Jump to content

சொதி வைப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொதி பிரமாதம் தமிழ் சிறி! வீட்டில் சொதி தினமும் வைக்கப்படும்! சில சமயம் உள்ளி, மிளகு கொஞ்சம் தூக்கலாய் போட்டு ரசத்துக்கும் சொதிக்கும் இடைப்பட்ட தரத்தில் வைப்பினம்!

கொழும்பில் சைவக் கடைகளில் அகத்தியிலைச் சொதிதான் மன்சளும் போட்டு அதிகமாக வைப்பார்கள்! நல்ல சுவையாக இருக்கும். இன்னைப்புக்கு நன்றி! :wub:

Two in one ( சொதி & ரசம்) போலை..... சுவி. :(

சொதிக்கு கொஞ்சம் கூடுதலாக மஞ்சள் போட்டால் பார்க்க வடிவாகவும் இருக்கும். :lol:

சொதிக்கு உப்பை மறந்துவிட்டீர்கள்.

தக்காளிப் பழமும் சின்னத் திரளி மீனும் போட்டால் 10-15 இடியப்பத்தைப் போட்டுத் தாக்கலாம்.

M2625P485461.jpg2569392484_f36a2e3b28.jpg

இணையவன், நான் இந்தப் பதிவை பதிந்த பிறகு தான் கவனித்தேன் உப்பை சேர்க்கவில்லை என்று. :(

அதில் திருத்தம் செய்யாமல், யார் கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் என்று அப்படியே விட்டுவிட்டேன். :D

நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள், மட்டுறுத்தினர் வேலைக்குச் சரியான ஆள் தான். :lol:

சின்ன திரளி மீன் போட்டால் நல்லது தான், ஆனால் இங்கே ஒரு நாளும் காணவில்லை. அதற்கு பதிலாக வேற் சின்ன மீன்களை போடுவோம்.

.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிற்கு நன்றி தமிழ்சிறி நீங்கள் இப்பதிவை போட முன்புதான் ஒரு தவனத்தில் விளைமீன் போட்டு ஒரு சொதி வைத்து பிள்ளைகளுக்கும் கொடுத்து நானும் உண்டேன். அதற்கு மாங்காய் மற்றும் தக்காளிப்பழம் ஆகியன சேர்த்தல் சுவையை அதிகரிக்கும். கதையோடு கதையாக முல்லைச் சொதி சாப்பிட்டுள்ளீர்களா? தேவாமிர்தம் தோற்றுப் போகும்.... :lol:

Jasminumauriculatum_2_67943_200.jpg

வல்வைசகாரா, நான் முல்லை இலையில் வைக்கும் சொதி சாப்பிட்டுப் பார்க்கவில்லை.

நீங்கள் குறிப்பிடும் முல்லை இலை என்பது இது தானா.......

இது தான் என்றால், பூக்கடைகளில் இந்த மரம் விற்கின்றது, வாங்கி சொதி வைக்க வேண்டியது தான். :(

சிறி அண்ணாட புண்ணியத்துலதான் இப்ப சமையற்கட்டு களை கட்டுது போல

அது சரி தூயா சமையற்கட்டை மூடிட்டாவோ அவவை காணக்கிடைக்குல

ஆஆ சொல்ல மறந்துட்டன் உங்க சொதி நல்ல கார சாரமா இருக்கு :lol:

Thaikatze_IMG_0329.jpg

ரசிகை, தூயாவை கனநாட்களாக காணவில்லை. சமையல் கட்டில் பூனை படுக்கக் கூடாது :( என்று...., இடைக்கிடை ஏதாவது பதிவு போடுறது. உங்கள் பாராட்டுக்கு நன்றி. ரசிகை :wub:

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சிறி அண்ணா..

மாங்காய் படத்தை பார்க்க ஊர் ஞாவகம் வருது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் பையன்! பாண்டி மாங்காய் கல்லுல குத்தி உப்பு, மி. தூளுடன் சாப்பிட அப்படி ஒரு சுவை. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் பையன்! பாண்டி மாங்காய் கல்லுல குத்தி உப்பு, மி. தூளுடன் சாப்பிட அப்படி ஒரு சுவை.

நினைச்சாலே வாய் ஊறுது சுவி அண்ணை.

வாத்தியார்

.......................

Link to comment
Share on other sites

Jasminumauriculatum_2_67943_200.jpg

வல்வைசகாரா, நான் முல்லை இலையில் வைக்கும் சொதி சாப்பிட்டுப் பார்க்கவில்லை.

நீங்கள் குறிப்பிடும் முல்லை இலை என்பது இது தானா.......

இது தான் என்றால், பூக்கடைகளில் இந்த மரம் விற்கின்றது, வாங்கி சொதி வைக்க வேண்டியது தான். :lol:

.

சோதி செய்முறைக்கு நன்றி :)

சோதிக்கு போடுற முல்லை பூ முல்லை இல்லை. அது வேறு, மரமாக வளரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கோவிக்க கூடாது...முயற்சித்துப் பார்த்தேன் முல்லையை இணைக்க முடியவில்லை.. ( :) sorry...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சிறி அண்ணா..

மாங்காய் படத்தை பார்க்க ஊர் ஞாவகம் வருது

ஓம் பையன்! பாண்டி மாங்காய் கல்லுல குத்தி உப்பு, மி. தூளுடன் சாப்பிட அப்படி ஒரு சுவை. :):lol:

நினைச்சாலே வாய் ஊறுது சுவி அண்ணை.

வாத்தியார்

.......................

mango+tree.JPGat-the-mango-tree-restaurant.jpg

உண்மை தான் பையன், சுவி, வாத்தியார்.

மாமரத்தை பார்க்கும் போது ஒரு ஏக்கம் தான் வரும். ஊரில் அநேகமானவர்களின் வீடுகளில், ஆகக் குறைந்தது ஒரு மாமரமாவது இருக்கும்.

அதில் எமது குழந்தைப் பருவங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடியது, அதில் ஏறி ஒளித்துப் பிடித்து விளையாடியது என்று எமது இளமைப் பருவங்களுடன் ஒன்றிப் பிணைந்தது மாமரம். இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு அப்படியான, இனிமையான அநுபவங்கள் கிடைக்கவில்லையே என்று கவலையாக இருக்கும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதி செய்முறைக்கு நன்றி :)

சோதிக்கு போடுற முல்லை பூ முல்லை இல்லை. அது வேறு, மரமாக வளரும்.

யாரும் கோவிக்க கூடாது...முயற்சித்துப் பார்த்தேன் முல்லையை இணைக்க முடியவில்லை.. ( :lol: sorry...

mullai_tree_2_67931_200.jpgmullai_tree_3_67935_200.jpg

இந்த மரமா, முல்லை மரம் குளக்காட்டான் & யாயினி.

Link to comment
Share on other sites

முசுட்டை இலை சொதி என்று தான் கேள்விப் பட்டு இருக்கிறேன்.

சகாரா (அக்கா)... வந்து முல்லை சொதிக்கு விளக்கம் தருமோ.... :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரமா, முல்லை மரம் குளக்காட்டான் & யாயினி.

ஓம் சிறி ! இதுதான் முல்லை. கஞ்சி, காச்சும்போது போடுவது. சொதிக்கும் போடலாம் என நினைக்கிறேன்.

நீங்கள் முதல் போட்ட படம் மாலை கட்டி கன்னியர் கூந்தலில் ஆட விடுவது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலை சொதி என்று தான் கேள்விப் பட்டு இருக்கிறேன்.

சகாரா (அக்கா)... வந்து முல்லை சொதிக்கு விளக்கம் தருமோ.... :lol:^_^

சகாறா சடமாபோயிட்டேனா? :(

Link to comment
Share on other sites

சகாறா சடமாபோயிட்டேனா? ^_^

நீங்கள் வேற... நான் சும்மா ஒரு பகிடிக்கு மட்டும் தான் அந்தப் பாடலை மாத்தி சொன்னேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை சகாரா. :lol: நான் சொன்னதால உங்கட மனம் பாதிச்சு இருந்தால், மன்னிச்சுக் கோளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலை சொதி என்று தான் கேள்விப் பட்டு இருக்கிறேன்.

சகாரா (அக்கா)... வந்து முல்லை சொதிக்கு விளக்கம் தருமோ.... :lol:^_^

ஒம் குட்டி முசுட்டை இலைச் சொதி நானும் சாப்பிட்டுள்ளேன்.

அத்துடன் முசுட்டை இலையில் வறையும் வைப்பார்கள். நன்றாக இருக்கும்.

சகாறா சடமாபோயிட்டேனா? :D

வல்வை சகாரா , ஒரு பாடலில் உள்ள வரியை தான் குட்டி நகைச்சுவையாக குறிப்பிட்டவர்.

குட்டியின் பதிவுகளை பார்த்தீர்கள் என்றால்...... எல்லா இடமும் நகைச்சுவை கலந்தே எழுதியிருப்பார்.

இதற்கெல்லாம் கோவம் கொள்ளலாமா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற... நான் சும்மா ஒரு பகிடிக்கு மட்டும் தான் அந்தப் பாடலை மாத்தி சொன்னேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை சகாரா. :lol: நான் சொன்னதால உங்கட மனம் பாதிச்சு இருந்தால், மன்னிச்சுக் கோளுங்கோ.

குட்டி நானும் விளையாட்டாகத்தான் கேட்டேன். என்ன அடிக்கடி என் மனச்சாட்சி என்னை சடம் என்று திட்டுகிறது அதன் தாக்கம் குட்டிக்கான பதிலில் வந்துவிட்டது. முக்கியமாக கோபப்படுவதை கைவிட்டு நீண்ட நாட்களாகி விட்டன. என்னமோ பொதுவாக என்னோடு பேசும், பழகும் எல்லோரும் என் மீது ஒரு அபிப்பிராயத்தை பொதுப்படையாக வைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. சகாறா ஒரு கோபக்காரி என்ற இமேஜ் ஏற்பட்டிருக்கிறது என்னுடன் சினேகமாகப் பழகவே பலருக்கு அச்சம் இருக்கிறது ஏன் என்று புரியவில்லை.

வல்வை சகாரா , ஒரு பாடலில் உள்ள வரியை தான் குட்டி நகைச்சுவையாக குறிப்பிட்டவர்.

குட்டியின் பதிவுகளை பார்த்தீர்கள் என்றால்...... எல்லா இடமும் நகைச்சுவை கலந்தே எழுதியிருப்பார்.

இதற்கெல்லாம் கோவம் கொள்ளலாமா? :D

Link to comment
Share on other sites

mullai_tree_2_67931_200.jpgmullai_tree_3_67935_200.jpg

இந்த மரமா, முல்லை மரம் குளக்காட்டான் & யாயினி.

அப்ப முல்லை சொதி இல்லையா? முசுட்டை சொதியைத்தான் முல்லை சொதி என்கிறார்களோ தமிழ் சிறி அண்ணா...எதை சொன்னாலும் சரியாக சொல்லுங்கள்... மாத்தி சொதி வைத்து சாப்பிட்டு மண்டையை போட்டாலும் 100வயதுக்காகவது வாழவேண்டும் என்று இருக்கேன்.. இந்த சின்ன வயதிலையே மண்டையை போட வைத்து விடாதிர்கள் :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி சொதி வைத்து சாப்பிட்டு மண்டையை போட்டாலும் 100வயதுக்காகவது வாழவேண்டும் என்று இருக்கேன்.. இந்த சின்ன வயதிலையே மண்டையை போட வைத்து விடாதிர்கள் :lol::D

பாலைக்கொதிக்க வைத்துவிட்டு...

பச்சை மிளகாயைப்போட்டுவிட்டு...

இறக்கி ஊத்தி குழைஞ்சு சாப்பிடும் சொதிக்கு ........

இந்தளவு மவுசான எழுத்துக்கள் வரும்போதே நினைத்தேன் இதுதான் நடக்கப்போகிறது என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மிளகு ரசம், தக்காளி ரசம், பைன் ஆப்பிள், பூண்டு ரசம், எலுமிச்சை ரசம் என பல வகையுண்டு. சொதி என்பது இதுவரை நான் பால் பாயாசம் போல ஏதோ இனிப்புடன் கூடிய பானம் என்றே நினைத்திருந்தேன்... நன்றி செய்முறைக்கு..

(சோழர்களின் தாக்கம் இருந்தாலும்) யாழ் களத்திலும், ஈழத்தின் புழக்கத்திலும் கவனிக்கும்போது பல தமிற்சொற்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தின் சொற்களாகவே உள்ளது இங்கே அவதானிக்க முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முல்லை சொதி இல்லையா? முசுட்டை சொதியைத்தான் முல்லை சொதி என்கிறார்களோ தமிழ் சிறி அண்ணா...எதை சொன்னாலும் சரியாக சொல்லுங்கள்... மாத்தி சொதி வைத்து சாப்பிட்டு மண்டையை போட்டாலும் 100வயதுக்காகவது வாழவேண்டும் என்று இருக்கேன்.. இந்த சின்ன வயதிலையே மண்டையை போட வைத்து விடாதிர்கள் :lol::D

Jasminumauriculatum_2_67943_200.jpgmullai_tree_3_67935_200.jpg

ஓம் சிறி ! இதுதான் முல்லை. கஞ்சி, காச்சும்போது போடுவது. சொதிக்கும் போடலாம் என நினைக்கிறேன்.

நீங்கள் முதல் போட்ட படம் மாலை கட்டி கன்னியர் கூந்தலில் ஆட விடுவது! :)

சுஜி, முல்லை இலை கிடைக்காதவர்கள், முசுட்டை இலையில் சொதி வைப்பார்கள். மற்றும் படி சொதி மட்டும் சாப்பிட்டு நூறுவயது வரை வாழ முடியாது.

முல்லை இலையில் சொதி வைக்கலாம் என்று வல்வை சகாராவும், குளக்காட்டானும், சுவியும் தான்சொல்கிறார்கள். உங்களுக்கு ஏதாவது நடந்தால் நான் பொறுப்பில்லை. :D:D

சிலவேளை இந்தக்காய் சாப்பிட்டால், நூறுவயதை தாண்டி வாழலாம் :lol:

Fresh-Amla-Big.gifindian-gooseberry-fruit.jpg

Link to comment
Share on other sites

...

சிலவேளை இந்தக்காய் சாப்பிட்டால், நூறுவயதை தாண்டி வாழலாம் :D

Fresh-Amla-Big.gifindian-gooseberry-fruit.jpg

சிறி அண்ண இது ஒருவகை கசப்புத்தன்மை கொண்ட நெல்லிக் காய் தானே? இதில் தானே நெல்லிப் பழரசம் தயாரிப்பது? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண இது ஒருவகை கசப்புத்தன்மை கொண்ட நெல்லிக் காய் தானே? இதில் தானே நெல்லிப் பழரசம் தயாரிப்பது?

இந்த நெல்லிக்காய் புளிக்கும்

இன்னும் ஒரு நெல்லிக்காய் இருக்குது " அருளி நெல்லிக்காய்" என்று எங்கடை ஊரில் சொல்வார்கள்.

சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அது சரி இவ்வளவு நாளாகியும் இன்னும் சொதி வைச்சு முடியேல்லையோ?

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

இந்த நெல்லிக்காய் புளிக்கும்

இன்னும் ஒரு நெல்லிக்காய் இருக்குது " அருளி நெல்லிக்காய்" என்று எங்கடை ஊரில் சொல்வார்கள்.

சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

அது சரி இவ்வளவு நாளாகியும் இன்னும் சொதி வைச்சு முடியேல்லையோ?

வாத்தியார்

*********

என்ன வாத்தியாரே, ஒவ்வொரு திரியா போய் முற்றுப் புள்ளி வைகிறீங்கள் போல இருக்கு... :D சமூகச் சாளரத்தில் ஒரு திரிக்கு முற்றுப் புள்ளி வைச்சியள் சரி...

சொதிக்குமா ? :):lol:

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைக் குட்டி

அங்கை வேறை. இங்கை சும்மா ஒரு பகிடிக்கு

சரி நான் வரப் போறன்.இதுக்குள்ளை நிண்டா கன திரிக்கு .... :):D:lol:

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

Jasminumauriculatum_2_67943_200.jpgmullai_tree_3_67935_200.jpg

சுஜி, முல்லை இலை கிடைக்காதவர்கள், முசுட்டை இலையில் சொதி வைப்பார்கள். மற்றும் படி சொதி மட்டும் சாப்பிட்டு நூறுவயது வரை வாழ முடியாது.

முல்லை இலையில் சொதி வைக்கலாம் என்று வல்வை சகாராவும், குளக்காட்டானும், சுவியும் தான்சொல்கிறார்கள். உங்களுக்கு ஏதாவது நடந்தால் நான் பொறுப்பில்லை. :lol::)

சிலவேளை இந்தக்காய் சாப்பிட்டால், நூறுவயதை தாண்டி வாழலாம் :lol:

Fresh-Amla-Big.gifindian-gooseberry-fruit.jpg

ஐயோஓஓஒ இந்த நெல்லிக்காய் சாப்பிடுவதை விட சாப்பிடாமல் இருப்பதே மேல் சிறி அண்ணை :D ... இது ஒரு மாதிரியான கசப்பு தன்மை கொண்டது அதை விட இது சாப்பிடவே முடியாது... மத்த நெல்லிக்காய் என்றால் சாப்பிடலாம்...

ஓம் சிறி அண்ணை நானும் சகாரா அக்கா சொல்லித்தான் கேள்விப்படுகிறேன் முல்லையில் சொதி வைக்கலாம் என்றதை... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இதை சின்ன வயதில் சாபிட்டு இருக்கிறேன் .சாபிட்ட் பின் தண்ணீர் குடித்தால்

தேன் மாதிரி இருக்கும். இதில் தான் சத்து அதிகமாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.