Jump to content

அவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.

Recommended Posts

உங்கள் கருத்து என்ன ஆண்கள் எல்லோரும் உத்தமர்கள் என்பதா ?ஆண்களில் தப்பு செய்தவர்கள் எவருமே இல்லையா ?எந்த ஆணும் காதலித்து கைவிடவில்லையா?குழந்தை பிறந்த பின்பு கூட சில ஆண்கள் தன மனைவியை விட்டுவிட்டு வேறு திருமணம் செய்வதை நீங்கள் கண்டதில்லையா ?பணத்துக்காக காதலித்தவளை விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த ஆண்களை நீங்கள் சந்தித்ததில்லையா ?இவர்களுக்கெல்லாம் நீங்கள் கொடுக்கும் பெயர் என்ன ?

Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் உலகமே நரகம் என்று ஒரு கவிஞன் பாடியதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் கருத்து எழுதிய பெண்களைத் தேடி மைனஸ் புள்ளிகளைக் குத்தியவர்கள் அத்தைரியத்துடன் அதற்கான விளக்கங்களையும் முன்வைத்திருக்கவேண்டும்.,

இங்கு மைனஸ் புள்ளிகள் என்பது எக்கருத்தின் அடிப்படையில் குத்தப்பட்டுள்ளது? பெண்களை மறைந்திருந்து தாக்கும் தன்மை வெட்கக்கேடானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி கொஞ்சம் எல்லாருக்கும் உறைக்கிற மாதிரி சொல்லுங்கள் சகாராக்கா..பெண்கள் எண்டால் அவ்வளவு கேவலமாக போய் விட்டது சிலருக்கு. :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி இல்லாமலா பக்கம் பக்கமாக் பதிவுகள் போகின்றன .

பெண்கள் பக்கம் உரத்து சொல்ல ஒருவரையும் காணோம். ...........

Link to comment
Share on other sites

அடப்பாவியங்களா!!! ஓடி ஓடி சிவப்பு குத்தவென்றே யாரோ மினக்கிடுறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! ஆகா!

சரியான போட்டி.

போட்டி போடக்கூடிய விடயமோ

சிரிக்கக்கூடிய விடயமோ அல்ல இது நண்பரே...

எமது அம்மா

அக்கா

தங்கை

பிள்ளை

பற்றியது

அப்படியாயின் சிரிப்போமா...?

தலைப்பை பாருங்கள்

அவள் மட்டுமா இவளும் தான் விபச்சாரி.

எவள்.....?

அப்படி கொஞ்சம் எல்லாருக்கும் உறைக்கிற மாதிரி சொல்லுங்கள் சகாராக்கா..பெண்கள் எண்டால் அவ்வளவு கேவலமாக போய் விட்டது சிலருக்கு. :(:(

முதலில் தாங்கள் எப்போது ஓடி ஒழிந்திருந்து

ஒருவர் வந்தவுடன் பக்கபலத்துடன் வருவதை விடுகின்றீர்களோ...

அன்று விடியும் தங்களுக்கு பொழுது..

அதுவரை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தான் கொஞ்சம் தெளிவு வாற மாதிரி இருக்கு ஆண்கள் மத்தியில் நன்றி..நன்றி.இப்படி ஒரு தலப்பிட்டு இந்த கவிதையை யாத்தவர் கூட ஒரு தாய் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் தான் என்பதை மறந்து, கவிதைக்கு தலைப் பிட்டு இருக்கிறார். :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே.

அந்தக் காலத்தில் இருந்தே பெண்கள் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சாட்சி என்று கூறலாம்..!

ஏமாந்த காலம் போக வேண்டும். எனி ஏமாற்ற எண்ணுபவர்களை அதற்கு முதலே இனம் காணும் பக்குவத்தை மனிதர்கள் பெறும் திறமை வளர்க்கப்படும் வகையில் அறிவூட்டப்பட வேண்டும். அப்போதுதான் இந்த காதல் தொடர்பான வலிகள் வேதனைகள் தற்கொலைகளில் இருந்து மனிதர்களை நிரந்தரமாக மீட்டெடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

name='nige' date='18 February 2010 - 10:30 AM' timestamp='1266489009' post='568397']

View Postnedukkalapoovan, , said:

ஆனால் இந்தக் கவிதையின் நாயகன் அப்பாவி. அவன் வெளுத்தது எல்லாம் பால் என்றிருக்கப் போய் அவன் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறாள் அவள். அவளுக்கு நீங்கள் எல்லாம்.. ஆதரவு. வங்காளத்து. அதுதான் கொடுமை..! பெண்கள் உலகமே நரகம் என்று ஒரு கவிஞன் பாடியதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது..! இதே ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படியாவது அந்த ஆணைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி இருப்பீர்கள். இங்கு பாதிக்கப்பட்டது ஆண் என்றவுடன் அந்தப் பெண்ணை நிராபராதியாக்கிக் காட்டத் துடிக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் மனிதர்கள் தானா..??!

உங்கள் கருத்து என்ன ஆண்கள் எல்லோரும் உத்தமர்கள் என்பதா ?ஆண்களில் தப்பு செய்தவர்கள் எவருமே இல்லையா ?எந்த ஆணும் காதலித்து கைவிடவில்லையா?குழந்தை பிறந்த பின்பு கூட சில ஆண்கள் தன மனைவியை விட்டுவிட்டு வேறு திருமணம் செய்வதை நீங்கள் கண்டதில்லையா ?பணத்துக்காக காதலித்தவளை விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த ஆண்களை நீங்கள் சந்தித்ததில்லையா ?இவர்களுக்கெல்லாம் நீங்கள் கொடுக்கும் பெயர் என்ன ?

ஒரு பெண்ணுக்கு தன்னுடன் வாழ்வதற்குரிய நம்பிக்கையை அளித்து அவளை ஒரு ஆண் ஏமாற்றுவான் என்றால் அதையும் நான் கண்டிக்கத் தயங்கமாட்டேன். அந்த ஆணின் சூழல்.. பெற்றோர்.. காரணம் காரியம்.. என்று அவனின் நிலைப்பாடு அப்படி.. என்ன செய்வது.. அது இதென்று அவனின் தவறை சரி என்று காட்டும் கைங்கரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன். அல்லது அவனை தப்பிக்க வைத்து அவனை ஒத்த ஆண்களை காக்கவும் முனையவும் மாட்டேன்.

அப்படியான ஒரு ஆணை பெண்கள் நீங்கள் தான் எப்படி அழைப்பது என்று பற்றி தீர்மானிக்க வேண்டும். ஒரு ஆணாக எனக்கு அந்த அவசியம் இல்லை..! :(

Link to comment
Share on other sites

ஆகா! ஆகா!

சரியான போட்டி.

ஒருவர் கவிதை என்ற பெயரில் என்னமோ எழுதி பெண்களை கேவலபடுத்திக்கொண்டு இருக்கின்றார்.... சிலர் கை தட்டி வேடிக்கை பார்க்கினம்.... என்னத்தை சொல்லுவது எல்லோர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள் பெற்றவளும் அன்னைதான் என்று மறந்து செயல்படுகிறிர்கள் எல்லோரும்... smiley-angry007.gif

அப்போ பெண்கள் எல்லோரும் இப்படித்தான் ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்றீங்களா. இருக்கும் போலத்தான் தெரியுது. ஏன் ஒரு பெண் செய்த அநியாயத்திற்கு இத்தனை பேர் பாடுபடுகிறார்கள் அதை நியாயமாக்க என்று எண்ணும் போது அப்படித்தான் விளங்குகிறது..!

இப்படி எத்தனை காலத்திற்குத்தான் அம்மா அக்கா தங்கையை காட்டி பெண்களின் மகா பாதகச் செயல்களுக்கு மன்னிப்புத் தேடிக் கொடுக்கப் போகிறீர்கள். இதனால் இன்னும் இன்னும் மனிதர்கள் அவலப்படுவதை பார்த்து ரசிக்கப் போகிறீர்கள்.

அம்மா அக்கா தங்கை என்றாலும் தவறு செய்தால் தப்பானவங்க தான். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

மனித இனத்தையே கேவலப்படுத்த நடந்து கொள்ளும் பெண்களை திருந்தத் தூண்டலாகத்தான் இக்கவிதையைப் பார்க்க வேண்டும் என்பது எனது அவா.

மற்றும்படி பெண்களைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இதைவிடக் கேவலம் கெட்ட பெண்களைப் பற்றியும் இங்கு விலாவாரியாக எழுதலாம். ஆனால் கேவலம் கெட்டவர்களுக்கு விளம்பரம் செய்வது அல்ல எமது நோக்கம்..! :(

ஒருவர் இருவர் பண்ணும் தப்புக்காக எல்லா பெண்களை சொல்லுவது சரியில்லை இது கண்டிக்கத்தக்கதும்.... இதுலை ஒன்றை கவனித்திர்களோ பெண்கள் எழுதும் கருத்துக்கு எல்லாம் சிவப்பு புள்ளிகள் இடப்படுகின்றன... இது யாரல் இடப்படுக்கின்றன... நான் சொல்லுறன் இது எல்லாம் ஆண்கள் நீங்கள் எல்லோரும் மறைந்து இருந்து தாக்கிறிர்கள்... தைரியம் இருந்தால் வெளியால வந்து கருத்தை முன் வைக்கலாமே....பெண்களை அடக்க முயல்கிறிர்கள்...

ஆண்கள் தப்பே பண்ணவில்லையா? எத்தினைபேர் எத்தினை பெண்களை ஏமாத்தி இருக்கிறிர்கள்... கல்யாணம் பண்ணுவதற்க்கு ஒன்று... கூட்டிக்கொண்டு ஊரை சுத்துறதுக்கு ஒன்று...கடலை போடுவதற்க்கு ஒன்று ....இப்படி எத்தினை வேசம் போடுகிறிர்கள் நீங்கள்....

அப்புறம் உங்கள் கவிதையின் நாயகி என்ன தப்பு பண்ணினாள்... அப்பா அம்மாவுடன் தானே போனாள்... உங்களுக்கு இந்த சந்தர்ப்பம் முதலில் வந்து இருந்தால் நீங்களும் இதைத்தான் பண்ணி இருப்பிர்கள்...

உங்களுக்கு அடிப்படை காரணமே பெண்களை பிடிக்காது அதனாலே பெண்களை குற்றம் சொல்லிக்கொண்டே போகிறிர்கள்... முதலில் கண்ணை திறந்து வடிவாக பாருங்கள்... நல்லவர்கள் உங்கள் கண்ணில் படுவார்கள்... உண்மையாகவே காதலித்து இருந்தால் இவ்வளவு விமர்சனம் பண்ணி கவிதை எழுத மனசு வந்து இருக்காது... அதை விட உங்கள் நாயகி ஒருவரையும் ஏமாத்தவில்லையே இங்கே விபச்சாரியாகவா இருக்கிறாள் இல்லையே கணவனுடன் தானே..... உங்களுக்கு எப்படி சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை... ஏன் என்றால் நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொன்னாலும் சொல்லுவிர்கள்

ஒரு சிவப்புப் புள்ளியால் பெண்களை அடக்குகிறார்கள் என்பது சரியான நிலைப்பாடே அல்ல. எனது கவிதைக்கு -6 புள்ளிகள் வழங்கப்பட்டு இருந்த நிலையிலும் அதுவும் வெளிப்படையாகவே இங்கு கருத்தெழுதிய பெண்கள் தாம் அதற்கு சிவப்பு புள்ளி இட்டத்தை பகிரங்கமாக அறிவித்து இன்னும் அதனைச் செய்ய மற்றவர்களையும் ஊக்குவித்தனர். இருந்தும் அது + புள்ளிகளுக்கு நகர்ந்து இப்போ 0 இல் நிற்கிறது. அதற்காக என்னை கவிதை எழுதுவதில் இருந்து அடக்குகிறார்கள் ஒடுக்குகிறார்கள் என்று நான் கற்பனை செய்து கொள்ள முயலவில்லை.

எனவே கற்பனையில் அடங்கிக் கிடந்து கொண்டு ஆண்கள் மீது பழி சொல்லி வாழும் நிலையைவிட்டு வெளியில் வாருங்கள்.

அதுபோக..

நான் பல தடவை எழுதிவிட்டேன். இந்தக் கவிதையில் சொல்லப்பட்ட விடயத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தரிசனம் கலந்த உண்மை என்று எழுதி இருக்கிறேன். நான் சமூகத்தில் தரிசித்த உண்மையை எழுதி இருக்கிறேன் அந்தளவும் தான்.

ஒரு பெண் தந்தைக்கு விசா கிடைத்து லண்டன் போனவுடன்.. காதலனை மாற்றலாம்.. கணவனாக இன்னொருவனை தெரிவு செய்யலாம்.. என்றெல்லாம் பெண்ணிற்கு நீதி கற்பிற்கும் நீங்களே.. யாரோ ஒருவரின் காதலைக் காட்டி எமது கருத்துக்களை ஒடுக்க முனைகிறீர்கள்.

ஒருவன் காதலித்தான் என்பதற்காக காதலியின் தவறுகளை மூடிமறைக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள். உண்மையில் இந்தக் கவிதையின் நாயகன் தனது கதையை எமக்கு துணிந்து சொன்ன படியால் தான் எம்மால் ஒரு அபாயகரமான விபச்சாரியை இந்த உலகிற்கு இனங்காட்ட முடிந்திருக்கிறது. ஊரில் ஒரு காதலன்.. லண்டனில் ஒரு கணவன்.. பாரிசில் இன்னொருவன் என்று வாழத் தலைப்படும் பெண்களுக்கு இந்தக் கவிதை சாட்டை அடியாக மாறி இருக்கிறது என்பது வரும் கருத்துக்களில் இருந்து புரிகிறது. இப்படியாக வாழத்தலைப்படும் பெண்களை விபச்சாரிகள் என்று இனங்காண்பதில் எந்தத் தவறும் இல்லை..!

தமிழர்கள் மத்தில் பெண்கள் கெட்டுக் குட்டிச்சுவராகும் நிலை இன்று புலம்பெயர் வாழ்வோடு பெருகிவரும் நிலையில்.. பல நிலை சுயமன்னிப்புக்களும் சுய நியாயப்படுத்தல்களும் பெருகி வருகின்றன. அதன் தன்மையை இங்கு காண முடிகிறது. இது ஒரு அபாயகரமான சமூக வாழ்விற்குள் எமது இனத்தையே தள்ளிவிடும் தன்மையைக் காட்டி நிற்கிறது. ஒருத்தி வெளிநாடு போகப் போகிறேன் என்று கருதும் நிலையில் எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் இங்கு கருத்தெழுதுபவர்கள் மட்டுமல்ல.. வெளிநாட்டுக்கு வந்துள்ள.. வரும் பெண்கள் மத்தியிலும் இருக்கக் காணப்படுகிறது. அது வளர்ந்தும் செல்கிறது. இது சமூகத்திற்கு எத்துணை ஆரோக்கியமான பலாபலனை அளிக்கும் என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்தமாக எல்லோரையும் விபச்சாரி ஆக்கிவிட்டாள்.. எவளை விபச்சாரி என்று சொல்வார்கள்.. என்று சிந்திக்கிறார்களோ..??! :(

Link to comment
Share on other sites

ஒரு சிவப்புப் புள்ளியால் பெண்களை அடக்குகிறார்கள் என்பது சரியான நிலைப்பாடே அல்ல. எனது கவிதைக்கு -6 புள்ளிகள் வழங்கப்பட்டு இருந்த நிலையிலும் அதுவும் வெளிப்படையாகவே இங்கு கருத்தெழுதிய பெண்கள் தாம் அதற்கு சிவப்பு புள்ளி இட்டத்தை பகிரங்கமாக அறிவித்து இன்னும் அதனைச் செய்ய மற்றவர்களையும் ஊக்குவித்தனர். இருந்தும் அது + புள்ளிகளுக்கு நகர்ந்து இப்போ 0 இல் நிற்கிறது. அதற்காக என்னை கவிதை எழுதுவதில் இருந்து அடக்குகிறார்கள் ஒடுக்குகிறார்கள் என்று நான் கற்பனை செய்து கொள்ள முயலவில்லை.

எனவே கற்பனையில் அடங்கிக் கிடந்து கொண்டு ஆண்கள் மீது பழி சொல்லி வாழும் நிலையைவிட்டு வெளியில் வாருங்கள்.

அதுபோக..

நான் பல தடவை எழுதிவிட்டேன். இந்தக் கவிதையில் சொல்லப்பட்ட விடயத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தரிசனம் கலந்த உண்மை என்று எழுதி இருக்கிறேன். நான் சமூகத்தில் தரிசித்த உண்மையை எழுதி இருக்கிறேன் அந்தளவும் தான்.

ஒரு பெண் தந்தைக்கு விசா கிடைத்து லண்டன் போனவுடன்.. காதலனை மாற்றலாம்.. கணவனாக இன்னொருவனை தெரிவு செய்யலாம்.. என்றெல்லாம் பெண்ணிற்கு நீதி கற்பிற்கும் நீங்களா யாரோ ஒருவரின் காதலைக் காட்டி எமது கருத்துக்களை ஒடுக்க முனைகிறீர்கள். ஒருவன் காதலித்தான் என்பதற்காக காதலியின் தவறுகளை மூடிமறைக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள். உண்மையில் இந்தக் கவிதையின் நாயகன் தனது கதையை எமக்கு துணிந்து சொன்ன படியால் தான் எம்மால் ஒரு அபாயகரமான விபச்சாரியை இனங்காட்ட முடிந்திருக்கிறது. ஊரில் ஒரு காதலன்.. லண்டனில் ஒரு கணவன்.. பாரிசில் இன்னொருவன் என்று வாழத் தலைப்படும் பெண்களுக்கு இந்தக் கவிதை சாட்டை அடியாக மாறி இருக்கிறது என்பது வரும் கருத்துக்களில் இருந்து புரிகிறது.

பெண்கள் கெட்டுக் குட்டிச்சுவராகும் நிலை இன்று புலம்பெயர் வாழ்வோடு பெருகிவரும் நிலையில்.. பல நிலை சுயமன்னிப்புக்களும் சுய நியாயப்படுத்தல்களும் பெருகி வருகின்றன. அதன் தன்மையை இங்கு காண முடிகிறது. இது ஒரு அபாயகரமான சமூக வாழ்விற்குள் எமது இனத்தையே தள்ளிவிடும் தன்மையைக் காட்டி நிற்கிறது. ஒருத்தி வெளிநாடு போகப் போகிறேன் என்று கருதும் நிலையில் எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்தை இங்கு கருத்தெழுதுபவர்கள் மட்டுமல்ல.. வெளிநாட்டுக்கு வந்துள்ள வரும் பெண்கள் மத்தியிலும் இருக்கக் காணப்படுகிறது. அது வளர்ந்தும் செல்கிறது. இது சமூகத்திற்கு எத்துணை ஆரோக்கியமான பலாபலனை அளிக்கும் என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்தமாக எல்லோரையும் விபச்சாரி ஆக்கிவிட்டாள்.. எவளை விபச்சாரி என்று சொல்வது.. என்று சிந்திக்கிறார்களோ..??! :(

ஒகே உங்கள் கதாயகன் என்ன சன்னியாசியாவா இங்கே இருக்கின்றார்? அப்படி இருக்க முடியாது... நீங்கள் அப்படி சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டன்... இங்கே ஜரோப்பாவில் இருப்பவன் எல்லோரும் 99% கெட்டு குட்டிசிவாரக்த்தான் இருக்கின்றார்கள்,(இதுக்கு எனக்கு கல்லெறி விழும் என்று தெரியும் நெடுக்கு அண்ணா சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மகா உள்ளங்களே இதையும் ஏற்றுக்கொள்ளுங்கோ).... உண்மையாகவே இவர் காதலித்து இருந்தால் அவள் விட்டு இட்டு போறன் என்று சொன்னவுடன் அவர்கள் அம்மா அப்பா வீட்டில் போய் சொல்லி இருக்கலாமே அம்மா அப்பாவுடன் போய் பொண்ணு கேட்டு இருக்கலாமே ஏன் அதைச் செய்யவில்லை... அதை எல்லாம் விட்டு இட்டு அவள் லண்டன் வந்து விட்டாளாம் இவர் பின்னாடி வந்தாரம்... இவர் போய் கதை கேட்க முகத்தை சுழித்தளாம்... உங்கள் காதல் உறுதியாக இருந்தால் அவள் விட்டு இட்டு போறன் என்றவுடனே ஏதாவது பண்ணி இருக்கலாமே ... அதை விட்டு இட்டு இவ்வளவு காலம்கள் ஒடிய பின்பு இவர் இப்படி நடந்து கொள்ளுகிறார் என்றால் இவரிடம்தான் எங்கோ தப்பு உள்ளது விசாரித்துப்பார்க்கவும்

உங்கள் கவிதையின் நாயகனை என்னால் ஒரு ஆணாகவே எடுக்க முடியவில்லை .... நண்பர்களிடம் சொல்லி திரிபவருக்கு தன் காதலி விட்டு இட்டு போறன் என்றவுடன் ஒன்றும் பண்ண தெரியவில்லை .... இவ்வளவு காலம் போய் கதை அளக்கிறார்...

உடனையும் இதுக்கு சொல்லுவிர்கள் உங்கள் நாயகன் அப்பாவி என்று... இவ்வளவு அப்பாவியாக இருப்பவர் எப்படி லண்டன் வந்தார் ... நாடு கடந்து வரத்தெரிந்தவரை பார்த்து நீங்கள் அப்பாவி என்று சொல்லுகிறிர்கள் ... கதை றொம்ப நல்லா இருக்கு... நண்பர்களிடம் கூட்டத்தை கூட்டி கதை அளக்க தெரிந்தவர் ஒரு அப்பாவி ஆண்.... இதை நினைத்தால் எனக்கு சிரிப்பாக இருக்கு

ஒரு நண்பன் என்ற வகையில் அவரிடம் நான் வலிந்து கேட்டுத்தான்.. உங்களுக்கு என்ன பிரச்சனை வாழ்வில் என்று கேட்டு அதுவும் பல நாள் கேட்டுத்தான் உண்மையைச் சொன்னார். உண்மையில் அவராகச் சொல்லவில்லை. நான் தான் சொல்ல வைத்தேன். அதற்காக நீங்கள் திட்ட வேண்டியது என்னை அவரை அல்ல..!

குறித்த பெண் தாய் மற்றும் தம்பியுடன் தான் வெளிநாட்டுக்கு வந்தார். ஈமெயில் மூலம் தொடர்ப்பு கொண்டிருக்கிறார். ஆனால் குறித்த பெண் ஓரிரு தடவைகள் நம்பிக்கை தரும் வகையில் பதில் அளித்துவிட்டு பின்னர் ஈமெயில் மூலம் பதில் அளிப்பதையும் தவிர்த்து விட்டிருக்கிறார்.

அவர் இந்தப் பெண்ணைத் தேடினாலும் அதற்குரிய வசதி கிடைக்கவில்லை. அவர் தனது அலுவலகம் வழங்கிய பயிற்சிக்காக 12 மாதங்களுக்கே வந்திருந்தார். அதற்கிடையில் தேடிக் கண்டதுதான் இந்தக் காட்சிகள்.

அவர் பெரும்பாலும் அமைதியாக இருப்பார். அதனால் தான் கேட்டேன்.. ஏன் நீங்கள் கல கலப்பாக இருப்பதில்லை என்று. அதற்கு அவர் மழுப்பல் பதில் அளித்ததைக் கொண்டு உண்மையை உணர்ந்து கொண்டேன். இறுதியில் அவரை நச்சரித்து உண்மையை வாங்கிக் கொண்டேன்.

(குறிப்பு: குறித்த பெண் பற்றிய நேரடி அடையாளங்கள் இக்கருத்தாடல் வழி வெளியிடப்படுவதை தவிர்க்கும் பொருட்டு.. குறித்த பெண் சம்பந்தப்பட்ட விடயங்கள் சில சிறுமாற்றங்கள் செய்து இதில் எழுதப்பட்டுள்ளது.)

உண்மையில் ஒரு நல்ல இளைஞனை குறித்த பெண்ணின் நிலைப்பாட்டினூடு.. அவளை ஒத்த செயல் செய்யும் விபச்சாரிகள் என்று இனங்காணத்தக்க பெண்களை காப்பாற்றும் நோக்கில் நீங்கள் எவ்வாறு அந்த ஆணைப் பற்றி தவறாக உங்கள் கற்பனைக்கு ஏற்ப இனங்காட்ட விளையும் விடயங்களை வைத்து நோக்கும் போது ஒட்டுமொத்த பெண்களின் குணத்தையும் எடை போட இந்தக் கருத்து உதவும் போல் தெரிகிறதே. :(

Link to comment
Share on other sites

ஒருவர் கவிதை என்ற பெயரில் என்னமோ எழுதி பெண்களை கேவலபடுத்திக்கொண்டு இருக்கின்றார்.... சிலர் கை தட்டி வேடிக்கை பார்க்கினம்.... என்னத்தை சொல்லுவது எல்லோர் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள் பெற்றவளும் அன்னைதான் என்று மறந்து செயல்படுகிறிர்கள் எல்லோரும்... smiley-angry007.gif

சுஜி!

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது அதைப்போல் நீங்களும் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் நடக்கும் உண்மையைத்தானே கவிதையில் கூறப்பட்டுள்ளது, எனது கணிப்பின்படி நடந்த சம்பவத்தை புதினமாக்கவேண்டும் என்பதல்ல கவிஞரின் நோக்கம்.

இதே தவறு இனியும் சமூகத்தில் நிகழக்கூடாது என்பதுதான் எல்லோரினதும் எதிர்பார்ப்பு, ஒரு விடயம் அல்லது செய்தி இலகுவில், விரைவாக வாசகர்களை சென்றடைய வைப்பது தலைப்பில் தான் தங்கியுள்ளது, அப்படியிருந்ததினாலை தான் இந்த கவிதைக்கு இவ்வளவு வரவேற்பும், விமர்சனமும் கிடைத்துள்ளது.

இப்ப பாருங்க இவ்வளவு மெதுமையான உங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் இது கவிஞருக்கு கிடைத்திருக்கும் மகா வெற்றி என்பதை ஏற்றுகொண்டு, நீங்களும் ஒரு பாராட்டு தெரிவியுங்கள்.

மற்றும்படி நீங்கள் கூறுவதுபோல் எனது அம்மாவும் பெண், நான் கட்டிக்கப்போகிறவளும் பெண் அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

அதைப்போல் எங்கவீட்டில் நடப்பவை மட்டும்தான் பிரச்சினை என்று நினைப்பவனும் நானல்ல, எங்க வீட்டிற்கு பிரச்சினை வருமட்டும் காத்திருப்பவனுமல்ல.

Link to comment
Share on other sites

சமூகத்தில் நெருங்கி பழகுவதால் அறிந்த இரண்டு உண்மை சம்பவங்கள் - இவை தொடரக்கூடாது என்பதற்காக தருகிறேன்

ஒன்று:

மிகவும் வறுமையில் இருக்கும் யாழ் இளைஞர் ஒருவருக்கு, எனது நண்பர் கேட்டதற்கு இணங்க, வேலை எடுத்து கொடுப்பதற்காக கொழும்புக்கு அழைத்திருந்தேன். கொழும்புக்கு புதியவர் என்றபடியால், தெரிந்த ஓரிடத்தில் தங்க ஏற்பாடுகளை செய்தபின், அவரது எதிர்கால திட்டங்கள், எவ்வளவு காலத்திற்கு அந்த வேலையில் இருக்க உத்தேசம் ... போன்ற வழமையான கேள்விகளை தொடுத்தேன். (சொல்லிக்கொள்ளாமலே வெளிநாடுகளுக்கு ஓடிவிடுவதால் - வட-கிழக்கு தமிழர்களுக்கு வேலை கொடுக்க பலர் தயங்குவது வழமை).

3 - 4 வருடங்களில் குறித்த ஒரு நாட்டுக்கு செல்ல இருப்பதாக சொன்னார். ஏன் அங்கு .. என்ற அடுத்த கேள்வி கேட்க முன்னரே - எனது நண்பர் கண் ஜாடையால் என்னை தடுத்துவிட்டார்.

அவர் அவரின் உறவுக்கார பெண் ஒருவரை கல்யாணம் செய்ய விரும்புவதாகவும், அந்த பெண்ணும் விரும்பியதாகவும், பெற்றோர்களும் ஆட்சேபனை சொல்லவில்லை என்றும் - ஆனால் சில வருடங்களின் முன் வெளிநாடு சென்றுவிட்ட அந்தப்பெண் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக தான் அறிந்ததாகவும், அந்த விடயம் இவருக்கு இன்னும் தெரியாது கற்பனையில் உள்ளார் என்றும் எனது நண்பர் பின்னர் என்னிடம் கூறினார்.

இதனால் அவர் இப்போது வெளிநாட்டுக்கு ஓடிவிடமாட்டார் என்பதை உணர்ந்து ஒரு வேலையில் சேர்த்துவிட்டேன். அவர் கனவுகளுடன் இன்பமாக காலத்தை கழித்து வருகிறார்.

அந்த பெண்ணின் இன்றைய நிலை உறுதிப்படுத்தப்பட்டால், உண்மையை நாசூக்காக சொல்லும்படி நண்பனிடம் கேட்டுள்ளேன்.

இரண்டு:

நோய் காரணமாக தந்தையும் உழைக்கமுடியாது, இளம்வயது தம்பியின் உழைப்பில், வெளிநாட்டு உறவினர் உதவியில் காலத்தை ஓட்டும் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் இவர். முன்பு நன்றாக படித்ததால், தொடர்ந்து படிக்க சில உதவிகளை செய்ததால் நீண்டகால அறிமுகம்.

ஆனால், பின்பு எதிர்பார்த்தளவு படிப்பில் முன்னேற்றம் இல்லாததால் - அவரிடம் புதிய நட்புகளும், உல்லாச போக்கும் தொற்றியதாக அறிந்தேன். என்னை அறிந்த அவரது நண்பி, குறித்தபெண் தனது சகோதரனிடம் ஒருதலை ஈடுபாடை வளர்த்துகொள்வதாக முறையிட்டார். நான் இதில் தலைபோட விரும்பவில்லை. என்றாலும், பிறிதொரு நாள் அவரை கண்டபோது மறைமுகமாக, படிப்பில் கவனம் அவசியம் என்பதையும் குடும்ப சூழ்நிலையையும் கூறிவிட்டு சென்றுவிட்டேன்.

பல மாதங்களின் பின், நோய்வாய்ப்பட்ட தந்தையுடன் வந்து என்னை சந்தித்த குறித்தபெண், தான் படித்து முடித்துவிடதாகவும், பெறுபேறுகள் மிக "மட்டம்", எனக் கூறி, அதனால் நல்ல வேலை எடுக்க முடியவில்லை, வெளிநாடு சென்று பட்டபின் படிப்பு படிக்கப்போவதாகவும், விசா எடுக்க - வங்கி மீதி காட்ட - பெரும் தொகை பணத்தை உறவினர்களிடம் கடனாக பெற்றுவிட்டதாகவும், இன்னும் சிறுதொகை தேவை - விசா எடுத்ததும் தந்துவிடுவேன் - ஏற்பாடு செய்து தரமுடியுமா? என கேட்டார். இங்கேயே ஒரு வேலை எடுத்து தருவதாக நான் கூறிய போதும் - வெளிநாடு சென்றால் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம், ..... என்று பல கதைகள் சொன்னார் - அவரின் போக்கினை நான் அறியாதவன் என்ற நினைப்பில்.

எனினும் அவரது உறுதியை பார்த்து, கேட்ட பண உதவியை செய்ய, விசாவை பெற்று, வாங்கிய பணத்தையும் முறையாக திருப்பி தந்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். அவர் போகும் முன் (அவரது பலவீனத்தை அறிந்திருந்ததால்) அவர்கள் குடும்பநிலை, படிப்பில் கவனம், தம்பிமார் படும் துன்பம் ... போன்ற விடயங்களை நீண்டநேரம் விளங்கப்படுத்தினேன்.

சில மாதங்களின் பின்னர், முன்னர் என்னிடம் முறையிட்ட அந்த நண்பியின் தாயார் என்னை தேடி வந்தார். தனது மகனும், மகளும், இந்த பெண் சென்ற குறித்த நாட்டிலேயே ஒரு வாடகை வீட்டில் தங்கி படித்து வருவதாகவும், அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை அறிந்து - அங்கு வந்து பண பற்றாக்குறை காரணமாக அவர்களுடன் தங்க அனுமதிக்குமாறும் - பல பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் கூறினார். மகனை அந்தப்பெண் அவ்வப்போது அழைத்து, தான் விரைவில் வேறொரு மாணவனுடன் தங்கப்போவதாக கூறிவருவதாகவும் கூறினார்.

என் மேல் அந்த பெண், மதிப்பும், பயமும் கொண்டிருப்பதாக தனது மகள் கூறியதால், தான் என்னிடம் வந்ததாக கூறினார். எனினும் நான் எனது வரையறைகளை கூறி, முடிந்தால் உதவுவதாகக் கூறி - ஆனால் நீங்கள் தான் இந்த பிரச்சினையில் இருந்து விடப்பட்ட வேண்டும் எனவும் கூறி அனுப்பிவிட்டேன்.

கடந்த வாரம், வழியில் கண்ட அந்த தாயார், தான் பார்த்த ஒரு யாழ்ப்பாண பெண்ணுடன் தனது மகனது நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டதாகவும் - இனி பிரச்சினைகள் இருக்காது என தானும், மகனும் நம்புவதாக கூறினார்.

============

இப்படியுமா சில பெண்கள் - என்று என்னால் இன்று வரை நம்ப முடியாதுள்ளது!

துன்பபடுபவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று, எம்மை போன்றவர்களும், வெளிநாடு உறவினர்களும் தாரளமாக செய்யும் உதவிகள் இவர்களின் கீழ்தர போக்கை மேலும் வளர்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இரண்டாவது சம்பவ பெண், அவர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து தான் அங்கு செல்ல உறுதியாக இருந்தாரா என்ற கேள்வியும் எழுகிறது.

இத்தகைய கவர்ச்சியால் அலைந்து திரிபவர்கள் எப்படி படிப்பை முடிப்பார்கள்? வேலை எடுக்கமுடியுமா? அவர் வாங்கிய கடன்களை எப்படி அடைப்பார்? அப்போது அந்த குடும்பத்தின், ஏனைய சகோதர சகோதரிகளின் நிலை எப்படி மோசமாகும்? - இவற்றுக்கு என்ன பதில்?

இத்தகைய கவர்ச்சியால் அலைந்து திரிபவர்கள் இவற்றை உணர்வது கடினம் என்பதும் நீண்டகால அனுபவமாக உள்ளது!

முன்பு பொறுப்பின்றி திரிந்த இளைய சகோதரன், எமது பண உதவிபெற்று, இன்னொரு நாட்டில் மிக பொறுப்புடன் நன்றாக படித்து வருவது - ஆறுதலான விடயம்.

============

இப்படியுமா சில ஆண்கள் - என்று நினைக்கும் அளவிற்கு பெண்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளையும் நான் நன்கு அறிவேன். உண்மை சம்பவங்கள் சிலவற்றை நேரம் கிடைக்கும் பொது - பின்னர் வேறு பொருத்தாமான இடத்தில் தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்திரம் என்பது பெண்களிகெல்லாம் அடுப்படி வரை தானே

மிகவும் அற்புதமான கவிதை வரி , இதை எல்லாம் கவிதை என்று எடுத்துகொள்ள வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பரே.

அந்தக் காலத்தில் இருந்தே பெண்கள் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சாட்சி என்று கூறலாம்..!

அப்பவே யோசிச்சனான், எங்கட நெடுகாலபோவானை இந்த தமிழ் சினிமா தான் குறுக்கால போகவைக்குது எண்டு. அண்ணே, இனி இந்த வம்பு சிம்பு, ஜோசப்(விசை), B மூவி தனுஷ் படங்களை பார்கிறதை நிப்பாட்டுங்கோ!

அப்ப, தமிழ் படத்தை உதாரணத்திற்கு எடுத்தால் நீங்கள் ஒரு நூறு கருவளை அடிச்சு நொறுக்குவியல், பிறகு உங்கட காதலியோட பாடும்போது ஒரு நூறு பேரை உங்களுக்கு பின்னால் வைச்சு கெட்ட ஆட்டம் போடுவியள் எண்டு சொல்ல வாறீங்களே?

அண்ணே, ஆண்களும் வயிற்றில் இரண்டு மாதம் வரை பெண்கள் தான். ஏன் உங்களுக்கு முலைகள் இருக்கின்றன என்று எப்போதாவது யோசித்தது உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னக்கேன்னாவோ இந்த திரி வளரும் விதம் மிகவும் அருவருப்பாயும், வெறுப்பாயும் உள்ளது... சிலர் சொல்லாக்கூடும் இது எங்கள் உரிமை..எங்கள் கருத்துக்கள் விரும்பினால் படி/கருத்தெழுது என ...அப்படியானவர்களுக்கு இது அவர்களுக்குரியதல்ல ...நானும் என்னைப்போன்றாவர்களும் எவ்வாறு உணர்கிறோமோ நீங்களும் அதை உணர இது ஒரு சந்தர்பம்..அதற்கு மேல் தவறுகளை பொறுத்தருளுக....

காதல் என்றால் என்னமாதிரி என்று தெரியாமல் பலரும் இங்குள்ளோம் ஆகக்குறைந்தது நானும் எனது மனைவியும்...இங்கே நான் காதல் என்பது யாரோ ஒருவரை பார்த்த பின்பு ..மனதில் மணி அடித்து, பட்டாம் பூச்சி பறந்து, அவர் /அவள் இல்லாவிடில் வாழவில்லை என வாழ்ந்து..முடியக்கூடிய heroism எல்லாம் செய்து...சிலர்/ பலருடன் சண்டை பிடித்து........................இப்படி என்னவோ எனக்கு வரவில்லை..

என்னக்கெல்லாம் தெரிந்தது என்னவோ சிவனே என்று வீட்டுக்காரர் பேசி பேசி. பொருத்தி பொருத்தி பார்த்து...( 2 செவ்வாய் குற்றக்காரர் சேருவது எப்படி என்று கேட்டு பார்க்கவும் :( ) இணைத்துவிட்டது தான்...

இப்ப இதில ஏன் என்னுடைய கதை? :( காதல் என்றால் எப்படி என்று சரியாக சொல்லுவது கடினம்...அது ஏன் எப்படி வந்தது என்று பார்த்தாலே பல சந்தர்பங்களில் பலவித பொருத்தம் பார்த்துதான் வருகிறது..காதல் வரும்போதே நிறைய கணக்கு வழக்கு பார்த்துதான் வருகிறது...அதுதான் நான் முதல் சொன்னபடி இப்ப யாருக்கும் மணியடித்து, லைட் எரிந்து வருவதில்லை...( மொழி என்ற படத்தில் காதல் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லுமிடத்தில் வருகிற விவரணம் ...ஆகக் குறைந்தது எனக்கும் எனது மனைவிக்கும் பிடித்தால் 2 தடவை எழுதியுள்ளேன்...

இதைபற்றி எழுதி எனது வெறுமையை -காதல் பற்றிய அறிவை, பறையடிக்க விருப்பமில்லை

ஆனா சொல்லவருவது இதுதான் ...

எனக்கு அந்த பெண்ணை விபச்சாரி என்று சொல்லுவது சரியில்லை...பிடிக்கவில்லை..அதை நியாப்படுத்த சொல்லுகிற விளக்கங்கள்...... கடைசியில் சுஜி சொன்னது போல் ஒருவர் பொண்ணை பற்றி கேவலமாக சொன்னால் அதை ஆமாம் போடுகிற கூட்டங்களாகவே பல பதில்கள் உள்ளன...

ஓரிடத்தில் நெடுக்கால போவான் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் ...ஏமாற்றுவதும் ...விபச்சாரமும் ஒன்றென....

இதற்க்கு என்ன சொன்னால் மாற்றிக்கொள்வாரோ தெரியாது, ஆனால் இப்படியெல்லாம் எழுத நினைக்க ஒருவருக்கு மனம் வருகுதென நினைத்து கவலைப்படுவதை தவிர ஏதும் சொல்ல தெரியவில்லை...

18 அல்லது 20 வயதில் ஒருவர் செய்த தவறாகவே இருக்கட்டும் அதற்காக அவர் காலம் அதற்காக வருந்த வேண்டும் தண்டனை பொறவேண்டும் என நினைப்பது மனப்பிறள்வே ஒழிய வேறு ஏதும் அல்ல...

நே.போ ஓரிடத்தில் சொன்னார் , இதை தனியே பெண்களுக்கு மாத்திரம் தான் சொல்லமாடேன் ஆண்களுக்கும் சொல்லுவேன் என்று சொல்லுகிறார், ஆனால் இதைபோல செய்யும் ஆண்களை எப்படி அழைப்பது என்ற கேள்விக்கு ...அதற்குரிய பதில் தான் சொல்லத்தேவையில்லை என்று ...உண்மையில் அவருக்கு மட்டுமல்ல பலருக்கும் பதில் தெரிந்திருக்காது ( எனக்கும்தான்) உண்மையில் அப்படி ஒரு சொல் இருக்கோ தெரியாது.. ஏன் எங்களுக்கு விதவை என்பதற்கே ஆண்பால் தெரியாது...( நான் நினைக்கிறேன் தாபரன்/ தாபுரன் என) அவற்றின் பண்பாடு பொதுவாக இல்லைதானே ? பின்பு ஓரிடத்தில் குறிந்திருந்தார்..கிட்டத்தட்ட இப்படி...ஊரில ஒராளை காதலித்து, இங்கே ஒருவரை மணந்து, பிறகு பாரிஸ் இன்னுமொருவருடன் வாழுவதாக....அப்படியானவர் விபச்சாரி என்றால், அந்த ஊரில இருப்பவர், இங்கே கலியாணம் கட்டியவர், பாரிஸ் உள்ளவர் எல்லோரும் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன அடைமொழி...ஆகக்குறைந்தது அந்த பாரிஸ் மைனர் மச்சான் என்னமாதிரி? தனிஒருவர் செய்கிற தவறுக்காக, அவர் செய்யாத குற்றத்தால் அவரை அழைப்பது , அல்லது அவர் சாந்த பெரிய குழுவினையே அதும் மொத்த சனத்தொகையில் பாதியாய் உள்ளவர்களை விமர்சிப்பது...சரியல்ல...

ஏனோ விரும்பமிலாமல் எழுத வெளிக்கிட்டு நீண்டு போய்விட்டது....

நல்ல...நேரிய உள்ளம் கொண்டோர் தாமாகவே நிறுத்தினால் பெண்களை மட்டும் (பெரும்பாலும்) இழிவாக கூறும் இந்த திரி தாமாகவே அணையும்...

Link to comment
Share on other sites

ஒரு வசதியான வாழ்க்கைக்காக நேசித்த காதலனை கைவிட்டுச் செல்பவளை பாலியல் தொழிலாளர்களோடு ஒப்பிட முடியுமா? பெரும்பான்மை பாலியல் தொழிலாளர்கள் வறுமை மற்றும் வாழ்க்கை நெருக்கடிகளை சமாளிக்க பொருளாதர பற்றாக்குறை காரணமாக உருவாகின்றார்கள். சிலர் மேலான ஆடம்பர வாழ்க்கை நாடி அதிக பொருளாதராம் ஈட்டுவதற்கு இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இத்தொழிலாளர்கள் யாரையும் அன்பு பாசம் நேசம் நம்பிக்கை போன்ற விடயங்களை கொடுப்பதும் இல்லை பறிப்பதும் இல்லை. உடலை வருத்தி பணம் சம்பாதிக்கின்றார்கள். ஒரு பாலியல் தொழிலாளியின் பின் பல பத்து ஆண்கள் இருக்கின்றார்கள். பாலியல் தொழில் என்பது ஆண் பெண் இருவரும் சம்மந்தப்பட்ட ஒன்று. இதில் ஆண்களே அதிகமாக பங்குபெறுகின்றனர். ஒரு பெண் தான் நேசித்த காதலனை ஏமாற்றுவதற்கும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இடையில் அதிக வித்தியாசம் இருக்கின்றது. விபச்சாரம் என்பதை பாலியல் தொழில் என்றும் பாலியல் வல்லுறவு என்பதை பாலியல் வன்முறை என்றும் இனம்காணும் காலத்தில் சமூக பொருளாதர நெருக்கடிகளை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனையாக இது இருக்கின்றது தவிர ஆண் பெண் அவர்களின் குணம் போன்றவற்றை இதனடிப்படையில் தரம்பிரிக்க முயல்வது நியாயமான ஒன்றல்ல. வெளிநாடு வருவதற்காக வெளிநாட்டில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வெளிநாடு வந்தவுடன் கழட்டி விடும் ஆண்கள், வெளிநாடு வருவதற்காக நாட்டில் காதலித்தவனை கழட்டிவிடும் பெண்கள், தரகர் மூலம் பொய்யாக சாதி மாற்றிச் சொல்லி பின்னர் உண்மையான சாதி தெரிந்தவுடன் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் கழட்டிவிடுதல் போன்ற பல்வேறான தரப்பினரை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிடுவது அவர்களை கேவலப்படுத்துவது ஆகின்றது. ஒரு தொழிலாளியை கேவலப்படுத்தும் உரிமை எமக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஜரோப்பாவில் இருப்பவன் எல்லோரும் 99% கெட்டு குட்டிசிவாரக்த்தான் இருக்கின்றார்கள்,(இதுக்கு எனக்கு கல்லெறி விழும் என்று தெரியும் நெடுக்கு அண்ணா சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மகா உள்ளங்களே இதையும் ஏற்றுக்கொள்ளுங்கோ)....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆண் சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரி

நீங்கள் எங்களுடன் மோதவேண்டுமென்றால்...

ஆரம்பிக்கவேண்டிய இடம்

ஆண் விபச்சாரியை என்ன பெயர் வைத்து அழைப்பது என்பதிலிருந்து....

நாங்கள் ரொம்ப கவனமாக இருந்திருக்கின்றோம் இதில் கூட என்பது தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

மற்றும்படி தாங்கள் தாக்கியதில் எனக்கு மனவருத்தம் இல்லை

ஏனெனல் இது முதல் தாக்குதல் அல்ல

எத்தனையோ செய்திட்டமாம்

இதை செய்ய மாட்டோமா.....?

ஆனால் ஒரு உண்மையை வேண்டுமானால் நான் எழுதினால் அது ஆண்களைத்தாக்க தங்களுக்கு உதவக்கூடும்

எனது பருவ வயதில் எனது நெஞ்சுக்குள் வந்து சென்றவர்கள் குறைந்தது 100 இருக்கும்

அப்போ எனக்கு என்ன பெயர்

தாங்கள்தான் சொல்லணும்

தமிழில் சொல் இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.