Archived

This topic is now archived and is closed to further replies.

ragunathan

கொழும்புப் இன அழிப்பு அரசின் போர்குற்றங்களின் இன்னொரு பரிமாணமாக இடம்பெயரும் மக்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் ஆரம்பம் - கஜேந்திரன்

Recommended Posts

கொழும்புப் இன அழிப்பு அரசின் போர்குற்றங்களின் இன்னொரு பரிமாணமாக இடம்பெயரும் மக்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் ஆரம்பம் - கஜேந்திரன்

யாழ்ப்பாணத்தின் வடமாராட்சிக் கிழக்கு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோடைப்பகுதிகளில் அண்மையில் சிங்கள இனக்கொலை ராணுவத்தால் பிடிக்கப்பட்டு "தடுப்பு முகாம்களில்" சிறை வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது உறவினர்களிடம் விசாரணை என்ற பெயரில் பல பெண்களை அழைத்துச் செல்லும் ராணுவம் அவர்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவருவதாக முறையிட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கடந்த புதன்கிழமை தெரிவித்திருக்கிறார். ஆகவே தொடர்ந்தும் இந்த இனக்கொலையை நியாயப்படுத்தியும், முன்னின்று இயக்கியும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழர்களைச் சரணடையுமாறும் ஆலோசனை வழங்கும் எவரும் இந்த இனக்கொலையின் பங்காளிகள் ஆகிவிடுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு சிங்கள இனவெறி ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வேட்டையாடப்பட்ட பெண்களின் உறவினர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கு நடந்த கொடுமைகள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். 99 வீதம் சிங்கள இனத்தவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இனவெறி ராணுவத்தால் செய்யப்பட்டதாகக் கருதப்படும் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் மீதான கட்டுப்பாடற்ற அடக்குமுறையை நீண்டகாலமாக அனுபவித்து வரும் சிங்கள ராணுவத்துக்கு எதிராக இந்த அநியாயங்களைத் தமது உயிரச்சம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லத் துணியாததினால் ஒரு மிகப்பெரிய காட்டுமிராண்டித் தனம் மவுனமாக அரங்கேறி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழர்களை அடிமைப்படுத்தவென நடக்கும் இந்த இன அழிப்புப் போரில் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சி எனும் சிங்கள ராணுவத்துக்கு இயல்பாகவே அமையப்பெற்ற கலாச்சாரம் என்பது தமிழரின் உணர்வுகள் மீதான தாக்குதல் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது.

பாலியல் வன்புணர்வுகள் மட்டுமல்லாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு கூட இல்லாமல் இறந்த தமிழரின் நிர்வாண உடல்களை பார்க்கத் துடிக்கும் போர்வெறி கொண்ட சிங்கள அரக்கத்தனத்தை இந்த நவீன உலகு கண்டுகொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்ப் பெண்களுக்கு நடக்கும் அக்கிரமங்களைக் கண்ணுற்ற தென்னாசிய நாடொன்றின் தொழிலதிபர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் " இதுவே ஒரு அரபு நாடாக இருந்திருந்தால் இதற்கான பதில் நடவடிக்க மிகப் பாரதூரமாக இருந்திருக்கும்" என்று சொன்னார்.

தற்கொலைத் தாக்குதலுடன் தமிழர் கலாச்சாரத்துகுத் தொடர்புகள் இருப்பதாகக் கருதிக்கொண்டு அதன் மூலகாரணத்தை அறியும் நோக்கில் தமது "தமிழ் நண்பர்களை" அடிக்கடி தொந்தரவு செய்துவரும் சிங்கள சமூகவியலாளர்களுக்கு இதைக் காட்டிலும், தமது சொந்த இனத்தின் மனோநிலை பற்றிய ஆய்வொன்றினைச் செய்வது மிக இலகுவாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல், பெரும்பான்மையின மக்கள் செய்யும் அடக்குமுறைகளின் பின்ண்ணணியை சர்வதேசம் விளங்கிக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

கொழும்பிம் இன அழிப்புப் போருக்கு ஆதரவு கொடுத்துவரும் இந்தியாவும், இன்னும் சில உலக சக்திகளும் தாம் செய்வதன் விளைவு எப்படியிருக்கும் என்று தெளிவாக உணர்ந்துகொண்டும் அதைச் செய்கின்றன. வெறும் உதட்டளவில் இவர்களால் உச்சரிக்கப்படும் மனிதவுரிமைகளைப் பேணல் எனும் கோரிக்கையானது ஒருபோதுமே சிங்கள அரசினால் மதிக்கப்படவோ அல்லது நடைமுறைப்படுத்தப்படவோ இல்லை.

அவர்கள் இந்தப் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்புடன் நல்லுறவைப் பேணிவரும் ஓய்வுபெற்ற அமெரிக்க அதிபர் புஷிலிருந்து, இன்றைய இந்திய அமைச்சர் சிவ சங்கர் மேனன் உள்ளடங்கலாக இந்தப் போர்க்குற்றதில் பங்கெடுத்துக்கொண்டவர்களின் பெரிய பட்டியல் ஒன்றே இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா என்கிற சொல்லை உச்சரிக்கும் ஒவ்வொரு கணமும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தி முடித்த அட்டூழியங்கள்தான் தமிழர் மனதில் கொதித்துக்கொண்டிருக்கும், இதை இன்றுவரை காங்கிரஸ் அமைப்பு அறிந்துகொள்ளவில்லை.

உலகம் இன்றுவரை உண்மையான போர்க்குற்றம் புரியும் நபர்களுக்கெதிரான சர்வதேச சட்டமுறை ஒன்றை கண்டுபிடிக்கவில்லை.

காலம் காலமாக தமிழ்ப் பெண்கள் மீதான திட்டமிட்ட பாலியல் வல்லுறவுகள், கொலைகள் என்பதைச் சிங்கள ராணுவம் செய்துவருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிற

Share this post


Link to post
Share on other sites

தொடர்ச்சி.....

பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் ஒரு சில பெண்கள் மட்டும் தான் மீன்டும் தமது குடும்பங்களுடன் இணைந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், நீர்கொழும்பு பகுதிகளில் சிங்கள ராணுவத்தால் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை 2001 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அனுப்பியிருந்த கோரிக்கையில், " உடனடியாக இவ்வாறான பாலியல் வல்லுறவுகளைத் தடுத்து நிறுத்துமாறும், குற்றவாளிகளை உடனேயே சட்டத்தின் முன் நிறுத்துமாறும் " கேட்டிருந்தது.

னோர்வே நாட்டின் அனுசரனையுடன் அமுலாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்ட 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு தலைப்பிட்டு எழுதியிருந்து," இலங்கை : காவல்த்துறையின் கைகளில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்" என்பதுடன் "இன்றுவரை தமது கோரிக்கைக்கு சிங்கள அரசால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

சித்திரவதைகளுக்கெதிரான உலக அமைப்பு 1998 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதமொன்றில், "தமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்டவர்கள் தமதும், தம் குடும்பத்தவரதும் உயிர் இழப்புகளுக்கு அஞ்சி சொல்லாமல் மறைப்பதைக் காரணமாக வைத்துக்கொண்டு சிங்கள ராணுவம் பெண்கள் , சிறுமிகள் மேல் கட்டுப்பாடற்ற பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டு வருகிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

அதே ஆண்டில் சர்வதேச கல்வி அபிவிருத்தி எனும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய அறிக்கை ஒன்றில் , காலம் காலமாக தமிழ்ப் பெண்கள் சிறுமிகள் மீதான சிங்கள ராணுவத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிட்ட பாலியல் வல்லுறவுகள் ஒரு அடக்குமுறை ஆயுதமாக பாவிக்கப்பட்டு வருவதை விபரங்களுடன் தம்மால் ஆவனப் படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.

அரச சார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் தொடர்ச்சியாகவே பாலியல் வல்லுறவுகள் தொடர்பான சிங்கள ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடற்ற கலாச்சார அனுமதி பற்றி குற்றஞ்சாட்டி வருகின்றன.

முற்றும்.

நன்றி தமிழ்நெட்

தமிழாக்கம் ரகுனாதன்.

Share this post


Link to post
Share on other sites