Jump to content

நீங்கள் இரசித்த பாடல் வரிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அன்னையின் ஆணை.

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்.

இயற்றியவர்: கா.மு. ஷெரிப்.

பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்விபெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழச் செய்தாள்!

அன்னையைப் போலொரு தெய்வமில்லை - அவள்

அடிதொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை

துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை

சுகம்பெற வைத்திடும் கருணை வெள்ளம்!

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு

நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்

மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே

மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்! --- அன்னையை...

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

எல்லா காய்களும் வரும் இந்தப் பாடல் எனக்கு மிகவும்பிடிக்கும்

அத்திக்காய் ........அந்த திசையாய்

இத்திக்காய் ....இத்தி மரக் காய் ..........இந்த திசை யாய்

ஆலங்காய் ......ஆல மரக் காய்

விளங்காய் .........விளாங்காய் ........விளங்கி கொள்வாய்

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய்..

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்

அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்

கன்னிக்காய்..

மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்

நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்

இரவுக்காய்..

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய்..

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்

ஏழக்காய்..

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய்..

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ

வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ

உள்ளதெல்லாம்..

கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

Link to comment
Share on other sites

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அற்புதமான வரிகள். எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்க வேண்டும்!

இசையும் ( விஸ்வநாதன் - ராமமூர்த்தி ?) அற்புதம். குரல்களும் ( TMS, PBS, சுசீலா, ஜமுனாராணி) அவர்களது உச்சரிப்புகளும் பாடலை மெருகேற்றியுள்ளன.

Link to comment
Share on other sites

ஆமாம் ஈஸ். அத்திக்காய் போல் கண்ணதாசனின் மற்றுமொரு பாடல்.

கண்ணதாசன் எழுதிய இலக்கியத் தரம் மிக்க சிலேடைப் பாடல்கள் அதிகம். அதில் ஊர் ஊர் என்று வர்ணித்தே அவர் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பாடலாய்த் தந்தது அற்புதம்.

எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட

அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன்

உறவூரில் மிதந்திருந்தேன்

கருவூரில் குடி புகுந்தேன்

மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்

கையூரில் வளர்ந்திருந்தேன்

காலூரில் நடந்து வந்தேன்

காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன்

விழியூரில் கலந்து விட்டேன்

பாலூறும் பருவமென்னும்

பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்

காட்டூரில் விட்டுவிட்டாள்

கன்னியூர் மறந்தவுடன்

கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை

பரிதவிக்க விட்டு விட்டு

மேட்டூரில் அந்த மங்கை

மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்

கிளிமொழியாள் இல்லையடா

மேலூரு போவதற்கும்

வேளை வரவில்லையடா!

http://www.oldtamilsong.net/PB.Srinivas4/074 ENTHA OOR.MP3

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நாடு அதை நாடு

அதை நாடாவிட்டால்

ஏது வீடு?

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு

மானம் பெரிதென்று வாழும் பண் பாடு

மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

பாலைவனம் என்ற போதும் நம் நாடு

பாறை மலை கூட நம் எல்லைக் கோடு

ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்

வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை

வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை

வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை

வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்

பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்

நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்

எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்

“நாடு அதை நாடு

அதை நாடாவிட்டால்

ஏது வீடு?”

http://download.tamilwire.com/songs/Other_Albums/Rare Oldies/Naadu Athai Naadu - Naadodi - Nadodi.mp3

தனி நபர் லாபத்திற்காகச் சட்டங்கள் புறக்கணிக்கப்படுவதும், அமைப்பின் வளத்திற்காகத் தர்மங்கள் நசுக்கப்படுவதும், மாநிலங்களின் நலத்திற்காகத் தேசிய ஒருமைப்பாடு கேலிக்குள்ளாக்கப்படுவதும் அதிகரித்து வரும் இந்த அவசர உலகத்தின் அனைத்துப் பிரச்சனைகளின் ஆணிவேர் எது என்பதையும் அதிலிருந்து சமுதாயம் விடுதலை பெறுவதற்கான வழி என்ன என்பதையும் மேலுள்ள வரிகளின் மூலம் கவிஞர் தெளிவாக்குகிறார்.

நமக்கிடையேயானப் போட்டிகள் நேர்மையானதாக இல்லாதபட்சத்தில், தனித்தனியான சிறிய வட்டங்களின் வளர்ச்சி, ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும்போது அதனதன் பெரிய வட்டங்களின் ஆக்கத்துற்கு ஆதரவாக இருப்பதைவிட, அழிவிற்கே சாதகமாய் அமையும். அதேசமயம் பெரிய வட்டங்களின் வளர்ச்சிக்காகச் சிறிய வட்டங்கள் விட்டுக் கொடுக்கும்போது, அங்கு ஆரோக்யமானப் போட்டியும் நிலவும்; ஒட்டுமொத்த வளர்ச்சியும் காணப்படும்.

“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு

மானம் பெரிதென்று வாழும் பண் பாடு

மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

இந்த உண்மையை உணர்ந்து உன் ஒவ்வொரு அசைவுகளிலும், சமுதாயத்திற்காக, நாட்டிற்காகப் பாடுபடு. மானமே (நாட்டின்) நமது லட்சியம் என்ற உயர்ந்த கொள்கையினை என்றும் பாடிக்கொண்டிரு, உன் சிந்தனையாலும் செயலாலும் (வாழும் பண் பாடு). எல்லாவற்றையும் விட உயர்ந்தது மானமே என்பது நம் பண்பாடு அல்லவா (வாழும் பண்பாடு).

“பாலைவனம் என்ற போதும் நம் நாடு

பாறை மலை கூட நம் எல்லைக் கோடு

ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்

வீர சமுதாயமே எங்கள் கூட்டம்”

வெறும் பாலைவனமாகவே இருந்தாலும், இது நமது நாடு; நம் முன்னோர்கள் பிறந்து, வளர்ந்து, மரித்து, இந்த மண்ணோடும், நீரோடும், காற்றோடும் கலந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி. பாறைகளும், மலைகளும் மட்டுமே நிரம்பி இருந்தாலும் கவலையில்லை; அவைகள் எங்களின் எல்லைகளாக, அரண்களாக எங்களைக் காத்து நிற்கும். இப்படி இருக்கும்போது எங்கள் நாட்டிலோ, ஜீவ நதிகள் கரை ஏறிப் பாய்ந்து, கழனி செய்து, காணும் இடமெல்லாம் கனித்தோட்டங்களாய் செழித்து நிற்கின்றன. இந்த அபரிமிதமான வளத்தின் காரணமாக, அறிவும் வலிமையும் ஒருங்கே பெற்று எங்கள் மக்கள் அனைவருமே வீரர்களாக மாறிவிட்டனர்.

“வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை

வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை

வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை

வெற்றித் திருமாது நடை போடும் எல்லை”

எல்லாம் இருக்கும் எங்கள் நாட்டில் இல்லாதது மூன்று உள்ளது; அவைகள்

1. அன்பு, அழகு, அறிவு ஒருங்கே அமையப்பெற்றும், அகம்பாவம் அற்று, ‘பெருக்கத்து வேண்டும் பணிவு’ எனும் இலக்கணப்படி எம் மங்கைகள் அடக்கத்துடன் வாழ்வதனால், வானம் எம்மங்கையரின் முகங்களை இதுவரைப் பார்த்ததில்லை.

2. பகிர்ந்துண்ணுதலும், சகிப்புத் தன்மையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பம் எங்கள் வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளதால், தீய எண்ணங்கள் எங்கள் மக்களின் மனங்களைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.

3. தர்மத்திற்காக மட்டுமே நாங்கள் போரிடுவதால், எங்கள் வீரர்கள் எந்தப் போர்க்களத்திலும் தோல்வியுற்று, தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்த்ததில்லை.

இவ்வாறு, பண்பாடு, ஒழுக்கம், வீரம் மூன்றும் எங்கள் இரத்தத்தொடு கலந்துவிட்டமையால், எங்கள் நாடே வெற்றித் திருமாது நடைபோடும் எல்லையாக அமைந்துவிட்டது.

“பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்

பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்

நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்

எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்”

பசித்து அடைக்கலம் தேடி வருபவர்களின் பசி ஆற்றுதல் சாதாரண விருந்தோம்பல். நாங்களோ எங்களையே அவர்களுக்கு விருந்தாக ஆக்கிக் கொள்வோம். எங்களை அழித்துக் கொண்டால்தான் அவர்களைக் காக்க முடியும் என்ற நிலை வந்தால், எங்களையே பலி கொடுக்கவும் நாங்கள் தயங்குவதில்லை. ஆனால் எங்களை எதிரி என எண்ணிச் சீண்டிப்பார்க்க யாரும் வந்தால், அன்று நாங்கள் புலியாக மாறுவோம். எங்கள் பலம் அறியாமல் போருக்கு வந்த அவர்கள் அறியாமைக்கு மனம் வருந்தி, இரக்கம் கொண்டு, எங்களின் ஆற்றலை வெறும் சீற்றமாகக் காட்டி விரட்டுவோம். அப்படியும் புரியாமல் போருக்கு நின்றால், இந்த மண்ணை எங்கள் உயிராக எண்ணிப் போரிட்டு எங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொண்டாடுவோம். முடிவில் எதிரிகளை அழித்து, அவர்கள் உடல்களை எங்கள் கழனிகளுக்கு எருவாக இடுவோம்.

http://kaviyarasar.blogspot.com/

Link to comment
Share on other sites

இதே தளத்தில் நான் நீண்ட நாட்களாக கருத்து எழுத விரும்பிய பாடலுக்கு என்னை விட மேலாக கருத்து எழுதியுள்ளார்.

பாடல்: இலக்கணம் மாறுதோ

வரிகள்: கவியரசர்

இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

குரல்கள்: எஸ்.பி. பாலா, வாணி ஜெயராம். - இருவரினதும் உச்சரிப்புகள் தான் பாடலின் தரத்தை மெருகேற்றின என்றால் மிகையாகாது.

இதோ:

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது அது என்ன வேடம்

இது என்ன பாடம்

(ஆ)கல்லான முல்லை இன்றென்ன வாசம்

காற்றான ராகம் ஏனிந்த கானம்

வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ

பெண்மை தந்தானோ (இலக்கணம்)

(பெ) என் வாழ்க்கை நதியில்

கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சிலே ஏதோ

கறை ஒன்று கண்டேன்

புரியாததாலே திரை போட்டு வைத்தேன்

திரை போட்ட போதும் அணை போட்டதில்லை

மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ

விளக்கி வைப்பாயோ

(ஆ) தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை

தாலாட்டு பாட ஆதாரமில்லை

தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்

பாடாமல் போனால் எது தெய்வமாகும்

மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை

உரைப்பது கீதை

மணியோசை என்ன இடி ஓசை என்ன

எது வந்த போதும் நீ கேட்டதில்லை

நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்

நிஜமாக வந்து எனை காத்த கண்ணே

நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்

பூர்வ ஜன்ம பந்தம் (இலக்கணம்)

============================================

பாடலும், கவியரசர் தள எழுத்தாளர் - ஹரனின் பார்வையும் பின் வருமாறு;

நாயகன், நாயகி இருவருமே மிகுந்த ego உள்ளவர்கள். உள்ளுக்குள் நேசம் இருந்தும், வெளியே சொல்ல மறுத்து, சந்திக்கும் போதெல்லாம் மோதிக் கொள்வார்கள். படிப்படியாக அந்த இடைவெளி குறைந்து வரும் வேளையில் அவன் மேல் ஒரு பழி விழுகிறது. இந்தச் சூழ்நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் கவியரசர்.

பொது:

“இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்”

இயல்பிலிருந்து இவர்கள் மாறிவிட்டார்களோ; இவர்களுக்கு இடையே ஒரு காவியம் தொடங்கிவிட்டதோ! இதுவரை மறைத்து நடித்தது எதற்காக; யாருக்கு எதைப் புரிய வைக்க?)

அவன்:

“கல்லான முல்லை இன்றென்ன வாசம்

காற்றான வாழ்வில் ஏனிந்த மாற்றம்”

முல்லை என்பதே மணம்தான்; மனம் என்பதே அன்புதான். அது கல்லால் ஆக்கப்பட்டதோ என்று அவன் எண்ணியிருந்த வேளையில் அவளிடமிருந்து அன்புமணம் கண்ட அவனுக்கு இன்ப அதிர்ச்சி.

காற்றுப்போல தளைகளின்றி சுழன்றிருந்தாயே இன்று எதற்காக இந்த மாற்றம் என்று திகைக்கிறான்.

(அவளிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய காதலை மலரின் மணத்துடன் ஒப்பிடுகிறார், கவிஞர். அவள் இன்னும் முழுமையாக தன் காதலைக் கூறவில்லை அல்லவா. வெறும் மணம் மட்டுமே அவனைச் சென்று அடைந்துள்ளதாகக் கூறியிருப்பது அழகு)

“வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ

பெண்மை தந்தானோ.”

பருவ சிந்தனையற்ற பிள்ளை மனம் வெண்மேகம்; ப.சி. வந்த மனம் கார்மேகம். (கார்மேகம்தானே ‘பலன்’ கொடுக்கும்-கவிஞரின் தமிழ் வாழ்க!) 'பருவம்' வந்தால் எல்லா ‘வெண்மேகமும்’ ‘கார்மேகம்’ ஆகிவிடும். இங்கு மன்மதன் கண் திறக்க, கார்மேகமானது அவள் பெண்மை.

அவள்:

“என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏதோ கறை ஒன்று கண்டேன்”

எந்த இலக்குமின்றி ஓடிக்கொண்டிருந்த அவள், அவன் வரவால் தன் வாழ்விற்கு ஒரு பொருளை (கரை) கண்டாள். அதே நேரம் அவன் மேல் விழுந்த பழியால் அவன் நெஞ்சில் ஒரு இருளை (கறை) யும் கண்டாள்.

“புரியாததாலே திரை போட்டு வைத்தேன்

திரை போட்ட போதும் அணை போட்டதில்லை”

அவனை நம்புவதா? பழியை நம்புவதா என்ற குழப்பத்தின் விடை தெரியாது, லேசாகத் திறந்த தனது மனதைத் தானே திரையிட்டு மூடிக் கொண்டாள். ஆனாலும் முழுவதுமாக அவன் நினைவுகள் தரும் இன்ப வெள்ளத்திற்கு அணை போட அவளால் முடியவில்லை.

”மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ

விளக்கி வைப்பாயோ.”

இடையே விழுந்துள்ள திரையை அவனே வந்து விலக்கவேண்டும், தன் மேல் விழுந்த பழியை வீண்பழி என்று அனைவரும் உணர விளக்குவதன் மூலம் என்றும் வேண்டுகிறாள்.

அதே படத்தில் இன்னொரு ஜோடி இருவரும் நாயகி வீட்டில் வேலை பார்ப்பவர்கள். தன்னை அவமானப் படுத்தி வெறுக்கும் அவளைக் காக்க பழியை ஏற்று அவளைக் காப்பாற்றி வருகிறான் அவன். அவனது தூய அன்பை உணர்ந்து அவனைப் பற்றி அவள் பாடுவதாக வரும் வரிகள் இவை.

“தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை

தாலாட்டுப் பாட ஆதாரமில்லை”

வாழ்வில் எந்தப் பிடிப்பும் இன்றி தடுமாறிக்கொண்டிருக்கும் வெள்ளை மனம் கொண்ட பிள்ளை அவன். இருந்தும் அவளைக் காப்பாற்றி, அவளது குழந்தையைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறான் அதற்கான எந்த உரிமையும் இன்றி.

”தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்

பாடாமல் போனால் எது தெய்வமாகும்”

அவனே இன்னும் குழந்தை. அவனுக்கே தேவை ஒரு தாலாட்டு. எந்த மனிதனுக்கும் அதற்குத் தகுதி இல்லை. தெய்வமே வந்து பாடினால்தான் உண்டு. அப்படி இங்கு வந்து பாட முடியாமல் போனால் அதை எப்படித் தெய்வம் என்று அழைக்கமுடியும்?

“மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை

உரைப்பது கீதை.”

அவனது அன்பும், தியாகமும் வீண்போகாது. அவன் வாழ்வு மலரும்; புதிய பாதை திறக்கும். இது இறைவன் வாக்கு.

”மணியோசை என்ன இடி ஓசை என்ன

எது வந்த போதும் நீ கேட்டதில்லை”

அவன் காது கேளாதவன். அவனுக்கு சிறிய ஓசையும் (மணி) ஒன்றுதான்; பெரிய ஓசையும் (இடி) ஒன்றுதான். இரண்டிற்கும் அவன் சலனப்படுவதில்லை. அதுபோல் அவனது பிள்ளை மனம், வரும் சோதனையின் அளவைக் கண்டு நடுங்குவதில்லை. அவனுக்கு சிறிய சோதனையும் ஒன்றுதான்; பெரிய சோதனையும் ஒன்றுதான். அதனால்தான் திருமணமின்றித் தாயான பெண்ணைத் தன்னுடன் வைத்துக் காத்து வருகின்றான்.

”நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்

நிஜமாக வந்து எனைக் காத்த கண்ணே

நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்

பூர்வ ஜென்ம பந்தம்.”

நிழல் எப்படிப் பிரிவதில்லையோ அதுபோல் தொடர்ந்து நின்று காக்கும் தெய்வம் நீ. மற்றவர்களைப் போல் அல்லாமல் நிஜமாக வந்து என்னைக் காத்த கண் போன்றவனே. நமக்கிடையே வந்துள்ள இந்தச் சொந்தம், பூர்வ ஜென்ம பந்தம் என்று அவள் முடிக்கிறாள்.

ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து அருமையான படத்தை தந்துள்ளார் பாலசந்தர்.

நடிகர்கள்: கமல், சுமித்ரா, சரத்பாபு, ஷோபா (முதல் தமிழ் படம்) மற்றும், அனுமந்து.

படம்: நிழல் நிஜமாகிறது.

Link to comment
Share on other sites

  • 8 years later...

 

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே

===

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

===

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

 

Link to comment
Share on other sites

  • 4 months later...

திரைப்படம்:தெய்வத்தாய்
இசை:எம்.எஸ்.வி 
பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி  

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

http://www.youtube.com/watch?v=izPbQMhpnBc

Link to comment
Share on other sites

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்... என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா ஆ... மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்... என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி ஈ...
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்..
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி ஈ...
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா மளனமா
என்ன சொல்லப் போகிறாய்...

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nunavilan said:

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமா

நுணாவிலான், 
"சந்தனக்  குடத்துக்குள், குண்டுகள்... உருண்டோடுது".... 
🥰  என்ற பாடலையும்,  
முன்பு...  கேட்டு,  இருக்கிறன்.   

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்…ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்…ஏன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்…ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்…ஏன்

காதல் மொழியைப் பொழிந்தவள்
கானல் நீராய் மறைந்தவள்
சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்
அன்று சொன்னவளை இன்று காணவில்லை அது ஏன்
அவள் வார்த்தை தொலைந்ததேன்
என் வாழ்க்கை குலைந்ததேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்…ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்…ஏன்

மார்கழி மாதக் கோலமிட்டாள்
தண்ணீர் குடம் தூக்கி வந்தாள்
கரை போல் காத்திருந்தேன்
நதியை எதிர் பார்த்திருந்தேன்
கதை மாறிடவே கரை வேறு கண்டாள்
கால அலைகளுடன் புது நதியைக்கொண்டாள் அது ஏன்
என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோகக் கடலானேன்

ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்…ஏன்
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்…ஏன்

————————————————————-

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 “நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா!!”. மனசாட்சி என்பது எங்களின் நிழல் போல எப்பொழுதும் எங்கள் கூடவே வருமல்லவா..
மிகவும் ஒரு அருமையான பாடல்..
இந்தப்பாடல் “ தேடலும் தெளிவும் பகுதியில் இணைக்கப்பட்டிருந்தது( திரு. குமாரசாமி அவர்களுக்கு நன்றிகள்) அதனை மீண்டும் கேட்டபொழுது..
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் அர்த்தம் நன்றாகவே தெரிகிறது, விளங்கப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. 


மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே 
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி 
காரியம் தவறானால் கண்களில் நீராகி 
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே

ரகசியச்சுரங்கம் நீ 
நாடக அரங்கம் நீ 
சோதனைக்களம் அல்லவா? 
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி 
பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை 
கண்களில் வடிப்பாயே 

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி 
பொய் சொல்ல பலசாட்சி 
யாருக்கும் நீயல்லவா 
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி 
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் 
ஐயத்தில் தவிப்பாய் நீ 
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசையமைப்பாளர்: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம்: நூல்வேலி

இதுவும் கடந்துபோகும் எனக்கூறமுடியாதவாறு நிழல் போல தொடரும் மனச்சாட்சியே...!!!

Link to comment
Share on other sites

  • 2 months later...

நீல மழைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

நீல மழைச்சாரல்

வானம் குனிவதிலும்

மண்ணை தொடுவதிலும்

காதல் அறிந்திருந்தேன்

கானம்உறைந்துபடும்

மௌனபெருவெளியில்

ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்

இதயம் விரித்திருந்தேன்

நான் இயற்கையில் திளைத்திருந்தேன்

சிட்டு குருவி ஒன்று

ஸ்நேக பார்வை கொண்டு

வட்ட பாறையின் மேல்

என்னை வா வா என்றது

கீச்சு கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு ஏதுமின்றி

பிரியமா என்றது

கீச்சு கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு ஏதுமின்றி

பிரியமா என்றது

ஒற்றை சிறு குருவி நடத்தும்

ஒரங்கா நாடகத்தில்

சற்றே திளைத்திருந்தேன்

கீச்சு கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு ஏதுமின்றி

பிரியமா என்றது

ஒரு நாள் கனவோ

இது பெரட்டை பேருறவோ

யார் வரவோ

நீ கண்தொட்டு

கடுந்தேகம் காற்றோ

இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ

இது உறவோ இல்லை பரிவோ

நீல மழைச்சாரல்

நநந நநநநா

அலகை அசைந்தபடி பறந்து

ஆகாயம் கொத்தியதே

உலகை உதறி விட்டு சற்றே

உயரே பறந்ததுவே

கீச்சு கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு ஏதுமின்றி

பிரியமா என்றது

கீச்சு கீச் என்றது

கிட்ட வா என்றது

பேச்சு ஏதுமின்றி

பிரியமா என்றது

முகிலன்னம் சர சர சரவென்று கூட

இடிவந்து பட பட படவென்று வீழ

மழை வந்து சட சட சடவென்று சேர

அடை மழை காட்டுக்கு குடை இல்லை மூட

வானவெளி மண்ணை நழுவி

விழுந்ததென்ன

திசையெல்லாம் மழையில் கரைந்து

தொலைந்ததென்ன

சிட்டு சிறு குருவி

பறந்த திசையும் தெரியவில்லை

விட்டு பிரிந்துவிட்டேன்

பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்

விட்டு பிரிந்தேன் பிரிந்தேன்

உயிர் நனைந்தேன் நனைந்தேன்

அந்த சிறு குருவி இப்போது

அலைந்து துயர்படுமோ துயர்படுமோ

இந்த மழை சுமந்து

அதன் ரெக்கை வழித்திடுமோ வழித்திடுமோ

காற்றில் அந்நேரம்

கதையே வேறுகதை

கூட்டை மறந்துவிட்டு

குருவி கும்மியடித்தது கான்

சொட்டும் மழை சிந்தும்

அந்த சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி

அழுதது கான் அழுதது கான்

காற்றில் அந்நேரம்

கதையே வேறுகதை

கூட்டை மறந்துவிட்டு

குருவி கும்மியடித்தது கான்

சொட்டும் மழை சிந்தும்

அந்த சுகத்தில் நனையாமல்

என்னை எட்டிப்போனவனை எண்ணி எண்ணி

அழுதது கான் அழுதது கான்

Link to comment
Share on other sites

அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண் இரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாமல் எழுதில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்த துடித்ததே
கன்னி பெண்ணை கையிலே
வயலின் போல ஏந்தியே
வில் இல்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
சுட சுட சுகங்களை கொடுக்கலாம்
என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
என் மீது பூ மழை
எங்கேயோ எண்ணங்கள்
ஓர் ஊர்வலம் போக
கண் கொண்ட உள்ளங்கள்
ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே..
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீலா வெளியிலே
நெஞ்சில் நீந்த துடித்ததே
ரோமியோவின் ஜூலியட்
தேவதாசின் பார்வதி
ரெண்டு பெரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட
ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்த பின் உயிரின் மேல்
ஓர் ஆசை இல்லையே
பூ வாடை கொண்டாடும்
தாய் பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும்
என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே ..
ஓ ஓ ஓ ஓ ...
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
வந்து நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண் இரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாமல் எழுதில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.