குட்டி

சைவ உணவு வகைகள்.

Recommended Posts

மாமிசம் சாப்பிடாதவர்கள் பிராமணர்கள் என்றில்லைத்தானே. இங்கே வெள்ளையர்கள் பலர் இப்போ சைவமாக மாறிக் கொண்டு வருவதை காணக்கூடியதாய் இருக்கு.

ஆசையிருந்தும் மனக்கட்டுபாட்டுடன் அதை விடுவது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன?

(யாழ்களத்தின் சமையல்பகுதியிலேயே தெரிகிறதே)

அப்படி ஒருவேளை சைவமாக மாறினால் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

... :lol:

கறுப்பியின் (கடுப்பேத்தும் திரியில் கேட்டுக் கொண்டது போல) வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத்திரியில் சைவ உணவு வகைகளை மட்டும் தமிழில் தேடி எடுத்து இணைக்கக்கவும் அத்துடன் நேரம் கிடைப்பின் புதிய முறைகளையும் அறியத் தர முடிவு எடுத்துள்ளேன். தயவு செய்து அனைவரும் இணைத்து கொள்ளவும்- நன்றி :lol:

கறுப்பி இந்தாங்கோ, பிரவுன் பிரட் உப்புமா மைக்கிறோவேவில் செய்யும் முறைய இந்த ஆன்டி சொல்லி காட்டி இருக்கிறா. :lol:

பிரவுன் பிரட் உப்புமா

http://www.youtube.com/watch?v=aHokrVq1PW4

http://www.youtube.com/watch?v=vHuSxf3_6PY&NR=1

Edited by குட்டி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இடியாப்ப பிரியாணி

இரண்டு பேருக்கு அளவாக

தேவையான பொருட்கள்

இடியாப்பம் 12

உருளைக் கிழங்கு – 1

கரட் -1

லீக்ஸ் - 1

கோவா (ஊயடியபந)– ¼ துண்டு

வெங்காயம் - 1

கஜீ -10

பிளம்ஸ் சிறிதளவு

நெய் அல்லது பட்டர்- 4 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், ஏலக்காய் தூள்- சிறிதளவு

உப்பு தேவைக்கு ஏற்ப

dinners.jpg

செய்முறை

கரட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு, லீக்ஸ், கோவா, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இடியாப்பத்தை உதிர்த்து வையுங்கள்.

பாத்திரத்தில் நெய் விட்டு கிழங்கு வதங்கிய பின், வெங்காயம் போட்டு அவிந்த நிறம் வரும் வரை வதக்குங்கள். கஜீ, பிளம்ஸ் போட்டு வறுத்து, கரட், லீக்ஸ், கோவா சேர்த்து 2 நிமிடங்கள் பிரட்டிக் கொள்ளுங்கள்.

மிளகு தூள் ஏலத்தூள் உப்புப் போட்டு உதிர்த்த இடியப்பம் போட்டுக் கிளறி எடுத்து சேவிங் பிளேட்டில் போட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

(இத்துடன் பட்டாணிக்கறி, சோயாக்கறி, கத்தரிக்காய்ப் பிரட்டல், கிழங்கு மசாலா, அச்சாறு, சலட், கட்லற் அல்லது வடை வைத்துப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

சாப்பாட்டுக்குப் பின் டெசேட்டும் பரிமாறுங்கள்.)

http://sinnutasty.blogspot.com/2008/08/blog-post_26.html

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்க்கு நன்றி குட்டி நல்ல திரி... எனக்கு உதவும் இந்த திரி

Share this post


Link to post
Share on other sites

தக்காளி சாதம்

தேவையானவை

* அரிசி - 150 கிராம்

* வெங்காயம் - 100 கிராம்

* தக்காளி - 250 கிராம்

* பூண்டு - 50 கிராம்

* பச்சை மிளகாய் - 3

* பச்சை பட்டாணி - 50 கிராம்

* இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

* பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1

* சோம்பு - 1/2 தேக்கரண்டி

* தேங்காய் - 2 தேக்கரண்டி

* காய்ந்த மிளகாய் - 3

* தயிர் - 3 தேக்கரண்டி

* எண்ணெய் / நெய் - 50 ml

* உப்பு - தேவையான அளவு

* புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

* தேங்காய், சோம்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒன்றாக அரைக்கவும்.

* நெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை கருவேப்பில்லை போடவும்.

* பொரிந்ததும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

* தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதிக்கி அரைத்த விழுது சேர்த்து மேலும் 5 நிமிடம் வரை வதக்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லி புதினா பச்சை பட்டாணி மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து 5 நிமிடம் வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.

* சுவையான தக்காளி சாதம் ரெடி.

http://www.arusuvai.com/tamil/node/15611

Edited by சுஜி
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

புளிக்குளம்பு

pulikulampu.jpg

தேவையானப்பொருட்கள்:

புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு

தயிர் – 1 கப்

சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வெண்டைக்காய் – 4 அல்லது 5

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை

உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 1/2 அல்லது 3/4 கப்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

குறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும்

http://barthee.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி

'கறுப்பி' யை பெண் என்று குட்டியில் இருந்து கனக்க பேர் நம்பிக்கொண்டு இருக்கினம் என்று மட்டும் விளங்குது.... :lol:

Edited by நிழலி

Share this post


Link to post
Share on other sites

சுஜி, நுணா, நிழலிக்கு நன்றிகள்.

...

'கறுப்பி' யை பெண் என்று குட்டியில் இருந்து கனக்க பேர் நம்பிக்கொண்டு இருக்கினம் என்று மட்டும் விளங்குது.... :lol:

நிழலி மன்னிக்கவும்!!

கறுப்பி அந்த முகம் தெரியாத உறவு 'கடுப்பேற்றுவது எப்படி' என்ற திரியில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி இருப்பதால், (அடிக்கடி சமையலறைப் பக்கம் போய் நானே எனது சாப்படுக்களை செய்வதால், எதோ கொஞ்சம் சமையல் பற்றி அறிந்து இருக்கிறேன். அறிய வேணும் என்ற ஆர்வமும் இருக்கிறது.) மற்றவருக்கு சாப்பாட்டை செய்தது குடுப்பதை விட, அதை எப்படி செய்யலாம் என்று செய்முறையச் சொன்னால் அவர்கள் செய்தது பார்த்து அந்த முறை பிடித்திருப்பின் அவர்கள் கடைப் பிடிப்பார்களே? எனக்குத் தெரிந்த ஒரு சில குறிப்புக்களை தேவையானவர்களுக்குப் பகிர்வது நல்லெண்ணம் என்றே நினைக்கிறன்.

(இதை விட்டு, கறுப்பி ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அதைத் தெரிந்து கொள்ள நான் முயற்சி எடுத்ததில்லை. எடுக்கப் போவதும் இல்லை- யாழில் ஒவ்வொருவரும் எழுதும் கருத்துக்களில் இருந்து ஓரளவுக்கு அவர்கள் யார் என்பதை விளங்கிக் கொள்ளும் தன்மை இருக்கு. கறுப்பி யார் என்று எனக்கு எப்போதோ தெரியும் :lol: )

Share this post


Link to post
Share on other sites

.

நல்ல தலைப்பு குட்டி,

:lol:

விரதம் பிடிக்கின்ற நாட்களில் இந்தப் பக்கம் நிச்சயம் எட்டிப் பார்க்க வேணும்.

நாம் வீட்டில் செய்யும் சுகமான வாழைக்காய் தோல் சம்பல்.

best_green_bananas.jpg

வாழைக்காய் தோல் சம்பல்.

தேவையான பொருட்கள்;

மூன்று கறி வாழைக்காயின் தோல்.

சின்ன வெங்காயம் 3.

பச்சை மிளகாய் 3.

உப்பு சுவைக்கேற்ப.

தேசிக்காய் 1

செய்முறை;

வாழைக்காய் தோலை ஆவியில் (Steemer) அவிக்கவும்.

(அல்லது சிறிய பாத்திரத்தில் கொஞ்ச தண்ணீர் விட்டும் அவிக்கலாம்.)

அவிந்த வாழைத்தோலை சிறிய துண்டுகளாக வெட்டி.... ஒரு பாத்திரத்தில் போடவும்.

அதனுடன் சிறிதாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கிளறிய பின்......

உப்பு, புளி விட்டு...... சோத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

காளான் குருமா

MASHROOM.jpg

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கசகசா - 1/4 தேக்கரண்டி

தேங்காய் - 1/4 மூடி

மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பட்டை - 3

கிராம்பு - 3

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - 1 கொத்து

செய்முறை:

காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்க வேண்டும்.

நன்றி கீற்று நளன்

இது தோழர் விஜிக்கு... Unknown-8.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

.

நல்ல தலைப்பு குட்டி,

:blink:

விரதம் பிடிக்கின்ற நாட்களில் இந்தப் பக்கம் நிச்சயம் எட்டிப் பார்க்க வேணும்.

நாம் வீட்டில் செய்யும் சுகமான வாழைக்காய் தோல் சம்பல்.

best_green_bananas.jpg

வாழைக்காய் தோல் சம்பல்.

...

உங்கள் கருத்துக்கு நன்றி சிறி அண்ண!

வாழைக்காய்ப் பொரியல் சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் தோலில் சம்பல் கேள்விப் பட்டதே இல்லை சிறி அண்ணா. அறியத் தந்தமைக்கு நன்றி :lol:

நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கருத்துக்கு நன்றி சிறி அண்ண!

வாழைக்காய்ப் பொரியல் சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் தோலில் சம்பல் கேள்விப் பட்டதே இல்லை சிறி அண்ணா. அறியத் தந்தமைக்கு நன்றி :lol:

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :blink:

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

Share this post


Link to post
Share on other sites

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும்.

சிறி உங்கள் கவலை எனக்குப் புரியுது! இந்தத் தகவல் ரொம்ப முக்கியமானது! :blink:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு அசைவத்தை விட சைவ உணவுகளே அதிகம் பிடிக்கும்.

இணைப்பிற்கு நன்றி குட்டி,சிறி அண்ணா.புரட்சி அண்ணா

வாத்தியார்

*********

Edited by வாத்தியார்

Share this post


Link to post
Share on other sites

கறுப்பிக்காக இலகு முறையில் செய்யக் கூடிய அல்வா...கறுப்பி உங்கள் மனைவியிடம் செய்ய சொல்லி செய்து சாப்பிடவும்;

அன்னாசி அல்வா

இப்ப இங்கு அன்னாசி காலமாதலால் நான் அன்னாசியில் செய்து பார்த்தேன்...நீங்கள் விரும்பினால் மாம்பழத்திலும் செய்யலாம்.

செய்யத் தேவையான பொருட்கள்;

ஓரளவு நன்கு பழுத்த அன்னாசிப்பழம்

பால்

சீனி

ஏலக்காய்

வனிலா ஏதென்ஸ்

நெய் அல்லது பட்டர்

இனி செய்முறையைப் பார்ப்போம்;

முதலில் அன்னாசியை தோல் நீக்கி அளவான துண்டுகளாக வெட்டவும்.

அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை சூடாக்கவும்[நீலக் கலர் பாலை பாவிக்கவும்.]

பாலை அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்...பால் கொஞ்சம் திரண்டு வரும் போது சீனிப் போட்டு கிளறவும்.

கொஞ்சம் பதத்திற்கு வந்ததும் அன்னாசியைப் போட்டு விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்[அன்னாசியின் நடுத்தண்டைப் பாவிக்க வேண்டாம்]

பின்னர் இறக்கும் தருவாயில் வனிலா எதென்ஸ்,அரைத்த ஏலக்காய்,நெய் விட்டு இறக்கவும்.

இறக்கும் முன் ஒரு டிரேயில் நெய் அல்லது பட்டர் தட‌வி வைக்கவும்.

விரும்பினால் கயூ,முந்திரி தூவலாம்.

அளவான துண்டுகளாக வெட்டி என்னை நினைத்துக் கொண்டே சாப்பிட‌வும்.

Share this post


Link to post
Share on other sites

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும்.

சிறி உங்கள் கவலை எனக்குப் புரியுது! இந்தத் தகவல் ரொம்ப முக்கியமானது! :blink:

சுவி, சும்மா எறியிற வாழைத்தோலிலை சம்பல் செய்ய வெளிக்கிட்டு...... புதுச்சட்டியை எறிய வேண்டி வரப்படாது எல்லோ...... :lol:

இந்த தகவலை சொல்லாமல்..... சம்பல் செய்யிற ஆக்களின்ரை சட்டியை எறிய வைப்பம் எண்டும்...... யோசிச்சனான். :D

யாழ் உறவுகளும் பாவம் எல்லோ.... என்று நினைத்து, மனதை மாற்றி விட்டேன். :D

எனக்கு அசைவத்தை விட சைவ உணவுகளே அதிகம் பிடிக்கும்.

இணைப்பிற்கு நன்றி குட்டி,சிறி அண்ணா.புரட்சி அண்ணா

வாத்தியார்

*********

வாத்தியார், உண்மையில் வெய்யில் காலங்களில்...... உறைப்பு குறைந்த மரக்கறி உணவுகளே ஆரோக்கியமானது.

அத்துடன் இந்தக் காலங்களில்..... பலவகையான மரக்கறி வகைகள், குளிர் காலத்தை விட அதிகமாக கிடைக்கும். :D

Share this post


Link to post
Share on other sites

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :blink:

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :lol:

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :D

Share this post


Link to post
Share on other sites

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :blink:

Share this post


Link to post
Share on other sites

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

Jack_Fruit_1_B.JPG

potato(3).jpg

தேவையான பொருட்கள்

பிலாக்காய் சிறியது - 1

உருளைகிழங்கு - 2

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 1

முழு பூண்டு - 1

அரைப்பதற்கு

தேங்காய் - 1 மூடி

பச்சை மிளகாய் - 15

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகச- 1சிட்டிகை

பூண்டு- 5பல்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய்- 2 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

சோம்பு- 1 டீஸ்பூன்

பட்டை - 1

கருவேப்பிள்ளை- சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

பிலாக்காயை கையில் எண்ணைய் தடவி கொண்டு இரண்டாக நறுக்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போடவும். உருளை கிழங்கையும் அந்த அளவில் நறுக்கி கொள்ளவும். உப்பு போட்டு இரண்டையும் தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைக்கவும்.. வெங்காயம் தக்காளி .கசகச, சோம்பு .பூண்டு பல், பச்சை மிளகாய்,உப்பு.ஆகியவற்றை நைசாக அரைக்கவும் அடுப்பில் வாணலை வைத்து 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம் .. தக்காளி ... பூண்டு போட்டு .1 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு வதக்கவும் நன்கு வதங்கிய பின்பு வேகவைத்துள்ள பிலக்காயையும் உருளைகிழங்கையும் போட்டு.. அரைத்த விழுதையும் கூட சேர்த்து கொத்திக்கவிடவும் குருமா மாதிரி வந்த உடன் இறக்கவும் ... கெட்டியாக கொழ கொழப்பாக சேர்ந்தாற்போல் இருக்கவேண்டும்.

நன்றி:செட்டி நாட்டு சமையல் குறிப்புகள்...

ஆசிரியர்:ராஜஸ்வரி..

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

சென்ற ஞாயிறு லூர்து சர்ச்சுக்கு போனோம். மதியம் அங்குள்ள காட்டில் அடுப்பு மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டோம். சமைத்த பாத்திரங்களை தேய்த்துக் கழுவி முடியவில்லை. அதுதான் உங்கள் குறிப்பை பார்த்ததும் சிரிப்பு வந்தது. :lol:

அது சரி தோலில் சம்பல் வைத்தால் உள்ளே இருக்கும் காயை என்ன செய்வது என ஏன் யாரும் யோசிக்கவில்லை. :blink:

Share this post


Link to post
Share on other sites

கறுப்பிக்காக இலகு முறையில் செய்யக் கூடிய அல்வா

என்ன கறுப்பிக்கே அல்வாவா?? :blink::lol:

Share this post


Link to post
Share on other sites

தேங்காய் சாதம்..

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்

தேங்காய்த்துருவல் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 4

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 10

தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.

இது சகோதரிக்கு.. :blink:

நன்றி: சமையல் அறை.காம்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தயவு செய்து யாராவது அச்சாறு செய்முறை போட்டு விடவும். சைவம். :blink:

Share this post


Link to post
Share on other sites

சைவ உணவு வகைகள் என்ற பகுதியை ஆரம்பித்த குட்டிக்கு கோடி நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

தயவு செய்து யாராவது அச்சாறு செய்முறை போட்டு விடவும். சைவம். :D

அச்சாறு

IMG_0211.JPG

தேவையானவை

* பச்சைமிளகாய் - 250 கிராம்

* வெங்காயம் - 250 கிராம்

* பப்பாசிக்காய் - 125 கிராம்

* போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்

* கேரட் - 125 கிராம்

* வினிகர் - 3 கப்

* செத்தல் மிளகாய் - 5

* கடுகு - ஒரு மேசைக்கரண்டி

* உள்ளி - 5 பல்

* இஞ்சி - 2 இன்ச் நீளத்துண்டு ஒன்று

* உப்புத்தூள் - தேவையான அளவிற்கு

* மிளகுத்தூள் - தேவையான அளவிற்கு

* பெருங்காயம் - ஒரு துண்டு

செய்முறை

* கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி வினிகர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.

* அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைக்கவும்.

* வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3") துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒருபாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின் தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின் காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி வைக்கவும்.

* பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து அதில் அரை கப் வினிகரை ஊற்றி அதனுடன் விதை நீக்கிய பச்சை மிளகாயை போட்டு அவிய விடவும்.

* பச்சைமிளகாய் அவிந்து வினிகர் வற்றியதும் அதிலிருக்கும் பச்சைமிளகாயை வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

* பின்பு அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி வெங்காயத்தை போட்டு அவித்து வினிகர்வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி கேரட்டை போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

* அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில் விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

* கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை போட்டு நன்றாக கலக்கவும்.

* பின்பு அவித்த கேரட்டை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.

* பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.

* அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற விடவும்.

* அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.

* அதன் பின்பு அச்சாறு தயராகிவிடும் அதை தேவையான நேரங்களில் எடுத்து பரிமாறலாம்.

http://www.arusuvai.com/tamil/node/11457

சைவ உணவு வகைகள் என்ற பகுதியை ஆரம்பித்த குட்டிக்கு கோடி நன்றிகள்.

இதுக்ககெல்லமா சின்னப் புள்ளத் தனமா கோடி நன்றிகள் சொல்லுறது? :) பிரயோசனப் பட்டால் சந்தோசம் கறுப்பி :lol:

Share this post


Link to post
Share on other sites

அது சரி தோலில் சம்பல் வைத்தால் உள்ளே இருக்கும் காயை என்ன செய்வது என ஏன் யாரும் யோசிக்கவில்லை. :)

வாழைக்காய் உள்ளே இருப்பதை உப்பு தூள் பிரட்டி பெரித்து சோறுடன் சாப்பிடால் றொம்ப நல்லா இருக்கும்... வட்டம் வட்டமாக கட் பண்ணி விட்டு பண்ணினால் பார்க்க வடிவாகவும் இருக்கும்... :lol:

Edited by சுஜி

Share this post


Link to post
Share on other sites