Jump to content

கருவாட்டுக் குழம்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

கருவாட்டுக் குழம்பு.

p_dry-fish2.jpgSDC11275.JPG

தேவையான பொருட்கள்:

சதையுள்ள கருவாடு 700 கிராம்,

கத்தரிக்காய் 300 கிராம்,

பச்சை மிளகாய் 6,

வெங்காயம் 2,

கடுகு 1 தேக்கரண்டி,

பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி,

வெந்தயம் 1 தேக்கரண்டி,

மிளகாய்த் தூள் 2 - 3 மேசைக்கரண்டி,

தாழிக்க எண்ணை,

பழப்புளி கொஞ்சம்,

விரும்பினால் தக்காளிப் பழம் போடலாம்.

செய்முறை:

கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி, ஒரு மணித்தியாலம் ஊற விடவும். பின் அதன் தோலை நீக்கி வடிவாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவினால் அதில் உள்ள உப்பு போய் விடும்.

கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும்.

இனி.... நீளமாக அரிந்த வெங்காயத்தை பாத்திரத்தில் இட்டு சிறிது வதக்கவும்.

வதக்கும் போது... கடுகு, பெருஞ்சீரகம், வெந்தயம் போன்றவற்றையும் போட்டு தாழிக்கவும்.

இப்போ இரண்டரை கப் தண்ணீர் விட்டு...... கருவாடு, கத்தரிக்காய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விடவும்.

நன்கு கொதித்த கருவாட்டுக் குழம்பில் உப்பின் ருசி பார்க்கவும். உப்பு காணாமல் இருந்தால் போடவும்.

உப்பு கூடியிருந்தால் இரண்டு உருளைக்கிழங்கை போடவும்.

இப்போ.... சுவையான கருவாட்டுக் குழம்பு தயார்.

இந்தக்குழம்பு சோறு, புட்டு, இடியப்பம் எல்லாவற்றுடனும் கலந்து சாப்பிட தோதாக இருக்கும்.

கருவாடு சமைத்த பின் வீட்டின் ஜன்னல்களை அகலாமாக திறந்து விடவும்.

.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

பிடித்தமான உணவு ஸ்ரீ. நான் சிலவேளை மரவள்ளி கிழங்கும் போடுவேன்.

கொட் கருவாடு (Salt Cod Fish) ஐ 1 -2 நாள் குளிர்ந்த நீரில் ஊறப்போட்டு (அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்-போர்த்துகீசிய முறை)) கருவாட்டுக் குழம்பு செய்து பாருங்கள் மிகவும் சுவையாயிருக்கும். ஒரு காய் தக்காளியும் போட்டால் இன்னும் சுவை. <_<

Link to comment
Share on other sites

சிறி அண்ணை! கருவாடும் கத்தரிக்காயும் சேர்த்துச் சமைச்சால்.... அதோட ருசியே தனிதான். :)

அதுவும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தீயாப்பாரக் கருவாடு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்!

நினைக்கவே வாய் ஊறுது! <_<

பசியை கிளப்பீட்டீங்களே அண்ணை! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி உங்கட வீட்டில நவராத்திரிக்கு வைவம் ஆக இருக்க இல்லையோ <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமான உணவு ஸ்ரீ. நான் சிலவேளை மரவள்ளி கிழங்கும் போடுவேன்.

கொட் கருவாடு (Salt Cod Fish) ஐ 1 -2 நாள் குளிர்ந்த நீரில் ஊறப்போட்டு (அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும்-போர்த்துகீசிய முறை)) கருவாட்டுக் குழம்பு செய்து பாருங்கள் மிகவும் சுவையாயிருக்கும். ஒரு காய் தக்காளியும் போட்டால் இன்னும் சுவை. <_<

bacalao.jpg

இந்தக் கருவாட்டைத் தானே... சொல்கிறீர்கள் தப்பிலி. நான் இதனை ஸ்பெயின் கடையில் வாங்கி சமைத்துள்ளேன் நன்றாக இருக்கும். :)

நீங்கள் சொன்ன மாதிரி சரியான உப்பு, கன நேரம் ஊற விட வேணும். கருவாடு சமைக்கும் போது மரவள்ளிக்கிழங்கும், தக்காளிக்காயும் போட்டு சமைத்துப் பார்க்கவில்லை. அடுத்த முறை உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும். :lol:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை! கருவாடும் கத்தரிக்காயும் சேர்த்துச் சமைச்சால்.... அதோட ருசியே தனிதான். :)

அதுவும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தீயாப்பாரக் கருவாடு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்!

நினைக்கவே வாய் ஊறுது! <_<

பசியை கிளப்பீட்டீங்களே அண்ணை! :lol:

பார்த்தீபன் நீங்கள் சொல்லும் "தீயாப்பாரை கருவாடு" பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன் இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை.

சிலவேளை... தமிழ்க் கடைகளில் இருக்குமோ.... தெரியவில்லை. நவராத்திரி பூசை முடிய கருவாடு செய்து சாப்பிடுங்களேன். அதற்கு முன்னம் செய்தால்.... எனக்குத் தான் பாவம் கிடைக்கும். :lol:

தமிழ்சிறி உங்கட வீட்டில நவராத்திரிக்கு வைவம் ஆக இருக்க இல்லையோ :)

ரதி, நவராத்திரி பூசை தொடங்கி விட்டதா?

இந்த முறை தமிழ் கடையில் கலன்டர் தராத படியால்...... எல்லா நாளும் ஒரு மாதிரி கிடக்குது. :lol:

சரி..... தெரியாமல் செய்தால் குற்றம் இல்லை. :lol:

நாளையிலேயிருந்து விரதம் பிடிக்க வேணும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்திலி மீன் கருவாடு சுவையாக இருக்கும்...நல்ல பதிவு தோழர் தமிழ்சிறி <_<

Link to comment
Share on other sites

bacalao.jpg

இந்தக் கருவாட்டைத் தானே... சொல்கிறீர்கள் தப்பிலி. நான் இதனை ஸ்பெயின் கடையில் வாங்கி சமைத்துள்ளேன் நன்றாக இருக்கும். <_<

நீங்கள் சொன்ன மாதிரி சரியான உப்பு, கன நேரம் ஊற விட வேணும். கருவாடு சமைக்கும் போது மரவள்ளிக்கிழங்கும், தக்காளிக்காயும் போட்டு சமைத்துப் பார்க்கவில்லை. அடுத்த முறை உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும். :)

.

இருக்கலாம். சரியாய ஊகிக்க முடியவில்லை. பெரிய மீன். நிறைய சதை பிடிப்புள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bacalao.jpg

இந்தக் கருவாட்டைத் தானே... சொல்கிறீர்கள் தப்பிலி. நான் இதனை ஸ்பெயின் கடையில் வாங்கி சமைத்துள்ளேன் நன்றாக இருக்கும். <_<

நீங்கள் சொன்ன மாதிரி சரியான உப்பு, கன நேரம் ஊற விட வேணும். கருவாடு சமைக்கும் போது மரவள்ளிக்கிழங்கும், தக்காளிக்காயும் போட்டு சமைத்துப் பார்க்கவில்லை. அடுத்த முறை உங்கள் முறையில் செய்து பார்க்க வேண்டும். :)

.

தமிழ்சிறி அண்ணா உந்த கருவாடு ஜேர்மனியிலுள்ள மீன் விக்கும் அத்தனை கடையளிலையும் இருக்கு. ஹொலண்ட் ல இருந்து வாங்குறது நல்ல மலிவும் அண்ணா. தமிழ்கடையிலை கிலோ 5.90€விக்கினம்.

Link to comment
Share on other sites

நன்றி சிறி அண்ணா, எழும்பின உடனேயே பார்த்தேன்... ஒரு பெருமூச்சோடு போய் விட்டேன். கருவாட்டுக் குழம்பு சமைச்சு வருசக் கணக்காகி விட்டது. செய்முறை சூப்பர் ஆக இருக்கிறது. அடுத்த வார விடுமுறைக்கு சமைக்கிறதா முடிவு எடுத்துவிட்டேன். <_< எனது சார்பாக green-plus.jpg

அது சரி எங்க தேன்மொழியை வெட்டிப் போட்டீங்கள்? :lol:

புரட்சி தோழரே, நெத்தலி கருவாடு பழைய சோறோடு, புட்டோடு சாப்பிட்டால் நல்ல இருக்கும். :)

இந்தக் கொடியில காயிறதில ஏதாவது ஒன்று எடுத்து குழம்பு வையுங்கோ... :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்திலி மீன் கருவாடு சுவையாக இருக்கும்...நல்ல பதிவு தோழர் தமிழ்சிறி :D

DSC01730.JPG

புரட்சி, நெத்தலி மீன் கருவாட்டுப் பொரியல் சாப்பிடிருக்கிறீர்களா? மிகவும் சுவையாக இருக்கும். :)

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அண்ணா உந்த கருவாடு ஜேர்மனியிலுள்ள மீன் விக்கும் அத்தனை கடையளிலையும் இருக்கு. ஹொலண்ட் ல இருந்து வாங்குறது நல்ல மலிவும் அண்ணா. தமிழ்கடையிலை கிலோ 5.90€விக்கினம்.

ஜீவா, தமிழ் கடையில் இந்தக் கருவாட்டை இன்னும் காணவில்லை. சிலவேளை மணம் வெளியே வராமல் வடிவாக சுத்தி வைத்திருக்கிறார்களோ தெரியாது. அடுத்த முறை தமிழ்க் கடைக்குப் போகும் போது கேட்டுப் பார்க்க வேணும். இந்தக் கருவாட்டை ஸ்பெயின் கடையிலை உள்ள பொம்பிளை கிலோ 9 € விற்கிறா. இது தான் தப்பிலி சொன்ன கருவாடு என்று நினைக்கின்றேன். ஜீவா, உங்கள் பக்கம் உள்ள தமிழ் கடையில்..... சனிக்கிழமை பங்கு ஆட்டிறைச்சி விற்கிறார்களா? இங்கு ஒரு பங்கு ஆட்டிறைச்சி 10 €. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ வரும். லக் இருந்தால் கனக்க இறைச்சி வரும். லக் இல்லாவிட்டால் எலும்பு தான் கனக்க வரும். :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி அண்ணா, எழும்பின உடனேயே பார்த்தேன்... ஒரு பெருமூச்சோடு போய் விட்டேன். கருவாட்டுக் குழம்பு சமைச்சு வருசக் கணக்காகி விட்டது. செய்முறை சூப்பர் ஆக இருக்கிறது. அடுத்த வார விடுமுறைக்கு சமைக்கிறதா முடிவு எடுத்துவிட்டேன். :D எனது சார்பாக green-plus.jpg

அது சரி எங்க தேன்மொழியை வெட்டிப் போட்டீங்கள்? :)

--------

குட்டி, இந்தக் கருவாட்டுக் குழம்பை வார விடுமுறையில் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள். குழம்பு திக்காக வர..... வேறை ஏதாவது அயிற்றம் சேர்க்க வேணும் என்றால், மறக்காமல் குறிப்பிடுங்கள். :)

ஓம்.... குட்டி, முதலில் கருவாட்டு குழம்புக்கு தேன் மொழியின் பாட்டு இணைத்திருந்தேன்.....

ஆக்கள் தேன் மொழியை பார்த்திட்டு.... கருவாட்டு குழம்பை கவனிக்காமல் விட்டு, விடுவார்களோ என்று நீக்கி விட்டேன். :)

நீங்கள் இரண்டையும் பார்த்திருக்கிறீர்கள். குட்டிக்காக பாடல் மீண்டும் இணைக்கப் படுகின்றது...... :)

http://www.youtube.com/watch?v=iD_20oB8Xv0&feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல இருக்கிறதால நல்ல மீன்கள் கிடைக்கின்றன கருவாடும் போட்டு வைத்திருக்கிறோம் வேண்டுமானவர்கள் தொடர்பு கொள்ளவும் தமிழ் சிறி அண்ணா நல்ல கீரி கருவாடு இருக்கு குழம்பு தூக்கிவிடுகிறது :D:)

Link to comment
Share on other sites

இந்தக் கருவாட்டை ஸ்பெயின் கடையிலை உள்ள பொம்பிளை கிலோ 9 € விற்கிறா.

ஸ்பெயினில இந்த கருவாட்டின் விலை 2 € தான். நீங்க விட்ட லுக்குக்கு எக்ஸ்ராவா 7 € எடுத்திருக்கிறாள். :D

Link to comment
Share on other sites

மீனை குளிர்பதனப் படுத்தாட்டில் கெட்ட ஸ்மெல் வருமே..! :D உதை எப்பிடிச் சமைச்சுச் சாப்பிடுறதாம்? :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் நிலையில் வாங்காமல் " கருவாட்டு நிலையில் " ஆக்க பட்ட் பின் வாங்கவும். :D வாசம் தவிர்க்கமுடியாதது.

Link to comment
Share on other sites

குட்டி, இந்தக் கருவாட்டுக் குழம்பை வார விடுமுறையில் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள். குழம்பு திக்காக வர..... வேறை ஏதாவது அயிற்றம் சேர்க்க வேணும் என்றால், மறக்காமல் குறிப்பிடுங்கள். :)

ஓம்.... குட்டி, முதலில் கருவாட்டு குழம்புக்கு தேன் மொழியின் பாட்டு இணைத்திருந்தேன்.....

ஆக்கள் தேன் மொழியை பார்த்திட்டு.... கருவாட்டு குழம்பை கவனிக்காமல் விட்டு, விடுவார்களோ என்று நீக்கி விட்டேன். :)

நீங்கள் இரண்டையும் பார்த்திருக்கிறீர்கள். குட்டிக்காக பாடல் மீண்டும் இணைக்கப் படுகின்றது...... :D

...

நேற்று காலை மேலோட்டமாக பார்த்துவிட்டு போய்விட்டேன், திரும்பி வந்து பார்த்த போது ஏதோ மிஸ்ஸிங் என்று தெரிஞ்சது அது தான் கேட்டேன். :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, தமிழ் கடையில் இந்தக் கருவாட்டை இன்னும் காணவில்லை. சிலவேளை மணம் வெளியே வராமல் வடிவாக சுத்தி வைத்திருக்கிறார்களோ தெரியாது. அடுத்த முறை தமிழ்க் கடைக்குப் போகும் போது கேட்டுப் பார்க்க வேணும். இந்தக் கருவாட்டை ஸ்பெயின் கடையிலை உள்ள பொம்பிளை கிலோ 9 € விற்கிறா. இது தான் தப்பிலி சொன்ன கருவாடு என்று நினைக்கின்றேன். ஜீவா, உங்கள் பக்கம் உள்ள தமிழ் கடையில்..... சனிக்கிழமை பங்கு ஆட்டிறைச்சி விற்கிறார்களா? இங்கு ஒரு பங்கு ஆட்டிறைச்சி 10 €. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ வரும். லக் இருந்தால் கனக்க இறைச்சி வரும். லக் இல்லாவிட்டால் எலும்பு தான் கனக்க வரும். :D:)

சிறி அண்ணா நான் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு தமிழ்க்கடையில் வேலைசெய்கிறேன் அங்கு இந்த கருவாடு இருக்குது அண்ணா கிலோ 5.90€ தான் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் தெரியாது ஆனால் NRW பக்கம் அல்லது Dortmund போனால் அனேகமான எல்லா தமிழ்க்கடைகளிலும் வாங்கலாம் அண்ணா.

அப்புறம் நான் இருக்கிற இடத்திலை இருந்து Kempen பக்கத்திலை தான் அங்கை போனால் ஆடு நல்ல மலிவா வாங்கலாம் அண்ணா 15_20கிலோ இருக்க கூடிய நல்ல ஆடு 60_70€க்கு வாங்கலாம் நாங்கள் நிக்கவே ஒரு சூடு ஆடு மண்டைய போட உரிச்சு தருவான். பிறகு நாங்கள் பங்குபோடவேண்டியது தான். :D

மீனை குளிர்பதனப் படுத்தாட்டில் கெட்ட ஸ்மெல் வருமே..! :) உதை எப்பிடிச் சமைச்சுச் சாப்பிடுறதாம்? :(:)

மாமோய்..

உதுக்கு தான் என்னை மாதிரி மீனே சாப்பிடக்கூடாது. :D

Link to comment
Share on other sites

கருவாட்டுக்கறிக்கு நன்றி சிறி. உப்புக்கு நன்றாக சுடுதண்ணியில் ஊறவிட்டால் போகுமா?

Link to comment
Share on other sites

அப்புறம் நான் இருக்கிற இடத்திலை இருந்து Kempen பக்கத்திலை தான் அங்கை போனால் ஆடு நல்ல மலிவா வாங்கலாம் அண்ணா 15_20கிலோ இருக்க கூடிய நல்ல ஆடு 60_70€க்கு வாங்கலாம்

ஜீவா

ஜேர்மனியில் இறைச்சி வகை சுவை கூடியதாக இருக்கும் என அங்கிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்துள்ள நண்பன் கூறினான். ஒரு முறை அங்கு வந்த போது நண்டும் மாட்டு இறைச்சியும் சாப்பிடிருக்கிறேன். நன்றாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல இருக்கிறதால நல்ல மீன்கள் கிடைக்கின்றன கருவாடும் போட்டு வைத்திருக்கிறோம் வேண்டுமானவர்கள் தொடர்பு கொள்ளவும் தமிழ் சிறி அண்ணா நல்ல கீரி கருவாடு இருக்கு குழம்பு தூக்கிவிடுகிறது :(:D

முனிவர், கீரியிலும் கருவாடு செய்வார்களா? :):):)

pine_marten_lge.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினில இந்த கருவாட்டின் விலை 2 € தான். நீங்க விட்ட லுக்குக்கு எக்ஸ்ராவா 7 € எடுத்திருக்கிறாள். :)

சும்மா..... மேலாலை பாத்ததுக்கு 7 € ரொம்ப அநியாயமாயிருக்கே.... தப்பிலி.

இதுக்குத் தான் கருவாட்டுக் கடையிலை, வடிவான பொம்பிளையளை வேலைக்கு வைத்திருக்கிறார்கள் போலை... :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனை குளிர்பதனப் படுத்தாட்டில் கெட்ட ஸ்மெல் வருமே..! :) உதை எப்பிடிச் சமைச்சுச் சாப்பிடுறதாம்? :D:)

மீன் நிலையில் வாங்காமல் " கருவாட்டு நிலையில் " ஆக்க பட்ட் பின் வாங்கவும். :D வாசம் தவிர்க்கமுடியாதது.

கருவாட்டை.... கெட்ட ஸ்மெல் என்று சொன்ன இசைக்கலைஞனை வன்மையாக கண்டிக்கின்றேன். :)

நிலாமதி அக்கா சொன்னமாதிரி வாசம். :D

வாசத்துக்கும், கெட்ட ஸ்மெலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத இசைக்கு...... மூக்கிலை பிரச்சினை போலை.... :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நான் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு தமிழ்க்கடையில் வேலைசெய்கிறேன் அங்கு இந்த கருவாடு இருக்குது அண்ணா கிலோ 5.90€ தான் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் தெரியாது ஆனால் NRW பக்கம் அல்லது Dortmund போனால் அனேகமான எல்லா தமிழ்க்கடைகளிலும் வாங்கலாம் அண்ணா.

அப்புறம் நான் இருக்கிற இடத்திலை இருந்து Kempen பக்கத்திலை தான் அங்கை போனால் ஆடு நல்ல மலிவா வாங்கலாம் அண்ணா 15_20கிலோ இருக்க கூடிய நல்ல ஆடு 60_70€க்கு வாங்கலாம் நாங்கள் நிக்கவே ஒரு சூடு ஆடு மண்டைய போட உரிச்சு தருவான். பிறகு நாங்கள் பங்குபோடவேண்டியது தான். :)

-------

ஜீவா, NRW ல் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்க்கடை திறப்பார்களா? நான் இருப்பது BW பக்கம். இங்கு ஒரு ஜேர்மன் ஆட்டுப் பண்ணையில் நல்ல ஆட்டுத்துடை வாங்கலாம். ஒரு துடை 3 - 4 கிலோ இருக்கும். கிலோ 5 € தான். ஆனால் அது செம்மறி ஆடு. சிலர் ஊர் ஆடு வாங்க வேறு இடங்களுக்கு செல்வார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து போனால்.... கெட்டுப் போய் விடுவேன் என்று...... மனிசி என்னை போக விடுவதில்லை. :):(

கருவாட்டுக்கறிக்கு நன்றி சிறி. உப்புக்கு நன்றாக சுடுதண்ணியில் ஊறவிட்டால் போகுமா?

நுணா, கருவாட்டை சுடுதண்ணீரில் போட்டால்... அதன் தோல் இலகுவாக கழரும். கருவாட்டை தோலுடன் சமைத்தால் ஒரு மாதிரி இருக்கும். மற்றும் படி உப்பு போகவேணுமென்றால் பல முறை குளிர்ந்த நீரில் சிறிது ஊறவிட்டு கழுவ வேண்டும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.