Jump to content

பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமை சதியா?:-லலித் மோடி


Recommended Posts

பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமை சதியா?:-லலித் மோடி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறயிருப்பதால் ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்தன. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருமே ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இது தொடர்பில் பாகிஸ்தான் கூறுகையில் எங்களை பழிவாங்கும் நோக்கிலேயே பாகிஸ்தான் வீரர்களில் ஒருவரைக் கூட ஏலத்தில் தெரிவுசெய்யவில்லையென தெரிவித்திருந்து. ஆனால் இது குறித்து ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடி கூறுகையில்,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாததில் சதி ஏதுமில்லை இவ்வாறு இருக்க ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே, நியூஸிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல அவுஸ்திரேலியா, கனடா, சிம்பாப்வே நாடுகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதைப் பற்றி யாருமே பேசவில்லையே ஏன்? பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாத விவகாரத்தை மட்டும் ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.

பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்யாமல் விட்டதில் சதி ஏதுமில்லை. ஏலத்தில் கலந்துகொண்ட 67 வீரர்களில் பாகிஸ்தானின் 11 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களை ஏலத்தில் யாருமே எடுக்க முன்வரவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தலையீடு உள்ளது என்று பாகிஸ்தான் அரசு குறை கூறி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்த அவமானத்துக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் கூறி வருவது துரதிருஷ்டவசமானது என தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாததில் எந்தச் சதியுமில்லை என்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டியும் தெரிவித்துள்ளார். : இந்த விவகாரத்தில் நான் காயமடைந்துள்ளேன். என்னைத் திட்டி சில இ-மெயில்களும் வந்துள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சில சிறந்த வீரர்களை ஏலத்தில் இழந்துள்ளோம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காதது குறித்து மட்டுமே சிலர் பேசி வருகிறார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களை தேர்வு செய்யாதது குறித்து யாருமே பேசவில்லை என தெரிவித்தார்

http://beta.virakesari.lk/article.aspx?id=18327&channel=Sports

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

shahid afridi இல்லாமல் ஒரு ஜபிஎல்லா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.