Jump to content

தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்.... : தேசபக்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வியூகம் இதழில் வந்த தேசியவாதம் தொடர்பான நீண்ட கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

குறிப்பு: கட்டுரை இணையத்தில் காணப்படவில்லை.

தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்....

தேசபக்தன்.

இந்த குறிப்பானது நாவலன் அவர்கள் ~இனியொரு| என்ற இணையத்தளத்தில் எழுதிய "ஈழத் தமிழ் பேசும் மக்கள் தனித்தேசிய இனம்?" என்ற கட்டுரை குறித்தே எழுதப்படுகிறது. இந்த கட்டுரையானது உலகமயமாதல, தேசங்களின் தோற்றம், தேசங்களை வரையறை செய்வது தொடர்பான பிரச்சனைகள், ஈழத் தமிழர் தொடர்பான சிக்கல்கள் ...... இப்படி பல விடயங்களைப் பேசிச் செல்கிறது. எனது அபிப்பிராயத்தில இந்த கருத்தாக்கங்கள் எல்லாம் முறையாக, கோர்க்கப்பட்டு ஒரு முழுமையான வாதத்தை முன்வைக்கத் தவறிவிட்டதாகவே நான் உணர்கிறேன். எனினும் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒரு விவாதப் பொருளை முன்வைப்பதனால் இந்த கட்டுரை தொடர்பாக எனது கருத்துக்களை சுருக்கமாக முன்வைப்பது அவசியம் எனக் கருதுகிறேன். இந்த குறிப்பானது மேற்குறித்த கட்டுரைக்கு பதிலளிப்பதையே முதன்மையான நோக்கமாக கொண்டிருந்த போதிலும், சமகாலத்தில் உலகமயமாதல் பற்றி முன்வைக்கப்படும் இன்னும் சில கருத்துக்கள் தொடர்பாகவும் தொட்டுச் செல்வது தவிர்க்க முடியாததாக அமைந்துவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவாதம் பற்றிப் பேசப்படும் போது நாவலன் அவர்கள், முதலாளித்துவத்தின் தோற்றத்தோடு முன்னுக்கு வந்த தேசியவாதம் பற்றி மட்டுமே பேசுகிறார். முதலாளித்துவத்தின் தோற்றமானது தேசியவாதத்தை முன்னுக்கு கொண்டுவந்ததோடு, தேச – அரசை முதலாளித்துவ நவீன சமூகத்தின் நியமமாக ஆக்கியது என்ற வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இருப்பினும் கூட, தேசியவாதத்தை இந்த ஒரு போக்குடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்வது, அதனை எல்லாவிதமான தேசிய வெளிப்பாடுகளையும் அளப்பதற்கான கருவியாக கொள்வது பிரச்சனைக்குரிய ஒரு விடயமாகிறது. ஏனெனில், நவீன சமூகத்தில் தேசியவாதமானது முதலாளித்துவத்தின் தோற்றம் தவிர்ந்த இன்னும் பல குறிப்பான சூழ்நிலைகளில் மிகவும் அதிகளவில் வெளிப்பட்டுள்ளது. நாம் வரலாற்றுரீதியாக பார்த்தால், தேசியவாதத்தின் தோற்றத்தை பின்வரும் முக்கியமாக ஐந்து நிகழ்வுப் போக்குகளுடன் இணைத்து அடையாளம் காணலாம்.

1. முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் கூடிய தேசியவாதம்.

2. கொலனித்துவ நாடுகளில் தோன்றிய, குடியேறியவர்களால முன்வைக்கப்பட்ட'கிரியோல்' தேசியவாதம் (Creole Nationalism).

3. குடியேற்ற நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டங்களுடன் கூடிய தேசியவாதம்.

4. வளர்ந்த தேச அரசுகளினுள் வாழ்ந்த புறக்கணிக்கப்பட்ட மக்களால், அககொலனித்துவ முறைமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தேசியவாதம்.

5. கொலனித்துவத்திற்கு பின்பான காலங்களில் விடுதலை அடைந்த நாடுகளில் ஒடுக்கப்பட்ட தேசங்கள் முன்வைக்கும் தேசியவாதம்.

இப்படியாக குறைந்த பட்சம் ஐந்து விதமான தேசியவாதங்களை வரலாற்றில் நாம் காண முடிகிறது. இப்படியாக வேறுபட்ட வரலாற்று நிலைமைகளின் கீழ் உருவான தேசியவாதத்தின் பண்புகளை, குறிப்பிட்ட ஒரு வரலாற்றுச் சூழலில் எழுந்த - முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் உருவான - தேசியவாதத்தின் அளவுகோல்களை பயன்படுத்தி மதிப்பிட முற்படும் போது பிரச்சனைகள் உருவாகின்றன.

தேசங்களை எவ்வாறு இனம் காண்பது என்ற கேள்வியுடன் தொடங்கும் நாவலன், ஸடாலினின் தேசம் பற்றிய வரையறையை தொடங்கு புள்ளியாக முன்வைக்கிறார். 'ஸ்தூலமான நிலைமைகளில் ஸ்தூலமான ஆய்வு' என்பதே மார்க்சியத்தின் இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையாகும். எனவே தேசம் பற்றிய வரையறைகளையும் சூத்திரங்களில் இருந்து தொடங்காமல் அவற்றின் வாழ்நிலையில் இருந்து, அவற்றின் அரசியல் போராட்டங்களில் இருந்து தொடங்குவதே சரியான ஆய்வாக இருக்க முடியும். சூத்திரங்கள் யாவும் செய்யக் கூடியதெல்லாம், அதுவரை காலமும் வரலாறு அளித்த சான்றுகளை பொதுமைப்படுத்தி, சூட்சுமப்படுத்துவது மட்டும்தான். வரலாறு புதிது புதிதாக உண்மைகளை எம்முன் வைக்கும் போதெல்லாம் சூத்திரத்தின் துணை கொண்டு அவற்றை அளந்து பார்த்து நிராகரிக்காமல், இந்த சூத்திரங்களையே நாம் கேள்விக்குள்ளாக்குவது அவசியமானதாகிறது.

- தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்சியமும் தேசியவாதமும்

மார்க்சியத்தைப் பொறுத்தவரையிலும் தேசிய பிரச்சனை தொடர்பாக திட்டவட்டமான சில கோட்பாட்டு வகைப்பட்ட நிலைப்பாடுகளை சரியாக வகுக்க முனைந்தவர் லெனின் தான் என்றாலும் அவரும் கூட எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொருத்தமான ஒரு வரையறையை வகுக்க முனையவில்லை. இப்படியாக எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும் பொருத்தமான ஒரு சூத்திரத்தை பற்றி சிந்திப்பதே ஒரு மார்க்சிய அணுகுமுறையாகாது அல்லவா? அன்று ரஷ்ய போல்ஷேவிக்குகள் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியை எதிர்கொண்ட நிலைமைகளின் கீழ் ரஷ்ய பேரரசினுள் இருந்த ஒடுக்கப்பட்ட தேசங்கள் தொடர்பாக நிலைப்பாட்டை மேற்கொள்வதே அவரது நோக்கமாக இருந்தது. அந்த முயற்சியானது தவிர்க்க முடியாத வகையில் தேசிய பிரச்சனை தொடர்பான ஒரு கோட்பாட்டை முன்வைப்பதை நிர்ப்பந்தித்தாலும் கூட, அவர் தேசியவாதம் தொடர்பாக ஒரு முழுமையான கோட்பாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயற்படவில்லை. அவர்களது உடனடி இலக்காக இருந்தது ஒரு

புரட்சியை நோக்கி முன்னேறும் கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது, தேசிய பிரச்சனை குறித்து எப்படிப்பட்ட நிலைப்பாட்டை முன்வைப்பது பற்றிய அக்கறையே. அதிலும் ஒடுக்கப்பட்ட தேசங்களது நம்பிக்கையை பெறும் நோக்கத்துடனேயே இந்த அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டன. இந்த வகையில் தேசங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய லெனினது நிலைப்பாடு மிகவும் முக்கியமானது. இருப்பினும் கூட, இந்த நிலைப்பாட்டை அப்படியே, ஒரு புரட்சிக்கு தயாரற்ற சூழ்நிலையில், ஒடுக்கும் தேசத்தின் இடதுசாரிக் கட்சிகளே தேசியவாதத்தின் கருவிகளாக செயற்படும் நிலைமைக்கு யாந்திரீகமாக பொருத்திப் பார்ப்பது என்பது மிகவும் பாதகமான நிலைமைகளை உருவாக்கிவிடும். இது ஒடுக்கும் தேசத்தின் பாட்டாளி வர்க்கத்திற்கோ, ஒடுக்கப்படும் தேசத்திற்கோ எந்த விதமான நன்மைகளையும் தந்துவிடாது.

ஸ்டாலினின் வரையறையின் பற்றாக்குறைகள்

மார்க்சியத்தின் வரலாற்றில் ஸ்டாலின் மிகவும் ஒரு சர்ச்சைக்குரிய தலைவராவார். அவரது கோட்பாட்டு நிலைப்பாடுகள் அத்தனை ஆரோக்கியமானவையாக இருந்ததில்லை. அதிலும் இந்த தேசம் பற்றிய ஸ்டாலினது வரையறையை லெனின் எந்த இடத்திலும் வெளிப்படையாக ஆதரித்து எழுதியவரும் அல்லர். இப்படிப்பட்ட நிலைமையில் ஸ்டாலினின் வரையறையில் இருந்து தொடங்குவதே ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு துணையாக இருக்காது என்பதே எனது அபிப்பிராயமாகும். அத்தோடு ஸ்டாலினது வரையறையானது மிகவும் பற்றாக்குறையானது என்று பல மார்க்சியவாதிகள் தொடர்ந்தும் விமர்சித்து வந்துள்ளார்கள். ஸ்டாலினின் வரையறை செய்வதெல்லாம் முதலாளித்துவத்தின் தோற்றத்தின் போது, தேச அரசுகள் உருவாகிய காலகட்டத்தில் நிலவிய நிலைமைகளை பொதுமைப்படுத்துவது மட்டும்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் இது செய்யக் கூடியதெல்லாம், அந்த நிலைமைகள் பற்றிய விபரணங்களை தரக்கூடியது மட்டும்தான். இப்படிப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட பாத்திரத்தை மட்டும் ஆற்றக் கூடிய ஒரு சூத்திரத்தை, வரலாற்றில் மிகவும் செழுமையான ஒரு நிகழ்வுப் போக்கை புரிந்து கொள்ள பயன்படுத்த முனைவது மிகவும் பற்றாக்குறை உடைய தன்மையையே காட்டுகிறது.

தேசம் என்பது ஸ்டாலின் குறிப்பிட்ட பொதுவான மொழி, பாரம்பரிய பிரதேசம், வரலாற்று உணர்வு, பொதுவான பொருளாதாரம், மற்றும் காலச்சார உணர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மட்டுமல்ல, இன்னும் பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டும் உருவாகலாம் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அத்தோடு மேலே குறிப்பிட்ட அம்சங்களில் சில இல்லாத சமூகங்கள் கூட தேசங்களாக உருப்பெற்று தேச – அரசுகளை நிறுவியதும் வரலாற்றில் கண்கூடு. மதம், பொதுவான ஒடுக்குமுறை, செய்திப் பத்திரிகை, குடிசன மதிப்பீடு, "தேசப்படம்" (Map) போன்ற இன்னும் பல அம்சங்கள் ஒரு தேசத்தை உருவாக்குவதில் பங்களிக்கலாம். இதில் எத்தனை அம்சங்கள் இருந்தாலும் ஒரு மக்கள் கூட்டமானது தன்னளவில் ஒரு தேசமாக உருவாகிவிடமாட்டாது. இவை எல்லாவற்றையும் விட அவற்றின் பிரக்ஞை மிகவும் முக்கியமானது. அதாவது, இவை ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டமானது தன்னை ஒரு தேசமாக உணர்வது இங்கு மிகவும் முக்கியமான அம்சமாகும். இதனை குறிக்கும் விதத்தில்தான் பிரெஞ்சு தத்துவவியலாளரான 'ஏர்னெஸ்ட் ரெனன்' (Ernest Renan) என்பவர், தேசம் என்பது 'அன்றாட மக்கள் கருத்து' (Daily Plebiscite) என்று குறிப்பிடுகிறார். இப்படியாக ஒரு மக்கள் கூட்டம் தன்னை ஒரு தனியான தேசமாக உணர்வதில் அதன் அரசியல் மிகவும் முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. இதனை கருத்திற் கொண்டுதான் தேசம் என்பது ஒரு "வரலாற்று விபத்து" என்று கூறுவார்கள். இப்படி கூறுவதன் அர்த்தம் எந்தவொரு தேசத்தின் உருவாக்கத்திலும் அதன் தலைவர்கள் பிரக்ஞை பூர்வமாக ஆற்றிய பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுவதல்ல. மாறாக மொழியின் உருவாக்கம், அதன் சொற்களஞ்சியத்தை (Glossary) தொகுத்தவர்களது பாத்திரம், அரசியல் கட்சிகளது செயற்பாடுகள் போன்றவை எந்தவொரு தேசத்தின் தோற்றத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்னும் சொல்வதானால் இப்படிப்பட்டவர்களது முயற்சிகள் இல்லாமல் ஒரு தேசம் உருப்பெற்றுவிட முடியாது. ஆனால் இந்த "வரலாற்று விபத்து" என்ற வாசகமானது இந்த முயற்சிகளை விட இன்னொரு அம்சத்திற்கு தேசங்களின் உருவாக்கத்தில் உள்ள பாத்திரத்தை வலியுறுத்துகிறது. அதுதான் வரலாறாகும். அதாவது, எந்தெந்த சமூகங்கள், எப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ், தேசமாக உருப்பெறும் என்பதை முன்னரே கணித்துக் கூறுவதன் சாத்தியமற்ற தன்மையை தான் இது சுட்டிக் காட்டுகிறது. அதாவது பல்வேறு சமூகங்களின் புத்திஜீவிகள், அதன் மொழி, சொற்சொற்களஞ்சியம், அரசியல் கட்சிகள் போன்றவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய போதிலும், அந்தந்த சமூகங்கள் எல்லாமே தனியான தேசங்களாக உருப்பெற்று விடுவதில்லை. மாறாக குறிப்பான சில சமூகங்கள் மட்டும், குறிப்பான நிலைமைகளின் கீழ் இந்த அம்சங்களின் பலவற்றின் கூட்டான செயற்பாட்டின் விளைவாக தேசங்களாக உருப்பெறுகின்றன. இப்படியாக உருவாவதில் குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் பிரக்ஞை மிகவும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. எந்தெந்த சமூகங்கள் தம்மை தனியான தேசங்களாக இனம் கண்டு, தனியான அரசை நோக்கி தனது அக்கறையை குவிக்கிறதோ, அந்தந்த சமூகங்கள் மட்டுமே தேசங்களாக உருப்பெருகின்றன. அந்த அர்த்தத்திலேதான் பெனடிக்ட் அன்டர்சண் அவர்கள் தேசங்களை கற்பிதம் செய்துகொண்ட சமூகங்கள் (Imagined Communities) என்பார். இங்கு கூறப்படும் கற்பிதம் என்பது ஒரு ஐதீகம் என்ற அர்த்தத்தில் அல்லாமல், அந்த தேசிய பிரக்ஞையின் பாத்திரம் குறித்துத்தான் கூறப்படுகிறது என்பதை குறித்துக் கொள்வது பயனுள்ளதாக அமையும்.

- தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளித்துவத்தின் கீழ் சந்தையும், உற்பத்தியும்

முதலாளித்துவத்தின் கீழ் தேசங்கள் உருவாவதில் சந்தைக்கு உரிய முக்கியத்துவத்தை நாவலன் வலியுறுத்துகிறார். அதிலும் குறிப்பிட்ட சமூகங்கள் தேசங்கள்தானா என்பதை கண்டறிவதற்கு அவை முதலாளித்துவ சந்தையை கொண்டுள்ளனவா என்ற அளவுகோலை பாவிக்க முனைகிறார். இது மிகவும் பற்றாக்குறையுள்ள பார்வை என்றே கருதுகிறேன். முதலாளித்துவத்தின் கீழ் ஒரு பொதுவான சந்தையின் முக்கியத்துவமானது, ஒரு பொதுவான அரசை, அதன் கீழுள்ள பொதுவான பிரதேசத்தை வேண்டி நின்றாலும் கூட, இந்த சந்தையை விட முக்கியமாக, முதலாளித்துவத்தின் உற்பத்தி நிலைமைகளே இந்த தேசத்திற்கான பொதுவான மொழியை வேண்டி, உருவாக்கியும் கொள்கிறது என்பதை 'ஏனெர்ஸ்ட் கெல்னர்' (Ernest Gelner) என்பவர் வலியுறுத்துகிறார். முதலாளித்துவத்திற்கு முந்தி நிலவும் சிறு பண்ட உற்பத்தியானது, தனிப்பட்ட அளவிலும், உள்ளூர் மட்டத்திலும் நடைபெற்ற உற்பத்தி மற்றும் நுகர்வைக் குறிக்கிறது. ஆனால் முதலாளித்துவத்தின் வரவானது, இந்த உள்ளூர் நிலைமைகளைக் கடந்து உற்பத்தி சாதனங்களை பொதுமைப் படுத்துகிறது. இதில் உழைப்பதற்கு பலவகைப்பட்ட பின்னணிகளிலும் இருந்து வரும் பாட்டாளிகளை ஒன்றாக குவிக்கிறது. இவர்கள் பல்வேறு வட்டாரங்களில் இருந்து வந்தவர்கள். பலதரப்பட்ட பேச்சு மொழிகளை கொண்டவர்கள். இப்படிப் பட்டவர்கள் ஒன்றாக உழைப்பில் ஈடுபடுவதற்கு முதலில் அவர்களுக்கிடையில ஒரு பொதுவான மொழியின் அவசியம் உருவாகிறது. அத்தோடு இப்படிப்பட்ட பலதரப்பட்ட பின்னணிகளில் இருந்தும் வந்துள்ள தொழிலாளர்களுடன் முறையான ஒரு கருத்துப் பரிமாற்றத்திறகு ஒரு முறைப்படுத்தப்பட் மொழி (Context-free Language) மூலமாக அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியமானதாகிறது. இது பொதுக் கல்வி முறைகளுக்கு வழி வகுக்கிறது. இதனுடன் இணைந்தே பொதுவான மொழியை உருவாக்குவதற்கான முயற்சிகளும், சொற்களஞ்சியங்களின் தோற்றம் போன்றவையும் நடந்தேறுகின்றன. அத்தோடு இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையானது காலம் மற்றும் இடம் பற்றிய சிந்தனைகளிலும் கூட மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதன் பின்புதான் வரலாறு மற்றும் பிரதேசம் பற்றிய சிந்தனைகளின் சாத்தியப்பாடு தோற்றுவதாக 'நிக்கொஸ் பௌலன்சாஸ்' (Nicos Poulantzas) என்ற மார்க்சிய அறிஞர் குறிப்பிடுகிறார். இதனால் தேசங்களின் உருவாக்கத்தை முதலாளித்துவ சந்தை பற்றிய பிரச்சனையாக குறுக்குவது சரியான வாதமாக தோற்றவில்லை. அதன் உற்பத்தி நிலைமைகள் பற்றியும் கருத்திற் கடுத்தே நாம் பேசியாக வேண்டியுள்ளது. ஆகவே இங்கு சந்தை என்பதைவிட மொழி, பொதுக்கல்வி, தேசிய பிரக்ஞை, வரலாறு மற்றும் பிரதேசம் பற்றிய சிந்தனைகள் போன்றவையே தேசியத்தின் அடிப்படையான ஆரம்ப கூறுகளாக இருப்பதை நாம் காண்கிறோம். இவை சந்தையில் இருந்தல்லாமல், முதலாளித்துவ உற்பத்தி நிலைமைகளில் இருந்தே உருவாகின்றன. வரலாற்றில் மிகவும் வேறுபட்ட கால கட்டங்களில், வேறு பல காரணங்களினால் இந்த - தேசத்தின் தோற்றத்திற்கு மிகவும் அடிப்படையான- அம்சங்கள் தோற்றுவிக்கப்படுமானால், முதலாளித்துவ சந்தை இல்லாமல் இருப்பினும் கூட நாம் பலமான தேசியவாத இயக்கங்களை காணமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலனித்துவ நாடுகளும் தேச உருவாக்கமும்

மார்க்சியமானது வாழ்க்கை நிலைமைகளே சிந்தனைமுறைகளின் தோற்றத்திற்கு வழிவகுப்பதாக குறிப்பிடுகிறது. பொருளாதாரத்தை 'அடித்தளமாக' மார்க்ஸ் அவர்கள் உருவகப்படுத்தியிருந்தாலும், 'மேற்கட்டுமானத்தின்' அம்சங்களான சித்தாந்தம், அரசியல், அழகியல், கோட்பாடு போன்றவற்றின் பாத்திரத்தை நிராகரித்துவிடவில்லை. இந்த இரண்டு வகையான அம்சங்களினதும் பரஸ்பர செயற்பாட்டின் விளைவாக, இந்த இரண்டு கூறுகளதும் இயங்கியல் உறவின் விளைவாக சமூகத்தை புரிந்து கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். மாறாக பொருளாதாரத்தை, அதிலும் சந்தையை மையப் பிரச்சனையாக்குவது பொருளாதாரவாதமே அன்றி பொருள்முதல்வாதமாகாது. அதிலும் கொலனித்தவ ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளைப் பொறுத்த வரையில், ஆதிக்க நாடுகளானவை, குடியேற்ற நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை வேண்டுமென்றே கட்டுப்படுத்தி வைத்திருந்த நிலைமைகளின் கீழ், முதலாளித்துவத்தின் வளர்ச்சி மற்றும் அதன் சந்தைக்கான தேவை போன்றவற்றில் இருந்து, அந்தந்த நாடுகளில் எழுந்த மிகவும் பலமான தேசியவாத இயக்கங்களை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இங்கு நிலவிய பொதுவான ஒடுக்குமுறையானது - அதாவது பொதுவான துன்பங்கள் மற்றும் வரலாற்று நிலைமைகள் - பலதரப்பட்ட மக்கள் கூட்டங்களையும் இணைத்து தேசங்களாக உணரச் செய்தன. இப்படிப்பட்ட நிலைமைகளில் சந்தை பற்றிய பிரச்சனையானது, கொலனித்துவத்திற்கு எதிரான வீறு கொண்ட தேசிய விடுதலைப் போராட்டங்களை ஒருபோதும் விளக்கமாட்டாது. இதனை புரிந்து கொள்வதற்கு வேறு கருத்தாக்கங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறே நான் மேலே கூறிய ஏனைய தேசிய இயக்கங்களையும் கூட இவற்றைவிட வேறுபட்ட கருத்தாக்கங்களின் ஊடாகவே புரிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் சந்தை பற்றிய கேள்விகளுடன் தேசங்களை நிர்ணயிக்க முனைவது முற்றிலும் தவறான நிலைப்பாடுகளுக்கே இட்டுச் செல்கிறது.

கொலனித்துவ நாடுகளில் ஆதிக்க அரசுகள் தமது ஆட்சியை ஸ்திரப்படுத்தும் நோக்கத்துடன் ஆதிக்க நாட்டவர்கள் தமது மதத்தைப் பரப்ப முனைகின்றனர். இதன் நோக்கில் பாடசாலைகளை உருவாக்கினர். அந்தந்த மொழி பேசும் மக்கள் மத்தியில் தமது மதத்தை கொண்டு செல்லும் நோக்கில் அந்தந்த மொழி பேசுபவர்களை மத போதகர்களாகவும் ஆக்கி அந்தந்த மொழிகளில் பைபிளை அச்சிடவும் செய்தனர். அத்தோடு உள்ளூரில் நிர்வாக பணிகளை கவனிப்பதற்காக ஒரு பிரிவினரை உருவாக்கும் நோக்கத்தில் பொதுக் கல்வியையும் பரவலாக வழங்கினர். இங்கு முதலாளித்துவத்தின் தோற்றம் நடைபெற்ற காலகட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் இந்த பொதுக் கல்வி, மற்றும் உள்நாட்டு மொழிகளின் மறுமலர்ச்சி போன்றவை நிகழ்ந்தேறுகின்றன. அத்தோடு நிர்வாக நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகள், போக்குவரத்து பாதைகள், மற்றும் செய்திப் பத்திரிகையின் வரவு போன்றவை தம்பங்கிற்கு தேசியவாதத்தை உருவாக்குவதில் முக்கிய கூறுகளாக விளங்குகின்றன. இப்படியாக ஒரு தேசத்தை உருவாக்கும் முக்கிய கூறுகள், முதலாளித்துவ சந்தை பற்றிய பிரச்சனையுடன் நேரடியா தொடர்பு அற்ற விதத்திலும் கூட உருவாகின்றன. அப்படியாக உருவான பின்பு தேசிய இயக்கங்கள் தலையெடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தேசிய இயக்கங்கள் தோன்றி அவற்றில் மக்கள் அலையலையாக கலந்து கொள்ளும் நிலைமையும் உருவாகிவிட்ட பின்பு அந்த தேசமானது யாரது அங்கிகாரத்திற்காகவும் காத்துக் கிடப்பதில்லை. இப்படியாக தமது சுதந்திர அரசை அமைப்பதற்காக போராடும் தேசங்களை வேறு எந்த குறுகிய சூத்திரங்களும் கட்டிப் போடவும் முடிவதில்லை.

கொலனித்துவத்தின் பின்பு அந்தந்த தேச அரசை கையில் எடுத்த ஆதிக்க சக்திகள் பல இன மக்களதும் வேறுபட்ட தேவைகளை கருத்திற்கெடுக்க தவறி மிகவும் குறுகிய அர்த்தத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முனைந்து போது, முன்பு ஒரே தேசமாக இணைந்து நின்ற மக்கட் கூட்டங்கள் இப்போது தனித்தனியான தேசங்களாக உருவெடுக்க காரணமாக ஆகியும் இருக்கின்றன. அத்தோடு கொலனித்துவத்திற்கு பிந்திய காலங்களில் இந்த நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியானது நவகொலனித்துவ முறைகளினால் மீண்டும் பின்தள்ளப்படுகிறது. அப்போது அரசாங்க சேவைத்துறையே முக்கிய ஒரு வேலைவாய்ப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற படித்த தரப்பினரிடையே இருந்து வருகிறது. இதற்கான போட்டியில் அரசாங்கத்தின் மொழிக் கொள்கை, கல்வி வாய்ப்புகள் போன்றவை ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பாரபட்சங்கள் குறிப்பிட்ட இனத்தவரின் வாழ்வாதாரங்களை பறிக்க முனைவதாக இந்த இனத்தவர் உணர்கின்றனர். இது அவர்கள் மத்தியில் தேசியவாத உணர்வுகளுக்கு வித்திடுகிறது. இங்கே முதலாளித்துவ சந்தை என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு இந்தவிதமான சிக்கலாக நிகழ்வுப் போக்குகளை விளக்கிவிட முடியாது. இந்த நிலையில் முதலாளித்துவ சந்தை இல்லை என்பதை காரணமாக காட்டி இந்த போராட்டங்களை தேசியவாத போராட்டங்கள் இல்லை என்று நிராகரிக்கும் போது நாம் வாழ்நிலையில் இருந்து அரசியலை புரிந்து கொள்வதற்குப் பதிலாக சூத்திரங்களில் இருந்து வாழ்நிலையை விளக்கும் தவறைத்தானே செய்கிறோம். இது கருத்துமுதல்வாதமே அன்றி பொருள்முதல்வாதம் அல்ல.

- தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தேசியம் என்றால் என்ன...தேசியம் என்பதும் தேசம் என்பதும் ஒரே அர்த்தத்தை கொண்டுள்ளதா...தேசியம் என்றால் கற்பிதம் என இதே நாவலன் ஒரு இனையத்தில் எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.

தயவு செய்து புரியும் தமிழில் விளங்கப்படுத்தவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தேசியம் என்றால் என்ன...தேசியம் என்பதும் தேசம் என்பதும் ஒரே அர்த்தத்தை கொண்டுள்ளதா...தேசியம் என்றால் கற்பிதம் என இதே நாவலன் ஒரு இனையத்தில் எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.

தயவு செய்து புரியும் தமிழில் விளங்கப்படுத்தவும் நன்றி.

எனது சிற்றறிவின்படி:

தேசம் என்பது புவியியல் சார்ந்தது. உ+ம்: தமிழீழ தேசம்.

தேசியம் என்பது உணர்வு சார்ந்தது. உ+ம்: ஈழத்தமிழர் என்று பெருமையாக உணர்வதும், பிற ஈழத்தமிழர்களை நம்மில் ஒருவராக பார்ப்பதும் தேசியம் சார்ந்தது. இந்தியத் தமிழர், மலையகத் தமிழரை நம்மில் ஒருவராக பார்க்கமுடியாவிட்டால், அவர்கள் தனித்துவமான தேசியம் என்று கொள்ளலாம்.

பி.கு. இக்கட்டுரையாசிரியரும் நாவலனும் ஒருவரல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் நானும் அப்படித் தான் நினைத்தேன் ஆனால் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது அது தான் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகமயமாதல் பற்றிய பிரச்சனைகள்

அடுத்ததாக உலகமயமாதல் பற்றிய பிரச்சனைக்கு வருவோம். ஒரு சமூகத்தின் சிக்கலான பிரச்சனைகளை ஒரு பெரிய, உலகளாவிய கோட்பாட்டின் மூலம் விளக்குவதில் எப்போதும் பிரச்சனைகள் எழவே செய்கின்றன. மாவோவின் மூன்று உலக கோட்பாட்டை இதற்கு சிறந்த உதாரணமாக காட்டலாம். மாவோ உலகத்தை மூன்று உலகங்களாக பிரித்து முதலாம் உலக நாடுகளுக்கு எதிராக மூன்றாம் உலக நாடுகளை இரண்டாம் உலக நாடுகளுடன் இணைந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்ட போது, அவர் இந்த மூன்றாம் உலக நாடுகளுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளையும், அந்த நாடுகளில் உள்ள வர்க்க போராட்டங்களையும் நிராகரிப்பதாக ஒரு தீவிரமான, நியாயமான விமர்சனத்தை எதிர்கொள்ள நேரிட்டது. அதே பிரச்சனைதான் இந்த உலகமயமாதல் என்ற கோட்பாட்டின் மூலமாக தேசிய பிரச்சனையை விளக்குவதிலும் காணப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

உலகமயமாதல் பற்றிய விளக்கங்களை முன்வைப்பவர்கள் முன்வைக்கும் வாதங்களில் முக்கியமான ஒன்று இந்த உலகமயமாதல் தேசிய எல்லைகளை தகர்க்கிறது என்பதாகும். அதாவது, பல்தேசிய நிறுவனங்கள் தேச–அரசுகளை விட பெரியனவாகி, மிகவும் பலம் கொண்ட அமைப்புக்களாக மாறி விடுகின்றன: அதனால் இந்த தேச அரசுகள் என்பவை இவற்றுடன் ஒப்பிடும் போது ஆற்றல் அற்றவை ஆகிவிட்டன: அத்தோடு இந்த பல்தேசிய நிறுவனங்களது மூலதனமானது தேசிய எல்லைகள் எல்லாவற்றையும் கடந்த உலகெங்கும் தனது பாய்ச்சலை துரிதப்படுத்துவதானது சிறிய நாடுகளில் தேசிய எல்லைகளையும் தகர்த்து விடுகின்றன: இதனால் இதற்குமேல் தேசியவாதம், தேச–அரசு போன்றவை அர்த்தமற்றுப் போகின்றன: என்பதே இதன் சாராம்சமாகும். மேலெழுந்தவாரியாக பார்க்கையில் இந்த வாதமானது பலமானதாகத்தான் தோற்றமளிக்கிறது. ஆனால் இந்த வாதத்தின் பலவீனம் எங்கு இருக்கிறது என்றால், இந்த வாதமானது, இந்த மைய நாடுகள் இன்னமும் கடவுச் சீட்டுக்களை ஏன் இல்லாமற் செய்யவில்லை என்பதற்கு பதில் அளிக்க முடியாமல் இருப்பதில்தான். அதாவது உலகளாவிய அளவில், அதிலும் குறிப்பாக விளிம்பு நாடுகளில் தேசியவாதத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த மைய நாடுகளில் குடிவரவுச் சட்டங்கள் இன்னமும் இறுக்கமாக ஆக்குகின்றன: இந்த நாடுகளில் புதிய தேசியவாத கட்சிகள் உருவெடுக்கின்றன: அலல் து இருக்கும் கட்சிகள் தேசியவாதக் கூறுகளை முன்வைக்கத் தலைப்படுகின்றன. இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

இது பற்றி பரிசீலிக்க முதலில் நாம் இந்த உலகமயமாதலின் அடிப்படை என்ன என்பதை கவனிக்க வேண்டும். முதலாளித்துவ நாடுகள் அவ்வப்போது பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்திப்பது தவிர்க்க முடியாததாகிறது. குறிப்பிட்ட வித்திலிருக்கும் உற்பத்தி முறைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அந்தந்த சமூகங்களில் ஒருவித நிரம்பல் தன்மையை அடைந்து விடுகின்றன. உதாரணமாக நீண்ட கால துய்ப்புப் பொருட்களை தமது பிரதான உற்பத்தியாக கொண்டுள்ள சமூகங்கள் தமது உற்பத்தியை எல்லையின்றி விரிவாக்கம் செய்து கொண்டு போக முடியாத நிலைமைகள் அவ்வப்போது ஏற்படுகின்றன். உதாரணமாக கார் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில் ஒரு வீட்டுக் இரண்டு கார்கள் வந்த பின்பு அதற்கு மேலும் சந்தைகளை விஸ்தரிப்பது என்பது இயலாத காரியமாகிறது. இப்படிப்பட்ட நிலைமைகளில் ஏதாவது புதிய உற்பத்தி முறைகள் போன்றவை கைகொடுத்தால ; இந்த நெருக்கடியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திப் போட முடிகிறது. உதாரணத்திற்கு கணணிகளின் வருகையானது 1980 களில் தற்காலிகமாக இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியை தள்ளிப் போட உதவியது. ஆனால் இப்போது அந்த நெருக்கடி மீண்டும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் மூலதனமானது தனது இலாபவீதத்தை பெருக்கிக் கொள்வதற்கு அல்லது அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்வதற்கு புதிய சந்தைகளை அல்லது புதிய உழைப்பின் மூலாதாரங்களை தேடி நகர்கிறது. இதுவே இந்த உலகமயமாதல் பற்றிய பிரச்சனையின் மூல ஊற்றாகவும் இருக்கிறது.

1990 களில் ஏற்பட்ட சோவியத் முகாமின் தகர்வு மற்றும் புதிய தாராண்மைவாதத்தின் எழுச்சி இவற்றுடன் கூடிய உலக வங்கியின் மறுசீரமைப்பு பற்றிய மூன்றாம் உலக நாடுகள் மீதான நெருக்குதல்கள் போன்றவை இந்த விளிம்பு நாடுகளை நோக்கி மைய நாடுகளின் மூலதனம் நகர்விற்கான முன்னெப்போதும் இராத வாய்ப்பான சூழலக் ளை தோற்றுவித்தது. இதனை அடுத்து நிகழ்ந்த இந்த மாபெரும் மூலதன பாய்ச்சலத் hன் உலகமயமாதல் என்று பெயரிடப்பட்டது. இந்த மூலதன நகர்வின் தார்ப்பரியம் என்ன? மைய நாடுகளில் தொழிலாளர் வர்க்கம் தனது பலவருட போராட்டங்களின் ஊடாக முதலாளித்துவத்துடனான ஒருவிதமான சமநிலையை தனக்கு சாதகமாக உருவாக்கிக் கொண்டுள்ளது. இதனால் இங்குள்ள பாட்டாளி வர்க்கமானது ஒப்பீட்டளவில் ஒரு சாதகமான நிலைமையில் இருக்கிறது. ஒப்பீட்டளவில் உயர்ந்த வாழ்க்கைத்தரம், ஓரளவு தரமான வேலை நிலைமைகள், சமூக காப்புறுதிகள் போன்றவற்றை இவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதால் மூலதனமானது இந்த நாடுகளில் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் போது பெறும் உபரி மதிப்பின் வீதமானது ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு செல்கிறது. அத்துடன் அதன் நீண்ட கால துய்ப்பு பண்டங்களின் சந்தைகளும் ஒருவித் நிரம்பல் தன்மையை அடையும் போது இந்த இலாப மட்டத்தை தொடர்ந்தும் பேணிக்கொள்வது இயலாத காரியமாகிறது. இதனால் இந்த மூலதனமானது தனது சுரண்டலின் மீது இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்களை திணிக்காத உழைப்புச் சந்தையை நோக்கி தனது கவனத்தை திருப்புகிறது. அங்குதான் இந்த குறைவிருத்தி நாடுகள் அவற்றின் இலக்காக மாறுகின்றன. முதலில் மெக்சிக்கோ மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளை இலக்காக கொண்டன: பின்பு கிழக்கைரோப்பிய நாடுகள் இவற்றின் இலக்காகின: இப்போது இந்தியாவும் சீனாவும் இவற்றின் முக்கிய இலக்குகளாக மாறியுள்ளன.

இந்த நாடுகள் ஏன் கவர்ச்சி மிக்கவையாக இந்த மூலதனத்திற்கு தோற்றம் அளிக்கின்றன? முதலாளித்துவ உற்பத்தியின் போது முதலாளிகள் அபகரித்துக் கொள்ளும் உபரி மதிப்பே இலாபமாக முதலாளிகளிடம் திரள்கிறது. உபரி மதிப்பென்பது குறிப்பிட்ட உழைப்புச் சக்தியினால் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பிற்கும், அதனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கும் இடைப்பட்ட வேறுபாடாகும். உழைப்புச் சக்தியின் மதிப்பானது ஒரு குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் அந்த உழைப்புச் சக்தியை உருவாக்க செலவிடப்பட்ட மதிப்பினால் - அதாவது ஒரு தொழிலாளியின் வாழ்க்கைச் செலவினால் - நிர்ணயம் பெறுகிறது. ஒரு வசதிமிக்க மையநாட்டில் தொழிலாளர்களது வாழ்க்கைத்தரம் கூட குறிப்பிட்ட தரத்தை எட்டிவிட்ட நிலையில் இங்கு பெறப்படும் உழைப்புச் சக்தியின் பெறுமதி உயர்வாக அமைகிறது. இதே உழைப்புச் சக்தியை வளர்ச்சி குன்றிய நாடொன்றில் - அதாவது ஒரு வறிய நாடொன்றில் - கொள்வனவு செய்யய்படுமாயின் அதன் பெறுமதி மிகவும் குறைவாக அமைகிறது. இதனால் எந்த நாட்டில் வைத்து இந்த உற்பத்தி நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து உருவாக்கப்படும் உபரி மதிப்பின் அளவு வேறுபடுகிறது. இதுதான் இந்த உலகமயமாதலின் இரகசியமாகும். அதாவது வசதி குறைந்த ஒரு வளர்முக நாட்டில் வைத்து உற்பத்தியை மேற்கொள்வது அதிக இலாபத்தை தரும் என்ற ஒரே காரணத்திற்காகவே மூலதனமானது இந்த விளிம்பு நாடுகளை நோக்கி நகர்கிறது. இதே உற்பத்தியை இந்த விளிம்பு நாடுகளில் வைத்து மேற்கொள்கையில் அவர்களது ஊதியம் குறைவாக இருப்பதுடன் தொழிலாளர் உரிமைகள் பற்றியோ அல்லது சமூக நலன்புரி திட்டங்கள் குறித்தோ, அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பயமோ இன்றி இந்த சுரண்டலை மிகவும் தீவிரமாக மேற்கொள்ள முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை நோக்கி இந்த சர்வதேச நிறுவனங்கள் நகர்ந்த போது அங்கு தொழிலாளர்களை மிகவும் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தியதுடன், அவர்களது தொழில்சார் உரிமைகள் பற்றியோ, வாழ்க்கை நிலைமைகள் பற்றியோ, சுற்றுச் சூழல் பற்றியோ இவை அக்கறைப்படத் தேவையிருக்கவில்லை. இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை மீண்டும் மேற்கு நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் போது இந்த பொருட்கள் முன்பு இதே நாடுகளில் உற்பத்தி செய்ததுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படும் போதும் கூட அபரிமிதமான இலாபத்தை இவை ஈட்டக்கூடியதாக இருந்தன. இதுதான் இந்த உலகமயமாதல் மோகத்தின் மையப்பொருளாகும். ஆனால் இந்த அபரிமிதமான இலாபம் என்பது ஒரு தற்காலிகமான நிகழ்வு மட்டுமேயாகும். படிப்படியாக இந்த விளிம்பு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்று அமைப்பாவதும், தமது உரிமைகளுக்காகவும், கூலி உயர்வுக்காகவும் போராடுவது: மைய நாடுகளில் உள்ள தொழிலாளர் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் இந்த உற்பத்தியில் இருக்கும் மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு (Sweat Shop Condition) எதிராக போராடுவதும் இந்த அபரிமிதமான இலாபத்தை குறைக்கத் தொடங்குகின்றன. இந்த வகையில் இந்த நிலைமையானது மார்க்ஸ் குறிப்பிடும் 'சார்பளவிலான உபரிமதிப்பு நிலையை' (Relative Surplus value) ஒத்ததாகும். அதாவது புதிதாக ஒரு தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்படும் நிலையில் அதனை முதன் முதலில் பாவிக்கத் தொடங்குபவர் குறைந்து உழைப்புச் சக்தியுடன் குறிப்பிட்ட பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதனால் அவர் அந்த துறையில் முதலீடு செய்துள்ள ஏனைய முதலாளிகளுடன் ஒப்பிடும் போது அதிக உபரியை – அதிக இலாபத்தை – பெற்றுக் கொள்வார். ஆனால் இந்த நிலைமை அப்படியே நீடிக்கப் போவதில்லை. படிப்படியாக ஏனைய முதலாளிகளும் இதே இயந்திரங்களை பாவிக்கத் தொடங்கும் போது, இந்த பண்டங்களில் விலைகள் புதிதாக தேவைப்படும் உழைப்புச் சக்தியின் அளவிற்கு குறையத் தொடங்குகிறது. இதனையே மார்க்ஸ் சார்பளவிலான உபரி மதிப்பு என்பார். இதனை ஒத்த செயற்பாடுகள் இந்த விளிம்பு நிலை நாடுகளிலும் படிப்படியாக ஏற்படத் தொடங்கவே ஆரம்ப காலத்தில் பெறப்பட் உபரி மதிப்பின் - இலாபத்தின் - மட்டத்தை தொடந்தும் பேணுவது சாத்தியமற்றுப் போகிறது.

இதனைவிட இன்னோர் முக்கியமான நிகழ்வானது முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் போது மைய நாடுகளிலேயே நடைபெற்றது. அதாவது ஆரம்பத்தில் தொழிலாளரது உபரியை கடுமையாக சுரண்டும் நிலைமை காணப்பட்ட போதும், இந்த ஒரு முறையையே தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துச் செல்வதில் சிக்கல்கள் உருவாகின்றன. அதாவது மக்களில் பெரும்பாலானவர்கள் உழைக்கும் மக்களாக இருக்கையில், இவர்களை கடுமையாக சுரண்டி ஒட்டாண்டியாக்கிவிட்டால், அதற்கு மேல் இந்த முதலாளிகள் உற்பத்தி செய்யும் பண்டங்களை கொள்வனவு செய்வது யார் என்ற பிரச்சனை எழுகிறது அல்லவா? இதனால் இந்த பெரும்பான்மையினரான தொழிலாளர்களை வெறுமனே உற்பத்தியாளர்களாக மாத்திரம் வைத்திருக்காமல், அவர்களை நுகர்பவர்களாகவும் மாற்றுவதனால் மாத்திரமே மேற்கொண்டு இவர்களால் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுவதும், அதன் மூலமாக இலாபம் பெறுவதும் சாத்தியமாகிறது. இதனால் முதலாளிகளில் ஒரு பகுதியினர் தொழிலாளர்களின் கடுமையான போராட்டங்கள் இன்றியே அவர்களது கூலியை உயர்த்த நேர்கிறது. 1910 களில் 'போர்ட்' (Ford) கார்த் தொழிற்சாலையின் முதலாளி, ஏனையவர்கள் ஒரு நாள் ஊதியமாக 2.50 டொலரை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தனது ஆலையில் தொழில் செய்யும் ஊழியர்களது வேதனத்தை 5.00 டொலர்களாக உயர்த்தினார். இந்த நடவடிக்கையானது அந்த காலத்தில் "சோசலிசத்தை நோக்கிய செயற்பாடு" என்றும், இந்த நடவடிக்கையினால் போர்ட் கார் நிறுவனம் நட்டத்தில் போய்விடும் என்றும் ஏனைய முதலாளிகள் கேலி செய்தார்கள். ஆனால், அப்போதுதான் தனது தொழிற்சாலையில் 'அசெம்பிலி லைன்' (Assembly Line) முறையை முதன் முதலாக அறிமுகம் செய்திருந்த போர்ட் கார் நிறுவனமானது, மிகவும் அதிக பட்ச இலாபத்தை பெற்று முன்னணி நிறுவனமாக வந்தது. இந்த நடவடிக்கைகளின் போது கார் ஒன்றின் விலையானது 825 டொலரில் இருந்து 260 டொலருக்கு குறைந்தது. தொடர்ந்தும் தனது சந்தையை விரிவு படுத்துவதன் மூலமாக போர்ட் கார் நிறுவனமானது தனது இலாபத்தை அதிகரித்துச் சென்றதுடன், இதனையே ஏனைய தொழிற்சாலைகளும் நியமமாகக் கொள்ளும் நிலைமை உருவானது. இந்த வகையில் நவீன முதலாளித்துவத்தைப் புரிந்து கொள்வதில் 'போர்ட்டிசம்' (Fordism) மற்றும் 'டெய்லரிசம்' (Taylorism) போன்ற கருத்தாக்கங்களின் முக்கியத்துவத்தை 'கிராம்சி' வலியுறுத்துகிறார். இதே போன்றதொரு பிரச்சனை விளிம்பு நிலை நாடுகளிலும் படிப்படியாக உருவாகத் தொடங்குகிறது.

சீனாவும் இந்தியாவுமாக சேர்ந்து சுமார் 250 கோடி சனத்தொகையை கொண்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைப்பங்கினர் இந்த இரண்டு நாடுகளில் மாத்திரம் சீவிக்கின்றனர். இவர்களது வாங்கும் சக்தி அதிகரிக்கப்படுகையில் இவர்களே ஒரு மிகப் பெரிய சந்தையாக திகழ முடியும். ஆகவே தொடர்ந்தும் நிச்சயமற்ற அந்நிய சந்தைகளை நம்பி ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு தமது தொழிலாளர்களை அபரிமிதமாக கூரண்டுவதிலும் பார்க்க, இதே தொழிலாளர்களது வாங்கும் சக்தியை அதிகரிப்பதனால் உள்நாட்டிலேயே தமது சந்தையை விஸ்தரிப்பதன் மூலமாக ஒப்பீட்டளவில் நிலையான வருமானத்தை இவர்கள் பேணலாம். இந்த நோக்கில் இந்த விளிம்பு நாடுகளில் முதலாளிகளும், இந்த நாடுகளில் அரசாங்கமும் நகர்வது தவிர்க்க முடியாததாகிவிடும். இதற்கான இன்னொரு உந்தலானது மேலே குறிப்பிட்ட விளிம்புநிலை நாடுகளின் மற்றும் மைய நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் மனித நேயர்களது போராட்டங்கள் மூலமாக கிடைக்கவே இது கைகூடுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த வகையான புரிதலானது மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றுக் கிடையிலான உறவையும், இதில் அரசு மற்றும் ஏனைய சர்வதேச ஆதரவு செயற்பாடுகள் (Solidarity Activities) இணைத்து நோக்கப்படும் ஒரு நிலைமையில் மாத்திரமே பெற்படும். ஒற்றைப் பரிமாண சிந்தனையானது இந்தவிதமான புரிதல்களுக்கு ஒருபோதும் இடம் தரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உலகமயமாதலுக்கும் தேசியவாதத்திற்கும் இடையில் உள்ள உறவு பற்றிய விடயத்திற்கு மீண்டும் வருவோம். அதாவது, உழைப்பானது இந்த குறிப்பிட்ட விளிம்புநிலை நாடுகளில் வைத்து மேற்கொள்ளப்படும் போது மட்டுமே மேலே குறிப்பிட்ட அபரிமிதமான இலாபமானது இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. ஆகவே மூலதனம் தேசிய எல்லைகளை கடந்து சுதந்திரமாக நகரும்போதே, சமகாலத்தில் உழைப்பானது – அதாவது உழைப்பாளியானவர் - இந்த தேச எல்லைகளை கடந்து எதிர் திசையில் நகராமல் கட்டுப்படுத்துவதும் அவசியமானதாகிறது. இதற்காகத்தான் இந்த நாடுகள் தமது கடவுச் சீட்டு முறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்தாக வேண்டியுள்ளது. ஆகவே இவர்கள் மூலதனத்தைப் பொறுத்தவரையில் சர்வதேசியவாதிகளாக இருக்கும் போதே, உழைப்பைப் பொறுத்தவரையில் தேசியவாதிகளாகவே இருந்தாக வேண்டியும் உள்ளது. உதாரணமாக, மத்திய தரைக் கடலுக்கு தெற்கே உள்ள ஒருவர் இந்த கடலை தாண்டி – சட்டவிரோதமாகத்தான் - ஐரோப்பாவிற்குள் நுழைவதாக வைத்துக் கொள்வோம். இவர் அங்கு போய் ஒன்றும் இந்த நாடுகளில் மூலதனத்தை அபகரிக்கப் போவதில்லை. தனது உழைப்புச் சக்தியை விற்பதற்கே முயல்கிறார். ஆனால் அவர் தனது உழைப்பின் இடத்தை மாற்றுகிறார். அதன் மூலமாக உழைப்பின் நிலைமைகளை மாற்றுகிறார். அப்படி செய்வதன் மூலமாக இந்த மைய நாடுகளின் மூலதனமானது இவருக்கு மையநாடுகளின் நிலைமைக்கு ஏற்ற கூலியை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்படப் போகிறது. இது இவர்களது இலாபத்தை கடுமையாக பாதிக்கக் கூடியதாக அமைகிறது. இந்த நோக்கில் இந்த நாடுகள் தமது குடிவரவு சட்டங்களை – அதாவது கடவுச்சீட்டு தொடர்வான சட்டங்களை - கடுமையாக்குவதுடன், இதற்கு சாதகமாக இந்த நாட்டிலுள்ள ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவானது அந்நிய வெறுப்பு கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் தொடங்குகின்றன. ஆகவே உலகமயவாதிகள் குறிப்பிடுவது போல உலகமயமாதல் சர்வதேசியத்தை உருவாக்கவில்லை. மாறாக ஒரு அயோக்கியத்தனமான தேசியவாதத்தை – மிகவும் குறுகிய நோக்கிலான தேசியவாதத்தை – வளர்க்கும் வேலையைத்தான் செய்கிறது.

மைய நாடுகளில் காணப்படும் வெளிப்படையானதும், நிறுவனமயப்படுத்தப்பட்டதுமான அந்திய வெறுப்பானது, மேலே குறிப்பிட்டவாறு குடிபெயர்ந்து வரும் தொழிலாளரது வாழ்க்கை நிலைமைகளை மிகவும் கடுமையாக்கிவிடுகின்றன. அதனால் இவர்கள் அந்தந்த நாடுகளின் பிரதான போக்குகளுடன் இணைந்து கொள்வது சாத்தியமற்றும் போகிறது. இப்படியாக வைத்திருப்பதனால் மாத்திரமே இவர்களை இந்த நாடுகளில், மேற்கு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் செய்ய விரும்பாத வேலைகளை மட்டும் செய்வதனால் தமது பிழைப்பை நடத்துமாறு நிர்ப்பந்திக்கலாம். உண்மையில் இந்த குடியேறிய தொழிலாளர்கள், தமது மலிவான உழைப்புச் சக்தியை வழங்குவதன் மூலமாக அந்த நாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு 'மெத்தை' (cushion) ஆக செயற்படுகிறார்கள். இதனால் ஒருவிதத்தில் இந்த நாட்டுகளின் தொழிலாளர் வர்க்கமும் கூட இந்த அந்நிய வெறுப்பில் அள்ளப்படும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. ஆதலால் குடியேறிய தொழிலாளர்கள் மைய நாடுகளிலும் ஒருவித சேரிப்புற வாழ்க்கையைத்தான், பாட்டாளி வர்க்கத்திற்கும் கீழான நிலையில்தான் (Under Class) வாழ நேர்கிறது. ஆகவே இங்கே நாம் சர்வதேசியத்தை காணவில்லை. மாறாக குறுந்தேசியவாதத்தைத்தான் காண்கிறோம்.

இப்போது விளிம்பு நாடுகளில் உள்ள நிலைமைகளைப் பார்ப்போம். வெளியில் இருந்து ஊடுருவும் மூலதனமானது ஒன்றும் தேசியம் சம்பந்தமாக பக்க சார்பற்றதாக (Unbiased) உள்நுழையவில்லை. மாறாக அந்தந்த நாடுகளில் உள்ள ஆதிக்க சக்திகளது ஆதரவுடன் தான் உள்ளே செல்கிறது. அந்தந்த சமூகத்தில் என்னென்ன ஒடுக்குமுறைகள் உள்ளனவோ, அவற்றையும் அனுசரித்துதான் இவை உள்நுழைகின்றன. இதனால், ஆளும் வர்க்க, ஆதிக்க தேசநலன்களை மறுதலிக்காமல் அவற்றுடன் இணைந்தே இவையும் பயணம் செய்கின்றன. கொலனித்துவம் இந்த நாடுகளுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தபோது எப்படியாக இந்த நாடுகளில் இருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் ஒத்துழைத்ததோ, அப்படியே இப்போதும் அந்தந்த நாடுகளில் உள்ள ஆதிக்க சக்திகளுடன் கையை கோர்த்துக் கொண்டே பயணம் செய்கின்றன. ஏற்கனவே அந்தந்த நாடுகளில் உள்ள தேசிய முரண்பாடுகளில் மூலவளங்களுக்கான போட்டியும் (Resourses War) ஒரு அம்சமாக நிலைத்து வருகையில் இந்த புதிய ஆதிக்க சக்தியின் வரவானது, ஏற்கனவே உள்ள முரண்பாடுகளை இன்னமும் கூர்மை அடையவே செய்கின்றன. அதாவது இந்த உலகமயமாதலானது விளிம்பு நாடுகளில் கூட தேசிய முரண்பாடுகளை கூர்மை அடையவே செய்கின்றன. இதற்கு மாறாக உலகமயமாதல் தேசிய பிரச்சனைகளை தளர்த்துவிடும் என வாதிப்போர், இந்த நாடுகளில் ஏற்கனவே உள்ள தேசிய முரண்பாடுகள் எந்தளவிற்கு தளர்த்தப்பட்டுள்ளன என நிரூபித்தாக வேண்டும். உதாரணமாக இந்தியாவில் இது காஷமீர் பிரச்சனையை தணிக்கவோ, அல்லது சீனாவில் திபெத்திய பிரச்சனையை தீர்த்து வைக்கவோ இந்த உலகமயமாதல் உதவவில்லை. மாறாக இந்த நாடுகளில் இந்த பிரச்சனைகள் தீவிரமடைந்திருப்பதுடன் இன்னமும் புதிய பிரச்சனைகளையும் இவை உருவாக்கி விட்டுள்ளன. உதாரணமாக, சீனாவின் மத்திய ஆசிய பிராந்திய மக்களது பிரச்சனையையும், திபெத்தில் அதிகரிக்கும் சீனர்களது குடியேற்றங்கள் உருவாக்கியுள்ள புதிய மோதல்களையும் குறிப்பிடலாம். இதே விடயம் தான் இலங்கையில் இந்திய மூலதனங்கள் தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்களது சம்மதத்தைப் பெறாமலும், தமிழ் மக்களது நலன்களுக்கு எதிராகவுமே நகர்கின்றன என்பதையும் இங்கு நாம் குறித்துக் கொள்வது இந்த இடத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த விடயங்ளை தொகுத்து நோக்குகையில் உலகமயமாதல் என்பத தேசியவாதத்தை தணிவிக்கவில்லை என்பதையும், அது மைய நாடுகளிலும் சரி, விளிம்பு நாடுகளிலும் சரி தேசியவாதத்தை தீவிரப்படுத்தும் வேலையைத்தான் செய்து முடிக்கிறது என்பது தெளிவாகிறது. பொருளாதாரம் என்பது ஒரு குருட்டுத்தனமான ஓட்டத்தில் எந்தவொரு பாகுபாடுகளையும் பாராமல் காட்டாற்று வெள்ளம் போல் பழைய பிரச்சனைகளை அடித்துக் கொண்டு செல்லவில்லை. மாறாக மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த விதமாக (Selective) ஏற்கனவே உள்ள முரண்பாடுகளை அனுசரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்த கருத்துக்கு மேலதிக ஆதாரமாக, முதலாளித்துவம் தான் நிறவெறியை தோற்றுவித்தது என்பதையும், அது ஆணாதிக்க முறையுடன் சமரசம் செய்துதான் செல்கிறது என்பதையும் சேர்த்து நோக்குவது பயனுடையதாக இருக்கும். இப்படியான நிலைமைகளில் பொருளாதாரமானது முற்றிலும் பலம் பெற்றதாக, சர்வ வல்லமையும் கொண்டு ஒரு சக்தியாக இல்லை என்பதும், இது சமூகத்தின் ஏனைய கட்டமைப்புக்களான அரசியல், சித்தாந்தம், அழகியல், கோட்பாடு என்பவற்றுடன் இணைந்துதான் செயற்படுகின்றது என்பது தெளிவாகும். பொருளாதாரமானது, இந்த கட்டமைப்புக்களை நிர்ணயிக்கும் அதே சமயத்தில் இந்த கட்டமைப்புக்களால் மேல் நிர்ணயம் செய்யவும் படுகிறது என்பது தெளிவாகும். இதற்கு மாறாக பொருளாதாரத்தை சர்வ வல்லமை உள்ள ஒரு சக்தி போலக் கருதி, சமூகத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் அது அப்படியே நேரடியாக நிர்ணயிக்கும் என்றவகையில் வாதிட முனைவதானது பொருளாதாரவாதமேயாகும்.

இதே போன்றதொரு இன்னொரு பிரச்சனையானது தற்போது உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகளை புரிந்து கொள்வது தொடர்பான பிரச்சனையிலும் எழுவதை காண முடிகிறது. அதாவது இந்த பொருளாதார நெருக்கடிகள் முற்றிய போது பலரும் இது முதலாளித்துவத்தின் பாரிய நெருக்கடி எனவும், இத்துடன் மூலதனமானது தனது மோசமாக தோல்வியைஎதிர் கொள்வதாகவும் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். ஆனால் இந்த பிரச்சனை தொடங்கி ஒரு வருட காலத்தில் நாம் காண்பதென்ன? சில பெரிய வங்கிகள் முற்றாக வங்குரோத்தாகிவிட்டன: பலர் தமது முதலீடுகளை இழந்துள்ளனர்: ஆனால் மொத்தத்தில் இந்த நாடுகளில் உள்ள உழைப்பாளிகள் கண்டதென்ன? மூலதனத்தோடு ஒப்பிடும் பொழுது, தொழிலாளர்கள் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறார்கள்? இன்றைய பொருளாதார நெருக்கடி உண்மையில் தொடங்கியது வீட்டு அடமானக் கடன் தொடர்பாக வங்கிகள் மேற்கொண்ட அதீத ஊகவாணிப முறையுடன் தொடர்பு பட்டதாக இருப்பினும் கூட, அது பெரிய அளவில் சமூக நெருக்கடியாக உருவானதே, வங்கிகள் கார்களுக்கான கடன் வழங்களை நிறுத்தியதுடன்தான். இப்போது அதுவே பெரிதாக ஆக்கப்பட்டு அதனை சீர் செய்வதே இன்றுள்ள முக்கிய கடமை என்ற விதத்தில் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கார் உற்பத்தியைப் பொறுத்தவரையிலும் கூட அதன் சந்தையின் நிரம்பல் தன்மை: மிகவும் பெரிய சொகுசு வாகனங்களது விற்பனையில் இலாபம் அதிகம் கிடைக்கும் என்ற வகையில் அவற்றை நோக்கி மூலதனம் அதிகம் அக்கறை செலுத்தியமை: எரிபொருள் சிக்கனம், மற்றும் சுற்றுச் சூழல ; பாதுகாப்பு பற்றிய அக்கறைகளை அறவே நிராகரித்தமை: மாற்று தொழில் நுட்பங்களை, உதாரணமாக மின்சாரத்தில் இயங்கும் கார்கள், முடக்கி வைத்தமை: இந்த நிறுவனங்களிலும், ஏனைய நிதிநிறுவனங்களிலும் பணியாற்றும் உயர் நிர்வாகிகள் பெற்றுக்கொள்ளும் பாரிய ஊதியங்கள்: போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் இந்த முக்கியமான விடயங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு, பிரச்சனையை காரின் உற்பத்தி செலவை அதாவது, தொழிலாளரின் ஊதியத்தை குறைப்பது பற்றிய விடயமாக திசை திருப்புவதில் இந்த அரசும், முதலாளித்துவ சக்திகளும் வெற்றி பெற்றன. இந்த சிக்கலான விடயமானது, உற்பத்தியின் செலவை குறைப்பது பற்றிய பிரச்சனையாக குறுக்கப்பட்டது. இது வெகுஜன செய்தி ஊடகங்களில் பெரியளவில் பேசப்பட்டு, உற்பத்தி செலவை குறைப்பது என்ற நோக்கில் தொழிலாளர்களது ஊதியங்களை குறைப்பது தொடர்பான பிரச்சனையாக குறுக்கி, தொழிற்சங்கங்கள் கடுமையான நெருக்குதல்களுக்கு உள்ளாகின. கடைசியில் தொழிற்சங்க அமைப்புகள் ஏதும் இல்லாத 'டொயாட்டா' (Toyota) நிறுவனத்தின் ஊதியமான மணித்தியாலத்திற்கு 59 டொலர்கள் என்ற மட்டத்திற்கு ஏனைய அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் மூன்றினதும் ஊதியங்கள் 76 டொலரில் இருந்து குறைக்கப்பட்டன. இதுவரை நடந்தவற்றை தொகுத்துப் பார்த்தால் நாம் பின்வருவனவற்றை தெளிவாக இனம் காணலாம். இந்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பெரும்பாலான முதலாளி வர்க்கத்தினர் அதிகம் இழப்புகள் இன்றி வெளிவந்துள்ளனர். அத்தோடு தொடர்ந்தும் அரசு கொடுத்த கடன்களில் இருந்தே தொடர்ந்தும் போனஸ்களை பெற்றுக் கொண்டு வருகின்றன. தோல்வியுற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூட பெருந்தொகையான பணத்தை இழப்பீடாக பெற்றுக் கொண்டே வெளியேறினார்கள். இவர்கள் கடந்த காலத்தில் ஏற்படுத்திய பெருந்தொகையான நட்டங்கள் குறித்து எந்தவிதமான பதிலும் சொல்லும்படி நிர்ப்பந்திக்கப்படவில்லை. மாறாக தொழிலாளர் வர்க்கமானது மிகப் பெரிய விலையை இந்த ஊகவாணிபர்களது சூதாட்டத்திற்கு செலுத்த நேரிட்டுள்ளது. முதலாவதாக, இந்த 'சப் பிரைம்' (Subprime) எனும் கந்துவட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வாங்கி, கட்ட முடியாமல் பெருந் தொகைப் பணத்தையும் வீடுகளையும் இழந்தவர்கள் யாவரும் அடி மட்டத்தில் இருக்கும். வசதி குறைந்த, அடைமான விதிமுறைகளில் போதிய விழிப்புணர்வற்ற தொழிலாளர்களே என்பதை மனதில் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய பெருந்தொகைப் பணத்தையும் மக்கள் தொகையில் மிகவும் பெரும்பான்மையான இருக்கும் உழைக்கும் மக்களே வரியாக எதிர்காலத்தில் செலுத்தியாக வேண்டியுள்ளது. மூன்றாவதாக, 'ஹெட்ஜ் நிதி' (Hedge Fund) எனும் பெயரில் தாரைவார்க்கப்பட்டதில் பெருந்தொகைப் பணம் உழைப்பாளர்களது ஓய்வூதிய நிதி மற்றும் சேமிப்பாகும். நான்காவதாக, இந்த வட்டத்தில் இருந்து மீள்வதற்காக விட்டுக் கொடுப்புக்களையும் தொழிலாளர்களே தமது ஊதியக் குறைப்புகள் மூலமாக செய்தாக வேண்டியுள்ளது. இப்படியாக எமது ஆய்வாளர்கள் முதலாளித்துவத்தின் சரிவை எதிர்வு கூறிய போதிலும், தொழிலாளர்களே அனைத்து இழப்புக்களையும் செலுத்தியாக வேண்டியிருக்கிறது. இது ஏன் நடைபெற்றது? இப்படிப்பட்ட விடயங்களை மதிப்பிடுவதில் நாம் எங்கு தவறிழைக்கிறோம்? என்ற கேள்விகள் இங்கு மிகவும் அவசரமாக விடையை வேண்டி நிற்கின்றன அல்லவா?

இங்கு நாம் பொருளாதாரம், வர்க்க போராட்டம், மற்றும் அரசு ஆகியவற்றுக்கிடையிலான சிக்கலான உறவுகளை புரிந்து கொள்வது அவசியமானது. வெறுமனே அரசு ஆளும் வர்க்கத்தின் கரங்களில் உள்ள ஒடுக்குமுறையின் கருவி என்ற பாலபாடம் அதிக பலனைத் தராது. கடந்த காலத்தில் முதலாளித்துவ நாடுகள் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகளை தவிர்ப்பதில் கணிசமான அளவு வெற்றி கொண்டிருந்தாலும், பாட்டாளி வர்க்கமும் தன் பங்கிற்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றே இருக்கிறது. ஒப்பீட்டளவில் உயர்வான வாழ்க்கைத் தரம், சமூக காப்பீட்டுத் திட்டங்கள், தொழிற்சங்க மற்றும் ஏனைய ஜனநாயக உரிமைகள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். இந்த போராட்டங்களின் போது அரசானது வெறுமனே ஆளும் வர்க்கத்தின் கருவியாக மட்டும் செயற்படாமல், தேவைப்பட்டால் ஒட்டு மொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களிலிருந்து சமரசம் செய்விக்கும் கருவியாகவும் செயற்பட்டுளள்து. இதில் நாம் முன்னர் குறிப்பிட்து போல முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியினர் தாமாகவே முன் வந்தும் மூலதனத்தினதும் சுரண்டலினதும் நீண்டகால நலன்களை முன்னிட்டும் சில விட்டுக் கொடுப்புக்களை செய்தும் இருக்கின்றன. இதனால் ஒப்பீட்டளவில் தமக்கு சாதகமான ஒரு சமநிலையை தொழிலாளர் வர்க்கமானது மூலதனத்துடனான தமது உறவில் அடைந்திருந்தது. ஆனால் இப்போது இந்த பொருளாதார நெருக்கடியில் இந்த சமநிலையானது முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக நகரத் தொடங்குகிறது. இப்படிப் பட்ட நிலைமைகளை பயன்படுத்திக் கொண்டு மூலதனமானது தான் ஏற்கனவே இழந்தவற்றை மீட்டுக் கொள்வதற்கான தாக்குதலை தொடுக்கிறது. அதுதான் இங்கு நடைபெற்ற தொழிலாளர் இழப்பிற்கான காரணமாகும். இந்த கட்டத்தில் தொழிலாளர் வர்க்கமானது போதியளவு விழிப்புணர்வுடனும், முறையான அமைப்பாகியும் இருந்திருப்பின் இந்த மூலதனத்தின் தாக்குதல்களுக்கு எதிராக முன்னேறித் தாக்கியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இப்படிப் பட்ட விளக்கமானது அரசை வெறுமனே ஆளும் வர்க்கத்தின் கருவியாக மாத்திரம் நோக்காது, அரசானது வர்க்க போராட்டத்தின் களங்களில் ஒன்றாகவும் நோக்கினால் மாத்திரமே சாத்தியப்படும். அவ்வாறே முதலாளி – தொழிலாளி வர்க்கங்களைக் கூட தனித்தனியே முற்றிலும் ஒருங்கிணைந்த ஏகவினமான தன்மையுடன் (Monolithic) ஆக பார்க்காமல், முதலாளித்துவ வர்க்கத்தில் பல்வேறு பிரிவுகள் (Factions) இருப்பதையும், இந்த வெவ்வேறு பிரிவுகள், அரசின்

வேறுபட்ட பிரிவுகளையும், மேற்கட்டுமானத்தின் வெவ்வேறு கூறுகளையும் கட்டுப்படுத்தும் சாத்தியக் கூறுகள், மற்றும் இவற்றின் இணைவில் தோற்றும் ஆளும் குழுமம் (Ruling Bloc) என்பதாக புரிந்து கொண்டால் மாத்திரமே சாத்தியப்படும். இதற்கு மாறாக எந்தவொரு குறுக்கல்வாதமும் இந்த புரிதலுக்கு தடையாகவே அமைகின்றன. குறுக்கல்வாதங்கள் எளிமையாக பிரச்சனைகளை விளக்குவதாக ஆரம்பத்தில் பட்டாலும் இறுதியில் போலியான நம்பிக்கையையும், தோல்விகளையுமே திரும்பத் திரும்ப தோற்றுவிக்கக் கூடியவையாகும். இங்கு நாம் சிக்கலான பல்வேறு கட்டமைப்புகளின் இணைவால் உருவாகும் சமூக உருவாக்கத்தை அவற்றின் ஏதாவது ஒரு கூறின் அடிப்படையில் விளக்க முனையும் அத்தனை முயற்சிகளையும் குறுக்கல்வாதங்கள் (Reductionism)என்றே குறிப்பிடுகிறோம்.

Link to comment
Share on other sites

தேசம் என்பது ஸ்டாலின் குறிப்பிட்ட பொதுவான மொழி, பாரம்பரிய பிரதேசம், வரலாற்று உணர்வு, பொதுவான பொருளாதாரம், மற்றும் காலச்சார உணர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மட்டுமல்ல, இன்னும் பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டும் உருவாகலாம் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அத்தோடு மேலே குறிப்பிட்ட அம்சங்களில் சில இல்லாத சமூகங்கள் கூட தேசங்களாக உருப்பெற்று தேச – அரசுகளை நிறுவியதும் வரலாற்றில் கண்கூடு. மதம், பொதுவான ஒடுக்குமுறை, செய்திப் பத்திரிகை, குடிசன மதிப்பீடு, "தேசப்படம்" (Map) போன்ற இன்னும் பல அம்சங்கள் ஒரு தேசத்தை உருவாக்குவதில் பங்களிக்கலாம். இதில் எத்தனை அம்சங்கள் இருந்தாலும் ஒரு மக்கள் கூட்டமானது தன்னளவில் ஒரு தேசமாக உருவாகிவிடமாட்டாது. இவை எல்லாவற்றையும் விட அவற்றின் பிரக்ஞை மிகவும் முக்கியமானது. அதாவது, இவை ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டமானது தன்னை ஒரு தேசமாக உணர்வது இங்கு மிகவும் முக்கியமான அம்சமாகும்.

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

தேசியவாதம் குறித்த இந்தக் கருத்துக்கள் பரந்துபட்ட ஒரு அறிதலை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு தேசங்களும் தமது உருவாக்கத்தில் எதோ ஒருவகையில் மற்ற தேசங்களுடன் வேறுபட்டும் தனியான அம்சங்கள் சார்ந்தும் இருக்கின்றது. அவை மேலே குறிப்பிட்டது போல் மொழி வரலாறு பிரதேசம் பொருளாதாரம் மதம் தேசப்படம் எனப் பல கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கலாம். தேசியவாத உருவாக்கம் என்பதும் அது சார்ந்த தேச உருவாக்கம் என்பதும் பொதுவாக வரையறுக்கப்பட்ட கருத்துக்குள் இல்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வாறான கருத்துக்களுடன் ஈழத்தமிழர்களது தேசியவாதத்தை ஒப்பிடும் போது கிடைக்கப்பெறும் ஒவ்வொரு கூறுகளும் அதன் மீதான உணர்வும் குறைபாடுள்ளதாக இருப்பததை அறியமுடியும்.

மொழியை எடுத்துக்கொண்டால் தாய்மொழியை விட ஆங்கிலம் உயர்வானது என்ற அடிப்படை உணர்வு இருக்கின்றது. இது தேவை சார்ந்தும் பிரதானமானது என்ற அடிப்படையையும் கொண்டிருக்கின்றது அதே நேரம் மேன் நிலை சார்ந்த எண்ணப்பாட்டிற்கும் ஆங்கிலம் உயர்வாகின்றது. எம்மை அடக்கி ஆண்டவர்கள் மொழி என்றே எம்மால் முதன்முதல் அறியப்படுகின்றது அதாவது பலசாலிகளின் மொழி. தாய் மொழியான தமிழ் நீண்ட நெடுங்காலம் ஏகமக்களிற்கும் பொதுவானதாக இருந்ததில்லை. உயர்குடிகளின் கைகளிலேயேதான் மொழி ஆதிக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு முன்னரானகாலம் வரை மொழியில் புலமை உள்ளவர்களே சமூகத்தில் அந்தஸ்த்து உள்ளவர்களாக இருந்தனர். பெரும்பான்மை மக்கள் மொழியை பேசத்தெரிந்தவராயினும் அதற்குமேல் கற்க உயர்குடிகள் அனுமதித்ததில்லை. மொழி ஆதிக்கத் தரப்பினரின் அடக்குமுறைக்கருவியாக இருந்துவந்திருக்கின்றது. எமது தேசியவாத எழுச்சி புறநிலையில் சிங்களம் எம்மை தமிழர் என்ற பொதுக் கூற்றுக்குள் வரையறுக்கும் போதே ஏகதரப்பினருக்கும் மொழி பரவலக்கம் அடையமுற்படுகின்றது. மொழி உணர்வு நிலையில் மிகப்பலவீனமான ஒரு கூறாகின்றது.

பிரதேசம் என்பது சமூகங்களின் உயர்வு தாழ்வை அடயாளப்படுத்தும் விதமாகவும் பயன்படுகின்றது. பிரதேசவாதம் இனமும் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. உணர்வு நிலையில் தமிழீழத்துக்கான வரைபடம் கருத்தளவில் வலுப்பெறுகின்றபோதிலும் உணர்வுநிலையில் பலவீனமானது.

பொருளாதாரம் என்பது மிக முக்கியமானதான ஒன்று. ஆனால் தொழில் முறைச் சாதிய அமைப்பு எப்போதும் பொது நிலைப் பொருளாதரம் குறித்த உணர்வை சிதைக்கின்றது. ஏற்றதாழ்வு அடிமைத்தனம் இதற்குள் வலுவாக அமைகின்றது. உணர்வுநிலையில் பொருளாதாரம் என்பது கற்பனையிலும் பொதுமைப்பட முடியாதுள்ளது.

கலாச்சாரம் என்பது குறித்து நாம் பெரிதும் முரண்படுகின்றோம். ஒன்று பொருளாதார ஏற்றதாழ்வு அடிப்படையிலும் சாதிய அடிப்படையிலும் மத அடிப்படையிலும் எம்மிடம் கலாச்சாரம் வேறுபட்டு நிற்கின்றது. உடுத்தும் உடைமுதற்கொண்டு பொதுமைப்பட எதுவும் இல்லை. வேற்றினங்களின் கலாச்சர அடயாளங்களின் நுழைவுகள் மேலும் சிக்கலாகின்றது.ஒருவன் நசினல் வேட்டி கலாச்சரம் என்றால் வறுமைப்பட்டவனுக்கு கோவணம் நிரந்தரமாக இருப்பதல் அவனின் தேசிய உடை கோவணமாகின்றது பொதுமை என்ற அடிப்படையில் மேற்கத்திய உடைகளே கோலோச்சுகின்றது.

வரலாறு என்பது எப்போதும் தெளிவற்றதும் எமக்கான தனித்துவமான வரலாறு என்று எதுவும் இல்லாமலும் இருக்கின்றது. கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கம் ஏற்றதாழ்வுகளை போதிக்கும் சாதிய மத பிரச்சனைகளே பெரும்பான்மையாக இருக்கின்றது. இதுகுறித்து பெருமைப்பட அதிகம் இல்லை மாறாக வெறுப்பு அதிகமாக இருக்கின்றது.

மத ரீதியாக பார்த்தால் அவைகள் பலமதங்கள் சம்மந்தப்பட்டவையாக இருக்கின்றது.

எம்மிடம் இருக்கும் எத்தகைய கூற்றாக இருந்தாலும் அவை மிகக் குறைபாடுள்ளதாகவும் பலவீனமுள்ளதாகவும் இருப்பதை உணரமுடியும். இந்த பலவீனங்களையும் குறைபாடுகளையும் சமூகத்தை வழிநத்தக் கூடிய புத்திஜீவிகள் நிவர்த்தி செய்யும் ஒரு மாற்றுப்பாதை ஏனைய தேதசிய இனங்கள் பலவற்றிற்கு இருக்கின்றது. ஆனால் எமது இனத்தில் இது தலைகீழகா மேலும் விருத்தி செய்யும் வகையில் இருந்து வருகின்றது. புலமையும் புத்திஜீவிதமும் சாதிய வர்க்க போட்டிநிலைகளுடன் சம்மந்தப்படுவதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்படுகின்றது. எமது இனத்தில் மிக மோசமான அடிமைக்குணம் உயர்வர்க்கத்திடமும் புத்திஜீவிகளிடமும் இருப்பதானது மிகமோசமான ஒரு நிலையாகின்றது.

தேசியவாதம் எத்தகைய சிக்கலானது என்பது நாம் இருக்கும் நிலையை விட ஒவ்வெரு காலகட்டத்திலும் உருத்தெரியாமல் தனித்துவம் இழந்துகொண்டிருப்பதில் உணரமுயும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மொழியான தமிழ் நீண்ட நெடுங்காலம் ஏகமக்களிற்கும் பொதுவானதாக இருந்ததில்லை. உயர்குடிகளின் கைகளிலேயேதான் மொழி ஆதிக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு முன்னரானகாலம் வரை மொழியில் புலமை உள்ளவர்களே சமூகத்தில் அந்தஸ்த்து உள்ளவர்களாக இருந்தனர். பெரும்பான்மை மக்கள் மொழியை பேசத்தெரிந்தவராயினும் அதற்குமேல் கற்க உயர்குடிகள் அனுமதித்ததில்லை. மொழி ஆதிக்கத் தரப்பினரின் அடக்குமுறைக்கருவியாக இருந்துவந்திருக்கின்றது. எமது தேசியவாத எழுச்சி புறநிலையில் சிங்களம் எம்மை தமிழர் என்ற பொதுக் கூற்றுக்குள் வரையறுக்கும் போதே ஏகதரப்பினருக்கும் மொழி பரவலக்கம் அடையமுற்படுகின்றது. மொழி உணர்வு நிலையில் மிகப்பலவீனமான ஒரு கூறாகின்றது.

கருத்துக்களுக்கு நன்றிகள் சுகன். இந்த நீண்ட கட்டுரையை (இன்னமும் பாதி இணைக்கவில்லை!) பலர் படிக்காமாட்டார்கள் என்றே தெரிகின்றது!

மொழி அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்பட்டிருந்தால், தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து இலங்கையைக் காலம் காலமாக ஆட்சி செய்த தமிழ் மன்னர்களால் ஏன் சிங்கள மொழியை இல்லாமல் செய்யமுடியாமல் போனது? உண்மையில் சிங்கள மொழியை அழியாமல் காப்பாற்றிய சிங்கள மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

உலகமயமாதல் பற்றியும் உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் சுகன். இந்த நீண்ட கட்டுரையை (இன்னமும் பாதி இணைக்கவில்லை!) பலர் படிக்காமாட்டார்கள் என்றே தெரிகின்றது!

இல்லை கிருபன்...என்னைப்போல் சுகனைப்போல் உங்களைப் போல் இவற்றை வாசிக்க பலர் உண்டு... கடமையைச் செய் பலனை எதிர்பாராதே எனபதைப் போல்தான் இதுவும். தொடர்ந்து இப்படியானவற்றை இணைக்கும்போது, அதற்கான ஒரு வாசக வட்டம் தன்னாலே உருவாகும். ஒரே ஒரு பிரச்சனை இவற்றுக்கு பதில் எழுதுவது. வாசிக்கும் போது விளங்குபவறைக் கூட எழுத்தில் எம் பார்வையுடன் எழுதும் போது மிக நிதானமும் மொழியை சரியாக பயன்படுத்துவதில் கவனமும் அதிகம் தேவைப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கிருபன்...என்னைப்போல் சுகனைப்போல் உங்களைப் போல் இவற்றை வாசிக்க பலர் உண்டு... கடமையைச் செய் பலனை எதிர்பாராதே எனபதைப் போல்தான் இதுவும். தொடர்ந்து இப்படியானவற்றை இணைக்கும்போது, அதற்கான ஒரு வாசக வட்டம் தன்னாலே உருவாகும். ஒரே ஒரு பிரச்சனை இவற்றுக்கு பதில் எழுதுவது. வாசிக்கும் போது விளங்குபவறைக் கூட எழுத்தில் எம் பார்வையுடன் எழுதும் போது மிக நிதானமும் மொழியை சரியாக பயன்படுத்துவதில் கவனமும் அதிகம் தேவைப்படுகின்றது

நல்லது நிழலி. இலங்கையில் தேசியவாதத்தின் தோற்றம் பற்றிய பகுதியை சில தினங்களில் இணைக்கின்றேன். முக்கியமான கருத்தாடல்களுக்குப் பயனாக இருக்கும் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசங்களும் தேசிய சிறுபான்மையினரும்

நாம் தேசிய பிரச்சனை பற்றி பேசும் போது தேசங்களுக்கும் (Nations), தேசிய சிறுபான்மையினருக்கும் ((National Minorities) இடையிலான வேறுபாடுகளை தெளிவாக குறித்துக் கொள்வது அவசியமானதாகிறது. ஐக்கிய இராச்சியத்தைப் (United Kingdom) பொருத்த வரையில் ஸ்கொட், வேல்ஸ் போன்ற மக்கள் தனியான தேசங்களாக அமைகிறார்கள். அதேவேளையில் இந்த நாடுகளில் அண்மைக் காலத்தில் குடியேறிய ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட இந்திய, பாகிஸ்தானிய வம்சாவழி மக்கள் தேசிய சிறுபான்மையினராவர். ஸ்கொட், வேல்ஸ் மக்களது தேசியவாதமானது அவர்களது வரலாறு உட்பட, ஐக்கிய இராச்சியத்தினுள் இணைத்துக் கொள்ளப்பட்ட விதம் மற்றும் இணைந்த பின்பு அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த மனக்குறைகள் போன்ற பல காரணங்களுடன் தொடர்புடையதாக உருவாகிறது. இவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேசிய சிறுபான்மையினரின் பிரச்சனையானது மிகவும் வேறுபட்டதாகும். எண்ணிக்கையில் சிறிய சமூகமாக இருப்பது, நீண்டதொரு வரவாறு, அதன் தொடர்ச்சியான இவர்கள் பெற்றிருக்கக் கூடிய சமூக மற்றும் பொருளாதார அந்தஸத்துகள் போன்ற எதுவும் இன்றி ஒரு நிலையான சமூகமாக செயற்பட முடியாதவர்களாக உள்ளார்கள். அதேவேளை இந்த தேசிய சிறுபான்மையினரது பிரச்சனையானது தாம் இங்கு மிகவும் அந்நியப்படுத்தப்பட்டவர்களாக உணர்வதுடன் தொடர்பு பட்டது. இதனால் இவர்களால் இந்த சமூகத்தில் ஒன்று கலக்க முடியவில்லை. மாறாக தனியான ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்கவும் இவர்களது எண்ணிக்கை மற்றும் வரலாற்றுபூர்வமான அம்சங்கள் இடம் கொடுப்பதில்லை. இந்த சமூகங்களை பல்கலாச்சார சமூகங்களான இனம் கொண்டு கொள்ள முடியாத இந்நாட்டு ஆளும் வர்க்கங்களது இயலாமையும், தாம் சமத்துவத்துடன் நடாத்தப்படாமை தொடர்பான மனக்குறைகளும் இந்த அடையாளங்கள் இன்னமும் இறுகிப்போய் அதன் சாத்தியளவிலான கடைக்கோடி வடிவத்தை நோக்கி நகர்ந்து செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகளவில் உள்ளது.

இங்குள்ள முக்கியமான ஒரு பிரச்சனை என்ன வென்றால், இப்படிப்பட்ட தேசிய சிறுபான்மையினரையும், ஏனைய தேசங்களையும் சம தளத்தில் வைத்து பேசுவதான உணர்வொன்று நாவலனது எழுத்தில் வெளிப்படுவதாகும். இந்த இரண்டு தொகுதியினரும் அறவே ஒப்பிடப்பட முடியாதவர்கள் என்பதை முதலிலேயே வலியுறுத்தப்படுவது மிகவும் அத்தியாவசியமானது. இவர்களில் ஒரு பகுதியினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்வதுடன், தமக்கென குறிப்பான வரலாறு, மற்றும் ஏனைய சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களை கொண்டுள்ள நிலையான சமூகங்களாகும். இந்த வகையில இவை சுயமாக நிலைத்து நிற்கும் ஆற்றலைக் கொண்ட, சுயமான அரசியலைக் கொண்ட சமூகங்களாகும். இந்த எவற்றையும் குறிப்பிடத்தக்கவிதத்தில் கொண்டிராத தேசிய சிறுபான்மையினர், ஏனைய தேசங்களை ஒத்த அரசியல் அபிலாசைகளை உருவாக்கிக் கொள்வது சாத்தியமானதல்ல. ஆகவே இந்த பதங்களை நாம் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருப்பது அவசியமானது. அத்தோடு இந்த இடத்தில் நாம் இலங்கையில் தேசிய பிரச்சனை பற்றி பேசும் போது "சிறுபான்மை" மற்றும் "பெரும்பான்மை" போன்ற பதங்களை அறவே தவிர்ப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியாக வேண்டியுள்ளது. ஏனெனில் அது மேலே குறிப்பிட்ட தேசம் மற்றும் தேசிய சிறுபான்மை பற்றிய குழப்பத்தினுள் ஈழத் தமிழரது அடையாளங்களை போட்டுக் குழப்பிவிடுகிறது. இலங்கையில் தேசிய பிரச்சனை பற்றி பேசும் போது சிங்கள மக்களை "பெரும்பான்மையினர்" என்றும் தமிழரை "சிறுபான்மையினர்" என்றும் குறிப்பிடுவதானது சிங்கள பேரினவாதமானது கட்டமைத்த போலிப் புனைவாகும். இது தனியான ஒரு தேசமான ஈழத்தமிழரை மேலே குறிப்பிட்ட தேசிய சிறுபான்மையினருடன் குழப்பியடிப்பதன் மூலமாக எம்மை அரசியல் ரீதியில் மிகவும் பலவீனபப் டுத்தும் நோக்குடன் செய்யப்படுவதாகும். ஆதலால் தமிழ் மக்கள் தம்மை இப்படியாக சிறுபான்மையினராக இனம் காட்ட முனைவதை தீவிரமாக எதிர்த்து முறியடிப்பது அவசியமானது. அதனை விட 'பெரும்பான்மை' மற்றும் 'சிறுபான்மை' போன்ற பதங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தில் பிரயோகிக்கப்படும் போது, இந்த இரண்டு குழுக்களும் ஒரே விதமான மொழி மற்றும் கலாச்சார அம்சங்களைக் கொண்டுள்ளார்கள் என்ற முன்னூகத்தின் அடிப்படையிலேயே பிரயோகிக்கப்படுகின்றனவே ஒழிய, இந்த இரண்டு குழுக்களும் பல்தேச சமூகத்தின் வேறுபட்ட கூறுகள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. ஆகவே இந்த பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை போன்ற பதங்களை நாம் இலங்கையில் நடைபெறும் தேசிய பிரச்சனையில அறவே பாவிக்க கூடாது. அப்படியாக பாவிக்க முனையும் போது, நாம் சிங்கள் பேரினவாதம் கட்டமைத்துள்ள ஆய்வுச் சட்டகத்தின் உள்ளே நின்று கொண்டே சிங்கள பேரினவாதத்தை எதிர்க்க முனைவதாகவே அர்த்தப்படும். அதனால் இநத விதமான குழப்பங்கள் அடிக்கடி நிகழ்வது தவிர்க்கப்பட முடியாதததாகிவிடும்.

இப்போது தேசியவாதத்தில் நாம் ஒன்றுகலத்தல் (Assimiliation) பற்றிய பிரச்சனைக்கு வருவோம். சில நாடுகளில் அல்லது வரலாற்றின் ஒரு கட்டத்தில் இலகுவில் கலந்துபோன சில சமூகங்கள், இன்னோர் கட்டத்தில் கலந்து போக மறுப்பதேன் என்ற பிரச்சனை இங்கு பார்ப்போம். முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு இனக்குழுக்களும் தமது முழுமையான உள்ளாற்றலை வெளிப்படுத்தும் பண்பை கொண்டிருக்கவில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில் புத்திஜீவிகளில் ஒரு பிரிவினர் தேசத்தின் மொழிகளை, அரசியல் கட்டமைப்புக்களை வடிவமைப்பதில் முன்னணி பாத்திரம் வகித்தனர். அப்படியாக செய்யும் போது பொதுவான மொழி தோற்றுவிக்கப்படும் போது வெவ்வேறு இனக்குழுமங்களின், வட்டார மொழிகளின் கூறுகள் உள்வாங்கப்பட்டன. இன்னும் சில அறவே உள்வாங்கப்படாமலும் போயிருக்கலாம். ஆயினும் இந்த பிரிவினருக்கு முதலாளித்துவ உற்பத்தி முறை, பொதுக்கல்வி, ஜனநாயகம் என்பன வழங்கப்பட்ட போது அவற்றில் பெரும்பான்மையானவை அவற்றை பெற்றுக் கொண்டு தமது அடையாளங்களை துறந்து குறிப்பிட்ட தேசிய அடையாளங்களுடன் ஒன்று கலந்தன. ஆனால் இந்த நிலைமைகள் சற்று காலம் தாழ்த்தி ஏற்படும் போது. அதாவது குறிப்பிட்ட இனக்குழுமங்கள் தமக்கென சொந்த எழுத்து வடிவங்கள், சொற்களஞ்சியம், பொதுக் கல்வி போன்ற விடயங்களை சுயாதீனமாக உருவாக்கிக் கொண்ட பின்பு, அவை ஓரு குறிப்பிட்ட அளவிற்கு தேசிய பிரக்ஞையையும் பெற்றுக் கொண்ட பின்பு, இப்படியான ஒன்று கலத்தல்கள் கடினமானவையாக மாறிவிடுகின்றன. இதனை வெறுமனே சந்தை பற்றிய பிரச்சனையால் விளக்கிவிட முடியாது.

- தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்கள் தானே...நீங்கள் கட்டுரையை இணைக்கும் போது இரண்டு நாளைக்கு ஒரு கட்டுரை அல்லது ஒரு நாளைக்கு ஒன்று என இணையுங்கள்...[ஒரே நாளில் பல கட்டுரை இணைக்காதீர்கள்]அப்படி இணைத்தால் எல்லோரும் வாசிப்பார்கள் என நினைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்கள் தானே...நீங்கள் கட்டுரையை இணைக்கும் போது இரண்டு நாளைக்கு ஒரு கட்டுரை அல்லது ஒரு நாளைக்கு ஒன்று என இணையுங்கள்...[ஒரே நாளில் பல கட்டுரை இணைக்காதீர்கள்]அப்படி இணைத்தால் எல்லோரும் வாசிப்பார்கள் என நினைகிறேன்.

இதுவரை இணைத்தது கட்டுரையின் பாதி!

ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் வாசிப்பார்கள். விவாதத்திற்கான பகுதி இனித்தான் வரவுள்ளது!

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தேசியவாதத்தின் தோற்றம்

இலங்கை கொலனித்துவத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கையில் கிறீஸ்த்துவத்தை பரப்புவதை நோக்காகக் கொண்ட கல்விமுறையின் அறிமுகம்: அதன் தாக்கத்தால் உருவான தென்னிலங்கையில் அநகாரிக தர்மபால போன்றவரது தலைமையிலான பௌத்த மறுமலர்ச்சி அமைப்புக்கள்: வடக்கில் ஆறுமுக நாவலர் தலைமையில் தொடங்கிய மறுமலர்ச்சி இயக்கம்: கொழும்பில் அறபி பாஷா அவர்களது உந்துதலால் உருவான முஸ்லிம்களது மலர்ச்சி: போன்றவை மதம் மற்றும் மொழி பற்றிய சிந்தனைகளில் மறுமலர்ச்சியை தோற்றவித்தன. இவை அனைத்தின் செயற்பாடுகளுடனும் பொதுக்கல்வி முறைகளின் தோற்றம், உரை நடை எழுத்து முறைகள், சொற்களஞ்சியம், அகராதிகளின் தோற்றம், அச்சுக்கலையின் அறிமுகம், அருகிப் போன தமிழ் நூல்களை மறுபதிப்பு செய்வது, செய்திப் பத்திரிகையின் தோற்றம் போன்றதொரு மொழி, மதம் மற்றும் இனம் தொடர்பான மறுமலர்ச்சி ஒன்று இங்கு நடை பெற்றது. ஆனால் இந்த மறுமலர்ச்சியானது, ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் தோன்றிய காரணிகளில் இருந்து மிகவும் வேறுபட்ட காரணங்களுக் கூடாக தோற்றம் பெற்றன. ஒருக்கால் மொழிப் பற்று மற்றும் தேசிய உணர்வுகள் தோன்றி விட்டால், அவை எப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் உருவானது என்பது அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை.

ஒரு கொலனித்துவ நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் மட்டுமே நடை பெறும் பட்சத்தில், இந்த முதலாளித்துவ வளர்ச்சியுடன் நேரடியாக மூலதனம் இடுபவராகவோ, அல்லது அதற்காக பணியாற்றும் தொழிலாளராகவோ இல்லாமலேயே கூட ஒரு சமூகமானது பலமான தேசிய இயக்கங்களை உருவாக்கும் நிலைமைகள் உருவாவதை நாம் இலங்கைளில் காண்கிறோம். இத்துடன் கூடவே, சர்வஜன வாக்கெடுப்பானது ஒரு குறைவிருத்தி நாட்டினுள் திணிக்கப்படும் போது இது ஒரு விரிவான 'சமுதாய ஒப்பந்தத்தின்' விளைவாக அன்றி, மேலிருந்து திணிக்கப்பட்டதாக அமைந்தது. இப்படியாக மேலிருந்து திணிக்கப்பட்ட ஜனநாயகமானது அதன் ஆரம்பம் முதலாகவே தவறாகவே – வெறும் எண்ணிக்கை தொடர்பான விடயமாக – அதாவது 'பெரும்பான்மைவாதமாக' (Mejoritarionism) குறுக்கப்பட்டு விடுகிறது.

இதற்கு பின்பு எண்ணிக்கையில் பெரியதாக இருக்கும் ஒரு சமூகத்தின் ஆளும் குழுமமானது, இந்த எண்ணிக்கையை எவ்வாறு எப்போதும் தமக்கு சார்பாகவே வைத்திருப்பது என்ற எண்ணத்துடனேயே செயற்பட ஆரம்பிக்கிறது. குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் வாக்குரிமைகளை பறிப்பது: குறிப்பிட்ட மக்கள் தம்மை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்ய முடியாதவாறு குடிசனப்பரம்பலை மாற்றியமைப்பது என்று தொடர்கிறது. அடுத்த கட்டத்தில் இது அரிதான மூலாதார வளங்கள் பற்றிய போட்டியாக, போராட்டமாக மாறி (Resourse War)வன்முறை மூலமாக இதற்கு தீர்வு காணப்படுகிறது. இந்த போரில் சிங்கள பேரினவாத அரசானது அடுத்தடுத்ததாக, ஒவ்வொரு களமாக தேர்ந்தெடுத்து தனது தாக்குதல்களைத் தொடுக்கிறது. தனிச்சிங்களச் சட்டம், சிங்கள சிறீ, இனரீதியான தரப்படுத்தல், கலாச்சாரரீதியான ஒடுக்கு முறைகள்... இப்படியாக தொடர்ந்து நேரடியான வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளிக் வடிவத்தை எட்டும் போது, தமிழ் மக்களது ஆயுத போராட்டமானது தோன்றுகிறது.

பிரிட்டிசாரின் ஆட்சிக் காலத்தில் உள்ளூர் நிர்வாக அதிகாரங்களை படிப்படியாக உள்ளூரிலுள்ள ஆளும் குழுமங்களின் கைகளில் ஒப்படைக்கும் நோக்கில் தனது அரசியல் சீhதிருத்தங்களைத் தொடங்கியபோது, ஆரம்பத்தில் சிங்கள தமிழ் மேட்டுக் குடிகளிடையே நெருக்கமான உறவும் நம்பிக்கையும் பலமாக நிலவியது. கரையோர சிங்கள 'கொவி' சாதியினர், தமிழ் வெள்ளாள சாதியினருடன் நல்ல நெருக்கமாக உறவுகளைக் கொண்டிருந்தனர். அப்போது பொருளாதாரரீதியில் புதிதாக பலம் பெற்று வந்த சிங்கள 'கரவா' சாதியினர் ஏனைய இரண்டு தரப்பினருடனும் போட்டியிட வேண்டியிருந்தது. 1912 இல் மானிங் சட்ட திருந்தங்களின் அடிப்படையில் நடைபெற்ற சட்டசபைக்கான தேர்தலில் 'படித்த இலங்கையரது பிரதிநிதித்துவத்திற்கான' போட்டியில் ஒரு சிங்கள கரவா சாதியைச் சேர்ந்த சேர் மார்க்கஸ பெர்னான்டோ (Sir Marcus Fernando) என்பவருக்கு எதிராக தமிழ் வெள்ளாளரான பொன். இராமநாதனை ஆதரிக்க சிங்கள கொவி சாதியினர் முன்வந்தனர். இதன் மூலம் இலங்கை முழுவதற்குமான படித்த மக்களது பிரதிநிதியாக பொன். இராமநாதன் தெரிவானார். இப்படிப்பட்ட நிலைமையில் சிங்கள கரவா சாதியினர் அரசியல் அதிகாரத்தில் தமது பங்கைப் பெறுவதானால் சிங்கள கொவி – தமிழ் வெள்ளாளரது கூட்டை உடைத்தாக வேண்டியிருந்தது. அதற்கான கருவியான சிங்கள மொழி பற்றிய விடயம் பயன்பட்டது. சிங்கள் 'கராவா' மேட்டுக்குடியானது "சிங்களம் மட்டும்" தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததன் நோக்கமே இந்த சிங்கள 'கொவி' - தமிழ் 'வெள்ளாள' கூட்டை உடைப்பதேயாகும். இந்த போராட்டத்தில் முன்னின்ற அத்தனை முன்னணி பிரமுகர்களும், பிக்குகளும், அவர்களது 'ராமாயான நிக்காய' என்ற பௌத்த சங்கமும் முழுக்க முழுக்க சிங்கள கரவா சாதியைச் சேர்ந்தவர்களே. இப்படியாக தமிழ் வெள்ளாளரை விலையாகக் கொடுத்தே, சிங்கள கராவ சாதியனர் சிறீலங்கா அரசில் தமது பங்கைப் பெற்று சிங்கள ஆளும் குழுமத்தின் ஒரு பகுதியினராக ஆகினர். இப்படியான தமிழருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சிங்கள பேரினவாதத்தின் ஊற்று மூலமாக சிங்கள தேசத்தினுள் நிலவிய சாதி அடிப்படையிலான போட்டிகள் காரணமாக அமைந்தன.

சிங்கள் மக்களிடையே கரையோர சிங்களவருக்கும், கண்டிய சிங்களவருக்கும் இடையிலான போட்டிகளும் பலமானவையாக விளங்கின. ஒரு கட்டத்தில் கண்டிய சிங்களவரது மனக்குறைகளை களையும் விதத்தில் பண்டாரநாயக்காவால் சமஸ்டி திட்டம் முன்வைக்கப்பட்டது. 1926 இல் இலங்கையில் இருக்கும் மூன்று தேசங்களுக்கும் தனியான சமஷ்டி அமைப்புக்களின் தேவை பற்றி பண்டாரநாயக்கா வலியுறுத்தினார். 1944 இல் இலங்கை கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகியோர்கள் தனியான தேசங்கள் எனவும் விரும்பினால் அவர்கள் பிரிந்து செல்வது உட்பட அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்றும் தமது அறிக்கையில் தெரிவித்ததுடன், ஒரு சமஷ்டி முறையிலான அரசியலமைப்பின் தேவையை இலங்கையில் வலியுறுத்தினார்கள். இப்படியாக பண்டாரநாயக்காவும், கொம்யூனிஸ்ட்டு கட்சியும் முன்வைத்தபோது கண்டிய சிங்களவர்கள் அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட தமிழ் தலைமைகள் கொடுக்கவில்லை. அவர்கள் சிங்கள 'கொவி'களுடன் சேர்த்து தம்மை பெரும்பான்மையாக கருதிக் கொள்ளும் ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். இந்த கனவுகள் களைவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. மலையக மக்களது பிரசா உரிமை மற்றும் வாக்குரிமைகள் பறிக்கப்பட்ட பின்பு திடீரென விழித்தெழுந்தவர்கள் 'தமிழரசுக் கட்சி'யை தாபித்தார்கள். அதன் அங்குரார்ப்பன கூட்டத்தில் செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய உரையில், "தமிழ் மக்கள், சிங்கள மக்களைவிட எல்லா அடிப்படையான அம்சங்களிலும் வேறுபட்ட ஒரு தனியான தேசமாக அமைவதாக" வலியுறுத்தினார். தமிழரசுக் கட்சியானது தொடர்ச்சியாக முன்னெடுத்த பல் வேறு போராட்டங்கள் மூலமாக தமிழ் தேசிய உணர்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் பரப்புவதில் வெற்றி பெற்றார்கள். தமிழ் தேசிய கிளர்ச்சிகள் தமிழர் தாயகத்தில் மிகவும் தீவிரமாகவே நடைபெற்றது. மாநாடுகள், பாத யாத்திரைகள், சத்தியாக்கிரகம் என்று பல்வேறு வெகுஜன போராட்ட முறைகள் மூலமாக முன்னெடுக்கப்பட்ட தேசியவாத கிளர்ச்சிகள் தமிழ் தேசியத்தை தமிழர் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல தவறவில்லை. தமிழர் தேசிய இயக்கமானது ஒரு போதும் மேட்டுக்குடி இயக்கமாக குறுக்கிக் கொண்டது கிடையாது. சாதாரண விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர், அரச ஊழியர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள்... என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டுதான் முன்னேறியது. தொடர்ந்துவந்த மொழிப் போராட்டம், தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டம், வட்டுக்கோட்டை மாநாட்டு தீர்மானம் போன்றவை அனைத்துமே முன்னைய நடவடிக்கைகள் பலனளிக்கத் தவறியதன் அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட்டன. இங்கே யாரோ குறிப்பிட்ட சிலர் தீடீரென தன்னிச்சையாக, தமிழ் தேசத்தின் தகுதிக்கு மீறிய கோரிக்கைகளை ஆர்வக் கோளாறு காரணமாக எழுந்தமானமாக முன்வைக்கவில்லை.

இங்கே நாம் ஒரு அசலான தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி என்பவற்றையன்றி வேறெதையும் காணவில்லை. இது ஸ்டாலினால் சூத்திரத்தினுள் அடைக்கப்பட முனைந்த ஒரு நிகழ்வுப் போக்கிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்ட ஒரு போக்கினூடாக இன்னொரு தேசமானது உருப்பெற்று தனக்கான தனியான அரசை அமைப்பதற்கான தனது விருப்பை தெரிவிக்கும் ஒரு வரலாற்றை நாம் அப்படியே எமது கண் முன்னாலேயே காண்கிறோம். பல குறைபாடுகள் உடையதுதான் என்றாலும் கூட, 1977 ம் ஆண்டுத் தேர்தலானது இந்த தமிழீழ கோரிக்கைக்கான சர்வஜனவாக்கெடுப்பாகவே கருதப்பட்டாக வேண்டியுள்ளது. (ஐ. நா. தலைமையில் ஒரு மிகவும் சுதந்திரமான, ஆயுத பயமுறுத்தல்கள் இல்லாத ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்த முடியாதவரையில் இதனை இப்படியாக ஏற்பது தவிர்க்கப்பட முடியாததாகிறது.) அதற்கு பின்பு 1983 இன் கலவரங்களுடன் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த தேசமுமே விடுதலைப் போராளிகளை முழுமனதுடன் ஆதரித்து உதவிகளைச் செய்து வந்தார்கள். இங்கே ஒரு மக்கள் கூட்டம் தனது விருப்பங்களை செயல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்த ஆயுத போராட்டத்தில் குறைபாடுகள் மிகப் பெரிய அளவில் காணப்பட்டாலும் மக்கள் தலைமையையும் போராட்டத்தையும் வேறுபடுத்திப் பார்க்கும் அளவிற்கு முதிர்ச்சி பெற்றவர்களாவே இருந்தார்கள். யுத்தத்தின் கடைசி நாட்களில், புலிகள் ஏற்படுத்திய குழறுபடிகளையும் மீறி, புலம் பெயர்ந்த நாடுகளில் மக்கள் கூட்டமானது இலட்சக்கணக்கில், பனிக்கால குளிரையும் பொருட்படுத்தாமல் வீதியில் திரண்டதே! இதனைவிட வேறு எப்படியாக ஒரு தேசம் தனது தேசிய உணர்வை வெளிப்படுத்த முடியும். இதற்கு மேல் இந்த மக்களை ஒரு தேசமாக அங்கிகரிக்க ஏதாவது ஒரு சூத்திரம் இடையூறாக இருக்குமானால், இங்கு திருத்தப்பட வேண்டியது சமூக இயக்கமல்ல: மாறாக சூத்திரமேயாகும்.

இப்படியாக பெரும்பாலான கொலனித்துவத்திற்கு பிந்திய நாடுகளில் போலவே இலங்கையிலும் பல்லின நாடாக இருந்த இலங்கை, சிங்கள் தேசியவாதத்தின் ஒடுக்குமுறைகள் காரணமாக பல்தேசிய சமூகமாக உருப்பெற்றுவிட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசமானது தனியான அரசை அமைப்பதற்கு போராடியுள்ளது. இப்போது அந்த போராட்டமானது பல்வேறு காரணங்கள் காரணமாக ஒடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு தோல்வியின் விளிம்பில் வைத்து, ஈழத்தமிழர் ஒரு தேசமா? என்று கேள்வி எழுப்புவதும், அதனை நிராகரிக்கும் வகையில் ஸ்டாலின் சூத்திரத்தை துணைக்கழைப்பதும் மிகவும் அபத்தமான காரியமாகவே படுகிறது.

- தொடரும்..

Link to comment
Share on other sites

மொழி அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்பட்டிருந்தால், தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து இலங்கையைக் காலம் காலமாக ஆட்சி செய்த தமிழ் மன்னர்களால் ஏன் சிங்கள மொழியை இல்லாமல் செய்யமுடியாமல் போனது? உண்மையில் சிங்கள மொழியை அழியாமல் காப்பாற்றிய சிங்கள மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

.

போக்துகேயர்,ஒல்லாதர்,ஆங்கிலேயர்களின் படைஎடுப்பின் மூலம் தமிழ் மன்னர்கள் பல்வீனம் அடைந்து இருக்க கூடும்,அதனால் தான் சிங்களமும் ,பெளத்தமும் சிறிலன்காவில் தப்பின என்று எடுத்து கொள்ள்லாம் .பெளத்தம் , தமிழ்மன்னர்களால் தமிழ் பிரதேசங்களில் அழிக்கபட்டு சைவம் புகுத்தப்பட்டது போல சிங்கள பகுதிகளிலும் பெளத்தம் அழிக்கப்பட்டு சைவம் சிங்களவருக்கு புகுத்தப்பட கால அவகாசம் கிடைக்கவில்லை போலும்

எமது போராட்டம் தோல்வியடைய உலகமயமாக்கல் ஒரு காரணம் என்று இப்ப சொல்வது போல் அந்த காலத்தில் இலங்கையில் சிங்களமும் பெளத்தமும் பிராந்திய சண்டியர்களாகிய தமிழ் மன்னர்களிடம் இருந்து தப்புவதற்கு மேற்கத்திய படைஎடுப்பு காரணமாக இருந்துஇருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கன காலத்திற்கு முந்தி கேள்விப்பட்டேன் கண்டி சிங்கள்வர்கள் ஏனைய சிங்களவர்களைப் பார்க்கவும் நல்லவர்கள் என இது உண்மையா?

Link to comment
Share on other sites

நான் கன காலத்திற்கு முந்தி கேள்விப்பட்டேன் கண்டி சிங்கள்வர்கள் ஏனைய சிங்களவர்களைப் பார்க்கவும் நல்லவர்கள் என இது உண்மையா?

எல்லா சிங்களவனுக்கும் மனிதனின் குணம் இருக்கும்தானே?அனுராத ரத்வத்தை கண்டி சிங்களவன் .

சில சிங்களவர் சொல்லினம் தங்களின் சிங்களவனைவிட தமிழர்கள் நல்லவர்கள் என்று :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது யுத்தமும் சர்வதேச நிலைமைகளும்

யுத்தம் நடந்து முடிந்த விதம், மற்றும் இதில் மேற்கு நாடுகளும், சீனா, ரஷ்யா மற்றும் முற்போக்கு முகாமைச் சேர்ந்த நாடுகளும் ஆற்றிய பாத்திரம் குறித்தும் பல கேள்விகள் எழுகின்றன. எமது போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என்பதில் முழு உலகமும் அக்கறை காட்டியதா? மேற்கு நாடுகளின் சில அரைகுறையான முன்னெடுப்புக்களையும் மீறி சீனாவும் ஏனைய நாடுகளும் கொடுத்த ஆதரவுகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? இந்த பின்னணியில் தேசியவாதம், தேசிய விடுதலை போன்றவற்றின் எதிர்காலம் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் எம்முன் எழுகின்றன.

இன்றைய சர்வதேச நிலைமைகளை புரிந்து கொள்வதற்கு அண்மையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுவரும் புதிய அணிசேர்க்கைகளை கவனிப்பது அவசியமானது. 1990 களில் இருந்தது போன்ற நிலைமைகள் இப்போது சர்வதேச அரங்கில் காணப்படவில்லை என்பதுதான் இங்கு முக்கியமான விடயமாகும். 1990 களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியனது தகர்வை அடுத்து, ஒற்றைத் துருவத்தின் தலைமை நாடுகள் என்ற வகையில் அமெரிக்காவின் தலைமையில் ஐரோப்பிய யூனியனும் ஜப்பானுமாக விரிவான அளவில் சர்வதேச அரங்கில் ஏனைய நாடுகளை கட்டுப்படுத்தும் நிலைமையில் இருந்தன. மூலதனத்தின் நகர்வு, மற்றும் சர்வதேச கடன் பரிவர்த்தனைகள் போன்றவற்றில் இந்த நாடுகளுக்கு இருந்த பலத்தை பயன்படுத்தி, ஏனைய நாடுகளை மிக எளிதாக வற்புறுத்தி தமது நோக்கங்களுக்கு இணங்க வைப்பதில் வெற்றி பெற்றனர். ஆனால் இந்த நிலைமையை அப்படியே தொடர்வதில் இப்போது பிரச்சனைகள் எழுந்துள்ளன. அவற்றில் முக்கியமான விடயம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்த உலகமயமாதல் தொடர்பான மாற்றங்களின் ஊடாக தாமும் பொருளாதார ரீதியலில் பலம் பெற்ற நாடுகளாக உருப்பெற்று வருவதாகும். இப்போது மேற்கு நாடுகளுக்கு கடன் கொடுக்கும் முக்கிய நாடாக சீனா மாறிவிட்டுள்ளது. அத்தோடு முன்னர் உலக வர்த்தக மையம் தொடர்பான பிரச்சனைகளில் செயற்பட்டது போலன்றி, இந்த வளர்ந்து வரும் நாடுகளில் முக்கியமான நாடுகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரக்ஞையுடன், ஒன்று பட்டு செயற்பட தொடங்கியுள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'BRIC' நாடுகளின் கூட்டமைப்பானது இப்போது உலகளாவிய பிரச்சனைகளில் இணைந்து செயற்படத் தொடங்கியிருக்கிறன. இவை தமக்குள் மாத்திரமன்றி, ஏனைய மூன்றாம் உலக நாடுகளையும் தம்மோடு இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனும் ஜப்பானும் இணைந்த கூட்டிற்கு எதிராக, இந்த புதிய கூட்டானது ஒரு பலமான எதிரணியாக உருவாகியுள்ளது. இவற்றின் கூட்டு செயற்பாடானது பொருளாதார தளத்தில் மட்டும் நின்றுவிடாமல், ஏனைய அரசியல் மற்றும் முக்கியமான சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் விரிவடைந்து வருகிறது. இந்த முரண்பாட்டை சரியாக இனம் கண்டு தனது நலனுக்கு உரிய வித்தில் முழுதாக பயன்படுத்திக் கொண்டதில்தான் சிறீலங்கா அரசின் வெற்றியானது அடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் மேற்கு நாடுகள் சிறீலங்கா அரசிற்கு உதவ தயங்கியபோது சீனா மற்றும் இந்த அணியைச் சேர்ந்த நாடுகளிடம் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொண்டதுடன், யுத்தம் தொடங்கிய போது மேற்கு நாடுகளிடம் இருந்து வந்த அழுந்தங்களை சமாளிப்பதற்கும் இதே சாதுர்யம் பயன்பட்டது. யுத்தம் முடிந்த பின்பு மனித உரிமை மீறல் மற்றும் போர்க்கால குற்றங்கள் தொடர்பாக எழுந்த முறைப்பாடுகளையும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முடியாதவாறும், மனித உரிமைக்கான அமைப்பில் வாக்களிப்பில் தனக்கெதிரான தீர்மானங்களை தோற்கடிப்பதற்கும் இதே முறைகளையே சிறீலங்கா அரசு பயன்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகளின் போது வெனிசுவேலா, கியூபா போன்ற நாடுகளும் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாக வாக்களித்தமை பலருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்திருந்தது. இதில் ஆச்சரியப்பட, அல்லது அதிர்ச்சியடைய ஏதும் இருப்பதாக கருத முடியாது. ஏனெனில் சர்வதேச உறவுகள் என்பது முற்றிலும் தர்மம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுபவை அல்ல . ஆனாலும் அந்தந்த நாடுகளிலும், சர்வதேச அளவிலும் ஏற்படும் பொதுஜன அபிப்பிராயம், மற்றும் சர்வதேச அமைப்புகளின் அழுத்தம் போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்பட அல்லது செல்வாக்கு செலுத்தப்படக் கூடியவையே ஆகும். சர்வதேச உறவுகள் பற்றிய விடயங்களை முற்றிலுமாக நிராகரித்து, சர்வதேச நியமங்களை தூக்கியெறிந்ததற்கு விடுதலைப் புலிகள் கொடுத்த விலைதான் இந்த தோல்வியாகும். இந்த உறவுகளின் சிக்கலான தன்மைகளை சரிவர புரிந்து கொண்டு சரியான முறையில் காய்களை நகர்த்திய சிறீலங்கா அரசானது வெற்றியடைந்தது.

எதிர்காலம் குறித்து

இந்த தோல்வியை அடுத்து, மாறியுள்ள சர்வதேச சூழலில் தேசிய விடுதலைப் போராட்டங்களோ, அல்லது மொத்தத்தில் எதிர்ப்பியக்கங்களோ இனிமேல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற வகையில் நம்பிக்கையீனத்தை பரப்புவதை நாம் அனுமதிக்க முடியாது. இதில் நாம் சில விடயங்களை கருத்திற் கொண்டாக வேண்டியுள்ளது.



  • முதலாவதாக, சர்வதேச சூழலானது எமது போராட்டத்திற்கு பாதகமாக அமைந்தது உண்மையே. ஆயினும், இதனை முற்றிலும் இப்படியே போக விட்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு அதிகமானது. போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டே சர்வதேச விவகாரங்கள் உரிய கவனத்தை பெற்றிருக்குமாயின் இந்த நெருக்கடிகளை பெருமளவில் சமாளித்து இருக்க முடியும்.



  • இரண்டாவதாக, இன்றுள்ள சர்வதேச சூழ்நிலை என்றென்றைக்குமே இப்படியாக இருக்கப் போவதில்லை. இன்றுள்ள நாடுகள் பலவற்றில் பல மாற்றங்கள் ஏற்படவும், அதன் விளைவாக இந்த அணிசேர்க்கை இப்போது நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத மாற்றங்களுக்கு உள்ளாவதற்கும் கூட வாய்ப்புக்கள் உண்டு. ஆதலால் எதனையும் முன்கூட்டியே கழித்துக் கட்டிவிடுவது ஆபத்தானது.



  • மூன்றாவதாக, ஒரு தேசம் ஒடுக்கப்படும் வரையில் அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் எழுவது தவிர்க்கப்பட முடியாததாகும். இதனை தவிர்ப்பது தொடர்பான கட்டுப்பாடானது அந்நிய சக்திகளின் கரங்களில் அதிகம் இல்லை. போராட்டங்களை ஒட்டு மொத்தமாக நசுக்குவதன் மூலமாக இப்படிப்பட்ட அடிப்படையான பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது. பெரியளவிலான புலம் பெயர் சமூகம், நவீன கணணி மற்றும் இணையத்தள வசதிகள், புலம் பெயர்ந்தவர்களுக்கு இடையிலும், புலம் பெயர்ந்தவர்களுக்கும் - புலத்தில் இருப்பவர்களுக்கும் உருவாகக் கூடிய பலமான வலைப்பின்னல் அமைப்புகள், கடுமையான போராட்ட அனுபவங்கள், தொடரும் ஒடுக்குமுறைகளும், தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண இயலாதா சிங்கள மற்றும் தமிழ் தலைமைகளில் இயலாமை போன்றவை இந்த முரண்பாடுகளையும், போராட்டங்களையும், பல் வேறு வடிவங்களிலும், தளங்களிலும் கொண்டுவரவே செய்யும். இதனை கட்டுப்படுத்துவது சர்வதேச சமூகத்தால் மாத்திரம் ஆகக் கூடியதன்று.



  • நான்காவதாக, சர்வதேச சமூகம் பெரியளவிலான ஆயுத போராட்டங்கள் தொடர்ச்சியாக நடப்பதை விரும்பவில்லை என்பது உண்மைதான். "எல்லை கடந்த பயங்கரவாதம்" பற்றிய எச்சரிக்கை இதற்கு முக்கியமான காரணமாகும். ஆதலால் இந்த முரண்பாடுகள் பெரிய அளவிலான ஆயுதம் தாங்கிய போராட்டங்களாக வெடிக்காமல் தவிர்ப்பதில் இந்த நாடுகளுக்கு அக்கறை இருக்கவே செய்கிறது. அத்தோடு அகதிகள் மேற்கு நாடுகளை நோக்கிக் குவிவது, அத்துடன் கூடவே உழைப்புச் சக்தி இடம் பெயர்வது போன்ற பிரச்சனைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் இது அவசியமானதாகிறது. ஆனால் அதற்காக எல்லாவிதமான போராட்டங்களையும் முற்றாக நசுக்கிவிடலாம் என்று நம்பும் அளவிற்கு அவற்றின் இராஜாங்க திணைக்களங்கள் ஒன்றும் போராட்டங்கள் பற்றிய அறிவு அறவே அற்றவர்கள் அல்லர். எங்கெல்லாம் அடக்குமுறைகள் தொடர்கின்றனவோ, அங்கெல்லாம் போராட்டங்கள் தொடங்குவது தவிர்க்கப்பட முடியாதது என்ற படிப்பினையை இவர்கள் தமது சொந்த வரலாற்றிலேயே பல தடவைகள் நேரடியாக கற்றவர்கள். ஆதலால் நீண்ட காலத்தில் இது எமக்கு சாதகமாக திரும்பவும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. தொடர்ந்தும் சிறீலங்கா அரசானது அரசியல் தீர்வுகளை முன்வைக்காமல் இழுத்தடிக்கையில் இது எமது போராட்டங்கள் பற்றி சாதகமான நிலைமைகளை தோற்றுவிக்காது என்பதில்லை.

ஒரு போராட்டத்தின் வெற்றி – தோல்வியானது வெறுமனே அதன் அகநிலைமைகளாலோ அல்லது அதன் புற நிலைமைகளாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக அக மற்றும் புற காரணிகளின் கூட்டிணைவே இதனை நிர்ணயிக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களும் சீரமைக்கப்படும் பொழுது ஒரு சரியான அக மற்றும் புற காரணிகளின் கூட்டிணைவிற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகளவில் இருக்கின்றனன. அத்தோடு இன்றைய சர்வதேச ஒழுங்கமைவானது இப்பொழுதும் ஒரு மாறும் கட்டத்திலேயே, அசைவியக்கத்திலேயே இருக்கிறது. இதனை ஒரு பொது விதியாக ஆக்குவதும், இந்த அடிப்படையிலேயே எதிர்கால போராட்ட நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நம்பிக்கையீனத்துடன் பார்ப்பதும் தவறாகும். எதிர்காலத்தில் இன்னமும் என்னென்ன சாத்தியப்பாடுகள் இருக்கக் கூடும் என்பதை யாருமே முன்னனுமானிப்பது மிகவும் கடினமானதாகும். வேகமாக மாறிக் கொண்டிருக்கும், போக்குகளாக இன்னமும் திடநிலை ((settle) ஆகாத ஒரு கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். ஆகவே எலல் hவற்றையும் முன்கூட்டியே தூக்கிப் போடும் ஒரு வேலை இப்போது யாருக்கும் பயன்படாது.

நாவலன் தனது கட்டுரை முழுவதும் தமிழர்களது தேசியவாதத்தை பலவிதமாக விமர்சித்து வந்த போதிலும், அது தேசியவாதம் தானா என்ற கேள்விகளை எழுப்பிய போதும், இறுதியில் ஈழத் தமிழரது தேசியவாதம் தவிர்க்க முடியாதது என்ற கருத்துடன் முடிக்கிறார். இந்த முடிவுடன் நாம் உடன்பாடு காணும் போதிலும் இவர் கட்டுரையின் முன்பகுதியில் எழுப்பிய பிரச்சனைகளில் தீர்வாக அன்றி, கட்டுரையின் கடைசிப் பகுதியில் திடீரென வலிந்து திணிக்கப்பட்டது போன்ற தொரு உணர்வைத்தான் தருகிறது. அது ஏன் நடைபெற்றது என்பதை ஆசிரியர் கவனிக்க வேண்டும். தனது வாதத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக தான் ஒத்துக் கொள்ளும் ஒரு அரசியல் நிலைப்பாட்டை தனது கோட்பாட்டு நிலைப்பாட்டில் இருந்து நிரூபிப்பதில் உள்ள நெருக்கடியாலா? அல்லது நடைமுறை அரசியலானது கோட்பாட்டு சூத்திரங்களை தூக்கியெறிந்து விட்டதன் விளைவா என்பதை வாசகர்களும் நோக்க வேண்டும்.

இறுதியாக மார்க்சியம் பற்றிய எமது புரிதல்களையும் நாம் கேள்விக்குள்ளாக்கும் நேரத்தை அடைகிறோம். மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம் என்கிறோம். சமூகம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறோம். அப்படியானால் அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், மற்றும் அறிவுத்துறையின் ஏனைய கிளைகளில் ஏற்படும் கோட்பாட்டு வளர்ச்சிகளுக்கு இணையாக நாமும் எமது கோட்பாட்டு சாதனங்களை தொடர்ந்தும் புதிதாக உருவாக்கிக் கொள்ளவும், வரலாறு புத்தம் புதிதாக முன்வைக்கும் வளமான பிரச்சனை ளில் அவற்றை பரீட்சித்துப் பார்க்கவும் எமக்கு போதியளவு திறமையும், துணிவும் இருக்க வேண்டும். அப்படியாக இருக்கும் போது மட்டுமே நாம் "வரலாற்றில் மிகவும் முன்னேறிய கோட்பாட்டினால் வழிநடத்தப்படுபவர்கள்" (லெனின்) என்று உரிமை பாராட்ட முடியும். இதற்கு மாறாக வரட்டுச் சூத்திரங்களை தூக்கிப் பிடிப்பது நம் கண்முன்னே நடக்கும் வரலாற்று நிகழ்வுகளை புரிந்து கொண்டு அரசியல்ரீதியாக தலையீடு செய்ய ஒருபோதும் உதவப்போவதில்லை.

ஒக்டோபர் 07, 2009

நாவலனது கட்டுரையை பார்க்க:

http://inioru.com/?p=5170

உசாத்துணை நூல்கள்:

Antonio Gramsci: The Prison Note book

Benedict Anderson: The Imagined Community

Earnest Gellner: Nation and Nationalism

J.V. Stalin: Marxism and National Question

Karl Marx: Capital Vol 1

Michal Lowy: Why Nationalism? : Socialist Register 1993 .

Minqi Li: The United States, China, Peak Oil, and the Demise of Neoliberalism

Nicos Poulantzas: State, Power, Socialism

Samir Amin: Globalisation and Imperialism

Tom Nairn: The Break up of Briton

V.I. Lenin: The Right of Nations to Self-Determination

V.I. Lenin: What is to be Done?

William K Tabb: Globalization Is An Issue, The Power of Capital Is The Issue

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.