Jump to content

இப்படியே மடியப் போகின்றோமா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான், இதனால் தான் நான் கனக்க எழுத விரும்புவதில்லை.

நீங்கள் சொன்ன மாதிரி நம் வாரிசுகள் இருக்க வாய்ப்பிருக்கின்றது.

அப்படி அவர்கள் இருக்கும் போது தமிழர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள்.

அப்போது அவர்களுக்கு வேறு பெயர் வைத்து விடுவார்கள் நம் சிங்களவர்.

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சோழர்கள் தோற்றுப் போய், தங்களுடைய காலம் வரும் வரை பொறுமையாகத் தங்கள் பலத்தினை தலைமுறை தலைமுறையாக 100 ஆண்டுகள் வரை பேணி வந்ததாகவும், அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தபோது வெடித்த பலமே இராஜஇராஜ சோழனாக மாறியது என்று எங்கோ படித்த ஞாபகம். வரலாறு என்பது மாறத் தான் போகின்றது. மகிந்த குடும்பம் எத்தனை காலத்திற்கு இப்பதவியில் இருக்கப் போகின்றது... ஆனால் தமிழன் தமிழனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கல்லவா?

வாத்தியார்,

இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழன் என்ற வகையில் தான் சிந்திக்க வேண்டும் என்றில்லை. தமிழகத்தமிழன் முதற்கொண்டு பணரீதியாக எல்லோரும் வளர வேண்டும். பணம் தான் எம் வளர்ச்சி.

இன்றைக்கு வெளிநாடுகளில் பொருளாராதரீதியாகச் சீனர்கள் 3ம் நிலைச் சந்தையைக் கைப்பற்றிய நிலை போலத் தமிழ்மக்களும் சந்தைகளைப் பிடிக்க நாங்கள் துணை புரிய வேண்டும்.

இதற்கு ஒன்றுபட்ட சக்தி அவசியம்.

போராட்ட சூழ்நிலை என்பது எனி வரும் காலங்களில் எம் பொருளாதர நிலையை வைத்துத் தான் அமைய வேண்டும். 100 வருடங்களுக்கு முன்பு கனடாவில் சீனர்கள் குடியேற மிகப்பெரும் பணத்தைச் செலுத்த வேண்டி இருந்தது. அவர்களின் வருகை விரும்பப்படவில்லை. ஆனால் இன்றைய பொருளாதரா நிலையில் ஐந்தி ஒரு பங்குக்கு மேலதிகமான நிலையில் சீனர்களின் பங்களிப்பு இருக்கின்றது. அவர்களைக் கனடா அரசும் வாய் முழுதும் பல் தெரிய வரவேற்கின்றது. இன்றைக்கு நம்மபர்கள் கப்பல் வருகின்றபோது ஏன் வெறுக்கின்றார்கள் என்றால், எம்மிடம் பெரிய பொருளாதர வலையமைப்பு இல்லை. பெரிய சந்தையுமில்லை.

பொருனாதாரமில்லத எம்மை எவருமே மதிக்கமாட்டார்கள்.

1வது தமிழருக்குள் முதலில் வரவணிகர் சங்கம் தேவை. சங்கத்தின் செயற்பாட்டின் ஊடாக எம் வளர்ச்சி பற்றியும், ஒற்றுமையாகவும் சிந்திப்பது பற்றி யோசிக்க வேண்டும். உடனே ஏதாவது நடந்த சம்பவம் என்று புறணிக் கதையை யாராவது தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

இத் தலைப்பை நிறுத்தி விட்டு, புறணிக் கதை கதைப்பதை நிறுத்துவது எப்படி என்று விவாதிக்கலாம் போல இருக்கின்றது.

யூதர்களைத் தவிர எல்லோருமே அவர்களுடைய சொந்த நிலத்திலிருந்து கொண்டே அன்னியர்களுக்கு எதிராகப் போரிட்டார்கள். . அப்போது அவர்களுடைய வலு மிகவும் அதிகமாக இருக்கும். நாம் தான் புலம் பெயர்ந்து விட்டோமே!.

நாம் இங்கு பணம் சேர்ப்பதற்குள் களத்திலே சிங்களவன் மாதகல் வரை குடியேறி விடுவான்.

அப்போது உலக மயம் எப்படி இருக்கின்றதோ?

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

மூண்டு லட்சத்துக்கு மேலை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு எகத்தாளம் இடுகிறான் சிங்களவன்... அந்த மக்களை வாழ வைக்க வேண்டும் எண்டால் உங்கட பணங்களை கொண்டு வந்து கொட்டுங்கள் நாங்கள் அதிலை ஒரு பங்கை எடுத்து அவர்களுக்கு வசதி செய்கிறோம் என்கிறது சிங்களம்.... அவன் கேட்ப்பது நியாயம் தான் எண்று அதுக்கு தாளம் போடுகிறார்கள் எங்கட மக்களில் சிலர்... அதுக்கு ஆதரவு குடுக்கிறார்கள் பலர்... மக்களின் அவல நிலையை சர்வதேச மயப்படுத்த எதுவும் செய்ய விடாமல் தடுக்கும் பலர்... இணக்க அரசியலுக்கு அவசியம் எண்டு அரசியல் பேசும் ஆக்கள் எண்டு எத்தினை குழறுபடிகள்...

இப்படியான ஒரு கேவலம் கெட்ட இனம் அழிந்து போனால் என்ன இருந்தால் என்ன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் லொஜிக் கதைச்சு பயன் இல்லை. வாழ்வியல் உதாரணங்கள் இல்லாமல் கற்பனையில் கோட்டை கட்டி ஒன்றும் செய்ய முடியாது. நாளைக்கு வணிகர் சங்கம் தொடங்குவீங்கள். அங்கும் அடிப்படையில் தலைவராக, செயலாளராக பொறுப்புக்களில் எந்த ஊர்க்காரன், சாதிக்காரன், சமயத்தவன் உள்ளார்கள் என்பதில் சிக்கல் வரும். மொழி தவிர.. எங்களை தனித்துவமாக அடையாளப்படுத்தக்கூடிய இதரவிசயங்களை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். ஆயிரம் பேர் சந்தியில் கூடி நின்று எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆராய்வதைவிட எங்கள் எங்கள் வீடுகளுக்குள் தற்போது என்ன நடைபெற்றுக்கொண்டு உள்ளது என்று சிந்தித்து பார்ப்பது நல்லது.

ஊரில் ஒரு வணிகர் சங்கமும் இருந்ததில்லையோ.அப்போது எல்லாம் என்ன குடும்பச் சங்கமாகவோ இருந்தது. உங்களின் தனிப்பட்டவாழ்க்கையில் நீங்கள் கண்ட சவால்களையும் முன்னேற்றத்தையும் பற்றி எழுதிய போது அதைத் கண்டு நிறைவு கிடைத்தது. ஆனால் ஊரைப் பற்றிக் கதைத்தால் ஏன் எப்போதுமே குதர்க்கமாகக் கதைத்துப் பழகுகின்றீர்கள் கரும்பு. நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை தவிர்ந்த எந்த சம்பவங்களில் புலத்தில் சாதி அடிப்படையில் தீர்மானம் இயற்றப்பட்டிருக்கின்றது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்றால் எல்லாவற்றையும் (+) ஆக எடுக்கத் தெரிந்த உங்களுக்கு எம் சமூகம் பற்றி மட்டும் வந்தவுடன் (-) ஆக எல்லாத்தையும் சிந்திக்கும் குணம் ஏன்? நாங்கள் ஊரைப் பற்றிச் சிந்திக்கின்றோம். நீங்கள் வீட்டைப் பற்றிச் சிந்திப்பவர் என்றால், அப்படியே இருந்து விட்டுப் போங்களேன். யார் யார் ஊரைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களோ அவர்கள் பேசட்டுமே.

Link to comment
Share on other sites

நீங்கள்தான் "இப்படியே மடியப்போகின்றோமா?" என்று திரி ஆரம்பித்தீர்கள். இதுபற்றிய எனது பார்வையை கூறும்போது நாங்கள் ஊர்விசயத்தை பார்க்கின்றோம், நீங்கள் வீட்டு விசயத்தை பாருங்கள் என்று கூறுகின்றீர்கள். சரி.. முதலில ( + ) என்று எங்கள் சமூகத்தை பற்றி விளங்கி வைத்து இருக்கும் விடயங்களை நீங்கள் பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். வணிகர் சங்கம் ஆரம்பிப்பது பற்றி கருத்தாடல் செய்வதே உங்கள் நோக்கம் என்றால்.. பின்பு ஏன் இப்படியே மடியப்போகின்றோமா என்று திரி ஆரம்பித்தீர்கள்? புரியவில்லை. தெருவில் வந்து கொடி பிடித்துத்தான் சமூக விடயங்களில் ஈடுபடவேண்டும் என்கின்ற தேவை எனக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் மடிந்த போது இனி இப்படி ஒரு வீரத் தமிழன் வருவானா?வரவே மாட்டான் என்று தான் அப்போது எண்ணியிருப்பார்கள்.

ஆனால் எத்தனையோ வருடத்திற்கு பிற்பாடு தேசிய தலைவர் பிரபாகரன் வந்தார்.

இனியும் அப்படி ஒரு தமிழன் வருவான்.

நிச்சயம் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பில் குதர்க்கமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து நீங்கள். அடுத்த தலைமுறையும் தமிழனாக வாழ வேண்டும் என்பதற்கு என்ன செய்யலாம் என்ற அடிப்படையில் தான் தலைப்பைத் தொடங்கினேன். அந்த அடிப்படையில் ஒரு அங்கமாகத் தான் வணிகர் சங்கத்தையும் சொன்னேன். வணிகர் சங்கங்கள் பலப்படுத்துவதன் ஊடாகத் தமிழர்களின் தயாரிப்புக்களைச் சந்தைப்படுத்த உதவலாம் என்பதே அடிப்படை. அது பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தேன். நுனிப்புல் மேய்ந்தமாதிரி படித்து விட்டு கருத்தெழுதும் போக்கினை எனிவரும் காலங்களிலாவது....

ஆமாம். தனிப்பட்ட விதத்தில் கொடி பிடிக்காமல் உங்கள் சமூக சேவை பற்றி நிறையவே அறிந்திருக்கின்றேன். நன்றி :-)

Link to comment
Share on other sites

நீங்கள் ஆரம்பித்த திரியில் வந்து கருத்து பகிர்ந்தது எனது தவறுதான். மன்னித்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் நான் உங்கள் தோட்டத்தினுள் இறங்கி புல்லு மேயாமல் பார்த்துக்கொள்கின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

விலாசம் காட்டுவம் என்று ஜெயம் ரவியின் படத்துடன் இறங்கிவிட்டீர்கள் போல

இப்படியே ஒரு அஞ்சுசதத்திற்கும் வேலை செய்யாமல் அளந்து கொண்டிப்பதுதான் பலரின் வேலை.செய்யதவன் சொல்லிக் காட்டத்தான் செய்வான்.இதுவரை நீர் என்னத்தை புடுங்கினீர் என ஒருக்கா சொல்லும் பார்ப்போம்.

சொல்லக் கூடாது பரம ரகசியம் நான் தான் ஆர்ம் டீலே செய்தனான் என்று சொல்லப் போறீரோ?

உங்களுக்கெல்லாம் தமிழனின் உரிமையை பற்றி கதைக்க என்ன வக்கு இருக்கின்றது.உங்களைவிட கருணாவும்,டக்கிளசும்,பிள்ளயானும் மேல்.அதை இப்போ அங்கிருக்கும் மக்களும் ஒப்பு கொள்கின்றார்கள்.

படமோட்டியே காலத்தை கழிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலாசம் காட்டுவம் என்று ஜெயம் ரவியின் படத்துடன் இறங்கிவிட்டீர்கள் போல

இப்படியே ஒரு அஞ்சுசதத்திற்கும் வேலை செய்யாமல் அளந்து கொண்டிப்பதுதான் பலரின் வேலை.செய்யதவன் சொல்லிக் காட்டத்தான் செய்வான்.இதுவரை நீர் என்னத்தை புடுங்கினீர் என ஒருக்கா சொல்லும் பார்ப்போம்.

சொல்லக் கூடாது பரம ரகசியம் நான் தான் ஆர்ம் டீலே செய்தனான் என்று சொல்லப் போறீரோ?

உங்களுக்கெல்லாம் தமிழனின் உரிமையை பற்றி கதைக்க என்ன வக்கு இருக்கின்றது.உங்களைவிட கருணாவும்,டக்கிளசும்,பிள்ளயானும் மேல்.அதை இப்போ அங்கிருக்கும் மக்களும் ஒப்பு கொள்கின்றார்கள்.

படமோட்டியே காலத்தை கழிக்காதீர்கள்.

அண்ணாச்சி, சொல்லுறன் என்டு கோவிக்க வேணாம். நீங்கள் டெல்லியில இருந்து புல்லுப் புடுங்கினதை எங்கயும் எழுதலாம்-அதால ஆபத்து "இப்ப" இல்லை. பதிலாக, உங்கட வெளிப்படுத்தல்களுக்கு கொஞ்சம் சதையுள்ள எலும்புத் துண்டு மேலதிகமாகக் கிடைக்கக் கூடும். ஆனா தூயவனோ நாங்களோ என்ன புடுங்கினம் எண்டு அடையாளத்தோட சொன்னா எங்களுக்கும் ஆபத்து, ஊரில இருக்கிற எங்கட ஆட்களுக்கும் ஆபத்து. அது சரி, நீங்கள் இங்க வந்து கூவி விக்கிற மாதிரி தூயவனும் வீதி விலாசம் நாள் திகதி எல்லாம் கொடுத்து வித்தால் நீங்கள் டக்கெண்டு நம்பிக் கொண்டு மன்னிப்புக் கேப்பீங்களோ? ஏனெண்டா உங்கட கடந்த கால சாகசங்களை ஒருத்தரும் இங்க நம்பிற மாதிரித் தெரியேல்ல, அதான் கேட்டனான். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் மடிந்த போது இனி இப்படி ஒரு வீரத் தமிழன் வருவானா?வரவே மாட்டான் என்று தான் அப்போது எண்ணியிருப்பார்கள்.

ஆனால் எத்தனையோ வருடத்திற்கு பிற்பாடு தேசிய தலைவர் பிரபாகரன் வந்தார்.

இனியும் அப்படி ஒரு தமிழன் வருவான்.

நிச்சயம் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.

பண்டார வன்னியன் காலத்தில் இருந்து பிரபாகரன் காலம் வரை அடிமையா கிடந்தது போல.. இன்னும் கிடக்கனும் என்றா விரும்புறீங்க. ஏன் நீங்களோ.. நாங்களோ எங்களுக்குள் அந்தப் பிரபாகரனை அல்லது அவனை விஞ்சிய தமிழனை காண விளைகிறமில்ல...????????????????????!

இது பிரபாகரனின் காலத்தை விஞ்சியது. விரைவாக மாறனும்.. இல்ல காலம் உங்களை மாத்திடும்..! :wub:

நீங்கள் ஆரம்பித்த திரியில் வந்து கருத்து பகிர்ந்தது எனது தவறுதான். மன்னித்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் நான் உங்கள் தோட்டத்தினுள் இறங்கி புல்லு மேயாமல் பார்த்துக்கொள்கின்றேன். நன்றி.

கூல் சகோதரா. அவனே எழுதி இருக்கானில்ல.. தனக்கு இப்ப எல்லாம் கோபம் எரிச்சல் படக்கென்று வருதென்னு. அப்படி இருக்க இது நியாயமா. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில், மலேசியாவில் 4வது தலைமுறையினருக்குத் தமிழ் தெரிந்திருக்கிறது. தமிழை நன்றாகப் படிக்கிறார்கள். இவர்கள் இந்தியா வம்சாவளித் தமிழர்கள். ஈழத்தில் பிறந்தவர்களின் 2வது தலைமுறையினர் இங்கு தமிழ் படிப்பது மிகவும் குறைவு.

சிங்கப்பூரில் பாடசாலைகளில் ஒரு பாடம் (சீனா, மலாய், தமிழ் ) படிக்க முடியும். எனக்குத் தெரிந்த ஈழத்தமிழர் தனது பிள்ளைக்கு தமிழைப் படிப்பிக்காமல் சீனா மொழியைப் படிப்பிக்கிறார்.

புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களின் 2,3 சந்ததிக்குப் பிறகு தமிழ் தெரியாமல் போகப் போகிறது. தெரிந்தோ தெரியாமலோ அடுத்த தலைமுறையினரை மற்றய நாட்டவர்கள் இந்தியர்கள் என்றே அழைக்கப் போகிறார்கள்.

கிறிஸ்தவத்தமிழர்கள் ஆங்கிலப் பெயரைச் சூட்டி அடையாளம் இழந்துவரும் வேளையில் சைவ(இந்து) சமயத்தைப்பின்பற்றுவோர் எண் சோதிட மாயையினால் தமிழ் அல்லாத சிங்கள, வட மொழிப் பெயர்களைச் சூடாப் போகிறார்கள்.

வேறு நாட்டவர்களுடன் கலப்புத்திருமணம் நடைபெறப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் தமிழிழம் கிடைத்து சிங்கப்பூர்,ஜப்பான் போன்று குறுகிய காலத்தில் தன்னிறைவு அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாக்குவோம் என்டால் அதன் பிறகு எங்கட சனம் இது எங்கட நாடு இப்படி அபிவிருத்தி அடைந்த நாடாக மாறி இருக்குது என சொல்லிப் அங்கே போய் குடி இருப்பார்கள்...அதற்கு முதலில் நாம் சண்டை போடாமல் ஒற்றுமையாய் ஈழம் கிடைக்க எம்மாலான முயற்சி செய்ய வேண்டும்....அதுக்கு முதல் யாழில் எல்லோரும் ஒருவரை ஒருவர் எதிரியாய் பாவிப்பதை நிறுத்துங்கள்...கருத்துகளத்தில் எங்களுக்குள் ஒற்றுமை இல்லா விட்டால் பிறகு எப்படி?

Link to comment
Share on other sites

எமது இனத்தின் அடையாளம் எமது மொழியே. எமது மொழியை எமது அடுத்த சந்ததி பயன்படுத்துவதை பொறுத்துத்தான் எமது இனத்தின் எதிர்காலத்தினை நாங்கள் நோக்க முடியும். எனவே எமது சந்ததிகளை தமிழ்மொழியை பயன்படுத்தச் செய்யும் வழிமுறைகளை நாங்களே ஏற்படுத்த வேண்டும். தமிழை பயன்படுத்துங்கள் தமிழில் கதையுங்கள் என்று கோரிக்கை விடுவதிலும் பார்க்க அதனை கவர்ச்சிகரமாக அவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணமாக தாயகத்தில் தமிழ்த்தின போட்டிகள் பாடசாலை மட்டத்தில் நடாத்துவது போன்று ஒவ்வொரு நாடுகளிலும் நடாத்துவது பயன்மிக்கது. இதனை அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுத்தல் நன்று. இதனை நாடு கடந்த அரசு ஒழுங்கு படுத்தலாம். குறித்த நாடுகளில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச ரீதியான போட்டிகளில் பங்குபற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். இது பெரியளவில் பெற்றோர்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உண்டு. புகழ் விரும்பிகளான புலம்பெயர் தமிழர்கள் தமது பிள்ளைகளின் பெருமைகளை தம்பட்டம் அடிப்பதற்காக தமது பிள்ளைகளை தயார்படுத்துவர் . இதனால் தமிழ் மொழி பயன்பாடு கூடும். எமது தமிழீழ வரலாற்றினையே போட்டிகளின் கருப்பொருளாக வைப்பது சிறந்தது.

மேலும் தமிழில் பெயர் வைப்பதனை ஊக்கப்படுத்துவதற்காக பரிசுத்திட்டம் ஒன்றினை செயற்படுத்தலும் நன்று. அதற்கு முன்னோடியாக தமிழில் பெயர் அமையாதவர்கள் தமது பெயரினை தமிழில் மாற்றுதல் மேலும் சிறப்பு.

Link to comment
Share on other sites

எங்களுக்கு நாடு கிடைக்காவிடிலும் பரவாயில்லை,..........தமிழர்களே முடிந்தால் சிங்களவனுக்கு சிறிலன்கா என்ற நாடு சொந்தம் இல்லை என்ற நிலையை உருவாக்குவதில் முயற்சி செய்யுங்கோ இந்தியாகாரனுக்கும் சீனாக்காரனுக்கும் சின்களவன் தனது இறையான்மையை தரை வார்க்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆரம்பித்த திரியில் வந்து கருத்து பகிர்ந்தது எனது தவறுதான். மன்னித்துக்கொள்ளவும். எதிர்காலத்தில் நான் உங்கள் தோட்டத்தினுள் இறங்கி புல்லு மேயாமல் பார்த்துக்கொள்கின்றேன். நன்றி.

எந்தத் தலைப்பிலும் குதர்க்கமாகக் கதைத்தால் அது குதர்க்கமாகத் தானே இருக்கப் போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலாசம் காட்டுவம் என்று ஜெயம் ரவியின் படத்துடன் இறங்கிவிட்டீர்கள் போல

இப்படியே ஒரு அஞ்சுசதத்திற்கும் வேலை செய்யாமல் அளந்து கொண்டிப்பதுதான் பலரின் வேலை.செய்யதவன் சொல்லிக் காட்டத்தான் செய்வான்.இதுவரை நீர் என்னத்தை புடுங்கினீர் என ஒருக்கா சொல்லும் பார்ப்போம்.

சொல்லக் கூடாது பரம ரகசியம் நான் தான் ஆர்ம் டீலே செய்தனான் என்று சொல்லப் போறீரோ?

உங்களுக்கெல்லாம் தமிழனின் உரிமையை பற்றி கதைக்க என்ன வக்கு இருக்கின்றது.உங்களைவிட கருணாவும்,டக்கிளசும்,பிள்ளயானும் மேல்.அதை இப்போ அங்கிருக்கும் மக்களும் ஒப்பு கொள்கின்றார்கள்.

படமோட்டியே காலத்தை கழிக்காதீர்கள்.

உங்களை விட எமக்கு உரிமையைப் பற்றிக் கதைக்க வக்கு இருக்கின்றது. வெறுமனே சோத்துப் பெட்டலமும், எலும்பும் தான் தமிழனின் தன்னிறைவு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உங்களைப் போன்றவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும். பரவாயில்லையே... ஆயுதப் பேரல் ஆவது தாங்கள் செய்யவில்லை என்று அதையாவது விட்டு வைத்ததுக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள். நாங்கள் ஒன்றும் புழுகவில்லை. ஏனென்றால் ஒன்றும் புடுங்கவில்லை. ஆனால் தான் புழுகித் தள்ளுகின்றீர். ஆனால் என்ன.....

Link to comment
Share on other sites

வணக்கம்

இங்கே சில உறவுகள் எம்மினத்தை இழிவுபடுத்தி எழுதியிருக்கிறார்கள் எப்படி முடிகிறது உறவுகளே உங்களால் எம்மினத்தை இழிவுபடுத்துவதற்கு அது உங்கள் பெற்றோரை இழிவுபடுத்துவது போன்றதல்லவா நான் இதை படிக்கும்போது என்னை நீங்கள் இழிவுபடுத்துவது போன்று உணர்கிறேன்

சிலவேளைகளில் நீங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமை பெற்றிருப்பதால் இப்படி உங்களால் முடிகிறதா சற்று சிந்தித்து பாருங்கள் இழிவாக நீங்கள் எழுதியுள்ள வரிகளை ஈழத்தில் இருக்கும் உங்கள் பெற்றோரோ அல்லது சகோதரர்களோ வாசித்தால் அவர்கள்மனம் கவலை கொள்ளாதா? இங்கே நாம் அனைவரும் எமது முகத்தை மறைத்து புனைபெயருடன் தான் கருத்தெழுதுகிறோம். ஆனால் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தியே செய்கிறோம். உறவுகளே நாம் ஒன்று சேர்வோம் நல்லவற்றை விவாதிப்போம் கருத்துவேறுபாடுகளைக் களைந்து கொள்வோம். நம்மை நாம் நேசிப்போம் நண்பர்களாய்ச் சேர்ந்திருப்போம்.

உங்கள் மனங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனங்களைப் புண்படுத்துவதல்ல எனது நோக்கம் எம்மினம் ஒன்சேரவேண்டுமென்பதே !

தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக் கொள்கிறேன்.

தொடருவோம்!

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம்

நண்பர் செந்தமிழாளன் கூறியது போன்று எமது தமிழீழ வரலாற்றினை கருப்பொருளாகவைத்து தமிழ்த்தின போட்டிகளை சர்வதேசமட்டத்தில் நடத்துவது எமது மொழியையும் தழிழீழ வரலாற்றினையும் இலகுவாக அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லமுடியும். அதேபோன்று எமது இனவிருத்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணங்களை நடத்துவதற்கு முடிந்த உதவிகளைச்செய்யலாம் குழந்தைகளை ஒன்று இரண்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் கூடுதலாக பெற்றெடுக்கவேண்டும். அதற்கான ஊக்கிவிப்புக்களையும் முன்னெடுக்க வேண்டும். பல பிள்ளைகள் உள்ள பெற்றோரை இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கலாம். கோவில்களில், சிறப்புநிகழ்ச்சிகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். பொருளாதார ரீதியில் எம்மவரை மேம்படுத்த வேலைகளை தேடிக்கொடுக்கலாம் நம்மவரின் கடைகளிலேயே பொருட்களை வாங்கலாம் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் நம்மினத்தை மேம்படுத்த முடியும். தமிழை நேசித்து தமிழராய் வாழ்வோம்.

தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.

தொடருவோம்

நன்றி

Link to comment
Share on other sites

அடடா அருமையான திரி ஆரம்பமே அசத்தலாயிருக்கு.. நாம் இப்படியே மடியாமல் எமது இனத்தையையும் மொழியையும் காப்பாற்றி விட்டு வித்தியாசமாய் மடியலாம்.அதற்கான சில வழிமுறைகள்..

1) யாழ்களத்தில் இனம் மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்றுவது எப்படி என்று ஒரு திரியை திறந்து விவாதித்தல்.

2)எமது தமிழ் ஊடகங்னளில் இணையங்களில் போராட்டம் தோற்றதற்கு காரணம்..இந்தியா சீனா அமெரிக்கா எனவே அவற்றை நாம் அழிப்போம் என சபதமிடுவது.(சும்மாதான்) எங்காவது எழுதுவது.. இலங்கையரசின் போர் குற்றங்களை வெளி நாட்டு ஊடகங்களே வெளியிட்டு அதற்கான விசாரணைகளை நடத்தும்படி கோரும்பொழுது எமது ஊடகங்கள் மட்டும் எம்மவர் யாரையாவது துரோகியாக்கிக் கொண்டிருப்பது

3)நாம் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள் என கவிதைகள் அல்லது கதைகள் கட்டுரைகள் எழுதலாம்.

4)கே.பியா?? நெடியவனா?? கருணாவா?? இதில் யார் முதலாமிடம் பெறும் துரோகி என ஆராச்சி செய்யலாம்.

5)தனது குடும்பத்தையும் இழந்து காயமடைந்து பல வருடங்கள் போராடி சிறையில் வாடும் ஒரு போரளிக்கு ஒரு சதமேனும் உதவாமல் மாவீரரரான போராளிக்கு அஞ்சலி செலுத்துதல் அல்லது அதற்கு நிதி சேகரித்தல்.

6)தயகத்தில் பெயர்பெற்ற பிராந்திய கிராமிய குழுவாத சண்டைகளை புலம் பெயர்நத நாடுகளிலும் கடைப்பிடித்தல். அதாவது 1) பிரந்தியம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் வன்னி 2)அடுத்ததாக கிராமியம். பாசையூர் கரையூர் . நெல்லிடி.கரவெட்டி.. நெல்லியடி வல்வெட்டித்துறை. பத்தைமேனி வளலாய். புன்னாலைக்கட்டுவன் குப்பிளான்... ஏழாலை குப்பிளான். ஆரியகுளம் மணியந்தோட்டம். 3)அதற்கடுத்தது சாதிய சண்டைகள்..சாதிகளை நான் எழுதத் தேவையில்லை..அது அனைவரிற்கும் தெரிந்தது..இப்படி இங்கும் தொடரலாம்.

7)என்னுடைய ஆலோசனையை கேட்காததால்தான் ஆயுதப் போராட்டம் அழிந்தது எனவே என்னுடைய ஆலோசனையையும் அரசியலையும் யாராவது கேழுங்கள்.என்று ஒரு கூட்டமும் நாங்கள் கேட்டபணத்தினை தராததால் தான் ஆயுதப் போராட்டம் அழிந்தது எனவே இனிமேலாவது நாங்கள் கேட்கும் பணத்தை தாருங்கள் என புலம் பெயர் தேசத்தில் இயங்கும் ஏதாவது ஒரு குழுவிற்கு ஆதரவளித்தல்.

இவற்றில் ஏதாவது ஒன்றினை செய்யலாம்..அப்பொழுது இந்த தலைப்பாவது காப்பற்றப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது டாம்.

எங்களால் ஒரு பெயரில் நிதி அமைப்பு என்று தொடங்கி விட்டு கொடுக்கின்ற காசை விட, கொடுக்கின்ற விளம்பரத்தை அதிகமாகச் செய்ய முடியாது. எல்லா விடயத்திலும் எங்களின் பெயரை பிரபல்யமாகச் செலுத்துகின்ற அறிவும் கிடையாது. முடிஞ்சால் வலம்புரி, உதயனின் பெயர் போட்டு வர வைக்கின்ற தொடர்பும் கிடையாது. அதை விடத் தமிழ்நெற், சங்கதி, அனைத்துலகத் தொடர்பகத்தை யார் யார் இயக்குகினம், நான் யார் தெரியுமா என்று படம் போட்டுக் காட்டவும் தெரியா. இப்படி ஏதாவது சில்லறை வேலை செய்து தானே எங்களாலே பிரபல்யம் காட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழித்த எதரியிடம் என்ன பலம் உள்ளதென்று தேடினேன்............. தமிழனை விட ஏதும் இல்லை.

அப்போ எப்படி அவனால் தமிழனை வெல்ல முடிந்தது என்று தேடினேன்............ ஒரு பெருத்த பலவீனம் இருந்தது.

ஒற்றுமையின்மை! ஒற்றுமையின்மை! ஓற்றுமையின்மை!

சுயநல பேய்கள் எப்படியாவது தாம் வாழ்ந்தால் சரியென இருந்தார்கள்

தேசவிரும்பி தன்னை அழித்தும் தேசத்தை காக்க துடித்தான்.

இரண்டும் இருவேறு துருவங்கள். எதில் எண்ணிக்கை அடிப்படையே வெல்லும் என்பது கணக்கு விகிசாதாரம். நடந்ததும் அதுவே என்றே நான் நம்புகிறேன்.

என்னை பொறுத்தவரையில் தமிழனுக்கு போதுமான அடிகள் இன்னமும் விழவில்லை........

இனிதான் சிங்களவன் தொண்டையை நசிக்க வேண்டும்........... கூட்டிகொடுத்து கும்மாழம்போட்ட துரோகநாய்களின் தங்கைகளையும் தாய்மாரையும் தரையில் போட்டு புனையவேண்டும் தமிழ் என்ற காரணத்திற்காக. இந்த இடைவெளியில் முஸ்லீம் சகோதரர்கள் தமது சொந்த புத்தியை காட்ட வேண்டும்.

இதில் நசிபட்டாலே தமிழனுக்கு நாட்டில் ஏதோ பிரச்சனை இருப்பது புரியும். அப்போது உதவி கேட்டு புலம்பெயர் தேசங்களை நோக்கி கைகள் நீளும்.

அந்த தருணத்திற்கே காத்திருந்தவர்கள்போல்............... நாம் குறைந்தபட்சம் ஒரு கட்மைப்பை கட்டிவைத்திருந்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம். நாம் தோற்றுப் போனதால் தான், எதிரி வெற்றி பெற்றான்.

Link to comment
Share on other sites

.

குடும்பம் தான் சமுதாயத்தை கட்டும் அடிப்படை அலகு. சமுதாயத்தின் அடையாளங்கள் குடும்ப அளவில் தான் கட்டப் பட வேண்டும். உதாரணமாக சகஜமாக தமிழில் பேசுதல்.

இங்கேயே பிறந்து வளரும் என் பிள்ளை நன்றாக தமிழில் பேசும்; இந்த நிலமையையே தொடர்ந்து பேண திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

குடும்ப‌த்திற்கு அடுத்ததாக சமுதாயத்தைக் கட்டும் அடுத்த வட்டம்‍ உறவினர்கள். தொலைபேசி ,ஸ்கைப், முகநூல், மின்னஞ்சல், வாழ்த்துமட்டைகள் என்று தொடர்பைத் தொடர்ந்து பேணுதல், பிள்ளைகளையும் பங்கெடுக்க வைத்தல். முடிந்த மட்டும் போய்வருதல்.

தமிழ் நண்பர் வட்டமும் உறவினர்களைப் போலத் தான்.

யூதர்கள் தம்மிடையே வட்டி இன்றி கடன் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவி அவரவர் வியாபாரத்தை வளர்க்க உதவுவார்கள். இன்று அவர்கள் இந்த அளவுக்கு வளர்ச்சியடைய இதுவும் ஒரு காரணம்.

எம்மிடம் இருக்கும் சந்தை ரீதியான பலமொன்று வட அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்திரேலிய, ஆசிய சந்தைகளை அணுகக் கூடிய வாய்ப்பு. இதன் மூலம் வியாபாரத்தை வளர்த்துக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருப்பவர்கள் மடியமாட்டார்கள், தாயகத்தில் இருப்பவர்கள் எப்படியாவது பிழைத்துவிடுவார்கள். யாழ் களம் 20ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும்போது மீண்டும் இதே மாதிரி ஒரு தலைப்பு தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.