Jump to content

யாழ் சென்.ஜோன்ஸ், மத்திய கல்லூரி Big Match 2010


Recommended Posts

யாழ் பரியோவான் கல்லூரி, மத்திய கல்லூரிகளிடையே நடைபெறுகிற Big Match நேற்று ஆரம்பமாகி இருக்கிது என்று வீரகேசரி, மற்றும் இதர வலைத்தளங்களில செய்தி வந்து இருக்கிது. பிந்திய ஸ்கோர் விபரம் யாருக்காவது தெரிந்தால் அறியத்தாருங்கள். வழமையாய் உதயன் வலைத்தளத்தில ஸ்கோர் போடுவார்கள். இம்முறை காணவில்லை.

தகவல் மூலம்: http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/wmnorthbattle/index.htm

1.jpg

2.jpg

4.jpg

6.jpg

19.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ் மத்திய கல்லூரி பெடியளிட்டை, பிடிக்க கொடி ஒண்டும் கிடைக்க வில்லையா?

19753_246362843822_183860113822_3437400_3760293_s.jpg

jccflag1.jpg

.

Link to comment
Share on other sites

சிறீ சென்றல் பழைய மாணவனோ. எங்கள் St.John's கல்லூரி கீதம் :rolleyes:

http://karumpu.com/wp-content/uploads/2010/College.mp3

Decked with shady palms and trees

Fringed with rich mahoganies,

There beneath a glowing sky,

St. John’s uprears her crest on high.

Chorus:

Praise St. John's your patron saint.

And lest in deed or word you taint

Your Alma Mater’s ancient name,

Johnians! Always play the game.

Christian lore she gives her boys,

Ever prizing heavenly joys,

Her highest pride a noble mind,

Her greatest joy a heart that’s kind.

Chorus

“In the darkness shines the light”

Johnians! With your torches bright,

Chase the gloom of night away,

Shed thro’ the world eternal day.

Chorus

S.J.Gunasegaram.

பேஸ்புக்கில சென் ஜோன்ஸ் கல்லூரி சம்மந்தமாய் இரண்டு குழுமங்கள் காணப்படுகிது:

http://hi-in.facebook.com/group.php?gid=6184445667

http://www.facebook.com/group.php?gid=38287803725&v=wall

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ் மத்திய கல்லூரி பெடியளிட்டை, பிடிக்க கொடி ஒண்டும் கிடைக்க வில்லையா?

19753_246362843822_183860113822_3437400_3760293_s.jpg

jccflag1.jpg

நாங்க எல்லாம் கொடி பிடிச்சு சுண்டுக்குழி பெட்டையளுக்கு "சோ" காட்டிறதில்ல. பதில் அடி கொடுத்து.. மச்சை வெல்லுறதுதான் வழமை..! :rolleyes:

போடுறா மச்சான் பொல்லுப் பறக்க... அடிடா மச்சான் பவுன்ரி சிக்ஸர்.

"college college central college.. what's the colour.. choc and blue..!"

(நான் மத்திய கல்லூரியை சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அங்கு படிக்கவில்லை. இருந்தாலும் எப்பவும் அதற்கே என் ஆதரவை விலகாமல் வழங்கி வருபவன். குறிப்பிட்ட காலம் மத்திய கல்லூரியின் ஆரம்ப பாடசாலையில் படித்திருக்கிறேன்.)

அதுசரி.. விளம்பரங்களில எங்கட உள்ளூர் உற்பத்திகளின்ர விளம்ரங்களைக் காணேல்லையே. எல்லாம் தென்பகுதி விளம்பரங்களா எல்லோ இருக்குது..??!

டக்கிளஸ் தேவானந்தா போன்ற அரசியல்வாதிகளை விளையாட்டுக்குள் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். விடுதலைப்புலிகள் யாழ் குடா நாட்டை நிர்வகித்த காலத்தில் அவர்கள் இந்த விளையாட்டுக்களை தடுக்கவும் இல்லை இவற்றில் தலையீடு செய்யவும் இல்லை என்பதைக் கவனத்தில் கொண்டு அதனை மற்றவர்களும் உதாரணமாக்கிக் கொள்ள வேண்டும்.

டக்கிளஸ் தேவானந்தா போன்றவர்கள்... இதில் அரசியல் செய்ய விளையின்.. பந்தால் தலையில் ஓங்கி அடித்து விடுங்கள். தொலைந்து போகட்டும்.

கல்லூரி நிர்வாகங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மத்திய கல்லூரி அதிபர் மாணவர்கள் கொஞ்சம் இனப்பற்றையும் தக்க வைக்க முயல வேண்டும்.

Link to comment
Share on other sites

கொடி சோவுக்கோ பிடிக்கறது. நீங்கள் கொடியை பிடிச்சு மினக்கட்டுக்கொண்டு இருந்தால் வேம்படி பொண்ணுங்களிண்ட இடுப்ப பிடிக்கறது எப்படி... அதனால அப்படி இருக்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Score board. big match 2010

1st Innings Score Summary

St Jhon's College - 165/10

Jaffna Central College - 159/10

2nd Innings Score Summary

St Jhon's College - 124/10

Jaffna Central College - 23/2

http://www.jaffnacentralcollege.org/?view=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று (26-02-2010) இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது யாழ். மத்திய கல்லூரி தனது 2வது இன்னிங்ஸுக்காக 32 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை இழந்திருந்தது. நாளை இறுதி நாள், வெற்றி பெறுவதற்கு யாழ். மத்திய கல்லூரி இன்னும் 99 ஓட்டங்களைப் பெறவேண்டும். சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற வேண்டுமாயின் இன்னும் 8 விக்கட்டுக்களைக் கைப்பற்றியாக வேண்டும். ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பு சமநிலையில் இருந்தாலும் யாழ். மத்திய கல்லூரிக்கு வாய்ப்பு சற்று அதிகம் என்று சொல்லலாம்.

சென். ஜோன்ஸ் முதல் இன்ன்னிங்ஸ் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு யாழ். மத்திய கல்லூரி தனது முதல் இன்ன்னிங்ஸில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. தனது கடைசி 6 விக்கட்டுகளை மத்திய கல்லூரி 11 ஓட்டங்களுக்கு பறி கொடுத்தது. முதல் இன்னிங்ஸ் 6 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 131 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கும் யாழ். மத்திய கல்லூரி இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நிறுத்தப்படும் போது 32 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களிலும் யாழ். மத்திய கல்லூரி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. சென். ஜேன்ஸ் கல்லூரியின் இறுதி வெற்றி 2004 இல் பெறப்பட்டது.

(நன்றி- காவாலி)

Link to comment
Share on other sites

ஸ்கோர் விபரத்துக்கு நன்றி. நாளைக்கும் மிச்சம் இருக்கிது என்றால் சென்றல் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமே. பார்ப்போம்.

Link to comment
Share on other sites

வீரகேசரியில ஸ்கோர் விபரம் விபரமாய் போடப்பட்டு இருக்கிது: http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=1231

யாழ். மத்திய - சென். ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான முதல் நாள் போட்டி விவரம்

virakesari online 2/27/2010 5:05:40 AM -வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரார்களின் பந்து வீச்சும் களத்தடுப்பும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை மட்டுப்படுத்தியதுடன் விரைவாக ஆட்டமிழக்கவும் செய்துள்ளன.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் ஹரிவதனன் 148 பந்துகளில் 14 பவுண்ட்ரி ஒரு சிக்ஸருடன் 85 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையாலும் இறுதி 5 விக்கெட்டுக்கள் 12 ஓட்டங்களில் இழக்கப்பட்டமையாலும் குறைந்த ஓட்டங்களுடன் சென். ஜோன்ஸ் கல்லூரியை ஆட்டமிழக்கச் செய்தது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை பகல் 10.00 மணியளவில் 104ஆவது போட்டி ஆரம்பமானது. முதல் நாள் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி 57.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாளர்களாக களமிறங்கிய ஜெயந்தன் அட்ரின் 2.3 ஓவர்களில் இணைப்பாட்டமாக 04 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், யாழ். மத்திய கல்லூரியின் ஆரம்ப பந்து வீச்சாளர் வதுசனன் வீசிய 08 பந்துகளில் 02 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அட்ரினுடன் கஜிவன் இணைந்தார். இவர் 04..2 ஓவர்களில் 06 பந்துகளைச் சந்தித்து ஆறு ஓட்டங்களைப் பெற்ற இருந்து வேளை, ஜெரிக்துசாந் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 08 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இரண்டாவது விக்கெட் சரிந்தது.

இரண்டாவதாக களமிறங்கிய ஹரிவதனன் அட்ரினுடன் இணைந்து, அவதானமாகத் துடுப்பெடுத்து ஆடிய போதிலும், அட்ரின் 12.4 ஓவரில் 47 பந்துகளில் 18 ஓட்டங்களை பெற்று, வதுசனன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 35 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் மூன்றாவது விக்கெட்டும் இழக்கப்பட்டது.

அடுத்து யோகேஸ்வரன் - ஹரிவதனன் இணைந்தனர். யோகேஸ்வரன் 25.2 ஓவரில் 35 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 33 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த போது நான்காவது விக்கெட்டையும் இழக்கும்நிலை

நான்காவதாக விதுசன்-ஹரிவதனன் களமிறங்கினர். விதுசன் 38.4 ஓவரில் 33 பந்துகளில் 05ஓட்டங்களை பெற்று, தர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஹரிவதனன் 54 ஓட்டங்களை பெற்று களத்தில் ஸ்திரமான நிலையில் காணப்பட்டார்

ஐந்தாவதாகக் களமிறங்கிய பிரணவன்-ஹரிவதனன் இருவரும் கவனமாகத் துடுப்பெடுத்தாடினர். எனினும் பிரணவன் 51.5 ஓவரில் 35 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஓட்டங்களின் எண்ணிக்கை 153 ஆனது.

ஆறாவதாக களமிறங்கிய மதுசன்-ஹரிவதனன் இணைப்பாட்டத்தில், மதுசன் 55.3 ஓவரில் 15 பந்துகளில் ஓட்டம் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 162 காணப்பட்டது. ஹரிவதனன் 84 ஓட்டங்களைப் பெற்று களத்தில் ஸ்திரமான நிலையில் இருந்தார்.

ஏழாவதாக பிரியதர்சன்-ஹரிவதனன் இணைந்து களமிறங்கினர். பிரியதர்சன் 56.2 ஓவரில் 05 பந்துகளில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 01 ஓட்டம் மட்டுமே பெறப்பட்டது.

எட்டாவதாகக் களமிறங்கிய டக்சன்-ஹரிவதனன் இணைந்து துடுப்பெடுத்தாடினர். ஹரிவதனன் 56.4 ஓவரில் 148 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 164.

ஒன்பதாவது ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜெருசன்-டக்சன் இணைந்தனர். ஜெருசன் 57.3 ஓவரில் 02 பந்துகளில் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.

டக்சன் ஆட்டமிழக்காது ஒரு பந்தை சந்தித்து ஒரு ஓட்டத்துடன் களத்தில் இருந்தார்.

பலத்த எதிர்பார்ப்புடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ். மத்திய கல்லூரி முதல் நாள் ஆட்ட முடிவில் 34 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காணப்பட்டது

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வதுசனன்-திவாகர் களமிறங்கினர். 2. 5 ஓவரில் 08 பந்துகளை சந்தித்து 01 ஒட்டத்தைப் பெற்றிருந்த வேளை, வதுசனன் ஆட்டமிழந்தார்.

முதலாவதாகக் களமிறங்கிய எட்வேட் எடின், திவாகருடன் இணைந்து துடுப்பெடுத்தாடினார். எட்வேட் எடின் 10 ஓவர்கள் நிறைவில் 18 பந்துகளில் 03 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 26 ஆகக் காணப்பட்டது.

இரண்டாவதாகக் கோகுலன் திவாகருடன் இணைந்து ஆடினார். கோகுலன் 11 .5 ஓவரில் 06 பந்துகளைச் சந்தித்து ஒரு ஓட்டத்தைப் பெற்று ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 28 ஆனது.

மூன்றாவதாக களமிறங்கிய ஜெரிக் துசாந் திவாகருடன் இணைந்தார். திவாகர் 17.4 ஓவரில் 54 பந்துகளைச் சந்தித்து 26 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 53 ஆகக் காணப்பட்டது.

நான்காவதாக ஜேம்ஸ் ஜக்சன்- ஜெரிக் துசாந் இணைந்து, மிகவும் அவதானமாக விளையாடி 16.2 ஓவரில் 57 ஓட்டங்களைப் பெற்றனர். ஜெரிக் துசாந் 35, ஜேம்ஸ் ஜக்சன 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட விவரங்கள் தொடரும்.

தமிழ்நெட்டிலையும் படங்கள் போட்டு இருக்கிறீனம்:

26_02_10_jaffna_02.jpg

26_02_10_jaffna_03.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ சென்றல் பழைய மாணவனோ.

ஓம் மச்சான். ஆரம்ப கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும், பின்பு யாழ் இந்துக் கல்லூரியிலும் படித்தேன்.

ஸ்கோர் விபரங்களை தந்த நெடுக்ஸ், காவாலி, மச்சானுக்கு நன்றி.

யாழ்ப்பாணத்திலிருந்து யாராவது இந்த விளையாடின் சிறு பகுதியையும், ரசிகர்களின் கூத்தையும் வீடியோ எடுத்து யூரியூப்பிலை இணைச்சு விடுங்கப்பா..... புண்ணியம் கிடைக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘Battle of North’ begins in Jaffna

[TamilNet, Friday, 26 February 2010, 08:23 GMT]

The annual cricket match between St. John’s College and Jaffna Central College, two leading educational institutions in Jaffna, which first took place in 1904 has begun with the cheerful engagement of the student community in the peninsula, sources in Jaffna said. Most of the schools in the peninsula have declared Thursday and Friday as holidays, the sources added.

Rev. Jacob Thompson, the principal of St. John’s College in Chu’ndukku’zhi and Rev. W. M. P. Wilkes of Jaffna Central College in Jaffna town, were the initiators of this time honoured annual sports event in year 1904.

Even during the war the event had continued to take place without much interruption.

Now with the A9 road opened for public transport and with many commercial institutions in the South sponsoring the event it is being engaged in with active participation of the students in Jaffna peninsula, the sources said.

------

இந்தக் கூத்தக் கண்டியளோ.. இந்த போட்டியைக் கண்டுகளிக்க என்று குடா நாட்டுப் பாடசாலைகள் பெரும்பாலானவற்றிற்கு விடுமுறையாம். இதென்ன கொடுமை சரவணா..??! எங்களுக்கு உந்தக் கிரிகெட்டால என்ன நன்மை என்றால் எதுவும் இல்லை. வெறும் பொழுதுபோக்கைத் தவிர. அதைவிட நாங்கள் எல்லாம் பிறக்காத காலத்தில் யாழ்ப்பாணத்தில் உந்தப் போட்டி என்றால் சனத்துக்குப் பயமாம். அந்தளவுக்கு அடிதடி. மீண்டும் அப்படி ஒரு நிலையைக் கொண்டு வரப் பாடுபடுகினம் போல.

யாழ்ப்பாணத்தில உள்ள புத்திசீவிகள்.. தலையை சீவிப்போட்டு இருக்கினமோ.. அல்லது மகிந்த மாமாவும் டக்கிளசு மாமாவும் கொய்து போட்டினமோ..???! :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘Battle of North’ begins in Jaffna

-------

இந்தக் கூத்தக் கண்டியளோ.. இந்த போட்டியைக் கண்டுகளிக்க என்று குடா நாட்டுப் பாடசாலைகள் பெரும்பாலானவற்றிற்கு விடுமுறையாம். இதென்ன கொடுமை சரவணா..??! எங்களுக்கு உந்தக் கிரிகெட்டால என்ன நன்மை என்றால் எதுவும் இல்லை. வெறும் பொழுதுபோக்கைத் தவிர. அதைவிட நாங்கள் எல்லாம் பிறக்காத காலத்தில் யாழ்ப்பாணத்தில் உந்தப் போட்டி என்றால் சனத்துக்குப் பயமாம். அந்தளவுக்கு அடிதடி. மீண்டும் அப்படி ஒரு நிலையைக் கொண்டு வரப் பாடுபடுகினம் போல.

யாழ்ப்பாணத்தில உள்ள புத்திசீவிகள்.. தலையை சீவிப்போட்டு இருக்கினமோ.. அல்லது மகிந்த மாமாவும் டக்கிளசு மாமாவும் கொய்து போட்டினமோ..???! :rolleyes::)

நெடுக்ஸ்,

இதனை விளையாட்டாக பார்க்காமல் , செல்வாக்கு அற்ற யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் தமிழ் மாணவரிடையே புகுந்து குழப்பம் விழைவிக்க முயல்கிறார்கள் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 32 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி மதிய போசனத்துக்கு சற்று முன்னர் 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக யாழ் மத்திய கல்லூரி 131 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

சென். ஜோன்ஸ் கல்லூரி

1வது இன்னிங்ஸ் 165/எல்லா விக்கட்டுகளும் இழக்கப்பட்டன

2வது இன்னிங்ஸ் 124/எல்லா விக்கட்டுகளும் இழக்கப்பட்டன

யாழ். மத்திய கல்லூரி

1வது இன்னிங்ஸ் 159/எல்லா விக்கட்டுகளும் இழக்கப்பட்டன

2வது இன்னிங்ஸ் 131/6 விக்கட்டுகள்

சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஹரிவதனன் சிறப்பு ஆட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார். இது யாழ். மத்திய கல்லூரியின் 4வது தொடர்ச்சியான வெற்றியாகும். 2007, 2008, 2009 போட்டிகளிலும் யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றிருந்தது. இதுவரை யாழ். மத்திய கல்லூரி 26 போட்டிகளிலும், சென். ஜோன்ஸ் கல்லூரி 33 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

யாழ். மத்திய கல்லூரி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! :rolleyes:

Link to comment
Share on other sites

மத்திய கல்லூரி வீரர்களுக்கு வாழ்த்துகள். எல்லாம் சண் அண்ணையிண்ட வியூகங்கள் போல.

பரியோவான் கல்லூரி அடுத்தடுத்து தோற்பது மாத்திரம் அல்ல, நீண்டகாலமாய் மீண்டு எழுவதற்கு கஸ்டப்படுகிது என்றால் Something wrong. குழுவை ஆட்டத்திற்கு தயார்படுத்தலில மாற்றங்கள் செய்யப்படவேணும். முன்பு இப்படி முக்கித்தக்கினதாக தெரிய இல்லை.

பரியோவான், மத்திய கல்லூரிகளுக்கு விளையாட்டு துறையில் கிடைக்கின்ற வசதி, வாய்ப்புக்கள் யாழில இருக்கிற ஏனைய கல்லூரிகளுக்கும் கிடைக்கவேண்டும், யாழ் மாவட்டத்தில மாணவர்கள் விளையாட்டு துறையிலும் முதன்மை பெறவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதில நேற்று என்னுடைய கருத்தையும் போட நினைத்திருந்தனான் ..வேலைப்பளுவும் மற்ற கொலஸ்ரோல் பற்றி எழுதுவதாலும் எழுதவில்லை (மேட்ச் வேண்ட பிறகு எழுதுவது என்று நினைக்க வேண்டாம் )

மற்றது நானும் ஒரு மத்தியின் மைந்தனாக்கும் ...எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...வெற்றி பெற்ற மத்திய கல்லூரி அணிக்கும் அதன் சமூகத்திர்ற்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீ , நெ ...நான் நினைக்கிறேன் எங்கோ ஓரிடத்தில் வாசித்தேன் .."ஒருகால் மத்தியின் மைந்தர்கள் பலகாலும் மத்தியின் மைந்தர்கள் " என்ற வகைகினங்கள், நீங்கள் இப்போது செய்வது போல உங்களுடைய ஊக்கங்கள் ஆதரவுகளை வழங்கவேண்டும் ...கொடுக்கவேண்டும் ...நீங்கள் கொடுப்பிர்கள் நானோ மற்றவர்களே சொல்ல தேவையில்லை ....ஸ்ரீ நீங்கள் இந்து என்று சொன்ன நினைவு ..யாழில்/ உலகில் இந்துவின் தாக்கம் எல்லா இடங்களும் உண்டு, இப்போதுள்ள அதிபர் ஒரு இந்து பழைய மாணவர் ஆவர் ...நான் கருதுவேன் அவர் இந்துவில் படித்த காலத்தை விட மத்தியில் ஆசிரியர் அதிபர் அக இருந்த காலம் கூடவென....இப்படி யாரும் மத்தியோடு இணைந்தவர்கள் அதனுடைய செயற்பாடுகளுக்கு உதவ வேண்டும்.

மற்றது பரியோவங்களுக்கு ...என்னவே நான் அவர்களுக்கு கிட்ட இருந்தால் எனக்கு பலரை தெரியும் ...எப்பவும் யோசிப்பது நிழலியை (எங்கோ முதலில் SJC குறிந்த ஞாபகம) எனக்கு தெரிந்தவராய் இருப்பார் என, இப்ப மச்சானையும். எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு 2004 அல்லது 2005 மேட்ச் நடந்த பொது எனக்கு தெரிந்த ,அறிந்த பரியோவான் ஆசிரியர்கள் மத்தியை விட கூடவென. நான் கணிசமான நேரம் அவர்களுடனும் கதைத்தேன் இப்படியான மிக்ஸ் உணர்வுகளுடன் வளர்ந்தாலோ என்னவோ ...நான் நினைக்கிறேன் என்னவோ சண்டையில்லாமல் இருக்கவேண்டும் என ..அது சரியோ தெரியாது ....

இதில இன்னுமொன்று எழுத வேண்டும் உந்த கொடி, தமிழ்நெட் பற்றி ...பிறகு எழுதுகிறேன் .

Central's flag must ne'er be lowered.

முடிவாக எல்லா பாடசாலை கீதங்களும் அவருக்குரிய சிறப்புக்களையும் கருத்துக்களையும் கொண்டிருந்தாலும், மத்திய கல்லுரியினது எனக்கு சிறப்பானதுதானே ..ஆனால் அது எல்லாருக்கும் பயன்படும் என்று நான் கருதுகிறேன் ...இது முழு தமிழர்களுக்குமே உதவ கூடியது ...இப்பவுள்ள நிலைமைகளை எவ்வாறு அணுகலாம் என்று சொல்லுகிறது ....

http://www.jaffnacentralcollege.org/?view=anthem......

எனக்கு பழைய மொழிபெயர்ப்பு தான் மனப்பாடம்...ஒருவரி வருகிறது ..."இதுவே சமயம் இணைந்த செயற்கு ..நிறைவேய்தாது நேற்றைய வெற்றி ...வீசு பந்தினை ஆளுக்கு ஆள் ...சுயநலமின்றி , பிரிவினை இன்றி மாண்பை நிருபி நல் விளையாட்டி...

அதே நேரத்தில் ...பிறகு ஓரிடத்தில் வருகிறது ...வாழ்க்கை நிலையில் தளந்திடும் போது காக்கணும் நேர்மை, உண்மை , தூய்மை ...விளையாடு சென்ரல் ஓய்ந்து விடாது .............

நிறைவாக ....நண்பர் உள்ளார் சென்ற முன்னாளில் பரந்துள்ளார்... உம் கலையகம் அவர் பெருமைக்கும் ......

விளையாடு சென்ரல் ஓய்ந்து விடாது நிறைவேய்தாது நேற்றைய வெற்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.