Jump to content

தமிழினப் படுகொலைகள் ஆவணப்புத்தகம்.


sathiri

Recommended Posts

சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, 2009 அக்டோபர் இறுதி வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதம் அமைப்பு, புத்தக வெளியீட்டிற்காக எழுத்துபூர்வமான அனுமதியை முறையாக பெற்றுக்கொண்டு, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்துடன் (International Association of Tamil Journalists,) தற்போது அப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது. (அனுமதி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தறின.2009 ம் ஆண்டு மேமாதம் கடைசிகட்ட போர் குறித்த ஆவணங்கள் தற்போது அதிமுக்கிய பொறுப்பாளர்களால் சேகரிக்கப்பட்டு நிறைவு பெற்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

இப்படுகொலையில் இறந்தவர்கள் யார், யார் - காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்நதவர்கள், 14 வயதுக்கு கீழ்உள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி முதலிய ஆவணங்களை கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East Secretariat on Human Rights)' தன்னிச்சையாகவும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் செயல்பட்டு நேரிடையாக பார்வையிட்டு இந்த ஆவணங்களை சேகரித்து உள்ளது. அதேபோல், இப்புத்தகத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்ட நபர்களின் புகைப்படங்களும் கூடிய மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றவைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. 2002-ல் அமைதி உடன்படிக்கையின் போது நடைபெற்ற படுகொலைகளும் இதில் அடக்கம்.

புத்தகம் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட பக்கங்களில், இப்போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை மனிதம் - மனித உரிமை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தின் மனித உரிமை விடுதலைக்காக பாடுபட்டுவரும் திருமதி. எலின் சாடார் அவர்கள் கொடுக்க உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும், மிகச்சிறந்த ஓவியரான நந்தா கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

இனப்படுகொலையின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இப்புத்தகம் விளங்கப் போகிறது.சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்களிற்கு எதிராக மனிதவுரிமை அமைப்புக்களோ..நாடுகளோ..தனி நபர்களோ சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு இந்த ஆவணம் மிக உதவியாக இருக்கும். இப்புத்தகங்களை 2009ம் ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

6 மொழிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த ஆவணப்புத்தகத்தை அச்சிட்டு வெளி கொண்டுவர இந்திய ரூபாய் பல லட்சம் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம், இப்புத்தகம் விற்பனை நோக்கம் கொண்டது அல்ல. புத்தகம் கொண்டுவர ஆகும் செலவு மற்றும் இதர செலவுகளை மட்டுமே நன்கொடையாக வாங்கப்படும்.

இப்புத்தகத்தில் கிடைக்கும் நன்கொடை தொகையை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிக முக்கிய செய்தியாகும்.

தமிழர் வரலாற்றில் பதிப்படப்போகும் இந்த ஆவணப் புத்தகத்தை வெளிகொண்டு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஆதரவு எதிர்பார்க்க்படுகிறது. குறித்த காலத்தில் இப்புத்தகத்தை கொண்டு வர உதவிகாரமாய் உங்கள் ஆதரவு இருக்கும். அத்தோடு, நிதி ஆதரவு கொடுப்போருக்கு, அவர்களுக்கு உரிய புத்தகங்கள் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் வெளிவர அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பும்இ ஆதரவும் வேண்டி நிற்கிறோம். உங்களின் அரிய யோசனைகளையும் எங்கள் முகவரிக்கு தெரியப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.

புத்தக நிதி ஆதரவினை கொடுக்க விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தொடர்பு:

அக்னி சுப்ரமணியம்

செயல் இயக்குநர், மனிதம் - மனித உரிமை அமைப்பு

274- ஜி.சி, அவ்வை சண்முகம் சாலை, இராயப்போட்டை, சென்னை - 600014, தமிழகம்

தொலைப்பேசி எண் : +91-9003027712 - 9443322543 - 9003133661

தொலைநகலி எண் : +91-44-28133968

மின்னஞ்சல் : manitham@gmail.com

இணையம் : www.manitham.net/nesohr

சிறி

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் (International Association of Tamil Journalists), France

தொலைப்பேசி : 0033611149470

மின்னஞ்சல் : sri@orupaper.com sathiri@gmail.com

post-1260-12573611084794_thumb.jpg

Link to comment
Share on other sites

நல்ல வியத்தை குறுக்காலை பாய்ஞ்சு குழப்பவும் கனடாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பூசாரிகளின் அடியார்கள் அவசர அவசரமாக தங்கள் குதப்பல் குழப்பல்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக கனடாவிலிருந்து விழிப்புணர்வுவாதம் கொண்ட நக்கீரப்பெருந்தகை தனது குழப்ப வேலையை ஆரம்பித்துள்ளார்.

எனினும் குழப்பிகளை உதைத்துத் தள்ளிவிட்டு ஆவணப்புத்தகம் வெளியாகவுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகநீண்ட காலமாக எமதுமக்கள் மீதான இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் இந்த முயற்சி அவசியமானதும் தேவையானதும்.

இது வெளிவரும்போது சிறீலங்காவின் இனப்படுகொலையின் நீண்டசரித்திரம் உலகை அதிரச்செய்யும்.

இதில் செயற்பட்டுவரும் அனைவரும் என்றென்றும் நினைவில்கொள்ளத் தக்கவர்கள்.

Link to comment
Share on other sites

மிக மிக அவசியாமான் ஒரு பணி...உங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிலும் கவனம் செலுத்தவும். இத்தகைய பணிக்கு, இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் தன் எதிர்ப்பினைக் காட்ட முற்படும்

தனிமடலைப் பார்க்கவும்

Link to comment
Share on other sites

மிக மிக அவசியாமான் ஒரு பணி...உங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிலும் கவனம் செலுத்தவும். இத்தகைய பணிக்கு, இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் தன் எதிர்ப்பினைக் காட்ட முற்படும்

தனிமடலைப் பார்க்கவும்

நன்றிகள் நிழலி்...எதிர்ப்புக்கள் வரும் என்று எதிர் பார்ததுதான்..அது வந்து கொண்டுதானிருக்கிறது..எங்கள் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது..வேலைகள் முடிந்ததுமே இது பற்றிய விடயங்களை வெளியிட எண்ணியிருந்தோம்..ஆனால் இந்த வெளியீட்டை தாங்கள் எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதை எதிரியை விட பூசாரிகள் மும்மரமாக நிற்கிறார்கள்..அதனால்தான் புத்தகம் பற்றிய விபரத்தினை வெளியிடவேண்டி வந்தது..ஆனால் புத்கம் ஆறு மொழிகளில் ஆரம்பகட்டத்தில் வெளிவரும்..நன்றி.

Link to comment
Share on other sites

நன்றிகள் நிழலி்...எதிர்ப்புக்கள் வரும் என்று எதிர் பார்ததுதான்..அது வந்து கொண்டுதானிருக்கிறது..எங்கள் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது..வேலைகள் முடிந்ததுமே இது பற்றிய விடயங்களை வெளியிட எண்ணியிருந்தோம்..ஆனால் இந்த வெளியீட்டை தாங்கள் எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதை எதிரியை விட பூசாரிகள் மும்மரமாக நிற்கிறார்கள்..அதனால்தான் புத்தகம் பற்றிய விபரத்தினை வெளியிடவேண்டி வந்தது..ஆனால் புத்கம் ஆறு மொழிகளில் ஆரம்பகட்டத்தில் வெளிவரும்..நன்றி.

எதிரிகளை விட இந்த பூசாரிகள்தானே எம் போராட்டத்தையே குழி தோண்டிப் புதைத்தவர்கள்.

உங்ககளை நான் பாதுகாப்பில் கவனம் எடுக்குமாறு கோரியதைக் கூட ஒருவர் திட்டி, இப்படி பயமுறுத்தினால் எப்படி மற்றவர்கள் இந்த விடயங்களில் ஈடுபடுவர் என கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் இன்று. எங்கட மக்களின் புரிந்து கொள்ளும் திறன் அதிரவைக்கின்றது

Link to comment
Share on other sites

Book to reveal Lanka's bloody past - The New Indian Express / 06.11.2009 / Page : 2

WITH a view to giving a comprehensive insight in to the alleged massacres committed by the Sri Lankan government against the ethnic Tamil population on the island nation since 1956, Chennaibased human rights trust Manitham will soon publish the details compiled by a local NGO in a book and release it in six languages.

Speaking to Express, Agni Subramaniam, executive director of Manitham said, "North East Secretariat on Human Rights (NESoHR) painstakingly compiled all the details with credible field verifications and gave the permission to publish the details in a book in six languages ­ Tamil, English, French, German, Sinhala and Hindi."

Famous human rights activist from the United States, Dr Ellyn Shander will write the foreword for the book, while Nanda Kandasamy, a Lankan national living in Canada has been entrusted with the designing.

NESoHR, which operated from Kilinochi with due permission from the Lankan gover nment, complied all the harrowing details in two reports, Lest We Forget (Part 1 and II). However, the agency could not record any details of deaths or destruction during the final days of the recent Lankan war due to security concerns.

The book will not be released commercially. However, the money generated by publishing the book would be remitted back to the welfare of Lankan Tamil children affected by the ethnic war, Subramaniam said.

The book sheds light on the atrocities that the Lankan Tamils were subjected to in a so-called ethnic cleansing drive by the Sri Lankan state, long before even a single shot was fired by a Tamil militant, says Subramaniam.

Lest We Forget comprehensively recounts gory massacres like the Veeramunai Massacre (1990), Saththrukkondan Massacre (1990), Vantharumoolai Massacre (Easter n University camp) (1990), Chemmani Massgraves (1996), Krishanthi-Rape and Murder (1996) and Bindunuwewa Rehabilitation Centre Carnage (2000), in which 28 inmates, mostly children, were killed and 14 injured, even though 60 (Sinhalese) police officers were stationed there that night to `protect' the inmates.

The book is set to be published on December 10, which is celebrated around the world as Human Rights Day.

- G Saravanan | ENS / Chennai

http://epaper.expressbuzz.com/NE/NE/2009/11/06/ArticleHtmls/06_11_2009_002_008.shtml?Mode=1

Link to comment
Share on other sites

எதிரிகளை விட இந்த பூசாரிகள்தானே எம் போராட்டத்தையே குழி தோண்டிப் புதைத்தவர்கள்.

உங்ககளை நான் பாதுகாப்பில் கவனம் எடுக்குமாறு கோரியதைக் கூட ஒருவர் திட்டி, இப்படி பயமுறுத்தினால் எப்படி மற்றவர்கள் இந்த விடயங்களில் ஈடுபடுவர் என கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் இன்று. எங்கட மக்களின் புரிந்து கொள்ளும் திறன் அதிரவைக்கின்றது

எங்கெல்லாமோ இருந்து பூசாரிகளின் வால்கள் நூல்களெல்லாம் இந்தப் புத்தகத்தை வெளியில் வர விடாமல் தடுக்க முளைத்துக் கொண்டிருக்கிறது நிழலி.

இனி இந்த ஆவணப்புத்தக வெளிவருகையில் தொடர்பில்லாமல் மூக்கை நுளைக்கும் அகில அனைத்துலக பூசாரிகள் சீடர்கள் தேசியத் தூண்கள் அனைவரையும் மக்கள் முன் வெளிக்காட்டுவோம். இதில் வட்டுக்கோட்டைப் பூசாரிகள் என்றாலும் சரி நாடுகடத்திய பூசாரிகள் என்றாலும் சரி முடிவு உரியவர்கள் கையில்.

Link to comment
Share on other sites

இந்த புத்தகத்தின் தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான வெளியீடுகள்..உலக மனிதவுரிமை தினமான மார்கழி 10 ந்திகதி வெளியிட தீர்மானித்திருக்கின்றோம்..இதுவரை ஆதரவு தந்த அனைவரிற்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்கத்தக்க நகர்வு இது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புதினப்பலகையில் வெளிவந்த செய்தி

ஆவணநூலாகும் ஈழத்தமிழினப் படுகொலைகள்

[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 09:44 பி.ப. GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ]

ஈழத்தமிழர்கள்மீது 1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு மேமாதம் வரையில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்ட்ட படுகொலைகளின் தகவல் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட 'தமிழினப் படுகொலைகள்' என்ற ஆவண நூல் மிகவிரைவில் வெளிவர உள்ளது.

கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்' (North East Secretariat on Human Rights) தன்னியல்பாகவும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் இத்தகவல் தரவுகளை சேகரித்து ஆவணமாக்கியுள்ளது.

ஈழத்தமிழர் மீதான படுகொலைகளில் மிக மோசமான படுகொலைகளின் தொடக்கமான 1956ம் ஆண்டு இங்கினியாகலைப் படுகொலையிலிருந்து 2008ம் ஆண்டு இறுதிவரை சேகரிப்பட்ட விபரங்கள் இந்நூலில் பதிவாக்கப் பட்டுள்ளன.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தேறின. அவற்றுடன் 2009ம் ஆண்டு மேமாதம் இறுதிக்கட்டம் வரையான தரவுகள் சேகரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகிறன என்பதும் குறிப்பித்தக்கது.

மேலும் இந்நூலில் இறந்தவர்கள் யார், யார், காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்ந்தவர்கள், 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி ஆகியவற்றுடன் படுகொலை நிகழ்ந்த இடங்களின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்டவர்களின் ஒளிப்படங்களும் முடிந்தவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தமிழர்களின் மனித உரிமை மற்றும் விடுதலைக்காக செயற்படும் திருமதி. எலின் சாடார் எழுத உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பினை, ஈழத்து ஓவியர் நந்தா கந்தசாமி மேற்கொள்கிறார்.

ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட பக்கங்களில் தயாராகும் இந்நூல், வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி ஆகிய ஆறு மொழிகளில் வெளிவர உள்ளன.

வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ள மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்நூலை வெளியிடுகின்றன.

மொழிமாற்ற பணிகளும் நூலாக்க பணிகளும் சீரான வேகத்துடன் நடைபெற்றுவருவதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.