Jump to content

பேரீச்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only): நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 06: இந்தியர்கள் Vs நாம்

இந்தியர் என்ற அடைப்புக்குகுறியீட்டினுள் தமிழக தமிழர்களை சேர்க்கவேண்டாம். :rolleyes::(

அதே போல் ஒரு PM இற்கு கீழ் இருக்கும் சக இந்திய உறுப்பினர்கள், தம்மை என்ன சொன்னாலும் சரி என்பது போல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமுள்ள ஒரு வேலைக்காரன் போல் நடந்து கொள்வர். எதிர்த்து ஒரு சிறு குரல் தானும் வராது. அப்படியானவர்கள் உயர் பதவியினை அடைந்த உடனேயே, தாம் எவ்வாறு முகாமையாளரால் சிரமத்துக்குள்ளானார்களோ அதே போன்ற அதிகாரத்தினை மற்றவர் மீது பிரயோகிக்க முயல்வர்.

இது ஒருமாதிரியான அடிமையுணர்வு பிரித்தானிய காலத்திலிருந்து நாளங்களில் புதைக்கப்பட்டுள்ளது. ஒருவகையான காப்பியடிக்கும் தன்மை...இயலாமையை, வக்கிரத்தை எளியோனிடம் காண்பித்து திருப்திகொள்ளும் கீழ்குணம். உதாரணமாக கல்லூரியில் ராகிங்கினால் பாதிக்கப்பட்டவர் ஜூனியரிடம் தன் வன்மத்தை தீர்ப்பதுபோல...!

எனக்கோ அடிப்படையில் இந்திய படையினரின் அடாவடித்தனங்களாலும், இந்திய தேசத்தின் துரோகத்தனத்தாலும் சிங்களவர்களின் மீது இருப்பதை விட அதிகமாக இந்தியர்கள் மீது இருந்தது. சிங்களவர்கள் வரலாற்று எதிரிகள்.. இந்தியர்கள் வரலாற்று துரோகிகள் எனும் புரிதலில் இன்றும் கூட இருக்கும் எனக்கு ஆரம்பத்தில் எந்த தனிப்பட்ட இந்தியர்களை கண்டால் கூட பிடிக்காமல் இருந்தது.

இதில் தமிழகத்தை, தமிழரை சேர்க்கவில்லைதானே? :D

என்னை மீண்டும் எப்படியாவது இலங்கைக்கு அனுப்பி விட துடித்துக் கொண்டு இருந்தார் யஸ்மின் எனும் என் முகாமையாளர்.

இது மல்லுகளின் இயற்கை குணம்.. குழிபறித்தல். ஆனால் நேரில் மிகசாதுவாக அன்பாக பழகுவர்..சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாக வாய்க்கும் வரை... இது என்னுடைய அனுபவம்...என் அலுவலகப் பிரிவில் இருப்பது 14 பேர். நானும் என்னுடைய நேரடி உதவியாளர் மட்டுமே தமிழர்கள்.(தமிழன்தான் வேண்டுமென தெரிவு செய்தேன்). மற்ற அனைவரும் மல்லுகள். கேட்க வேண்டுமா மல்லு கும்மிகளை? ஆகையால் மனரீதியில் பிரிவுகளை தவிர்க்க முடியாது. பிறநாட்டு சகதோழர்களும், மல்லுகளும் எம்பிரிவை அழைப்பது "டைகர் குரூப்(Tiger Group)"

ம்ம்.. அந்த பேரீச்சம்பழ ஆன்டி....? :D

.

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

உங்கட கதை சொல்லும் விதம் நன்று வாழ்த்துக்கள். கொஞ்சம் பிந்தி வாசிக்கிறதால

அங்கம் 6 மட்டும் ஒரே மூச்சில வாசிச்சிட்டன்.

இந்த கணனியில மட்டும் நாங்க நினைக்க நினைக்க தமிழில எழுத்து வரவேணும் எவ்வளவு நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

நிழலி, நல்லா இருக்கு. தொடருங்கள். வாழ்த்துகள்.

கருத்து எழுதி உங்கள் போக்கை மாற்றுவதை விட , எண்ணம் போல் எழுத விட்டு படிப்பதால் , எனக்கு பரிட்சயமற்ற ஒரு தேசத்தை உங்கள் எழுத்துக்களால் உணரலாம் என நினைக்கிறேன். அனைத்தும் அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 06: இந்தியர்கள் Vs நாம்

நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியர்கள் அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இலங்கையர்கள் அதிகம். எப்பவுமே இரு சாராருக்கும் நிழல் யுத்தம் போன்ற ஒன்று நிகழ்ந்து கொண்டே இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது.

இந்தியருக்கும் எமக்கும் உள்ள நிழல்ப்போரை தெளிவாக உண்மையாக எழுதி உள்ளீர்கள். இந்த அங்கம்-6 இல் உள்ள நிழலியை என்னால் வடிவாக உணர முடிகிறது.

:D

Link to comment
Share on other sites

இந்தியருக்கும் எமக்கும் உள்ள நிழல்ப்போரை தெளிவாக உண்மையாக எழுதி உள்ளீர்கள். இந்த அங்கம்-6 இல் உள்ள நிழலியை என்னால் வடிவாக உணர முடிகிறது. ................

தம்பி இளையபிள்ளை.. உங்க கதையும் நிழலியின்ரையைப் போல சுவாரசியமாத்தானே இருக்கு..! ஏன் பிட் பிட்டா இப்ப எழுதிறீங்கள்? நிழலியை மாதிரி ஒரு தொடரா எழுதலாமே?

என்னைப் பொறுத்தவரையில இப்படியான ஆக்கங்கள் பலவிதமான சூழ்நிலைகளையும் வாசிப்பாளனுக்கு அறிமுகப்படுத்தி அவனை நல்ல விதத்தில் தயார் செய்யும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா உங்களின் டுபாய் தொடரை தவறவிடாமல் விடாமல் படிப்பேn. அவல் பற்றி அறிவதற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.அநேனக மாக எல்லா வெலைஸ்தலங்களிலும் நீங்கள் எழுதுவது போன்ற முகாமையாளர்கள்team workersஇருக்கவே செய்கிறார்கள்.தேவை இல்லாதவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி குறை கண்டு பிடிப்பது. வேலையை விட்டே கலைப்பது இதை எல்லாம் எப்படி சொல்வது.....?அவர்களுக்கு இதெல்லாம் கை வந்த கலை.நன்றி அண்ணா.

யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி இளையபிள்ளை.. உங்க கதையும் நிழலியின்ரையைப் போல சுவாரசியமாத்தானே இருக்கு..! ஏன் பிட் பிட்டா இப்ப எழுதிறீங்கள்? நிழலியை மாதிரி ஒரு தொடரா எழுதலாமே?

என்னைப் பொறுத்தவரையில இப்படியான ஆக்கங்கள் பலவிதமான சூழ்நிலைகளையும் வாசிப்பாளனுக்கு அறிமுகப்படுத்தி அவனை நல்ல விதத்தில் தயார் செய்யும் என நினைக்கிறேன்.

ம்ம்ம்... நிழலியின் அங்கம்-6 படித்ததும் ஞாபகம் வந்த அனுபவங்கள்/ உணர்வுகளை எழுதி விட்டேன்... பிறகு தான் நானே ஜோசித்தேன் - தனது diary மாதிரி நிழலி தனது அனுபவங்களை எழுதும் போது, குறுக்க பேச கூடாது என்று!! :D !

எனெவே அந்த பதிவை நானே மட்டறுத்து விடுகிறேன்... சுவாரசியமாக எழுதும் அளவிற்கு எனக்கு எழுத்தாற்றல் நிச்சயமாக இல்லை. எனக்கு ஞாபக சக்தி தான் அதிகம் - அதனால் நடந்த சம்பவங்களை ஆற்றிய உரைகளை மீட்டு எழுதுவேனே தவிர - உணர முடிந்ததை விவரிக்கும் ஆற்றல் இல்லை.

நிழலியின் எழுத்து அந்த விதத்தில் மிக தரமானதாய் உள்ளது. அடுத்த பதிவிற்காய் ஆவலாய் உள்ளேன். :rolleyes:

Link to comment
Share on other sites

அங்கம் 06 இணைத்தமைக்கு நன்றி நிழலி அண்ணா...

[பி.கு: நிழலி அண்ணாவின் திரியைத்தானே படித்து பதில் எழுதப் போனேன்... அங்கு எப்படி சாத்திரியின் பதில்

"வணங்காமண் நிவாரணம் மீண்டும் சிக்கல்..." :lol: என்னடா இது என்று ஒரு நிமிடம் ஜோசித்த பின்பு தான் விஷயம் புரிந்தது.... பேரீச்சை.... என்று ஆரம்பித்தால நான் தான் திரி மாறி அங்க போடன் என்று.... ஹிஹீஹி... :D:lol: ]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 06 இணைத்தமைக்கு நன்றி நிழலி அண்ணா...

[பி.கு: நிழலி அண்ணாவின் திரியைத்தானே படித்து பதில் எழுதப் போனேன்... அங்கு எப்படி சாத்திரியின் பதில்

"வணங்காமண் நிவாரணம் மீண்டும் சிக்கல்..." :lol: என்னடா இது என்று ஒரு நிமிடம் ஜோசித்த பின்பு தான் விஷயம் புரிந்தது.... பேரீச்சை.... என்று ஆரம்பித்தால நான் தான் திரி மாறி அங்க போடன் என்று.... ஹிஹீஹி... :D:lol: ]

நானும் பேரீட்சையை பாத்துகொண்டு அங்கை தான் போய்ட்டேன். :lol:

Link to comment
Share on other sites

அங்கம் 7: ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் நீங்கள் தானே?

எம் அலுவலகத்தில் வார இறுதி நாட்களிலும் வீட்டில் இருக்காமல் வேலைக்கு வருபவர்கள் அதிகம். போய் சேர்ந்த இரண்டாவது மாதத்தில் நல்லா வெயில் எறிக்கும் ஒரு வார இறுதியில் என்னையும் வந்து வேலை பார்க்குமாறு யஸ்மின் கேட்டா. software testing இருந்தது, ஆனால் இவர் இப்படி கேட்பதும் நான் மறுப்பதும் அடிக்கடி நடப்பதால் "சரி நான் வாரன் நீங்களும்ம் வாங்கோ" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மையிலேயே போக வேண்டி இருந்த வேலைதான் அது

ஐக்கிய அரபு ராச்சியத்தில், நான் போயிருந்த காலப் பகுதியில் வார இறுதி நாட்களாக வியாழனும் வெள்ளியுமே இருந்தன. (இப்போது வெள்ளியும் சனியும் என மாற்றி விட்டனர்)... எம் நிறுவனத்தை சேர்ந்த அநேகமானோர் திருமணம் முடிக்காதவர்கள் என்பதால் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் வீதி தோறும் சுத்தி திரிவதும், விடுதிகளில் உணவு உண்பதுமாகவே இருப்போம். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு சிங்கள நண்பன் Duty free இல் இருந்து கொண்டு வந்திருக்கும் Whiskey யை அடித்து விட்டு அறைகளில் கும்மாளம் இடுவோம். அன்றிரவும் (புதன் இரவு) அப்படியே அடித்து விட்டு குப்புற படுத்ததில் அடுத்த நாள் நேரத்துடன் எழும்ப வெறுப்பாக இருந்தது. யஸ்மினை அலைய விடுவோம் என மனதில் நினைத்து கொண்டு அறையினுள்ளேயே இருந்து விட்டேன். பல தடவை தொலைபேசியில் என்னை அழைத்தும், பதில் சொல்லாமல் பேசாமல் இருந்து உச்ச கட்ட வெறுப்பை ஏத்தி விட்டேன். யஸ்மின் இரு குழந்தைகளின் தாய். அப்படி இருக்கவும் அவற்றை விட்டு விட்டு எனக்காக அலுவலகம் வந்து காத்திருந்து விட்டு போய் விட்டா. நான் மனதுக்குள் ஆயிரம் வாய்களால் சிரித்துக் கொண்டு இருந்தேன். ஒரு தவறை சிரித்து கொண்டு செய்வது சாடிசம் என்பர்

வார இறுதி முடிந்து சனி வந்தது

அலுவலகம் வந்தேன்

எப்படியும் ஒரு மோசமான e mail வரும் என எதிர் பார்த்து மின்னஞ்சல் பெட்டியை திறந்தால் அப்படி ஒன்றும் வரவில்லை. நேரம் கடந்து கொண்டு இருந்தது...நான் செய்ய வேண்டி இருந்த Software testing இன் பகுதி செய்யப் பட்டு கிடந்தது. யஸ்மின் வழக்கம் போலவே என்னுடன் கதைத்து கொண்டதை வைத்து பார்க்கும் போதே புரிந்தது ஏதோ உள்ளுக்குள் ஒரு சதித் திட்டம் இருக்கு என்று

மதியத்தின் பின், திடீரென மனித வள பிரிவில் (Human resource) இருந்து ஒரு Call வந்தது. ஒரு பரீட்சை (aptitude test) இருப்பதாகவும், அதனை நான் கண்டிப்பாக, உடனே செய்ய வேண்டும் எனவும் சொன்னார்கள். சதியின் ஆரம்பம் என புரிந்தது. ஏனெனில் என்னுடன் வேலை செய்யும் என் கொழும்பு நிறுவனத்தை சேர்ந்த ஏனைய 65 பேரில் யாருக்கும் இப்படி பரீட்சை வைக்கவில்லை. நான் கொழும்பு நிறுவனத்துடன் உடனே தொடர்பு கொண்டு இந்த பரீட்சையை தவிர்க்க முயன்றேன்...முடியவில்லை

இந்த பரீட்சை பற்றி சொல்வதென்றால், நான் வேலை செய்த டுபாய் நிறுவனத்தில் நிரந்தர தொழில் பெற (permanent staff) தேர்வு செய்யும் போது இதே போல் தான் வைப்பர். (இலங்கையில் இருந்து போன நாம் அனைவரும் Consultants ஆகவே இருந்தோம்..அதாவது இலங்கை நிறுவனத்தின் ஊழியர்களாக, இந்த டுபாய் நிறுவனத்தின் Projects செய்ய வந்து இருந்தோம்).. ஒரு முறை 35 பேரிற்கு ஒன்றாக இந்த பரீட்சை வைத்ததில் அதி கூடிய புள்ளியாக 23 புள்ளிகள் தான் ஒருவர் எடுத்து இருந்தார் (highest marks 23).. அந்தளவுக்கு கடினமான பரீட்சையை நான் வாழ்வில் காணவில்லை..

வேறு வழியின்றி அதனை செய்தேன். பரீட்சை தாள் ஆங்கிலத்தில் தான் இருந்தது. ஆனால் எனக்கோ வேறு ஒரு பாசையில் இருப்பதை போன்றே இருந்தது. கேள்வியே புரிய மாட்டேன் என ததிங்கினத்தோம் போடும் போது எப்படி பதிலை எழுதுவது? அந்த பரீட்சை 9 ஆவது மாடியில் மட்டும் நடந்திருக்காமல் இருந்திருந்தால் குதித்து தப்பி ஓடிப்பேன்... கிட்டத்தட்ட 25 கேள்விகளில் 12 வரைக்கும் முயன்று விட்டு அடுத்த கேள்வியை பார்க்கும் முன், தரப்பட்ட நேரம் முடிந்து விட்டது என பரீட்சை தாளை வாங்கிக் கொண்டு போய்விட்டனர்

கண்ணுக்கு முன் பெரிய ஆப்பு தெளிவாக தெரிந்தது

இதற்கு எத்தனை புள்ளிகள் பெற்றேன் என பார்க்கும் முன்

6 ஆவது அங்கத்தில் சொன்னது போல், சிங்களவர்கள் இந்தியர்களுடன் அலுவலகம் தவிர்ந்த வேறு எந்த விடயத்திலும் வெளியே இணைவதில்லை. என் team இல் முன்னர் இருந்த சிங்கள நண்பனும் அப்படியே இருந்தான். அவனுக்கு மாற்றீடாகத்தான் நான் போயிருந்தேன் (அவன் யஸ்மினின் தொல்லை பொறுக்காமல் 1 வருடத்திலேயே ஓடி விட்டான்). யஸ்மினின் வீட்டில் ஒரு ஒன்று கூடலும் Party யும் இருந்தது. Team இல் இருந்த மற்றவர்களை கூப்பிடும் போது வேறுவழியின்றி என்னையும் அழைத்தார். இவன் இலங்கையன், அதிலும் தன்னை மிக வெறுப்பவன் எனவே கண்டிப்பாக வரமாட்டான் என தான் நினைத்ததாக பின்னர் சொன்னா

எனக்குத் தான் எவராவது சாப்பாடு தருவினம் என்றால் ஓடிப் போய் சாப்பிடும் தாராள குணம் இருக்கே..... அத்துடன் டுபாய் வந்த நாளில் இருந்து கடை சாப்பாடு சாப்பிட்டு வெறுத்து போயிருந்த நான் "சரி, போவோம் " என முடிவெடுத்து போனேன்

அந்த தினம், நான் பரீட்சை செய்த நாளுக்கும் புள்ளி வெளி வரும் நாளுக்கும் இடைப் பட்ட ஒரு நாள்

அவரின் வீட்டை போனால், அங்கு முற்றுலும் மாறுபட்ட சூழ்நிலை இருந்தது

யஸ்மின் ஒரு கேரள பெண். கணவர் ஒரு தமிழ் ஆள். பொதுவாக மலையாளிகளுக்கு தமிழனை கண்னில் காட்ட ஏலாது...ஆனால் இங்கு இருவரும் குடும்பமே நடத்துகின்றனர்.

நிறைய பாட்டுப் போட்டிகளும், Games களும் வைத்து மிக கலகலப்பாக அந்த ஒன்று கூடல் இருந்தது. நான் அநேகமாக அனைத்திலும் பங்கு கொண்டு தொண்டை கிழிய பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டதில் இலங்கையன் என்றால் எதிலும் பங்கு கொள்ள மாட்டன் என்ற பிம்பம் உடைந்தது. எனது மனதில் இருந்த பல பிம்பங்களும் உடைந்தன

உண்மையில், தலைக் கனம் என்பது அரை குறை அனுபவம் உள்ள ஒருவனுக்கே வரும். நிறை குடம் தளும்பாது என்பர். எனது தலைக்கனம் எனக்கு உதவி செய்யவில்லை

ஒரு புதிய இடத்திற்கு போனால், அதில் நிலைத்து அந்த புதிய சூழலை எமக்கானதாக மாற்ற வேண்டும் என்றால், கண்டிப்பாக பழக வேண்டியது பணிவும் நிதானமும் பொறுமையும். இவை இல்லாவிடின் எந்த பெரிய கொம்பன் என்றாலும் விழ வேண்டியது தான்

நான் அப்படி இருக்க மறுத்து வந்தேன். ஆனால் அன்று அந்த வைபவத்திற்கு போன பின்பு, என்னுடைய பல கணிப்புகள் வெறும் தலைக்கனத்தில் எடுக்கப் பட்டவை என்று உணர்ந்து கொண்டேன். மற்றவர்கள் தம் அனுபவங்களினூடு கண்டு எமக்கு அறிவுரையாக சொல்பவை சரியாகத் தானிருக்கும் என்ற எடுகோள் மிக பிழையானது. அவர்கள் தாம் சார்ந்த வாழ்க்கை முறையினூடும், தமது அறிவினூடும் நிகழ்வுகளை பார்த்து அதில் இருந்து கற்றிருப்பர்.... அது எல்லாருக்கும் சரியாக வரும் என்பது பிழை.

இனி ஒத்துழையாமை கடைப்பிடிக்க கூடாது என நான் முடிவெடுத்த போது தான் அபிலாஷ் எனும் ஒருவரை அந்த ஒன்று கூடலில் முதன் முதலில் கண்டேன்

யஸ்மின், எம் Project இன் முகாமையாளராக இருப்பினும், முழு Team இற்கானவர் அவர் இல்லை என்பதும் (ஒரு Team பல Project களை கொண்டிருக்கும் வண்ணம்் எம் நிறுவனத்தில் வடிவமைக்கப் பட்டு இருந்தது) அந்த பதவிக்கு புதிதாக வர இருப்பவர் தான் அபிலாஷ் என்பதும் அன்று தான் நான் புரிந்து கொண்டேன்

அபிலாஷும் ஒரு மலையாளி.....(இலங்கை) தமிழர்கள் மீதான கடும் வெறுப்பை கொண்டிருக்கும், அரசியல் வாதியை விட மோசமான குள்ள நரித்தனம் மிகுந்த , ஆனால் மிகத் திறமையான் ஒரு மலையாளி

நானும் அவரும் முதன் முதலில் சந்தித்து கொண்டது அன்று தான்

என்னைக் கண்டதும், நான் இலங்கைத் தமிழன் என்பதை அறிந்ததும் அவர் கேட்டது....

"ஹேய் புலி....எங்கட பிரதமரை கொன்றவர்கள் தானே நீங்கள்...அது தவறுதானே"

அதற்கு நான்

"ஆம்.. தவறுதான்... ராஜீவ் எம் மக்களை குடும்பம் குடும்பமாக கொன்றது போல நாமும் அவரின் முழுக் குடும்பத்தையும் அழித்திருக்க வேண்டும்:

என் இந்த பதிலின் தாக்கம் அடுத்த வந்த 5 வருடங்களும் தொடர்ந்து வந்தன.

கண்ட முதல் நாளே மிக வெறுக்கும் மனிதானாக என்னால் உணரப் பட்ட இந்த மனிதானுடன் தான் என் மிகுதி 5 வருடமும் பல தொல்லைகளுடன் கழியும் என்று நினைக்கவே இல்லை. பிரபாகரன் எனும் உன்னத தலைவனின் மீது மலையாளிகள் கொண்டிருக்கும் உச்ச கட்ட வெறுப்பை அபிலாஷில் காணமுடியும்

அடுத்த நாள் வேலைக்கு போகின்றேன்

என் பரீட்சையின் புள்ளிகள் வந்திருந்தன....Manager அறையில் அபிலாஷ் அமர்ந்து இருந்தார்

நான்...........

(தொடரும்)

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

Link to comment
Share on other sites

நீங்க சொல்லுறது உண்மைதான் ஆனா பழிக்கு பழி எண்டா யாரும் வாழ ஏலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றிரவு அந்த நண்பன்..அவனை 'ஷான்' என்றே இனி அழைக்கின்றேன்...என் அறைக்கு வந்து, மச்சான் Balcony க்கு போய் வெளியே பார் என்றான்.

வெளியே அற்புதமான விளக்கு வெளிச்சத்தில் 'இம்பீரியல்' இரவு விடுதியும் அதனை சுற்றி தேவலோகத்தில் இருந்து நேராக வந்து உதித்த போன்ற அழகு மங்கையரும் நின்று கொண்டு இருந்தனர்.

போவோமா என்று கேட்டான்

நான் அதற்கு...

(தொடரும்...

)

இதின்ரை மிச்சம் எப்பவரும்? அங்காலை என்ன நடந்தது எண்டு சொன்னியளெண்டால் நல்லாயிருக்கும். :D

கிளுகிளுப்பாய் ஏதும் நடந்ததோ???????? :lol:

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா.......அங்கம் 7ம் நன்றாக சுவாரிசமாக இருக்கிறது.......... வாழ்த்துக்கள். பரீட்சையில் சித்தி பெற்றீர்களா என்று அறிய அங்கம் 8ஐ ஆவலுடன் எதிர்பார்திருக்கிறேன்.

நன்றி அண்ணா உங்கள் ஆக்கத்திற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா உங்களின் டுபாய் தொடர் அங்கம் 7ம் படித்தாயிற்று.உங்களுக்கு வைத்த பரீட்சையின் முடிவை அறிய மிகவும் ஆவலாய் இருக்கிறது.12கேள்விகள் மட்டும் தானே செய்துள்ளீர்கள் 12.12 மொத்தபுள்ளிகளையும் எடுக்க என்னுடைய வாழ்த்க்கள். :D:lol::lol:

யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியை உடனடியாக இவ்விடத்திற்கு வருமாறு அழைக்கப் படுகிறீர்கள். :D இல்லாவிடின் இத்திரியில் 1000 சொற்களுக்கு குறையாத பதிவைப் பதியும் வரை மற்ற திரிகளில் எழுத தடை விதிக்கப்படும். (இப்பிடி ஒரு condition போட்டால் எப்பிடி இருக்கும்?) :lol:

Link to comment
Share on other sites

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

அறைக்குள் இருந்த அபிலாஷ் என்னைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பை உதித்துக் கொண்டார்

என் இருக்கையில் அமர போக முன் யஸ்மின் என்னை தன் இருக்கைக்கு வருமாறு தொலைபேசியில் (இன்ரகொம்) அழைத்தார்

"என்ன யஸ்மின்"

"அட நீங்கள் இந்தளவுக்கு ஆட்டம் போடுவீர்கள் என்று தெரியாமல் போச்சுது.... உங்களையும் மற்ற சிறீலங்கன் போல் நினைத்து விட்டேன்"

"எல்லாம் உங்களின் சாப்பாட்டு மேசையில் வைத்திருந்த சாப்பாட்டைப் பார்த்த பின் ஏற்பட்ட குதூகலம் தான்"

"பாட்டுக்கு பாட்டு போட்டியில் நல்லா பாடினீங்க" (என்னுடன் போட்டியில் கலந்து கொண்ட அநேகம் பேர் சின்ன பிள்ளைகள்.)... அந்த தனிப் பாட்டை நல்லா உணர்ந்து பாடின மாதிரி இருந்தது"

நான் பாடிய அந்தப் பாடல் "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்துடும் கார்த்திகை மாதத்திலே" எனும் தலைவரைப் பற்றிய பாடல்

"நன்றி யஸ்மின்"

"மற்றது...உங்களின் பரீட்சை புள்ளி வந்திருக்கு.... 10 புள்ளிகள் தான் எடுத்திருக்கின்றீர்கள்"

"பத்து புள்ளிகளா....???"

"ஆம்"

"எப்படி 10 புள்ளிகள் வந்தது...நான் ஆகக் கூடியது 5 புள்ளிகள் தான் வரும் என்றுதான் நினைத்து இருந்தேன்"

"பரவாயில்லை...இந்த பரீட்சை ..புள்ளிகள் எல்லாம் பற்றி நான் அபிலாஷிற்கு சொல்லப் போவதில்லை...நீங்களும் அதைப் பற்றி யாரிடமும் கதைக்க வேண்டாம்...ஒரு சம்பிரதாயத்திற்குத் தான் அந்த பரீட்சை"..(பின்னொரு நாளில் என்னுடன் கதைக்கும் போது என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப தான் அப்படி ஒரு பரீட்சை வைத்ததாக சொன்னார்)...

"நன்றி யஸ்மின்"

ஒரு கண்டம் விலகியது....அபிலாஷ் டுபாயில் இருக்கும் வரைக்குமான நித்திய கண்டம் ஆரம்பித்தது.

நான் பலருடன் வேலை செய்துள்ளேன்...நான் வேலை செய்தவர்களில் அபிலாஷ் போன்று கூர்மையான புத்தியுள்ள ஒரு முகாமையாளரை காணவில்லை. என்னை விட 4 வயதே அதிகமான அவரது ஆற்றலும், புதிய விடயங்களை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. அதே நேரத்தில் அவரின் குள்ள நரித் தந்திரமும், பொய்யும், எவரையும் மதிக்காத குணமும் கொண்ட ஒருவரையும் இன்னமும் நான் காணவில்லை. இந்த முரண்பட்ட குணாதிசயம் இருக்கும் இவருக்கு புலிகள் மீது ஏன் இவ்வளவு கடும் வெறுப்பு என்பதையும் என்னால் இறுதிவரைக்கும் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. இவரால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வேறு அத்தியாயங்களில் எழுத வேண்டிய சந்தர்ப்பங்கள் வரின் எழுதுகின்றேன்

*********

டுபாயில் நான் தன்கியிருந்த மூன்று நட்சத்திர விடுதியில் இருக்கும் ரீவியை எப்படிதான் முறுக்கினாலும், Channel channel ஆக மாற்றினாலும் MTV வியைத் தவிர வேறு எந்த அலைவரிசையிலும் ஒரு 'கவர்ச்சியான' காட்சிகளையும் காணக் கிடைக்காது, இரவு ஒரு மணிக்கு பின் ஒரு சில ஆங்கிலப் படங்களில் காட்டி மறைக்கும் காட்சிகள் தான் இருக்கும்...

கூட்டத்தோட இருந்தாலே குதிக்கின்ற என் மனசுக்கு, தனித்த மூன்று நட்சத்திர அறையில், குளு குளு குளிரில், கை நிறைய காசும் கொண்டு, கேட்க ஆட்களும் இன்றி எனக்கே எனக்கான தனி அறையில் இருக்கும் போது எப்படி கும்மாளம் இட்டு இருக்கும்....

என் நண்பன் ஷானை அழைத்தேன்....இரண்டாம் மாடியில் இருக்கும் தனி அறையில் தான் அவனும் இருந்தான்

"மச்சான்...டுபாயில X rated சிடிகள் கிடைக்காதா ..தனிய இருக்கும் போது பார்த்தால் அந்த மாதிரி இருக்கும்"

"இல்லடா...நானும் எப்படி அவற்றை எடுக்கிறதெண்டு தெரியாமல் கஷ்டப் படுறன்"

"மற்ற பெடியள்ட கேட்பமா...அவங்கள் வந்து கனகாலம் தானே...அவங்களுக்கு தெரிந்து இருக்கும்"

மற்ற அறைகளில் இருக்கும் சிங்கள தமிழ் நண்பர்களிடம் கேட்டோம்

"ஐயோ...மெதுவா கதை...இது முஸ்லிம் நாடு...இங்க இப்படி எல்லாம் விக்க மாட்டங்கள்...எம்மிடம் ஒன்றும் இல்லை...வைத்து இருந்தாலே பிடிச்சுக் கொண்டு போயிடுவாங்கள்"

முயல் பிடிக்கும் நாயை முகத்தில பார்த்தால் கண்டு பிடிக்கலாம்.... உவங்கள் இலங்கையில் இருந்தாவது Hard disk இல் கொண்டு வந்து computer ரில் வைத்து பார்ப்பாங்கள் என்று தெரியும்...ஆனால் சொல்லவே மாட்டன் என்று அடம் பிடித்தாங்கள்

"சரி மச்சான்...வேலைக்கு ஆகாது...தேடுதல் வேட்டை ஒன்று போடுவம்....வா பக்கத்தில இருக்கின்ற எல்லா வீடியோ கடைகளிலும் விசாரித்துப் பார்ப்பம்"

விசாரித்தோம்....எம்மை ஏற இறங்க பார்த்தார்கள்...."இல்லை...இங்க வீடியோ கடைகளில் இதெல்லாம் வைத்திருக்க முடியாது" என்றார்கள்

"எங்க எடுக்கலாம்"

"தேடி பாருங்கள்"

மீண்டும் தெருக்களில் கண்ணில் விளக்கெண்ணை வைத்துக் கொண்டு தேடினோம். டுபாயில் திருட்டு VCD களை முடுக்குச் சந்திகளில் வைத்து திருட்டுத் தனமாக வைத்து விற்பர். போய் பார்த்தால் எல்லாமே புதிய தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள படங்கள் தான் இருந்தன. விக்கிறவன் ஒவ்வொருத்தனும் ஒரு டைப் பாக இருந்தான்கள்

ஒருத்தனிடம் கேட்டுப் பார்த்தேன்

"அது இருக்கா"

"எது"

கையால் ஒன்று இரண்டு மூன்று என அபிநயம் பிடித்தேன்

"ஓ....திரிபில் எக்ஸா"

"ம்ம்ம்"

அவனும் அங்கையிம் இங்கையும் பார்த்துட்டு....."அந்த முடுக்குள் வாங்கள்" என்றான்

பயம் தொற்றியது..முடுக்குக்குள் கூப்பிட்டு குத்த போறானோ அல்லது பொலிசை கூப்பிடப் போறானோ என்று

ஆனலும் ஆசை பயமறியாது...போனோம்

வகை வகையாக சிடிக்கள் வைத்து இருந்தான்.......ஆக்கிமீடிஸ் திணிவு தொடர்பான தத்துவத்தை கண்டு பிடித்தபோது கூட இப்படி சந்தோசப்பட்டு இருப்பாரோ தெரியாது.

முஸ்லிம் நாடு என்றும் அவை மிகவும் புனிதமான சட்டங்கள் கொண்டவை என்றும் சொல்லப்பட்டு வந்த பொய்யின் இரண்டாவது திரையும் கழன்று விழுந்தது எமக்கு. அவர்களின் சட்டங்கள் எல்லாம் வெளியே பார்ப்பவர்களுக்கு போலித் தனமான தோற்றம் தர உதவுபவையே அன்றி உண்மை அதுவல்ல..... பெண்களின் கவர்ச்சியான படங்களை தாங்கி வரும் இந்திய சஞ்சிகைகளைக் கண்டால் அந்த கவர்ச்சி படங்களுக்கு கறுப்பு மையிட்டு மறைத்து விக்குமாறு சட்டம் உள்ள நாட்டில், தெரு தெருவெங்கும் XXX rated movies மிகத் தாராளமாக விற்கப்பட்டு வருவதை கண்டோம். இதற்கெனவே ஒரு சில எல்லாருக்கும் தெரிந்த ஆனால் ரகசியமான தெருக்களே இருக்கின்றன என்பதை பின்னாளில் அறிந்து கொண்டோம்.

கை நிறைய CD களை அள்ளிக் கொண்டு வந்தோம்...வந்ததுடன் நிற்காமல் நாம் அவற்றை வைத்திருக்கின்றோம் எனும் தகவலையும் மற்ற அலுவலக நண்பர்களுக்கு மெதுவாக பரப்பி விட்டோம்

அடுத்த நாளுக்கு அடுத்த நாள்...என் கொழும்பு நி்றுவனத்தின் டுபாய் மேலாளர் 'மிலிந்த' என்னிடம் வந்தார்.....

"என்ன..வந்து இரண்டு மாதம் கூட முடியவில்லை அதுக்குள்ள இப்படி செய்றியே"

"ஏன் ..என்ன செய்தனான்"

"CD வாங்கினாயா"

யாரோ மேலாளருக்கு போட்டுக் கொடுத்து பேர் வாங்கிட்டான் என்பது புரிந்தது

"அது...வந்து...."

"சரி சரி.... உன்னிடம் இருக்கின்றதில் இரண்டு CD யாவது தா.. இன்றிரவு பார்த்து விட்டு தருகின்றேன்"

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெருட்டினாத்தான் வாறாங்கப்பா...... :D

Link to comment
Share on other sites

ரொம்பவே துணிச்சல் தான் உங்களுக்கு நிழலி அண்ணா....... இந்த சிடீக்காக இப்படி தெருவில தேடி திரிந்தீர்களா? நம்பவே முடியல :wub:

Link to comment
Share on other sites

"எங்க எடுக்கலாம்"

"தேடி பாருங்கள்"

மீண்டும் தெருக்களில் கண்ணில் விளக்கெண்ணை வைத்துக் கொண்டு தேடினோம். டுபாயில் திருட்டு VCD களை முடுக்குச் சந்திகளில் வைத்து திருட்டுத் தனமாக வைத்து விற்பர். போய் பார்த்தால் எல்லாமே புதிய தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள படங்கள் தான் இருந்தன. விக்கிறவன் ஒவ்வொருத்தனும் ஒரு டைப் பாக இருந்தான்கள்

ஒருத்தனிடம் கேட்டுப் பார்த்தேன்

"அது இருக்கா"

"எது"

கையால் ஒன்று இரண்டு மூன்று என அபிநயம் பிடித்தேன்

"ஓ....திரிபில் எக்ஸா"

"ம்ம்ம்"

அவனும் அங்கையிம் இங்கையும் பார்த்துட்டு....."அந்த முடுக்குள் வாங்கள்" என்றான்

பயம் தொற்றியது..முடுக்குக்குள் கூப்பிட்டு குத்த போறானோ அல்லது பொலிசை கூப்பிடப் போறானோ என்று

ஆனலும் ஆசை பயமறியாது...போனோம்

ரெம்பத்தான் சிரமப் பட்டிட்டீங்கள் போலை இருக்கு..என்னைத் தொடர்புகொண்டிருந்தால் நான் எம்.எம்.எஸ்சிலை துண்டு துண்டாகவாவது அனுப்பியிருப்பேனே :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா உங்களின் டுபாய் தொடர் அங்கம் 8ம் வாசித்தாயிற்று.உங்களுக்கு தரவேண்டிய புள்ளிகளலில் இரண்டைக்காணவில்லை.யாஸ்மினின

Link to comment
Share on other sites

பின் பலதடவை உங்களின் தொடரை வாசிச்சதன் பின் தான் விளங்கியது.உண்மையிலயே உங்களின் தொடரை அடல்ஸ்தான் வாசிக்கனும் எண்டு.. :wub::wub::lol:

யாயினி.

அதுதான் இந்த தொடரை 1ல் இருந்து 8 வரை நான் வாசிக்கவேயில்லை. :wub:

Link to comment
Share on other sites

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

....

முஸ்லிம் நாடு என்றும் அவை மிகவும் புனிதமான சட்டங்கள் கொண்டவை என்றும் சொல்லப்பட்டு வந்த பொய்யின் இரண்டாவது திரையும் கழன்று விழுந்தது எமக்கு.....

(தொடரும்)

எங்க கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கோ, அங்க களவுக்களும் தாராளமாக இருக்கும்....

பிடி பட்டிருந்தால் என்ன செய்து இருப்பீங்கள் நிழலி அண்ணோய்? அதையும் வாசகர்களுக்குச் சொல்லலாம் இல்லையா??? :wub:

Link to comment
Share on other sites

சும்மா வெருட்டினாத்தான் வாறாங்கப்பா...... :wub:

ஹி ஹி... நான் இந்த 8 ஆவது அங்கத்தை எழுதி முடித்த பின் தான் பார்த்தன்

ரொம்பவே துணிச்சல் தான் உங்களுக்கு நிழலி அண்ணா....... இந்த சிடீக்காக இப்படி தெருவில தேடி திரிந்தீர்களா? நம்பவே முடியல :wub:

எல்லாம் ஒரு Thrilling தான்...

ரெம்பத்தான் சிரமப் பட்டிட்டீங்கள் போலை இருக்கு..என்னைத் தொடர்புகொண்டிருந்தால் நான் எம்.எம்.எஸ்சிலை துண்டு துண்டாகவாவது அனுப்பியிருப்பேனே :lol:

அப்ப சாத்திரி என்ற ஒரு புண்ணியவான் இருப்பது தெரியாதே... இப்ப கூட அனுப்பி வைக்கலாம் உங்களிடம் இருப்பதை (மனுசிக்கு தெரியாமல் பார்க்கும் விதமாக phone னை Silent ஆக வைக்க வேண்டும்)

நீங்கள் சிடி தேடி டுபாய் வீதிகளில் அலைந்ததை நினைச்சன் யாராச்சும் வீதியில் வைத்திருப்பார்களாக்கும் எண்டு.பின் பலதடவை உங்களின் தொடரை வாசிச்சதன் பின் தான் விளங்கியது.உண்மையிலயே உங்களின் தொடரை அடல்ஸ்தான் வாசிக்கனும் எண்டு.. :lol::lol::lol:

ஹி ஹி

அதுதான் இந்த தொடரை 1ல் இருந்து 8 வரை நான் வாசிக்கவேயில்லை. :wub:

அச்சாப் பிள்ளை..... இப்படி எல்லா எல்லாச் சின்னப்புள்ளைகளுக்கும் அச்சாவா இருக்கவேண்டும்

எங்க கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கோ, அங்க களவுக்களும் தாராளமாக இருக்கும்....

பிடி பட்டிருந்தால் என்ன செய்து இருப்பீங்கள் நிழலி அண்ணோய்? அதையும் வாசகர்களுக்குச் சொல்லலாம் இல்லையா??? :D

அப்படி ஒரு விடயமே நடப்பதில்லை.... விற்கின்றவர்களைக் கூட பிடித்து fine கட்டிய பின் விட்டு விடுவார்கள்..

தொடரை மேலும் வாசியுங்கள்...டுபாய் பற்றி அறிய முடியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.