Jump to content

சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ?


Recommended Posts

சிகிச்சை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் கரும்பு.

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

நல்ல படியாகவே நடக்கும் கரும்பு.

ஏராழன், வாதவூரன் உங்கள் நல்வாழ்வுக்கு என்னால் முடிந்தமட்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதீர்கள்.... பூரண நலம் பெற்று நீடுளி வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளேயென்று எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகிச்சை வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் கரும்பு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் நாளாந்த அறிக்கையில் சில தடவைகள் இவ்விடயமும் இணைக்கப்பட்டுள்ளதை அவதானித்தேன். இப்படியும் ஒரு சமாச்சாரத்தை நான் முன்பு எழுதிப்போட்டது நினைவில் வந்தது.

முக சீர் திருத்த சிகிச்சை என்பது பலபடிமுறைகளைக்கொண்டது. ஒரே தடவையிலோ, இரண்டு, மூன்று தடவைகளிலோ உடனடியாக சீரமைக்கமுடியாது. ஒவ்வொரு தடவையிலுமாக சிறிய சிறிய மாற்றங்களாகவே முன்னேற்ற முடியும்.

இந்த வருடம் ஜனவரி மாத ஆரம்பத்தில் மேலும்மொரு Rhinoplasty சத்திரசிகிகிச்சைக்கு உள்ளாகினேன். நாளை மீண்டுமொரு Rhinoplasty சத்திரசிகிகிச்சை எனக்குள்ளது. இத்துடன் மூக்கில் ஆறாவது தடவையாக கத்தி வைக்கப்படுகின்றது. அதிக பிரயத்தனம் செய்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆரம்பித்த நீண்டபயணம். ஒன்றும் செய்யமுடியவில்லை. இடைவழியில் விட்டுச்செல்லமுடியாது. சத்திரசிகிச்சையில் வெட்டுக்கொத்து வாங்கி பழகிவிட்டது. முன்பு இரண்டு தடவைகள் காதில் கசியிழையத்தை வெட்டி எடுத்து மூக்குப்பகுதியில் வைத்து சத்திரசிகிச்சை செய்தார்கள். நாளையும் காதிலும், மூக்கிலும் வெட்டு உள்ளது. இதன்பின்னர் மொகரக்கட்டை Apperance சற்று முன்னேற்றம் வரும் என்று நினைக்கின்றேன், பார்ப்போம்.

கரும்பு இதையும் சீக்கிர‌ம் நீங்கள் தாண்டுவீர்கள் கட‌வுள் கைவிட‌ மாட்டார்...கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் பெர்ச‌னாட்டிக்காக இத்தனை சிகிச்சைகள் அவசியமா?

Link to comment
Share on other sites

சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கரும்பு, இத்தனை தூரம் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் பயணித்த உங்களது சத்திரசிகிச்சை வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

கரும்பு உங்கள் சத்திர சிகிச்சையில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். நிச்சயமாக நீங்கள் வெற்றி அடைவீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு உங்கள் சத்திர சிகிச்சையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எனது பிரார்த்தனைகளும் உங்களுக்கு கரும்பு, சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புவிற்கு சத்திர சிகிச்சை நல்லபடியாக நடந்து மீண்டும் பொலிவுடன் திரும்பி வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி உங்களுடைய உடலுக்கும் மனதிற்கும் தெம்மையும் நலத்தையும் இறை அளிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அலட்டிக் கொள்ளாமல் இருங்கள் தொடரும் காலங்களில் கலகலப்பாகச் சந்திப்போம்

Link to comment
Share on other sites

கரும்பு, சிகிச்சை நல்ல படியாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன். பூரண குணமடைய வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

நலமுடன் திரும்ப வாழ்த்துகின்றேன்..

சிகிச்சையின் பின் நலமா என்று கேட்பதற்கு கூட உங்களிடம் தொலைபேசி இல்லை..எப்படி விசாரிப்பது?

Link to comment
Share on other sites

வணக்கம் சுபேஸ், ஈழப்பிரியன் அண்ணா, இசைக்கலைஞன், ஈசன், புங்கையூரன், உடையார், யாயினி, குமாரசாமி அண்ணா, ஏராழன், புத்தன், ரதி, தப்பிலி, இணையவன், பகலவன், வாதவூரான், யாழ்கவி, கிருபன், சகாறா அக்கா, ஈஸ், நந்தன், அர்ஜுன், நிழலி

உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அன்பிற்கும் மிக்க நன்றிகள்.

எனது அம்மா, அண்ணா ஆகியோருக்கு நேற்றுத்தான் இன்று சத்திரகிசிச்சை என்று சொன்னேன். அண்ணர் நக்கலாய் 'இதுதான் கடைசியோ? இல்லாட்டிக்கு இன்னும் இருக்கிதோ?' என்று கேட்டார். அம்மா வழமைபோ புறுபுறுக்கத்தொடங்கிவிட்டா. சும்மா ஒழுங்காய் இருக்கிற மூக்கை வெட்டப்போகின்றனாம் என்று. எனது மருமகள் ஒருத்தி 'மாமாவிண்ட மூக்கை நாளைக்கு கழட்டி எடுக்கப்போறீனமாம்' என்று பகிடிவிட்டாள். அண்ணியிடம் சொன்னபோது 'திரும்பவுமா?' என்று கேட்டா. இவ்வாறாக கடைசியில் வைத்தியசாலைக்கு நான் சென்றடைந்தேன்

எனது சத்திரசிகிச்சை நிபுணர் மூலம் எனக்கு முன்பதாக ஒருவருக்கு காலை 8.45க்கு ஒரு சத்திரகிகிச்சையும், இன்னொருவருக்கு 11.45இற்கு ஒரு சத்திரசிகிச்சையும் நடைபெற இருந்தது. எனது நேரம் மதியம் 12.30ஆக குறிக்கப்பட்டது. முதலாவது ஆளின் சத்திரசிகிச்சை கொஞ்சம் சிக்கலானது போல. அவருடையது முடிவடைவதற்கு 12.15ஆகிவிட்டது. இதனால் அடுத்தவரை முடித்து எனக்கு ஆரம்பிக்கும்போது 1.15 ஆகிவிட்டது.

நான் 2001ம் ஆண்டிலிருந்து கனடாவில் முகசீர்திருத்தம் சம்மந்தமாக உடலை முழுவதுமாக மயக்கி செய்யப்படுகின்ற (Under General Anesthetics) ஏழு சத்திரசிகிச்சைகளைப்பெற்றுள்ளேன். 2001இலிருந்து காலம் சென்று, சென்று இப்போதுவரை பார்க்கும்போது சிகிச்சை முறைகளிலும், நோயாளர்களை கையாளும் விதத்திலும், தொழில்நுட்பங்களிலும் பல மாறுதல்கள் வந்துள்ளதை காண்கின்றேன்.

உதாரணமாக, விமான நிலையத்தில் பெரிய திரையில் விமானங்கள் இறங்குகின்ற, ஏறுகின்ற நேரங்களை, அவற்றின் நிலைகளைக்காண்பிப்பதுபோல் இப்போது சத்திரகிச்சைகளையும் பெரிய திரையில் (on Tv Screen) கோப்பு இலக்கம், பிரதான சத்திரசிகிச்சை நிபுணர் பெயர், இரண்டாவது சத்திரகிசிச்சை நிபுணர் பெயர், சத்திரசிகிச்சை ஆரம்பிக்கும் நேரம், சத்திரசிகிச்சையின் தற்போதைய நிலை (On Time, Delayed, in OR, in Transfer, Recovery) என காண்பிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை இணையத்தளம் மூலம் பார்க்கும் வசதியும் விரைவில் வருமோ தெரியாது.

இன்று எனது கூட்டாளிகளில் பலர் சிறுவர்களாகவே காணப்பட்டனர். சிலருக்கு உடற்காயங்கள்/விபத்துக்கள் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளிற்கான சிகிச்சைகள், வேறு சிலரின் பிரச்சனைகள் தெரியவில்லை. அதில் ஒரு 2வயது சொச்சம் ஆள் இடைக்கிடை பகிடிகள் விட்டு எல்லோரையும் சிரிக்கவைத்துகொண்டு இருந்தார். போகும்போது கையைக்காட்டி எனக்கு bye சொல்லிவிட்டுப்போனார். Recovery அறையில் எனது ஒருபுறம் 8.45இற்கு சிகிச்சைக்கு உள்ளாகிய பெண் காணப்பட்டார். அவருக்கும் மூக்கில் பெரிய வெட்டுக்கொத்து நடந்ததுபோல் தெரிந்தது. இடதுபுறமாக ஓர் அம்மா இருந்தார். அவருக்கு கையில் ஏதோ விபத்து ஏற்பட்டு, அதை சீரமைக்கும் சிகிச்சையாக அமைந்தது. அம்மாவுடன் கொஞ்சம் கதை கொடுத்தேன், அவ்வாறே மற்றைய பெண்ணின் கணவர் என்று நினைக்கின்றேன், அவருடனும் கொஞ்சம் உரையாடினேன். சத்திரகிச்சை முடிந்து அறைக்குவெளியே என்னைக்கொண்டுவரும்போதே எனக்கு நினைவுவந்துவிட்டது. கட்டிலை தள்ளிக்கொண்டு வந்த பெண்களில் ஒருவரிடம் 'இப்போது எத்தனை மணி' என்று கேட்டேன். சிகிச்சை முடிந்ததும் Recovery room ஒன்றினுள் கொண்டுசெல்லப்பட்டு சுமார் அரை மணித்தியாலம் அங்கு தங்கவைக்கப்பட்டேன். அதன்பின்னர் இன்னோர் Recovery room ஒன்றினுள் கொண்டுசெல்லப்பட்டு இன்னோர் அரை மணித்தியாலம் தங்கவைக்கப்பட்டபின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். முதலாவது Recovery roomஇல் என்னைக்கவனித்த தாதியிடம் சும்மா பகிடிக்கு 'உயிருடன் உள்ளேன்' என்று கூறினேன். அவள் 'ஓமோம்' என்று சிரித்துக்கொண்டு தலையாட்டினாள்.

இந்தத்திரியை இங்கு பதிவிட்டதும் முதலாவதாய் கருத்திட்ட நெடுக்காலபோவான் எனது அறிவு, அனுபவங்களைப்பாவித்து தாயகத்தில் உள்ள மக்களும் பயன்பெறுவதற்கு எதிர்காலத்தில் வழிவகைகள், உதவிகள் செய்யவேண்டும் என்று கேட்டார். நிச்சயமாக வசதி, வாய்ப்புக்கள் வரும்போது இது சம்மந்தமாக சிறிய அளவிலாயினும் ஏதாவது முயற்சிகள் மேற்கொள்வேன். எனக்கு மருத்துவ நிபுணர்களுடன் நல்ல தொடர்புகள் காணப்படுவதால் இதற்கு உதவியாக அமையும் என்று நினைக்கின்றேன்.

சில தினங்களுக்கு முன்னர் New York Times இல் வலிகள் இல்லாமல் இறப்பது சம்மந்தமாக ஓர் கட்டுரையையும், அதற்கெழுதப்பட்ட பல பின்னூட்டல்களையும் வாசித்தேன். பல எண்ணங்கள் உருண்டோடின. இந்த உலக வாழ்க்கையின் நிலையில்லாத தன்மையை அறிந்தும் நாங்கள் எவ்வளவு மோசமாக வாழ்கின்றோம் என்பதை எண்ணிப்பார்த்தேன். நான் Pessimisticஆய் நினைக்கவில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் சாவை எதிர்கொள்ளும்போது அதற்கேற்றவகையில் சில தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது தவறானதாகத்தெரியவில்லை. நாங்கள் வாழ்க்கையில் பல திட்டங்களை இடுகின்றோம், ஆனால், சாவுக்கான திட்டம் ஏதும் எமக்கு இருப்பதில்லை. அது அவசியமான ஒன்றாகவே எனக்குத்தெரிகின்றது. இருபதோ முப்பதோ ஐம்பதோ வருடங்களில் என்றாவது ஒருநாள் நாங்கள் ஒவ்வொருவரும் சாவை காணத்தான் போகின்றோம், எனவே, எங்களையே நாங்கள் பேக்காட்டாது யதார்த்தத்துடன் ஒன்றிய ஆக்கபூர்வமான முறைகளில் அதற்கான சில திட்டங்களை நீண்டகாலநோக்கில் ஏற்படுத்திக்கொள்வதும் தேவையான ஒன்றாகவே தெரிகின்றது. இதன்மூலம் தேவையில்லாத வலிகளையும், துன்பங்களையும் குறைக்கக்கூடியதாக அமையலாம்.

(நிழலி, எனது இலக்கம் மாறிவிட்டது. சில வியாபார தேவைகளின் நிமித்தம் மாற்றம் செய்யவேண்டி வந்தது. உங்களை தொடர்புகொள்கின்றேன், நன்றி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி, இதுவும் கடந்து போகும், எமது வாழ்க்கை நம் கையில், அதை மற்றவர்களுக்கும் பயன்பட கூடிய வகையில் இறக்கும்வரை பயன்படுத்துவோம் மற்றவர்களை புண்படுத்தாமல்

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு நீண்ட பதிவோடு உங்களை காண்பதில் மகிழ்ச்சியே.

பொன்னைத் தான் புடம்போடுவார்கள் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அது போலத் தான் உங்களுக்கும் வரும் சிக்கல்களும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

உண்மைதான் உடையார், ஈஸ். காலவோட்டத்தில் பழைய பிரச்சனைகள் தீர்ந்துபோக புதிது, புதிதாய் பல பிரச்சனைகள். வாழ்க்கை தொடர்ச்சியான போராட்டமே.

நான் சில மாதங்களின் முன்னர் எனக்கு தாடை அறுவைச்செய்த, அத்துடன் ஆறு Rhinoplasty சத்திரசிகிச்சைகளில் ஒன்றை செய்த எனது சத்திரசிகிச்சை நிபுணரைச்சந்தித்தேன். அவர் இப்போது கனடாவில் இல்லை. முன்பு டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பிரிவில் முகசீர்திருத்தசிகிசைகளுக்கு பொறுப்பான பேராசிரியராகவும், அத்துடன் டொரோண்டோவில் உள்ள இரண்டு முக்கியமான சிறுவர் வைத்தியசாலைகளில் முகசத்திரசிகிச்சைகளுக்கான தலைமை சத்திரசிகிச்சை நிபுணராகவும் விளங்கினார். தனது தனிப்பட்ட விருப்பம் காரணமாக இரண்டு வருடங்களின் முன் கனடாவைவிட்டுச்சென்று இப்போது ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்றார். நான் 2010இல் Rhinoplasty சிகிச்சையைப்பெற்ற ஒரு மாதத்தில் கனடாவைவிட்டு சென்றுவிட்டார். அவரை மீண்டும் இந்த வருடம் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் நான் நல்ல வெய்யிலில் காய்ந்து கருவாடாடி காணப்படுகின்றேன், எனது தலைமயிரைப்பார்த்து சிரிக்கக்கூடாது. எல்லாம் ஒரு ஸ்டைல்தான்.

o0ywcm.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.