Archived

This topic is now archived and is closed to further replies.

Birundan

ஏன்? எதற்கு? எப்படி? + அதிசய உலகம்!

Recommended Posts

கேள்வி:-எல்லா கேள்விகளுக்குமே உங்களால் பதில் சொல்ல முடியுமா?

பதில்:-யாரலும் முடியாது. உங்கள் கேள்விகளால் தூண்டப்பட்டு உங்களுடன் சேர்ந்து அறிவியல் உலகில் நுழைந்து பார்த்து நானும் வியக்கமுடியும். விஞ்ஞானம் என்பது முழுமையான ஞானம் அல்ல.... ஒருவிதமான சிந்திக்கும் முறை. அதன் சாகசம் எல்லாவற்றையும் பற்றி சிந்தித்து பார்பதே, மேகங்களை பற்றி, மழை பொழிவதை பற்றி, தொல்காப்பியத்தின் காலத்தை பற்றி, குழந்தை பிறப்பதை பற்றி, நேற்று சாப்பிட்ட சோறு எப்படி தண்ணீர்குழாய் அடிக்க தெம்பாக மாறுகிறது என்பது பற்றி, எல்லாம் சிந்திக்க வைத்து, பரிசோதனைகள் மூலம் பதில்கண்டு பிடிப்பதுதான் அதன் குறிக்கோள். விஞ்ஞானம் பல "ஏன்" களுக்கு பதில் சொன்னாலும் சில "ஏன்" களுக்கு அதனிடம் பதில் இல்லை. உதாரணம்- சூரியன் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது. ஏன் முக்கோணவடிவத்தில் இருக்ககூடாது?

எப்படி என்று கண்டுபிடிப்பதில்தான் விஞ்ஞானத்துக்கு ஆதாரமான பூரிப்பு ஏற்படுகிறது!

ஆகவே நம்மால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவே முடியாது. பால் வீதி(milky Way) என்று அழைக்கபடும் நம்முடைய கேலக்ஸியில் மட்டுமே கோடிக்கணக்கில் நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கின்றன. இப்படி கோடிகணக்கான கேலக்ஸிகள் இருக்கிறன. அவை எல்லாவற்றையும் அறிவது மனிதனின் நேற்றைய இன்றைய நாளைய ஏன் மனிதனின் ஒட்டுமொத்த சரித்திர காலத்தில் கூட சாத்தியம் இல்லை. பிரபஞ்சத்தின் வடிவத்துக்கு ஏன் போக வேண்டும்? ஒரு கல் உப்பு- சோடியம் குளோரைடு அதில் எத்தனை அணுக்கள் இருக்கின்றன தெரியுமா? நூறு கோடி பொழுது போகவில்லையெனில் ஒன்று என்று எண்ணிக்கையிட்டு அருகே பதினாறு சைபர் போட்டு கொள்ளுங்கள். நம் மூளைக்குள் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கை அத்தனையும் கணக்கிட்டால்கூட ஒரே ஒரு கல் உப்பைமுழுமையாக அறிவதற்கு போதாது.

ஜசாக் நியூட்டன்(பதினேழாம் நூற்றாண்டு...கால்குலஸ்ஸின் அடிப்படையை கண்டு பிடித்தவர், மனித சரித்திரத்தில் பெரிய விஞ்ஞானி என்று கருதப்படுபவர்) தன் அந்திமக்காலத்தில் சொன்னார்.

"நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். இங்கே ஒரு கூழாங்கல், அங்கே ஒரு அழகான சங்கு என்று கண்டுபிடித்து பெருமிதப்பட்டு கொண்டு இருக்கையில் எதிரே உண்மை என்ற மாபெரும் சமுத்திரம் இன்னும் கண்டறியப்படாமல் பரவி கிடக்கிறது"

அறிவுத்தேடல்தொடரும்..........

Share this post


Link to post
Share on other sites

கேள்வி:- விண்வெளி நகரங்கள் அமைக்க சாத்தியகூறுகள் ஏதேனும் உண்டா?

பதில்:- நிறைய செலவாகும். பூமியில் இடம் போதவில்லையென்றால் முதலில் கடலில் பிளாட்பாரம் அமைத்து அதில் நகரங்களை நிர்மாணிக்க இப்போதே ப்ளான்கள் ரெடி. ஸ்பேஸ் பிளாட்பாரங்கள், ஆராச்சிசாலைகள் அமைத்துச் சிலமாதங்களுக்குப் போய் விஞ்ஞானிகள் தங்கிவிட்டு வருவது... இதுதான் நம் சமீப எதிர்கால சாத்தியங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கேள்வி:-வெங்காயம் நறுக்கும்போது கண்களில் தானாக நீர் பெருகிறதே எப்படிங்க அது?

பதில்:-வெங்காயம் நறுக்கும் போது வெளிப்படும், சுலபமாக ஆவியாகக்கூடிய (Volatile)கெமிக்கல் உங்கள் கண்களை தாக்குவதால் அது எரிச்சல் உண்டாக்க, கண்ணீரால் கண்கள் அலம்பப்படுகிறது, அதன் பெயர் ப்ரொப்பேன்தயால் ஆக்ஸைடு என்றால் கண்ணீர் குறையுமா என்ன?

கேள்வி:-சிவப்பு தவிர மற்ற கலரில் ரத்தம் உண்டா?

பதில்:-இயற்கையில் இருக்கிறது. நம்மோடு ரெம்ப ரெம்ப பழகின கரப்பான்பூச்சிக்குகூட வெள்ளை ரத்தம்தான்.

Share this post


Link to post
Share on other sites

கேள்வி:-சம்சாரத்தில் இருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா? எத்தனை வாட் கிடைக்கும்?

பதில்:-இந்த கேள்வி எதுகைக்காக இடக்காகவே கேட்கப்பட்டிருந்தாலும் சீரியஸாகவே பதில் சொல்கிறேன், சம்சாரம் என்றால் லைப்பா ஒய்ப்பா? சரி இரண்டிலுமே எத்தனை மின்சாரம் கிடைக்கும் என சொல்கிறேன்.

உயிர் மின்சாரம் என்பது ரெம்ப கொஞ்சம்தான். ஈஸிஜி, ஈஈஜி போன்றவற்றுக்காக அளக்கபடும் உடல் மின்சாரம் மில்லி வோல்ட்டுகளில் இருக்கும்.(மில்லி வோல்ட் என்பது ஒரு வோல்ட்டில் ஆயிரத்தில் ஒரு பாகம், நம்வீட்டு சப்ளை மின்சாரம் 240 வோல்ட்) இந்த உடல் மின்சாரத்தில் இருந்து கறண்ட் எடுக்கமுடியாது, படுத்து விடும், ஆனால் குட்டி மின்நிலையமாகவே இயங்கும் மீன் வகைகள் உண்டு. எலெக்ட்ரிக் ஈல், ரே... இப்படி தென் அமெரிக்க அமேஸான் நதி மீன் வகையானை ஈல், உயிரினங்களிலேயே அதிக மிண்சாரம் பண்ணுகிறது. எவ்வளவு? சுமார் 600 வோல்ட். ஒரு அடி அடித்தால் ஒரு ஜாதிக்குதிரைகூட சுருண்டு விழுந்து விடும். மனிதனை பொறுத்தவரை 10 அடி தூரத்தில் இருந்தாலே போதும் மின்சாரம் பாய்ந்து மரணம்தான், (என்ன சுறாவே தேவலையா?) இத்தனைக்கும் ஒரு எலெட்ரிக் ஈலின் மின்சாரம் இன்னொரு ஈலை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் அதிசயம்.

உங்கள் ஒய்ப் டெரிலின் அல்லது நைலான் அணிந்து கொண்டிருக்க, அவருடன் ஸ்கூட்டரில் போனால் அல்லது நடந்து போனாலே அவர் உடலில் நாலாயிரம் வோல்ட்வரை ஸ்டாட்டிக் மின்சாரம் சேர்ந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது, இந்த மின்சாரத்தை பற்றியும் பயப்பட வேண்டாம் கரண்ட் வாங்க முடியாது. ராத்திரி புடவையை அவிழ்க்கும் போது கொஞ்சம் பட படவென்று சத்தம் வரும் அவ்வளவுதான். சிலசமயம் லேசாக க்ஷாக் அடிக்கும்.

Share this post


Link to post
Share on other sites