Jump to content

எகிப்தில் மக்கள் போராட்டம்


akootha

Recommended Posts

  • 11ஆம் திகதி "பெப்ரவரி" மாதம் நடந்த எகிப்திய புரட்சி, 2/11. 9/11ஐ விட பலமானது என்கிறர்கள்
  • இதே திகதி ஈரானிய மன்னர் ஷா அவர்களுக்கு எதிராக புரட்சி நடந்தது, Feb 11, 1979
  • இதே திகதி நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையானார், Feb 11, 1990

மத்தியகிழக்கில் அமைதியின்மை வேறு பகுதிகளுக்கும் பரவுகின்றது

யேமன்

ஆர்ப்பாட்டளர்கள் அரச ஆதரவாளர்களுடன் கைகலப்பு

ஈரான்

தெகிரானில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பு தடைகள்.

2009 ஆம் ஆண்டு இங்கு நடந்த ஆர்ப்பாட்டம் அரசால் முறியடிக்கப்பட்டது.

பஹரேய்ன்

இளையவர்கள் பலத்த பாதுகாப்பு தரப்பை சந்தித்தனர்.

எகிப்துஇராணுவ தரப்பு எதிர்க்கட்சிகளை சந்தித்து உள்ளது.

அரச அலுவலர்கள் பலர் ஊதிய உயர்வு கேட்டு வெளி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Unrest Spreads Across the Region

Yemen: Protesters are clashing with government supporters.

Iran:Security forces deployed to block Tehran marches

Bahrain :Groups of young people met a heavy police presence.

Egypt : The ruling generals met with the opposition.

http://www.nytimes.com/

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A must watch documentary. Egypt revolution!

As Elizabeth Jones reveals, young activists have spent a long time planning and

organising for these momentous days, taking lessons from other

revolutions about how to mobilise popular support.

Egypt: Seeds of change

http://english.aljaz...5549829916.html

english.aljazeera.net

People & Power reveals the story behind the unprecedented political protests in Egypt.

-------------------------------------

'Egypt fed up with foreign bullying - people won't accept new stooge'

www.youtube.com

Mubarak's steely determination not to resign was broken as he stepped down as president on Friday. Egyptians spent all night celebrating the end of his 30-year regime. The renowned author and middle east expert Tariq Ali believes the U.S. was playing a risky game during the days of the Egyptian unre

As protests grew in Egypt, Mubarak moved his billions out

www.montrealgazette.com

Montreal Gazette is your online source of news on Montreal, Quebec, Canada and around the world. Find local stories happening around Quebec. Read world headline news. Watch local news stories in multimedia.,Hosni Mubarak used the 18 days it took for protesters to topple him to shift his vast wealt

Egypt's options post uprising

english.aljazeera.net

Should Egypt look north to Turkey for a new political, economic and democratic model?

Please listen this from 6:00 mins _ Sri Lankans especially Sinhalese who support Rajapaksa should listen this. Should Egypt look north to Turkey for a new political, economic and democratic model?

Tunisia, Egypt and Sri Lanka?

http://ireport.cnn.com/docs/DOC-552840

ireport.cnn.com

Tunisia, Egypt and Sri Lanka? On January the 9th I wrote an article to CNN i Report on the rising food prices and its effects on Sri Lanka. On that I clearly stated that rising commodity price

-------------------

Egypt, Tunisia: Presaging Lanka’s Future? | The Sunday Leader

http://www.thesunday...%80%99s-future/

www.thesundayleader.lk

“People want their freedom. People want their bread. People want to stop their lousy dictators from looting their countries”. — A Jordanian Dissident (New York Times – 30.1.2011) Tunisia and Egypt, in revolt, are at the end of a journey Sri Lanka has just commenced. In a desperate attempt to postpon.

---------------------------------------------------------

http://english.aljazeera.net/news/europe/2010/12/2010122518442337113.html

Foreign minister of Turkey says how Egypt should handle post Mubarak. Interesting points to he makes, Egyptians only decide their foreign policy not Israel or any other country!!(USA)

Turkey insists on Israel apology

Foreign Minister says country ready for talks with Israel if it first offers apology and compensation for flotilla raid.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முபாரக் ஒரு சர்வாதிகாரியாக சில மேற்குலக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டாலும்.. அவர் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரின் குரலுக்கு செவி சாய்த்து பெரிய வன்முறைகளுக்கு இடம் கொடாது பதவி விலகியதை பாராட்ட வேண்ட்டும். இதை சிங்களத் தலைமைகள் செய்ய மேற்குலகம் ஊக்குவிக்குமா. இல்லவே இல்லை. :o:unsure:

நாங்களும் ஒரு போரை நிறுத்தச் சொல்லி மேற்குலக நாடுகளின் வாசல்களில் கிட்டந்தோம். அவர்கள் 50,000 மக்களை பலியிட்டும் அடங்கவில்லை. இப்போது புரிய வேண்டும் எங்கு யார் மக்களை மதிக்கும் ஜனநாயகத்தை நிறுவி வைத்திருக்கிறார்கள். யார் ஆயுத பலத்தால் பணப்பலத்தால் மமதை கொண்டு... ஜனநாயகத்தின் பெயரால் மனித அவலங்களுக்கு துணை போய் கொண்டிருக்கிறார்கள் என்று. :rolleyes:

வாழ்த்துக்கள் எகிப்திய மக்களே. அவர்களின் குரலை செவிமடுத்த அதிபருக்கும் நன்றிகள். :)

எகிப்து புரட்சியை எமது போராட்டத்துடன் ஒப்பிடமுடியாவிட்டலும், நாம் சிங்களவரை மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும்படி ஊக்கம் கொடுக்கலாம். எதோ ஒருவழியில் இதுவும் செய்யபடவேண்டியதே

Link to comment
Share on other sites

பஹரேய்ன் - மக்கள் தொடர் ஆர்பாட்டம்

"மக்கள் கோபமடைந்துள்ள தினம்" என்ற பெயரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒருவர் மரணமடைந்து 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிந்திய செய்திகளின் படி இரண்டாதவரும் கொல்லப்பட்டுள்ளார்.

பஹரேய்ன் தலைநகர் மனாமாவை சுற்றி இராணுவ உலங்குவானூர்திகள் நிறைந்து காணப்படுகின்றன. தலைநகரத்தை சுற்றியுள்ள சிறிய நகரங்களில் போலீசாருடன் பொதுமக்கள் ஆங்காங்கு மோதிக் கொண்டிருக்கிறார்கள். பஹரேய்னில் சியா (Shia) முஸ்லீம்களே அதிகமாக உள்ளனர், சன்னி (Sunni) முஸ்லீம்கள் தொகை அங்கு குறைவாகும்.

ஆர்பாட்டங்கள் பேஸ்புக், ட்விட்டர் மூலம் வழிநடாத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/164906

http://af.reuters.com/article/worldNews/idAFTRE71E1FF20110215

http://www.alaikal.com/news/?p=57404

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் ஜனநாயக அக்கறை

“எகிப்து உண்மையான ஜனநாயகத்தை நோக்கி செல்வதை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்பு நிலவுகிறது. எங்களுடைய நிலையும் அதற்கு ஆதரவானதுதான். அதனை மிக வலிமையாக ஆதரிக்கிறோம், அது விரைவில் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

தன்னை உண்மையான ஜனநாயகத்தின் நண்பன் என்று காட்டிக்கொள்வதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அமெரிக்கா மிக லாவகமாகவும், தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ளும் என்பதற்கு அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு ஹில்லாரி அளித்த இந்தப் பேட்டியும் ஒரு சான்று.

எகிப்து அதிபராக இருந்த அன்வர் சதாத் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிபரான ஹோஸ்னி முபாரக், கடந்த 30 ஆண்டுக்காலமாக ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்ததை எதிர்த்து அந்நாட்டில் பல மக்கள் இயக்கங்கள் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களில் அமெரிக்க அரசு யார் பக்கம் நின்றது என்பதெல்லாம் எகிப்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். எகிப்து இராணுவத்திற்கு எண்ணிலடங்கா சலுகைகளை அளித்து, அவர்களை எப்போதும் ‘குஷி’யில் ஆழ்த்திவிட்டு, பல பில்லியன் டாலர்களை கொள்ளயடித்து அயல் நாட்டு வங்கிகளில் கொண்டுசென்று முபாரக் குவித்தபோதெல்லாம் வராத ஜனநாயக அக்கறை இன்றைக்கு வந்துள்ளது அமெரிக்காவிற்கு!

முபாரக் ஆட்சியை அமெரிக்கா ஆதரித்து வந்ததற்கு அதற்கு பல காரணங்கள் உள்ளன:

(௧) எகிப்து இராணுவத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 1.3 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் = 100 கோடி = ரூ.4,500 கோடி) கொடுத்து வந்தது அமெரிக்க அரசு.

(௨) தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் அரபு நாடு எகிப்து.

(௩) மத்திய கிழக்காசிய எண்ணெய் வளங்களை அயல் நாடுகளுக்கு கொண்டு செல்ல அதி முக்கியத் தேவையான சூயஸ் நீர் வழியை உறுதி செய்ய எகிப்து தேவை. அதுமட்டுமின்றி, டிரான் நீரிணை, அக்குவாபா வளைகுடா ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நிலைநிறுத்துவது.

(௪) எகிப்து இராணுவத்தின் முழு ஒப்புதலுடன் இஸ்ரேல் விமானப் படை நடத்திய காசா- எகிப்து எல்லையிலுள்ள ஃபியாடெல்பி பாதையில் அமைந்திருந்த இரகசிய சுரங்கங்களின் மீதான தாக்குதல். எகிப்து எல்லையில் நடந்த இத்தாக்குதலில் ஒரு எகிப்து இராணுவ வீரன் கூட காயமடையவில்லை!

(௫) ஈரானிடன் அணு ஆயுதம் உள்ளதாக மிக அதிகமாகவே அமெரிக்கா பயமுறுத்துகிறது என்று கூறிய பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவர் எல் பராடீயை (இவர் எகிப்தைச் சேர்ந்தவர்) மீண்டும் அவ்வமைப்பின் தலைவராக வராமல் தடுத்தது.

(௬) எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மத்திய கிழக்காசிய கொள்கைகளுக்கு (கொள்கைகளுக்கு) நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் எகிப்து அரசை (முபாரக் ஆட்சி) விட்டுத் தர முடியாது என்று அமெரிக்கா கூறி வந்தது.

எகிப்து நாட்டு மக்கள் ஹோஸ்னி முபாரக்கை சர்வாதிகாரி என்கிறார்கள், “அவரை நான் சர்வாதிகாரி என்று கூற மாட்டேன்” என்கிறார் அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன்!

ஆக, இஸ்ரேலிற்கு எதிரான வலிமையான இராணுவத்தை கொண்ட ஒரு அரபு நாட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அதனால் இஸ்ரேலிற்கும், மத்திய கிழக்காசியாவில் தனது பொருளாதார நலன்களுக்கும் எந்த பாதிப்பும் வந்தவிடாமல் காப்பாற்றிக்கொள்ளவும், அதனைத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளும் ‘பரந்த’ நோக்குடனேயே எகிப்து அரசிற்கு பில்லியன் கணக்கில் அள்ளிக்கொடுத்து முபாரக் நடத்திய சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தது அமெரிக்கா. 1967 இஸ்ரேல் எகிப்து போருக்குப் பின்னான கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தையில் எகிப்து மொக்கையாக்கப்பட்ட பின்னர், அது உருவாக்கிய கிழக்காசியத் திட்டத்தின் பாதுகாவலர்களில் முபாரக் மிக முக்கியமானவர்.

இன்று எகிப்து நாட்டின் இளைஞர்கள் ‘இஸ்லாமிய சகோதரத்துவம்’ என்கிற அமைப்பின் மூலம் உருவாக்கிய மக்கள் எழுச்சி, கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி, மக்கள் கோவமாக வெடித்து 18 நாட்களில் முபாரக் ஆட்சியை சாய்த்தவுடன் ஜனநாயகப் பாடலை பாடுகிறது அமெரிக்கா. இதே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, அரசின் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், அதனை பயங்கரவாதம் என்று கூறி, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நுழைந்ததைப் போன்று உள்ளே நுழைந்து மற்றொரு இரத்தக் கிளறியை ஏற்படுத்த அமெரிக்கா தயங்கியிருக்காது.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் சதாம் ஹூசேன் என்று கூறி, அங்கு படையெடுத்து, தான் அளித்த இராசாயண ஆயுதங்களைக் கூட கண்டெடுக்க முடியாத நிலையில், “நாங்கள் ஈராக் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூசாமல் பேசிய ஜார்ஜ் புஷ்ஷின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

இன்று, “முபாரக் காலம் முடிந்துவிட்டது. அங்கு உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுக்கும் நேரம் வந்துள்ளது” என்று ஹில்லாரி கிளிண்டன் பேசுவதும், அடுத்த வரும் ஆட்சியையோ அல்லது ஆட்சியாளரையோ தங்கள் ஆளாக மாற்றும் நோக்கம் கொண்ட வார்த்தைகள்தான் என்பதை எகிப்து மக்கள் அறிய வேண்டும். தனக்கான ஆட்சியை, தனது பொருளாதார நலன்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சியை நிறுவும் ‘ஒரே நோக்கம்’ கொண்டதே அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கை என்பது.

அது உறவு கொள்ளும் நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறதா அல்லது அங்குள்ளவர்கள் ஜனநாயக ஆட்சியாளர்கள்தானா என்கிற வினாவிற்கு விடைகளை தேடிக்கொண்டு அமெரிக்கா உறவை ஏற்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, தனது வசதிக்கான நாட்டையே அது நண்பனாக பார்க்கிறது. உண்மையான ஜனநாயக அக்கறை அதற்கு இருந்திருக்குமென்றால், அது முஷாரஃப் அரசுடன் வாஞ்சையோடு கொஞ்சியிருக்குமா?

தெற்காசிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்கிறது இந்தியா, அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான நண்பன் என்கிறது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவுடனான உறவை உச்சிமேல் வைத்து புளங்காகிதம் அடையும் பிரதமர் மன்மோகன் சிங் அரசு, ‘அதெப்படி அவர்களும் நண்பர்கள், நாங்களும் நண்பர்கள்?’ என்று வினா எழுப்பவில்லை! அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையை புரிந்தவரல்லவா நமது நாட்டின் பிரதமர்? இல்லையென்னால் அந்நாட்டு நிறுவனங்களின் நலன் காக்க அணு விபத்து இழப்பீடு சட்டத்தை நிறைவேற்றுவாரா?

எனவே இன்றைக்கு எகிப்தின் அடுத்த தலைவர் யார் என்பதை தெரிவு செய்யும் ஒரு மிகப் பெரிய சவால் அந்நாட்டு மக்களுக்கு உள்ளது. மக்கள் புரட்சியை ஆதரித்ததற்காக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பன்னாட்டு அணு சக்தி முகமையின் தலைவராக இருந்த மொஹம்மது எல் பராடீ உள்ளிட்ட பலர் தலைமையை நிரப்ப முன்வரலாம். எகிப்து மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எகிப்து மக்களைப் புரிந்த, மக்களோடு வாழ்ந்துவரும் தலைவர் ஒருவரை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இல்லையெனில், 21வது நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சி பயன்றறதாகப் போய்விடும்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/15/1110215054_1.htm

Link to comment
Share on other sites

Ex-GMTV reporter Lara Logan leaves hospital six days after Cairo mob sex-attack - and vows to be back at work within weeks

* Was set upon by mob of more than 200 in Tahrir Square

* 'Thugs yelled Jew, Jew at her' during attack

* Saved by group of women and 20 Egyptian soldiers

Former GMTV reporter Lara Logan will be released from hospital today as she vows to return to work 'within weeks' following an horrific sex assault in Egypt.

The mother-of-one was hospitalised after the 'sustained and brutal' assault on February 11 as she reported from Cairo on the resignation of President Mubarak.

She was surrounded by a mob of 200 men after becoming separated from her TV crew in Tahrir Square and had to be rescued by a group of women and up to 20 Egyptian soldiers.

Read more: http://www.dailymail.co.uk/news/article-1357485/Lara-Logan-assault-Former-GMTV-reporter-suffers-sex-attack-covering-Egypt-uprising.html#ixzz1EA7T9Sca

Link to comment
Share on other sites

மேலே உள்ள செய்தியாளர் பற்றிய செய்தியின் தமிழ் வடிவம்

முபாரக் பதவி விலகிய அன்று இரவு கும்பலொன்றினால் துன்புறுத்தல்களுக்கு உள்ளனர்,

அமெரிக்க சி.பி.எஸ் ஊடக நிறுவனத்தின் பெண் ஊடகவியலாளரான லாரா லோகன் எகிப்தில் ஹொஸ்னி முபாரக் பதவி விலகிய அன்று இரவு கும்பலொன்றினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

முபாரக் பதிவிலகிய அன்று இரவு எகிப்திய தாரிர் சதுக்கத்தில் இடம்பெற்ற கொண்டாட்டங்கள் தொடர்பாக செய்தி சேகரிக்க அவ்விடத்திற்கு சென்றிந்த வேளையில் அவ்விடத்தில் திரண்ட சுமார் 200 பேர் கொண்ட குழுவினாலேயே இவர் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் அமெரிக்காவிற்கு திரும்பியதாகும் தற்போது வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று இன்று விடுவிக்கப்பட்டார்.

பல ஊடக நிறுவனங்கள் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளன.

http://panipulam.net/?p=9373#more-9373

http://www.smh.com.au/world/unbelievably-strong-lara-logan-recovering-as-fellow-journalist-resigns-over-twitter-tirade-20110217-1awy0.html

Link to comment
Share on other sites

பஹ்றெய்ன் நாட்டின் தலைநகரான மனாமாவில் மூன்றாவது நாளாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

  • அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தளம் பஹ்ரெய்னில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது
  • பஹ்ரெய்ன் நாடு, 18 ஆம் நூற்றாண்டில் இருந்து, சுனி முஸ்லிம் அரச குடும்பம் ஒன்றால் ஆளப்படுகிறது
  • அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம்கள், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குறை கூறுகிறார்கள்

பஹ்றெய்ன் நாட்டின் தலைநகரான மனாமாவில் (Manama) அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் கூடி வருகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக அங்கு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மோதல்களும் இடம்பெற்ற நிலையில், உயிரிழந்த இரண்டு பேரில் ஒருவரின் இறுதி நிகழ்வு இன்று இடம்பெறுகிறது.

அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டுமென்ற தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை, நகரின் பிரதான சதுக்கத்தில் போராட்டம் இடம்பெறவேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகிறார்கள். நேற்றிரவு அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். தற்போது பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடியுள்ளார்கள்.

இதேவேளை, சீர்திருத்தங்ள் தொடருமென அந்நாட்டின் மன்னர் அறிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அங்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து, அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தளம் பஹ்ரெய்னில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரெய்ன் நாடு, 18 ஆம் நூற்றாண்டில் இருந்து, சுனி முஸ்லிம் அரச குடும்பம் ஒன்றால் ஆளப்படுகிறது. ஆனால், அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம்கள். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குறை கூறுகிறார்கள்.

ரியுனிசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அல்ஜீரியா, ஜோர்டான், ஈரான், யேமன் உட்படப் பல நாடுகளில் மக்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6516

Link to comment
Share on other sites

மத்தியதரை கடலில் ஈரான் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கண்டனம்

சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக்கடல் பகுதியில் 2 ‌போர்க்கப்பல்களை சிரியாவுக்கு ஈரான் அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

தற்போதைய நிலையில் மத்திய கிழக்கு நாடுகளான எகி்ப்து, பக்ரைன், லிபியா, ஈரான் நாடுகளில் அரசுக்கெதிராக மக்கள் எழுச்சிய‌டைந்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அவிக்டர் லைபர்மேன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரான் தற்போது அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இ‌தனை மேற்கத்திய நாடுகள் கண்டித்துள்ளன. ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்தியதரைக்கடல் பகுதிகளில் போர் பதட்டத்தை ஏற்படுத்த சூயஸ் கால்வாய் வழியாக சிரியாவுக்கு ஈரான் 2 போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. சிரியா நாடு இஸ்ரேல் நாட்டிற்கு அருகில் உள்ளது. இதனை சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும். இந்த விஷயத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞசமின் நெட்டன்யாகூ, ராணுவ அமைச்சர் ஈகூட் பராக் ஆகி‌யோர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு லைபர்மேன் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=189835

Link to comment
Share on other sites

லிபியாவிலும் ஆர்ப்பாட்டம்.

42 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பதவி வகித்து வருகின்ற லிபியா அதிபர் முவாம்மர் கடாபியை பதவி விலக கோரி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர் அந்நாட்டு மக்கள்.

1969 இல் இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றிய கடாபியின் சர்வாதிகார ஆட்சியில் வேலையிண்மை, விலை உயர்வு போன்றவற்றால் அவதியுறும் மக்களே இவ்வாறு வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எகிப்தின் போராட்ட பாணியிலேயே இவர்களும் பேஸ்புக் டுவிட்டர் தளங்கள் மூலம் ஆதரவு தருமாறு கோருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. லிபிய போராட்டங்கள் தொடர்பாக உறுதிப்படுத்த முடியாத வீடியோ ஒன்றை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/world/2919-2011-02-16-20-25-55

Activists call for 'day of anger' : http://www.bbc.co.uk/news/world-africa-12490504

Gaddafi next? : http://www.miamiherald.com/2011/02/16/2070886/gaddafi-next-anti-government-protests.html

Link to comment
Share on other sites

கெய்ரோவில் வெற்றி அணிவகுப்பு

எகிப்தில் நடைபெற்ற ஆர்பாட்டங்களால் அந்நாட்டு அதிபர் கொஸ்னி முபாரக் பதவி இறக்கப்பட்டது தெரிந்ததே.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் ஆர்பாட்டங்களை நடாத்தியவர்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வெற்றித் தினத்தை கொண்டாடுகிறார்கள். இதற்கான விசேட அணிவகுப்பு இன்று கெய்ரோவில் இடம் பெறுகிறது.

இந்த வெற்றி அணிவகுப்பில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கெய்ரோவில் உள்ள தாகிர் சதுக்கத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முற்றவெளிக்கு வருவோரை போலீசார் சோதனையிட்டே அனுப்புகிறார்கள். பலர் இசைக்கருவிகளுடன் அங்கு செல்கிறார்கள், பலர் வாழைப்பழங்களை பரிசாகக் கொடுக்கிறார்கள். இராணுவமும் இதற்கு ஆதரவு கொடுப்பதால் மகிழ்ச்சிகரமான ஊர்வலமாக அமையும் என்று கருதப்படுகிறது.

அதேநேரம் ஆர்பாட்டக்காரர் மேலும் ஜனநாயக உரிமை வேண்டும் என்று கோருகிறார்கள். தற்போதும் முபாரக்கோடு சேர்ந்து ஊழல் பண்ணியவர்கள் இராணுவத்தில் இருக்கிறார்கள், உயர் நிர்வாகப் பதவிகளிலும் இருக்கிறார்கள். இந்த முதலைகளையும் அகற்றி உண்மையான மக்கள் ஜனநாயகம் மலர உதவ வேண்டுமெனவும் கோருகிறார்கள். அதேவேளை முபாரக் பாணியிலான ஆட்சி நடாத்தும் லிபியா போன்ற நாடுகளின் சர்வாதிகளின் நாற்காலிகளும் இப்போது ஆடத் தொடங்கியுள்ளன.

http://www.alaikal.com/news/?p=57774

'Victory march' fills Cairo square'

Thousands of Egyptians have gathered for prayers for what has been billed as a "victory march" through Cairo's Tahrir Square to mark the overthrow of longtime leader Hosni Mubarak a week ago.

http://english.aljazeera.net/news/middleeast/2011/02/20112189124268649.html

Link to comment
Share on other sites

மத்தியதரை கடலில் ஈரான் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கண்டனம்

சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக்கடல் பகுதியில் 2 ‌போர்க்கப்பல்களை சிரியாவுக்கு ஈரான் அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

  • ஈரானின் வேண்டுகோளை எகிப்து அங்கீகரித்துள்ளது
  • அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இந்த அனுமதியையிட்டு கவலைடைந்துள்ளன
  • ஈரானில் ஏற்பட்ட மதரீதியான (முப்பது வருடங்களின் பின்னர்) பரட்சியின் பின்னர் இது அனுமதிக்கப்பட்டுள்ளது

This was the first time that Iranian naval ships have traversed the Suez Canal since the Islamic revolution in 1979, the Iranian news agency said.

http://www.nytimes.com/2011/02/23/world/middleeast/23suez.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபுநாடுகளின் குழப்பங்கள் இஸ்ரேலுக்கு தலையிடியாக வரும்போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்து வழியில் தமிழ்நாட்டிலும் புரட்சி நடக்க வாழ்த்துக்கள்...

http://www.youtube.com/watch?v=lUiPmm9mc5I

டிஸ்கி:

இது தோழர் இசைகலைஞ்சனுக்காக :lol:

Link to comment
Share on other sites

வெளிநாடு செல்ல மாஜி எகிப்து அதிபருக்கு தடை

எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். சமீபத்தில் நடந்த மக்கள் புரட்சியின் காரணமாக அதிபர் பதவியை விட்டு விலகினார்.

கெய்ரோ நகரை விட்டு வெளியேறி, எகிப்தில் தனக்கு சொந்தமான ஒரு பண்னை வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சவுதி அரேபியா வந்து சிகிச்சை பெறும்படி அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தது. அதை ஏற்க மறுத்தவர், சொந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் ஹோஸ்னி முபாரக், அவரது மனைவி சுசானி, மகன்கள் அலா மற்றும் கமால் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரது சொத்துகளையும் முடக்கிவிட்டதாகவும் நாட்டை விட்டு வெளியேற அவர்களுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எகிப்து நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=10927

Link to comment
Share on other sites

  • எகிப்திய பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்
  • முபாரக் தலைமுறையை சேர்ந்த அகமத் ஷாபிக் இன்று பதவியை துறந்தார்
  • இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக கருதப்படுகின்றது
  • புதிய பிரதமரை தற்காலிகமாக ஆட்சியை நிர்வாகிக்கும் இராணுவம் நியமித்தது

Egypt PM Ahmed Shafiq resigns in another win for the revolution

http://www.csmonitor.com/World/Middle-East/2011/0303/Egypt-PM-Ahmed-Shafiq-resigns-in-another-win-for-the-revolution

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

- முதல் முறையாக எகிப்திய மக்கள் ஒரு சுயாதீன வாக்கெடுப்பில் பங்குபற்றுகிறனர்.

- அரசியல் அமைப்பு சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றியே இந்த தேர்தல் நடக்கின்றது

Egyptians seize first taste of democracy

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hytaTcVUX-0eTjQTXKiItAf62CFw?docId=CNG.fddcdddc9d52b6bd15a7cbe41e46b894.601

Link to comment
Share on other sites

- 14 மில்லியன் மக்கள் அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது 77 வீதம்

- 4 மில்லியன் மக்கள் அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர். இது 23 வீதம்

- எல்லாமாக 45 மில்லியன் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 41 வீத மக்கள் வாக்களித்தனர்

Opponents feared the referendum’s passage would allow the highly organized Muslim Brotherhood to dominate Egypt’s dozens of new political parties in the presidential and parliamentary vote.

Millions of Egyptians voted freely on Saturday for the first time in more than half a century, joyfully waiting for hours to cast their ballots on the package of constitutional changes.

http://www.thestar.com/news/world/article/956926--14m-egyptians-vote-in-constitutional-changes?bn=1

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கொஸ்னி முபாரக் இரண்டு மகன்கள் தடுப்புக்காவலில்..

எகிப்திய சர்வாதிகாரியாக இருந்து பதவி விலத்தப்பட்ட கொஸ்னி முபாராக் இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்றய செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் அவர் கடந்த 14 நாட்களுக்கு முன்னரே தடுப்புக்காவலில் இருந்து வருவதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. தவறான முறையில் அதிகாரத்தை பயன்படுத்தியது, ஊழல், ஆர்பாட்டக்காரரை கொலை செய்தது போன்ற குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது நடைபெற்றுக் கொண்டிருக்க முபாரக்கின் இரண்டு மகன்களான அலா, கமால் முபாரக் ஆகிய இருவரும் எகிப்திய இராணுவத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக ஆர்பாட்டக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்ற குற்றங்கள் இவர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.

இதுபோல நேற்று கைது செய்யப்பட்ட ஐவரிக்கோஸ்ட் அதிபர் லோறன்ற் கபாக்போவும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை தேர்தலில் வென்ற அலசனா அவுற்ராராவின் நீதியமைச்சர் தெரிவிக்கவில்லை. ஆனால் ஐ.நா தகவல் ஒன்று இவர் அதிபர் மாளிகையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. நேற்றைய அதிபர்கள் ஒரு சில வாரங்களில் கம்பி எண்ணுமளவிற்கு காலச்சக்கரம் வேகமாகச் சுழல்கிறது.. மேலும் பலருடைய தவணைகள் வந்து கொண்டிருக்கின்றன.

http://www.alaikal.com/news/?p=65158

Link to comment
Share on other sites

மரணதண்டனை விளிம்பில் கொஸ்னி முபாரக்

எகிப்தில் எதிர்ப்பாளர்கள் கொலை, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் தூக்கிலிடப்படலாம் என்று அரசு சார்பு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எகிப்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியவர் கொஸ்னி முபாரக். கடந்த ஜனவரியில் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. அதற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பிப்ரவரி 11ம் தேதி முபாரக் பதவி விலகினார்.

இதற்கிடையே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ராணுவ அரசு தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்தியது. அதில் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணைக்கு வருவதற்கு முன்பே உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முபாரக். பிறகு, அங்கிருந்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரும் அவரது மகன்கள் ஆலா, கமால் ஆகியோர் 15 நாட்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விசாரணையில் முபாரக் குற்றவாளி என்று தெரிய வந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எகிப்து அரசு சார்பு நாளேடான அல் ஹம்ல் அராம் நேற்று செய்தி வெளியிட்டது.

http://www.alaikal.com/news/?p=65406

Link to comment
Share on other sites

எகிப்திய முன்னாள் அதிபர் முபாரக் 846 படுகொலைக் குற்றம் சிறீலங்கா கலக்கம்.

எகிப்தின் முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக் தற்போது எகிப்திய ஆட்சியாளரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் 846 பேரைக் கொன்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

எகிப்திய அரசு மேற்கண்ட மதிப்பீட்டை செய்துள்ளதாக சி.என்.என் தெரிவிக்கிறது. ஆர்பாட்டக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்படி உத்தரவிட்டவர் இவரே என்பதால் அத்தனை கொலைகளுக்கும் இவரே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆர்பாட்ட ஊர்வலங்களை அடக்கப்போய் மரணித்த 18 போலீசாரின் மரணத்திற்கும் இவரே பொறுப்பென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற சிக்கலில் உள்ள சிறீலங்காவிற்கு இக்குற்றச்சாட்டு வயிற்றுக்கலக்கத்தை ஏற்படுத்து வழியுண்டு.

http://www.alaikal.com/news/?p=66109

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.