Jump to content

ஈழத்தவரின் மண்! திரைப்படம்!


Shan

Recommended Posts

மண் திரைப்படத்தை நானும் பார்த்தேன். சேயோன் சொன்ன மாதிரி படத்தில வாற BBQ பார்ட்டில. பொன்ராசுவின் மகனும் மகனுடைய நண்பனும் அவரைக் கொல்ல பிளான் பண்ணியிருக்கினம்.பார்டிக்கு வந்து நோரமலா ஆடிப்பாடினாத்தானே சந்தேகம் வராது.பொன்ராசுவின் தோழன் ஒருவர் வந்துவிட்டுச் செல்கிறார்.இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் பொன்ராசுவின் நண்பன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவரல்ல.முன்னர் ஒரு காட்டிசியில் நண்பர்கள் பேசிக்கொள்ளும்போது சொல்வார்கள் "அவனென்ன வெளில சொல்லக்கூடிய மாதிரி எல்லாரும் போற இயக்கத்துக்கே போயிருக்கிறான்" என்று.

இனப்பெருக்கத்தொகுதி பற்றி படிப்பிக்கிற ஆசிரியர்களில் அநேகமானோர் இரட்டை அர்த்த வசனம்தான் பேசுவினம்.இது அம்மாவை படிக்கிற காலத்திலயும் சரி நாங்கள் படிச்ச காலத்திலயும் சரி இப்படித்தான்.பள்ளிக்கூடம் போகும்போது பியர் குடித்துவிட்டுப் போற மாதிரி ஒரு காட்சியை நான் பார்க்கவில்லையே??? மிஸ் பண்ணிட்டன் போல.ஆனால்ப் பள்ளிக்கூடம் போய் வந்து அங்க இருக்கிற ஆக்கள் கள்ளடிக்கிறேல்ல என்றா சொல்றீங்கள்??? வன்னில இருந்திட்டு வந்தாக்களை கேளுங்கோ.

என்னைப் பொறுத்தவரைக்கும் எம்மவர் இயக்கத்தில் வந்த இந்த மண் திரைப்படம் நல்லதோர் திரைப்படம். நல்ல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.மலைநாட்டு மக்களுடன் சில வருடங்கள் பழகியுள்ளேன்.படத்தில வந்த மாதிரி அவ்வளவு பாரபட்சம் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை.ஒரு சில பணக்காரர்களிடம் அந்தக்குணம் இருக்கிறதுதான் ஆனால் படத்தில் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.

18 வருசத்துக்கு முதல் வன்னில ஒரு சப்பாத்து என்ன விலையிருக்கும்? தெரிஞ்சாக்கள் சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • Replies 82
  • Created
  • Last Reply

இலங்கையில் தயாராகும் தமிழ் படம் :மண்

இலங்கை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 25 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் படம் மண். இப்படத்தை சினி ரேஞ்ச் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ராஸ்கஸேந்திரா மிகுந்த செலவில் தயாரிக்கிறார்.

இலங்கை போர் ஏற்பட்ட பிறகு அங்கு தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படவில்லை. சர்மிளாவின் இதய ராகம் என்ற படமே கடைசியாக இலங்கையில் தயாரான தமிழ்ப்படம். இதுவரை அங்கு உருவான தமிழ்ப்படங்கள் இலங்கை மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெளியாகியிருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் படம் என்பதால் உலகத்தரமான தொழில் நுட்பத்துடன் உருவாகுவதோடு உலகெங்கும் முதன் முறையாக வெளியிடப்படுகிறது இந்த மண் திரைப்படம்.

இந்தப் படத்தில் லண்டன் வாழ் தமிழர் வி|pத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ப்ளஸ்டூ மாணவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

300 படங்களுக்கு மேல் நடித்து தேசிய விருது பெற்றிருக்கும் வாகை சந்திரசேகர் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல் சுகுமார் வித்தியாசமான குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் இலங்கை நடிகர்களும் நடிகைகளும் நடிக்கின்றனர்.

சி.ஸே. ராஸகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பல விருதுகளை வென்ற ஆயிஷா கனவு மெய்ப்பட வேண்டும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார். எஸ.எல்.பாலா|p நடனம் அமைக்கிறார். பல உலக இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ள ஜெர்மன் விஜய் இசையமைக்கிறார்.

இலங்கையில் வன்னி பகுதியில் உள்ள கனகராயன்குளம் என்ற தமிழ் கிராமத்தில் நடக்கும் காதல் கதை இது. மண்ணின் மனதோடும் யதார்த்த பின்னனியோடும் உருவாகும் இப்படத்தில் காதலும் அரசியலே! வாழ்வும் அரசியலே! என்ற கருத்து அபத்தமாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க இலங்கையிலுள்ள தமிழ் கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

எப்படி மண்ணானது நாம் பிறக்கிறபோது .... தவழ்ந்து நடக்கிறபோது.... உழுது விதைக்கிற போது....அழுது அணைக்கிற போது.... காதலித்து கட்டிப் புரளுகிறபோது..... மரணித்து ஆத்மா அடங்குகிற போது நம்மைச் சுமக்கின்றதோ அதே போல இந்த மண் திரைக்காவியம் கூட உங்களை ஒரு அழகான தமிழ் கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கே வாழவிட்டு...... அழவிட்டு....... சிரிக்க விட்டு..... சிந்திக்க விட்டு.... உணர்ச்சி ததும்ப விட்டு .... படமாக இல்லாமல் உங்கள் வாழ்வின் பகுதியாக எண்ணவிட்டு திரையரங்கிலிருந்து வீட்டுக்கு செல்ல வைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் புதியவன்.ஆர்.

http://www.tamilr.com/

Link to comment
Share on other sites

இந்த செய்தியை ஏன் விளையாட்டு பகுதியில் இணைத்துள்ளீர்கள்????

:huh:

Link to comment
Share on other sites

மண் படம் பற்றி ஏற்கனவே களத்தில் வந்திருக்கின்றதே

ஆமாம் தவறுதான். சிறிய கவலையீனம் பிழையை ஏற்படுத்திவிட்டது. மன்னிக்கவும்

ப்டம் வந்து 6மாதமும் ஆச்சு இறைவன் :angry:

ஆமாம் தவறுதான். சிறிய கவலையீனம் பிழையை ஏற்படுத்திவிட்டது. மன்னிக்கவும்

இந்த செய்தியை ஏன் விளையாட்டு பகுதியில் இணைத்துள்ளீர்கள்????

:rolleyes:

ஆமாம் தவறுதான். சிறிய கவலையீனம் பிழையை ஏற்படுத்திவிட்டது. மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனே இது பெரிய பிரச்சனையே இல்லை. களப்பொறுப்பாளர் மாற்றி விடுவார்

Link to comment
Share on other sites

இறைவனே இது பெரிய பிரச்சனையே இல்லை. களப்பொறுப்பாளர் மாற்றி விடுவார்

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.