Jump to content

மாவீரர்களின் வரலாறுகள்


Brinthusha

Recommended Posts

கரும்புலி கப்டன் மில்லர்

maaveerarmiller9vz.jpg

"கரும்புலிகள்" என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.

ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.

"மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.

வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான். பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்;தையும் பெற்று கொண்டனர்.

ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர். திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்;கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறு பெடுத்துக் கொண்டான்.

பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெரிங்கியதும் எம் தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்

கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது. மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.

அவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.

மட்;டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தான். முதல் நாள் கமலும் லெப் கேனல் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே லெப் கேனல் திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சிலவேளை இத்தாக்குதலில் சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்பை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்;கிறான்.

தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்;லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.

அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்;டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.

பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான். முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.

மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்

'பிரபா பரவாயில்;லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான். மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா. மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன்.

எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்;தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்;கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிதைந்தன. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது. மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.

வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான். பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..

வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இ;டத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது. தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்;கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கன். மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்;தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்.

"கரும்புலி கப்டன் மில்லர் குறித்து அவரது தாயார் பின்வருமாறு கூறுகிறார்"

'என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை." மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள். அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்......." அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

";மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்... முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும் போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி" மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கி விட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.

இப்படித்தான் இன்னும் ஒரு நாள்.......

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் "ராங்கிற்குள்" குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை. காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்பு போல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்று போனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். 'அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டிசு கொடுத்து கொண்டு நிக்கிறான்."

அம்மாவுக்கு உள்ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள். அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுவாள். இது வழமையாகிப் போனது.

"இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. 'பயிற்சி முகாமில் நிக்கின்றான்" என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள். 'அது ஒபறேசன் லிபறேசன் காலம்| அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்...." 'திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது. பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.

அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்....முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்.... என்ர பிள்ளையும்.....அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி... அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக் குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்...... பிறகு வருவினம்.." ம்.....ம்..... என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்....... 'அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு"

தகவல் - NATIONAL HEROES

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

எவ்வளவு முடியுமோ - முடிந்தவரை மாவீரர்கள் பற்றிய தகவல்களை இங்கு இணையுங்கள் நர்மதா!

முடிந்த உதவிகளை நாமும் செய்கிறோம்!

அதன் மூலம் யாழ்களமும் மேலும் பெருமை பெறும் நன்றி! 8)

Link to comment
Share on other sites

லெப். கேணல் பொன்னம்மான்

மலர்வு 23-12-1956

உதிர்வு 14-02-1987

தந்தை தாய் இருந்தால் நமக்கிருந்தா தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நு}றுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள்சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நு}று யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியுூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.

பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை புூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.

பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.

14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே துாங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்ஸ்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் துாசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் துாரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.

பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். இதனால் இராணுவம் சந்தேகப்படகூடும் என பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. "அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

லெப்.கேணல் பொன்னம்மானுடன் வீரச்சாவடைந்த போராளிகள்

மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்)

தகவல் Maaveerarkal - Heroes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா,

".....உங்கள் தகவல் பகிர்வு பயனுடையது..

மேலும் தொடருங்கள்..

"மாவீரர்கள்" என்ற தகவல்மூலம் "பொது" வாக இருப்பது

தகவல் தேடலாளர்களுக்குச் சற்று நெருடலாக இருக்கிறது;

கவனியுங்கோ நர்மதா..."

என்று முன்னம் கருத்து எழுதியதை மீள அடிக்கடி வாசித்து உங்கள் பணி தொடர்க நர்மதா...

பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

லெப். செல்லக்கிளி - அம்மான்

sellakkili1iz.gif

சதாசிவம் செல்வநாயகம்

கல்வியங்காடு யாழ்ப்பாணம்

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான

கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும் செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை விக்ரர் செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும்இ ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில் கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும்இ துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.

தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ''அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ"" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி மீண்டும் அலறியது.

"அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப் பின்னால் ட்ரக்" என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எதுவும் எமக்குத் தெரியவில்லை. எனது G3 யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் இருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும்இ ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால் இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியின் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால்இ ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து '"பசீர் காக்கா"" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். 'சுடு" என்ற அப்பையா அண்ணை உடனே 'கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு" என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ''தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ''யாரது"" என்று முன்னே வந்தனர்.

''அது நான்ராப்பா"" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ''அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை"" என்றார் ரஞ்சன்.

''இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது ஆனால் எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை வா பார்ப்போம்"" என்றவாறு தன் பிரியத்திற்குரிய G3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. 'எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்" எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ''அண்ணா அவன் அனுங்குகிறான்." மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

''கரையால் வாருங்கள்"" என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ''யாரது'' என்று வினவ அம்மான் ''அது நான் தம்பி" என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ''அம்மானைக் காணவில்லை"" என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ''டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது" என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

தகவல் - அன்புடன் கேணல் கிட்டு

Link to comment
Share on other sites

ஊக்கத்துக்கு நன்றி இயலுமாவற்றை தொடருகின்றேன்

Link to comment
Share on other sites

மூத்த உறுப்பினர்

லெப். கேணல் அப்பையா அண்ணா

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர்.அவரை அதிகமாக பொதுமக்களிற்கு தெரிந்திரா விட்டாலும் அனைத்து போராளிகளிற்கும் அறிமுகமானவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர்.

ஆரம்பகால கண்ணி வெடித்தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட கண்ணி வெடிகளை தயாரித்தது மட்டுமன்றி அத்தாக்குதலகளில் பங்கு கொண்டவரும் கூட தமிழர்களின் வரலாற்று திருப்பத்தை ஏற்படுத்திய 1983 திருநெல்வேலி கண்ணி வெடித்தாக்குதலிற்கான கண்ணிவெடியையும் அவரே தயாரித்திருந்தார்.பின்னர் 1985களில் யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் வந்தபின் மானிப்பாயில் ஓரிடத்தில் ஒரு முகாமமைத்து அதனை ஒரு கண்ணி மற்றும் வெடி பொருட்களை உற்பத்தி செய்ததுடன் போராளிகளிற்கான வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியினையும் வழங்கினார்.85 களில் முதன்முதல் எறிகணை தயாரிப்பில் இறங்கிய அப்பையா அண்ணை அந்த நேரம் குறைந்தஉள்ளுர் தொழில் நுட்பத்துடன் செயல்படுத்தினார். இலகுவில் உருக்ககூடிய ஈய வகை உலோகங்களே ஆரம்பத்தில் (செல்) செய்ய பயன்படுத்தப்பட்டது.அதற்காக அவர் தன்னுடைய 90 ரக மோட்டார் சைக்கிளில் வீதி வீதியாக திரிவார் கோண்டாவில் இ.போ.ச. சபையின் பழைய ஒடாத போருந்துகளையெல்லாம் வெட்டி எடுத்துவந்து உருக்கி செல் ஆக செய்து போராளிகளிடம் கொடுப்பார் தம்பி அடியடா கோட்டைக்கும் மற்ற ஆமி காம்புகளிற்கும் இது இ.போ.ச. இது போனால் சங்காரம். என்று சொல்லி சிரிப்பார் ஆரம்ப காலத்தில் தொழில் நுட்ப குறைபாடுகளினால் சில செல் போய் விழுந்தாலும் வெடிக்க நேரமெடுக்கும்.அப்போ போராளிகள் அப்பையா அணணையை திரும்பி பார்ப்பார்கள் அவர் சொல்லுவார் தம்பியவை உது காரைநகர் லைன் பஸ்சிலை செய்தது போலகிடக்கு அந்த பஸ்மாதிரி கொஞ்சம் நேரமெடுக்கும் என்று செல்லி சிரித்து எந்த இறுக்கமான யுத்த நிலையிலும் மற்றவர்களையும் சிரிக்கவைப்பது அவர் வழமை. ஒருநாள் வழமைபோல் தனது 90 யில் பின்னால் ஒரு போராளியுடன் சங்கானை வீதியால் போய்கொண்டிருந்தபோது ஒரு வாகனதிருத்துமிடத்திற்கு (கராச்)முன்னால் சில இரும்பு துண்டுகள் கிடந்தது உடனே தனது வண்டியை நிறுத்திய அவர் பின்னிற்கிருந்த போராளியிடம் தம்பி டேய் ஓடிப்போய் அந்த கராச்காரரிட்டைகேட்டிட்டு அந்த இரும்புகள் தேவையில்லையெண்டா அள்ளிகொண்டுவா என்றார் அந்த போராளியோ அண்ணை அது கறள் பிடிச்சு கிடக்கு உதை ஐஸ் பழகாரன்கூட வாங்கமாட்டான் நடவுங்கோ என்று சொல்ல அவரோதம்பி உந்த இரும்பை வெட்டி பண்டிக்கை (ஒருவகைகண்ணிவெடி)போட்டு அடிச்சா சிங்களவன் உடனை சாகாட்டிலும் பிறகு ஏற்பாக்கிசாவான் போய் எடுத்து கொண்டுவா என்றார் .அப்படி தமிழீழத்தின் ஒரு கறள் பிடித்த இரும்பும் ஆணியும்கூட எதிரிக்கு எதிராக திருப்பியவர். கண்ணிவெடிகளுடன் மடடும் நின்றுவிடாமல் கடல் கண்ணி எறிகுண்டுகள் ஏன் விமானம் கூடதயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.ஆரம்பத்தில புலிகளின் விமான படைகனவு கண்டவர்களில் அவரும் ஒருவர். புலிகள் உலகிலேயே அதியுயர் கண்ணிவெடி தாக்குதல் நுட்பங்களை கையாண்டு சிறந்த கெரில்லா போரளிகளாக மாறியதற்கு அப்பையா அண்ணணின் பங்கு அளப்பரியது

அன்றைய நாட்களில் இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவையான வாகனங்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982-ஆம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் வாகனம் ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி வாகனம் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கணும் பிரபல்யமாகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் -களத்தில்- என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

~1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில்இ தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான்இ விக்ரர் பொன்னம்மான்இ சந்தோசம் மாஸ்ரர் புலேந்தியம்மான் கணேஸ்இ ரஞ்சன்இ லிங்கம்இ பசீர்காக்கா நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தைவிட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும்இ செல்லக்கிளி அம்மானும் விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளுர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்? என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு இராணுவப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால்இ இவரது வயதைக் கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு இராணுவப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. ஆரம்ப காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். பொங்கலுக்கே வெடி கொழுத்தபயந்த தமிழனை கண்ணிவெடித்தாக்கு பெயர்போன இனமாக மாற்றிய பெரும்பங்கு அவருக்குண்டு.உலகில் இன்று ஒரு சிறந்த மரபுவழி இராணுவமாக புலிகள் வளர்ந்து நிற்கிற நிலையில் இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

தகவல் - Maaveerarkal - Heroes

நன்றி - விடுதலைப் புலிகள்

மேலதிக தகவல் சில இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

நன்றி நர்மதா தகவல்களுக்கு

தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

பதிவுகளுக்கு மிக்க நன்றி...படிக்க படிக்க மனது கனக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா... உங்கள் தகவல்கள் உண்மையாக மிகவும் பயன் உள்ளவை.. தொடந்து பதிவுகளை வையுங்கள். நன்றி

சோதியாக்கா கரவெட்டி இல்லை...நெல்லியடி!

அவ வீரமரணம் அடைஞ்சபிறகுதான் நிறையபேருக்கு தெரியும் .. இப்பிடி ஒரு போராளி இந்த ஊரில் இருந்தாரா என்று!

எந்த தற்புகழும் தேவை இல்லையென்று ... இனத்துக்காய் மடிந்துபோன போராளிகள்.. சோதியாக்கா போல் ஏராளம்!

நீங்கள் சொன்னதும் சரி தான். ஆனால் கரவெட்டியில் ஒரு சிறிய பகுதி தான் நெல்லியடி. அவரது வீடு நெல்லியடியில் தான் உள்ளது. இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது. :roll:

Link to comment
Share on other sites

லெப்.கேணல்.சாந்தகுமாரி ஜெயசுதா

shanthakumari0jo.jpg

சூசையப்பு மொறாயஸ் ரமணி

மன்னார்

தாயின் மடியில் 19-07-1972

மண்ணின் மடியில் 06-10-2000

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.

புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஜெயசிக்குறுஇ ரணகோசஇ வோட்டஜெற் என பெயரிட்டபடி இராணுவ நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன் எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.

இம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான் மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசங்களை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி கேணல். யாழினி (விதுஷா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்கஇ இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று தானும் சண்டையில் கலந்து கொண்டார் சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி கேணல் யாழினி (விதுஷா) அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத் திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற சந்தோசத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார்.

இவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் சூசையப்பு தம்பதிகளுக்கு 1972ம் ஆண்டு 7ம் மாதம் 19ம் திகதி மகளாய்ப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் றமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா இராணுவத்தினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக பாசமுடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் என்பவர் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டிலேயே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார்.

இவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளி அனுபவமோ படிப்புவாசமோ பெரியளவில் அறியாதவர். ஆனால் அனுபவத்தால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ்வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி ஒவ்வொரு காவலரணாகச் சென்று எல்லாப்போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால் அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார்.

பயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ் கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித்தாக்குதல் மின்னல் கஜபார பலவேகய -02 மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ்தேவி எதிர் நடவடிக்கையிலும் எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட 'தவளை' நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவைகருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது.

1995ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப்போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார்.

'இடிமுழக்கம்' என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01 02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப்போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரைகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி மிதிவெடி பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும அவ்விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை அவதானிப்பதுமாக கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது.

சாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர் "என்ன சாந்தகுமாரி? கையில் காயமா?" எனக் கேட்டபடி அருகில் வந்தார்.

"ஒன்றும் இல்லையக்கா" என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் "ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்" என்றார் தன் வழமையான சிரிப்புடன.

தன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இரவில் வேவுக்கு சென்று எதிரியின் பிரதேசத்துக்கும் எமது பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை அவதானிப்பு இடத்தில் இருந்து அவதானித்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார்.

சூரியகதிர் - 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் - 01 நடைபெற்ற காலப்பகுதியில் சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி முல்லைத்தள மீட்பின் பின் அங்குள்ள கண்ணிவெடி மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01 02 03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பிரதேசம் மீது தாக்குதலை செய்வார். அவ்வளவுதான் அலறித்துடித்து எதிரியானவன் எமது பிரதேசம் மீது தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதலோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்வான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்த குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார்.

ஒருநாள் அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து "அப்பாடா! இப்பத்தான் நிம்மதி" என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் அனுபவத்தால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் அனுபவமே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது.

இவ் வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத்தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பிரதேசத்திற்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார்.

இவர் சிறந்த துப்பாக்கிச்சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும்.

இவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி- பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர் மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக்காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார்.

இவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும்.

வோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தார் பின் 1999ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப்பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப்பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் "நத்தாருக்கு என்ன விசேடம்" எனக் கேட்க

"பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்" என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார்.

உலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார்.

அந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்த எமது பிரதேசத்துள் நுழைய இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவா ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி அங்கிருந்த கட்டளை அதிகாரியோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார்.

ஓயாத அலைகள் - 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஆர்வத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச்சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதேகள முனைக்குச் சென்றார்.

2000ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு பிரதான பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் நித்திரைக்குச் செல்வார்.

ஓயாதஅலைகள் - 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் உக்கிரமாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார்.

நாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன.

முதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட "அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ இறங்குங்கோ" என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பிரதேசத்தை மீட்கவேண்டும் என்ற ஆக்ரோசத்துடன் முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது.

மன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கப்டன் ஈழமாறன்

capteelamaran3lo.jpg

இராமையா தினேஷ்

மாதகல் - யாழ்ப்பாணம்

மடியில் 05.05.1973

மண்ணில் 11.11.1993

பூநகரித் தளம் மீதான தவளை நடவடிக்கையில் வீரச்சாவு

"டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..."

வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடிஇ காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய்இ தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்குஇ அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும்.

"விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்." என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதைஇ ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறிப் பொது மகன் ஒருவனின் சைக்கிளில் ஏறி பயிற்சி நடக்கும் இடம் வந்து விட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டுஇ முகத்தைத் தொங்க விட்டவாறு மீண்டும் வைத்திய சாலைக்கு செல்ல நேரிட்டது.

கால் நோ மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் பயிற்சிப் பாசறை வந்துஇ தன் பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற் கொண்டான். இவ்வாறு மனவியல்பைக் கொண்டவன் இவன். ஆம்...!

இப் பயிற்சியானது சிங்களப் பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்.... ஆணவத்தைச் சிதைப்பதற்காய்.... தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்தவதற்காய்... சுமூகமான ஒரு பாதையைத் திறப்பதற்காய்...

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல்களை மேற் கொள்வதற்காய்இ ஆண் பெண் போராளிகள் அனைவருமே கடல்இ தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாய் குழுவின் தலைவனாக ஈழமாறனும்...

மகிழ்வுடன் கடல் கரைதனைத் தழுவி மீளும்-ஆழத்துடன் அழகும் கொண்ட- கடற்கரைதனை அணையாக பெற்ற மாதகல்தனை தனத தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம்இ நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம் மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான். தயக தாகத்தை தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகை தன்னை முகத்தில் பரவ விட்டிருப்பான். துடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனதையும் கவர்ந்து விடுவான். "வெளிநாடு வா" என மூத்த உடன் பிறப்பு அழைத்துக் கூட இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. "அண்ணா நீ தாய்க்காக உழைத்துவிடுஇ நான் தாய் நாட்டுக்காக உழைக்கப் போகிறேன்" எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான்.

ஆரம்ப கல்விதனை மாதகல் "சென். ஜோசப் பாடசாலை"யில் பயின்ற பின்னர்இ 1984ஆம் ஆண்டு தெல்லிப்பழை 'மகாஜனாக் கல்லூரி' யில் தனது கல்வியைத் தொடர்ந்தான். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் திறமையாச் செயற்பட்டு கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்று தனது படசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்தான்.

இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மனமுடைந்த இவன் தனது சேவை இந் நாட்டுக்கு உடனடியாகத் தேவையெனப் புரிந்து 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். பயிற்சிக் காலத்தின் போது திறமையாகச் செயற்பட்டுஇ அனைவரினதும் பாராட்டுக்களைடும் பெற்றான். பயிற்சி தவிரந்த ஏனைய நேரங்களில் சக போராளிகளை அருகில் இருந்தி விடுதலைப் போராட்டங்களைப் பற்றி விளங்கவைப்பான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பிரசங்கத்தை நிறுத்திவிடவான். ஆகையினால் மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள்.

பயிற்சி முடிந்த வேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற "யாழ். கோட்டைச் சண்டையில்" ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்கு பெறுப்பாளனாக நியமிக்கப் பட்டவுடனேயே காரைநகர் சண்டைக் களம் அவனை அழைத்தது. அதன் பின்னர் மன்னார் பரப்புக் கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர் கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும்சண்டை ஆரம்பமானது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இராணுவம் பின்வாங்கியது.

மீண்டும் சண்டை மூளஇ ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த தினேஷ் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்... எதிரியின் தாக்குதலால் காலிலும்இ கையிலும் காயமடைந்த இவனை தக்க முறையில் வைத்தியப் பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள்.

காயம் மாறி முகாம் வந்தவேளை அவனுக்கு எல். எம். ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான். தனது வெள்ளைப் பற்களைப் போல...

இவனுடன் பழகிய நாட்களை எடைபோட்டுப் பார்க்கிறேன்;. அவை மறக்க முடியாதவை. மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றொருநாள்இ பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை குறிப்பிட்ட நேரமில்லாமல்இ தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை ஆரம்பித்து முடிப்பான். அவ் வேளையில் கன்னத்தை உராய்ந்தபடிஇ காதைச் 'செவிடுபட வைக்கும்' அதிர்வோடு அருகினில் ஷெல் வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும் போதுஇ தினேஷ் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான்.

"தலை போகப் போகுது பதியடா தலையை" எனக் கூறினால் "தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து தட்டி எழும்பு என்று தலையில் பிடித்து தூக்குவான்" என்பான். இக் கட்டான நேரங்களிற் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான். இது அவனது சுபாவம். பலாலி என்றாலே பழவகைத் தோட்டம் கண் முன்னாலே தெரியும்.... இன்றைக்கு எல்லாத்தையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்.... எமக்கு பசியெடுக்கும் நேரமெல்லாம் பதுங்கி முன்னே சென்றுஇ பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை தினேஷைகட காணவில்லை. "பரவாயில்லை" நாம் போய் வருவோம் எனக் கூறி எமது அணி முன்னேறியது. பழம் பிடுங்குவற்காய்.

மரத்தில் ஏறியாகி விட்டது. பழங்களைப் பறித்து காற்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டிருந்த வேளை... சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகில் எதிரி இருப்பதினாலும்இ அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும்இ நாம் மெதுவாக சத்தம் செய்யாது மரத்திலிருந்த இறங்கிப் பதுங்கி நின்றோம்.... வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்க ஆரம்பித்தது.... இந்த வேளையில் சண்டை பிடிப்பத எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் மனதிற் கொண்டுஇ மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்த நின்று கொண்ட தாக்குதலுக்குத் தயாரானோம். தினேசும் லெப்டினன்ட் சித்துவும் சரித்தபடி... மெது செருப்புக்களை எடுத்துக் கொண்டு... சிங்களம் கதைத்து... எம்மை வெட்கப்பட வைத்துவிட்டார்கள். நிலமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள அசடு வழிந்தபடி அவர்களுடன் சேர்ந்த சிரித்தோம். இப்படி இவனது குறும்புகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஆறுமாதப் பிணைப்பால் ஒன்று பட்டு எமத பணி தொடர்ந்த வேளையில்இ வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது... எமது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும்வரை கைகளை அசைத்த விடை கொடுத்தோம். எங்கோ பிறந்துஇ எங்கோ வளர்ந்து இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது பாசங்களை வார்த்தைகளால் வரைந்து விட முடியாத.

பிரிந்து சென்ற அவன் "மின்னல்" தாக்குதலில் ஏ.கே. எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குனராகச் சென்றான். மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனத முப்படைகளினதும் உதவியுடன் மூர்க்கத் தனமாகத் தாக்கினான்.... ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்க முடியாத உறுதி பக்க பலமாக இருந்தது.

இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக் கொள்கின்றது... அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறை சாற்றி நிற்கும்... அவனது குருதியை எத்தனை முறை இந்த மண்மாதா ஏந்தியிருப்பாள்... நினைத்துப் பார்க்கிறேன்... காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய்யெனக் கூறியது... அன்பாகவும்இ பண்பாகவும் ஆதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் வாய்ப்புக் கிட்டியது.

பசறையில் பயிற்சி வழங்கப்பட்டது... மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்து விட்டான் தினேஷ். இவனுடன் யசி என்ற போராளியும் தான்...! "நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில" பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்று விடவில்லை. சிரித்தபடியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழே நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச் செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போகஇ இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான்.

இவ்வாறு தான் செய்யும் சிறு தவறுகளாயினும் பெறும் தண்டனைகளை மகிழ்வுடன் ஏற்றுச் செய்யும் நிலைஇ அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

நாம் அனைவரும் செல்லமாகச் "சம்மாட்டி" என்றுதான் அழைப்போம். அதற்கு ஒருநாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன் சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித் துறையருகே இவனது அணி நின்றபோதுஇ பிறந்த மண் எதிரியால் சூழப்படுகிறது. கொதித்தெழுந்த அவன்... தனது கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும்இ கடைசித் தாங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. "என்ர கடைசித் தங்கச்சிக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடாஇ அவள் தான்ரா என்ர உயிர்" என்று தங்கை மீதுள்ள பாசத்தின் ஆழத்தை தனது சக நண்பனிடம் கூறி வைப்பான். அடுத்து மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் -எதிரியானவன் "பலவேகய - 2" எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் முளைத்தான் தினேஷ். இரண்டாம் நாட் சமரில் அவன் அடித்த தோட்டாக்களின் எண்ணிக்கை ஐந்து தான். "ஏன்ரா மச்சான் அடிக்கையில்லை?" எனக் கேட்ட நண்பனிடம் "இயக்கம் படுற கஷ்டத்தில கண்டமாதிரி அடிக்கக் கூடாது... ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஷ்ரப்படுகுது தெரியுமா?" எனஇ தனது சொற்பொழிவைத் தொடங்கி விட்டான்.

ஆம்.... எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான். கிலி கொண்டு அடிப்பான். ஏனென்றால் அவனுக்கு தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில் கூட நிதானமாகச் செயற்பட்டு எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்திஇ எவ்வளவு அவனிடம் எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக் கொண்டு வருவார்கள். "இலட்சியம் ஒன்றுதான் எங்களின் உயிர்..... அதற்காக நம் உயிர் போவது கூட எமக்குக் கவலையைத் தராது...."

சண்டை முடிந்தது சோகங்களை மனதில் தாங்கியவாறு சக தோழர்களின் சில உடல்களைத் தோழில் சுமந்தவாறும் மீளுகின்றோம்.

பழைய முகாம் களை கட்டுகிறது. "இனிப்புச் செய்வோமடா". ஒரு நண்பன் கேட்கஇ "ஓம் நான் நல்லாச் செய்வேன். தேவையானவற்றைக் கொண்டு வாங்கோ" எனக் கூறியபடி அடுப்பு வேலைக்கு அயத்தமானான் தினேஷ். சீனிஇ தேங்காய்இ மா வெனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்த சட்டியில் பாணியை கிளறி விட்டுக் கொண்டிருந்தான் அவன். காதைச் செவிடுபடுத்துபடியாக எங்கிருந்தோ ஒர் ஷெல் வந்து விழுந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டு வந்து பார்த்தபோதுஇ சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அதனைக் கேலிபண்ண ஆரம்பித்து விட்டார்கள்;.

"டேய் என்கென்ன செய்யத் தெரியாதோ...? கொண்டுவாஇ உங்களுக்கு இனிப்பு தந்தால் சரிதானே...?" மீண்டும் வேலைகள் ஆரம்பமாக சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தன் கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது.

அன்று ஒரு நாள்இ கடும் பயிற்சிக்குப் பின்னர் பல மாத வேவுப் பணியின் பின்னர் - தாக்குதல்த் திட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கிறது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடி பாய்கிறது. கடலில் பாயும் கோழையவன்இ கடற்புலிகளால் மடிகிறான். உதவிக்கு வந்த விமானம் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது கடலில் கொட்டுகிறது. விமான எதிர்ப்பு ஒருபுறம் முழங்க கரும்பச்சை பேய்களைத் தரையிலே எதிர்க்கஇ நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்கஇ எங்கும் புகைமயமாக இரத்தவாறு நிலத்திலே ஓடிக் கடலில் கலக்கிறது..... தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடல்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது...

சடுகுடு விளையாடுவதைப் போல் மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு மரணப்பாடை கட்டப்பட்டது.

"அண்ணை குறிப்பிட்ட இடத்தைப் பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன். இது சத்தியம்." உறுதியாகத் தளபதியின் கையில் அடித்துவிட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகிறான்.

குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கிறான். அங்கே... அங்கே... கடைசியாத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ் மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டுஇ பூநகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்.... அவனது தொலைத் தொடர்பு சாதனம் மட்டும் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தது.

"அண்ணை எனக்கு தந்ததைப் பிடிக்காமல் திரும்பி வரமாட்டன்" அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது.

அன்றொருநாள் எனது டயறியில்இ "என்ர நினைவாக இதை எழுதிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைத்திரு என்ன?" என்ற படி எழுத ஆரம்பித்தான்.

"நாம் அனைவருமே பல கொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையைச் சேர்ந்தவர்கள். பிரிவு எம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது"

இப்படிக்கு

தினேஷ்

அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

"ஓமடா தினேஷ்இ இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது.!"

நன்றி - த. பாரதி

Maaveerarkal - Heroes

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லெப்டினன்ட் கேணல் ஜீவன்

jeevan8mp.jpg

பிள்ளையான் சந்திரமோகன்

கதிரவெளி மட்டக்களப்பு.

மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி

கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்லஇ காடுகள் கூட கை கழுவி விடும்.

கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும்இ தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும் தவறு செய்து தண்டனை பெற்றதும் உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள் வயல் வரம்புகள் மின் கோபுரங்கள் மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.

அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.

இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

சிங்கபுர விடுதிப்பகுதி சிங்களச் சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ஆம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத் தளபதி.

இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர அதைச் சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் தெகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் கவச வண்டியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் ரீ55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம், அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். "எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூள் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.

ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோதுஇ ஆர்ப்பாட்டமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.

போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர் பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பங்கர் வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.

வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்து, பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும், சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

87இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90இன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்துஇ திட்டமிட்டுஇ களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

எதிரியின் மீது தாக்குதல்இ ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம்இ அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

மூன்றாம் ஈழ யுத்தம் ஆரம்பத்திற்கும் 97இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய அனு கூலஙக்ள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.

அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக் காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளிஇ சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள்இ மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக் கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை."

சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும்இ பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.

"ஜீவன் உன்ர குப்பியையும்இ தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்."

இதே கொழும்பு ரோட்டிலேயேஇ போராளிகளின் சுமைகருதி, தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்"

அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும்இ முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.

தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதிஇ அரவணைத்து ஆறுதல் தந்த தோழன்இ முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.

"ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்."

புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.

"எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்"

இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.

"பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு. நீங்கள் எழும்பலாம்."

இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக்இ கற்றோரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.

ரோட்டில் ஜீவன் கம்பீரமாய் கால்பாவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்துஇ தூரம் சொல்லிஇ தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

"நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்றுஇ கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழ யுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில்இ பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

ஜீவனின் நினைவுகளை மீட்கும் போதுஇ தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமே காரணம்.

பிறப்பினால் எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடபினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.

ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திரு நாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

நன்றி - இராசமைந்தன்

தகவல் - Maaveerarkal - Heroes

Link to comment
Share on other sites

நன்றி நர்மதா

தொடருங்கள்எமது நல்வாழ்வுக்காக தமதுயிரை தந்த மாவீரர்கள் பற்றி

Link to comment
Share on other sites

கரும்புலி மேஜர் சிறீவாணி

majorsrivaani7tx.jpg

சாந்தினி சின்னத்தம்பி

மட்டக்களப்பு

தாயின் மடியில் - 23.11.1975

தமிழிழ மடியில் - 05.07.2000

அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால் அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது.

அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது.

அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எதற்காகவும் கண் கலங்குவதில்லையே.

அவள் தன்னுடன் நிற்கின்ற அணிகள் செல்லும் சண்டைகள் அனைத்திற்கும் தானும் சென்றுவரவேண்டும் தன்னால் அதியுச்சமாய் தேசத்திற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட வேண்டும் என்ற ஆவலும் தான் நிறைந்திருந்தது.

அந்த ஆவலும் சுறுசுறுப்பும் அவள் இயக்கத்தில் இணைந்த நாளிலிருந்து என்றும் குறைந்ததே இல்லை. அணிகள் வேவிற்காகவோ அல்லது தாக்குதலுக்காகவே புறப்படுகிறது என்றால் அவள் ஆவல் மேலெழ தானும் அந்தக் களங்களிற்குச் செல்லவேண்டுனெத் துடித்துக் கொண்டிருப்பாள். அவளின் இடைவெளியில்லாத வேண்டுதலினால் பொறுப்பாளர் அவளிற்கு அந்த தாக்குதலில் சந்தர்ப்பம் கொடுத்தால் அவளது முகம் அடுத்த கணமே எண்ணற்ற மகிழ்ச்சியால் மலரும். புன்னகை தவழும் முகத்தோடு மற்றவர்களிற்கும் சிரிப்பூட்டிக் கொண்டு தானும் சிரித்து கலகலப்பாக இருப்பாள். இப்படி சண்டை ஒன்றிற்குச் செல்வதற்காய் சண்டை செய்பவள்தான் சிறீவாணி.

அவள் அதிக உயரம் இல்லாத தோற்றம் சிரித்து எல்லோரோடும் பழகுகின்ற சுபாவம். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அன்பாய்ச் சண்டை செய்வது அவர்களைக் கோபப்படுத்தி பின்பு அன்பு வார்த்தைகளால் நெகிழச்செய்து தாயாய் அரவணைக்கும் இயல்பு அடிக்கடி மகிழ்வாய்க் குறும்பு சொல்லி எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கவேண்டும் என்ற துடிப்பு எல்லாம் அவளிற்கு உரிய பண்புகள்.

சிரித்து கலகலப்பாய் அவள் திரிகின்ற போது மனதில் சிறுதுளிக் கவலையும் இல்லாதவளைப் போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் அவளிற்கு மட்டுமே அடையாளம் தெரியும் சோகங்கள் எத்தனையோ..?!

அவள் ஊரை விட்டு இயக்கத்திற்குப் புறப்பட்டு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு தடவை அவள் நேசித்த ஊரையோ வீட்டார்களையோ பார்க்க முடியவில்லை. இந்த ஏக்கம்தான் மழை விட்ட பின்னும் சூழ்ந்திருக்கும் கருமேகமாய் நினைவில் எங்கும் படர்ந்திருந்தது. என்ன செய்வது? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அவளின் ஊரும் உறவுகளும். விடுமுறையில் சென்றாலும் அவள் எப்படி அவளின் 'கழுதாவளை' கிராமத்தைச் சென்று பார்ப்பாள்? அங்கிருக்கும் உறவுகளோடு எப்படிக் கதைப்பாள்? அதுதானே பகலில் போராளிகள் நடமாட முடியாத இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமாயிருக்கிறதே.

அம்மா அப்பாவைப் பார்க்க வேண்டும்... அவர்களோடு பேச வேண்டும் என்ற மனக் குமுறலோடு அவள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடி பாசம் கொட்டி வளர்த்த ஆசைத் தம்பியைப் பார்த்துவிட வேண்டும் என்ற நினைவுகளும் நெஞ்சில் பலமாக அடித்துக் கொண்டிருந்தன.

மனம் விம்மி வேதனையில் தவிக்கின்ற போது அவளுக்குள் எழுகின்ற எண்ணங்களை கடிதமாக்கி அப்பா அம்மாவிற்கு அனுப்புவதற்குக் கூட முடியாது. அவள் அனுப்புகிற கடிதங்கள் இராணுவத்திடமோ அல்லது தேசத் துரோகிகளிடமோ அகப்பட்டு விட்டால் வீடு எதிர்நோக்கும் அவல நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் மனச்சுமையை தனக்குள்ளேயே சுமந்தபடி மற்றவர்களிற்காகச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

இராணுவங்கள் செய்யும் அநீதிகளுக்குப் பயந்து இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று நொந்து போகாமல் வேதனையத் தந்தவர்களையே வேக வைத்துவிட துடித்துக் கொண்டிருந்தாள் அந்த உன்னதமான போராளி.

"வண்டு" அவளை இப்படித்தான் செல்லமாக எல்லோரும் அழைத்துக் கொள்வார்கள். அது அவளுக்கு பொருத்தமாக வைக்கப்பட்ட காரணப் பெயர். சின்ன உருவம் திருதிருவென விழித்தபடியும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டும் துடியாட்டமாய் திரிகின்ற அந்த குறுப்புக்காரியின் செல்லப் பெயராக அது நிலைத்துவிட்டது. இப்போதெல்லாம் அவள் 'வண்டக்கா' என்றுதான் எல்லோருக்கும் அறிமுகம்.

எல்லாப் போராளிகளையும் தன் சொந்தங்கள் என நினைத்துக் கொள்ளும் அவள் சண்டையில் அல்லது மற்ற எந்தச் சூழ்நிலை என்றாலும் ஒவ்வொரு போராளிகளையும் அவதானமாகவும் அன்பாகவும் பார்த்துக் கொள்வாள். அவளின் வாழ்க்கையே அதிகம் வேவு நடவடிக்கைகளிலேயே கழிந்தது. வேவு எடுக்கின்ற நாட்களிலும் அவளின் துடியாட்டத்திற்கும் கலகலப்பிற்கும் குறைவே இல்லை.

இரவு வேவிற்காய்ச் செல்வதற்கு முன் ஓய்வாக கிடைக்கின்ற சிறு நேரத்திற்குள்ளும் எதிரியின் பிரதேசத்திற்குள்ளும் அருகில் இருக்கின்ற குளம் ஒன்றிற்குச் சென்று தாமரைக் கிழங்கு தோண்டிக் கொண்டு வந்து அதைச் சுட்டு எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டு மகிழ்வதில் அவளுக்கோர் திருப்தி. தாமரைக் கிழங்கிற்காகச் சென்றால் இராணுவத்தின் பாதுங்கித் தாக்கும் அணியோ அல்லது வேவு அணியோ அவர்களைக் கண்டு தாக்குதம் சந்தர்பங்கள் இருந்தாலும் அதை முறியடித்து அந்தக் கிழங்குகளை எடுத்து வந்து சாப்பிடுவது அவளிற்கு ஒரு சவாலைப் போல விளையாட்டாகவே நினைத்து தோழிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்.

இருளே இல்லாத நிலவு நாட்களில் கூட வேவிற்காக அவள் சென்று வந்திருக்கிறாள். வேவு பார்ப்பது பாதை எடுப்பது இப்படி எதுவென்றாலும் அவளும் அந்தப் பணிகளில் ஒருத்தியாக முன்னிற்பாள். சரியான துணிச்சல்க்காரி. எல்லாவற்றையும் விட அவளுக்குள்ளேயே குமுறுகின்ற தேசப்பற்று அதை விரைவாக வென்றுவிட வேண்டும் என்கின்ற ஆர்வம் நினைத்ததை உறுதியாக செயற்படுத்தி விட வெண்டும் என்கிற தீவிர எண்ணம் எல்லாம்தான் அவளை அவளின் பக்கத்தில் வேகமாகிக் கொண்டிருக்கிறது.

மட்டக்களப்பிலிருந்து தாக்குதல் அணிகள் யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்தப்பட்டபோது இவள் வேவு அணியோடு இணைந்தே வந்திருந்தாள். மட்டக்களப்பின் காட்டுப்பாதைகள் வழி எம் - 70 துப்பாக்கியைத் தோளிலே சுமந்தபடி அலைந்து திரிந்த அவளது பாதங்கள் பல களத்தில் கலந்து கொண்ட அவளின் கால்கள் யாழ். களமுனைகளிலும் நடந்தன. யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்த ஆரம்ப நாட்களிலேயேதான் அவள் கரும்புலியாக வேண்டு என்ற விருப்பத்தை தலைவருக்குத் தெரிவித்தாள்.

ஒருநாள்.....

இவள் நிற்கின்ற முகாமிலே அணிகள் ஒன்றானபோது சிறு பிரிவாய் இன்னுமொரு அணியும் ஒன்றாகி இருந்தது. "வண்டு" அருகில் நிற்பவர்களிடம் இரகசியமாக கேட்டு அவர்கள் எந்த அணியினரென தெரிந்து கொண்டாள். அவர்கள்தான் கரும்புலி அணிக்குத் தெரிவாகி இருப்பவர்கள் என்று அறிந்ததும் உடனேயே அந்த அணியோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சிற்குள் நெடுநாளாய்ப் பூட்டி வைத்திருக்கும் இலட்சியம் அதுதானே... ஆனால் அவளது வேண்டுதல்களை அப்போது யாரும் ஆதரிக்கவில்லை. மிகச் சிறிய தோற்றம். சண்டைகளில் முதிர்ச்சி பெறாத நிலை இப்படி எவ்வளவோ காரணங்களைக் கூறினாலும் அவள் கேட்பதாக இல்லை.

"கரும்புலியாய்ப் போய் நிறையச் சாதனைகள் செய்யவேணும்" இந்த உறுதியில் சிறிதும் குறையாது இருந்தாள். அன்றில் இருந்து தலைவரின் அனுமதியைப் பெற்று ஆரம்பமான அவளின் கரும்புலியான பணிகள் பல களங்களிலும் தொடர்ந்தன.

அனைத்து ஆயுதங்களையும் சிறப்பான முறையில் கையாளக் கூடியவளும் சிறந்த நீச்சல்காரியாகவும் திகழ்ந்த சிறீவாணி அதிகமான களங்களிற்கு 'லோ' வுடனேயே சென்று வந்தாள்.

"நான் எல்லாப் பொசிசனில் இருந்தும் 'லோ' வால அடிச்சிட்டன்" இப்படிக் கூறினாலும் அவளும் அந்த ஆயுதமும் நிறைய தேசத்திற்கு செய்து காட்டவேண்டும் என்ற இலட்சிய வேட்கை அவள் வார்ததைகளில் யாருக்கும் தெரியாமல் மெல்லியதாய் இழையோடும்.

கரும்புலியாய் இணைந்து இலக்குத் தேடி அலைந்த நாட்களில் ஆனையிறவு தளத்தினுள் இலக்கிற்காக வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாள்.

மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைக்கேணி இராணுவ முன்னரங்க நிலைகளை ஊடுருவி மணல் பிரதேசத்திலும் கால்தடம் படாது நடந்து சென்று சின்னச் சின்ன நாவல் மரங்களையும் கன்னாப் பற்றைகளையும் மறைப்பாக்கி மணல் திட்டுக்களில் மறைவாகத் தங்கியிருந்துஇ கொண்டு சென்ற சிறிதளவு தண்ணீரையே கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்து நாக்கு நனைத்து உலர் உணவுப் பைகளோடே ஐந்தாறு நாட்களின் பசிப் பொழுதுகளைப் போக்கி இராணுவ முகாமிற்குள்ளேயே இருந்து வேவுத் தகவல்களைத் திரட்டி மீளுகின்ற சிரமமான பணியது.

சிறிவாணிக்கு அந்தப் பணியே நன்கு பிடித்திருந்தது. மண்ணிற்காகச் சுமந்து கொள்கின்ற ஒவ்வொரு துன்பங்களும் இன்பமானவைகள் தானே... சுமைகளைச் சுகமாக நினைத்து பின் சுமப்பது அவளிற்கு சிரமமானதாக இருக்கவில்லை.

அந்த ஆனையிறவின் வேவிற்காக அலைந்த நாட்களில் ஒரு நாள் முன்னரங்குகளால் ஊடுருவி உள்நுளைந்த போது எதிரி விழிப்படைந்து விட்டான்.

அவர்கள் முன்னணி நிலைகளிலிருந்து சில காலடி துாரம் நடந்திருப்பார்கள் காவலரண்களில் இருந்து செறிவான சூடுகள் அவர்களை நோக்கி வந்தன. நிதானித்து எதிர்ச் சூடுகளை வழங்கி நிலைமைக்கு ஏற்றவாறு நிலையெடுத்துக் கொள்ள நேர அவகாசம் இருக்கவில்லை. எதிர்பாராத இந்தக் தாக்குதலினால் அணி நிலை குலைந்து போயிருந்தது.

தாக்குதலின் எதிர்ச் சூடுகளை வழங்கிய படி இவளும் இன்னும் இரு போராளிகளும் சற்றத் துாரம் தள்ளி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒரு தோழிக்கு காலில் துப்பாக்கி ரவை பட்டிருந்தது. அவளால் காலை எடுத்து வைக்கவோ அசைக்கவே முடியாது இருந்தது. பல தடவை முயற்சி செய்து பார்த்தாள். அதுவும் பலனளிக்கவில்லை.

இந்தக் களச் சூழலில் அணியின் மற்றவர்களைத் தேடுவதற்கும் எதிரியின் நிலைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கண்டறிவதற்கும் சிறீவாணி தனித்து ஒருத்தியாகவே செயற்படவேண்டியிருந்தது. எந்தவித தயக்கமும் இல்லாது கடும் சிக்கல் நிறைந்த இராணுவப் பிரதேசத்தினுள் தன் தேடுதலை நடாத்தி இன்னுமொரு போராளியையும் கண்டு கொண்டாள்.

அதன் பின்னும் அங்கே நிற்பவர்கள் ஒவ்வொருவரினதும் செயற்பாடும் மிக முக்கியமானதாய் இருந்தது. இராணுவப் பிரதேசத்தைக் கடந்து விழுப்புண் பட்ட போராளியை கவனமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.

ரவை பட்ட காலில் பெரிதான சிதைவை ஏற்படுத்தி இருந்தது. எலும்பை உடைத்து தசைகள் வெளியே தெரிய இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் அந்தப் புண்ணுடன் எழுந்து நடக்க முடியாது தவழ்ந்து செல்வதென்றாலும் தவழ்கின்ற போது காயப்பட்ட இந்தக் காலை வெப்பில் கொடிகள் பிய்த்திழுக்கும். தடிக்குச்சிகளும் மண்ணும் காயத்தோடு உரசி வேதனையை இன்னும் அதிகமாக்கும். ஒவ்வொரு தடவையும் காயம் பட்ட அந்தப் போராளி தவழ்கின்ற போதும் அவளுடன் வர மறுக்கின்ற காலை கையால் இழுத்தபடி நகரும் அந்தப் போராளியின் நிலை வேதனையாய் இருந்தது.

சிறீவாணி அந்தப் போராளிக்காக தானும் அந்தப் போராளியைப் போலவே தவழ்ந்து வந்தாள். தோழியின் கால் சிக்குப்படுகின்ற நேரங்களில் அவற்றில் நோவேற்படாது பக்குவமாய்த் துாக்கி விட்டபடி தொடர்ந்தாள். காயப்பட்ட போராளியின் ஆயுதமும் வேறு பொருட்களும் சேர்த்து சிறீவாணிக்கு பாரம் அதிகமானாலும் அவள் மற்றவர்களுக்காக உதவுகின்ற செய்கையிலிருந்து தளரவில்லை. அந்த மணற் பிரதேசத்தில் அவ்வளவு அவ்வளவு பொருட்களோடும் காயபட்ட தோழிக்காகத் தவழ்ந்து வருவது சுலபமானதாக இருக்கவில்லை.

பெருங்கடலில் இறங்கி நடக்கத் தொடங்கிய போது இவளின் குறைந்த உயரம் இடையிடையே தண்ணீரில் மூழ்கி எழத்தான் செய்தது.

இரவிரவாக தண்ணீருக்குள்ளால் நகர்ந்து கரையை வந்தடைந்த போது காயப்பட்ட போராளி நினைவிழந்து இருந்தாள்.

எல்லோரதும் விறைத்த உடல்கள் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் அவர்கள் போய்ச்சேர வேண்டிய தூரமோ அதிகமாய் இருந்தது. காயப்பட்ட போராளிக்கு முதலுதவி செய்ய வேண்டும். நிலைமையை உடன் கட்டளை மையத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். தொலைத் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைத் தொடர்பு சாதனம் தண்ணீர் பட்டதால் செயலற்றுப் போயிருந்தது. ஆனால் இன்னும் சில மணித்துளிகளில் விரைவாகச் செயற்படாவிட்டால் சக தோழியின் நிலை ஆபத்தாகிவிடும் என்பதை அந்தச் சூழல் தெளிவு படுத்திக் கொண்டிருந்தது.

இந்தத் தகவல்களைச் சொல்லி உடனே முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. இத்தனை உடற் சோர்வுகளோடும் சிறீவாணிதான் அந்த நீண்ட துாரத்தை விரைவாய் ஓடிச் சென்றடைந்து நிலைமையைச் சொல்லி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து உரிய நேரத்தில் உதவினாள்.

இப்படி எந்த நேரத்திலும் சோராதவள் எவ்வளவு இறுக்கத்திலும் சளைக்காதவள் தேச விடுதலையென்ற ஒன்றையே மூலதனமாக்கி இயங்கிக் கொண்டிருப்பவள் மற்றவர்களின் துன்பங்களுக்காக வருந்துவதோடு மட்டுமல்லாமல்இ அவற்றின் காரணங்களைத் தீர்ப்பதற்கு உழைத்துக் கொண்டிருப்பவள் அதனால்தானே தனக்கு எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் மற்றவர்களின் வேதனைகளை துன்பங்கைளப் போக்குவதற்கு போரை விரைவாய் முடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆனையிறவுக் களத்திற்கு அவளோடு களமாடச் சென்றவர்கள் திரும்பவில்லை என்ற ஏக்கம் நெடுநாளாய் நெஞ்சுக்குள் உறங்காமல் இருந்தது.

அவர்களைப் பிரிந்து அவள் சாதனை புரிந்து விட்டு வந்திருந்த நாட்களில் அவளின் முகத்தில் மலர்ச்சியே இருக்கவில்லை. சோகம் சூழ்ந்து வாடிப்பொய் இருக்கும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பூப்பறித்து வந்து மாலை தொடுத்து அவர்களுக்குச் சூட்டிய பின்னர்தான் வழமையான பயிற்சிப் பணிகளில் ஈடுபடுவாள்.

பலவர்ணப் பூக்களிலும் மாலை மிக அழகாகக் கட்டுவாள் தன் கூடவே இருக்கின்ற போராளிகளுக்கும் மாலை கட்டப் பழக்குவாள். (இப்போது அவள் மாலை கட்டப் பழக்கிய தோழிகள் அவளின் திருவுருவப் படத்திற்கு மாலை சூட்டுகின்றனர்.) அந்த தோழிகளின் நினைவினிலேயே மூழ்கியிருப்பவள் நெஞ்சுக்குள் விடுதலைக் கனவின் கனதி இன்னும் அதிகமானது.

அவள் நினைத்து வந்த இலட்சியத்திற்காக உழைக்க வேண்டும். கூடவே அவளோடு களமாடிப் போனவர்களின் விடுதலைக் கனவையும் சுமக்க வேண்டும். அதற்காக தான் ஒவ்வொரு சண்டைகளிலும் தவறாது பங்கெடுத்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வாள்.

சிறீவாணி கரும்புலிகள் அணியில் இணைந்து கொள்வதற்கு முன்னும் கரும்புலிகள் அணியில் இணைந்து செயற்படத் தொடங்கிய நாட்களிலும் அவள் பல சண்டைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியுள்ளாள்.

அவள் கரும்புலியாகக் கலந்து கொண்ட இறுதித் தாக்குதல் பளை ஆட்டிலறித் தளங்கள் மீதான கரும்புலித் தாக்குதலாகும். பதினொரு ஆட்டிலறிகளைத் தகர்த்து புதியதொரு பரிமாணத்தை ஓயாத அலைகள் - 3 காலப்பகுதியில் ஏற்படுத்திய கரும்புலிகள் அணியில் சிறீவாணியும் ஒருத்தி. அவள் அந்தத் தாக்குதலுக்கு "லோ" வோடுதான் சென்றிருந்தாள்.

அணிகள் வேகமாக அந்தத் தளப்பிரதேசத்திற்குள் நுழைவதற்கு இவளின் இலக்குத் தவறாத சூடு மிக முக்கியமானது. கரும்புலி மேஜர் சுதாஜினி இக் களத்தில் வீரச்சாவடைய அவளது பணியை இவளே ஏற்றுத் தொடர்ந்தாள். முதல் பெண் தரைக் கரும்புலி வீரச்சாவடைந்த தாண்டிக்குளச் சண்டை தொடக்கம் கரும்புலிகள் அணி கலந்து கொண்ட அதிகமான தாக்குதல்களில் இவளும் பங்கெடுத்திருக்கிறாள். ஆனால் இந்தக் களத்தில் தான் களம் ஏற்படுத்திய வீரவடுவாக வெடியதிர்வுகள் பாரிய உடற்தாக்கத்தை விளைவித்திருந்தது. காதுகளிற்குள்ளிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடல் தனது இயல்பான சமநிலையை இழந்திருந்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது சிறீவாணி தொடர்ந்தும் தன் பணிகளில் விரைவானபடியே இருந்தாள்.

தனது இருபத்தைந்து வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்ககையை போராட்டத்தில் கழித்தவள் அவளிற்கு இந்தக் களச் சூழல் புதிதாக இருக்கவில்லை களத்தில் ஒவ்வொரு அங்குலத்தையும் நுட்பமாக அறிந்து வைத்திருந்தாள். ஒவ்வொரு களங்களிலும் அவள் சென்று வருகின்ற போது வீரத்தின் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறந்துவிட்டே வந்தாள்.

அவளது வாழ்க்கையில் ஐந்து வருடங்களைக் கரும்புலியாய்க் கடந்தவள்இ நீண்ட நாட்களாக அவளின் (கரும்புலிக்கான) இலக்கிற்கான காத்திருப்பு அதற்காக அவள் பெற்றுக் கொண்டிருந்த கடுமையான பயிற்சிகள் எல்லாமே அவளிற்குள் இந்த வைரமான உறுதியை வெளிக்காட்டின.

"நிறையச் செய்ய வேணும்இ தேசம் எதிர்பார்ப்பது போல சாதிக்க வேணும். அதற்குப் பிறகுதான் கதைக்கவேணும்"

இதுதான் அவள் தனது அடக்கமான வீரத்திற்கு கூறுகின்ற முன்னுரைகள் அவள் தன்னைப்பற்றி தான் சென்ற தாக்குதல்கள் பற்றி யாரோடும் பேசியதில்லை. தன் கூட இந்தவர்களைப் பற்றியே எப்போதும் போசிக் கொள்வாள்.

ஓயாமல் வீசிக் கொண்டிருந்த இந்தப் புயல் ஓய்ந்துவிடப் போகின்றதை யாருமே எதிர்பார்த்திராத அந்த நாள்.

வழமைபோல முகமலர்ச்சியோடு கறுப்பு வரிச் சீருடையோடு எல்லாத் தோழிகளுடனும் சிரித்துக் கலகலத்த படி இருக்கிறாள். 05.07.2000 அன்று கரும்புலிகள் நாளல்லவா...? கூட இருந்தவர்களை நினைத்து அஞ்சலிப்தற்காய் அந்த மைதானத்தில் கூடியிருந்தார்கள். நிகழ்வோடு ஒன்றாய் எல்லோரையும் போலவே அவளும் மெய்சிலிர்த்துப் போயிருந்தாள்.

அந்தக் கணத்தில்தான் எதிர்பாராத விபத்து அங்கே நிகழ்ந்து விடுகிறது. சாதாரண காயம் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவளிற்குத் தெரியும்... நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட காயமென்று. தன் சாவின் விளிம்பைத் தெரிந்து கொண்டும் சாதிக்கத் துடிக்கின்ற கரும்புலியல்லவா அவள். சாவு நெருங்கி விட்டதுஇ அவள் நினைத்தது போல களத்தில் சாதிக்கவில்லையே... களத்திலேயே தன்சாவு வரவில்லையே... என்ற ஏக்கம் முகத்தில் வாட்டமாய் இருந்தது.

விழிகள் எதையோ ஆர்வமாகத் தேடின. அவள் அருகில் நின்ற தோழியிடம் சத்தமற்ற குரலில் "அண்ணாட்டச் சொல்லுங்கோ நான் பொய்சன் எடுத்துக் கிடந்துதான் காயப்பட்டனான் என்று..." அந்த இறுதிக் கணத்திலும் தலைவரிற்கு இறுதியாக இந்தச் செய்தியைத்தான் சொல்லி விட்டாள்.

காயப்பட்டதிலிருந்து அவள் மூச்சு வாழ்ந்த ஒரு சில மணி நேரத்திற்குள் அவள் திரும்பத் திரும்ப உச்சரித்த வார்த்தைகள் இரண்டு ஒன்று அவள் இதயம் முழுவதும் சுமக்கின்ற தலைவனை மற்றது அவள் பார்க்கத் துடித்த ஆசைத் தம்பியை.

தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள்

தகவல் : Maaveerarkal - Heroes

Link to comment
Share on other sites

நன்றி நர்மதா

சளைக்காது உங்கள் பணிகண்டு மகிழ்ச்சி.

தொடர்ந்து மாவீரர்களின் வரலாறுகளை இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

2ம் லெப். பூபாலினி.

picpoobalini1ed.jpg

ஆனந்தகுமாரி.கோபாலபிள்ளை

வேலணை

வீரமரணம் - 29.08.1998

ஓயாத அலைகள் 02 இல் வீரமரணம்

2ம் லெப்ரினட் பூபாலினி அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக செம்மையாக சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.

அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில் குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும் வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.

ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால் ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் தான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். போராட்ட பணியே ஆழமான அர்ப்பணிப்பினை வேண்டிநிற்கும் பணி. அதனுள்ளும் அவள் ஆழமாய் சென்று அர்பணத்துள் அர்ப்பணம் செய்வாள்.

எதனையாவது செய்து முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்வாளானால் அதனைச் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை நடக்கும்.

அவளின் ஒழுங்கிற்கு ஒரு உதாரணம்: நடைபெற்ற ஓட்டப் போட்டி ஒன்றில் பூபாலினியும் கலந்துகொண்டாள். ஆள் கட்டை அதிகம் ஓடமாட்டாள். அகலக்கால் வைத்தால் முடியாதுதானே! ஆனாலும் கலந்துகொண்டாள் தானும் கலந்து கொள்வதாய். அவளுக்குத் தெரியும் முதல் 3 இடங்களிற்குள்ளும் இடம் கிடைக்காது என்று. ஆனாலும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றே கலந்துகொண்டாள்.

எதுவென்றிலும் கலந்து கொள்ளாதிருப்பதனை விடவும் கலந்து கடை நிலையை அடைந்தாக்கூட அதுகாரியம் என்ற அவள் நினைத்திருக்க வேண்டும்.

முதல் மூன்று நிலைகளுக்குள்ளும் வரமுடியாதென்று கணக்கிட்டுக் கொண்டோர் போட்டி நிறைவு பெறுவதற்கு முன்னராகவே நின்று விட இவள் மட்டும் போட்டிக்குரிய அத்தனை ரவுண்டு களையும் ஓடி முடித்த பின்பே ஓய்வெடுத்தாள்.

ஏன்ரியப்பா நின்றிருக்கலாமே! ஏன் உந்த வீண் அலைச்சல் என்றபோது அவள் கூறினாள்:

எதுவொன்றிலும் கலந்துகொண்டாலும் அது அது முடியும் வரையில் அது எத்தனையாவதாக வருவதானாலும் சரி ஓடிமுடிக்க வேண்டும் என்று. அதுதான் ஒழுங்குமுறை அது தான் அவள்.

பூபாலினி அவள் தனக்கென தனித்துவமான சில குணவியல்புகளைக் கொண்டிருந்தாள். அவளது அக் குணவியல்புகளே அவளை பரோபகாரி அம்மா களஞ்சியம் அழுத்தம் தாங்கி விசுவாசம் உபதேசி என அவளைப் பட்டப்பெயர்களால் அலங்கரித்துக் கொண்டன.

பரோபகாரி யாரிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்காவள். ஓய்வாய் இருப்பது அவளுக்க ஒத்தவராது. எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும்.

உணவுப் பண்டங்கள் வாய்ப்பாய்க் கிடைக்கிற போது பதுக்கிப் பத்திரப்படுத்தி வேண்டும்போது பகிர்ந்தளிப்பாள். அதிகமாக இருப்பின் மீளவும் அவை பதுக்கப்படும். வேண்டும் போது வெளிப்படும். இதற்காய் அவளுக்குக் கிடைத்த மகுடங்கள் தான் பரோபகாரி களஞ்சியம் அம்மா

சகதோழிகள் நோய்வாய்ப்படுகின்ற போதும் அவர்கள் ஏதேனும் பற்றாக்குறைகளுக்கு உட்படுகின்ற போதும் அவளிடம் உள்ளவை அவர்களுடையதாகும். சலிப்பின்றி சங்கடமின்றி பராமரிப்புத் தொடரும். அழுத்தங்கள் தாங்கிக் கொள்ளும் மனோபவத்தினை அவள் இயல்பாய்க் கொண்டிருந்தாள். அவை அத்தனையாலும் தான் அவள் விசுவாசி என்றும் அழைக்கப்பட்டாள்.

அத்தனை விசுவாசம் கொண்ட விசுவாசி ஒருமுறை தவறியும் போனாள் தான்.

ஒருவன் விழாமல் நடந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதும் எழுந்து நடந்தான் என்பதே பெருமை என்ற ஆண்றோர் வரியோ.

விழுமின் எழுமின் கருதி கருமம் கைகூடும் வரை உழையின் என்ற விவேகானந்தர் வரிகளை மனங்கொண்டாலோ என்னமோ அவள் தன் தவறை உணர்ந்துகொண்டாள்.

எந்தவொரு அமைப்பிலும் இரகசியக் கசிவு என்பது தெரிந்தோ தெரியாமலோ இடம்பெறுமாயின் அது பெரும் விளைவகளை உண்டுபண்ண வல்லது. அவள் உண்மையை உணர்ந்து கொண்டாள்.

போர்க்காளப் பணித்தேர்வு தனக்கு வேண்டியதே என்பதனை உள்ளிருத்திக் கொண்டாள்.

10.06.1995 இல் போராட்டவாழ்வில் இணைந்து பயிற்சி முடித்து சூரியக்கதிர் - 02 இல் காவும் குழுவாய் போர்கள அனுபவமும் பெற்றிருந்த அவளிடம் இயல்பாயிருந்த பொறுப்புணர்வும் செயல்திறத் தேர்ச்சியும் அவள் கற்றுக் கொண்டிந்த தட்டெழுத்து நெறியும்தான் அவளை அலுவலகப் பணிக்காய் உள்ளீர்த்துக் கொண்டிருந்தது உண்மை. செயல்திறனால் உழைமின் உழைமின் என்று உழைத்தும் உண்மை.

விழுமின் எழுமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என்ற வரிக்காய் விழுந்தவள் அல்ல என்றாலும் விழுந்தாள் என்பது அதுபோன்றே என்பதனைவிட அதனிலும் வேகமாய் எழுந்தாள் என்பதும் அதேபோன்றதான உண்மையே.

விழுதலில் சினந்து ஓர்மம் உட்புகுந்து அவள் வேகம் விருட்சமாகிக் கொண்டது.

ஜெயசிக்குறுவில் தானும் ஜெயிப்பதாய் கங்கணம் கட்டிக்கொண்டாள் போலும் அவளின் பொறுமையும் நிதானமும் வேவுப் பணிக்காய்த் தேர்வாக்கிகொண்டது. குறுகிய காலத்திலேயே அவள் அவ் அணியின் 2ம் அணித்தலைவியானாள்.

பண்டாரிகுளத்திலிருந்த புளியங்குளம் புதூர் விஞ்ஞானகுளம் கனகராயன்குளம் கிளிநொச்சி மாங்குளம் ஓலுமடு அம்பகாமம் ஓயாத அலைகள் 02 என அவள் பணி பரந்து விரிந்து கொண்டது. அது பனிச்சங்குளப் பகுதியில் வைத்து எல்.எம்.ஜி கனரகப் பயிற்சி வழங்கி மாங்குளப் பகுதியில் எல்.எம். ஜி கனரக லோட் ராக்கிக் கொண்டது.

ஓயாத அலைகள் 02 ற்கு அவள் எல்.எம்.ஜி கொண்டே களமிறங்கினாள்.

ஓயாத அலைகள் 02 களமிறக்கம் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் வளர்ந்த வாழ்ந்த இடமது.

அவள் பருவமறிந்ததிலிருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்திருந்தாள். பிறந்தது வேலணையில் என்றாலும் அவள் வாழ்வு அவ்வப்போது நடந்துகொண்டிருந்த இடப்பெயர்வுகளுக்குரிய விதமாய் கணேசபுரம் பரவிப்பாஞ்சான் வட்டக்கச்சி கிருஸ்ணபுரம் ஆனந்தபுரம்....என்று நகர்ந்து கொண்டபோதுதான் அவள் நாலும் உணர்ந்தாள். நமக்கொருநாடு நாடாயிருக்க வேண்டுமென்று கணேசபுரத்தில் ஆரம்பித்த அவள் கல்வி வாழ்வு கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை கிளிநொச்சி கனிஸ்ர வித்தியாலயம் (தற்போது கிளிநொச்சி மாகா வித்தியாலயம்) வேலணை நடரலசர் வித்தியாலயம் மீளவும் கிளி-கனிஸ்ர வித்தியாலயம் வேலணை வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என்று மாறி மாறி அலைப்புக்குள்ளானது. அந்நேரத்திலும் கூட ஒருவாறு கா.பொ.த சாதாரண தரத்தை நிறைவாக்கிக் கொண்டு தொழிற்பயிற்சியாய் தையலும் சுருக்கெழுத்தும் தட்டெழுத்தும் பயின்று கொண்டாள்.

எழுதுவினைஞையாய் சிலகாலங்கள் தனியார் நிறுவனங்களில் பணியும் செய்தாள்.

பணியைப் பணியாய்ச் செய்யும் தேசமதில் தான் இல்லை என்பதனை அவள் புரிந்து கொண்டபோது தேசம் இருப்பை நிலைநிறுத்தும் போராட்ட வாழ்வில் அவள் தன்னை இணைந்துக் கொண்டாள். ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணமடைந்தாள்.

திரு.திருமதி கோபாலபிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் நான்காவது புதல்பியான ஆனந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட 2ஆம் லெப்ரினட் பூபாலினி ஆலங்குளம் துயிலறையில் துயின்று கொண்டிருக்கிறாள். அவள் இலட்சியம் ஈடேறும் சமாதானம் சகவாழ்வு அல்லாதபோதும் அவர்கள் இலட்சிய நெருப்பு சகவாழ்வு கொடுக்கும். அவள் அவள் போன்றவர்கள் இலட்சியச் சாவால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இலட்சிய நெருப்பு இமயம் தொடும் ஈழத்தைப் பிறப்பாக்கும்.

நன்றி - அகநிலா

தகவல் - Maaveerarkal - Heroes

Link to comment
Share on other sites

மாவீரர் தொடர்பான இன்னொரு பதிவுடன் உங்களை காண்பதில் மகிழ்ச்சி-!

நன்றி நர்மதா- தொடருங்கள்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல்கள் நர்மதா...தொடருங்கள்...என்னிடமு

Link to comment
Share on other sites

மாவீரர் தொடர்பான கட்டுரைகளை வாசிக்க்கும் போது எனது அம்மா முகத்தில் கூட எனால் சில நேரம் விழிக்க முடியவில்லை :cry:

எனது அம்மா சொல்வர்கள் அடிகடி என்னை விட தாய் நாட்க்காக இறந்தா மாவீரர்கள் மேல் ஆனவர்கள் என்று :cry:

அதன் அர்த்தம் 12 வயதில் புரியவில்லை :cry: :cry:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லெப் கேணல் அமுதசுரபி

amuthasurabi19wo.jpg

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா

சின்னப்பு நந்தினி

யாழ்பாணம்.

மண்ணின் மடியில் : 26-10-2001

கடற்புலிகளின் மகளீர் படையணித் துணைத் தளபதி

தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில் அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

"இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத் தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப் பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள் "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

"அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் எமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் தாக்குதலை நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில் காட்டியவாறு:

"அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.

முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடா நாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர 'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டாளர்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்ணிமை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும்இ எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுத்த சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார் படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில் "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப் பெடுத்து திறமையாகச் செய்வார்."

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை...

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு விழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணித்தவாறு.

களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ளஇ எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்டு அசைய மறுக்க படகைக் கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும் குருதியுமாய் எம் தோழர் தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப் பேச்சின்றி எம்மை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களது படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர எதிரிப் படகு வந்து எமது படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்து வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட புதியவர்களைப் படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல் எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது.

அல்பா எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய்இ காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய்இஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...

தகவல் : Maaveerarkal - Heroes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா நல்லமுயற்சி தொடரவும்,

இதன் மூலம் ஒவ்வொரு மாவீரர்களின் வரலாறுகளையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.