Jump to content

இந்திய தேர்தல் முடிவுகள்


Recommended Posts

இந்திய தேர்தல் முடிவுகள்

ஹிமாசல் பிரதேசத்தில் பாரதீய ஜனதாக் கட்சி முன்னணியில் (மொத்தமுள்ள நான்கு ஆசனங்களில் மூன்றில் முன்னணியில்)

முதல் சுற்று முடிவில் சிதம்பரம் முன்னணியில் :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

அ.தி,மு.க கூட்டணி: 18

தி.மு.க: கூட்டணி 18

இந்திய அளவு

காங்.கூட்டணி் 42

பிஜேபி.கூட்டணி் 36

3 வது அணி:24

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம்: பாமக முன்னிலை

சிதம்பரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக பொன்னுசாமி முன்னிலையில் இருக்கிறார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியில் இருக்கு விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் பின் தங்கி உள்ளார்.

நன்றி நக்கீரன்

Link to comment
Share on other sites

முன்னிலை....

்தி.மு.க: 22

அ.தி.மு.க:16

இந்திய அளவு

கா:79

பி.ஜே.பி: 59

3வது: 26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அழகிரி

மதுரையில் திமுக வேட்பாளர் மு.க.அழகிரி இதுவரை 52681 வாக்குகள் பெற்றூ முன்னிலையில் உள்ளார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகன் 29288 வாக்குகள் பெற்று பின் தங்கி உள்ளார்.

Link to comment
Share on other sites

காங் 162

பி.ஜே.பி: 109

3 வது: 38

தமிழகம்

அ.தி,மு.க 19

தி,மு.க 20

Link to comment
Share on other sites

எமக்கு அநீதி செய்த காங்கிரஸ் இந்திய அளவிலும், தி,மு.க தமிழக அளவிலும் வெற்றி பெறப் போகின்றன

மீண்டும் காங்கிரஸ்.... மீண்டும் தி.மு.க

நாம் மீண்டும் தொடங்கிய இடத்தில்...... தளபதிகளின் கூட்டு தற்கொலைகள் மட்டும் தான் மிச்சம் போலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகில இந்திய அளவில் காங்கிரசின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

ஆனால் தமிழ்நாட்டில் பலர் அதிமுகவை தான் எதிர்பார்த்தார்கள் .

ஈழத்தில் நடக்கும் பல்லாயிரக் கணக்கான தமிழ் படுகொலைகளுக்கு ,

தமிழக வாக்காளர்களும் அங்கீரம் வளங்கியுள்ளார்கள் போலுள்ளது.

விடுதலையும் , சுதந்திரமும் , கத்தரிக்காயும் ........ பேசாமல் அடிமையாய் இருப்பதே , சுகம் என்று நினைத்துவிட்டார்கள் போல் உள்ளது . :icon_idea:

Link to comment
Share on other sites

இன்று வெளியாகிய இந்திய தேர்தல் முடிவுகள் பலரது எதிர்பார்ப்புக்களையும் தாண்டி, பல ஆய்வுகளையும் தாண்டி, தமிழனின் தன்மான உணர்வையும், தமிழனின் சுய கௌரவத்தையும் கூடத்தாண்டி, யார்வீட்டில் இழவு வீழ்ந்தால் எனக்கென்ன, என்வீட்டில் அடுப்பெரியணும் என்னும் ஓர் சுயநல போக்கைக்கொண்டு, தமிழ்மான, இன ஒற்றுமை அரசியல் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது, பண அரசியல் மட்டுமே செல்லுபடியாகும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து நிற்கின்றது. நாம் கொல்லப்படவில்லை, ஈழத்தில் தானே தமிழர்கள் கொல்லப்படுகின்றார்கள், நமக்கென்ன என்ற ஓர் பார்வை இந்த அரசியல் வாக்கெடுப்பின் மூலம் தெட்டத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் 500 மீனவர்களின் கொலைக்கும் ஓர் அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. தமிழரின் இனமானம் என்பது எல்லாம் பொய், வெளி வேசம், எனக்குத் தேவை பணம் மட்டுமே, இனம் எல்லாம் தேவையில்லை, என உரத்துச் சொல்லி நிற்கின்றது.

கொலைகளுக்கு அங்கீகாரம் கொடுத்த தமிழக மக்கள். தமிழர்களின் கொலைகள் நியாயமானவை, அவை தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும், இன்னமும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியத் தமிழரும் சாகடிக்கப்படவேண்டும், மீனவர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படவேண்டும் என மீண்டும் தமிழர்கள் நிரூபித்து அதற்கான முழு அங்கீகாரத்தையும் இந்தத் தேர்தல் மூலம் செலுத்தி இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

தமிழன் என்பவன் பீச் சாதி என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் புலிகளை ஆதரித்த பரராஜசிங்கம் அவர்கள் மட்டு மக்களால் தோற்கடிக்கப் பட்டு தேசிய பட்டியல் மூலம் மட்டுமே தெரிவாகிய போது ஏற்பட்ட அதே வெறுமை, தமிழ் தேசிய விடுதலை பற்றிய நம்பிக்கையீனம் மீண்டும் ஏற்படுகின்றது

சாட்சிகளற்ற யுத்தத்தினை சிங்கள பெளத்த அரசு எப்படி துணிவாக நடாத்த முன் வந்ததென்ற கேள்விக்கு பதில் என் முதல் வரியில் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸின் ஈழத் தமிழர் விரோத முக்கிய நபர்களின் தோல்வி தமிழகத்தில் குறிக்கப்பட்டு விட்டதால்.. இக்கருத்தை.. விலக்கிக் கொள்கிறேன். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவை வெல்லவைத்த போதே ......

எமது தோல்வி நிச்சயிக்கப் பட்டு விட்டது என நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

இதை பாருங்கள் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றங்கள் வரலாம் ஏனென்றால் வித்தியாசம் பெரிதாக இல்லை

பார்ப்பததற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் காங்கிரசிற்கு ஒரு இடமும் கிடைக்காது போலுள்ளது . அது சற்றே ..... ஆறுதலான செய்தி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா இப்படி கவுத்திட்டீங்களே :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா இப்படி கவுத்திட்டீங்களே :o

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு.

தமிழக அரசியல் கள நிலைமை தொடர்பாக எந்த ஆராய்வும் இன்றி.. வெறும் ஈழத்து அவலத்தின் அடிப்படையில் தமிழக மக்கள் வாக்குப் போடுவினம் என்று எதிர்பார்த்தது எமது குற்றமா அவர்களின் குற்றமா..??!

அதுமட்டுமன்றி வெறும் தேர்தல் அறிக்கைகள் அடிப்படையாக வைத்து ஜெயலலிதாவை வாழ்த்தியதும் கருணாநிதியை தூற்றியதும் சரியான செயல்கள் அல்ல. அது எமது முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளையே இனங்காட்டுகிறது.

இன்றைய நிலையில் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டிய நாம்.. தமிழக அரசியல் தளத்தில் எல்லாம் எமக்காகவே அரங்கேறும் என்றிருந்தது மிகத் தவறான கணிப்பீடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்தத் தேர்தல்.

எனியாவது.. தமிழக தலைமைகளை சகட்டு மேனிக்கு விமர்சிப்பதை விடுத்து.. அனைவரையும் அரவணைத்து ஒரு பொதுக்கருத்தின் கீழ் அவர்களை ஒருங்கிணைத்து செல்ல முயல்வோம்.

ஆனால் இந்த இடத்தில் ஜெயலலிதா நன்றி கூறப்பட வேண்டியவர். அவர் தமிழீழத்தை உச்சரிக்கப் போய் கருணாநிதியும் தமிழீழத்தை உச்சரித்திருக்கிறார்.

பார்ப்போம்.. உச்சரிப்புக்களுக்கு செயல் வடிவம் கொடுக்கிறார்களா அல்லது அதுவும் தேர்தல் அறிக்கைக் காகிதங்களாகக் கசங்கி.. குப்பை ஏறுமா என்று.

நாமே எம்மை பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்தவன்.. தயவை எதிர்பார்த்தது எமது பலவீனம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

வணக்கம்

தற்போதய முடிவுகளின்படி தமிழகத்தில் நேர்மையான வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பதே உண்மை.

அப்படி இல்லையென்றால் தமிழகத்தில் இருப்பவர்கள்; தமிழர்களாக அல்ல மனிதர்களாகக்கூட இருக்கமுடியாது.

Link to comment
Share on other sites

இந்த நிலைக்கு திருமாவளவனும் ஒரு காரணம் ஆயிரம் இரண்டாயிரம் வித்தியாசம் இருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குகள்தான் அந்த வித்தியாசத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்காக நாமே போராட வேண்டும்.என்பதை தொப்புள் கொடி உறவுகளும் சொல்லி விட்டார்கள்.எல்லோரும் எம்மைக் கை விட்டு விட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைகள் இந்தத் தேர்தலில் தொல்வியடைந்துள்ளது பற்றி என்ன சொல்கிறீர்கள்? .

முக்கிய வேட்பாளர்களான மணிசங்கர அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் தோற்பது உறுதியாகவுள்ளது. சிதம்பரமும் பின் தங்கியேயுள்ளார்.

வைகோவின் பின் தங்கல்தான் ஆச்சரியப்படத்தக்கதொன்று. அவர் வெற்றியடைவார் என எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

எதிர்பார்த்தேன்........

ஒருகாலத்தில் எமக்கு தோட்டக்காட்டார் எப்பிடியோ.. அவர்களுக்கு நாம் அதைவிட கீழானவர்கள்...

அவ்வளவுத்தான்போல....

வேற யார் எம்மை பொறுப்பேத்துகொள்ளபோகிறார்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் சிங்களவனை விட , மோசமாக ஈழத்தமிழனை விமர்சித்ததை தமிழ்நாட்டு வாக்காளர்கள் மறக்கவில்லை .

அவர்களுக்கு இனி கூடுதலான ஓய்வு நேரம் கிடைக்கும். அதனை ராஜீவ் காந்தியின் சமாதியை கூட்டி , துடைப்பதில் பிரயோசனப்படுத்தட்டும் .

வைகோவை எதிர்த்து நின்ற நடிகர் கார்த்திக் 10,000 வாக்குகளை பெற்றுள்ளார் . கார்த்திக் தோற்பார் என்று தெரிந்தும் அங்கு கார்த்திக்கை போட்டியிட வைத்து வைக்கோவிற்கு விழும் வாக்குகளை பிரிக்க வைத்தது ஒரு கட்சி.

Link to comment
Share on other sites

தயவு செய்து உணர்ச்சி வசப்பட வேண்டாம். எதிர்பார்க்காத, அதிர்ச்சியான முடிவுதான். எனினும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் . ஏனெனில் உண்மை அதே.

தமிழர்கள் சரியாகத்தான் வாக்கு அளித்து இருக்கிறார்கள் . ஆனால் இடையில் புகுந்து தேதிமுக/ பாஜக பிரித்ததால் இந்த நிலைமை. இதற்கு நம்மால் ஒன்றும் சொல்ல இயலாது.

ஈழ பிரச்னையை தீர்க்கிறோம் என்று வருபவர் எல்லாம் கூறினால் மக்கள் குழம்பாமல் என்ன செய்வார்கள்?

ஜெயா அம்மாவின் ஈழ ஆதரவை அதிகமாக தமிழர்கள் நம்ப வில்லை என்றே தோன்றுகிறது

மேலும் பாமக தோல்விக்கு வேறு காரணம் உள்ளது . தேர்தலில் தலையிடாத ஒரு குழு ஏற்கனவே அடித்து குறி தவறியது போலன்றி சொல்லி வைத்து அடித்தது போல உள்ளது .

கை விட்டு விட்டார்கள் என்று சொல்ல வேண்டாம். கை கொடுத்து இருக்கிறார்கள் . ஆயிரம் பிரச்னைக்கு மத்தியிலும் குரல் கொடுக்கவென்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களை வழங்கி இருக்கிறார்கள். காங்கிரஸ் இன் பெரிய தலைகளை எல்லாம் மூழ்கடித்து இருக்கிறார்கள்.

ஈழ ஆதரவாளரான திருமா இரண்டிலும் முன்னணியில் உள்ளார். இது இன்னொரு சாதகம்.

மேலும் இந்த தேர்தல் நமக்கு மிகப்பெரிய வரலாற்று சோகம் என்று கூட சொல்லலாம் . இதை வைத்து யார் யார் எப்படி ஆட போகிறார்களோ ?????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.