நிலாமதி

பொங்கலோ பொங்கல்

23 posts in this topic

பொங்கலோ பொங்கல் என்றந் நாளில்

பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில்

இந்நாள்

பொங்கலா பொங்கல் வந்து போகட்டும்

எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே

வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம்

தாங்கும் நிலையில் தமிழர் உளரோ?

காய்கறி விலையோ கைக்குள் இல்லை

வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில்

வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில்

ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும்

அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும்

எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர்

எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம்

காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி

தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத்

தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள்

தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை

தமிழ்நாட் டலுவலர் ஒப்பத்தில் தமிழில்லை

தமிழ்நாட்டுக் கோவிலில் தழைக்கும் தமிழில்லை

தமிழன் தமிழ்ஆங்கிலம் கலந்து பேசலால்

தமிழன் பேச்சை "தமிங்கிலம்" என்றார்

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்

பிழைக்க வந்தோர்மொழிப் பிதற்றல் பெரிதுண்டு

குழைக்கும் குழந்தைநா அம்மை அப்பரை

"மம்மிடாடி" என்றே மயங்கி அழைக்கிறது

கும்மிருட்டில் தமிழர் வாழ்வைக் கொட்டுகின்றார்

கோட்டையில் கோலோச்சத் தமிழில்லை தமிழர்

நாட்டுக் கடைப்பெயரில் தமிழில்லை தமிழர்

வீட்டுஅடுப் பறைவரை வேற்றுமொழி ஆட்சி

மீட்டும் தமிழே வேண்டும் வேட்பினரே

வாட்டிப் பூட்டும் வன்தமிழர் ஆட்சி

நாட்டில் ஒளிபரப்பி நன்றாய்க் கொழுத்த

கதிர்தொலைக் காட்சி தமிழன் கண்டதாம்!

படித்துசுவைத்தவை ..........நன்றி வெப் துனியா

Edited by நிலாமதி

Share this post

Link to post
Share on other sites

நல்ல பொங்கல் பாட்டு அக்கா, வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்

Share this post

Link to post
Share on other sites

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்

http://www.youtube.com/watch?v=ZzssGyMtwbE

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக....!

Share this post

Link to post
Share on other sites

யாழ் கள உறவுகள் அனைவருக்கும்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

அத்தோடு மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

இம்முறையும் செலவீனங்களை குறைத்து அதனை போரால்.. வெள்ளதால் பாதிக்கப்பட்டு தைப்பொங்கல் மறந்து வாழும் உறவுகளுக்கு அளித்து உதவுங்கள். அவர்களின் கண்ணீரை போக்கி நில்லுங்கள்.

Pongal-2011.jpg

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

யாழ் கள உறவுகள் அனைவருக்கும்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

அத்தோடு மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

இம்முறையும் செலவீனங்களை குறைத்து அதனை போரால்.. வெள்ளதால் பாதிக்கப்பட்டு தைப்பொங்கல் மறந்து வாழும் உறவுகளுக்கு அளித்து உதவுங்கள். அவர்களின் கண்ணீரை போக்கி நில்லுங்கள்.

யாரிடம் வேண்டுகின்றீர்கள்?

இங்கிலாந்து மஹாராணியிடமா ?அல்லது பிரபுக்கள் வம்சத்தினரிடமா?

நிச்சயமாக புலம்பெயர்மக்கள் உதவமாட்டார்கள்.ஏனெனில் தாய்நாட்டை மறந்து தப்பி ஓடியவர்கள். :lol:

உங்களுக்கும் என் உழவர்திருநாள் வாழ்த்துக்கள். :D

Share this post

Link to post
Share on other sites

யாரிடம் வேண்டுகின்றீர்கள்?

இங்கிலாந்து மஹாராணியிடமா ?அல்லது பிரபுக்கள் வம்சத்தினரிடமா?

நிச்சயமாக புலம்பெயர்மக்கள் உதவமாட்டார்கள்.ஏனெனில் தாய்நாட்டை மறந்து தப்பி ஓடியவர்கள். :lol:

உங்களுக்கும் என் உழவர்திருநாள் வாழ்த்துக்கள். :D

மனிதாபிமானம் உள்ள அனைவரிடத்திலும்.. கேட்டுக் கொள்கிறோம். மனிதாபிமானம் அற்றவர்கள் இதை புறக்கணித்தும் கொள்ளலாம். :)

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

18.gif

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்

என்னுடைய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்

http://www.youtube.com/watch?v=ZzssGyMtwbE

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக....!

என்னுடைய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

யாரிடம் வேண்டுகின்றீர்கள்?

இங்கிலாந்து மஹாராணியிடமா ?அல்லது பிரபுக்கள் வம்சத்தினரிடமா?

நிச்சயமாக புலம்பெயர்மக்கள் உதவமாட்டார்கள்.ஏனெனில் தாய்நாட்டை மறந்து தப்பி ஓடியவர்கள். :lol:

உங்களுக்கும் என் உழவர்திருநாள் வாழ்த்துக்கள். :D

பொங்கட்டும் பொங்கட்டும்

மனிதாபிமானம் உள்ள அனைவரிடத்திலும்.. கேட்டுக் கொள்கிறோம். மனிதாபிமானம் அற்றவர்கள் இதை புறக்கணித்தும் கொள்ளலாம். :)

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

பொங்கல் வாழ்த்துக்கள்

உங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Share this post

Link to post
Share on other sites

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

http://www.youtube.com/watch?v=biUZHZnL02c

Edited by r.raja

Share this post

Link to post
Share on other sites

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

உறவுகள் அனைவருக்கும் தைபொங்கல் தின வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

பொங்கல் நல்வாழ்த்துக்கள் :lol:

Edited by யாயினி

Share this post

Link to post
Share on other sites

கூறு கெட்டவர் கோட்டை ஆள்வதா?

ஊறு செய்பவர் எம் நாட்டை ஆள்வதா?

வீறுகொண்டு எழும் வேங்கை மூச்சிலே

தீர்வெழுதிடும் திறமையே பொங்கு.

கார் எழுதிடும் வாழ்வு விதியென

கவிந்த தலைகள் உயர்ந்து நிமிர்கவே.

போர்வலியது எம் ஊர் குதறவோ...?

தீர்வெழுதிட உலகின் திசைகள் எழுகவே.

புலம் பெயர்விலே புரட்சி பொங்குக.

நிலத்தைக் காக்கும் நீட்சி பொங்குக.

விரித்த பூமியில் உரத்த குரலிலே

உரைக்கும் செய்தியில் உணர்வு பொங்குக.

கனத்த பொழுதுகள் கிழித்து எறிந்திட,

கவிந்த மாயைகள் விலகிக் கலைந்திட,

தனித்த வாழ்விலும் தமிழர் மிளிர்ந்திட

தாயே! தமிழே!! பொங்கு நீ பொங்கு.

Edited by valvaizagara

Share this post

Link to post
Share on other sites

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Share this post

Link to post
Share on other sites

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

16266610150123037716628.jpg

அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் இனிய தமிழ் திருநாள் வாழ்த்துக்கள்!

Share this post

Link to post
Share on other sites

பால் புளிச்சதாலை நான் இனிமேல் பொங்க முடியாது... ! :lol:

எனக்கு பொங்கல் இந்த முறையும் இல்லை... ஆகவே பொங்கிற ஆக்கள் மறக்காமல் புக்கை அனுப்பிவிடவும்...

பொங்கினவன் புக்கையை விட தண்டினவன் புக்கை அதிகமாம்... பழ மொழி மெய்க்குமா பாப்பம்...

அல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...

Edited by தயா

Share this post

Link to post
Share on other sites

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :D

Share this post

Link to post
Share on other sites

நன்றி உங்களுக்கும் என் யாழ் நண்பர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Share this post

Link to post
Share on other sites