Jump to content

'மங்கள விளக்கு ஏற்றல்' பற்றிய ஓர் பார்வை


Recommended Posts

'மங்கள விளக்கு ஏற்றல்' பற்றிய ஓர் பார்வை

தமிழர்களாகிய நாம் எந்த ஓர் நல்ல காரியம் செய்ய தொடங்கும் போதும் மங்கள விளக்கு ஏற்றியே ஆரம்பிப்பது வழக்கம். அதன் பொருள் என்ன? ஏன் இப்படி செய்கின்றோம்?

முதலில் விளக்கு என்றால் என்ன?

விளக்கு என்பது: ஒன்றை தெளிவுபடுத்துதல், புரிய வைத்தல், தெரியாத ஒன்றை தெரியவைத்தல், ஒளிவீசுதல் ஆகும்.

விளக்குகளில் பல வகை உண்டு. அவற்றில் சில:

- ஒற்றைக் கால் விளக்கு: ஓர் பெண் தன் இரு கரங்களிலும் விளக்கை ஏற்றி ஓர் காலை பின்னோக்கி நீட்டி மறு காலை முன் நோக்கி மடித்து இரு கரங்களிலும் உள்ள விளக்கை முன் நோக்கி நீட்டினால் எப்படி இருக்குமோ அந்த உருவில் அமைந்ததே ஒற்றைக் கால் விளக்கு.

- தூண்டாமணி விளக்கு: இதை மணி போன்று ஒர் கயிற்றிலோ, கம்பியிலோ அல்லது சங்கிலியினாலோ கட்டி தொங்க விடுவார்கள். இதில் விளக்கு கீழ்பக்கத்தில் இருக்கும். முட்டி போன்ற ஒன்று மேல் பகுதியில் இருக்கும். அந்த முட்டியில் தான் கட்டி தொங்க விடுவார்கள். அந்த முட்டியின் உள்ளே எண்ணையை விட்டு அதன் வாய்ப்பகுதியில் விளக்கை பொருத்தி தலை கீழாக தொங்கவிடுவார்கள். விளக்கு சிறியதாக இருக்கும் அந்த விளக்கில் உள்ள எண்ணைய் குறைய குறைய முட்டியில் இருந்து தானாக எண்ணைய் விளக்கின் உள்ளே இறங்கும். விளக்கு நிரம்பியதும் முட்டியில் இருந்து இறங்கும் எண்ணைய் நின்றுவிடும். இந்த நிகழ்வினால் ஏற்றிய விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நாம் எண்ணைய் விடவோ திரியை தூண்டவோ தேவை இல்லை. மணி போன்று தூண்டாமல் எரிவதினால் தூண்டாமணி விளக்கு என்பர்.

- நிலைவிளக்கு: இவை கூடுதலாக கோவில்களில் தான் உள்ளன. இவை கதவின் நிலையை சுற்றி சின்ன சின்ன விளக்குகளாக இருக்கும். இதை நிலைவிளக்கு என்பர்.

- குத்து விளக்கு: இவை நிலைக்குத்தாக இருக்கும். கீழ்பக்கம் பாதம் நடுவில் நீண்ட தண்டு மேல்பக்கம் விளக்கு. செங்குத்தாக நிற்பதால் இதை குத்து விளக்கு என்பார்கள்.

இதை ஏன் ஓர் நல்ல காரியம் செய்யும் போதும் செய்கின்றோம்?

நாம் மங்கள தீபம் ஏற்றும் போது ஐந்துமுகம் கொண்ட குத்துவிளக்கில் தான் ஏற்றுவது வழக்கம். இதன் பொருள். நாம் இந்த பூமியில் பஞ்சபூதங்களின் துணைகொண்டே வாழ்கிறோம். இவற்றில் ஒன்றேனும் இல்லை என்றால் நம்மால் இங்கு வாழமுடியாது. ஏன் இப்புவியில் எந்த உயிரினமும் வாழமுடியாது. ஆகையால் நாம் செய்யும் எந்த காரியத்துக்கும் பஞ்சபூதங்களின் உதவி தேவை. ஆகையினால் இந்த பஞ்சபூதங்களையும் எங்கள் முன் நிறுத்தி சாட்சியாக, உதவியாக கொண்டே நாம் நல்ல காரியங்களை செய்ய வேண்டும். ஆகையினால் அவர்கட்கு முதல் மரியாதை செலுத்தும் நோக்கில் ஐந்து தீபம் ஏற்றுகின்றோம்.

தீபம் ஏற்ற நமக்கு தேவையானவை:

திரி, எண்ணைய், விளக்கு, தீபம்.

- விளக்கு என்றால்: ஒன்றை நமக்கு தெளிவு படுத்துதல்.

- திரி என்றால்: அலைச்சல், உடலை வருதுதல்.

- எண்ணைய் என்றால்: எள் + நெய்

- தீபம் என்றால்: ஒளி தெளிவு

தீபம் ஏற்றுவதன் பொருள்:

- திரி: நாம் அலைந்து திரிந்து பெற்ற அனுபவங்களில்

- எள்ளு: எள் அளவும் சிறிய விடையத்தை கூட விடாமல்

- நெய்தல்: அவற்றுடன் பின்னி பிணைய வேண்டும்

- விளக்கு: அப்படி பின்னி பிணையப்பட்ட அநுபவத்தை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

- தீபம்: அப்படி நாம் உணர்ந்து விளங்கி கொண்டதை தெளிவு படுத்த வேண்டும். அந்த தெளிவில் இருந்து நல்லவற்றை உயர்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்களும் பயன் பெறும் வண்ணம் தீயவற்றை நமக்குள்ளே வெளிப்படா வண்ணம் சிறைப்படுத்த வேண்டும். தீபத்தின் அடிப்பகுதி கருகி இருக்கும். மேல் பகுதி சுற்றி உள்ள இருளை நீக்கி ஒளி வீசும் அதே போன்று நாங்கள் பெற்ற அனுபவங்களில் தீய வற்றை வெளிப்படா வண்ணம் சிறைப்படுத்தியும் நல்லவற்றை மற்றவர்கள் பயன்பெறும் வண்ணம் வெளிபடுத்துதலே மங்களவிளக்கு ஆகும்.

மங்களவிளக்கு என்று ஏன் பெயர் வந்தது?

மங்களம் என்றால் ஐம்புலன்களையும் ஆனந்தப்பட வைக்கும், தெய்வீகத்தன்மை பொருந்தியதாக இருக்கும் இடம் மங்கள கரமாக இருக்கும். அதனால் மங்களவிளக்கு என பெயர் வந்தது.

மங்களவிளக்கு ஏற்றும் இடத்தில்

1) கண்களுக்கு குளிர்ச்சியாக அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.

2) காதுக்கும், மனதுக்கும் இனிமையான நாதமும் இருக்கும்

3) நாசிக்கு (மூக்கு) குளிர்சியான நறுமணமும் (ஊதுபத்தி) இருக்கும்.

4) வாய்க்கு இனிமையான இனிப்பு (கற்கண்டு) இருக்கும்.

5) மெய் (உடம்பு)க்கு குளிர்ச்சியாக வாழைமரம் மாவிலை தோரணம் வீசும் காற்றை குளிர்மையானதாக்கும்.

இவையாவும் மங்களவிளக்குயேற்றலுக்கு உகந்தவையே.

மங்கள விழக்கு ஏற்றுவதற்க்கு ஏன் தீபம் மட்டும்தான் தேவையா மின்குமிளோ அல்லது வேறுஏதாவது பயன்படுத்தலாமே.

மின்குமிளோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் நாம் வைக்கும் திசையை நோக்கியே இருக்கும் தீபம் மட்டுமே எந்தத்திசையை நோக்கி வைத்தாலும் மேல் நோக்கியவாறு ஒளிவீசும் நாம் செய்யும் காரியம் தெளிவுடன் உயர்நிலை அடைய வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.

. சுப மங்களம்

அன்புடன்,நா.சிவாஸ்

http://panipulam.net/?p=10813

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை வெளிநாட்டிலை எல்லாம் மங்களவிளக்கு ,குத்துவிளக்கு எல்லாம் கமராக்காரனுக்குத்தான் தெரியும்.

ஏன்???????

கமராக்காரன் ஓகே சொல்லேக்கை தானே இப்ப தாலிகட்டே நடக்குது.

ஐயர் இல்லாட்டிலும் பிரச்சனையில்லை.கமராக்காரன் இல்லாட்டி?????????????????ஒண்டுமேமே.....நடக்காது

தகவலுக்கு நன்றி akootha

Link to comment
Share on other sites

அருமையான தகவல். இணைப்பிற்கு நன்றி அகூதா

இஞ்சை வெளிநாட்டிலை எல்லாம் மங்களவிளக்கு ,குத்துவிளக்கு எல்லாம் கமராக்காரனுக்குத்தான் தெரியும்.

ஏன்???????

கமராக்காரன் ஓகே சொல்லேக்கை தானே இப்ப தாலிகட்டே நடக்குது.

ஐயர் இல்லாட்டிலும் பிரச்சனையில்லை.கமராக்காரன் இல்லாட்டி?????????????????ஒண்டுமேமே.....நடக்காது

தகவலுக்கு நன்றி akootha

முதலிரவுமா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்க்கு நன்றி.இப்ப உள்ள சனம் ஏன் என்னத்துக்கு என்று தெரியாமல் கன விசயங்கள் செய்யுதுக்ள் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.