குட்டி

சைவ உணவு வகைகள்.

Recommended Posts

இது ஜிம் பாடி ஏற்றுவதற்கு பயனுள்ள குறிப்பு தோழரே குட்டி... அனைவரும் இவ்வாறுதான் காலையில் உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள்.. :lol::D

உண்மை தான், ஊரில் இருக்கும் போது பச்சைப் பயறை ஊறவைத்து அவித்து, தேங்காய்ப் பூ, சீனி/சர்க்கரை உப்பு சேர்த்து வாரத்தில் ஒருமுறையாவது சாபிட்ட ஞாபகம்...

உதைச் சாப்பிட்டுப் போட்டு, இருப்புக் கொள்ள ஏலாமல் வீட்டு பின் வளவு முழுக்க (அறுகம் புல்லும், நெரிஞ்சி முள்ளும் தான் அதுக்குள்ளே இருக்கிறது) அதை வெட்டி துப்பரவாக்கிறது தான் வேலை... :)

Edited by குட்டி

Share this post


Link to post
Share on other sites

சுரக்காய் மோர்குழம்பு

april%202009%20020.JPG

தேவையானப் பொருட்கள்:

மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)

சுரக்காய் - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

அரிசி - 1/2 டீஸ்பூன்

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுரக்காய் போட்டு அதில் உப்பு,மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும்.

காய் வெந்தப்பின் அரைத்த கலவையை அதில் சேர்க்கவும்.

பின் மோர் சேர்த்து 1 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து அதை மோர்குழம்பில் கொட்டவும்.

சுவையான மோர் குழம்பு சூடான சாதத்திற்கு அப்பளம் வடகமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

april%202009%20019.JPG

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t12270.html

Share this post


Link to post
Share on other sites

பலாக்காய் என்பதுதான் சரியான சொல். அன்பருக்கு இது தெரியாமல் இருப்பது கவலை அளிக்கிறது. தமிழ் திரிபு பட அநுமதிக்க கூடாது. பிலாக்காயஎன்பது பேச்சு வழக்கில் உள்ள சொல். எழுத்தில் வருவது சரியல்ல.

Share this post


Link to post
Share on other sites

A0667_10.jpg

குண்டுத் தோசை (கார பணியாரம்)

செய்முறை:

பச்சரிசி - அரை கப்

புழுங்கல் அரிசி - அரை கப்

வெந்தயம் - அரை மேசைக்கரண்டி

வெள்ளை உளுந்து - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

கடுகு - அரை தேக்கரண்டி

பெருங்காயத் துண்டு - குண்டு மணி அளவு

கடலைப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி

 

பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதை போல வெந்தயம், உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசி மற்றும் உளுந்து ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு லேசாக சிவக்க விடவும்.

எல்லாவற்றையும் மாவுடன் சேர்த்த பிறகு தாளித்தவற்றையும் மாவுடன் ஊற்றி கரண்டியால் கட்டி இல்லாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால் மாவை எடுத்து குழியில் முக்கால் அளவு ஊற்றவும்.

A0667_07.jpg

பிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைக்கவும். பணியாரத்தின் மேல் புறம் வேகுவதற்காக மூடியை போட்டு 2 நிமிடம் மூடி விடவும்.

A0667_08.jpg

2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும். ஒரு குச்சியை வைத்து திருப்பினால் சுலபமாக திருப்ப வரும்.

A0667_09.jpg

இந்த பணியாரத்தை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 

Share this post


Link to post
Share on other sites