Jump to content

அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம்


Recommended Posts

வணக்கம்

கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதில்லை என்று முறைப்பாடு செய்ய இடம் வைக்கக் கூடாது விளங்கிச்சோ. நான் போடுற உணவுகளைச் செய்து கொடுத்து உங்க வீட்டு எசமானிகளை உங்க செல்லப்பிராணிகள் ஆக்கிறது உங்க கையிலதான் இருக்கு சொல்லிப்போட்டன். ஸ் சத்தம் போடாதேங்கோ பெடியள் ஏற்கனவே இங்க ஒரு அட்டில் உலையரிசி….ச்சீச்சீ….அட்டில் கலையரசி இருக்கிறா நீங்கள் ஆர்ப்பாட்டம் பண்ணினா அழுதிடுவா பாவமில்லையோ…..

சரி இதுக்கு ஒரு கவர்ச்சியான ஆரம்பத்த குடுக்கோணும்… ஆதி மண்டையைக் குடைஞ்சு குடைஞ்சு யோசிச்சு…யோசிச்சு உருவாக்கி இருக்கிறன்.

அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம்

என்ன எல்லாரும் ரெடியா ஆதிநைனாவின் ந(கை/ள)பாகத்தைச் சுவைக்க… இங்க வந்து டாப்புப் பதிஞ்சாத்தான் ஆதிநைனாவுக்கு நா வளர்க்க ஆசைப்படுற சீவன்களைத் தெரியும். சுவார்ஸ்யம் உள்ள பிறவிகள் ஆதிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கோணும் எண்டு வேண்டிக் கொள்கிறன். அட்டில் கலை உலகிற்குள் ஆதிநைனா அகப்பைத் தடம் பதிக்கலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நைனா :lol:

வாங்கோ..

நாங்க எல்லாம் சாப்பாட்டு ராமன்கள் நைனா..

ஆமா கட்டினவங்க எல்லாரும் என்ன இப்படி நொந்து சே...

மாவாட்டிட்டு இருக்கிறிங்களோ :lol:

என்ன தலையணை மந்திரமோ நாயாகவே(செல்ல பிராணி) இருக்கிறிங்க,வச்சிருக்கிறிங

Link to comment
Share on other sites

யாருக்காவது Constipation இருந்தால் இந்தப் பக்கம் வரவும். னைநாவின் நளபாகம் பார்த்துட்டு ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரே மருந்தும் சொல்லுவாராம்

Link to comment
Share on other sites

ஜீவா செல்லப்பிராணிகளுக்கு கிடைக்கிற மருவாதை எங்கே மனுசர்களுக்குக் கிடைக்குது?

இப்ப இதைப் பாத்துக் கொண்டு இருங்கோ செய்முறை விளக்கத்தை என்ர கடைக்குட்டி கப்பல் விட்டுட்டான். திரும்ப எழுதி.... வாறதுக்கு என்ர பிஏ வரவேணும் அதுவரைக்கும் Rம்மா இருக்காமல் இந்தப் படத்தைப்பாருங்கோ.

curry1021.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சாபிடவேனும் போல ஆசையாக இருக்கு. எடுத்து விடுங்கோ உங்க நள பாகத்தை.

.ஆவலோடு காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

நன்றி நன்றி திங்களறிவு மற்றும் நிழலி, நுணுக்கம்.

கணவாய் பிரட்டல்

கணவாய் - 1

எண்ணெய் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

பச்சைமிளகாய் - 2

பெருஞ்சீரகம் - சிறிதளவு

கருவேப்பிலை

உள்ளி – 4

மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி

பழப்புளி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு.

முக்கியமானவை சமைக்கும் பாத்திரம் மற்றும் அடுப்பு

செய்முறை –

(முக்கிய குறிப்பு மத்திமச்சூட்டில் அடுப்பை வைத்திருத்தால் மாத்திரமே உணவு சுவையானதாக இருக்கும்.)

1. முதலில் கணவாயைச் சுத்தமாக்கி துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயங்களையும், ,உள்ளிகளையும் சிறுசிறுதுண்டுகளாகவும், பச்சை மிளகாய்கயை நீளப்பாட்டுக்கு பிளந்தும் வைத்துக் கொள்க.

3. அடுப்பில் நீங்கள் சமைக்க இருக்கும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை விட்டுச் மெல்லிய சூட்டில் சூடேற்றவும்.

4. சூடேறிய எண்ணெயில் முதலில் பெருஞ்சீரகத்தைப் போட்டு வாசம் வரும்போது வெட்டி வைத்த வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதங்கவிடவும்.

5. இளம்பருவமாக வதங்கியவுடன் கருவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளவும்.

6. கருவேப்பிலை வாசைன கமகமக்கும் போது நறுக்கி வைத்திருக்கும் கணவாய்த்துண்டுகளை அதனுடன் சேர்த்து கிளறி மூடி மத்திமச் சூட்டில் அவியவிடவும்.( ஊசிக் கணவாய், குண்டுக்கணவாய் அவியும் நேரத்தில் வித்தியாசம் உண்டு)

7. தண்ணீர் விடவேண்டிய தேவை இருக்காது. கணவாய் தானே கண்ணீர்விட்டு அவியும். அதன் தண்ணீர் வற்றிய மாதிரித் தெரியும் தருணத்தில் மிளகாயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.

8. இப்போது கரைத்து வைத்திருக்கும் பழப்புளியையும் விட்டு கிளறி பிரட்டல் ஆக்கி சிறிது வேக விடவும்.

9. இப்போது கணவாய் பிரட்டல் ரெடி.

curry1021.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாத்தான் இருக்கு நைனா.வாயூறுது :( ஆனா ஊருற எதுவும் நான் சாப்பிடுவதில்லை :(

Link to comment
Share on other sites

நல்லாத்தான் இருக்கு நைனா.வாயூறுது :lol: ஆனா ஊருற எதுவும் நான் சாப்பிடுவதில்லை :o

ஜீவா நான் பாம்புக்கறிக்கா செய்முறை போட்டிருக்கிறன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறி எல்லாம் நாம சாப்பிடுவது இல்லை.

நமக்கு எப்பவுமே சைவ சாப்பாடுதான்.

Link to comment
Share on other sites

இந்த கறி எல்லாம் நாம சாப்பிடுவது இல்லை.

நமக்கு எப்பவுமே சைவ சாப்பாடுதான்.

என் கறுப்புத் தேவதையே அடுத்த படையல் உன் வேண்டுதலுக்கே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • 9 months later...

பழப்புளி விடாம தேசிப்புளி விடலாமா? <_<

மப்புல தோயாம எங்கட சின்னா, சாத்து, கு.சா, முகத்தார், லேட்டஸ் நிழலி மாதிரி ...ஸ்ரெடியா... எப்பிடி?... ஸ்ரெடியா நிக்கோணும் எண்டால் தேசிக்காயை அவசியம் சேர்க்க :huh::wub::lol::o :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பிரட்டல் ஆதி! ஆனால் உங்களது கறுப்புத் தேவதைக்கு தரும் படையல் குறிப்பையே எதிர்பாத்து ஆவலோடு, வாய் ஊறலோடு காத்திருக்கிறேன்! <_<

Link to comment
Share on other sites

  • 1 month later...

:huh: ஓய் அப்பிடியே நம்மட அயிட்டத்தையும் போடுமன்..

இருக்கட்டும் தேசிக்காய் தலையில தானெ தேக்கிறது.....

Link to comment
Share on other sites

  • 4 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.