Jump to content

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்


Recommended Posts

லிபிய ஜனாதிபதி கேணல் கடாபியை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தமைக்காக லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.

லிபியாவின் கடந்த நான்கு மாதங்களாக இடம்பெற்று வரும் கிளர்ச்சிகளின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த கேணல் கடாபி உத்தரவிட்டதாக ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், கேணல் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் மற்றும் லிபிய உளவுத்துறைப் பொறுப்பாளளர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.

லிபியாவில் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இருந்து கேணல் கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கும், கடாபிக்கு ஆதரவான படைத்தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது. இம்மோதல்களில் சிக்குண்டு இதுவரை பல்லாயிக்கணக்கான லிபிய மக்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, கேணல் கடாபிக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேணல் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சி மோனகேங் தெரிவிக்கையில், லிபிய ஜனாதிபதி கேணல் கடாபியும், அவரது மகனும் மனிதகுலத்திற்கு எதிராக குற்றங்களை அழைத்துள்ளார்கள் என நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார். இவர்காளல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய குற்றங்கள் தண்டனைக்கு உரியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு எதிராக கைது ஆணை  பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மோரினோ ஒகாம்போ கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது ஆணையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={FA530384-9D33-4CF6-8DC0-F3DA9849AFC9}

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply

ஐரோப்பா மீது கடாபி தாக்குதல் எச்சரிக்கை . அமெரிக்கா கவலை

தனது ஆதரவாளர் அனைவருக்கும் ஆயுதங்களை கொடுத்த கடாபி, நாட்டில் உள்ள பெண்களையும் ஆயுததாரிகள் ஆக்கிக் கொண்டிருக்கும் செய்திகள் சென்ற வாரம் மேலை நாடுகளின் கவனத்தைத் தொட்டன. நேற்று முன்தினம் தனது மாளிகைக்கு முன்னால் உள்ள பசுமை வெளியில் நின்று கருத்துரைத்த கடாபி ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடாத்த வேண்டுமென எச்சரிக்கை விடுத்திருந்தார். இனி தனது பதிலடி ஐரோப்பிய நாடுகளில் விழும் என்றும் கூறியிருந்தார்.

அதேவேளை அவருடைய படைகள் திடீரென போர் முனையில் முன்னேற்றம் கண்டுள்ளன.

இதுபற்றி அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளது. அவருடைய கருத்து அச்சமூட்டும் செயல் என்றும் விபரித்துள்ளது. ஏறத்தாழ அல்குவைடா பயங்கரவாத அமைப்பு விடும் எச்சரிக்கை போல அவருடைய கருத்து உள்ளது. ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் விட்டிருக்கும் எச்சரிக்கையானாலும் இது ஆபத்தானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று கடாபியையும், அவருடைய மகனையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை மேலை நாடுகள் கடாபியின் படைகள் மீது 13.000 குண்டுகளை வீசியுள்ளமை கவனிக்கத்தக்கது. கடாபி பதவியில் இருந்து விலகமாட்டார் என்பதும், பதவியை விட்டு போவதானால் அழிக்கக் கூடிய அத்தனையையும் அழித்துவிட்டே வெளியேறுவார் என்பதையும் இப்போது உணர முடிகிறது. தனக்குக் கிடைக்காத பால மற்றவருக்குக் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் தெளிவாக உள்ளார். அதேவேளை நேற்று கூடிய ஆபிக்க யூனியன் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் ஆணையை ஏற்று கடாபியை தமது நாடுகள் கைது செய்யாது என்று தெரிவித்துள்ளன.

http://www.alaikal.com/news/?p=75382

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடஃபி விரைவில் பதவி விலகுவார்- பிரான்ஸ்

லிபியா நாட்டு அதிபர் கடாஃபி பதவி விலகும் முடிவுக்கு விரைவில் வருவார் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

புரட்சிபடையினர் லிபியாவின் முக்கிய நகரமான பென்காசி நகரை கைப்பற்றி அங்கிருந்து தலைநகரம் திரிபோலியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். எந்த நேரத்திலும் தலைநகரை கைப்பற்றுவோம் என்று புரட்சிபடை தலைவர் கூறி இருக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலும் தீவிரமாகி உள்ளது.

எனவே தொடர்ந்து தாக்குபிடிக்க முடியாத நிலை கடாபிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பதவி விலக முன்வந்துள்ளார். இது சம்பந்தமாக அவர் பிரான்சு நாட்டுக்கு ரகசிய தூது அனுப்பி உள்ளார். லிபியாவின் அதிகாரிகள் பிரான்சு நாட்டின் தூதரக அதிகாரிகளிடம் இதுபற்றி பேசிவருவதாக பிரான்சு வெளியுறவு மந்திரி அலையன் ஜூலே கூறியுள்ளார்.

எனவே எந்த நேரத்திலும் கடாபி பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1107/14/1110714013_1.htm

Link to comment
Share on other sites

திரிபோலியை தகர்க்க கடாபி திட்டம்! ரஷ்யா அதிர்ச்சி தகவல்

"லிபியா தலைநகர் திரிபோலியை, கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினால், ஏவுகணை தாக்குதல் நடத்தி, அந்நகரையே முற்றிலும் அழிக்க அதிபர் கடாபி திட்டமிட்டுள்ளார்.

லிபிய அதிபர் கடாபியிடம் இன்னும் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. இதுவரை நடந்த தாக்குதல்களில் ஏவுகணைகளை மட்டும் கடாபி பயன்படுத்தவில்லை என லிபியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கெயில் மர்கெலோவ் கூறினார்.

லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக, நடந்து வரும் கிளர்ச்சியில் நேட்டோ படைகளுடன் சண்டையிட்டு வரும் லிபியா அரசுக்கு, தற்போது பல வழிகளிலும் சிக்கல் எழுந்துள்ளது. கடாபிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த, 4ம் தேதி, துருக்கி அரசு வாபஸ் பெற்றது. இதனால், கடாபிக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள துருக்கி - லிபியா வங்கியில், லிபியா அரசின் பணம் சேமிக்கப்பட்டிருந்தது. இந்தப் பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை, கடாபிக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், லிபியா அரசின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை, கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதனால், விரைவில் லிபியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், லிபியாவின் மேற்கில் உள்ள குவாலிஷ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில்தான் லிபியாவிற்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் மிக்கேல் மெர்கெலோவ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரஷ்ய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில், மெர்கெலோவ், தலைநகர் டிரிபோலி, கிளர்ச்சியாளர்கள் கையில் வீழ்ந்தால், தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி, டிரிபோலியை தகர்க்க திட்டமிட்டுள்ளார். இதை, கடாபியே என்னிடம் தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.

அதிபர் கடாபி இதுவரை ஏவுகணைகள் எதையும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை குறிப்பிடத்தக்கது.

http://www.inneram.com/2011071417878/kaddafi-planned-to-demolish-tripoli-says-russian-ambassador

Link to comment
Share on other sites

திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்:

July 15, 2011

gadafi4.jpg

லிபியாவில், அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புரட்சியாளர்கள் லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பலநகரங்களை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். தற்போது தலைநகர் திரிபோலியையும் நெருங்கி விட்டனர். இவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உதவியாக உள்ளன.

இந்த நகரம் எந்த நேரமும் புரட்சியாளர்கள் வசம் ஆகலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டால் அந்த நகரை பூண்டோடு அழிக்க அதிபர் கடாபி திட்டமிட்டுள்ளதாக ரஷியாவின் சிறப்பு தூதர் மிகைல் மார்கெலோவ் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் சமாதானம் குறித்து பேச கடந்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி அவர் லிபியா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் பிரதமர் பாக்தாதி அல்- மக்முதியை சந்தித்து பேசினார். அப்போது இந்த தகவல் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இதை ரஷியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது, லிபியா அதிபர் கடாபியிடம் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அவற்றை அவர் இன்னும் பயன்படுத்தவில்லை. தலைநகர் திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றினால் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த நகரத்தை அழிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-அலைகள்

Link to comment
Share on other sites

அமெரிக்கா இன்று போராளிகளின் செயல்குழு அமைப்பை அங்கீகரித்துள்ளது.

இதுவரை முப்பது நாடுகள் வரை அங்கீகரித்துள்ளன.

A group of US senators on Friday called on President Barack Obama to open a US embassy in Benghazi, the capital of rebel-held Libya.

The move comes after US Secretary of State Hillary Clinton in Istanbul announced that Washington recognized Libya's Transitional National Council (TNC) as the country's de facto government.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hMnYSMy4esgQbXO1o_Rif-ghQpZA?docId=CNG.887f499000e6a91584af43f31977bd2a.441

லிபிய கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்தது அமெரிக்கா

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்து உள்ளது அமெரிக்கா. மேலும், அவர்களுக்கு லிபியாவுக்கு அமெரிக்காவில் சுமார் 30 பில்லியன் டாலர்களை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா.

லிபியாவில் கடந்த பல மாதங்களாக அதிபர் கடாபி தரப்புக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் சண்டையிட்டு வருகின்றன. எனினும், இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களை லிபியாவின் உண்மையான அரசாக அங்கீகரித்து உள்ளது அமெரிக்கா. இது குறித்து பேசிய அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், "லிபிய அரசை தலைமை தாங்கும் தன்மையை கடாபி இழந்து விட்டதாகவும், கிளர்ச்சியாளர்களை மேலும் 30 நாடுகள் அங்கீகரிக்கும்" என்று கூறினார். கிளர்ச்சியாளர்களை லிபியாவின் உண்மையான அரசாங்கம் என்று அமெரிக்கா அங்கீகரித்துள்ள காரணத்தால், அமெரிக்காவில் உள்ள லிபியாவின் சுமார் 30 பில்லியன் டாலர் சொத்துக்களை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

http://bharathnewsonline.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80161.php

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லிபிய கிளர்ச்சிப் படைகளின் தலைமை அதிகாரி சுட்டுக் கொலை! -

கிளர்ச்சிப் படைகளிடையே பிரிவினை ஏற்படும் வாய்ப்பு?

லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராக கிளர்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய கிளர்ச்சிப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Abdel Fattah Younes சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராக கிளர்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய கிளர்ச்சிப் படைகளின் தலைவர் Mustafa Abdul Jalil உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் ஜெனரல் Abdel Fattah Younesயுடன் இணைந்து கேணல் Col Muhammad Khamis மற்றும் Nasir al Madhkurம் கொல்லப்பட்டுள்ளதாகவும். இவர்களின் சடலங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேணல் கடாபியின் தலைமையிலான அரசாங்கத்தில் முன்னர் உள்துறை அமைச்சராக இருந்த Abdel Fattah Younes, அந்த அரசாங்கத்துடன் தற்போதும் இரகசிய தொடர்புகளை பேணி வந்ததாக தேசிய கிளர்ச்சிப் படை சந்தேகம் கொண்டிருந்தது.

அத்துடன், கிளர்ச்சியாளர்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என இவரிடம் தேசிய கிளர்ச்சிப் படைகளின் தலைமையால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இவர் தனது தேசிய கிளர்ச்சிப் படையைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள போதிலும், அதனை உறுதிப்படுத்திக் கொல்ல முடியவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தேசிய கிளர்ச்சியாளர்கள் படையினர் இடையே பிரிவினை தோன்றும் சாத்தியம் நிலவுவதாகவும், அவர்கள் வௌவேறு குழுக்களாக பிரிந்து அவர்களுக்கு இடையே மோதிக்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={CCFF0FBF-7028-4A61-9A2B-DD3B6318FFEB}

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.