Sign in to follow this  
four four bravo

RULES OF ENGAGEMENT (MOVIE)

Recommended Posts

போனகிழமைதான் 'Rules Of Engagement' இந்தப் படத்தை பார்த்தேன்.2000ம் ஆண்டளவில் இந்தப் படம் வெளிவந்திருக்கு.இவ்வளவுநாளும் கண்ணிலை படாமல் சனிக்கிழமைதான் தொலைக்காட்சியில் போட்டபோது பார்த்தேன்.சாமுவெல் ஜக்சன் ஒரு அமெரிக்க படை அதிகாரியாக இதில் மிகஅற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார்.போர்க்குற்றங்களும் அவை அணுகப்படும் முறைகளும் அதற்குள்ளான அதிகார சண்டைகளும் பலியாகும் மனிதமும், தனி வீரர்களும் என்று மிக அழகான கதை அமைப்பு.இராணுவ நீதிமன்ற விசாரணையும் அது எடுத்து எறிந்துவிட்டுப் போகும் உயிர்விலையும்,விவாதங்களும்,சம்பிரதாயங்களும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.மூலக்கதையின் கருவும் செய்தியும் எங்களால் ஏற்கமுடீயுதோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து இன்னும் ஏதோ நெஞ்சுக்குள் ஊர்வது போல ......!ஒவ்வொரு பாத்திரமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது.எங்காவது இந்தப்படம் பார்க்கக் கிடைத்தால் பார்த்தபின் எழுதுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சொல்ல மறந்துவிட்டேன்.காந்தி படத்தில காந்தியாக நடித்த 'பென்ங்கிங்ஸ்லி' இந்தப் படத்தில் மத்தியகிழக்கு நாடாகிய யேமன் அமெரிக்கதூதராக வந்து பொய்பேசும் ஒரு பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

படத்தின் கதை இப்பிடித்தான் ஆரம்பிக்கிறது.மத்திய கிழக்கில்உள்ள யேமன்நாட்டில் இருக்கும் அமெரிக்கதூதரகத்தின் பாதுகாப்புக்கான 'மரைய்ன்'

படைப்பிரிவு ஒன்றுக்கு தளபதியாக 'சாமுவல் ஜக்சன்' செல்கிறார்.அமெரிக்க தலையீடுகள் மற்றும் ஏகாதிபத்திய மனப்பாங்குக்கு எதிராக ஒரு பிரிவுமக்கள் தூதரகத்தின்முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.அதில் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் இருக்கின்றனர்.திடீரென ஆர்ப்பாட்டத்திலிருந்து துப்பாக்கித் தாக்குதல் தூதரகத்தை நோக்கி நடாத்தப்படுகிறது.தூதரக அதிகாரியும் குடும்பமும் உயிர் ஆபத்துக்குள் அவதிப்படுகிறார்கள்.தூதரகத்தை காத்துநின்ற அமெரிக்க படையின் மூன்றுவீரர்கள் காயமடைகின்றனர்.ஆர்ப்பாட்க்காரர்களை நோக்கி சுடும்படி 'சாமுவல் ஜக்சன்' உத்தரவிடுகிறார்.கண்மூடித்தனமான சுடுதலின் பின்னர் 80 க்கும் மேலான் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழந்தைகள் பெண்கள் உட்பட கோரமாக செத்துக்கிடக்கின்றனர்.

அமெரிக்காவின் முன்னனி பத்திரிகைகள் எல்லாம் யேமனியில் அமெரிக்கபடைகள் நடாத்திய கொலைகளை கண்டித்து தலையங்கம் எழுதி வெளியிடுகின்றன.அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சு இதில் இருந்து தப்புவதற்காக 'சாமுவல் ஜக்சனை' பலிக்கடாவாக்க முடிவுசெய்கின்றனர்.'சாமுவல் ஜக்சனுக்காக' அவரின் வியட்னாம் போர்வீரர் முன்வருகிறார்.இப்படிப்போகிறது கதை......!

கதை சொல்லப்பட்ட விதமும்,இசையும்(மிகஅற்புதம்),சாமுவல் ஜக்சனின் நடிப்பும் மொத்தத்தில் மிகமிக நல்ல படங்களில் ஒன்று

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this