோ" என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பிரதேசத்தை மீட்கவேண்டும் என்ற ஆக்ரோசத்துடன் முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது.

மன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1998 புதுவருடத் தினத்தன்று கரிப்பட்ட முறிப்பில் உலங்குவானூர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சித்தரித்து எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் பார்த்தீர்களா?

அத்தாக்குதலுக்குச் சென்ற ஐவர் கொண்ட கரும்புலியணியில் அறிவுக்குமரனும் ஒருவர். அந்த ஐவரில் நால்வர் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் வீரச்சாவடைந்துவிட்டனர். ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். அத்திரைப்படத்தில் அவர் அந்தப் பாத்திரமாகவே நடிக்கிறார்.

என்னைப்பொறுத்தவரை அத்திரைப்படத்தை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமென்று படுகிறது. புனைவுகளைப் படமாக்குகையிலேயே பிறரால் எவ்வளவு அழுத்தமாகப் படைப்பாக்க முடிகிறது. உண்மைகளை இன்னும் எவ்வளவுக்கு அழுத்தமாகப் படைப்பாக்க முடியும்?

மேலே நானெழுதிய கருத்துத் தொடர்பான மேலதிக தகவல்.

அத்தாக்குதலில் எஞ்சியிருந்ததாக நான் குறிப்பிட்ட கரும்புலி வீரனும் வீரச்சாவடைந்து விட்டார். 2006 ஆவணியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் பூட்டோ என்று அழைக்கப்படும் கலையரசன் தான் அந்த எஞ்சியிருந்த கரும்புலி வீரன். (ஏனையவர்கள் கரும்புலிகளான மேஜர் அறிவுக்குமரன், மேஜர் நிலவன்,லெப்.கேணல் நரேஸ், மேஜர் குமுதன்).

அந்த உலங்குவானூர்த்தி அழிப்புச் சம்பவத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் 'புயல் புகுந்த பூக்கள்'.

லெப்.கேணல் பூட்டோ பற்றிய நினைவுப்பகிர்வு விடுதலைப்புலிகள் ஏட்டில் வெளிவந்துள்ளது. சில வலையிதழ்களிலும் மீள் பிரசுரமாகியுள்ளது.

ஏற்கனவே கந்தப்பு பூட்டோ பற்றி வேறோரிடத்தில் நினைவுப்பகிர்வை இட்டுள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20023

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.