Jump to content

"இருந்தால்" இல்லாமல் ஆனா போது


Recommended Posts

"இருந்தால்" இல்லாமல் ஆன கதை

"பெத்தவள் மேல் கொஞ்சமாவது அன்பு இருந்தால், உடனே புறப்பட்டு வா.." - அம்மாவின் கடிதம்.

இந்த கல்யாணத்திற்கு போனால் தான் எனக்கு அம்மாவின் மேல் இருக்கும் அன்பு வெளிவருமா?அல்லது நிரூபணமாகுமா?

அம்மா எப்பொழுதும் இப்படி தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து இருக்கிறேனே.

சரி வீட்டிற்கு போயும் கனநாட்கள்...அல்ல வருடங்கள் ஆகிவிட்டது. 5 வருடங்களாக அதிகமாக வேலைகள் இருந்ததால் , எதற்கும் இடமில்லாமலே இருந்தது.

இப்பொழுதுதான் கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணமும் வேற்று மனிதருக்கு அல்லவே. என் கூட பிறந்த சகோதரிக்கு தானே.சரி போகலாம் என நினைத்து வந்தது தவறோ என தோன்றியது.

நினைவில் ஆழ்ந்திருந்த போது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சிணுங்கியது. 2 வயது தான் இருக்கும், என் மூத்த சகோதரியின் மகன். அழகான சிசு. ரவியுடன் எனக்கும் திருமணமாகி இருந்தால்...அது தான் எதுவுமே இல்லாமல் போய்விட்டதே!

குழந்தையை காலில் போட்டு ஆட்டி தூங்க வைக்க முயற்சி செய்த போது சற்று தொலைவில் என் மூத்த சகோதரியும் அவள் மாமியாரும்..

"இஞ்ச ராஜி உன்ட தங்கச்சிக்கு என்ன தெரியும் என்று குழந்தையை குடுத்திருக்காய்? துவக்கு பிடிக்கிற கையால என்ட பேரனை தொடுறது எனக்கு பிடிக்கலை. சொல்லிட்டேன்"

மாமியாரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசவும் முடியாமல், என்னிடம் எப்படி சொல்லி குழந்தையை வாங்குவது எனவும் தெரியாமல் அக்கா ராஜி தயங்க, குழந்தையை அவளிடம் ஒப்படைத்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

வந்ததில் இருந்து இப்படிதான். தாய் நாட்டை காக்க ஒருவராவது போக வேண்டும் என நினைத்து 5 வருடங்கள் முன்னர் எனை நாட்டிற்காய் அர்ப்பணித்தேன். உறவும் , அயலும் பேசும் பேச்சு எதற்கு என ஒதுங்கியதன் காரணமே 5 வருடம் பெற்ற தாயை பார்க்காமல் ஓர் வனவாசம்.

என்னடா இது ஊர் பேச்சுக்கு இவ்வளவு மதிப்பா என நினைக்கலாம்!! நான் என்றால் சரி. ஆனால் என்னை பெற்றவள், கூட பிறந்தவர்கள்.... அவர்கள் இன்னும் மாறவில்லையே. எனக்காக மாறச் சொல்லி கேட்பதிலும் நியாயம் இல்லையே.

போராளியானால் ஒரு பெண், பெண் இல்லையா? வெட்டிய தலை முடிக்கு ஒரு கதை, குடும்பம் பற்றி என்ன தெரியும் என ஒரு கதை, குழந்தை பற்றி தெரியுமா என ஒரு கதை...அப்பப்பா எதற்கடா இங்கு வந்தோம் என சலிப்பாய் இருக்கிறது.

சிறிது நேரம் எங்காவது போய்வரலாம் என நினைத்த போது. உடனே மனதிற்கு வந்த இடம் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த கடற்கரை தான்.

உடனேயே மனதும் துள்ளி குதித்தது. இதோ இந்த இடத்தில் தானே சிறு வயதில் விளையாடினேன், இதோ இந்த இடத்தில் தானே ரவியுடன் பேசி இருக்கிறேன்... ரவி....என்னையும் மீறி அகத்திலும், முகத்திலும் ஓர் இனிய உணர்வு.

8 வருடங்களுக்கு முன்னர் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி பயின்ற காலம். தூரத்து உறவினன் கூட..நட்பாய் இருந்த எங்கள் அன்பு பின்னர் ஓர் முதிர்ச்சி அடைந்த காலம் அது.

ரவியின் அண்ணன் வெளிநாடு செல்ல என, கொழும்பு சென்றிருந்தார். கொழும்பில் விடுதியில் தங்கி இருந்தவரை சிறீலங்கா காவல் துறையினர் ஓர் இரவு சோதனை என்ற பெயரில் கூட்டி சென்றது தான் தெரியும்.

அதன் பின்னர் சிறிது காலம் தகவல் இல்லை, பின்னர் வந்த தகவலின் படி அவர் தவறியிருந்தார். உடலை கூட காணாமல் ரவியின் குடும்பம் அழுது உடைந்தது இப்பொழுதும் கண் முன்னே.

இது நடந்த சில நாளில் இதே கடற்கரை மணலில், "நாட்டிக்காக போராட நான் போகிறேன்" என ரவி கூற, அவன் முடிவில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டதால் விடைகொடுத்தேன்.

அன்று இரவு தூங்க நினைத்தும் முடியவில்லை. சின்ன பிள்ளைகளாக அக்கா, தங்கை, நான் இருந்த காலம்,கடைக்கு சென்ற அப்பாவை ஆமிக்காரன் வெட்டி கொன்றுவிட்டான் என செய்தி வந்தது.

எங்கள் அனைவைரையும் நெஞ்சில் சுமந்தவர் நெஞ்சை கூறுபோட்டு இருந்தார்கள்.

அன்று நான் சிறு பிள்ளை ஆனால் இன்று?? சிந்தித்தேன், முடிவெடுத்தேன். நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை.

இடையே ரவியை பார்த்ததுண்டு. 3 வருடங்களின் பின்னர் கூட இருந்த ஒரு போராளி "அக்கா ரவி அண்ணா வீரமரணமாம்" என செய்தி கூற, கண்ணீருக்கு பதில் பெருமை தான் மேலோங்கி நின்றது.

3 வருடங்களில் நானும் சற்று முதிர்ச்சி அடைந்து இருந்தேனே.

"அக்கா மாலை எடுக்க போகணும். ஒருக்கா எடுத்துகொண்டு வாறிங்களா" என கேட்டபடி தங்கை வர நினைவுகளுக்கு விடை கொடுத்தேன்.

அடுத்த நாள் தங்கை திருமணம் இனிதே நிறைவேற, அமாவிடம் விடை பெற்றுகொண்டேன்.

7 நாட்களின் பின்னர் பேஸுக்கு திரும்பும் போதே, கடமைகள் ஒவ்வொன்றாய் மனதிற்குள் அணிவகுக்க தொடங்கின.

தூரத்தில் என்னை கண்டதும் "அக்கா வந்திடா" என ஓடி வந்த சக போரளிகளை பார்த்த போது.. "ரவியை மணந்திருந்தால், முடி வெட்டாமல் இருந்திருந்தால், ஓர் குழந்தைக்கு தாயாகி இருந்தால்..."அத்தனை "இருந்தால்" களும் பறந்தோடிவிட்டிருந்தன.

எதற்காக நான் பிறந்தேன், எதற்காக நான் வாழ்கிறேன்..மனது நிறைவாய் மலர என் வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறேன்....

தூயா

08/12/05

Link to comment
Share on other sites

பிழைகளை சுட்டி காட்டி, திருத்தவும். நன்றி

தூயா

Link to comment
Share on other sites

தூயா உங்கள் கதை நன்றாக இருக்கிறது.

எழுத்துப்பிழைகளைக் கொஞ்சம் கவனித்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

நன்றி அருவி.

தட்டச்சு செய்யும் போது எப்படி கவனமா செய்தாலும் எழுத்து பிழை வந்தே தீருகிறது எனக்கு :lol: அடுத்த முறை இன்னும் கவனமா எழுதுறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ஒரு பெண் போராளியின் வாழ்வை எழுதியிருக்கிறியள். நல்லாய் தான் இருக்கு. ஆனால் பெண் போராளிகளுக்கு இப்படி எல்லாம் இடர்களா..?? நான் கண்டதில்லை. நல்ல மரியாதையாத்தான் நடத்திறவையைக்கண்டிருக்கிறன

Link to comment
Share on other sites

ஒரு பெண் போராளியின் மனதை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள், நன்றி தூயா. உங்களிடமிருந்து தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.

எனது கண்ணில் பட்ட எழுத்து பிழைகளை சரி செய்துள்ளேன்.

Link to comment
Share on other sites

துயா உங்கள் கதையில் சொன்னது போல், போராளியான பெண்களை பற்றிய ஊராரின் கருத்துக்களை நான் நேரில் கேட்டுள்ளேன்.ஆரம்ப காலங்களில் இவ்வாறு பேசியவர்கள் தான். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

தூயா கதை நல்லாயிருக்கு. பல பழைய பெண் போராளிகள் இப்போது திருமணம் செய்து வாழ்க்கையில் சந்தோசமாய் இருப்பதை கண்டு இருக்கின்றேன். ஆனாலும் ஒரு சில பெண் போராளிகளுக்கு இப்படியான சங்கடங்கள் நிகழ்வதையும் அறிந்திருக்கின்றேன். ஓரு பெண் போராளியின் உணர்வை மிகவும் அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.. நன்றி .. தொடருங்கள்

Link to comment
Share on other sites

பெண் போராளியின் கதை மிகவும் மனதை நெருட வைத்து விட்டது தூயா . . .அவர்களும் மனிதர்கள்தானே எவ்வளவற்றை தியாகம் செய்து போகிறார்கள் யாருக்காக.............????? எமது விடிவுக்குத்தானே

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் எழுதும் போது பிழைவரும்நானும் அப்படி தான் நான் கதை எழுதுவதே கணனிக்குமுன்பு அமர்ந்தபின்பு தான் கதை பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பேன் எல்லோசொல்வது போல் உண்மை கதையல்ல நான் எழுதுவது கற்பனை தான் அது போல் உங்கள் கதையும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தமிழினி

ம் ஒரு பெண் போராளியின் வாழ்வை எழுதியிருக்கிறியள். நல்லாய் தான் இருக்கு. ஆனால் பெண் போராளிகளுக்கு இப்படி எல்லாம் இடர்களா..?? நான் கண்டதில்லை. நல்ல மரியாதையாத்தான் நடத்திறவையைக்கண்டிருக்கிறன
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அக்கி. நீங்கள் சொல்வது உண்மை தான். போராளிகளை அனைவரும் மரியாதையாக தான் நடத்துகிறார்கள். ஆனால் சில போராளிகளின் குடும்பங்களில் ,ஒரு பெண்ணிடம் இயற்கையிலே இருக்க கூடிய குணங்களை ஒரு போராளியான பின் இருக்காது என நினைக்கிறார்கள். இதை நான் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

அத்துடன் ஆரம்ப காலத்தில் அனைவரும் எம்மவரை மரியாதையாக நடத்தியதாக சரித்திரம் இல்லையே அக்கி

அப்படி என்றியள் ஆரம்பத்தில் நாங்கள் மழலைகளா.. அப்ப சரியாக விபரம் இல்லை. நன்றி தூயா. :P

Link to comment
Share on other sites

கதை நல்லா எழுதுறீங்கள் தூயா... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

ம்ம் இப்படியெல்லாம் நடந்திருக்கா .. அவர்களுடைய ஆசை கனவுகள் எல்லாத்தையும் விட்டுட்டு போராளியா போனவர்களை இப்படியெல்லாம் பேச எப்படி மனம் வரும் , ம்ம் இப்படி ஒரு கதையை இப்பத்தான் வாசிக்குறன் ... நன்றாக இருக்கு ..தொடருங்கள்.. :P

Link to comment
Share on other sites

தூய்ஸ் கதை எல்லாம் எழுதிறீங்கள்.. வாழ்த்துக்கள்.

நன்றாக இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள்.. 8)

Link to comment
Share on other sites

துயா உங்கள் கதையில் சொன்னது போல், போராளியான பெண்களை பற்றிய ஊராரின் கருத்துக்களை நான் நேரில் கேட்டுள்ளேன்.ஆரம்ப காலங்களில் இவ்வாறு பேசியவர்கள் தான். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என நினைக்கிறேன்.

முன்பை விட குறைவு என்றாலும் பெண் போராளிகளுக்கு சில இடர்பாடுகள் இல்லாமல் இல்லை. பெண்கள் போராளிகளானவுடன் அவர்கள் பெண்மை தன்மை இழந்துவிட்டதாக அல்லது குறைவடைந்துவிட்டதாக நினைப்பவர்கள் இருக்கின்றார்கள். ஒரு ஆண் போராளி தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பும் போது இலகுவாக திருமணம் செய்து கொள்ள முடிகின்றது, ஆனால் அதுவே ஒரு பெண் போராளி தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பி திருமணம் செய்ய முற்படும் போது பல இடர்பாடுகள் உண்டு.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கு மிக்க நன்றி அனிதா , வசிண்ணா.

மதன் அண்ணா சொல்வது உண்மையில் பல பெண் போராளிகளுக்கு நடந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

தூயா நல்ல கதை.விண்ணானம் கதைக்கிறதுக்கெண்டே அக்கான்ர மாமி போல் ஆக்கள் இருக்கினம்.சில இடங்களில இயக்க அக்காவைக்கு நல்ல மரியாதைதான.சில இடங்களில் சில மனிதர்கள் என்ன செய்ய.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தூயா நல்ல கதை.விண்ணானம் கதைக்கிறதுக்கெண்டே அக்கான்ர மாமி போல் ஆக்கள் இருக்கினம்.சில இடங்களில இயக்க அக்காவைக்கு நல்ல மரியாதைதான.சில இடங்களில் சில மனிதர்கள் என்ன செய்ய.

நன்றி சகோதரி. சரியா சொன்னிங்க சில சனத்துக்கு வேற வேலையே இல்லை.. :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்தக்கதையினை வாசித்தேன்.ஒரு பெண் போராளியின் மன உணர்வினை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் தூயா. எங்கட சனம் தாங்களும் நாட்டுக்கு உதவி செய்யமாட்டினம். ஆனால் உதவிசெய்பவர்களைக் கேளனம் செய்வீனம்.

பிரித்தானியாவில் வசிக்கும் எனது ஒரு நண்பன் தனக்கு வருகிற மனைவி ஒரு மாவீரர் குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்பி மாவீரர் குடும்பத்தில் தான் மணமுடித்துள்ளார். இன்னொரு நண்பரும் இவ்வாறே இருந்தார். தற்பொழுது முன்னால் பெண் போராளி ஒருவரைத்தான் மணந்து சந்தோசமாக வாழ்கிறார்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துயா கதைகள் பகுதிக்கு நான் இன்றுதான் முதன் முதலில் வந்தேன் அருமையான படைப்புகள் இருப்பது இன்றுதான் எனக்குதெரியும்

சாத்திரி அண்ணாவின் கதைகளும் பிரமாதம்.எனக்கு லிங் கொடுத்து வாசிக்கச்சொன்ன கந்தப்புவுக்கு ந்ன்றிகள்

Link to comment
Share on other sites

இன்று தான் இந்தக்கதையினை வாசித்தேன்.ஒரு பெண் போராளியின் மன உணர்வினை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் தூயா. எங்கட சனம் தாங்களும் நாட்டுக்கு உதவி செய்யமாட்டினம். ஆனால் உதவிசெய்பவர்களைக் கேளனம் செய்வீனம்.

பிரித்தானியாவில் வசிக்கும் எனது ஒரு நண்பன் தனக்கு வருகிற மனைவி ஒரு மாவீரர் குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்பி மாவீரர் குடும்பத்தில் தான் மணமுடித்துள்ளார். இன்னொரு நண்பரும் இவ்வாறே இருந்தார். தற்பொழுது முன்னால் பெண் போராளி ஒருவரைத்தான் மணந்து சந்தோசமாக வாழ்கிறார்.

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்னர் எழுதிய கதை.... இப்பொழுதும் நீங்கள் வாசித்து கருத்து கூறும் போது சந்தோசமாக உள்ளது. மிக்க நன்றி கந்தப்பு

Link to comment
Share on other sites

உங்கள் கதை அழகு அம்மணி

மிக்க நன்றி கறுப்பி

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துயா கதைகள் பகுதிக்கு நான் இன்றுதான் முதன் முதலில் வந்தேன் அருமையான படைப்புகள் இருப்பது இன்றுதான் எனக்குதெரியும்

சாத்திரி அண்ணாவின் கதைகளும் பிரமாதம்.எனக்கு லிங் கொடுத்து வாசிக்கச்சொன்ன கந்தப்புவுக்கு ந்ன்றிகள்

உண்மை தான்..இங்கு பல நல்ல எழுத்தாளர்கள் உள்ளார்கள் ஈழவன்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அரவிந்தன், மிக்க நன்றி :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.