கரும்பு

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்

Recommended Posts

வணக்கம்,

நேற்றையோட பள்ளிக்கூடத்தில ஒரு குழந்தையிண்ட பிரசவம் மாதிரி எனது ஒருகட்ட படிப்பு உத்தியோகபூர்வமா முடிஞ்சிட்டிது. இப்ப கொஞ்ச நாளா யாழுக்க மினக்கட நேரம் கிடைச்சு இருக்கிது. இருந்தாலும்.. எப்ப நான் யாழில இருந்து காணாமல் போவன் என்று எனக்கே தெரியாது. அதனால.. ஒரு முன்னேற்பாடா.. இன்னும் சில நூறுவருசங்களால எங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்போகும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவலாம் எண்டுற நப்பாசையில இதுவரை காலமும் நான் யாழில பழகின ஆக்கள்பற்றி ஒரு சின்னப்பதிவு ஒண்டை நான் காணாமல் துலைஞ்சு போவதற்கு முன்னம் வச்சுப்போட்டு போகலாம் எண்டு நினைக்கிறன்.

எழுதுறதற்கு வசதியாக இருப்பதற்காகவும், எனக்கு தெரிந்த, நான் கருத்தாடல் செய்து பழகிய ஒருவரையும் தவறவிடாமல் இருக்கிறதற்காகவும் அதிக கருத்துக்கள் எழுதினவர்களில இருந்து – இறங்குவரிசையில ஆண்கள் பத்து + பெண்கள் பத்து பத்து பேராக ஒவ்வொரு தடவையும் கருத்தை பதிகின்றன்.

சிலரை எனக்கு தனிப்பட தெரியும் யாழுக்கு வெளியாலையும். சிலரை யாழுக்க மட்டும்தான் தெரியும். அவர்களை தனிப்பட தெரியாது. தனிப்பட தெரிந்த சிலர்பற்றிய சுவாரசியமான விசயங்களையும் இதில கொஞ்சம் சொல்லிறன். ஆக்களிண்ட பெயரைப்பாத்துத்தான் ஆண்பெண் எண்டு இதில எழுதிறன். எனவே, தனிப்பட தெரியாத எவரையாவது பால் மாறி சொல்லி இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. யாழில நடந்த பல சம்பவங்களும், ஆரம்ப காலங்களில என்னோட கருத்தாடல் செய்தபலரின் நினைவுகளும் எனக்கு மறந்துபோச்சிது. நினைவில இப்போது இருக்கிறவை பற்றி மட்டும் சொல்லிறன்.

ஆண்கள் முதல் பத்து:

யமுனா:

குரு எண்டு கூப்பிட்டு எனக்கு உசுப்பேத்திவிட்ட ஆக்களில முதன்மையானவர் இவர். அது ஏன், எப்படி, எதற்காக குரு எண்டு என்னை கூப்பிடவெளிக்கிட்டார் எண்டு எனக்கு இப்ப நினைவு இல்லை. ஆனால் ரெண்டுபேரும் குரு - சீடன் எண்டு சேர்ந்து அடிச்ச கூத்துமாதிரி யாழ் வரலாற்றில வேறு ஒன்று இருக்காது எண்டு நினைக்கிறன்.

இவர் வாழ்க்கைபற்றி தனிப்பட சில விசயங்கள் தெரியும். உண்மையில சொல்லப்போனால் எனக்கு இங்கு இருக்கும் யமுனா எண்டுறபெயரில எழுதுபவரை விட வெளி உலகில இருக்கிற உண்மையான **** எனும் பெயர் கொண்ட ஆளை அதிகம் பிடிக்கும் எண்டு சொல்லலாம். எங்கிருந்தாலும் வளமுடன் வாழ்க!

நுணாவிலான்:

ஆரம்பத்தில நான் ணுனாவிலான் எண்டு கூப்பிட பிறகு குளக்காட்டன் இடையில வந்து அது நுணாவிலான் எண்டுவரும் என திருத்திவிட்டார். யாழில பலர் பலவற்றை குப்பையாக வெட்டி ஒட்டினாலும், ஓரளவு பயனுள்ள தகவல்களை வெட்டி ஒட்டினவர் எண்டால் நுணாவிலானை சொல்லலாம்.

தனிப்பட இவரை எனக்கு தெரியாது. என்ன செய்கின்றார் எண்டும் தெரியாது. வாழ்க வளமுடன்!

மதன்:

நான் யாழில இணைஞ்ச காலத்தில அதிகம் கருத்தாடல் செய்து இருக்கிறன் இவருடன். பிறகு ஆளை காணவில்ல. மாதவனை பாக்கும்போது இடைக்கிடை இவரிண்ட நினைவு வரும். தனிப்பட தெரியாது. எங்கிருந்தாலும் வாழ்க!

வானவில்/பிரசண்ணா:

நான் யாழில இணைஞ்ச காலத்திலதான் இவரும் இணைஞ்சு இருந்தார். கும்பலில எல்லாரும் கிறுக்குத்தனமாக கிறுக்கின வேளையில இவரும் கிறுக்கினார். பிறகு காணாமல் போய்விட்டார்.

தனிப்பட தெரியாது. இவரது தனிப்பட்ட வாழ்க்கை எவ்.பி.ஐ க்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம். எங்கிருந்தாலும் வாழ்க!

தூயவன்:

ஆரம்பத்தில இவர் எழுதுறதுகளப் பார்துப்போட்டு யாரோ வயசில பெரிய ஆள் ஆக்கும் எண்டு நினைச்சன். தமிழில நல்ல அறிவு இருந்திச்சிது. அதை தேவையில்லாத விவாதங்களில செலவளிச்சு விட்டார். என்னுடன் யாழில அதிகம் மல்லுக்கட்டியவர்களில ஒருவர் தூயவன்.

இவரைப்பற்றி தனிப்பட கொஞ்சம் தெரியும். எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!

கந்தப்பு:

நான் யாழில சிறீ லங்கா சிறை அனுபவங்கள் தொடரை எழுதிமுடிக்க மூலகாரணமாய் இருந்தவர் கந்தப்பு. கந்தப்புவிற்கு உண்மையில நல்ல தமிழ்பற்று இருக்கிது. தாயகபோராட்டம் மீது வலுவான நம்பிக்கை, பிடிப்பு இருக்கிது.

ஊரில இருந்த காலத்தில இவரை நான் கண்டு இருக்கக்கூடும். நேரில பார்த்தால்தான் ஆள் ஆர் எண்டு தெரியும். வாழ்க வளமுடன்!

தயா:

தயா எண்டுறதைவிட தலை எண்டுதான் எனக்கு இவரை தெரியும். இவர் எப்ப யாழில தனது பெயரை மாத்தினாரோ அண்டையோட இவரிண்ட தலையிண்ட மதிப்பு குறைஞ்சிட்டிது எண்டு சொல்லவேணும். யாழில பச்சை பல்லுப்போட்ட முக்க்குறியை பார்க்கும்போது எனக்கு இவரிண்ட நினைவுதான் வரும். இவர் அதை அப்பப்ப பாவிப்பார். எங்கிருந்தாலும் வாழ்க!

ஈழவன்:

ஆரம்பத்தில அடிக்கடி கருத்தாடல் செய்வது ஈழவனுடன். பிறகு ஈழவன் யாழுக்கு வருவது குறைந்துவிட்டது. கலுசறை எண்டுற சொல்லை யாழில இடைக்கிடை பாவிக்கிற ஆள் ஈழவன் எண்டு சொல்லலாம். கலுசறை எண்டு சொல்லி ஈழவன் ஊர்ப்புதினத்தில சிறீ லங்கா அரசு ஆட்கள் யாரையாவது பேசி எழுதேக்க, அதை வாசிக்கும்போது எனக்கு சரியான சிரிப்பாய் இருக்கும்.

வீட்டில கலியாணம் பேசுவதாய் எப்பவோ யாழில சொன்னமாதிரி இருக்கிது. வளமுடன் வாழ்க!

நெடுக்காலபோவான்:

ஆரம்பத்தில எனக்கு ஒரு எதிரிபோல தோற்றமளித்து... பிறகு தனிப்பட எனக்கு ஆளை யார் எண்டு தெரியாவிட்டாலும்.. முகம் அறியாது, பின்புலம் அறியாது, வெறும் யாழில பரிமாறுகின்ற கருத்தாடல்களிண்ட அடிப்படையில மானசீகமான ஒரு நல்ல நண்பனாக ஒருவர் இருக்கிறார் எண்டால் நெடுக்காலபோவானை சொல்லலாம்.

நெடுக்காலபோவானின் சில கருத்துக்களுடன் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை. ஆனால் சில கருத்துக்கள் ஆரம்பத்தில நான் அவற்றை வெறுத்து இருந்தாலும்.. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள், உண்மைகள். முன்பு இதுகளை வாசிக்கும்போது சரியான ஆத்திரமாய் இருக்கும்..என்னடா யார் இது இப்பிடி எழுதுறான் பெண்களை நார் நாராய் கிளிச்சு இவ்வளவு கேவலமாய் எண்டு... ஏதோ லூசன் ஆக்கும் எண்டு நினைச்சன். ஆனால்.. இப்போது கசப்பாய் இருந்தாலும் நெடுக்காலபோவான் சொன்ன சில கருத்துக்கள் உண்மை, யதார்த்தமாக எங்கட வாழ்க்கையில இழையோடி இருப்பவை என அறியும்போது அதே விசயங்களை இப்போது வாசிக்கும்போது சிரிப்பாய் இருக்கும். உண்மையை உண்மை எண்டு ஏற்றுக்கொள்ளத்தானே வேணும்?

எனக்கு நெடுக்காலபோவானை நினைக்க சிரிப்பு வருகிற ஒரு விசயம் என்ன எண்டால்.. முன்பு எங்கையோ ஒரு இடத்தில யாழ்ப்பாணத்தில மணலுக்கால வெறுங்காலோட நடந்துபோறது பற்றியும் தனது கால்களைப்பற்றியும் ஏதோ விமர்சனம் செய்து ரெண்டுவரிகளில எழுதி இருந்தார். நெடுக்காலபோவானில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் பல்வேறு விசயங்கள் பற்றிய பரந்துபட்ட அறிவை வளர்த்து இருக்கிறது. அதை விருத்தி செய்யுறது எண்டு சொல்லலாம்.

வாழ்க்கையை பரிசோதனைகூடமாக மாற்றாது, அம்மா, அப்பா, சகோதரங்களிண்ட சொல்லை கேட்டு, அச்சாப்பிள்ளைமாதிரி நல்ல ஒரு துணையுடன் இணைந்து வளமுடன் வாழ வாழ்த்துகள்!

கலைஞன் / மாப்பிளை:

அது வேற யார்? நாந்தான். இவரில பிடிக்காதவிசயம் என்ன எண்டால் யாழில இணைஞ்சது. பிடிச்ச விசயம் என்ன எண்டால் யாழில எழுதுவதை நிறுத்திக்கொண்டது. என்னையே நான் வாழ்த்த முடியாது. வேற சொல்லிறதுக்கு ஒண்டும் இல்லை.

பெண்கள் முதல் பத்து:

கறுப்பி:

யாழுக்கு எழுதிறதால எழுதிற ஆக்களுக்கு பயன் இருக்கிதோ இல்லையோ ஆனால் யாழ் இணையத்துக்கு எப்பவும் பயன் இருக்கிது. யாழ் இணையத்துக்கு பலமான ஒரு மூலாதாரமாக இருக்கிற ஆக்களில கறுப்பியை சொல்லலாம். காலம்பற ஒவ்வொருநாளும் நாங்கள் எழும்பி கிடுகிடு எண்டு பல்லு மினுக்கி முகம் கழுவுறதுமாதிரி கறுப்பி ஊர்ப்புதினம் பகுதியில வந்து கிடுகிடு எண்டு தானாக இயங்கிற இயந்திரம் மாதிரி செய்தியை வெட்டி ஒட்டிப்போட்டு போவா. கறுப்பியின் செய்திகள் இங்கு செய்திபார்க்க வருபவர்களுக்கு நல்ல தீனி என்பதில சந்தேகம் இல்லை.

யாழில காதலர்தினம் எண்டு இந்தவருசம் கூத்து அடிச்சு இருந்தம். அதன் ஒரு அங்கமாக ஒரு நேரடி போட்டி வச்சு இருந்தன். இதன் கடைசிக்கேள்வியாக உங்கள் காதலருக்கு ஒரு கடிதம் எழுதுங்கோ எண்டு கேட்டு ஒரு கேள்வி போட்டு இருந்தன். யமுனாவும், விகடகவியும், கறுப்பியும் மூன்று வெவ்வேறு விதமான காதல் கடிதங்களை எழுதி இருந்தார்கள். நான் சும்மா விளையாட்டுக்கு அந்தபோட்டியை யாழில வைத்து இருந்தாலும்.. மூன்றுபேரும் இவ்வளவு Serious ஆக தங்கட உள்ளங்களில் இருந்து தமது உண்மையான காதலர்களை நோக்கி கற்பனையில் கடிதம் எழுதுவார்கள் எண்டு நான் நினைக்க இல்லை.

இந்த மூண்டு கடிதங்களையும் வாசிக்க எனக்கு அண்டைக்கு கண் எல்லாம் கலங்கி ஒரு அழுகை மாதிரி வந்திட்டிது எண்டு சொல்லலாம். சும்மா தேவையில்லாத ஒரு கேள்வியை விளையாட்டாய் கேட்டு மூண்டுபேரிண்ட உண்மையான உணர்வுகளையும் அவமதித்துப் போட்டனோ எண்டு நினைச்சு கலங்கிவிட்டேன். காதலிச்சு பார்த்தவர்களுக்குத் தெரியும் காதலின்வலி. நான் அதன் வலியை உணர்ந்து இருந்ததால மூவரும் எழுதின அந்த மடல்களின் பெறுமதியை, கனத்தை என்னால உணரக்கூடியதாக இருந்திச்சிது.

யமுனா, விகடகவி, கறுப்பியுக்கு நீங்கள் விரும்பியபடியான வாழ்க்கை அமைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்..! தனிப்பட கறுப்பியை எனக்கு தெரியாது. எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!

வெண்ணிலா:

யாழில யார் காதலைப்பற்றி அதிக எண்ணிக்கையில கவிதை எழுதி இருக்கிறீனம் எண்டு கேட்டால் அதற்கு பதிலாக வெண்ணிலாவை சொல்லலாம். ஏன் கடிதம்போட்டாய்... ஏன் என்னை அப்பிடி ஒருமாதிரி முறைச்சுப்பார்த்தாய் எண்டு கேட்டு ஒரு காதல் கவிதை. பிறகு ஏன் கடிதம் போடாமல் இருக்கிறாய்... எண்டு கேட்டு இன்னொரு காதல் கவிதை.

வெண்ணிலா காதல்பற்றி கவிதையில கதைக்காத விசயம் இல்லை எண்டு சொல்லலாம். சிலது வாசிக்க சிரிப்பாய் இருந்தாலும்.. வெண்ணிலாவின் கவிதையிண்ட பாணி, அதை சொல்லிற முறை, கையாளுற சொல்லுகள், முடிச்சுப்போடுற சிந்தனைகள் எண்டு சொன்னால் பொறுமையாக நல்ல மனநிலையுடன் குந்தி இருந்து வாசிப்பவர்களுக்கு அது நல்ல ஒரு அனுபவமாக இருக்கும்.

வெண்ணிலாவின் ஒரு சகோதரி சிறீ லங்கா விமானக்குண்டுவீச்சில முன்பு மரணம் அடைந்ததாக யாழில ஒரு இடத்தில அவ எழுதி இருந்ததை வாசிக்க வருத்தமாக இருந்திச்சிது. தனிப்பட வெண்ணிலா பற்றி அதிகம் தெரியாது. வெண்ணிலா தான் விரும்புவதுபோன்ற பிரியமான நல்ல ஒரு துணையுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

ரசிகை:

யாழில எனக்கு முதன்முதலாக தனிமடல் மூலம் எனது கவிதைபற்றிய விமர்சனம் சொல்லி எனது எழுத்துக்களை ஊக்குவிச்ச ஆளாக ரசிகையை சொல்லலாம். ரசிகை புதுமைகளை விரும்புபவர், முற்போக்கான சிந்தனைகளை ஆதரிப்பவர் எண்டு நினைக்கிறன். நான் ஆண்களும் ஒரு காலத்தில குழந்தைகள் பெற்றுக்கொள்ள விஞ்ஞான வசதிகள் கிடைக்கும் என்றுகூறி ஆரம்பிச்ச ஒரு கருத்தாடலை பலர் நையாண்டி செய்தவேளையில நான் மனம்கோணிப்போய் இருந்தவேளையில எனது சிந்தனையை ஆதரிச்சு ஒரு ஆக்கபூர்வமான கருத்து பதிந்து இருந்தா. நான் யாழில இணைவதற்கு முன்னர் நிறையவிவாதங்கள் எல்லாம் செய்து இருக்கிறா. இப்போது வருவது குறைந்துவிட்டிது.

ரசிகையின் வாழ்க்கைத்துணை மணிவாசகன் ஒரு சிறந்த கவிஞர். தனிப்பட இவர்களை எனக்கு தெரியாது. ஆனாலும் விரைவில இவர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கலாம் எண்டு நினைக்கிறன். மணிவாசகனும் ரசிகையும் சிவபெருமானும், உமாதேவியாருமாக வளமுடன் வாழ வாழ்த்துகள்!

தூயா:

யாழில இணைஞ்ச ஆரம்பத்தில நான் தூயாவுடன் அதிக கருத்தாடல்களில கலந்து இருக்கிறன் எண்டு நினைக்கிறன். எங்கட சுயசரிதையை யாழ் நாற்சந்தியியில சொல்லிற ஏதோ ஒரு விளையாட்டுக்கு தூயா என்னை முதலாவதாக அழைத்து இருந்தா. யாழில பெண்களிடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டபோது நான் எல்லாரிடமும்போய் கெஞ்சிக்கூத்தாடி சமரசம் செய்யவேண்டிய ஒருநிலை ஏற்பட்டிச்சிது. தூயாவுக்கு வரக்கூடிய கோபத்தை நான் அப்போது அறிஞ்சு இருந்தன்.

எனக்கு யாழில இருக்கும் தூயாவைவிட வலைப்பூவில இருக்கிற தூயாவை அதிகம் பிடிக்கும் எண்டு சொல்லலாம். நான் தூயாவின் வலைப்பூவில பின்னூட்டல்கள் போடுவது இல்லை எண்டாலும் இடைக்கிடை போய் பார்க்கிறது என்ன நடக்கிது எண்டு. கந்தப்பு மாதிரி தூயாவிண்ட தமிழ்பற்றும், தாயகப்போராட்டம் மீது இருக்கிற நம்பிக்கை, ஆதரவும் பாராட்டுக்குரியது.

தூயாவில எனக்கு பிடிச்ச விசயம் எண்டால் சமையல்தான். தூயாவுடன் தற்போது சேர்ந்து இருக்கும் பெற்றோர், அண்ணாமார் கொடுத்து வைத்தவர்கள். தூயாவின் வருங்கால துணையும், குழந்தைகளும் கொடுத்து வைத்தவர்கள் (கோவிக்க்கூடாது கனக்க கதைக்கிறன் எண்டு). ஏன் எண்டால் வீட்டில இருந்து Restaurant மாதிரி விதம், விதமாக சாப்பிடலாம். தூயாபற்றி தனிப்பட அதிகம் தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

அனிதா:

நான் யாழில யாராவது எழுதுற ஒவ்வொரு கருத்தையும் அவர்களிண்ட Profile க்குப்போய் அடிக்கடி வாசிச்சு இருக்கிறன் எண்டால் அது அனிதாவிண்ட கருத்துக்களாகத்தான் இருக்கும். தமிழில எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அனிதா கஸ்டப்பட்டு ரெண்டு வசனத்தில எழுதுற கருத்க்களில எனக்கு ஈர்ப்பு அதிகம்.

பிரியசகி மூலம்தான் எனக்கு அனிதா அறிமுகம் ஆகினா. ஆரம்பத்தில “ஒண்டு சொன்னால் நீங்கள் கோவிக்கக்கூடாது சொல்லவோ” எண்டு கேட்டா. நானும் “என்ன சொல்லுங்கோ” எண்டு கேட்க தான் எனது ரசிகையாம். நான் யாழில எழுதுறதுகள் எல்லாத்தையும் வாசிப்பாவாம் எண்டு சொன்னா. பிறகு நான் சொன்னன் “நானும் ஒருவிசயம் சொல்லுவன் நீங்கள் கோவிக்கமாட்டீங்கள் தானே” எண்டு. “என்ன” எண்டு கேட்டா.. நானும் உங்களைமாதிரித்தான் நீங்கள் எழுதுற கருத்துக்களை எல்லாம் உங்கட Profileக்கு வந்து ஒண்டுவிடாமல் வாசிப்பன் எண்டு சொன்னன். அவவுக்கு அதைக்கேட்க பெரிய சிரிப்பு.

அனிதாவில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. தான் காலம்பற எழும்பினால் இரவுதான் படுக்கிறது இடையில தூங்குவது கிடையாது எண்டு சொல்லுவா. நான் எண்டால் ஒருநாளைக்கு பத்துத்தரம் படுக்கிறதும் எழும்பிறதும். சின்னனில இருந்து இப்பிடி பழக்கமா போயிட்டிது. தூங்கிவழியுறது கெட்டபழக்கம்தான் என்னசெய்யுறது?

அனிதாவில இருக்கிற எனக்கு பிடிக்காத விசயம் என்ன எண்டால் கோவம் எண்டு சொல்லலாம். தனக்கு சின்னக்கோபங்கள் வராது. வந்தால் எல்லாம் பெரிய கோவமாய்த்தான் வரும் எண்டு சொல்லுவா. அனிதா வளமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

ரமா:

ரமாவோட கருத்தாடல் செய்து ஒரே ஒரு இடம்தான் நினைவில இருக்கிது. நான் முன்பு ஒருதடவை வாசணைத்திரவியம் வாங்கேக்க குடை, இதர இத்தியாதிகள் இலவசமாக கிடைச்சது பற்றி சொல்லி இருந்தன். ரமா யாழ் காலக்கண்ணாடியை செய்யேக்க அதுபற்றி ஏதோ சொல்லி இருந்தா. பிறகு அதுபற்றி ஏதோ கிறுக்கி இருந்தோம். ரமா முன்பு யாழுக்கு அடிக்கடி வருபவர் எண்டு நினைக்கிறன். நான் இணைஞ்சபிறகு வருவது குறைஞ்சு போட்டிது. ரமா எழுதிய கவிதைகளை வாசித்து இருக்கிறன். அதில ஒன்று அப்பா பற்றினதாக இருக்கவேணும்.

ரமா வளமுடன் வாழ வாழ்த்துகள்!

இன்னிசை:

நான் கலைஞன் பிறகு முரளி எண்டு பெயரை மாத்தினாப்பிறகும் என்னை மாப்பு இல்லாட்டிக்கு மாப்பிளை எண்டுகூப்பிடுற ஆக்களில ஒரு ஆள் இன்னிசை. இன்னிசை இணைஞ்ச ஆரம்பத்தில இவ ஆணா பெண்ணா எண்டு எனக்கு தெரிய இல்லை. நான் ஆண் எண்டு நினைச்சு இருந்தன். இதனால சும்மா பகிடிக்கு இன்னிசைபாடிவரும் எண்டுற அந்தபிரபலமான பாடலை (விஜய் நடிச்ச படம் பெயர் மறந்துபோச்சி) முழுதுமாக எழுதி இருந்தன். பிறகு அதை நினைக்க சிரிப்பாய் இருந்திச்சிது.

இன்னிசையுடன் நிறைய கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். நிறைய நகைச்சுவைகளை பரிமாறி இருக்கிறன். இப்ப எல்லாம் மறந்துபோச்சிது. இன்னிசை தனது துணையுடன், குடும்பத்தினருடன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

பிரியசகி:

நான் இப்பவும் கூட ஜோதிகாவிண்ட பாடல்களை பார்க்கும்போது உடனடியாக மனதில வாற ஆள் பிரியசகிதான். ஆரம்பத்தில அக்கா அக்கா எண்டு கூப்பிட்டது. பிரியசகி “என்ன எல்லாரையும் பெயர் சொல்லி கூப்பிடுறீங்கள் என்னை மாத்திரம் அக்கா எண்டு கூப்பிடுறீங்கள்?” எண்டு கேட்டு இருந்தா. நிறைய நகைச்சுவைகளை பிரியசகியுடன் யாழில பரிமாறி இருக்கிறன்.

முந்தி செல்வன் எண்டு ஒரு தொடர் எழுதவெளிக்கிட்டது. பிறகு சில பிரச்சனைகள் காரணமாக அதை கைவிட்டுவிட்டன். தானும் தனது அம்மாவும் சேர்ந்து நான் எழுதுகின்ற செல்வன் தொடரை ஆவலுடன் விரும்பி வாசிப்பம் எண்டு பிரியசகி சொல்லுவா. நலமோடு வாழுதல் பகுதியிலதான் பிரியசகி எழுதுவது அதிகம் எண்டு நினைக்கிறன்.

பிரியசகியில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் ஓடி ஓடி வேலை செய்து உழைக்கிறது. கஸ்டப்பட்டு உழைக்கிற காசை வீணாக பொருட்கள் வாங்கி செலவளிக்காது கவனமாக சேமிச்சு வையுங்கோ எண்டு முன்பு ஒருமுறை பிரியசகியுக்கு சொல்லி இருந்தன். பிரியசகியுக்கு விஷ்ணு எண்டு உண்மையான கூடப்பிறந்த அண்ணா இருப்பதாய் அறிஞ்சன். அவருடன் எனக்கு பழக்கம் இல்லை. நான் யாழில இணைஞ்ச காலத்தில அவர் கருத்து எழுதுவது குறைந்துவிட்டது எண்டு நினைக்கிறன்.

பிரியசகி, அம்மா, அப்பா, அண்ணா குடும்பத்தினர் நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துகள்!

சண்முகி:

இடைக்கிடை என்னுடன் கருத்தாடலில் பங்குபற்றி இருக்கிறா. இப்ப மறந்துபோச்சிது. கடைசியாக அரவிந்தன் வைத்த போட்டிகளில கலந்து இருந்தா. எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

சினேகிதி:

பெண்கள் பகுதியில யாழில தமிழில நிறைய செப்படி வித்தைகள் காட்டுற ஆள் எண்டால் தமிழ்தங்கைக்கு அடுத்ததாய் சினேகிதியை சொல்லலாம். சினேகிதிமாதிரி யாழில வேற ஒருவரும் மினக்கட்டு ஆழமான கட்டுரைகள் எழுதுவது இல்லை எண்டு நினைக்கிறன். நான் முன்பு செல்வன் எண்டு தொடர்கதை எழுதேக்க நிறைய கூத்துகள் எல்லாம் ஆடினம். அதன் ஒருபகுதியாக செல்வன் தொடரில நடிக்கிறதுக்கு ஆக்கள் தேவை எண்டு கேட்டு ஒரு கருத்தாடல் செய்தம். அதில நான் சும்மா பகிடியாய் ஒரு விளம்பரம் செய்துபோட்டது செல்வன் தொடரிற்கு விளம்பர அனுசரணையை இவர்கள் தருகின்றார்கள் எண்டு. அதில சினேகிதியிண்ட ஒரு விளம்பரத்தையும் விளையாட்டாய் போட்டுவிட்டன்.

ஆனால்... அது உண்மையில சினேகிதியை தனிப்பட பாதித்தது எனக்கு தெரியாது. என்னுடன் தொடர்புகொண்டபோது சினேகிதி கேட்ட முதலாவது கேள்வி உங்களிட்ட ஒரு விசயம் கேட்க வேணும் எண்டு... என்ன சொல்லுங்கோ எண்டு சொல்ல... ஏன் அப்பிடி விளம்பரம் போட்டனீங்கள். எண்டு கேட்டா. தனக்கு அதனால வந்த பிரச்சனைகளை சொன்னா. அதைக்கேட்க எனக்கு தர்மசங்கடமாய் போய்விட்டிது. கோவிச்சுக்காதிங்கோ. மன்னிச்சுக்கொள்ளுங்கோ எண்டு சொன்னன். சரி பரவாயில்லை எண்டு சொல்லி எனக்கு பெருந்தன்மையோட பாவமன்னிப்பு தந்துபோட்டா.

சினேகிதியை ஆரம்பத்தில எனக்கு தெரிந்து இருகாட்டியும் அவ இடைக்கிடை வந்து அப்போது என்னுடன் நகைச்சுவையாக கதைச்சு இருக்கிறா. அவவிண்ட கையெழுத்தில முந்தி பூனைக்குட்டி ஏதோ படம் இருந்திச்சிது எண்டு நினைக்கிறன். யாழில இருக்கிற ஒவ்வொருவரும் நிஜமான முகங்களுடன் இன்னொரு வாழ்க்கையில இருந்தாலும்... முகம் அறியாமல் கருத்தாடல் செய்யேக்க அவர்களிண்ட கையெழுத்து, அவாட்டர் படம், இதுகள் எங்கட மனதில ஒரு கற்பனையான பாத்திரத்தை உருவாக்கி இருக்கும்.

சினேகிதியில எனக்கு பிடிச்ச விசயம் எண்டு சொன்னால்.. ஒழுங்காய் குழப்படி செய்யாமல் படிக்கிறது.. வேலை செய்யுறது.. எண்டு சொல்லலாம். பிடிகாத விசயம் எண்டு சொன்னால்.... இப்ப அண்மைக்காலமாக எழுதுறது எல்லாம் உளவியல் பற்றி இருக்கிது. அதுகளை வாசிக்க என்னமோ மாதிரி இருக்கிது. நான் ஊரில இருந்தபோது சுமார் மூன்று ஆண்டுகள் மிகவும் தீவிரமாக பல உளவியல் புத்தங்கள் படிச்சது. அதுபற்றி பல விசயங்களை சிந்திச்சது. ஆனால்.. பிறகு இஞ்சால வந்தாப்பிறகு நான் சும்மா தேவையில்லாமல் பல விசயங்களை சிறுவயதில ஆராய்ஞ்சு என்னையே குழப்பிபோட்டனோ எண்டு யோசிப்பது உண்டு. இந்தவகையில நல்லவிசயமாக இருந்தாலும் எனக்கு உளவியல் கல்வி எண்டால் பிடிகாது.

சினேகிதி சீரும் சிறப்புமாக வளமுடன் வாழ வாழ்த்துகள்!

வளரும்..

Edited by முரளி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

நெடுக்காலபோவான்:

ஆரம்பத்தில எனக்கு ஒரு எதிரிபோல தோற்றமளித்து... பிறகு தனிப்பட எனக்கு ஆளை யார் எண்டு தெரியாவிட்டாலும்.. முகம் அறியாது, பின்புலம் அறியாது, வெறும் யாழில பரிமாறுகின்ற கருத்தாடல்களிண்ட அடிப்படையில மானசீகமான ஒரு நல்ல நண்பனாக ஒருவர் இருக்கிறார் எண்டால் நெடுக்காலபோவானை சொல்லலாம்.

நெடுக்காலபோவானின் சில கருத்துக்களுடன் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை. ஆனால் சில கருத்துக்கள் ஆரம்பத்தில நான் அவற்றை வெறுத்து இருந்தாலும்.. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள், உண்மைகள். முன்பு இதுகளை வாசிக்கும்போது சரியான ஆத்திரமாய் இருக்கும்..என்னடா யார் இது இப்பிடி எழுதுறான் பெண்களை நார் நாராய் கிளிச்சு இவ்வளவு கேவலமாய் எண்டு... ஏதோ லூசன் ஆக்கும் எண்டு நினைச்சன். ஆனால்.. இப்போது கசப்பாய் இருந்தாலும் நெடுக்காலபோவான் சொன்ன சில கருத்துக்கள் உண்மை, யதார்த்தமாக எங்கட வாழ்க்கையில இழையோடி இருப்பவை என அறியும்போது அதே விசயங்களை இப்போது வாசிக்கும்போது சிரிப்பாய் இருக்கும். உண்மையை உண்மை எண்டு ஏற்றுக்கொள்ளத்தானே வேணும்?

எனக்கு நெடுக்காலபோவானை நினைக்க சிரிப்பு வருகிற ஒரு விசயம் என்ன எண்டால்.. முன்பு எங்கையோ ஒரு இடத்தில யாழ்ப்பாணத்தில மணலுக்கால வெறுங்காலோட நடந்துபோறது பற்றியும் தனது கால்களைப்பற்றியும் ஏதோ விமர்சனம் செய்து ரெண்டுவரிகளில எழுதி இருந்தார். நெடுக்காலபோவானில எனக்கு பிடிச்சவிசயம் என்ன எண்டால் பல்வேறு விசயங்கள் பற்றிய பரந்துபட்ட அறிவை வளர்த்து இருக்கிறது. அதை விருத்தி செய்யுறது எண்டு சொல்லலாம்.

வாழ்க்கையை பரிசோதனைகூடமாக மாற்றாது, அம்மா, அப்பா, சகோதரங்களிண்ட சொல்லை கேட்டு, அச்சாப்பிள்ளைமாதிரி நல்ல ஒரு துணையுடன் இணைந்து வளமுடன் வாழ வாழ்த்துகள்!

நான் உங்களை எப்பவுமே எதிரி என்ற நிலையில் வைச்சுப் பார்க்கேல்ல. பார்க்கவும் மாட்டன். நான் யாரையும் அப்படிப் பார்த்ததும் இல்லை. ஆனால் கருத்து ரீதியாக உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் எதிர்நிலை எடுத்து இருந்திருக்கிறேன். அதில் எனக்கு நியாயம் என்று பட்டத்தை சொல்லியும் இருக்கிறேன். சிலவற்றில் சொல்லாமலும் விட்டிருக்கிறேன்.

மற்றும்படி நீங்களும் எனக்கு முகம் தெரியாத.. ஒரு நல்ல நண்பன் என்றே சொல்வேன்.

உங்களின் கடந்த கால வாழ்க்கைக் கஸ்டங்களை இங்கு நீங்கள் எழுதியதில் இருந்து படித்து உங்கள் மீது எனக்கு தீவிர அனுதாபமும் இப்போ வளர்ந்திருக்கிறது. அதனால் உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் உடன்படாத நிலை இருப்பினும் அதை விவாதமாக்க விரும்புவதில்லை.

மற்றும்படி.. உங்களின் எல்லோரையும் மதிக்கும் பண்பு பிடிக்கும்..!

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். நான் துணையுடன் வாழுறனோ இல்லையோ தெரியாது. அது என்னைப் பொறுத்தவரை நிச்சமில்லை. ஆனால் உங்களை ஒரு அன்பான துணையுடன் அம்மா அப்பா சகோதரங்களின் சொல்கேட்டு வாழ வாழ்த்துகின்றேன்..! . :(

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

மிகுந்த நன்றிகள் நெடுக்காலபோவான்..

அடுத்தபத்து ஆண்கள்:

வசிசுதா:

இவரை எனக்கு ஆரம்ப காலத்தில தெரியாது. நான் இணைஞ்ச நேரத்தில ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். திடீரெண்டு இடையில எங்களோட சேர்ந்து மீண்டும் கருத்துஎழுத இணைஞ்சுகொண்டார்.

ஒருமுறை நெடுக்காலபோவான் ஒரு ஆயுதத்திண்ட படத்தை ஊர்ப்புதினத்தில ஒட்டி அது என்ன எண்டு யாருக்காவது தெரியுமா எண்டு கேட்டு இருந்தார். நானும் சும்மா பகிடியாய் அதுதான் பாருங்கோ புட்டுக்குழல், பக்கத்தில இருக்கிறது குசினி எண்டு எல்லாம் சொல்லி ஏதோ சொல்லி இருந்தன். வசியுக்கு அந்தப்பகிடி நல்லாய் பிடிச்சு இருந்திச்சிது எண்டு நினைக்கிறன். நல்ல ரசனை உள்ளவராக இருக்கவேணும். மேலும்.. பண்பான முறையில யாழில ஆக்களோட கதைக்கிற ஒருவர் எண்டும் சொல்லலாம்.

வசியுடன் எனக்கு தனிப்பட பழக்கம் இல்லை. வசி மகிழ்வுடன் ரசனையுடன் வாழ வாழ்த்துகள்!

சின்னப்பு:

சின்னப்பு எனக்கு அதிக அளவில தெரியவந்தது செல்வன் சிரியலில நடிக்க ஆக்கள் தேவை எண்டுறபகுதி கருத்தாடல் மூலம்தான். அதுல ஒரு இடத்தில சின்னப்பு 68 முகக்குறிகள் போட்டு ஒரு கருத்து எழுதி இருந்தார். அந்த தலைப்பு மிகவும் நகைச்சுவையாக போச்சிது. அத்தோட செல்வன் தொடரில ஒரு முக்கியமான பாத்திரம் சின்னப்புவின் உடையது.

எனக்கு சின்னப்புவுடனும் தனிப்பட பழக்கம் இல்லை. சின்னப்பு மகிழ்வுடன் நிம்மதியுடன் வாழ வாழ்த்துகள்!

டன்கிளாஸ் / டன்:

டன் பற்றி பல விசயங்கள் சொல்லலாம். நகைச்சுவையாக எழுதக்கூடியவர். பிறகு ஏதோ மனக்கசப்புக்கள் காரணமாக யாழில தனது வரவை குறைத்துக்கொண்டார் எண்டு நினைக்கிறன். நேசக்கரம் திட்டத்தை உருவாக்கிய பெருமையும் டன்னை சாரும். என்னுடன் ஒருமுறை தொலைபேசியில கதைச்சும் இருக்கிறார்.

யாழில ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாணியாக எழுதுவதற்கு, சிலர் கொஞ்சம் காரசாரமாக எழுதுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனக்கு யாழின் பின்னால் உள்ள கூர்ப்பியல் தெரியாது. ஆனால்... சாதகமான சூழல்கள் நிழவி இருந்தால், நல்ல அனுபவங்கள் கிடைத்து இருந்தால் டன் தன்னை பேட்டை ரவுடி எண்டு சொல்லும் அளவுக்குபோய் இருக்கமாட்டார் எண்டு நினைக்கிறன்.

எப்படி இருந்தாலும்.. தனது தனிப்பட்ட வாழ்வில் மகிழ்வுடன் நிறைவுடன் வாழ டன்னுக்கு வாழ்த்துகள்!

குறுக்காலபோவான்:

எனக்கு யாழில நினைவு தெரிஞ்ச காலம்வரை என்னுடன் மிகவும் பண்புடன் பழகும், நான் உண்மையில கு.போ அண்ணா எண்டு கூறுகின்ற ஆள் குறுக்காலபோவான். இவரது பின்னணி எனக்கு தெரியாது. ஆனால்.. நன்கு படித்தவர், தொழில்ரீதியாக புலமைபெற்றவர் எண்டு நினைக்கிறன். நான் யாழில தாயக மக்களுக்கு உதவுதல் சம்மந்தமாக பல கருத்தாடல்களை ஆரம்பித்தமைக்கு காரணமாய் இருந்தவர். பல்வேறு ஆலோசனைகள் சொன்னவர். இவருடன் கதைத்தும் இருக்கிறன் ஸ்கைப்புக்கால.

ஊர்ப்புதினம் பகுதியில பலர் நினைச்சுக்கொண்டு இருக்கிற பொறுப்பு இல்லாத மந்தைகளின் தலைவர் கு.போ வேறு. உண்மையில தன்னால் முடியுமான பல்வேறு பணிகளை தாயகமக்களுக்காக செய்கின்ற கு.போ வேறு. ஊர்ப்புதினம் பகுதியில சும்மா ஏதாவது பகிடியாய் எழுதுவார். கு.போ அண்ணாவிற்கு தன்னை பாராட்டுற விளையாட்டுக்கள் பிடிக்காது. எண்டாலும் நான் இதுல சொல்லக்கூடியவற்றை சொல்லத்தானே வேணும்.

கு.போ அண்ணா விரும்புகின்றமாதிரி அல்லல்படும் தாயகமக்களுக்கு உதவுகின்ற அவரது பணிகளில வெற்றி பெற வாழ்த்துகள்! எனக்கு யாழில தலைக்குமேல வேலைகள் தரத்துவங்கியதால நான் நைசாக கு.போ அண்ணாவுடன் தொடர்புகொள்ளுறதை வெட்டிப்போட்டன். ஹிஹி

நியூஸ்போட்:

யாழில எனக்கு ஆரம்பத்தில மிகவும் எரிச்சலை ஊட்டிய உறுப்பினர் இவர். இவர் ஒரு தானியங்கி இயந்திரம். பலருக்கு இது தெரியாது. இயந்திரங்கள் மனுசருடன் கருத்துக்களத்தில கருத்தாடல் செய்தால் எப்பிடி இருக்கும் எண்டுறதுக்கு இவர் ஒரு உதாரணம்.

இவரும் யாழில மற்ற ஆக்களுக்கு எரிச்சல் ஊட்டாதவகையில ஒரு ஓரமாக இருந்து தனது சேவையை செய்ய வாழ்த்துகள்!

நாரதர்:

யாழில இருக்கிற பகுத்தறிவாளர்களில ஒருத்தர். தனிப்பட பழக்கம் இல்லை. இவர் தனது கொள்கைகளில வெற்றிபெற வாழ்த்துகள்!

வசம்பு:

வசம்புவுடன் நான் மிகவும் முறுகுப்பட்ட காலங்கள் இருக்கிது. ஆனால் பின்னர் அவர் யாழில கருத்தெழுதும் பாணியை பழகியபின்னர் வசம்புவுடன் ஆக்கபூர்வமான முறையில கருத்தாடல் செய்வது எப்படி எண்டு பழகீட்டன்.

கருத்தாடல் தளம் ஒண்டில தேவையானது தனது கருத்துகளை உறுதியாக நிண்டு சொல்லி, ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்வது. அதாவது கிட்டத்தட்ட நாங்கள் மேடைகளில பார்க்கிற பட்டிமன்றம் மாதிரி எண்டு சொல்லலாம். வசம்புவிற்கு இந்தத்திறன் நிறையவே இருக்கிறது. ஆளைப்பார்த்து கருத்தாடல் செய்யாது எழுதப்பட்ட கருத்தை பார்த்து கருத்தாடல் செய்தால் வசம்புடன் யாழில முறுகுப்படுகின்ற பலர் ஆக்கபூர்வமான முறையில வாதம் செய்யமுடியும் எண்டு நினைக்கிறன்.

வசம்புவை எனக்கு தனிப்பட தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

வினித்:

விரும்பியோ விரும்பாமலோ விஜய் படம்பார்க்கேக்க, பாடல்கேட்கேக்க தனது நினைவையும் எண்ட மனதில கொண்டுவாற மாதிரி செய்துபோட்டார் தண்ட அவாட்டரில விஜயிண்ட படம் போட்டு.

அஜீவன் அண்ணா சம்மந்தமான ஒரு கருத்தாடலில என்னுடன் மல்லுக்கட்டியவர். ஊர்ப்புதினம் பகுதியில அண்மையிலயும் ஏதோ முறுகுப்பட்டார். ஆனால்.. ஒட்டுமொத்தமாக பார்க்கேக்க.. நாங்கள் இருவரும் ஊர்ப்புதினம் பகுதியில கும்மாளம் போட்டு இருக்கிறம் எண்டு சொல்லவேணும்.

எனக்கு சிரிப்பை ஏற்படுத்துற ஒரு விசயம்.. யாழுக்கு வருகின்ற ஆக்களிண்ட நாடித்துடிப்பை பரிசோதிச்சு பார்க்க கிளிநொச்சியுக்க ஆமி இறங்கீட்டிது எண்டு ஏதோ பொய்யான ஒரு தகவலை வினித் ஊர்ப்புதினம் பகுதியில போட்டது. உடன எல்லாரும் Alert ஆகி ஒவ்வொருவிதமான அபிப்பிராயங்கள் சொல்ல... விசயம் முத்தி எல்லாரும் முட்டாள் ஆகுமுன்னம் விழிப்படைஞ்ச நிருவாகம் அந்த தலைப்பை நீக்கிவிட்டிது.

தனிப்பட வினித் எனக்கு பழக்கம் இல்லை. மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

குளக்காட்டான்:

யாழில என்னோட பண்போட பழகிற ஒருத்தர் குளக்காட்டான். நன்கு படித்தவர். சிலது இடைக்கிடை கொஞ்சம் கோவம் வரும். எனக்கு கவலையை ஏற்படுத்திய விடயம் அண்மையில அவரது குடும்பத்தில ஏற்பட்ட ஒரு இழப்பு.

யாழில இருக்கிற ஆக்களிண்ட பெயரில தமிழில உச்சரிக்க மிகவும் கஸ்டமான பெயர்களில ஒண்டு இவரது பெயர். இவருக்கும் எனக்கும் இடையில பல ஒற்றுமைகள் இருக்கிது. அதில ஒண்டு இருவருக்கும் உள்ள டென்மார்க் தொடர்பு..

குளக்காட்டானோட எனக்கு தனிப்பட பழக்கம் இருக்கிது. ஒருகாலத்தில வசதிவரும்போது சந்திக்கலாம் எண்டு நினைக்கிறன். குளக்காட்டானும் வளமுடன் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

தமிழ்சிறி:

அண்மையில யாழில இணைஞ்சு வேகமாக கருத்து எழுதிவருகிற ஆக்களில தமிழ்சிறியும் ஒருவர். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். எண்டாலும் சிலவேளைகளில இவர் பச்சையாக சொல்கின்ற பகிடிகள் சிலருக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம் வாசிக்கேக்க.

தனிப்பட இவரை பழக்கம் இல்லை. ஆனால் இவரை வெண்ணிலா யாழுக்காக கண்டபேட்டியில இருந்து இவர்பற்றிய சிலதகவல்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது. வெண்ணிலா தனது ஒரு சகோதரியை விமானக்குண்டுவீச்சுக்கு இழந்ததுபோல் இவர் தனது ஒரு சகோதரரை நல்லூரில் இழந்து இருந்தார். அதை வாசிக்க கவலையாக இருந்திச்சிது. என்ன இருந்தாலும் பேட்டி கண்டவருக்கும், பேட்டி கொடுத்தவருக்கும் இடையில இருந்த ஒற்றுமையை நினைக்க ஆச்சரியமாய் இருந்திச்சிது. எங்கையோ எல்லாம்போய் எங்கையோ எல்லாம்வந்து கடைசியில ஒரே சூழ்நிலையில இருக்கிற இரண்டுபேர் யாழ்மூலம் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ளிறது வியப்பானதுதானே?

தமிழ்சிறி வளமுடன் வாழ வாழ்த்துகள்!

அடுத்தபத்து பெண்கள்:

நிலாமதி:

நல்ல திறமை படைத்தவர் எண்டு நினைக்கிறன். அண்மையில இணைஞ்சு வேகமாக கருத்துக்கள் எழுதிவரும் ஒருவர். நாளாந்த வாழ்க்கையில நடைபெறுகின்ற பல்வேறு விடயங்களை கதைகளாக சொல்லி இருக்கிறா.

தனிப்பட பழக்கம் இல்லை. மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்!

இனியவள்:

பெயருக்கு ஏற்றமாதிரி உண்மையில இனியவள். எனக்கு தனிப்பட பழக்கம் இல்லை. ஆனால் இவவின் கவிதைகளை, குரலை கேட்டு இருக்கின்றேன். நம்பிக்கை, அன்பு ஆகிய இந்தசொல்லுகள் யாழில வரும்போது நினைவுக்குவரும் ஒருத்தி எண்டு சொல்லலாம்.

வளமுடன் வெற்றியுடன் வாழ வாழ்த்துகள்!

தமிழ்தங்கை:

ஏதோ நாந்தான் யாழை நடத்துறன், நாந்தான் யாழ் நிருவாகம் எண்டு நினைச்சுக்கொண்டு தமிழ்தங்கை எனக்கு மடல்போடுவா. யாழில என்னமும் பிரச்சனை எண்டால் எனக்கு உடன மடல்வரும் ஏதோ சிக்கலாம் உதவிசெய்யச்சொல்லி. எனக்கு சிலது சிரிப்பாய் இருக்கும். சிலது உடனடியாக பதில் அனுப்புவது. சிலது என்னைய்யா இது கொடுமை எண்டு தலையில அடிச்சுக்கொள்ளிறது.

எனது ஆக்கங்களை விரும்பிவாசிச்சு கருத்துச்சொல்லிற ஆக்களில முக்கியமான ஒரு ஆள் தமிழ்தங்கை. உண்மையில் ஆண்-பெண் நட்பு எண்டால் என்ன எண்டு அதுக்கு ஒரு இலக்கணமாக இருக்கக்கூடியது தமிழ்தங்கைக்கும் எனக்குமான நட்பு எண்டு சொல்லலாம். அதாவது தீர்மானிக்கப்பட்ட ஒரு நண்பி.

சிலது எப்பவாது இருந்திட்டு எனக்கு தொலைபேசி எடுத்து கடகட எண்டு கதைச்சுக்கொண்டு இருப்பா. அறிவுரைகளும் நடக்கும். சொன்னால் சிரிக்கக்கூடாது நான் தமிழ்தங்கை பொங்குதமிழுக்கு போனீங்களோ? ஏன் போக இல்லை எண்டு கேட்டக்கூடும், பேசக்கூடும் எண்டுற பயத்திலதான் பஞ்சியையும் பார்க்காமல் போனது. நாங்கள் இருவரும் குழந்தைகளாக இருந்தநேரத்தில திருகோணமலையில பக்கத்து பக்கத்து வீடுகளாக மிக அருகாமையில இருந்து இருக்கிறம். ஆனால் யார் யார் எண்டு ஆக்களை அப்ப தெரியாது. கடைசியில எங்கட வாழ்க்கை விதி கனடாவில அதுவும் யாழுக்கால ரெண்டுபேரையும் நண்பர்களாக்கி இருக்கிது.

தண்ட கலியாணத்துக்கு நான் வந்துபாட்டு பாடவேணும் எண்டு முந்தி ஒருக்கால் கேட்டு இருந்தா. ஏன் ஆக்களுக்கு முன்னால எனக்கு அடிவாங்கி தாற planஓ எண்டு கேட்டு இருந்தன். வல்வை அண்ணா தலமையில நாங்கள் தண்ட கலியாணத்தை சிறப்புற செய்துவைக்கவேணுமாம் எண்டு கட்டளைபோட்டு இருக்கிறா. பார்ப்பம் ஏதாவது முகமூடிகள் போட்டுக்கொண்டு, இல்லாட்டிக்கு பொம்பிளை வேசமாவது போட்டுக்கொண்டுபோய் வாழ்த்திப்போட்டு பாட்டுப்பாடி ஆக்களிட்ட அடிவாங்காமல் திரும்பிவரலாம் எண்டு யோசிச்சு இருக்கிறன்.

நல்லதொரு நண்பனாக தமிழ்தங்கைக்கு இனிய வாழ்த்துகள்!

ஜெனனி:

யாழில இனிமையாக பழகிற பலரில ஜெனனியும் ஒருவ. யாழில முந்தி நிறைய நகைச்சுவைகள் பரிமாறி இருக்கிறம். இப்ப மறந்துபோச்சிது. ஜெனனிக்கு நான் அப்ப ஒருக்கால் “யாழ் களத்தின் குத்துவிளக்கு!” எண்டு கெளரவபட்டம் குடுத்து இருந்தன்.

“என்ன எல்லாரோடையும் கதைக்கிறீங்கள் எங்களோட கதைக்கமாட்டீங்களோ?” எண்டு ஜெனனி ஒருக்கால் கேட்டு இருந்தா. இப்போது யாழுக்கு வாறவ.. ஆனால்.. எழுதுவது இல்லை. ஏன் எண்டு தெரியாது. படிப்பு, வேலையாக இருக்கலாம் எண்டு நினைக்கிறன்.

வளமுடன், மகிழ்வுடன் வாழ ஜெனனிக்கு வாழ்த்துகள்!

மூக்கி:

நான் இணைஞ்ச ஆரம்பத்தில நெடுக்காலபோவானும், மூக்கியும் போடுற லூட்டிகள் தாங்க ஏலாது. நான் எப்பவும் மூக்கியிண்ட பக்கம்தான் Support. ஒருக்கால் செல்வன் தொடரில நடிக்க ஆக்கள் தேவை எண்டுறபகுதியில மூக்கி பாவிக்கிற செருப்புகள், சப்பாத்துக்கள் எண்டு கொஞ்சபடம் போட்டு எல்லாரும் கவனமாக இருங்கோ எண்டு ஏதோ பகிடிவிட்ட ஞாபகம் இருக்கிது. கடைசியாக நான் எழுதுகின்ற செல்வன் தொடரை தான் வாசிப்பதாகவும், வாழ்த்துகள் எண்டும் சொல்லி மடல் அனுப்பி இருந்தா. பிறகு கனகாலமா காண இல்லை. இப்ப அண்மையில வந்து இருந்தா. பிறகு யாழுக்கு இப்ப ஏன் வாறது இல்லை எண்டு தெரியாது.

மூக்கியுக்கு ஒரு சின்னகோபம் இருக்கவேணும் எண்டு நினைக்கிறன். அது என்ன நடந்திச்சிது எண்டால் நான் கண்டபடி பகிடிகள் விட்டுக்கொண்டு திரிஞ்சுபோட்டு பிறகு திடீரெண்டு மிகவும் Serious ஆக எனது சிறீ லங்கா சிறை அனுபவங்கள் தொடரை எழுதவெளிக்கிட்டன். அப்ப அதுக்க மூக்கி ஏதோ சின்னதாய் பகிடிவிட.. யாரோ பேசிப்போட்டீனம்.. எங்கபகிடிவிடுறது எண்டு தெரியாதோ எண்டு. அத்தோட மூக்கியுக்கு மனம்கோணிப்போச்சிது எண்டு நினைக்கிறன். நான் அவதானிச்சதில அந்த சம்பவத்துக்கு பிறகு மூக்கி யாழில வந்து கலகலப்பாக கதைக்கிறது குறைஞ்சு கடைசியில ஆளே காணாமல் போய்விட்டா.

அதுக்கிடையில நடந்த இன்னொரு பகிடி என்ன எண்டால்.. மூக்கி கொஞ்சகாலமா யாழுக்கு வராமல் இருக்க ஒருத்தர் (யார் எண்டு சொன்னால் கோவிப்பார்).. “மூக்கி அக்கா கலியாணம் கட்டி லண்டனில Settle ஆகீட்டா!” எண்டு வதந்தி ஒண்டை வாழிய வாழிய பகுதியில ஒட்டி இருந்தார் திருமண வாழ்த்துகள் எண்டு சொல்லி. மூக்கி ஏதோ தற்செயலாக யாழுக்கு வந்த இடத்தில அதப்பார்த்து பதறி அடிச்சுப்போட்டு... “அடேய் மாப்பிள்ளையாவது யார் எண்டு எனக்கு சொல்லுங்கோடா!” எண்டு சொன்னதை நினைக்க எனக்கு இப்பவும் சிரிப்பாய் இருக்கிது.

செல்வன் தொடரில் மூக்கி ஒரு முக்கியமான பாத்திரம். மூக்கியுடன் எனக்கு தனிப்பட பழக்கம் இல்லை. அவ எங்க இருக்கிறா... என்ன செய்யுறா எண்டு ஒண்டும் தெரியாது. மூக்கியின் ஒரு அண்ணா மாவீரர் எண்டு நினைக்கிறன். யாழில ஒருஇடத்தில அதுபற்றி சொல்லி இருந்தா. மூக்கி எங்கிருந்தாலும் மகிழ்வுடன் நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

வல்வைசகாரா:

வல்வைசகாரா அக்காவோட ஒரு இடத்தில நான் முறுகுப்படவேண்டி வந்திட்டிது. அது என்ன எண்டால் நட்பு – காதல் சம்மந்தமான ஒரு கவிதை எண்டு நினைக்கிறன். பிறகு சபேசன் நண்பியிண்ட மார்பகத்தை உற்றுப்பார்க்கிறது ஏதோ கண்றாவி எண்டு ஏதோ சொல்லவெளிக்கிட்டு நடந்த வாதங்கள்.

சகாரா அக்காவோட நான் வாதம் செய்து கடைசியில எனது வாதத்தை வலுப்படுத்த நட்பு – காதல் – கலியாணம் எண்டு நான் இன்னொரு கவிதை எழுதவேண்டி வந்திட்டிது. பிறகு ஏதோ கோவத்திலதான் இயங்கு – முயங்கு – மயங்கு (வயதுவந்தவர்களுக்கு மட்டும்) எண்டு ஒரு கவிதையை யாழில போட்டு இருந்தா எண்டு நினைக்கிறன். இல்லாட்டிக்கு அதற்கு வேற என்னமும் காரணமோ தெரியாது. நான் அதில பிறகு ஏதோ கேள்வி கேட்க எனக்கு அதுபற்றி கதைக்க வயசுகாணாது எண்டு சொல்லி எண்ட வாயை அடக்கிபோட்டா. மிகவும் திறமைபடைச்ச ஒரு கவிஞர் சகாரா அக்கா.

ஒருமுறை நேசக்கரம் சம்மந்தமா தனிமடலுக்கால கதைக்கேக்க... என்ன யாழில எல்லா இடமும் உங்கட அட்டகாசமா இருக்கிது. மடலில ஒண்டும் தெரியாத அச்சாபாப்பா மாதிரி அடக்கமா பதில்போடுறீங்கள் எண்டு கேட்டு ஒருபோடு போட்டு இருந்தா. எனக்கு அதை வாசிக்க சரியான சிரிப்பாய் இருந்திச்சிது.

சகாரா அக்காவுடன் எனக்கு தனிப்பட பழக்கம் இல்லை. தொடர்ந்து பலப்பல கவிதைகளை படைக்க வாழ்த்துகள்!

யாழ்கவி:

யாழ்கவியுடன் பல கருத்துகளை பகிர்ந்து இருக்கிறன். இப்ப நினைவு இல்லை. தனிப்பட எனக்கு பழக்கம் இல்லை. யாழ்கவி வளமுடன் வாழ வாழ்த்துகள்!

சாந்தி:

சாந்தி அக்கா நான் இணைஞ்ச காலத்தில யாழுக்கு வாறது இல்லை. பிறகு இடைவழியில் மீண்டும் இணைஞ்சுகொண்டா. சாத்திரி அண்ணாவுடன் ஐரோப்பிய அவலம் நாடகத்தில நடிக்கிறவ எண்டவகையில எனக்கு சாந்தி அக்காபற்றி கொஞ்சம் தெரிஞ்சு இருந்திது. சாத்திரி அண்ணாவின் பலவிதமான நாடகங்களில அவவிண்ட குரலை கேட்டு இருக்கிறன். பிறகு ஒரு கவிஞராக... கதைஆசிரியராக சாந்தி அக்கா எனக்கு தெரியவந்தது இப்ப கிட்டடியிலதான். நல்ல திறமை படைச்சவ.

சாந்தி அக்காவுடன் தனிப்பட பழக்கம் இல்லை. தொடர்ந்து பல படைப்புக்கள் படைக்க வாழ்த்துகள்!

sWEEtmICHe:

இவவிண்ட பெயரை தமிழில எப்பிடி சொல்லிறது எண்டு தெரிய இல்லை. sWEEtmICHe யுடன் கருத்துக்கள் பரிமாறி இருக்கிறன். இப்ப நினைவு இல்லை. யாரெண்டும் தெரியாது. வாழ்த்துகள்!

யாழ்பிரியா:

நான் யாழில இணைஞ்ச ஆரம்ப காலத்தில யாழ் இணையத்திண்ட அகவை ஒன்பது எண்டு நினைக்கிறன்.. அது சம்மந்தமாய் சில ஆக்கங்களை செய்யமுடியுமோ எண்டு கேட்டு எனக்கு யாழ்பிரியா மடல் அனுப்பி இருந்தா. சரி எண்டுபோட்டு ஒவ்வொரு பக்கத்தால ஒவ்வொரு திரியாய் துவங்கினது. அது நல்ல ஒரு வெற்றி எண்டு சொல்லவேணும். ஏன் எண்டால் பிறகு கடைசியா இந்தமுறை அப்படி ஒண்டும் செய்யமுடிய இல்லை. அத்தோட லெப்.கேணல் பூட்டோ நினைவுப்போட்டி யாழில கலகலப்பாக ஒரு நேரடிபோட்டி வச்சு நிறையப்பேர் அதில கலந்து கலக்கி அடிச்ச வரலாறு யாழில மறக்க ஏலாது.

யாழ்பிரியாவை குமாரசாமி அண்ணா பூஸ்குட்டி எண்டு சொல்லி கிண்டல் பண்ணுறவர் எண்டு நினைக்கிறன். பலருக்கு யாழ்பிரியாவில கொஞ்சம் கோவம் எண்டு நினைக்கிறன் மட்டறுத்தல் செய்யுறதில பக்கச்சார்பா செய்யுறா எண்டு. ஆனால்... நான் அறிஞ்சவரையில யாழ்பிரியா குழப்பங்கள் ஏற்படாதவகையில தன்னால என்ன செய்யமுடியுமோ அதை செய்து இருக்கிறா எண்டு நினைக்கிறன். யாழில எழுதிற ஆக்களிண்ட ஒத்துழைப்பு இல்லாமல் யாழ்பிரியா பாவம் தான்மட்டும் என்னத்தை செய்யுறது?

ஒருமுறை இளைஞனை நான் கேட்டன். இந்த யாழ்பிரியா யார் எண்டு எனக்கு சொல்லமுடியுமோ?” எண்டு. அவர் இப்பிடி நான் கேட்டதாய் தான் மோகனிட்ட சொல்லபோறனாம் எண்டு சிரிச்சுக்கொண்டு சொல்லிப்போட்டு நைசாக மலுப்பிவிட்டார். யார் எண்டு சொல்ல இல்லை. எனக்கு தனிப்பட யாழ்பிரியாவை தெரியாது. யாராக இருந்தாலும்.. நிறைவுடன் நிம்மதியுடன் வாழ வாழ்த்துகள்!

வளரும்...

Edited by முரளி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

நான் ஒவ்வொருவரையும் பற்றி எழுதேக்க எண்ட மூளையில இருந்து உடனடியாக வாற நினைவுகளை வச்சு எழுதுறன். இதால சிலரைப்பற்றி ஒருவசனத்திலையும், சிலரைப்பற்றி நீண்டபந்திகளாகவும் எழுதி இருக்கிறன். நேரம் கிடைக்கேக்க, சந்தர்ப்பம் கிடைக்கும்போது, பழைய நினைவுகள் வரும்போது ஒவ்வொருவரையும் பற்றி மேலும் விரிவாக எழுதுறன். மேல கொஞ்சம் திருத்தங்கள் செய்து இருக்கிறன்.

உங்களைப்பற்றி ஆக ஒருவசனத்தில சொல்லிப்போட்டன் எண்டு யாராச்சும் கோவிச்சுப்போடாதிங்கோ. மற்றது, பலர் என்னோட கருத்தாடல் செய்து இருப்பீங்கள். என்னை நல்லாய் நினைவு இருக்கும், சம்பவங்களும் நினைவில இருக்கும். ஆனால் எனக்கு அவை மறந்து இருக்கக்கூடும். யாரையாவது தவறவிட்டு இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

மற்றது நிறைய எழுத்துபிழைகள் எல்லாம் இருக்கிது. கோவிச்சுக்காதிங்கோ. நான் Word Ducument இல எழுதிப்போட்டு பிறகு அதை யாழில கொண்டுவந்து ஒட்டுறது. நேரம் கிடைகேக்க எழுத்துப்பிழைகளையும், மற்றும் நான் எழுதின ஏதாவது யாருக்காவது பிடிக்காமல் எரிச்சலாக இருந்தால் அதுகளையும் திருத்தம் செய்துவிடுறன்.

கொஞ்சம் பகிடியாக எழுதாவிட்டால் வாசிக்கேக்க சுவாரசியமாய் இருக்காது. நான் எழுதின விசயங்கள் யாருக்காவது கோபத்தை ஏற்படுத்தி இருந்தால் மன்னுச்சுக்கோங்கோ. நன்றி!

அடுத்தபத்து ஆண்கள்:

சுண்டல்:

யாழில இருக்கிற பிரபலமான தலைகளில இவரிண்டது ஒரு முக்கியமான தலை. அத்தோட பிரபலமான ஒரு பெயர். சுண்டலை எனக்கு தனிப்பட தெரியாது. ஆனால்.. நான் யாழில சுண்டல் பற்றி மற்றவர்கள் எழுதியதில இருந்து அறிஞ்சது சுண்டல் தாயகபோராட்டம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நல்ல குரல்வளம் இருக்கிது. வானொலியிலையும் எங்கையோ வேலை செய்கிறார் எண்டு யாரோ சொன்னமாதிரி இருக்கிது. ஆக்களுக்கு ஸ் போட்டு கூப்பிடுறதில சுண்டலும் ஒருவர். என்னை மாப்ஸ் எண்டு சிலவேளைகளில கூப்பிடுவார். சுண்டல் வாற நேரத்தில யாழ்களம் நல்ல கலகலப்பாக இருக்கும். நான் யாழில எழுதிய “கடலைக்கு கடலை” எனப்படும் ஒரு காதல் காவியத்தில கதாநாயகன் இவர்தான். நல்லாய் கடலைபோட்டு வளமுடன் வாழ வாழ்த்துகள்!

இறைவன்:

ஊர்ப்புதினம் பகுதிக்கு வருகின்ற வாசகர்கள் அனைவரும் நிச்சயம் அறிந்து இருக்கக்கூடிய ஒருவர். ஏராளம் கருத்துக்களையும், தலைப்புக்களையும் ஊர்ப்புதினத்தில இணைச்சு இருக்கிறார். தனிப்பட ஆள் ஆர் எண்டு தெயாது. வாழ்த்துகள்!

குமாரசாமி:

நான் யாழ் இணையத்தில இதுவரை இரண்டுபேரை பற்றித்தான் மிகவிரிவாக கலைஞர் பகுதியில அறிமுகம் செய்து இருக்கிறன். அதில ஒருவர் அஜீவன் அண்ணா, மற்றது குமாரசாமி அண்ணா. குமாரசாமி அண்ணாவைப்பற்றி இதுல எழுதுறது எண்டால் நிறைய எழுதலாம். குறிப்பாக எனது எழுத்தாற்றலை ஊக்குவிச்சவர்களில ஒருவர், மற்றது யாழில எண்ட கருத்துக்கு முதன்முதலாக பதில் கருத்து இட்டவரும் கு.சா அண்ணாதான்.

கு.சா அண்ணா நான் எழுதுற ஆக்கங்களில ஆக்கபூர்வமான ஏதாவது கருத்தை வைக்கேக்க உண்மையில எனக்கு நல்ல சந்தோசமாய் இருக்கும். சில சில இடங்களில கு.சா அண்ணாவோட கருத்துவேறுபாடுகள் இருந்து இருக்கிது. ஆனால் ஒட்டுமொத்தமான அனுபவத்தில யாழில கு.சா அண்ணாவுடனான பயணம் ஒரு சுகமான அனுபவம். நான் ஜேர்மனிக்கு போகேக்க கட்டாயம் ரெண்டுபேரை சந்திக்க முயற்சிப்பன். ஒண்டு சோழியன் மாமா, மற்றது கு.சா அண்ணா.

கு.சா அண்ணவை தனிப்பட எனக்கு இன்னமும் தெரியாது. சமயம்வரும்போது அறிந்துகொள்ளலாம் எண்டு நினைக்கிறன். வாழ்த்துகள்!

புத்தன்:

யாழில கு.சா அண்ணா மாதிரி நான் விரும்புகின்ற இன்னொருவர் புத்தன். நல்ல உள்ளம் படைச்சவர். நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிது. கடைசியாக காணிநிலம் வேண்டும் எண்டுற பாரதியாரிண்ட பாடலை ரீமிக்ஸ் செய்து யாழில புத்தன் எழுதிய கவிதையை நீங்களும் வாசிச்சு மகிழ்ந்து சிரிச்சு இருக்கக்கூடும். நான் யாழில அடுத்து எவரையாவது பேட்டி காணுவன் எண்டால் இல்லாட்டிக்கு யாழில கலைஞர் பகுதியில இன்னுமொருவரை அறிமுகம் செய்வனாக இருந்தால் அது புத்தனாகத்தான் இருக்கும்.

யாழில புத்தன் ஒரு சகலகலாவல்லவன். எல்லாப்பகுதிகளிலையும் புகுந்து விளையாடி இருப்பார். நல்ல பொதுஅறிவு, பல்வேறு விசயங்கள் பற்றிய அறிவு புத்தனிடம் இருக்கிறது. எனக்கு தனிப்பட புத்தனை தெரியாது. சிட்னியுக்கு செல்லும் காலத்தில நிச்சயம் புத்தனை சந்திக்க முயற்சி செய்வேன். எனக்கு ஒரு சின்ன ஆசை என்ன எண்டால் சிட்னியுக்கு போகேக்க அங்க இருக்கிற யாழ் ஆக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கிரிக்கட் மச் விளையாடவேணும் எண்டு. புத்தனுக்கு வாழ்த்துகள்!

அஜீவன்:

யாழில அண்ணா எண்டு நான் மரியாதையோட கூப்பிடுற ஆக்களில முக்கியமானவர் அஜீவன் அண்ணா. அஜீவன் அண்ணாவை பேட்டிகண்டு யாழிலையும் இணைச்சு இருந்தன். பல்வேறு திறமைகள் படைத்தவர். சின்னப்பெடியன் மாதிரி நல்லாய் பலதும் பத்தும் பற்றி கதைப்பார். நான் முதன்முதலாக அஜீவன் அண்ணாவோட தொலைபேசியில கதைக்கேக்க மூண்டு மணித்தியாலங்கள் விடாமல் தொடர்ந்து கதைச்சு இருந்தம். யாழை பற்றி, எங்கட தனிப்பட்ட வாழ்க்கை பற்றி, உலகநடப்புக்கள் பற்றி, நாங்கள் வாழ்கின்ற நாடுகள் பற்றி, தாயகம் பற்றி, தொழில் பற்றி, கல்வி பற்றி எண்டு பின்னேரம் நாலுமணிக்கு தொலைபேசியில கதைக்கதுவங்கி தொலைபேசி இணைப்பை துண்டிக்கேக்க வைக்கேக்க இரவு ஏழு மணி.

அஜீவன் அண்ணா நல்ல உள்ளம் கொண்டவர். மற்றவர்களுக்கு நல்லாய் உதவிகள் செய்வார். ஆனால் அவரிண்ட வாழ்கைப்பாதை கரடுமுரடானது. வேதனைகள் மிகுந்தது. தனது பழைய வாழ்க்கை பற்றி யாழிலையும் எழுதி இருந்தார். இந்தவருசம் சுவிசுக்கு வரேக்க உங்களோட வந்து நிக்கலாமோ எண்டு கேட்டன். அதுக்கென்ன தாராளமாய் வாங்கோ எண்டு சொன்னார். வாறவருசம் சுவிசுக்கு போக சந்தர்ப்பம் கிடைச்சால் அஜீவன் அண்ணாவை நேரில சந்திக்கக்கூடியதாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.

அஜீவன் அண்ணாபற்றி சரியாக தெரியாதவர்கள் பலர் அவருக்கு யாழில சேருபூசும் நடவடிக்கையில இறங்கி இருந்தார்கள். மற்றவர்களை குற்றம் சொல்லும் முன்னர் அவர்கள்பற்றி கொஞ்சமாவது அக்கறையுடன் அறிஞ்சுகொள்வது நல்லது.

அஜீவன் அண்ணா நலமுடன், சீரும் சிறப்புமாய் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகள்!

ஹரி:

எனக்கு இவர்பற்றி தெரிய வந்தது எப்படி எண்டால் இவர்.. யாழில எனது மதிப்புக்குக்குரிய ஈழப்பிரியன் அண்ணாவின் நண்பர். ஈழப்பிரியன் அண்ணா தண்ட Profile இல இவரை மட்டும் தனது நண்பனாக இணைச்சு இருந்தார். ஹரியுடன் எனக்கு கருத்தாடல் செய்து நினைவு இல்லை. இவர் யாழுக்கு வருவது மிகவும் குறைவு. தனது அவாட்டரில புரூஸ்லியிண்ட படம் போட்டு இருக்கிறார் எண்டு நினைக்கிறன். எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

பரணி:

யாழில இருக்கிற சிறந்த கவிஞர்களில பரணியும் ஒருவர். நான் பரணியின் ஏராளம் கவிதைகளை யாழில வாசிச்சு மகிழ்ந்து இருக்கிறன். அஜித்பட புறக்கணிப்பு சம்மந்தமாய் எனக்கும் பரணிக்கும் இடையில கருத்துமோதல் ஏற்பட்டுவிட்டிச்சிது. தனிப்பட எனக்கு பரணியை தெரியாது. தொடர்ந்து நல்ல பல கவிதைகளை படைக்க வாழ்த்துகள்!

யாழ்வினோ:

சுமார் ரெண்டு வருசங்களுக்கு முன்னம் யாழில ஊர்ப்புதினம் பகுதியில கலக்கி அடிச்சவர் யாழ்வினோ. தாயகபோராட்டத்திற்கு தீவிரமான ஆதரவை கொடுக்கிறவர் எண்டு நினைக்கிறன். அங்க சனம் சாகிது. ஆனால்.. யாழில இருக்கிற நாங்கள் எல்லாரும் ஊர்ப்புதினம் பகுதியில தேவை இல்லாம அரட்டை அடிச்சு சண்டைபிடிச்சுக்கொண்டு இருக்கிறம் எண்டு கோவிச்சுக்கொண்டு போனதாய் மோகன் சொன்னதாக நினைவு. என்னுடன் மிகவும் நட்புடன் பழகி இருந்தார். திடீரெண்டு யாழைவிட்டு மறைந்துபோனது கவலையாக இருந்திச்சிது.

யாழ்வினோவிண்ட யூரியூப் சனல் பிரபலமானது. நான் அண்மையில அறிந்த அளவில யாழ்வினோ யூரியூப் இணையத்தில எம்மவர்களிடையே பிரபலமான ஒருவர். யாழ்வினோவிண்ட Profile க்கு போய் கையெழுத்தில பார்த்தால் அவரிண்ட யூரியூப் முகவரியை பார்க்கலாம். யாழ்வினோவிற்கு வாழ்த்துகள்!

கிருபன்:

யாழில ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி எழுதுவீனம். ஆனால் கிருபன் ஒரு கருத்தை இஞ்ச சொன்னால் அதன் உண்மையான உட்கிடக்கை என்ன எண்டு யாழில ஆக ஒருசிலருக்கு மாத்திரம்தான் விளங்கும். எனக்குக்கூட கிருபனிண்ட எழுதும்பாணியை சரியாக விளங்கிக்கொள்ள ஆறுமாதம் எடுத்திச்சிது எண்டு சொல்லலாம். கிருபனை யாழில இருக்கிற அறிவாளிகளில ஒருத்தர் எண்டு சொல்லலாம் (கிருபன் உங்களுக்கு கனக்க ஐஸ் வைக்கிறதாக நினைக்கக்கூடாது. அது உண்மைதானே!).

தொழில்ரீதியாக, கல்விரீதியாக புலமைபெற்றவர் எண்டு நினைக்கிறன். தனிப்பட எனக்குத்தெரியாது. எனக்கு கிருபனை நினைக்க உடன நினைவுவருவது கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில திங்கட்கிழமைகளில போற மசாலா எனப்படுகிற ஒரு பிரபலமான நிகழ்ச்சியில தொகுப்பாளராக வருகிற ஒருவர். அவரிண்ட பெயர் தெரிய இல்லை.

யாழில தமிழ் இலக்கியம் பற்றி ஓரளவு அறிஞ்ச, ஆர்வம்கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரில கிருபனும் ஒருவர். நல்லாய் தமிழ் புத்தகங்கள், சஞ்சிகைகள் வாசிப்பார் எண்டு நினைக்கிறன். தாயக கலைஞர்களை, எமது படைப்பாளிகளை ஊக்குவிப்பவர்களில ஒருவராக கிருபனை சொல்லலாம். கிருபனின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

விகடகவி:

யாழில நான் இணைஞ்ச ஆரம்பத்தில ஒவ்வொருநாளும் கறுப்பியிண்ட கவிதை அந்தாதிக்குப்போய் கவிதை எழுதுறது. நான் இரவில ஒரு கவிதையை எழுதிவிட விகடகவி காலம்பற வந்து தொடர்ந்து இன்னொண்டை எழுதிவிடுவார். பிறகு நான் திரும்ப இரவுவந்து இன்னொண்டு எழுதிவிடுறது. இப்பிடித்தான் விகடகவியுடனான எனது உறவு யாழில தொடங்கியது. நான் ஆரம்பத்தில விகடகவி எண்டுறபெயரையும், அவரது கவிதைகளையும் பார்த்துப்போட்டு நினைச்சன் இவருக்கு சுமார் அம்பது, அறுவது வயசு இருக்கும் எண்டு. விகடகவி எண்ட உடன எனக்கு அப்ப நினைப்பில வாறது காரை சுந்தரம்பிள்ளை அவர்கள்தான். நானும் யாரோ பெரிய ஆளாக்கும் எண்டு நினைச்சுக்கொண்டு பயபக்தியோட, மரியாதையோட இப்பிடி கவிதை அந்தாதியில இவரோட சேர்ந்து எழுதிக்கொண்டு இருந்தன்.

பிறகு கொஞ்சக்காலம் போனாப்பிறகுதான் அட ஒரு சின்னப்பெடியன் எண்டு தெரிய வந்திச்சிது. கவிதை தவிர வேறு பல திறமைகளும் விகடகவியிடம் இருக்கிது. எனக்கு ஆச்சரியமா இருக்கிறது என்ன எண்டால்.. என்னடா கருமம் இது இவ்வளவு திறமை படைச்ச ஆளுக்கு பொருத்தமாக நல்ல ஒரு காதலி கிடைக்க இல்லையோ எண்டு. ஹாஹா ஏன் எண்டால் விகடகவியிண்ட பெரும்பாலான காதல்கவிதைகளில எல்லாம் சோககீதமாய்த்தான் இருக்கும்.

காதல் தவிர தாயகம் சம்மந்தமாக ஏராளம் பல நல்ல கவிதைகளை விகடகவி எழுதி இருக்கிறார். தலைவர் பற்றி, அங்குள்ள மக்களின் வறுமை பற்றி எல்லாம் பலப்பல கவிதைகள் எழுதி யாழில பலரிடம் பாராட்டுக்கள் வாங்கி இருக்கிறார். விகடகவி ஓவியமும் வரையக்கூடியவர். இத்தோட நடிக்கவும் கூடியவர். யாழ் காலக்கண்ணாடியில விகடகவியிண்ட படைப்பை – அந்த காணொளியை நீங்கள் பார்த்து இருக்கக்கூடும். விகடகவி யாழில கீறிய ஒரு கருத்துப்படம் கனடாவில வாற ஒரு தமிழ் பத்திரிகையில முகப்பில வந்து இருந்திச்சிது.

விகடகவி தற்போது யாழில எழுதிவருகின்ற தினசரி தூறல்கள் பகுதி பலரது பாராட்டை பெற்று இருக்கிது. நான் ஒருகாலத்தில திருமணம் செய்தால் எனக்கு திருமண வாழ்த்துப்பா ஒண்டை விகடகவி யாழ் சார்பாக எழுதித்தரவேணும் எண்டு இப்பவே சொல்லிபோட்டன். ஹிஹி. கவிஞரை எனக்கு தனிப்பட தெரியாது. பிரித்தானியாவுக்கு போற நேரத்தில அவரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கக்கூடும் எண்டு நினைக்கிறன்.

அடுத்தபத்து பெண்கள்:

மாதுகா:

நான் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில என்னுடன் ஊர்ப்புதினம் பகுதியில நிறைய கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறா. பிறகு நான் நினைக்கிறன் சுமார் ஒருவருசம் மாதுகா யாழ்ப்பக்கம் வரவே இல்லை. இப்ப ஆச்சரியப்படும்வகையில திரும்பி வந்து இருக்கிறா. நான் மாதுகாவிட்ட கேட்க விரும்புற ஒரு கேள்வி... யாரு அது உங்கட அவாட்டர் படத்தில் இருக்கிற பெண்? நீங்களா? இல்லாட்டிக்கு யாராவது தாயக பெண் போராளியாயிண்ட படமா? அதில ஒரு சரியான சோகம் தெரியுது. கொஞ்சம் வித்தியாசமான ஒரு படம்.

மாதுகாவை எனக்கு தனிப்பட யார் எண்டு தெரியாது. வாழ்த்துகள்!

தமிழச்சி:

நெடுக்காலபோவான் பெண்ணாக பிறந்து இருந்தால்.. இல்லாட்டிக்கு நெடுக்காலபோவானுக்கு ஒரு தங்கச்சி இருந்தால் அவ எப்படி இருப்பா? நான் நினைக்கிறது அவ தமிழச்சி மாதிரி இருப்பா எண்டு. தமிழச்சியிண்ட கதைகள், கருத்துக்களை பார்க்க எனக்கு அப்படியான ஒரு உணர்வு ஏற்படும்.

வாழ்க்கையில முன்னேறி நல்ல நிலைக்கு வரவேணும், நல்லாய் படிக்கவேணும் எண்டு தமிழச்சியிடம் சரியான ஆர்வம், இலட்சியங்கள் இருக்கிது. ஏதோ ஒரு விடயம் சம்மந்தமாக யாழில தனிமடல் ஊடகாக தொடர்புகொள்ளேக்க தன்னைப்பற்றி கொஞ்சம் சொல்லி இருந்தா. நல்ல துடிப்பான, தாயக போராட்டம் சம்மந்தமாக அதிக அக்கறை, செயற்பாடுகள் கொண்ட ஒரு பெண் எண்டு தமிழச்சியை சொல்லலாம்.

எனக்குத்தெரிஞ்ச பலருடன் தமிழச்சிக்கு நல்ல தொடர்பு இருக்கிது. சிலவேளைகளில் தமிழச்சியை நான் ஏற்கனவே கனடாவில எங்கையாவது கண்டு இருக்கக்கூடும். ஆனாலும்... யாழுக்கு வெளியாக தனிப்பட தெரியாது. தமிழச்சியின் கனவுகள், இலட்சியங்கள் கைகூட வாழ்த்துகள், பிரார்த்தனைகள்!

கவரிமான்:

யாழில கலகலப்பாக பழகிற ஆக்களில கவரிமானும் ஒருவ. பாட்டுக்கு பாட்டு, பல்லவியை கண்டுபிடித்தல், மற்றது இனியபொழுது பகுதி எண்டு இருந்திட்டு வந்து கருத்துக்கள் எழுதுவா. காயத்திரி மந்திரம் பற்றி யாழில ஏதோ உதவி கேட்டு பிறகு அந்த தலைப்பில ஆக்கள் பொருத்தம் இல்லாமல் கிண்டல் எல்லாம் அடிச்சு கருத்துக்கள் எழுத... பிறகு அதுகளைப்பாத்துபோட்டு கவரிமான் கொஞ்சம் மனம் கஸ்டப்பட்டு இருக்கலாம். இப்பஆள் வாறது குறைவு. யார் எண்டு தனிப்பட தெரியாது. வாழ்த்துகள்!

கஜந்தி:

அழகிய பல கவிதைகளை முன்பு சில காலமாக யாழில தந்துகொண்டு இருந்தா. பிறகு இப்ப வரவு குறைஞ்சு போச்சிது. ஆளை யார் எண்டு தனிப்பட தெரியாது. வாழ்த்துகள்!

கவிதா:

முந்தி நான் இணைஞ்ச ஆரம்பகாலத்தில யாழுக்கு அடிக்கடி வாறவ. பிறகு காணாமல் போயிட்டா. ஊர்ப்புதினம் பகுதியிலதான் அதிகம் மினக்கட்டுக்கொண்டு இருப்பா. பலர் இவவோட சண்டை. தனிப்பட எனக்கு பழக்கம் இல்லை. வாழ்த்துகள்!

செவ்வந்தி:

யாழில யாராவது சிரிச்ச முகத்துடன் கருத்து எழுதுறமாதிரியான உணர்வு தோன்றியால் அது செவ்வந்தி எழுதுற கருத்துக்களாக இருக்கும் எண்டு நினைக்கிறன். நிறைய இடங்களில எனது ஆக்கங்களுக்கு கருத்து சொல்லி இருக்கிறா. வீட்டில தான் தான் எல்லாருக்கும் கழுத்துப்பட்டி கட்டிவிடுறது எண்டு ஒரு இடத்தில எழுதி இருந்தா. நல்லா அவையுக்கு கழுத்துப்பட்டி கட்டுங்கோ ஆனால்.. அவையிண்ட கழுத்தை திருகிவிட்டுதாதிங்கோ... ஹாஹா

இவ படிச்சது யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி எண்டு சொன்னமாதிரி இருக்கிது. செவந்தியை எனக்கு தனிப்பட தெரியாது. வாழ்த்துகள்!

ஹிருசி:

ஹிருசியை நான் அவவிண்ட அவாட்டர் படத்தை வச்சுத்தான் நினைவுபடுத்தியது. இப்ப நினைவில ஒண்டும் வருகிது இல்லை. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

தமிழீனி:

யாழில ரெண்டு தமிழினி இருக்கிறீனம். ஒருவ தமிழினி, மற்றவ தமிழீனி. முதலாவது தமிழினி யாழில நான் வரமுன்னம் பிரபலமான புள்ளியாக இருந்து இருக்கிறா போல. அவவை எனக்கு யார் எண்டு தெரியாது. தமிழீனி இவ.. புது ஆள். ஊர்ப்புதினம் பகுதியில கொஞ்சக்காலமாக செய்திகளை இணைச்சு கருத்துக்கள் சொல்லி வந்தா. இவவுக்கு ஏற்கனவே யாழில இன்னொரு தமிழினி எண்டு ஒருவ இருந்து இருக்கிறா எண்டு நாந்தான் சொன்னது. இப்ப தமிழீனி யாழுக்கு வாறது குறைவு. எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்!

ஒளவையார்:

யாழ் இணையத்தில தாயகபோராட்டத்திற்கு பயனுள்ள முறையில தீவிரமாக ஏதாவது செய்யவேணும் எண்டு நினைக்கிற ஒருஆள் ஒளவையார். பல முயற்சிகள் செய்து இருந்தா. பயன் கிடைக்க இல்லை. கடைசியாக திருகோணமலையில கொல்லப்பட்ட மாணவர்களை நினைவுபடுத்தி, மற்றது வவுனியாவில கொல்லப்பட்ட மாணவர்கள் சம்மந்தமாக ஏதோ தகவல் கேட்டு ஊர்ப்புதினத்தில கருத்து எழுதி இருந்தா. ஒருவரும் கண்டுகொள்ளவே இல்லை. பலர் ஊர்ப்புதினத்தில ஆவேசமா கோசம் போடுவீனம். மற்றவனை கண்டபடி ஏசுவீனம். ஆனால் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுறது எண்டால் பலரால முடியாது.

நான் ஒளவையார் கேட்டவிசயத்துக்கு ஏதாவது உதவி செய்யலாமோ எண்டு யோசிச்சு கூகிளில ஏதாவது தகவல் சிக்குதோ எண்டு தேடிப்பார்த்தன். அந்த மாணவர்கள் பற்றி ஒளவையார் கேட்ட ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

ஒளவையாருக்கு என்னில சரியான கோவமாய் இருக்கும் எண்டு நினைக்கிறன். அது என்ன எண்டால் நான் தமிங்கிலத்தில எழுதுறன் எண்டு. உண்மையில இப்ப நான் எழுதிக்கொண்டு இருக்கிறது ஆங்கில தட்டச்சு பலகையில ஆங்கிலத்தில எழுதி தமிழில எழுதுறன். இப்ப நான் amma எண்டு ஆங்கிலத்தில எழுதேக்க அது தமிழில அம்மா எண்டு வரும். அதாவது அடிபடையில ஆங்கிலதை தமிழா எழுதுறன். நிலமை இப்பிடி இருக்கேக்க என்னைமட்டும் கோவிச்சு என்ன செய்யுறது? என்னட்ட தமிழ் தட்டச்சு பலகையும் இல்லை. வேற தமிழ் பாமினி எழுத்துமுறைகள் அதுகளும் பாவிக்கிறது இல்லை. அதுக்காக நான் பிடிவாதமாய் என்னை மாற்றாமல் இருக்கிறன் எண்டும் சொல்ல இல்லை. பலர் ஆங்கிலத்தில இருக்கிற வார்த்தையை தமிங்கிலமாக அப்பிடியே எழுதாமல் கஸ்டமாக இருந்தால் ஆங்கிலத்தில எழுதலாம் எண்டு சொன்னாப்பிறகு இப்ப நான் கொஞ்சம் மாத்தி எழுதுறது. உதாரணமா அலேர்ட் எண்டுறத Alert எண்டு எழுதுறது. இப்படி மாத்தினதுக்கு முக்கிய காரணம் ஆக்களுக்கு விளங்கவேணும் எண்டு.

நான் சொல்ல வாறவிசயம் என்ன எண்டால் தூயதமிழில, நல்ல அழகிய தமிழில எழுதக்கூடிய ஆக்கள் நீங்கள் தாராளமாக எழுதுங்கோ. மற்றவனுக்கு அப்படி அழகாக எழுதிக்காட்டி அவனுக்கும் உங்களைப்போல எழுதவேணும் எண்டு உள்ளார்ந்த ஆர்வத்தை உருவாக்குங்கோ. அப்பிடி இல்லாமல் ஒருவனை பலாத்காரம் செய்து, வெருட்டி என்ன பயன்? கடைசியில சும்மா ஒருவனை பார்த்து தமிங்கிலம் தமிங்கிலம் எண்டு சொன்னால் அவன் தமிங்கிலமும் இல்லாமல் சுத்த ஆங்கிலமாய் மாறீடுவான்.

உங்களுக்கு இளைஞனை தெரிஞ்சு இருக்கும். இளைஞன் எழுதுற தமிழ் ஓரளவு நல்ல தூயதமிழாக, நல்ல அழகிய வார்த்தைகளாக இருக்கும். இந்த வளமுடன் வாழ்க! எண்டுற பதத்தை நான் பிரதிபண்ணியது இளைஞனிடம் இருந்துதான். அப்பிடி... நீங்கள் நல்ல தமிழில கதைச்சால் மற்றவனும் உங்களை நிச்சயம் பின்பற்றுவான்.

மற்றது, ஒளவையாருக்கு என்னில ஒரு கோபம் நான் பொழுதுபோக்கில அதிக கவனம் செலுத்துறன் எண்டு. உண்மையில யாழுக்கு நான் வாறதிண்ட 90% நோக்கம் பொழுதுபோக்குத்தான். ஆனால் அதே நேரத்தில சமயம் கிடைக்கும்போது தாயகமக்களும் உதவும்படியாக ஏதாவது விசயங்களிலையும் கவனம் செலுத்தி வருகிறன். உங்களைமாதிரி என்னால் முழுமையாக தாயகமக்கள் பற்றி யாழில நினைச்சு செயல்பட முடிய இல்லை. அதுக்காக மன்னிச்சுக்கொள்ளுங்கோ. ஆனாலும்... நீங்கள் ஏதாவது பயனுள்ள முறையில செயற்பாடுகளை முன்னெடுத்தால் நிச்சயம் எனது பங்களிப்பையும் தருவன் எண்டு சொல்லிக்கொள்ள விரும்புகிறன்.

ஒளவையாரை எனக்கு யார், எங்க இருக்கிறா எண்டு ஒண்டும் தெரியாது. ஒளவையார் விரும்பும்படியாக யாழில பயனுள்ள வகையில தாயகமக்களுக்கு உதவக்கூடிய செயற்பாடுகளை செய்ய இங்குள்ள ஆர்வம்மிக்கவர்களை உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். யாழில இருக்கிற செய்திக்குழுமத்திலை உரியவர்கள் ஒளவையாரை இணைச்சு இருந்தால் ஏதாவது பயனுள்ள வேலைகளை செய்து இருக்கமுடியும். யாழ் செய்திக்குழுமம் கண்களில இவ்வளவு ஆர்வம் உள்ள ஒரு உறவு தெரியாமல் போனது ஆச்சரியமாய் இருக்கிது.

ஒளவையார் நான் உங்களை கடுமையாக தாக்கி யாழில சில இடங்களில கருத்துக்கள் எழுதி இருக்கிறன் எண்டு நினைக்கிறன். மன்னிச்சுக்கோங்கோ. உங்கள் முயற்சிகளில நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்!

Slgirl:

சாப்பாடுகள் விட்டில நிறைய இருந்தாலும் பசிவரேக்கதான் சாப்பிட முடியும். இதுமாதிரி கவிதை வாசிக்கிறது எண்டால் எனக்கு நல்லதொரு மனநிலை வேணும். அப்பிடியான மனநிலை வரேக்க யாழில கவிதைப்பூங்காடு பகுதிக்கு போய் மணித்தியாலக்கணக்கா குந்தி இருந்து கவிதைகள் வாசிக்கிறது. பழைய பழைய கவிதைகளையும் தோண்டி எடுத்து வாசிக்கிறது. இந்தவகையில தோண்டிகொண்டு போகேக்க எஸ்.எல்.கேர்ல் எண்டு சொல்லப்படுகின்ற இவவிண்ட கவிதைகளை கண்டன். அனைத்தும் அருமையான கவிதைகள். வாசிக்க அருமையாய் இருந்திச்சிது. எனக்கு பிடிச்சு இருந்திச்சிது. ஆனால் எனக்கு சரியான ஆச்சரியமாய் இருந்தது என்ன எண்டால் யாழில ஒருத்தருமே இவவிண்ட கவிதைகளுக்கு பதில் எழுதி இருக்க இல்லை. ஆக ஓரிருவர் மாத்திரம் ஏதோ எழுதி இருந்திச்சீனம். எனக்கு யாழ் ஆக்களிண்ட ரசனை இன்னமும் விளங்க இல்லை.

சிலது... ஒருவர் முதலில ஒரு பதில் கருத்து எழுதினால்தான் மிச்சம் ஆக்களும் ஒருவர் பின் ஒருவராக வரிசையில போய் பதில்கருத்து எழுதுவீனமோ தெரியாது. இப்ப என்னைப்பொறுத்தவரையில கவிதைப்பூங்காட்டில நான் எப்பிடி பதில் கருத்து எழுதுறது எண்டால் யாழில சுடச்சுட ஒரு கவிதை வந்தால்... முதலில எனக்கு மனதில வாசிக்கிற மனநிலை வரவேணும். வாசிச்சன் எண்டால் பிறகு எழுதக்கூடிய மனநிலை இருக்கவேணும். இவவிற்கு ஒருவரும் யாழில இவ படைச்சஆக்கங்களை தட்டிக்கொடுக்காதது ஏன் எண்டு தெரிய இல்லை.

எஸ்.எல்.கேர்ல் தனது படைப்புக்களை தொடர வாழ்த்துகள்!

வளரும்..

Edited by முரளி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

இந்தப்பதிவு மேலுள்ள பதிவுகளை விட கொஞ்சம் கனதியானது. நான் ஒருவருக்கும் அறிவுரை சொல்ல இதை எழுதவில்லை... யாழில எனது பயண எண்ணங்களினை சொல்லிறன். மற்றது, எனக்கு தெரிஞ்ச சில விசயங்களை மற்றவர்களும் தெரிஞ்சுகொண்டால் நல்லது எண்டுறதுக்காகவும் சில கனதியான விசயங்களை இதில சொல்லிறன். வாசிச்சுப்போட்டு ஒருத்தரும் கோவிச்சுக்காதிங்கோ.

யாராவது பெயருகளை பிழையாக உச்சரிச்சு எழுதி இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ. வல்வைசகாரா அக்காவை வல்வைசகீரா எண்டு எழுதி இருந்தன். இப்ப பிழையை திருத்திப்போட்டன்.

நன்றி!

அடுத்தபத்து ஆண்கள்:

சோழியன்:

சோழியன் மாமா பற்றி எனக்கு முதன்முதலாக அறியவந்தது அனிதா மூலம். நல்லாய் கதை எழுதுவார் எண்டு சொல்லி இருந்தா. தாயக பறவைகள் இதலில சோழியன் மாமாவிண்ட தொடர்கதை வாறது எண்டு நினைக்கிறன். நான் யாழில ஆக ஓரிருவரைத்தான் மாமா எண்டு கூப்பிடுறது. ஒருவர் புத்தன். புத்தன் யமுனாவிண்ட (ஜம்முபேபி) உண்மையான மாமா எண்டுறபடியால அவர் மாமா மாம்ஸ் எண்டு கூப்பிட நானும் அவரோட சேர்ந்து புத்தன் மாமா, பிறகு புத்து மாமா எண்டு கூப்பிட வெளிக்கிட்டது. பிறகு நான் மாமா எண்டுகூப்பிடுறது அவருக்கு சங்கடமாக இருக்கும் எண்டு நினைச்சுபோட்டு புத்தன் எண்டு பெயர் சொல்லிக்கூப்பிடுறது.

மற்றவர் அம்பளம் அங்கிள் எண்டு அவர்.. கனகாலத்துக்கு பிறகு யாழுக்கு வந்து இருந்தவர். இப்ப திரும்ப காணாமல் போயிட்டார். அவரையும் மாமா எண்டு கூப்பிடுறது. சோழியன் மாமா ஜேர்மனில எங்கையோ அம்மன் கோயிலில தேர்திருவிழாவுக்கு போனதுபற்றியும், அதில தண்டபடமும் போட்டு இருந்தார். அங்க இருந்துதான் எனது உறவு யாழில சோழியன் மாமாவுடன் ஆரம்பித்தது.

சிலது கொஞ்சம் பயமாய் இருக்கும் இவர் உண்மையில கொஞ்சம் வயசானவரோ இல்லாட்டிக்கு சின்னப்பெடியனாய் இருக்குமோ எண்டு. ஏன் எண்டால் ஒரு சின்னப்பெடியனை யாராவது மாமா எண்டு கூப்பிட்டால் ஒரு deliberate Insult ஆகத்தானே இருக்கும்? ஆனால்... பிறகு இல்லை இவர் பெரிய ஆள்தான் எண்டு நல்லாய் மனதுக்க உறுதியாய் தெரிஞ்சபிறகு சோழியன் மாமா எண்டுகூப்பிட துவங்கியாச்சிது. சோழியன் மாமாவிண்ட கனதியை – ஆற்றலை – திறமையை அவரிண்ட தமிழமுதம் வலைத்தளத்துக்கு போனபிறகுதான் அறிஞ்சுகொண்டன். அங்க ஒருக்கால் போய்வந்தபிறகு எனக்கு சோழியன் மாமா மீது இருந்த மதிப்பு இன்னமும் அதிகரிச்சுவிட்டிது. தமிழமுதம் இணையத்தை ஒரு.. என்ன எண்டு சொல்லிறது எண்டு தெரிய இல்லை... வலைத்தளத்தில தமிழருக்கு கிடைச்ச ஒரு விலைமதிப்பற்ற சொத்து எண்டு சொல்லலாம். சோழியன் மாமாவிண்ட Profileக்கு போனால் அதில தமிழமுதம் வலைத்தளத்துக்கு போவதற்குரிய முகவரி இருக்கிது.

நான் யாழில கனடாக்கிழவன் எண்டு ரெண்டுதரம் ஒரு ஆக்கம் எழுதி ஊர்ப்புதினத்தில இணைச்சது. நான் அதை எழுதினதில பலருக்கு கோபம். ஆனால் சோழியன் மாமா துணிவுடன் அதை பாராட்டி இருந்ததோடு அதை தண்ட வலைத்தளத்தில போடலாமோ எண்டும் கேட்டு இருந்தார். யாழில சோழியன் மாமாவை ஒரு நீதியிண்ட தராசு எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன். எனக்கு ஆதரவு அளிச்சதுக்காக அப்பிடி நான் சொல்ல இல்லை. நான் கவனிச்சதில சோழியன் மாமா தாயகபோராட்டம் சம்மந்தமாககூட ஆதரவு சொல்லேக்க கண்டதுக்கெல்லாம் தலை ஆட்டமாட்டார். நடுவுநிலமையுடன் கருத்தாடல் செய்பவர். அவரிண்ட கையெழுத்தில இருக்கிற “பழையன அறிந்து புதியன புகுவோம்!” எண்டு இருக்கிறதில இருந்து நீங்கள் சோழியன் மாமாவிண்ட நிலைப்பாட்டை அறிஞ்சுகொள்ளலாம்.

எனக்கு அதிகம் சோழியன் மாமாமீது பற்று வந்ததற்கான காரணம் துணிவாக, மற்றது போலியாக வெட்கப்படாமல் தண்ட உணர்வுகளை சொல்லக்கூடியவர். நான் போனவருசம் மாவீரர்கள் நினைவாக யாழில பல விடுதலைகானங்களை பாடி ஒலிப்பதிவுசெய்து இணைச்சு இருந்தன். சோழியன் மாமாவும் தனது குரலில ஒரு பாடலை பாடி இணைச்சு இருந்தார்.

எனக்கு இன்னமும் தனிப்பட விரிவாக அவர்பற்றி தெரியாது. ஆனால் நான் ஜேர்மனிக்கு போகும்சமயம் வரும்போது நிச்சயம் அவரைச்சந்திக்க முயற்சிசெய்வதோடு, அவரோட சேர்ந்து ஏதாவது ஒரு சின்னப்படைப்பை ஆகக்குறைஞ்சது ஒரு பாடலையாவது உருவாக்க முயற்சிப்பன். நான் போனவருசம் டென்மார்க் போயிருந்தபோது ரெண்டுமூண்டு இடங்களில பாடல்கள் பாடினது. நாங்கள் அங்கபாவிச்சது ஆக ரெண்டு தபேலா, ஒரு electric drum. எங்களுக்கு வயலின், வீணை எண்டு பக்கவாத்தியங்கள் எல்லாம் தேவை இல்ல பாடுறதுக்கு. கையில ஒரு அண்டா குண்டா ஒண்டு கிடைச்சால் போதும். நான் பொழுதுபோக்கிற்கு வீட்டில பாடுறது. எண்டபாட்டில பியானோ வாசிச்சுக்கொண்டும் பாடுறது. அது நல்லதொரு அனுபவம். இதுமாதிரி ஜேர்மனியில சோழியன் மாமாவோட சேர்ந்து சின்னக்கூத்து ஒண்டு அடிக்கவேணும் எண்டு ஒரு சின்ன ஆசை இருக்கிது. இடைக்கிடை சோழியன் மாமா மின்னஞ்சல் அனுப்புவார். சோழியன் மாமாவிண்ட சேவைகள் தொடர வாழ்த்துகள்!

பிருந்தன் + வியாசன்:

பிருந்தன், வியாசன் ஆகிய இருவரும் வேறு வேறு ஆக்கள். ஆனால் நான் இதில இரண்டு பேரையும் சேர்த்து எழுதகாரணம் என்ன எண்டால் எனக்கு சிலவேளைகளில சரியான குழப்பமாய் இருக்கும் யார் பிருந்தன், யார் வியாசன் எண்டு. நான் போனவருசம் ஒரு கிறிஸ்மஸ் கீதம் செய்தது. அந்த காணொளியை இருவரில ஒருத்தர் தனது வலைத்தளத்தில இணைச்சு இருந்தார். இருவரும் நல்லாய் கவிதை எழுதகூடியவர்கள். இவர்களில ஒருத்தர் அடிக்கடி என்னை மாப்பு எண்டு கூப்பிடுவார். இப்ப நினைவுகள் வருகிது இல்ல. இருவரும் யாழுக்கு வாறது நல்லாய் குறைஞ்சுபோச்சிது.

தனிப்பட இவர்களை எனக்கு தெரியாது. வளமுடன் வாழ இருவருக்கும், வாழ்த்துகள்!

மோகன்:

ஆரம்பத்தில நான் மோகனை ஐயா எண்டுதான் மரியாதையாக கூப்பிடுறது. பிறகு மோகன் அண்ணா எண்டு கொஞ்சக்காலம் கூப்பிட்டது. அதுக்குபிறகு இப்ப மோகன் எண்டு கூப்பிடுறது. அதுக்காக அடுத்த கட்டமாய் நான் மோகனை “மச்சான் டேய்!” எண்டு கூப்பிடுவன் எண்டு நினைக்கக்கூடாது. ஹிஹி. உண்மையில காரணம் என்ன எண்டால் எனக்கு மோகன் எண்டு கூப்பிடுறதுதான் வசதியாய் இருக்கிது. மோகன் எனக்கு ஒரு நல்ல நண்பராகத்தான் தெரிகின்றார். இதால அண்ணா இல்லாட்டிக்கு ஐயா எண்டு இப்போது கூப்பிட முடியவில்லை.

மோகனோட நான் ஸ்கைப்புக்கால கதைச்சு இருக்கிறன். ஆரம்பத்தில ஏராளம் யாழ் தனிமடல்களை பரிமாறி இருக்கிறன். பிறகு இப்ப தொடர்புகொள்ளிறது இல்லை. ஏன் எண்டால் இப்ப ஒரு Understanding இருக்கிது. சிலது கருத்துக்களத்தில இருக்கிற Report முறைமூலம் தகவல் அனுப்புறது. யாழில இருக்கிற ஒரு பிரச்சனை என்ன எண்டால் கனடாநேரம் இரவு 6.00 துவக்கம் அதிகாலை 12.00, 1.00 வரை மட்டறுத்துனர்கள் ஒருத்தரும் பொதுவாக இருக்கமாட்டீனம். இந்தவிசயத்தை அறிஞ்ச சிலர் மட்டறுத்துனர் இல்லாதநேரமாக பார்த்து யாழ் களத்தை துவம்சம் செய்யுறது. வேணுமெண்டு கண்டதையும் எழுதி ஊர்ப்புதினத்தில போடுறது. ஆக்களை தனிப்பட தாக்கி, நையாண்டி செய்து Bulk ஆக சங்கிலித்தொடராக கருத்துக்கள் எழுதி ஒட்டிவிடுறது. இப்பிடி பல பிரச்சனைகள்.

ஆரம்பத்தில இதுமாதிரி ஆக்கள் யாழில செய்யுறத நினைக்க எனக்கு கோவமாய் இருந்திச்சிது. நடுமுற்றத்தில மலசலம் கழிச்சு அசிங்கம் பண்ணுறமாதிரி இப்படியான குழப்பகரமான வேலைகள். அப்ப நான் மோகனுக்கு சொன்னன் இந்தநேரத்தில என்னால உங்களுக்கு மட்டறுத்தல் செய்யுறதுக்கு உதவிசெய்யமுடியும் எண்டு சொல்லி, என்னைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் மோகனுக்கு சொல்லி இருந்தன். மோகனும், தான் வலைஞன் கையில இந்த மட்டறுத்துனரை தெரிவுசெய்யும் வேலையை ஒப்படைச்சு இருக்கிறதாகவும், என்னையும் மட்டறுத்துனராக போடலாம் எண்டு பிரேரித்ததாகவும் சொன்னார். நல்ல காலம் வலைஞன் என்னை மட்டறுத்துனராக போடவில்ல. போட்டு இருந்தால் இரண்டுவிதமான பிரச்சனைகள் எனக்கு வந்து இருக்கும். ஒண்டு நான் இவ்வளவு காலமும் யாழில படைச்ச ஆக்கங்களை படைச்சு இருக்கமுடியாது. எனது ஆற்றல்கள் ஒடுக்கப்பட்டு இருக்கும். இரண்டாவது இப்போது இருக்கிறதைவிட இன்னும் பல ஏராளம் மனக்கசப்புக்களை யாழிலபட்டு இருக்கவேணும். இப்ப இருக்கிற தலையிடியையே என்னால தாங்கமுடிய இல்லை. நான் மட்டறுத்துனராக இருந்து இருந்தால் வந்து இருக்கக்கூடிய வேதனைகளை என்னால கற்பனை செய்தும் பார்க்க முடியவில்ல.

யாழில எல்லாரும் எங்கட பொழுதுபோக்கிற்கு வாறம். ஆனால் எங்களில எத்தினபேர் மோகனிண்ட தனிப்பட்ட வாழ்க்கையில கொஞ்சமாவது அக்கறையாக இருக்கிறமோ தெரியாது. யாழ் இணையம் காரணமாக தனக்கு தனிப்பட்ட வாழ்வில வந்த சில பிரச்சனைகள் பற்றி மோகன் சொல்லி இருந்தார். மோகன் இஞ்ச ஒண்டும் எழுதுறது இல்லை நிருவாக வேலை தவிர. இஞ்ச ஏதாவது எக்கச்சக்கமாக எழுதி பிரச்சனைகளை உருவாக்கிறது நாங்கள்தான். ஆனால்.. கடைசியில நாங்கள் ஒவ்வொரு வினோதமான பெயரில ரெண்டு மூண்டு மாதம் இல்லாட்டிக்கு ஓரிரு வருசங்கள் இருந்து பொழுதுபோக்கிப்போட்டு யாழை விட்டுபோயிடுவம். ஆனால், கடைசியில நாங்கள் உருவாக்கிற பிரச்சனைகளையும் தலையில வச்சு காவுறது மோகன் தான். நானும் தவறுகள் செய்து இருக்கிறன். ஆனால்... இப்ப எழுதேக்க கொஞ்சம் கவனமாய் எழுத முயற்சிக்கிறது.

போனவருசம் டென்மார்க் போயிருக்கேக்க மோனை சந்திக்க ஒரு விருப்பம் இருந்திச்சிது. என்ன காரில ஒரு சின்ன ஓட்டம்தானே. ஆனால்.. எனக்கு வசதி கிடைக்க இல்லை. பிறகு ஒரு காலத்தில வசதி கிடைக்கும்போது சந்திக்கலாம் எண்டு நினைக்கிறன். மோகன் யாழிலும், யாழுக்கு வெளியிலும் நிறைவுடன், மகிழ்வுடன், நிம்மதியாக, வெற்றிகரமாக வாழ இதயபூர்வமான வாழ்த்துகள்!

சஜீவன்:

நான் ஆரம்பத்தில இவரை சகீவன் எண்டு கூப்பிடுறது. பிறகு ஈழவன் சஜீவன் எண்டு கூப்பிட அட இவர் சஜீவனா எண்டு சஜீவன் எண்டு சரியாக உச்சரிச்சு கூப்பிடுறது. முந்தி ஒருக்கால் தனக்கு கீபோர்ட் வாசிக்கிறதுக்கு ஏதோ உதவிகேட்டு மடல் அனுப்பி இருந்தார். நானும் ஏதோ எனக்கு தெரிஞ்ச ஓரிரு விடயங்களை சொல்லி இருந்தன். இப்ப சஜீவனும் நல்லாய் கீபோர்ட் வாசிச்சு பழகி இருப்பார் எண்டு நினைக்கிறன். ஒரு பாட்டை கீபோர்டில வாசிச்சு ஒலிப்பதிவு செய்து யாழில இணைச்சு விடுங்கோ நேரம் இருக்கேக்க.

சஜீவன் யாழில எல்லாப்பகுதிகளிலையும் கருத்துக்கள் எழுதுவார். என்னை மாப்பு எண்டு இப்பவும் கூப்பிடுற ஆக்களில ஒருத்தர். சஜீவன் எப்பவும் நல்ல நகைச்சுவையாக கருத்துக்கள் எழுதுவார். மற்ற ஆக்களிண்ட மனம் தனிப்பட நோகாதவகையில கருத்துக்களை வைக்கும் ஒருவர்.

சஜீவனை எனக்கு தனிப்பட தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

ஜனார்த்தனன்:

ஊர்ப்புதினம் பகுதியில அனைவரும் அறிஞ்சு இருக்கக்கூடிய ஒருத்தர். முந்தி ஊர்ப்புதினம் தவிர விளையாட்டுக்கள், இதரபகுதிகளிலையும் கருத்துக்கள் எழுதுவார். இப்ப ஊர்ப்புதினத்தில மாத்திரம் ஏதாவது கருத்துக்கள் வைப்பார். இவருக்கு பிடிச்ச கிரிக்கட் வீரர் அவுஸ்திரேலியா Andrew Symonds எண்டு முந்தி சொல்லி இருந்தார். அரவிந்தன் யாழில வைக்கிற விளையாட்டுப்போட்டிகளில முந்தி பங்குபற்றி இருந்தார். தனிப்பட இவரை தெரியாது. வாழ்த்துகள்!

சாத்திரி:

சாத்திரி அண்ணா யாழில இருக்கிற படைப்பாளிகளில முக்கியமான ஒருத்தர். நான் சாத்திரி அண்ணாவின் ஏராளம் ஆக்கங்களை வாசிச்சு, கேட்டு மகிழ்ந்து இருக்கிறன். அதில முக்கியமான ஒண்டு காதல் பற்றின ஒரு கவிதை. அந்தமாதிரியான ஒரு சூப்பர் கவிதை. திடீரெண்டு ஏதோ புத்தருக்கு நிறைஞானம் கிடைச்சமாதிரி அந்தக்கவிதையை எழுதி யாழில இணைச்சு இருந்தார். இந்தக்கவிதைய வாசிச்ச மணிவாசகன் என்ன சாத்திரி இவ்வளவு காலமும் சரக்கை எங்க வச்சு இருந்தனீங்கள் எண்டு பகிடியாக கேட்டு இருந்தார். அப்படி ஒரு அருமையான கவிதை அது.

இப்ப கொஞ்சக்காலமாய் சாத்திரி அண்ணைக்கு என்னோட கோபம். எனக்கும் ஒரு பட்டம் தந்து இருந்தார். மாற்றுக்கருத்து மாணிக்கம், மற்றது மீட்பர் யேசு எண்டு எதோ.. யாழில பட்டங்கள் தாறனீங்கள் தாராளமாய் தாங்கோ ஆனால் அதைவச்சு நான் காசு பண்ணக்கூடியமாதிரியான M.B.B.S, F.R.C.S, D.Sc.. அப்பிடி ஏதாவது பெரிய பட்டங்களாய் தந்தால் நான் வாழ்க்கையில பிழைச்சுக்கொள்ள உதவியாய் இருக்கும். ஹாஹா

சாத்திரி அண்ணாவிடம் ஏராளம் ஆற்றல்கள் இருக்கிது. ஆனால்.. நான் கவலைப்படுவது அந்த ஆற்றல்களை ஒரு சதத்துக்கு உபயோகம் இல்லாத ஆக்களை விமர்சனம் செய்யவெளிக்கிட்டு வீணாக்கிவிடுவாரோ எண்டு. உங்கள் எல்லாருக்கும் மாமனிதர். பொன்.கணேசமூர்த்தியை தெரிஞ்சு இருக்கும். அவர் தனது ஆற்றல்களை எப்படி பயன்படுத்தி இருந்தார் எண்டும் தெரிஞ்சு இருக்கும். ஒருவரை நேரடியாக தாக்காது, சமூகத்தில இருக்கிற பிரச்சனையை பச்சையாக சொல்லாது, சூசகமாக நாகரீகமான முறையில, மிகவும் நகைச்சுவையுடன் விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக சொல்வதில அவர் வல்லவர். அவரிண்ட சந்தனக்காடு நாடகத்தை எத்தனைபேர் ஊரில பார்த்து இருப்பீங்களோ தெரியாது. அவரை மாதிரி சாத்திரி அண்ணாவும் தனது அடுத்த படிமுறை வளர்ச்சியை நோக்கி தனது ஆற்றல்களை ஒருமுகம் செய்து குவிச்சு, விருத்தி செய்து நல்லதொரு கலைஞராக மிளிரவேணும் என்பதே எனது எதிர்பார்ப்பும், ஆசைகளும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்!

ஆதிவாசி:

ஆதிவாசியை நான் ஆதி எண்டுதான் கூப்பிடுறது. முந்தி ஒருக்கால விடுப்புவிமலா எண்டு ஒருவ ஆதிவாசி ஆண் அல்ல பெண் எண்டு ஏதோ சொல்லி குழப்பம் ஏற்படுத்த ஆதிக்கு பொல்லாத கோவம் வந்திட்டிது. எல்லாரும் நக்கலாய் ஆதியை ஆதி அக்கா எண்டு கூப்பிட குரங்கிண்ட வாலில நெருப்புப்பந்தத்தை கட்டிவிட்டமாதிரி ஆதி கொஞ்சக்காலம் சரியான சூட்டோட ஓடிதிரிஞ்சார்.

ஆதியிண்ட கருத்தாடலில பிரபலமானது யாழ் ஆக்கள் கலந்துகொள்ளுற காளையை அடக்கிற ஏதோ விளையாட்டு. அந்தத்தலைப்பு இப்ப முழுமையாக நினைவில வருகிது இல்ல. மிகவும் நகைச்சுவையாக அது கொஞ்சக்காலம் இருந்திச்சிது. யாழில இருக்கிற சிறந்த கவிஞர்களில ஆதியும் ஒருவர். மிகச்சிறப்பான முறையில மரபுக்கவிதைகளை நகைச்சுவையுடன் எழுதக்கூடியவர். நகைச்சுவை இல்லாமல் கனதியான விசயங்கள் பற்றியும் நல்ல மரபுக்கவிதைகளை படைக்கின்ற திறமை ஆதியிடம் இருக்கிது. ஆதியிண்ட கிறுக்கலைகளை கறுப்பியிண்ட கவிதை அந்தாதியில காணலாம். தனிப்படவும் பல கவிதைகளை யாழில எழுதி இருக்கிறார்.

தாயகம் மீது அதிக அக்கறை, பற்றுக்கொண்டவர்களில யாழில ஆதியும் ஒருவர். நான் என்னதான் கலைஞன், முரளி எண்டு பெயரை மாத்தினாலும் தொடர்ந்து மாப்பு எண்டு என்னைக்கூப்பிடுற ஆக்களில ஆதியும் ஒருவர்.

எனக்கு இன்னொரு சரியான சிரிப்பை ஏற்படுத்துற விசயம் பனங்காய் (இது யாழில இருக்கிற ஒரு ஆளிண்ட பெயர்) ஒரு காணொளியை ஆதியிண்ட பிரபலமான ஒரு திரியில இணைச்சு இருந்தார். அதில ஒரு குரங்கு தனது உடம்பை வளைத்து தனது சிறுநீரை தானே தனது வாயுக்க பெய்யுது. அந்தக்காணொளி பார்க்க சரியான கருமமாய் இருந்தாலும்... ஆதிக்கு அந்தக்காணொளியை பார்த்துப்போட்டு பனங்காய் மேல வந்த கோவத்தை நினைக்க சரியான சிரிப்பாய் இருக்கிது. மகிழ்வுடன் வாழ ஆதிக்கு வாழ்த்துகள்!

முகத்தார்:

நான் வந்தாப்பிறகு இவர் ஓரிரு தடவைகள்தான் வந்து இருக்கிறார் யாழுக்கு எண்டு நினைக்கிறன். என்னோட முகத்தார் கலந்துகொண்ட கருத்தாடல்களி நினைவில இல்ல. நான் வரமுன்னம் யாழில பிரபலமாக இருந்து இருக்கிறார் எண்டு சில பழைய பதிவுகளை வாசிச்சு தெரிஞ்சுகொண்டன். எங்கிருந்தாலும் சுகதேகியாக வளமுடன் வாழ வாழ்த்துகள்!

லக்கிலுக்:

இவரும் முகத்தார் போல நான் இணைஞ்சபின்னர் யாழுக்கு வாறது மிகவும் குறைவு. நீண்ட காலத்தின் பின்னர் அண்மையில ஓரிரு தடவைகள் வந்து இருக்கிறார், கருத்து எழுதி இருக்கிறார் யாழில. இஞ்ச இருக்கிற சபேசன், நாரதர், பகுத்தறிவு (யாழில ஒரு ஆளிண்ட பெயர்) போல இவரும் ஒரு பகுத்தறிவு கொள்கைகளில அதிக ஈடுபாடு உள்ளவர் எண்டு நினைக்கிறன். வாழ்த்துகள்!

சூறாவளி:

யாழில காணொளி மூலம் அட்டகாசமாக வரவேற்கப்பட்ட ஒருவர் என்று சொல்லாம். இவருக்கு நாந்தான் முதலாவதாக வரவேற்பு சொல்லி, அந்த சூறாவளி எண்டு வரும்தானே ஒரு பாட்டு பறவை முனியம்மா படிக்கிறது? அந்தப்பாடல் காணொளியை இணைச்சு வரவேற்பு குடுத்தன். யாழ் அரிச்சுவடியில ஆக்கள் தங்களை அறிமுகம் செய்யேக்க வணக்கம், வாங்கோ, நலமா எண்டு கேட்டு புதுசா வாற ஆக்களை தூக்கிவிடுறது. எனக்கும் பலர் இப்படி வரவேற்பு தந்து இருந்திச்சீனம். ஆரம்பத்தில இணையேக்க அது ஒரு நல்ல சந்தோசமாய் இருக்கும் ஆக்கள் வரவேற்பு சொல்லேக்க. அதுவும் யாழில பிரபலமான தலைகள் வரவேற்பு தரேக்க இன்னும் சந்தோசமாய் இருக்கும்.

நான் முந்தி எல்லாருக்கும் வாங்கோ வாங்கோ வணக்கம் எண்டு யாழ் அரிச்சுவடியில வரவேற்பு குடுக்கிறது. பிறகு பழைய ஆக்களே வேற வேற புதுப்பெயரிகளில வரத்துவங்கின உடன நான் வரவேற்கிறத நிப்பாட்டிப்போட்டன். ஒருவிசயம் சொல்லவேணும் என்ன எண்டால் சிலர் ஊர்ப்புதினத்தில சரியான கோவமாய் கதைக்கிறது. யாராவது ஒரு சின்னதாக ஏதாவது விலகி நிண்டாலே போட்டுத்தாக்க தொடங்கிவிடுவார்கள். இது கொஞ்சம் சிக்கலான விசயம்தான். நாங்கள் இஞ்சாலையும் குறைசொல்லமுடியாது. அங்காலையும் குறை சொல்லஏலாது. ஏன் எண்டால் இங்கு கருத்தாடல் செய்யும் பலர் சிறீ லங்கா அரசின் செயல்களினால் நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம். தமது உறவுகளை இழந்து இருக்கலாம். இவர்களிற்கு நிச்சயம் யாராவது கொஞ்சம் நடுவுநிலமையாக கதைக்கவெளிக்கிட்டால் ஆத்திரம் வாறது வழமையாக இருக்கும்.

ஆனால்.. ஒரு கருத்தாடல் தளம் எண்டு பார்க்கேக்க... மாற்றுகருத்து இருக்கக்கூடாது எண்டு சொல்லாமா? மாற்றுக்கருத்துக்கள் வைப்பவர்களை எல்லாரும் சேர்ந்து போட்டுத்தாக்கலாமா? யாழ் ஊர்ப்புதினம் பகுதியில பல பிரச்சனைகளுக்கு இது ஒரு காரணம். ஒருவர் மாற்றுக்கருத்து சொல்லேக்க... அவரை தனிப்பட தாக்காது கருத்தை கருத்தால வென்றால் கொஞ்சம் நல்லாய் இருக்குமோ தெரியாது. சூறாவளி அதிக அளவில கருத்துக்கள் எழுதுறது ஊர்ப்புதினம் பகுதியிலதான். கொஞ்சம் காரசாரமாய் எழுதுவார். தனிப்பட இவரை தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

அடுத்தபத்து பெண்கள்:

காவலூர்கண்மணி:

யாழில இருக்கிற முதல் மூன்று மிகச்சிறந்த பெண் கவிஞர்களிண்ட பெயர்களை சொல்லுமாறு யாராவது என்னிடம் கேட்டால் நான் பதிலாக கூறக்கூடியது: காவலூர் கண்மணி, தமிழ்தங்கை, வல்வைசகாரா. இந்த மூவரில முதன்மையானவராக ஒருவருக்கு கிரீடம் சூட்டச்சொல்லிச்சொன்னால் அந்தக்கிரீடத்தை என்னிடம் இருந்து பெற்றுக்கொள்பவர் காவலூர் கண்மணியாகத்தான் இருக்கும்.

ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரி கவிதை எழுதுவீனம். சகாரா அக்கா கவிதை எழுதேக்க அதை வாசிக்க நெருப்பு தகதக எண்டு எரியுறமாதிரி இருக்கும். தமிழ்தங்கையிண்ட கவிதையை வாசிக்கேக்க அருவி ஓடுறமாதிரி இருக்கும். காவலூர் கண்மணியிண்ட கவிதையை வாசிக்கேக்க எனக்கு பறவைகள் இசைபாடுறமாதிரி, அத்தோட உடன வாயில அது ஒரு பாடலாக பாடக்கூடியமாதிரி முணுமுணுக்கிற அளவுக்கு இருக்கும். நான் போனவருசம் காவலூர் கண்மணியிண்ட ஒரு பாடலை பாடி காணொளியாக செய்து இருந்தன். இப்ப மனதில இருந்து அந்தப்பாடல் வருகிது பாருங்கோ:

வானத்து எல்லையெங்கும்

வண்ணப் பூச்சொரியும்

கார்காலத்து ஓர் இரவு

களிப்பான மார்கழியில்

ஞாலத்து இருளகற்ற

நம்பாவம் தனைத்தீர்க்க

காலத்தின் தேவைக்காய்

கன்னிமகன் அவதரித்தான்!

ஒளியாக வந்த இந்த

உத்தமனாம் இறைமைந்தன்...

அங்கால மறந்துபோச்சிது. ஹாஹா.

இந்தகவிதையை காவலூர்கண்மணி யாழில இணைச்சு ஒருமுறை வாசிச்சு இரண்டாம் முறைவாசிக்கேக்க நான் இதை கவிதையாக வாசிக்க இல்ல. பாடலாகவே அப்பிடியே பாடிப்பார்த்தனான். அந்தளவுக்கு காவலூர்கண்மணியிண்ட கவிதைகள் இலகுவாக ஒருவரை ஈர்த்து எடுக்கக்கூடியவை. இப்ப கொஞ்சக்காலமாய் காவலூர்கண்மணி யாழுக்கு வருவதில்லை. ஏன் எண்டு தெரியாது. அவவை தனிப்படவும் எனக்கு தெரியாது. சகாரா அக்காவுக்கு தனிப்பட தெரிஞ்சு இருக்கும் எண்டு நினைக்கிறன். அவ சில இடங்களில தனது ஆருயிர் தோழி எண்டு சொல்லி இருக்கிறா. அப்பிடியாய் இருந்தால் கண்மணி அக்காவை திரும்பவும் யாழுக்கு கூட்டுக்கொண்டு வாங்கோ சகீரா அக்கா.

நான் சும்மா முஸ்பாத்திக்கு கண்மணி அக்காவை ஐபோல் அக்கா எண்டு கூப்பிடுறது. கண்மணி எண்டால் ஆங்கிலத்தில ஐபோல் எண்டுதானே வரும்? தொடர்ந்து இனிய பல கவிதைகள் படைத்து எம்மை மகிழ்விக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்!

கடுவன்:

முந்தி யாழில நிதர்சனம் செய்திகளை கொஞ்சக்காலமாக இணைச்சு வந்தா. நிதர்சனம் இணையம் சம்மந்தமாக சில தகவல்களையும் சொல்லி வந்தா. பிறகு ஆளை காணக்கிடைக்கிது இல்ல. முந்தி ஒருக்கால் பார்த்தன். அவவை கருத்துகள உறவுகள் எண்டுபோடாமல் புதிய உறுப்பினர்கள் எண்டு போடப்பட்டு இருந்திச்சிது. ஏன் எண்டு தெரிய இல்லை.

ஆரம்பத்தில கடுவனோட நிறையக்கருத்தாடல்கள் செய்து இருக்கிறன். இப்ப மறந்துபோச்சிது. நீங்கள் யோசிக்கக்கூடாது என்ன பெயர் கடுவன் எண்டு இருக்கிது. பிறகு பெண்கள் பகுதியில இவவைப்பற்றி சொல்லிறன் எண்டு. கடுவனிண்ட Profile இல பால் பெண் எண்டு இருக்கிது. நான் என்ன செய்ய?

கடுவனை எனக்கு தனிப்பட தெரியாது. எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

நிரூஜா:

யாழில அண்மையில இணைஞ்சு இருந்தா. யாழ் களம் சிறீ லங்காவில வேலை செய்ய இல்லை எண்டு ஊர்ப்புதினத்தில துவங்கின ஒரு தலைப்போட நிரூஜாவுடன் கருத்தாடல் செய்ய ஆரம்பிச்சன். விதம்விதமாக நிறைய விசயங்கள் பற்றி எழுதுவருகிறா. முக்கியமா இப்ப ஊர்ப்புதினத்தில கருத்துக்கள் எழுதிவருகின்ற புது ஆக்களில ஒருவர்.

நிரூஜா வலைப்பூவும் வச்சு இருக்கிறா. அதைப்போய் பார்த்தனான். நல்லாய் இருக்கிது. கணணி தொழில்நுட்ப விடயங்கள் அறிஞ்சவ எண்டு நினைக்கிறன். நீங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்ணோ எண்டு நான் கேட்க, தான் தலைவரின் வழியில வந்த புதுமைபெண் எண்டு சொல்லி இருந்தா. நிருஜாவை எனக்கு தனிப்பட தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

சகானா:

சகானா அக்கா இப்ப கனகாலமா வாறதுஇல்லை. முந்தி சகானா அக்கா வெவ்வேறு மதங்களில உள்ள பாடல்கள், தேவாரங்கள் பற்றி, அவற்றிண்ட பொருள்பற்றி ஒரு கருத்தாடலை ஆரம்பிச்சு இருந்தா. நானும் அதில கிறிஸ்தவம், இந்து, முஸ்லீம் சமய பாடல்கள் தேவாரங்களை இணைச்சு வந்தன். அது ஒரு பிரபலமான தலைப்பு. அந்தக்கருத்தாடல் மூலம் ஏராளம்பேர் பயன்பெற்று இருப்பார்கள் எண்டு நினைக்கிறன். அதுக்குபிறகு திடீரெண்டு காணாமல் போயிட்டா. நான் அண்மையில கொஞ்ச மாதங்களுக்கு முன்னம் தைமாதமா இருக்கவேணும் அவவிண்ட பிறந்தநாள்... யாழ் வாழிய வாழியவே பகுதியில பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தன்.

தனிப்பட சகானா அக்காவை எனக்கு தெரியாது. வாழ்த்துகள்!

வாசகி:

வாசகியும் அண்மையில யாழில இணைஞ்சு இருந்தா. இடைக்கிடை யாழுக்கு வந்து கருத்துக்கள் எழுதுவா எண்டு நினைக்கிறன். வாழ்த்துகள்!

கனிஷ்டா:

கனிஷ்டாவை யமுனா யாழுக்கு கூட்டிக்கொண்டு வந்தவர் எண்டு நினைக்கிறன். கனிஷ்டா முந்தி கொஞ்சக்காலம் வந்து இருந்தா. பிறகு காண இல்லை. எனக்கு கனிஷ்டாவுடன் கருத்தாடல் செய்த ஒரே ஒரு தலைப்புத்தான் இப்ப நினைவில இருக்கிது. யமுனா திடீரெண்டு கொஞ்சக்காலம் யாழுக்கு வராமல் இருந்தார். நானும் என்னடா ஒவ்வொருநாளும் வருவார் ஆளைக்காண இல்லை எண்டு யோசிசுபோட்டு... பிறகு இப்ப சரியாய் நினைவு இல்லை எப்படி அந்த idea வந்திச்சிது எண்டு. யம்மு பேபியுக்கு சிட்னி முருகன் கோயிலில நடந்த கலியாணம் எண்டு ஒரு நகைச்சுவையாக நாடகம் மாதிரி ஒண்டை எழுதி யாழில போட்டு இருந்தன்.

அதில பகிடி என்ன எண்டால் உங்களுக்கு தெரியுமோ தெரியாது பொன்னியின்செல்வன் எண்டு ஒரு அண்ணா இருக்கிறார். தாயக கலைஞர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். அவர் அந்தத்தலைப்பில உண்மையாகவே நான் எழுதின சம்பவங்கள் உண்மைமாதிரி பகிடியாய் நிறையக்கருத்துக்கள் எழுதத்துவங்கி ரெண்டு நாளையால அதை ஆரம்பிச்ச நானே குழம்பிப்போனன். இப்பிடி உண்மையில நடந்து இருக்காட்டிக்கும் பொன்னியின் செல்வன் அண்ணா சொல்லிற விசயங்கள் உண்மையாய் இருக்குமோ எண்டு. அந்தநேரத்தில கனிஷ்டாவும் கருத்து எழுதி இருந்தா. அந்தக்கருத்தாடல் மிகவும் நகைச்சுவையான ஒரு கருத்தாடல். அதில இன்னொரு பகிடி என்ன எண்டால் நான் சபேசனை தெரியாமல் அதுக்ககொண்டுபோய் கலியாணத்துக்க ஐயர் எண்டு இறக்கிவிட்டுட்டன். சபேசனை உங்களுக்கு தெரியும்தானே? பகுத்தறிவாளர். அவருக்கு இந்த விளையாட்டுக்கள் பிடிக்காது. அத்தோட கலியாணத்தில பங்குபற்றின ஆக்கள் எல்லாரும் அவுஸ்திரேலியாவில இருக்கிற ஆக்கள். சிலருக்கு சபேசன் எப்பிடி அதுக்கபோனவர் எண்டு ஒரு குழப்பம்.

தனிப்பட எனக்கு கனிஷ்டாவை தெரியாது. வாழ்த்துகள்!

சுபிதா:

சுபிதாவுடன் கருத்தாடல் செய்து இருக்கிறன். இப்ப நினைவு இல்லை. யாழ் நாற்சந்தியில கொஞ்சக்காலம் முன்னம் சுண்டல் சுபிதா சம்மந்தமாக ஒரு கருத்தாடலை ஆரம்பிச்சு இருந்தார். சுபிதாவை யார் எண்டு எனக்கு தெரியாது. சுபிதா நலமுடன் வாழ பிரார்த்தனைகள்!

சுசிதா:

சுசிதா அண்மையில இணைஞ்சு யாழில இருந்தா. அவ தனது அவாட்டர் படமாக பாவனாவை போட்டு இருக்கிறதால சுசிதா எழுதுகின்ற கருத்துக்களை பலர் வாசிச்சு இருக்கக்கூடும். என்ன இருந்தாலும் இந்த அவாட்டர் படத்தில ஒரு கவர்ச்சி இருக்கிது. யாழில முந்தி இப்பிடி சினிமா நட்சத்திரங்களிண்ட படங்கள போடக்கூடாது அப்பிடி இப்பிடி எண்டு விதிமுறைகள் கொண்டுவந்திச்சீனம். சிலது ஆக்களுக்கு குழப்பமாக இருக்கக்கூடும் என்ன எண்டால் அவாட்டரில சினிமா முகம் ஒண்டையும் கையெழுத்தில தாயகம் போராட்டம் சம்மந்தமான ஒரு கருத்தையும் போட்டு இருந்தால். ஏதோ அவரவர் விருப்பம். சுசிதாவை எனக்கு யாரெண்டு தெரியாது. யாழில பல நல்ல கருத்துக்களை வைப்பதோடு, வளமுடனும் வாழ வாழ்த்துகள்!

தேவகி:

தேவகி அக்கா நீண்டகாலமாக யாழ் வாசகராக இருக்கிறா எண்டு நினைக்கிறன். இரண்டு மூண்டு தடவைகள் தனிமடல் மூலமும் தொடர்புகொண்டு இருக்கிறன். ஒருமுறை நான் எழுதிய கருத்து ஒண்டை தேவகி அக்கா தவறுதலாக விளங்கி தன்னை நான் நக்கல் அடிச்சு இருப்பதாக நினைக்கக்கூடும் எண்டு கருதி மன்னிப்பு கேட்டு மடல் அனுப்பி இருந்தன். தேவகி அக்கா சீச்சீ அப்பிடி ஒண்டும் இல்லை. தான் எனது ஆக்கங்களை விரும்பி வாசிக்கிறனான். அத்தோட எனது சிறீ லங்கா சிறை அனுபவங்கள் தொடர் தனது கவனத்தை மிகவும் ஈர்த்து இருக்கிது எண்டும் சொல்லி வாழ்த்துகள் கூறி பதில் அனுப்பி இருந்தா.

நான் எழுதிய செல்வன் தொடரில தேவகி அக்கா ஒரு முக்கிய பாத்திரம். அதில சின்னப்புவிண்ட மனைவியாக தேவகி அக்கா வாறா. செல்வன் தொடரில நிறைய நகைச்சுவைகளும் இருக்கிது. கதை கதையாம் பகுதிக்கு போனால் நல்லாய் தோண்டிகொண்டுபோக உள்ளுக்க இருக்கும். நான் கடைசியாக இந்தவருசம் தைமாதம் செல்வன் தொடரில ஒரு பதிவை வைத்து இருந்தன். அத்தோட அந்த தொடரை இழுத்து மூடீட்டன். தேவகி அக்கா வளமுடன் வாழ வாழ்த்துகள்!

விதுஷா:

விதுஷாவுடன் கருத்தாடல்கள் செய்து இருக்கிறன். இப்ப நினைவில இருக்கிறது ஒரே ஒரு விசயம்தான். அது ஒரு பகிடி. அது என்ன எண்டால் அண்மையில ஒருவர் யாழில இணைஞ்சு இருந்தார். அதில அவர் தலைப்பாக நான் கனடாவில வந்து இருக்கிறன் எண்டு சொல்லி இருந்தார். அதுக்கு பதில் எழுதி இருந்த வல்வை அண்ணா “அப்படியா? அங்கு சரியான குளிராமே?” எண்டு கேட்டு எழுதி இருந்தார். வல்வை அண்ணா கனடாவிலதானே இருக்கிறார். எனக்கு அதை வாசிக்க சிரிப்பாய் இருந்திச்சிது. அப்ப நானும் பகிடியாக வல்வை அண்ணா எழுதினதுக்கு கீழ “ஆமாம் எனது நண்பர் ஒருவரும் கனடாவில இருக்கிறார். அங்க குளிருக்கு ஹீட்டர் எண்டு ஏதோ எல்லாம் பாவிப்பீனமாம். சினோ எல்லாம் கொட்டுமாம்” எண்டு மடல் அனுப்பி இருந்தார் எண்டு எழுதி இருந்தார்... இப்பிடி அப்பாவித்தனமாக எழுதி இருந்தன்.

கனடாவில இருக்கிற விதுஷாவுக்கு தெரியும் நாங்கள் எல்லாரும் கனடாவில இருக்கிற விசயம். அவ இதப்பாத்துப்போட்டு... “அடப்பாவிகளா கனடாவில அவ்வளவு குளிரா? அப்பிடி எண்டால் நாங்கள் தாயகத்திலேயே இருந்து இருக்கலாமே” எண்டு கருத்து எழுதி இருந்தா. எனக்கு சிரிப்பாக இருந்திச்சிது. விதுஷாவை எனக்கு தனிப்பட பழக்கம் இல்லை. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

வளரும்..

Edited by முரளி

Share this post


Link to post
Share on other sites

தயா:

தயா எண்டுறதைவிட தலை எண்டுதான் எனக்கு இவரை தெரியும். இவர் எப்ப யாழில தனது பெயரை மாத்தினாரோ அண்டையோட இவரிண்ட தலையிண்ட மதிப்பு குறைஞ்சிட்டிது எண்டு சொல்லவேணும். யாழில பச்சை பல்லுப்போட்ட முக்க்குறியை பார்க்கும்போது எனக்கு இவரிண்ட நினைவுதான் வரும். இவர் அதை அப்பப்ப பாவிப்பார். எங்கிருந்தாலும் வாழ்க!

நண்றி முரளி...!!

தலை தனியாள்.. ஆனால் தயாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது...! அதுதான் இருவருக்கும் வித்தியாசம்... :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றிகள் தயா. உங்கள் கருத்துக்கு. :rolleyes:

******

எல்லாருக்கும் வணக்கம்,

நான் அறிஞ்சவரையில என்னுடன் கருத்தாடலில ஈடுபட்ட இன்னும் ஒரே ஒரு பெண்தான் விபரிப்பதற்கு இருக்கிறார். யாராவது பெண்கள் தவறுப்பட்டு இருந்தால் மன்னிச்சுகொள்ளுங்கோ.

இனி மிச்சம் எல்லாம் ஆண்கள் அல்லது பால் எது எண்டு தங்கட Profile இல போடாத ஆக்கள் தான் இருக்கிறீனம். இதனால முதலில அந்த பெண் ஒருவ பற்றிச்சொல்லிப்போட்டு மிச்சம் அதிக கருத்துக்கள் எழுதினவர்களை இறங்குவரிசையில ஒவ்வொருவரையும் பற்றி தொடர்ந்து சொல்லிக்கொண்டு போறன். நன்றி!

கடைசிப் பெண்:

பூமகள்:

எண்ட பழைய பெயர் கலைஞன் தானே. அத்தோட இளைஞன், வலைஞன் எண்டு நிருவாகத்திலையும் ஆக்கள் இருந்திச்சீனம். நான் ஆரம்பத்தில யாழ் நிருவாகம் சார்பாக நிறைய விசயங்கள் ஆதரிச்சு கதைக்கிறது. அப்ப பலர் நினைக்கிறது என்ன எண்டால் நானும் ஒரு மட்டறுத்துனர் எண்டு. சிலர் இணையவன் எண்டுறது நாந்தான் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்திச்சீனம். அப்ப என்ன நடந்திச்சிது எண்டால் பூமகள் யாழில சேரேக்க அவவை கருத்துக்கள உறவுகள் பகுதியில சேர்க்கச் சொல்லிக்கேட்டு இலக்கியன் எனக்கு மடல் அனுப்பி இருந்தார்.

பூமகள் மிக அழகாக கவிதை எழுதக்கூடியவ. இலக்கியனின் நண்பியாக இருக்கும் எண்டு நினைக்கிறன். ஓரிரண்டு அழகிய கவிதைகளை யாழில பூமகள் இணைச்சு இருந்தா. நானும் பாராட்டு தெரிவிச்சு இருந்தன். பிறகு காண இல்லை. பூமகள் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

அடுத்த இருபது யாழ் கள உறவுகள்:

சபேசன்:

எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் பகுத்தறிவாளர்களிண்ட கருத்துக்களிற்கும் ஆதரவு இருக்கிது. அவர்கள் கருத்துக்களையும் காதுகொடுத்து கேட்கிறது. சபேசன் வாழ்த்துக்கள் எண்டு சொல்லக்கூடாது. வாழ்த்துகள் எண்டு சொல்லவேணும் எண்டு ஒருவிசயம் சொன்னபிறகு (இவர் சொன்ன இந்தவிசயத்தை கரிகாலன் எனப்படும் உறவு மூலம் அறிஞ்சுகொண்டன்) நான் அன்றில இருந்து இன்று வரை வாழ்த்துகள் என்று தான் சொல்லி வருகிறன். வாழ்த்துக்கள் எண்ட அந்த மேலதிக “க்” பாவிக்கிறது இல்லை.

நான் Serious ஆக ஆக்கள் மெய்யெனப்படுவது பகுதியில கருத்தாடல் செய்யேக்க இருந்திட்டு ஏதாவது பகிடியாக எழுதுறது. இதனால சபேசனுடன் தீவிரமாக கருத்தாடல் செய்வது மிகக் குறைவு. அண்மையில கவிதைப்பூங்காடு பகுதியில தீவிரமான ஒரு கருத்துமுரண்பாட்டை சபேசனுடன் கொண்டிருந்தன். சபேசன் முந்தி யாழுக்கு அடிக்கடி வருவார். இப்ப வாறது குறைவு. தனது தனி வலைத்தளம் வச்சு இருக்கிறார். சிலது அங்குபோய் ஏதாவது வாசிக்கிறனான்.

ஒருவர் தான் விரும்புகின்ற கொள்கையின்படி தனது வாழ்கையையும் மாற்றி அமைச்சு அதன்படி வாழ்வது வரவேற்கத்தக்கது. இந்தவகையில தனது நடைமுறைவாழ்விலும் ஒரு பகுத்தறிவாளனாக வாழ்கின்ற, வாழ முயற்சிகின்ற சபேசனுக்கு ஒரு “ஓ” அல்ல பல “ஓஓஓஓஓஓ” போடலாம். சபேசனை எனக்கு தனிப்பட தெரியாது. சபேசனின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

விஸ்ணு:

விஸ்ணு யாழ் பிரியசகியின் அண்ணா. ஓரிருதடவைகள் விஸ்ணுவுடன் கருத்தாடல் செய்து இருக்கிறன். அண்மையில ஐரோப்பிய வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி நடைபெற்ற காலத்தில யாழுக்கு அடிக்கடி வந்து இருந்தார். பிரியசகி எனக்கு நல்ல பழக்கம். ஆனால் விஸ்ணு தனிப்பட பழக்கம் இல்லை. நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

சாணக்கியன்:

யாழ் களத்தில துணிவுடன் கருத்து எழுதக்கூடிய ஒருசிலரில சாணக்கியன் முதன்மையானவர். பலருடன் ஒன்று சேர்ந்து ஒருபக்கமாக சேர்ந்து இருந்து இன்னொருவரை தாக்கி கருத்து எழுதுவது சுலபம். ஆனால் தனிஆளாக நின்று தனது சுயமான கருத்துக்களை அவற்றை எதிர்க்கின்ற பலர் முன்னிலையில சொல்வது கடினம். சாணக்கியன் யாழில சுதந்திர கருத்தாளர் சங்கம் எண்டு ஒன்றை முன்பு துவங்கினார். அதை ஆரம்பத்தில நான் கடுமையாக எதிர்த்து இருந்தன். அதற்காக சாணக்கியனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளிறன்.

செல்வன் தொடரில சாணக்கியன் ஒரு முக்கிய பாத்திரம். சாணக்கியன் தனது தனிப்பட்ட வாழ்வில காதலில வெற்றி பெற்று, தனது வாழ்க்கைத் துணையை காதலிச்சு கைப்பிடித்ததாய் சொல்லி இருந்தார். தனது காதல்கதை தமிழ் சினிமாக்களில வருவது மாதிரி ஊர்முழுதும் அறியப்பட்ட கதை எண்டு சொல்லி இருந்தார். சாணக்கியனுக்கு ஒரு சின்னக்கவலை தான் விரும்பியபடி பொறியியலாளராக வரமுடியவில்லை எண்டு. இதுபற்றி செல்வன் தொடர் விமர்சனத்தில எழுதி இருந்தார். செல்வன் தொடரில் சாணக்கியன் பொறியியல் பீடத்தில படிக்கிற மாணவனாக வருகிறார்.

சாணக்கியனை எனக்கு தனிப்பட யார் எண்டு தெரியாது. சிலவேளைகளில யாழ்ப்பாணத்தில கண்டுஇருக்கக்கூடும். சாணக்கியன் சாணக்கியனாக வளமுடன் வாழ வாழ்த்துகள்!

வல்வைமைந்தன்:

யாழில நான் அண்ணா எண்டு கூப்பிடுற ஆக்களில வல்வைமைந்தனும் ஒருவர். வல்வை அண்ணா தான் திருகோணமலையுக்கு போயிருந்தபோது எடுத்த அழகிய காட்சிகளை காணொளியாக முன்பு யாழில இணைச்சு இருந்தார். அருமையாக இருந்திச்சிது.

வல்வை அண்ணாவின் ஒரே ஒரு பெண் சகோதரி ஊரில சிறீ லங்கா இராணுவத்தின் கொலை தாண்டவத்துக்கு பலியாகி இருந்தார் என்பதை அறிய மிகவும் கவலையாக இருந்திச்சிது.

வல்வை அண்ணாவுக்கு மிகுந்த குரல்வளம் இருக்கிது. இதுக்க அவரைப்பற்றி கனக்கச்சொன்னால் பிறகு கோபிப்பார். இடைக்கிடை தொலைபேசிக்கால வல்வை அண்ணாவுடன் கதைக்கிறது. விரைவில அவரை நேரில சந்திப்பன். வல்வை அண்ணாவின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

அருவி:

யாழில நான் எழுதுறதுகள் யாருக்காவது பிடிக்காமல் இருந்தால், அல்லது நான் யாழில எழுதுறதுகளை வாசிச்சுப்போட்டு என்னை யாராவது திட்டித்தீர்க்க விரும்பினால், அல்லது யாராவது நான் எழுதினதுகளை வாசிச்சுபோட்டு கோபம்கொண்டு எனக்கு தர்மஅடி தரவிரும்பினால் அதை என்சார்பாக உங்களிடம் இருந்து வாங்கிகொள்ள ஒரு நல்ல உள்ளம் யாழில இருக்கிது எண்டால் அது அருவிதான்.

ஏன் எண்டால் நான் யாழில இலகுவாக தமிழில எழுதுறக்கு, இவ்வளவு வேகமாக இவ்வளவு விசயங்களை தமிழில எழுதுறதுக்கு அடிப்படையாக இருக்கின்ற Suratha Keyman பற்றி எனக்கு சொலித்தந்தது அருவிதான். ஆரம்பத்தில நான் ஒவ்வொரு எழுத்தாக யாழில தேடித் தேடி எடுத்து Copy & Paste பண்ணித்தான் யாழில கருத்து எழுதுறது. அதுக்கு பிறகு கீழ இருக்கிற பெட்டியில ஆங்கிலத்தில எழுதி அதன்மூலம் மேல இருக்கிற பெட்டியில தமிழில வாறமாதிரியாக யாழ் கருத்தாடல் தளத்தில இருக்கிற வசதியை பாவிச்சு தமிழில எழுதினன்.

ஆனால் கிடுகிடு எண்டு மிகவும் வேகமாக நான் தமிழில எழுத இந்த Suratha Keyman மூலம்தான் முடிந்தது. இதனால Suratha Keyman பற்றி நான் தெரிஞ்சு இருக்காட்டிக்கு நிச்சயம் இத்தனை பலநூறு கருத்தாடலகளை நான் இவ்வளவு வேகமாக யாழில செய்து இருக்கமுடியாது.

இந்தவகையில உங்களிட்ட தர்ம அடி வாங்குவதற்குரிய சகல தகமைகளையும் அருவி கொண்டு இருக்கிறார். “அடேய், ஏனடா இவனுக்கு தமிழில எழுதுறதுக்கு காட்டிக்குடுத்தாய்?” எண்டு அருவி மேல நீங்கள் கோவிக்கிறது எனக்கு விளங்கிது. நான் என்ன செய்ய? எல்லாம் உங்களிண்டயும், அருவியிண்டயும் கஸ்டகாலம்! தலைவிதி!

இவர்தான் அருவி எனப்படுகின்ற ஆள். எல்லாருமாய் சேர்ந்து போட்டுத்தாக்குங்கோ.

talkingbabyani.gif

அருவிபற்றி தனிப்பட எனக்கு அதிகம் ஒண்டும் தெரியாது. கனடாவில இருக்கிறார். என்னை ஒருமுறை தமிழ் இளையோர் அமைப்பில சேருங்கோ. அது செய்யுங்கோ. இது செயுங்கோ எண்டு கேட்டார். எண்ட வாழ்க்கை ஏற்கனவே நாலு பக்கத்தால இழுபட்டு, கோணங்கியாகி நாறிப்போய் நிக்கிது. ஏற்கனவே நான் வாழ்க்கையில எல்லா பேருந்துகளையும் தவறவிட்டு இப்ப கடைசிப்பேருந்துல அதுவும் FootBoard இல அந்தரத்தில தொங்கி போய்க்கொண்டு இருக்கிறன். இந்தக்கேவலத்தில என்னால அருவி கேட்டபடியாக உதவிகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. மன்னித்துக்கொள்ளவும்! நன்றி! வணக்கம்! எண்டு சொல்லிபோட்டு விட்டிட்டன்.

ஒரு சிலர் தவிர, எனது பல்கலைக்கழகத்தில இருக்கிற தமிழ் ஆக்கள் ஒருவருக்கும் நான் தமிழ் எண்டே தெரியாது. பல்கலைக்கழகத்தில இருக்கிற தமிழ் சங்கத்தில கூட நான் இல்லை. நான் கனடாவில பிறந்து இருந்தால், இல்லாட்டிக்கு சின்னவயதில கனடாவுக்கு வந்து இருந்தால், இல்லாட்டிக்கு சிறீ லங்காவில எனது வாழ்க்கை சின்னாபின்னம் ஆகாது இருந்து இருந்தால் இங்கு ஏதாவது அருவி கேட்டபடி உதவிகள் செய்து இருக்கமுடியும். என்னால் முடியவில்லை. தன்னை அறிந்துதான் தானம் செய்யமுடியும்.

அருவியைப்பற்றி சொல்லிறதாய் இருந்தால் தாயகபோராட்டம் சம்மந்தமாக அதிக அக்கறைகொண்டவர் எண்டு நினைக்கிறன். யாழில ஒரு தமிழ்வாத்தியார் எண்டு சொல்லலாம்.

எனக்கு செய்த உதவிகளிற்கு அருவி வாத்தியாருக்கு தனிப்பட்ட நன்றிகள் (அதுக்காக காசு கீசு ஏதும் தருவன் எண்டு கனக்க எதிர்பார்க்கக்கூடாது), ஹிஹி. மேலும் அருவி தான் விரும்பும்படியாக அவரது எண்ணங்கள் கைகூட வாழ்த்துகள்! பிரார்த்தனைகள்!

ஈழப்பிரியன்:

யாழ்மூலம் அறிமுகமாகி பின்னர் நேரில சந்திச்ச ஒரே ஒருவர் ஈழப்பிரியன் அண்ணா. வீட்டில ஈழப்பிரியன் அண்ணா சின்னப்பெடியங்கள் மாதிரி எந்தநேரமும் Busy ஆக ஓடித்திரிஞ்சுகொண்டு இருப்பார். ஒவ்வொரு நாளும் கருத்து எழுதாட்டிக்கும் இடைக்கிடை யாழுக்கையும் வந்து தலையைக் காட்டிப்போட்டு போவார்.

ஈழப்பிரியன் அண்ணா தாயக மக்கள், போராட்டம் மீது அதிக அக்கறை கொண்ட ஒருவர் எண்டு சொல்லலாம்.

நான் அண்மையில ஒரு சத்திரசிகிச்சை காரணமாக கொஞ்சக்காலம் யாழுக்கு வராமல் இருக்க வீட்டுக்கு தொலைபேசி எடுத்து என்னபிரச்சனை எண்டு அக்கறையுடன் நலம் விசாரித்தார். இப்ப ஆளை ஆர் எண்டு தெரியும். நான் ஒருகாலத்தில யாழுக்கு வராவிட்டாலும் ஈழப்பிரியன் அண்ணாவுடனான நட்பு எனது வாழ்க்கையில் தொடரும்.

ஈழப்பிரியன் அண்ணாவின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

வர்ணன்:

முன்பு வர்ணனுடன் பல கருத்தாடல்களில ஈடுபட்டு இருக்கிறன். வர்ணன் நல்லாக கவிதை எழுதக்கூடியவர். இப்ப யாழுக்கு வருவது இல்லை. ஏன் எண்டு தெரியாது.

வர்ணனுக்கு என்னில ஒரு சின்னக்கோபம் இருக்கும் எண்டு நினைக்கிறன். அது என்ன எண்டால் அவர் கனடா பற்றி ஏதோ ஒரு விசயத்தை கவிதைமாதிரி எழுதி யாழில முந்தி ஒருக்கால் இணைச்சு இருந்தார். நான் சும்மா பகிடியாக அட இப்பிடியும் கவிதை எழுதலாமோ எண்டு கிண்டல் செய்ய, எனக்கு பின்னால ஆய்வாளர், யாழுக்காக ஓடி ஓடி ஆராய்ச்சி செய்து தண்ட கோவணத்தை துலைத்த மருத்துவர். வடிவேல் அவரும் சேர்ந்து “இந்தாபார் நானும் கவிதை எழுதுறன்!” எண்டு கிண்டல் செய்து ஏதோ எழுத அத்தோட வர்ணனுக்கு கொஞ்சம் கோபம் வந்திட்டிது எண்டு நினைக்கிறன்.

யாழுக்கு நான் வரமுன்னம் வர்ணன் எழுதிய பல கவிதைகளை நான் கவிதைப்பூங்காட்டுக்கு சென்று வாசிச்சு இருக்கிறன். நல்ல கலகலப்பாய் கதைப்பவர். எங்கு இருக்கிறார், யார் எண்டு தெரியாது. வர்ணன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

இலக்கியன்:

இலக்கியன் கவிதைப்பூங்காடு பகுதியிலதான் அதிகம் மினக்கட்டுக்கொண்டு இருப்பார். இவர் எழுதிய பல கவிதைகளை வாசிச்சு மகிழ்ந்து இருக்கிறன். இலக்கியனுடன் பல கருத்தாடல்களில பங்குபற்றியும் இருக்கிறன். இப்ப ஒண்டும் நினைவில இல்லை. தான் இலக்கியனை யாழுக்கு கூட்டுக்கொண்டு வந்ததாய் அனிதா முன்பு சொல்லி இருந்தா. இலக்கியன் இப்ப யாழுக்கு வாறது சரியான குறைவு. நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

அரவிந்தன்:

யாழில அரவிந்தனிண்ட கைவண்ணம் இரண்டு இடங்களில இருக்கிது. ஒண்டு இனிய பொழுது பகுதியில அரவிந்தன் எழுதுகின்ற பயணக்கட்டுரைகள். மற்றது யாழ் ஆடுகளம் பகுதியில அரவிந்தன் வைக்கிற போட்டிகள். நான் அரவிந்தனிண்ட பயணக்கட்டுரையில கருத்துக்கள் இடுவது குறைவு எண்டாலும் அங்கு அரவிந்தன் இணைக்கிற சகல படங்களையும் ஒண்டு விடாமல் பார்க்கிறது. நல்லாய் இருக்கும். அவர் படத்தை சின்ன அளவில போடாமல் பெரிய அளவில போட்டு இருந்தால் இன்னும் நல்லாய் இருந்து இருக்கும்.

இப்ப பொழுதுபோக்கு பகுதியில ஒரு சின்னப்பிரச்சனை என்ன எண்டால் ஊர்ப்புதினம் பகுதி மாதிரி கடைசியாக வந்த பத்து தலைப்புக்கள் மாத்திரம்தான் யாழ் முகப்பில வெளிக்காட்டப்படும். பழைய கருத்தாடல்கள் - ஆக்கள் புதுசாக பதில் எழுதினால் கூட முகப்பில வெளிக்காட்டப்படாது. இதனால இப்ப அரவிந்தனிண்ட பயணக்கட்டுரை பகுதி யாழ் முகப்பில வருகிது இல்லை. இந்தக்குறையை போக்க அரவிந்தன் தனது கட்டுரையை கதை கதையாம் பகுதிக்கு நகர்த்திறது நல்லது எண்டு நினைக்கிறன். எல்லாரும் பார்க்கவசதி கிடைக்கும்.

அரவிந்தனிண்ட போட்டிகள் யாழில பிரபலமானது. அரவிந்தன் யாழில வைத்த ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டபோட்டியில கடைசியாக வந்தது நாந்தான்! அதுக்குப்பிறகு எனக்கு அரவிந்தன் வைத்த ஒலிம்பிக் போட்டியில பங்குபற்ற விருப்பம் இருக்க இல்லை. ஆனால்... ஒவ்வொருநாளும் போட்டிகளில யார் முன்னுக்கு நிக்கிறீனம் எண்டு பார்க்கிறது. யாழுக்கு வழமையாக வராத ஒருசிலர் கூட எப்பவாது இருந்திட்டு அபூர்வமாக அரவிந்தன் போட்டியில பங்குபற்றுவதற்காக யாழுக்கு வருவீனம்.

அரவிந்தன் கல்வி, தொழிலில் நன்கு புலமை பெற்றவர் எண்டு நினைக்கிறன். அரவிந்தனுடன் நான் பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். இவரை எனக்கு தனிப்பட தெரியாது. அரவிந்தன் தொடர்ந்து யாழில தனது கைவண்ணத்தை காட்ட, மேலும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிநடைபோட வாழ்த்துகள்!

லிசான்/:

யாழிண்ட கருத்தாடல் தளத்திண்ட தலையில இருக்கிற படத்தை அழகுடன் செய்து யாழுக்கு புதுப்பொழிவை ஏற்படுத்தியவர் லிசான். எனக்கு அப்பிள் தயாரிப்புக்கள் பற்றி ஏதாவது விசயம் வரும்போது லிசானிண்ட நினைவு வரும். ஏன் எண்டால் லிசான் அப்பிள் தயாரிப்புக்களை மட்டும் அதிகள் அளவில பாவிக்கிறவர்.

லிசானிண்ட மோனலிசா அவாட்டர் படம் பிரபலமானது. லிசான் முந்தி லீசா எண்டுற பெயரில கருத்தாடல் செய்து இருந்தார். பலர் அவரை பெண் எண்டு நினைச்சீனம். நானும் அவரை பெண் எண்டு நினைச்சன். கடைசியில தான் ஒரு ஆண் எண்டு அறிவிச்சு லீசா எண்டுற பெயரையும் லிசான் எண்டு மாற்றிக்கொண்டார். லிசான் கணணி, தொழில்நுட்பத்தில பல்வேறு விடயங்கள் அறிஞ்சவர், அத்தோட கல்வி, தொழிலில நன்கு புலமை பெற்றவர் எண்டு நினைக்கிறன்.

முந்தி அடிக்கடி யாழுக்கு லிசான் வருவார். பிறகு திடீரெண்டு தனது வரவை நிறுத்திக்கொண்டார். ஏன் எண்டு தெரிய இல்லை. லிசானுக்கு வாழ்த்துகள்!

இளைஞன்:

இளைஞன் பெயருக்கு ஏற்றமாதிரி உண்மையில ஆற்றல்கள் பல மிக்க துடிப்பான இளைஞன். இளைஞனை வலையில ஒரு கலைஞன் எண்டு சொல்லலாம். வலைக்கு வெளியால எனக்கு இளைஞன் பற்றி எனக்கு தெரியாது. நான் இளைஞனுடன் உரையாடி இருக்கிறன். ரெண்டுபேரும் சேர்ந்து ஏதாவது Business மாதிரி ஒண்டு வலைத்தளத்துக்கால செய்வமோ எண்டு ஒருக்கால் கேட்டன். அவர் தனக்கு ஆக்களுக்கு சம்பளம் இல்லாமல் சேவை செய்துகுடுக்கிற விளையாட்டுத்தான் அதிகம் பிடிக்கும் எண்டு சொல்லி இருந்தார். நான் பெரிய கும்பிடுபோட்டு நன்றி! வணக்கம்! எண்டு சொல்லிப்போட்டு விட்டிட்டன்.

இளைஞனிண்ட பெருந்தன்மை, சேவை செய்கின்ற நோக்கு பாராட்டப்படவேணும். ஆனால் எனக்கு எண்டால் இளைஞனை மாதிரி ஆக்களுக்கு ஓசியில வடை சுட்டுக்குடுக்க ஏலாது. நாங்கள் ஏதாவது செய்தால் எமக்கும் சில பலாபலன்கள் கிடைக்கவேணும். குறிப்பாக காசு வரவு இருக்கவேணும். எங்கடை ஆக்கள் எண்டால் எப்பவும் ஓசியிலதான் அலுவல் பார்க்கிறது. பச்சைத்தண்ணியில பலகாரம் சுடுகிறது. இரவு, பகலாக உழைக்கிறவனுக்கு ஏதாவது உபகாரம் செய்யவேணும் எண்டு நினைக்கிறது இல்ல உபத்திரவம் குடுக்கிறது தவிர. எங்கட ஆக்கள் குடுக்கிற வெறும் பட்டங்கள், பீதாம்பரங்கள், போர்வைகள், பொன்னாடைகளை வச்சு என்னத்த செய்யுறது? குளிருக்கு போர்த்திக்கொண்டு படுக்கவும் காணாது.

யாழில இப்ப நான் எழுதுறதுண்ட முக்கிய நோக்கம் எனது பொழுதுபோக்கு. எனது மகிழ்விற்கு அத்தோட மற்றவர்களையும் மகிழ்விக்க. ஆனால்.. இதையே ஒரு சேவையாக என்னால செய்ய ஏலாது. ஆனால் இளைஞன் கொஞ்சம் வித்தியாசமானவர். ஆக்களுக்கு இலவசமாக பல உதவிகள் இணையத்தில செய்து குடுப்பார். முக்கியமாக இளைஞனிண்ட கைவண்ணத்தில உருவாகிய வளரி இணையத்தொலைக்காட்சி இளைஞனிண்ட திறமைக்கு ஒரு சான்று.

இளைஞனிண்ட திறமைகள் ஓவியம், பேச்சு/அறிவிப்பு, கணணி + தொழில்நுட்ப அறிவு, தமிழ் அறிவு, கவிதை அது இது எண்டு ஏராளம். நான் யாழில இணைஞ்ச ஆரம்பத்தில எனக்கு இளைஞனை தெரியாது. இளைஞன் அப்ப யாழுக்கு வாறதும் இல்லை. பிறகு அனிதா மூலம் இளைஞன் எனக்கு அறிமுகம் ஆகினார். இளைஞன் விளக்கு எண்டுற பெயரில செய்த யூலை கலவரம் பற்றிய ஒரு சிறிய படைப்பில எனது பங்களிப்பும் இருந்திச்சிது.

நான் நிறைய தமிழ் சொல்லுகள் இளைஞனிடம் இருந்துதான் பிரதிபண்ணியது. ஊரில இருக்கேக்க எனக்கு நல்ல தமிழ் அறிவு இருந்திச்சிது. பிறகு எல்லாம் இஞ்சால வந்தாப்பிறகு மெல்ல மெல்ல மறைஞ்சு போச்சிது.

இளைஞன் நல்லாய் தமிழ் சஞ்சிகைகள், புத்தகங்கள் வாசிப்பார் எண்டு நினைக்கிறன். தமிழ் இலக்கியத்திலையும் நல்ல அறிவு இருக்கும் எண்டு நினைக்கிறன். யாழ்ப்பாணத்தில இருந்த காலத்தில நான் இளைஞனை சின்னனில கண்டு இருக்கக்கூடும். நான் அடிக்கடி யாழ்.இந்துவுக்கு துடுப்பாட்ட போட்டி பார்க்கபோறது.

இளைஞனின் சேவைகள் தொடர, மற்றும் அவரது இலட்சியங்கள், கனவுகள் கைகூட இதயபூர்வமான வாழ்த்துகள்! பிரார்த்தனைகள்!

ரகுநாதன்:

யாழில அண்மைக்காலத்தில இணைஞ்சு ஊர்ப்புதினம் பகுதியில வெளுத்துவாங்கிக்கொண்டு இருக்கிற ஆக்களில ரகுநாதனும் ஒருவர். தனிப்பட எனக்கு தெரியாது. பொறியியலாளர், அவுஸ்திரேலியாவில இருக்கிறன் எண்டு யாழில சொல்லி இருக்கிறார். வாழ்த்துகள்!

லீ:

நான் யாழ்.பரியோவான் கல்லூரி (சென்.ஜோன்ஸ் கல்லூரி) பழைய மாணவன். என்னைமாதிரியே லீயும் இதே பாடசாலை பழைய மாணவன். லீ முந்தி அடிக்கடி வருவார். பிறகு வராமல் திடீரெண்டு மறைஞ்சுவிட்டார். கல்வியில நன்கு புலமை பெற்றவர் எண்டு நினைக்கிறன். லீயோட நிறைய கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். நான் முன்பு ஆரம்பித்த கறுப்பு ஓட்டை (Black Hole) பற்றிய ஒரு திரியில லீ வீரிவான ஒரு தகவலை சொல்லி இருந்தார். லீ, வாழிய வாழியவே!

குகதாசன்:

குகதாசன் அண்ணாவுடன் முன்பு ஊர்ப்புதினம் பகுதியில ஏராளம் கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். இப்ப மறந்துபோச்சிது. யாழில கொஞ்சம் வித்தியாசமாக வரிகளை குறுக்கி எழுதிற ஆக்கள் நான் அறிஞ்சு ரெண்டு பேர். ஒருவர் அஜீவன் அண்ணா, மற்றவர் குகதாசன் அண்ணா. குகதாசன் அண்ணா கவிதை மாதிரி ஒரு தனி வரியில ஆக இரண்டு மூன்று சொற்களை மாத்திரம் போட்டு எழுதுவார். அவரது கருத்தில நிறைய கேள்விக்குறிகள், வியப்புக்குறிகள் எல்லாம் இருக்கும். குகதாசன் அண்ணாவை எனக்கு தனிப்பட தெரியாது. வாழ்த்துகள்!

சுப்பண்ணை:

யாழில அண்மையில இணைஞ்சு கலக்கி அடிச்சு வாறவர்களில சுப்பண்ணையும் ஒருவர். சுப்பண்ணை துவங்கிய தலைப்புக்களில பிரபலமானது முஸ்லீம்கள் சம்மந்தமான ஏதோ ஒரு விசயம். வாழ்த்துகள்!

புயல்:

புயல் முந்தி யாழில பல போட்டிகளில பங்குபற்றி இருக்கிறார். நான் வந்தாப்பிறகு அவரைக்காணவில்ல. அவர் ஏன் இப்போது வருவது இல்லை எண்டு தெரியாது. வாழ்த்துகள்!

வானம்பாடி:

யாழில அண்மைக்காலமாக பலரினதும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் ஒருவர். இவர் பல காலம் முன்பு யாழில இணைஞ்சு இருந்தாலும் இவருடன் நான் அண்மையிலதான் முதன்முதலாக சேர்ந்து கருத்தாடல் செய்து இருக்கிறன்.

சிறீ லங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிடுகின்ற செய்திகளை இவர் யாழில கொண்டுவந்து ஒட்டுகிறார் எண்டு எல்லாருக்கும் இவர் மேல கோவம். இவர் யார் எங்க இருக்கிறார் எண்டு எனக்கு தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

முனிவர்:

யாழில அண்மையில இணைஞ்சு கலக்கி அடிச்சு வருகிறார். அண்மையில கதைகளும் எழுதி இணைச்சு இருந்தார். எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்க இல்லை. இவருடன் அண்மையில பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். யாழில எல்லாப்பகுதிகளிலையும் கருத்துக்கள் பதிவார்.

தனிப்பட முனிவரை எனக்கு தெரியாது. எங்கிருந்தாலும் வாழ்த்துகள்!

சுவை:

என்னை முந்தி மூண்டுபேர் குருஜி எண்டு கூப்பிடுறது: யமுனா, வெண்ணிலா மற்றது சுவை. சில மனக்கசப்புக்கள் வந்தபிறகு யமுனா குரு எண்டு என்னை கூப்பிடுவதில்லை. வெண்ணிலாவுடன் நான் கருத்தாடல் செய்து கனகாலம். ஆனால்.. சுவை தொடர்ந்தும் குருஜி எண்டு என்னை கூப்பிடுவார்.

சுவை யாழில இருக்கிற சிறந்த ஒரு கவிஞர். நல்ல கடவுள் பக்தி உள்ளவர். ஒழுக்கம் நிறைந்த ஆசார சீலர் எண்டு நினைக்கிறன். சுவையிண்ட காலக்கண்ணாடியை பார்த்தவர்கள் இவரது கடவுள் பக்தி பற்றி அறிஞ்சு இருக்கலாம். சுவை செய்த காலக்கண்ணாடிகள் இரண்டும் – இரண்டுமே காணொளிகள் - யாழில பிரபலமானது.

சுவையுக்கு சமயம், தத்துவங்களில ஆழ்ந்த அறிவு இருக்கிது. சுவை சும்மா பகிடிக்கு என்னை குருஜி எண்டு கூப்பிட்டாலும், உண்மையில நாந்தான் அவரை குருவே எண்டு கூப்பிடவேணும்.

கலகலப்பாக கருத்துக்கள் எழுதுவதோடு மற்றவர்கள் மனம் நோகாதவகையிலும் கருத்து எழுதுபவர். யாழ் நேசக்கரம் திட்டத்துக்கு தீவிர ஆதரவு கொடுப்பவர்களில ஒருவர்.

வளமுடன் வாழ, மற்றும் சுவையது படைப்புக்கள், சேவைகள் யாழில தொடர வாழ்த்துகள்!

வலைஞன்:

யாழில மோகனை மாதிரி வலைஞனும் எனக்கு நல்லதொரு நண்பர். சிறிதுகாலம் முன்னம் வலைஞனுடன் எனக்கு சில கருத்துமுரண்பாடுகள். நான் யாழில இணைஞ்ச ஆரம்ப காலத்தில வலைஞன் யாழுக்கு வருவது குறைவு. பிறகு வலைஞனுடன் அதிக அளவில தொடர்பு ஏற்பட்டது யாழ் செய்திக்குழுமம் சம்மந்தமாக கருத்தாடல்கள் செய்தபோது.

யாழ் இணையத்திண்ட முன்னேற்றத்துக்கு, யாழிண்ட வளர்ச்சிக்கு - திரைமறைவில இருந்து சத்தமில்லாமல் பணியாற்றுகின்ற மிகவும் முக்கியமான ஒருவர் வலைஞன். யாழில இருக்கிற பலவிதமான விடயங்கள் வலைஞனின் கைவண்ணமே! வலைஞனுடன் கதைச்சும் இருக்கிறன் ஸ்கைப்புக்கால. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

குட்டித்தம்பி:

பெயர்தான் குட்டித்தம்பி. ஆனால்.. இவர் கல்வி, தொழிலில மிகவும் புலமை பெற்றவர் எண்டு நினைக்கிறன். தாயக போராட்டம் சம்மந்தமாகவும் அதிக அக்கறை கொண்டவர். நான் குட்டித்தம்பியுடன் ஏராளம் கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். குட்டித்தம்பி ஒரு காதல் மன்னன் என்பதோடு தனது காதலில வெற்றி பெற்றவர் எண்டும் யமுனா / வானவில்லின் அவருடனான பேட்டியில வாசிச்சு இருந்தன். அந்தப்பேட்டியில தன்னைப்பற்றி குட்டித்தம்பி நிறையத்தகவல்கள் சொல்லி இருந்தார். இப்ப மறந்துபோச்சிது.

தனிப்பட குட்டித்தம்பியை எனக்கு தெரியாது. எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

வளரும்..

Edited by முரளி

Share this post


Link to post
Share on other sites

மாப்பிள்ளை, கலைஞன், முரளி என்று யாழுக்கு அறிமுகமான முரளியின் இப்பகுதி மிகவும் நன்றாக இருக்கிறது. பலரைப்பற்றி பல தகவல்களை அறியக்கூடியதாக இருக்கிறது. 07ல் முரளியின் ஆக்கங்கள்( உ+ம் - சிறிலங்காச் சிறை அனுபவங்கள், தமிழர் புனர் வாழ்வுக்கழக நிதி சேகரிப்பு ) என்னை மிகவும் கவர்ந்தன. புதிய தலைப்பில் வித்தியாசமான படைப்புக்களைத் தந்து எல்லோரையும் கவர்ந்த முரளி 08ல், 07னைப் போல வித்தியாசமான படைப்புக்களைத் தருவதை எனோ குறைத்து விட்டார். மீண்டும் பழைய முரளியை எதிர்ப்பார்க்கிறேன். எனினும் இப்பகுதியில்(யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்) பழைய முரளியைக் காண்கிறேன்.

Edited by கந்தப்பு

Share this post


Link to post
Share on other sites

98, 97 ஆ?? :)

Share this post


Link to post
Share on other sites

அருவி:

இந்தவகையில உங்களிட்ட தர்ம அடி வாங்குவதற்குரிய சகல தகமைகளையும் அருவி கொண்டு இருக்கிறார். “அடேய், ஏனடா இவனுக்கு தமிழில எழுதுறதுக்கு காட்டிக்குடுத்தாய்?” எண்டு அருவி மேல நீங்கள் கோவிக்கிறது எனக்கு விளங்கிது. நான் என்ன செய்ய? எல்லாம் உங்களிண்டயும், அருவியிண்டயும் கஸ்டகாலம்! தலைவிதி!

இவர்தான் அருவி எனப்படுகின்ற ஆள். எல்லாருமாய் சேர்ந்து போட்டுத்தாக்குங்கோ.

talkingbabyani.gif

என்ர தலைவிதி!!!! :):lol::)

Share this post


Link to post
Share on other sites

வாசிக்க வாசிக்க இனிமையாக இருக்குது... மிக சரளமான தமிழ் நடையுடன் முரளி நகைச்சுவை இழையோட எழுதி வருவது மிக நன்றாக இருக்குது... . நன்றி முரளி

Share this post


Link to post
Share on other sites

98, 97 ஆ?? :)

வயது போய்விட்டதில்லே, தடுமாற்றம் தான், 2007, 2008த் தான் தவறுதலாக 97, 98 என்று குறிப்பிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

தமிழச்சி:

நெடுக்காலபோவான் பெண்ணாக பிறந்து இருந்தால்.. இல்லாட்டிக்கு நெடுக்காலபோவானுக்கு ஒரு தங்கச்சி இருந்தால் அவ எப்படி இருப்பா? நான் நினைக்கிறது அவ தமிழச்சி மாதிரி இருப்பா எண்டு. தமிழச்சியிண்ட கதைகள், கருத்துக்களை பார்க்க எனக்கு அப்படியான ஒரு உணர்வு ஏற்படும்.

வாழ்க்கையில முன்னேறி நல்ல நிலைக்கு வரவேணும், நல்லாய் படிக்கவேணும் எண்டு தமிழச்சியிடம் சரியான ஆர்வம், இலட்சியங்கள் இருக்கிது. ஏதோ ஒரு விடயம் சம்மந்தமாக யாழில தனிமடல் ஊடகாக தொடர்புகொள்ளேக்க தன்னைப்பற்றி கொஞ்சம் சொல்லி இருந்தா. நல்ல துடிப்பான, தாயக போராட்டம் சம்மந்தமாக அதிக அக்கறை, செயற்பாடுகள் கொண்ட ஒரு பெண் எண்டு தமிழச்சியை சொல்லலாம்.

எனக்குத்தெரிஞ்ச பலருடன் தமிழச்சிக்கு நல்ல தொடர்பு இருக்கிது. சிலவேளைகளில் தமிழச்சியை நான் ஏற்கனவே கனடாவில எங்கையாவது கண்டு இருக்கக்கூடும். ஆனாலும்... யாழுக்கு வெளியாக தனிப்பட தெரியாது. தமிழச்சியின் கனவுகள், இலட்சியங்கள் கைகூட வாழ்த்துகள், பிரார்த்தனைகள்!

என்னைப் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி முரளி! நெடுக்குத்தாத்தாவின் தங்கச்சி அளவிற்கு கணித்திருக்கிறீர்கள் என்று நினைக்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. எனக்குத் தோன்றும் எண்ணங்களை, கருத்துக்களை எழுத்திற்குக் கொண்டுவருவது எனக்குக் கொஞ்சம் சிரமமான விடயம். அதனால், என்னால் பல விடயங்களை இங்கு எழுத முடிவதில்லை. ஆனால், முற்போக்கான, புரட்சிகரமான எண்ணங்கள் இருப்பது உண்மைதான். அதன் விளைவாக இலட்சியங்களும் வளர்ந்து விட்டன. எல்லாமே கனடா வந்ததன்பின் ஏற்பட்ட மாற்றங்களே! அந்தவகையில் இலட்சியத்திற்கான அடித்தளத்தை இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன். கைகூடப் பலவருடங்கள் ஆகலாம். வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள்!!!

எனக்குத்தெரிஞ்ச பலருடன் தமிழச்சிக்கு நல்ல தொடர்பு இருக்கிது.

உண்மையாகவா????

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

கருத்துச்சொன்ன அருவி, கந்தப்பு, சோழியன் மாமா, நிழலி, தமிழச்சிக்கு மனமார்ந்த நன்றிகள்! தனிமடலில கருத்துச்சொன்ன தேவகி அக்காவுக்கும், நன்றிகள்! :lol:

நேற்றுத்தான் கனகாலத்துக்கு பிறகு யாழ் தனிமடலை திரும்பவும் திறந்தனான். அதை திறந்த கையோடையே எனக்கு ஒவ்வொரு விதமாய் நிறைய முறைப்பாடுகள் வரத்துவங்கீட்டிது. (தேவகி அக்காவை சொல்ல இல்லை) சரி அதுக்காலையும், இதுக்காலையுமா போட்டுத்தாக்குங்கோ. இடைக்கிடை அருவியையும் மறந்திடாதிங்கோ. அவருக்கும் தனிமடலுக்காக போட்டுத்தாக்கலாம். :)

அடுத்த இருபது யாழ் கள உறவுகள்:

வன்னிமைந்தன்:

வன்னிமைந்தன் மிகத்திறமையாக கவிதை எழுதக்கூடியவர். அவர் கவிதையில கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கும். நான் இப்ப பேச்சுத்தமிழில கதை எழுதுறதுமாதிரி அவர் பேச்சுத்தமிழில கவிதை எழுதுவார். நான் ஆரம்பத்திலயே வன்னிமைந்தனின் கவிதைகளை வாசிச்சு பாராட்டி இருக்கிறன். ஆனால்... பலர் வன்னிமைந்தனை திரும்பிப்பார்த்தது – பாராட்டு தெரிவித்தது வன்னிமைந்தன் கவிதைகளை தேனிசை செல்லப்பா பாடலாக பாடியபின்னர்தான்.

நான் நினைக்கிறன் கலகம் எண்டு இருக்கிற இணையத்தை நடத்துபவர் வன்னிமைந்தனாக இருக்கக்கூடும் எண்டு. வன்னிமைந்தன் யாழில பிரச்சனைப்பட்ட மிகப்பெரிய ஒரு விசயம் என்ன எண்டால் காமசூத்திரம் நூலை யாழில இணைச்சது. எல்லாரும் கண்டபடி திட்டி இருந்தார்கள். எனக்கு வந்த ஆச்சரியம் என்ன எண்டால் அப்ப வன்னிமைந்தனை அவ்வளவுக்கு திட்டியவர்கள் – சயந்தன் அண்மையில பெண்களிண்ட மார்பகம் பற்றி ஒரு தலைப்பை ஆரம்பித்தபோது ஏன் ஒண்டும் சொல்ல இல்லை எண்டு. சிலது இப்ப நிலமை முன்பைவிட வேறாக இருந்து இருக்கலாம். நான் சயந்தனை குறைகூறுவதாக ஒருவரும் நினைக்கக்கூடாது. அவர் சயந்தன் ஓர் சிறந்த கலைஞர். அவரது பல படைப்புக்களை நான் பார்த்து இருக்கிறன்.

என்னை மாப்பு எண்டு கூப்பிடுற ஆக்களில முக்கியமான ஒரு ஆள் வன்னிமைந்தன். சிலவேளைகளில ஒருத்தருமே வன்னிமைந்தனின் கவிதைகளில முந்தி பதில்கருத்து எழுதி இருக்கமாட்டீனம். ஆனால் நான் மட்டும் அதுபற்றி ஏதாவது விமர்சனம் எழுதுறது. இத ஏன் சொல்லிறன் எண்டால் நாளைக்கு யாழுக்கால வன்னிமைந்தன் மாதிரி இன்னும் பல கலைஞர்கள் உருவாகக்கூடும். நாங்கள் இப்ப ஒருத்தரை ஒதுக்கி வைச்சுபோட்டு பிறகு பாராட்டுறதில பிரயோசனம் இல்லை.

வன்னிமைந்தன் ஒருமுறை தான் சுகவீனமுற்று இருப்பதாகவும், தனக்கு தனிப்பட ஏராளம் பிரச்சனைகள் இருப்பதாகவும் கவலையுடன் ஒரு மடல் அனுப்பி இருந்தார் ஏன் நான் இப்போது யாழுக்கு வருவதில்லை எண்டு கேட்டதற்கு.

வன்னிமைந்தன் எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

மணிவாசகன்:

யாழில இருக்கிற மிகச்சிறந்த கவிஞர்களில மணிவாசகனும் ஒருவர் எண்டு நான் சொல்லுவன். எனக்கு மணிவாசகன் எழுதுற கவிதைகள் மிகவும் பிடிக்கும். யாழுக்க மணிவாசகன் செய்த பெரிய சாதனை என்ன எண்டால் யாழுக்கால (எண்டு பலர் சொல்லுறீனம்) ரசிகையை காதலிச்சு கைப்பிடித்தது. மணிவாசகன் – ரசிகை தம்பதியினர் வெற்றிகரமாக வாழ்வது எதிர்காலத்தில ஏனையவர்களும் இணையம் மூலம் இணைவதை ஊக்குவிக்கும் எண்டு நினைக்கிறன். மணிவாசகன் – ரசிகை யாழ் காதல் திருமணம் தெரிஞ்சவிசயம். எங்களை கலியாணவீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடுதரவேணும் எண்டு பயத்தில எத்தினபேர் யாழுக்கால காதலிச்சு எங்களுக்கு சொல்லாமல் இரகசியமாக கலியாணம் செய்திச்சீனமோ..! மோகனுக்குக்கூட இதற்கான பதில் தெரிஞ்சு இருக்காது.

மணிவாசகன் அடிக்கடி எனக்கு மடல் அனுப்புவார் எண்ட தொலைபேசி இலக்கத்தை தரச்சொல்லி தான் ஒரு விசயம் கதைக்கவேணும் எண்டு. நானும் சரி எண்டு அனுப்புறது. இப்ப நான் நினைக்கிறன் எல்லாமாய் மூண்டு தரம் அப்பிடி அவர் கேட்டு அனுப்பிப்போட்டன். ஆனால் இன்னும்தான் ஒருதரம் கூட என்னை மணிவாசகன் தொடர்புகொள்ளவில்ல. என்னோட கதைக்க கொஞ்சம் பயம் போல. இல்லாட்டிக்கு வெக்கப்படுறாரோ தெரியாது. ஹிஹி.

ஒருபேப்பரில (கனக்க யோசிக்கக்கூடாது வீரகேசரி, தினக்குரல் மாதிரி இது ஒரு பத்திரிகையிண்ட பெயர்) ஏதாவது ஆக்கங்கள் என்னை மாதத்தில இரண்டு தடவைகள் எழுதித்தர ஏலுமோ எண்டு முன்பு மடலில கேட்டார். எனக்கு எப்பவாவாது எழுதிக்குடுக்கிறது பிரச்சனை இல்லை. ஆனால்.. பள்ளிக்கூடத்தில சமர்ப்பிக்கிற ஒப்படைகள் – Assignment செய்யேக்க இருக்கிற நிலமை மாதிரி நாட்காட்டியை எந்தநேரமும் மனதில நினைச்சு பயந்து தலையில பன்னீர்குடம் மாதிரி வச்சு காவமுடியாது. இதால ஏலாது எண்டு சொல்லிபோட்டன்.

மணிவாசகன் பிடிவாதங்கள் ஒண்டும் பிடிக்காமல் ரசிகையிண்ட சொல் கேட்டு குழப்படிகள் செய்யாமல் மகிழ்வுடன் வாழ இதயபூர்வமான வாழ்த்துகள்!

வெற்றிவேல்:

வெற்றிவேல் உண்மையில வெற்றிவேல்தான். யாழில இருக்கிற விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞர்களில ஒருத்தர். பல்வேறு விடயங்களில மிகுந்த புலமை இருக்கிது. தான் ஏதோ ஏழு வயசில இருந்து இந்தியாவில படிச்சு புலமை பெற்றதாய் எங்கையோ சொல்லி இருந்தார். நான் எழுதுபவற்றை தான் விரும்பி வாசிப்பன் எண்டு முந்தி ஒருக்கால் சொல்லி இருந்தார்.

வெற்றிவேலிடம் சிறந்த ஆங்கிலப்புலமை இருக்கிது. சிலது உண்மையில அவரது ஆங்கிலப்புலமையை பார்க்க எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். வெற்றிவேல் யாழ் தவிர வேறு ஆங்கில இணைய தளங்களிலும் மிகச்சிறப்பான முறையில கருத்துக்கள் எழுதுறவர் எண்டு நினைக்கிறன்.

இந்தக்காலக்கண்ணாடி எண்டு யாழில முந்தி ஞாயிற்றுக்கிழமைகளில படம் ஒண்டு போகிறது. எத்தினபேருக்கு இந்த விசயம் தெரியுமோ தெரியாது. யாழ் உறவோசையுக்குபோய் பாருங்கோ காலக்கண்ணாடி எண்டு ஒரு தலைப்பு இருக்கும். முந்தி அது பிரபலம். ஆனால்.. பிறகு கனகாலமா அப்பிடியே படுத்திட்டிது. இதற்கு முக்கிய காரணம் என்ன எண்டால் ஒருவருக்கும் நேரம் இல்லையாம்.

யாழ் காலக்கண்ணாடி எப்படி செய்யப்பட்டிச்சிது எண்டால் ஒருவரின் அழைப்பிதழை ஏற்று இந்தமுறை நான் யாழ் காலக்கண்ணாடியை செய்தால் அடுத்தமுறை செய்பவருக்கு அழைப்பிதழ் அனுப்பி அவரது சம்மதத்தை பெறவேண்டியதும் எனது பொறுப்பு. இந்த சம்மதம் வாங்கிற வேலை ஒரு லேசுப்பட்ட வேலை இல்லை. காலக்கண்ணாடி செய்த ஆக்களுக்கு தெரியும் அது எவ்வளவு கஸ்டம் எண்டு. ஐயா, அம்மா, பிச்சை எண்டு வீடுவீடாய் போய் கேட்கிறதுமாதிரி யாழில இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் தனிமடல் அனுப்பி அவர்கள் கால்களில விழுந்து கெஞ்சவேணும்.

அப்ப என்ன எண்டால் நான் ஒருக்கால் காலக்கண்ணாடி செய்துபோட்டு இன்னொருவரை அடுத்த காலக்கண்ணாடியை செய்ய ஓம் எண்டு சொல்ல வைக்கிறதுக்கு சுமார் பதினைஞ்சு பேர் சொச்சம் தனிமடல் அனுப்பவேண்டி இருந்திச்சிது. அதில ஒருவராக வெற்றிவேலையும் தொடர்புகொண்டு இருந்தன். வெற்றிவேல் உண்மையில மிகவும் Busy ஆனவர். தனக்கு இருக்கும் நேரப்பற்றாக்குறை பற்றி சொல்லி இருந்தார். ஆனால் மிச்சம் 14பேரில ஒருத்தர் கூட செய்ய ஓம் எண்டு சொல்லவில்லை எண்டு நினைக்க நிறைய ஏமாற்றமாய் இருந்திச்சிது.

யாழ் காலக்கண்ணாடி ஆக நானும், சுவையும், யமுனாவும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் செய்து இருக்கிறம் எண்டு நினைக்கிறன். நான் தான் அதிக அளவில செய்தது. நான் எட்டு காலக்கண்ணாடிகள் செய்து இருக்கிறன். எங்க எல்லாரும் ஒருக்ககால் எனக்கு கைதட்டி விடுங்கோ..

ஒருவரினதும் ஒத்துழைப்பு கிடைக்காதபடியாலயும், மேலும் யாழ் உறவோசை கொஞ்சக்காலம் தற்காலிகமாக மூடப்பட்டதாலயும் காலக்கண்ணாடி உடைஞ்சுபோச்சிது. நிருவாகம் காலக்கண்ணாடியை யாழ் உறவோசையில இருந்து படைப்புக்களத்துக்கு நகர்த்தினால் நல்லாய் இருக்கும் எண்டு நினைக்கிறன்.

வெற்றிவேலை எனக்கு தனிப்பட தெரியாது. ஏதாவது எக்கச்சக்கமாக கோவிச்சுக்கொண்டு எங்கள் மீது வேலை பாய்ச்சாமல் வெற்றிவேலின் சேவைகள் வலையில தொடர வாழ்த்துகள்!

மின்னல்:

மின்னல் பெயருக்கு ஏற்றமாதிரி உண்மையில மின்னல் தான்! யாழில ஊர்ப்புதினம் பகுதியில மிகவும் புகழ்பெற்ற யாழ் வாசகர்களினால 10,000 20,000, 30,000 பக்கம் தடவைகள் (Views) எண்டு பார்க்கப்பட்ட கருத்தாடல்களை ஆரம்பிச்ச பெருமை மின்னலை சாரும். ஊரில ஆமிக்கு ஏதாவது எக்கச்சக்கமாக அடிவிழுந்தால் வெற்றிச்செய்திகளை யாழுக்கு கொண்டுவருகின்ற முதலாவது ஆள் மின்னலாகத்தான் இருக்கும்.

நான் ஊர்ப்புதினம் பகுதியில அண்மைக்காலமாக எழுதுற கருத்துக்களால மின்னலுக்கு என்னில கொஞ்சம் கோவம். யாழுக்கு உள்ள கோவிக்கிறது சரி பிரச்சனை இல்லை. ஆனால்... பிறகு கனடாவில கடையுக்கு நான் புட்டோட குழைச்சு சாப்பிடிறதுக்கு வாழைப்பழம் வாங்கப்போற இடத்தில இவர்தான் முரளி எண்டு என்னை இனம்கண்டு மின்னிபோடாதிங்கோ மின்னல் அண்ணை. உங்களிண்ட பெயரை நினைக்க கொஞ்சம் பயமாய் இருக்கிது.

யாழில இருக்கிற ஆக்களில எனக்கு தனிப்பட தெரியாத ஆக்களில மின்னலும் முக்கியமான ஒருத்தர். மின்னல் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

ஐ.வி.சசி:

ஐ.வி.சசி யோட நான் பலப்பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். கொஞ்சம் வித்தியாசமாக ஒண்டு ரெண்டு வசனங்களில கருத்து எழுதி சிலவேளைகளில யாழில சுனாமி ஒண்டை உருவாக்குவார்.

ஆமி எங்களை அடிக்க வந்தால் பெரியாரிண்ட தாடிக்கு பின்னால நாங்கள் எல்லாரும் பாதுகாப்பாக ஒளிஞ்சு கொள்ளலாம் எண்டு அருமையான ஒரு தத்துவம் சொன்ன அறிஞர் இவர் எண்டு நினைக்கிறன்.

சசியுக்கு வாழ்த்துகள்!

இணையவன்:

இணைவன் பற்றி நிறைய விசயங்கள் சொல்லலாம். மோகன், வலைஞன் மாதிரி இணையவனும் எனக்கு நல்லதொரு நண்பர். இணைவனுடன் எனக்கு பழக்கம் குறைவு. யாழில அப்பிள் கணணி பாவிக்கிற ஆக்களில இணையவனும் ஒருவர். எண்டபடியால இவரிண்ட மடியுக்க நிறைய காசும், மண்டையுக்க நிறைய அறிவும் இருக்கும் எண்டு நினைக்கிறன்.

ஏனெண்டால், அப்பிள் கணணி மற்றதுகளை விட விலையான பொருள்தானே. பொதுவாக அப்பிள் பாவிக்கிற ஆக்களுக்கு மற்ற கணணிகளை பாவிக்கிற ஆக்களை விட மண்டையுக்க கொஞ்சம் கூட சரக்கு இருக்கலாம் எண்டு நான் நினைக்கிறன். இது எண்ட அபிப்பிராயம்தான். மற்ற ஆக்கள் கோவிச்சுக்காதிங்கோ.

யாழ் நேசக்கரம் திட்டம் மூலம் தாயகத்தில அல்லபடும் மக்களுக்கு ஏதாவது உதவிசெய்யவேணும் எண்டு யாழ் நேசக்கரம் திட்டத்துக்கு தீவிரமாக ஆதரவு கொடுக்கிற ஆக்களில இணையவனும் ஒருவர்.

தனிப்பட இணையவனை தெரியாது. இணையவனுக்கு வாழ்த்துகள்!

ஆதிபன்:

இவரிண்ட Profile க்கு ரெண்டு நாளைக்கு முன்னம் போய் பார்த்தன் யாராவது தெரிஞ்ச ஆளோ எண்டு. பெயர் கேள்விப்பட்ட ஏற்கனவே பழகிய பெயராய் இருக்கிது. இவரோட முந்தி கருத்தாடல் செய்து இருக்கிறமாதிரி தெரியுது. ஆனால் அவாட்டர் படத்தில ஒரு நாயுண்ட படம் போட்டு இருக்கிது. அதான் குழப்பமாய் இருக்கிது.

மற்றது இடையுக்க ஒரு சின்னப்பகிடி என்ன எண்டால் குமாரசாமி அண்ணா நேற்று கருத்து எழுதின ஒரு இடத்தில சொல்லி இருந்தார் என்ன எண்டால் யாரோ வைரவர் கோயிலுக்கு நீங்கள் போக இல்லையோ எண்டு ஏதோ கேட்டதுக்கு தான் இப்ப இருக்கிற வீடே கிட்டத்தட்ட வைரவர் கோயில் மாதிரித்தானாம். எனக்கு அதை வாசிக்க சிரிப்பாய் இருந்திச்சிது. நாய்பற்றி கதைக்க அந்தநினைவும் வந்திட்டிது.

ஆதிபன் வளமுடன், நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

சின்னக்குட்டி:

வலைப்பூ எண்டு சொன்னால் உடனடியாக எனக்கு நினைவுக்கு வருவது: சின்னக்குட்டி, கானாபிரபா, குருவி, தூயா, சினேகிதி... எண்டு இவ்வளவு பெயருகள். சின்னக்குட்டி பற்றி சொல்லிறதுக்கு ஏராளம் விசயம் இருக்கிது. நான் ஏற்கனவே சொல்லிப்போட்டன் அடுத்ததாய் யாழில யாராவது கலைஞரை நான் அறிமுகம் செய்வதாய் இருந்தால் அது புத்தனாக இருக்கும் எண்டு. அது கைகூடினால் அதற்கு அடுத்ததாக நான் அறிமுகம் செய்து வைக்கும் கலைஞர் சின்னக்குட்டியாகத்தான் இருக்கும். நிறைய ஆசைகள் அது செய்யவேணும் இது செய்யவேணும் எண்டு. எல்லாம் செய்ய நேரம், சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது.

சின்னக்குட்டி யாழில இணைச்ச ஆக்கங்களில நான் அறிய மிகவும் பிரபலமானது அத்டோட எனக்கு மிகவும் பிடிச்சது என்ன எண்டால் தசாவதாரம் படம் பற்றி ஒரு கதை எழுதிபோட்டு இருந்தார். அதை வாசிச்சுக்கொண்டுபோகேக்க நான் நினைச்சன் உண்மையான படக்கதையைத்தான் சொல்லிக்கொண்டு போறார் எண்டு. ஓரளவு அரை, முக்கால் பாகம் வாசிச்சபிறகுதான் விளங்கிச்சிது இது சின்னக்குட்டியிண்ட ஒரு குட்டிக்கற்பனை எண்டு. உண்மையில அபாரமான ஒரு கற்பனை.

சின்னக்குட்டியின் ஆக்கங்கள் யாழில தொடர, மற்றும் சின்னக்குட்டி வளமுடன் வாழ வாழ்த்துகள்!

சுட்டி:

சுட்டியையும் யாழில இருக்கிற அறிவாளிகள் பட்டியலில போடலாம் எண்டு நினைக்கிறன். அத்தோட சுட்டி படிப்பிலையும் வலு கவனம் – படு சுட்டியாய் இருக்கவேணும். யாழ் இணையத்திண்ட சிறுவர் பகுதியிண்ட நிருவாகி சுட்டி அவர்கள்தான்.

சுட்டிக்கு நான் இருந்திட்டு ஏதாவது அலுவலாக முந்தி தனிமடல் அனுப்புறது. தனிமடலை கண்டுபோட்டு யாழுக்கு ஒருக்கால் வந்து முகம்காட்டிப்போட்டு போவார். நீங்களும் பொழுதுபோகாத நேரங்களில சுட்டியை யாழுக்கு கூப்பிட விரும்பினால் அவருக்கு ஒரு தனிமடல் அனுப்பி வைக்கலாம்.

சுட்டியை எனக்கு தனிப்பட தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

தமிழ்லினக்ஸ்:

இவரும் யாழ்.பரியோவான் கல்லூரி மாணவர் எண்டு நினைக்கிறன். முந்தி அடிக்கடி வந்து ஊர்ப்புதினம் பகுதியில ரகுநாதனோட சேர்ந்து கருத்தாடல் செய்வார். பிறகு தனக்கு வேலைப்பளு (‘ளு’ எழுத்துப்பிழையோ தெரியாது) யாழுக்கு வரநேரமில்லை எண்டு சொன்னமாதிரி இருக்கிது.

தனிப்பட இவரை எனக்கு தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

புஸ்பாவிஜி:

யாழில அண்மையில இணைஞ்சு கலக்கி அடிச்சு வருகிறார். இவர் தன்னைப்பற்றி யாழில சொன்னதுகளை பார்த்தால் யாழ் பல்கலைக்கழக பழைய மாணவனாகவும், குருநகரை பிறப்பிடமாக கொண்டவர் போலவும் இருக்கிது.

ஆரம்பத்தில கொஞ்சம் பிரச்சனைப்பட்டவர் என்ன எண்டால் செய்தி மூலங்களை போடுறது இல்லை எண்டு. யாழில சகல பகுதிகளுக்கும்போய் கருத்துக்கள் பதிவார். நல்லாய் எல்லாரோடையும் கலகலப்பாக கதைப்பார். பகிடிகளையும் விடுவார். எண்டமண்டையில தட்டி மேளம் அடிச்சு பழகலாமோ எண்டு அண்மையில ஒருக்கால் கேட்டார்.

புஸ்பாவிஜிக்கு வாழ்த்துகள்!

ஐசூர்யா + தராக்கி:

நான் இந்த இருபெயர்களையும் ஒன்றாக போட காரணம் என்ன எண்டால் எனக்கு இருவரும் ஒரு ஆள் போல தெரியுறீனம் (ஒரு ஆள் தானே என!). சிலருக்கு என்னில கோவம் என்ன எண்டால் நான் இவரை தனிப்பட தாக்கி நிறைய கருத்துக்கள் யாழில எழுதினது.

எனக்கு இவரில தனிப்பட ஒரு கோவமும் இல்லை. நான் எதிர்பார்த்த ஒருவிசயம் என்ன எண்டால் செய்திமூலத்தை போடவேணும் எண்டுற ஒண்டே ஒண்டுதான்.

இப்ப பாருங்கோ சீ.என்.என் இருக்கிது, பீ.பீ.சி இருக்கிது அவர்கள் செய்திகளை போடேக்க கூட தமது சொந்த செய்தியாக இல்லை எண்டால் மூலத்தை சொல்வார்கள். ஆனால்... இவர் பீ.பீ.சீ, சீ.என்.என் செய்தி சேவைகளையும் விட தன்னை பெரிய செய்தி சேவையாக நினைச்சுக்கொண்டு யாழில செய்திகளை ஒட்டினதுதான் எனக்கு பிடிக்க இல்லை.

இவர் ஒரு பல்கலைக்கழக மாணவன் எண்டு சொல்லி இருந்தார். ஒரு பல்கலைக்கழக மாணவன் எண்டால் கொஞ்சமாவது ஊடக கட்டுப்பாடுகள், ஊடக நன்னடத்தைகள் பற்றி தெரிந்து இருக்க, பின்பற்ற வேண்டாமா?

இவர் சரியான முறையில கண்ணியத்துடன் நடந்து இருந்தால் நானே இவரை ஊக்குவிச்சு கருத்துக்கள் எழுதி இருப்பன். ஆனால்.. இவர் இப்படி செய்தி மூலங்களை குறிப்பிடாமல் ஏதோ மில்லியன் டாலர் செலவழிச்சு தானாக சுயமாக நடத்துகின்ற செய்தி நிறுவனங்களிண்ட தகவல்கள் போல யாழில செய்திகள் இணைக்கிறதால நான் இவர் பதிகின்ற செய்திகளுக்கு பதில் கருத்து எழுதுவதை மிகவும் குறைத்துவிட்டேன்.

ஆனால்.. இவர் மிகவும் திறமையான ஒரு இளைஞர் என்பதில எதுவித சந்தேகமும் இல்லை. ஒலிம்பிக் போட்டியில ஓடி தங்கப்பதக்கம் பெறுகிறது எண்டால் உடல்வீரியம் மாத்திரம், திறமை மாத்திரம் காணாது. ஓட்டப்போட்டிகளில இருக்கிற சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டும். இந்தவகையில இவருக்கு இங்கு தங்கப்பதக்கம் கிடைக்காவிட்டாலும் தனது ஊடகத்தை வலையில நிலைநிறுத்திக்கொள்ள ஊடக நன்நடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

தராக்கி அவர்கள் இணைச்ச செய்திகளில என்னை மிகவும் கவர்ந்தது – எங்களின் வலி எண்டு – இந்தியாவில இருக்கிற தாயக அகதிகள் பற்றிய பேட்டி. இதை யாழில இணைச்சதற்காக இவருக்கு பாராட்டு கூறலாம்.

ஐசூர்யா / தராக்கி அவர்கள் விதிமுறை அறிந்து விளையாட, மேலும் நல்லதொரு தமிழ் ஊடகவியலாளராக வளர வாழ்த்துகள்! பிரார்த்தனைகள்!

டங்குவார்:

டங்குவார் பற்றி நிறைய விசயங்கள் சொல்லலாம். கவிதை, பாடல், இசையமைப்பு, பொறியியல், தொழில்நுட்பம் எண்டு நிறைய விளையாட்டுக்களில நிபுணத்துவம் பெற்றவர். இவரது பதிவுகளை பார்த்தபோது வாழ்க்கையில மிகவும் அடிபட்டு கஸ்டப்பட்டு முன்னேறியவர் எண்டு தெரியுது.

யாழில நகைச்சுவையுடன் கருத்து எழுதுகின்ற ஆக்களில முக்கியமான ஒருத்தர். சிலது நகைச்சுவை கொஞ்சம் பச்சையாகவும் வரும். டங்குவாரிண்ட யாழ் அரிச்சுவடி அறிமுகம் மிகவும் நகைச்சுவையானது. பிறகு நேரம் இருக்கேக்க போய் வாசிச்சு பாருங்கோ. நான் முந்தி அதை வாசிச்சு இருக்கிறன்.

எங்க கனடாவுக்கதானே இருக்கிறார். ஒரு நாளைக்கு டங்குவாரை சந்திப்பேன் எண்டு நினைக்கிறன். டங்குவார் நிறைவுடன் வாழ வாழ்த்துகள்!

சிறி:

சிறியை யாழில தெரியும். கருத்தாடல்கள் செய்து இருக்கிறன். இப்ப நினைவில ஒண்டும் இல்லை. வாழ்த்துகள்!

கெளரிபாலன்:

யாழில கெளரிபாலன் கவிதைப்பூங்காடு பகுதியுக்கதான் அதிகம் மினக்கட்டுக்கொண்டு இருப்பார். நிறையக் கருத்தாடல்களில இவருடன் பங்குபற்றி இருக்கிறன். இப்ப யாழுக்கு வாறது குறைவு. ஏன் எண்டு தெயாது. கெளரிபாலன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

ஆறுமுகநாவலர்:

யாழில இருக்கிற நல் ஒழுக்க சீலர்களில முதன்மையானவர் ஆறுமுகநாவலர். மிகச்சிறப்பான முறையில இந்து மதம் பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் யாழில ஆக்கங்களை இணைச்சு வந்தார். இருந்திட்டு எப்பையாவதுதான் வருவார். இவரது பல ஆக்கங்களை நான் வாசிச்சு இருக்கிறன். பதில் கருத்தும் எழுதி இருக்கிறன். முந்தி தாயகத்தில உயிர்வாழ்ந்த பழைய ஆறுமுகநாவலர் மாதிரி யாழில உண்மையில ஒரு இலட்சிய புருசர் எண்டு சொல்லலாம். யார், எங்கை இருக்கிறார் எண்டு ஒண்டும் தெரியாது. வலைப்பூவும் வச்சு இருக்கிறார். ஆறுமுகநாவலருக்கு வாழ்த்துகள்!

நேசன்:

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எண்டால் எனக்கு உடன நினைவில வருவது நேசன்தான். ஏன் எண்டால் நேசன் அடிக்கடி தாயக மக்களுக்கு உதவுதல், த.பு.க இவை சம்மந்தமாக இஞ்ச செய்திகள், தகவல்களை இணைப்பார். நேசன் பிரித்தானியாவில இருக்கிறார் எண்டு நினைக்கிறன். வாழ்த்துகள்!

சோழன்:

இவருடன் நான் பல கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். இப்ப ஒண்டும் நினைவில இல்லை. சோழன் எங்கிருந்தாலும் வாழ்த்துகள்!

Chozan எண்டும் ஒருவர் யாழில அண்மையில சேர்ந்து இருக்கிறார். இவர் பற்றி நான் பின்னர் இதில சொல்லிறன். அவர் தமிழ் சோழன், இவர் ஆங்கில Chozan.

சுபித்திரன்:

சுபித்திரனுடன் பல கருத்தாடல்களில ஈடுபட்டு இருக்கிறன். ஜேர்மனியில இருக்கிறார் எண்டு நினைக்கிறன். யாழுக்கு எப்பையாவது இருந்திட்டுதான் வருவார். கடைசியா சோமாலியா கப்பல் கடத்தல் கும்பல் சம்மந்தமாக அஜீவன் அண்ணாவிண்ட தளத்தில இருந்து ஒரு செய்தியை எடுத்து யாழில போட்டு இருந்தார்.

சுபித்திரனுக்கு ‘கனடாக்கிழவனின் கொஞ்சநேரம்’ எண்டு முந்தி நான் எழுதின ஆக்கத்தை வாசிச்ச உடன சரியான கோவம் வந்திட்டிது. கோவத்தில என்னை மறைகழண்டவர் எண்டு ஏதோ எழுதி விமர்சித்து இருந்தார்.

சுபித்திரன் பற்றி தனிப்பட தெரியாது. எங்கிருந்தாலும் வளமுடன் வாழ வாழ்த்துகள்!

வடிவேல் 007:

வடிவேல்007இண்ட பேட்டியை நீங்கள் யமுனா / வானவில்லிண்ட டைகர் பமிலி பேட்டி பகுதியில வாசிச்சு இருக்கக்கூடும். பல சுவாரசியமான ஏராளம் தகவல்களை அதில சொல்லி இருந்தார். வடிவேல்007 இப்ப ஒரு வருசமா யாழுக்கு வாறது இல்லை. ஆனால் தனக்கு அஞ்சு, ஆறு ஐடி இருக்கிது எண்டும் அப்பப்ப வேற வேற பெயர்களில தான் வருவதாகவும் சொல்லி இருந்தார். எண்டபடியால இப்பவும் அவர் வேற ஏதாவது பெயரோட இதுக்க உலாவிக்கொண்டு இருக்கக்கூடும்.

வடிவேலிண்ட ஆக்கங்களில என்னை மிகவும் கவர்ந்தது அவர் தன்வாழ்வில பெற்ற உண்மையான காதல் அனுபவம் சம்மந்தமாக கவலையுடன் எழுதிய ஒரு கவிதை. அதை வாசிக்க நல்லாய் இருந்திச்சிது (எழுதுறவனுக்கு துக்கம், வாசிக்கிறவனுக்கு நல்ல அனுபவம்).

ஊர்ப்புதினம் பகுதியில முந்தி ஒருக்கால் வந்த செய்தியில புதிய சிறீ லங்கா அமைச்சரவையில தேர்ந்து எடுக்கப்பட்ட ஆக்களில வடிவேல் எண்டு ஒருத்தரிண்ட பெயரும் இருந்திச்சிது பிரதி அமைச்சராக ஏதோ. நான் அது எங்கட யாழ் கள வடிவேலோ எண்டு சும்மா பகிடியாய் கேட்ட... அடப்பாவிகளா எனக்கு வேட்டு வச்சுப்போடாதிங்கோ எண்டு வடிவேல் 007 பதறிஅடிச்சு வந்து ஏதோ பகிடியாய் எழுதி இருந்த கருத்து நினைவில இருக்கிது.

யாழில இன்னொரு வடிவேலும் இருக்கிறார். இவர் தன்னை அவரிண்ட தம்பி எண்டு சொல்லுவார். இவரிண்ட அண்ணாவைப்பற்றி பிறகு சொல்லிறன்.

வடிவேல் சுவிசில இருக்கிறார் எண்டு சொல்லி இருந்தார். தனிப்பட பழக்கம் இல்லை. வடிவேல் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

வளரும்..

Edited by முரளி

Share this post


Link to post
Share on other sites

உங்களின் இந்த தொகுப்பு மிகவும் கவரக்கூடியதாகவுள்ளது. இந்தப்பகுதியை அரட்டைப்பகுதியாக மாற்றக்கூடாது என்பதிற்காக அதிகம் எழுதவில்லை.

வாழ்த்துக்கள்!

Share this post


Link to post
Share on other sites

கலைஞன்; அவர்களின் இந்தப் பதிவு மிகவும் கவரக் கூடியதாக உள்ளது.

எனக்கு கலைஞன் அவர்களின் எழுத்து நடை பிடிக்கும்.

மிகவும் கவலையான விடயங்களைக் கூட நகைச்சுவை கலந்து தரும் பாங்கை மிகவும் ரசித்திருக்கிறேன். உதாரணமாக கனடாவில் கடை விரித்தேன் என்ற தலைப்பில புலம் பெயர் இளைஞன் ஒருவன் சந்தித்த அனுபவங்களை மிக அழகாக வடித்திருந்தார். அது போல சிறையில் பட்ட அனுபவங்கள் என்ற ஆக்கமும் சிங்களச் சிறையில் எம் இளைஞர்கள் ஃ யுவதிகள் படும் அவலங்களை சுட்டியிருந்தன.

புதுமையான விடயங்களுடன் வருவதிலும் வல்லவர். அந்த வகையில் 'மாப்பிள்ளையாக' கலக்கியிருந்தார்.

கலைஞன் தொடர்பாக விமர்சனமாக வைக்கக் கூடிய ஒரு விடயம் என்றால் சில வேளைகளில் சில பதிவுகளுக்கு வேண்டுமென்றே விதண்டாவாதமாக கருத்துக்களை வைப்பது போன்று சில பதிவுகளையும் பதிவார்.

அதனைத் தவிர்த்துப் பார்த்தால் வித்தியாசமாகச் சிந்திக்கும் வித்தியாசமான எழுத்துப் பாணியைக் கொண்ட அற்புதமான 'கலைஞன்'

Edited by Manivasahan

Share this post


Link to post
Share on other sites

பழைய மாப்பு புதிய முரளி. உங்களினுடைய என்மீதான பார்வைக்கும் விமரிசனங்களிற்கும். நன்றிகள் எனக்கு உங்கள் மீது எந்தக்கோபமும் இல்லை. யாழில் உங்களது திறைமைகளை பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் சில நேரங்களில் உங்கள் வாதங்களை விதண்டா வாதங்களாக்கியபொழுது தான் நானும் அப்படி எழுதவேண்டி வந்து விட்டது மன்னிக்கவும்.விவாதங்களைத் தவிர்த்து தொடர்ந்து உங்கள் படைப்புக்களை மட்டும் வைத்தால் உங்கள் திறைமைகள் இன்னமும் வெளிப்படும் என்பது என்னுடைய கருத்து. நன்றி

Share this post


Link to post
Share on other sites

பழைய மாப்புவா முரளி மிக்க சந்தோசம் :lol: ...என்னை பற்றியும் கொஞ்சம் எடுத்து விட்டதுக்கு மிக்க நன்றிகள் :)

Share this post


Link to post
Share on other sites

அழகான பதிவுகள்...வாழ்த்துக்கள் மாப்ஸ்...

மற்றவர்களை பற்றியும் நிறைய விடயங்கள் அறிய கூடியதாக இருந்தது..தொடரட்டும் உங்கள் படைப்புகள்...

Share this post


Link to post
Share on other sites

முரளி,

ஒவ்வொரு பதிவிலையும் கடைசியில் இப்ப 'உங்கள் கருத்துக்களை வைக்கவேண்டாம் என்று சொல்லி இருந்தீங்கள், இன்றைய பதிவில் அதைக்காணவில்லை.

அதனால்;

என் மீதான உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. ஒவ்வொருவரைப்பற்றியும் மிகத் தெளிவான உங்கள் பார்வை வியக்க வைக்கிறது ஏனெனில் நீங்கள் சொன்ன குறிப்பிட்ட சிலரில் எனது அபிப்பிராயங்களும் ஒன்றாகவே இருந்தமைதான் காரணம்.

'போலித்தனமில்லாத உங்கள் எழுத்தும், மற்றவர்கள் பாராட்ட வேண்டுமே என்பதற்காக அன்றி எண்ணக்கோர்வைகளைப்பகிர்ந்து கொள்ளும்விதமும் தான் உங்கள் படைப்புகளை நான் விரும்பிப் படிக்க காரணமாயிற்று.

யாழ் இணையத்தில் பார்வையாளராக இருந்த நான் உறுப்பினராக உங்கள் உறவுகளில் ஒன்றாக இணைய முக்கிய காரணமே, 'நெடுக்ஸ் அண்ணையின் கருத்துக்களாலும், உங்களுடைய ஆக்கங்களாலும் தான். நன்றி முரளி

Share this post


Link to post
Share on other sites

நேற்றையோட பள்ளிக்கூடத்தில ஒரு குழந்தையிண்ட பிரசவம் மாதிரி எனது ஒருகட்ட படிப்பு உத்தியோகபூர்வமா முடிஞ்சிட்டிது. இப்ப கொஞ்ச நாளா யாழுக்க மினக்கட நேரம் கிடைச்சு இருக்கிது. இருந்தாலும்.. எப்ப நான் யாழில இருந்து காணாமல் போவன் என்று எனக்கே தெரியாது. அதனால.. ஒரு முன்னேற்பாடா.. இன்னும் சில நூறுவருசங்களால எங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்போகும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவலாம் எண்டுற நப்பாசையில இதுவரை காலமும் நான் யாழில பழகின ஆக்கள்பற்றி ஒரு சின்னப்பதிவு ஒண்டை நான் காணாமல் துலைஞ்சு போவதற்கு முன்னம் வச்சுப்போட்டு போகலாம் எண்டு நினைக்கிறன்.

முரளி ,

முதலில் என்னைப்பற்றிய கணிப்புக்கு நன்றி . :D

சாத்திரம் பார்ப்பவர்களில் பலவகை உண்டு ,

அதில் சிலர் ஆளையே பார்க்காமல் பெருவிரல் ரேகையில் பார்ப்பார்கள் ,

வேறு சிலர் பிறந்த திகதியை வைத்து காண்டம் வாசித்து பார்ப்பார்கள் .

ஆனால் நீங்கள் , ஒருவர் எழுதிய எழுத்தை வைத்து சாத்திரம் பார்த்து உள்ளீர்கள் .

இங்கு கருத்து எழுதியவர்களை பார்க்கும் போது , எல்லோருக்கும் சரியாக கூறியுள்ளீர்கள் போல் இருக்கின்றது .

ஆகவே , அடுத்த நூறு வருடத்தில் எம்மை பற்றி யாராவது ஆராய்ச்சி செய்ய இந்த தகவல்களும் பெரிதும் உதவும் . :D

Share this post


Link to post
Share on other sites

சோழியன்:

சோழியன் மாமா பற்றி எனக்கு முதன்முதலாக அறியவந்தது அனிதா மூலம். நல்லாய் கதை எழுதுவார் எண்டு சொல்லி இருந்தா. தாயக பறவைகள் இதலில சோழியன் மாமாவிண்ட தொடர்கதை வாறது எண்டு நினைக்கிறன். நான் யாழில ஆக ஓரிருவரைத்தான் மாமா எண்டு கூப்பிடுறது. ஒருவர் புத்தன். புத்தன் யமுனாவிண்ட (ஜம்முபேபி) உண்மையான மாமா எண்டுறபடியால அவர் மாமா மாம்ஸ் எண்டு கூப்பிட நானும் அவரோட சேர்ந்து புத்தன் மாமா, பிறகு புத்து மாமா எண்டு கூப்பிட வெளிக்கிட்டது. பிறகு நான் மாமா எண்டுகூப்பிடுறது அவருக்கு சங்கடமாக இருக்கும் எண்டு நினைச்சுபோட்டு புத்தன் எண்டு பெயர் சொல்லிக்கூப்பிடுறது.

மற்றவர் அம்பளம் அங்கிள் எண்டு அவர்.. கனகாலத்துக்கு பிறகு யாழுக்கு வந்து இருந்தவர். இப்ப திரும்ப காணாமல் போயிட்டார். அவரையும் மாமா எண்டு கூப்பிடுறது. சோழியன் மாமா ஜேர்மனில எங்கையோ அம்மன் கோயிலில தேர்திருவிழாவுக்கு போனதுபற்றியும், அதில தண்டபடமும் போட்டு இருந்தார். அங்க இருந்துதான் எனது உறவு யாழில சோழியன் மாமாவுடன் ஆரம்பித்தது.

சிலது கொஞ்சம் பயமாய் இருக்கும் இவர் உண்மையில கொஞ்சம் வயசானவரோ இல்லாட்டிக்கு சின்னப்பெடியனாய் இருக்குமோ எண்டு. ஏன் எண்டால் ஒரு சின்னப்பெடியனை யாராவது மாமா எண்டு கூப்பிட்டால் ஒரு deliberate Insult ஆகத்தானே இருக்கும்? ஆனால்... பிறகு இல்லை இவர் பெரிய ஆள்தான் எண்டு நல்லாய் மனதுக்க உறுதியாய் தெரிஞ்சபிறகு சோழியன் மாமா எண்டுகூப்பிட துவங்கியாச்சிது. சோழியன் மாமாவிண்ட கனதியை – ஆற்றலை – திறமையை அவரிண்ட தமிழமுதம் வலைத்தளத்துக்கு போனபிறகுதான் அறிஞ்சுகொண்டன். அங்க ஒருக்கால் போய்வந்தபிறகு எனக்கு சோழியன் மாமா மீது இருந்த மதிப்பு இன்னமும் அதிகரிச்சுவிட்டிது. தமிழமுதம் இணையத்தை ஒரு.. என்ன எண்டு சொல்லிறது எண்டு தெரிய இல்லை... வலைத்தளத்தில தமிழருக்கு கிடைச்ச ஒரு விலைமதிப்பற்ற சொத்து எண்டு சொல்லலாம். சோழியன் மாமாவிண்ட Profileக்கு போனால் அதில தமிழமுதம் வலைத்தளத்துக்கு போவதற்குரிய முகவரி இருக்கிது.

நான் யாழில கனடாக்கிழவன் எண்டு ரெண்டுதரம் ஒரு ஆக்கம் எழுதி ஊர்ப்புதினத்தில இணைச்சது. நான் அதை எழுதினதில பலருக்கு கோபம். ஆனால் சோழியன் மாமா துணிவுடன் அதை பாராட்டி இருந்ததோடு அதை தண்ட வலைத்தளத்தில போடலாமோ எண்டும் கேட்டு இருந்தார். யாழில சோழியன் மாமாவை ஒரு நீதியிண்ட தராசு எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன். எனக்கு ஆதரவு அளிச்சதுக்காக அப்பிடி நான் சொல்ல இல்லை. நான் கவனிச்சதில சோழியன் மாமா தாயகபோராட்டம் சம்மந்தமாககூட ஆதரவு சொல்லேக்க கண்டதுக்கெல்லாம் தலை ஆட்டமாட்டார். நடுவுநிலமையுடன் கருத்தாடல் செய்பவர். அவரிண்ட கையெழுத்தில இருக்கிற “பழையன அறிந்து புதியன புகுவோம்!” எண்டு இருக்கிறதில இருந்து நீங்கள் சோழியன் மாமாவிண்ட நிலைப்பாட்டை அறிஞ்சுகொள்ளலாம்.

எனக்கு அதிகம் சோழியன் மாமாமீது பற்று வந்ததற்கான காரணம் துணிவாக, மற்றது போலியாக வெட்கப்படாமல் தண்ட உணர்வுகளை சொல்லக்கூடியவர். நான் போனவருசம் மாவீரர்கள் நினைவாக யாழில பல விடுதலைகானங்களை பாடி ஒலிப்பதிவுசெய்து இணைச்சு இருந்தன். சோழியன் மாமாவும் தனது குரலில ஒரு பாடலை பாடி இணைச்சு இருந்தார்.

எனக்கு இன்னமும் தனிப்பட விரிவாக அவர்பற்றி தெரியாது. ஆனால் நான் ஜேர்மனிக்கு போகும்சமயம் வரும்போது நிச்சயம் அவரைச்சந்திக்க முயற்சிசெய்வதோடு, அவரோட சேர்ந்து ஏதாவது ஒரு சின்னப்படைப்பை ஆகக்குறைஞ்சது ஒரு பாடலையாவது உருவாக்க முயற்சிப்பன். நான் போனவருசம் டென்மார்க் போயிருந்தபோது ரெண்டுமூண்டு இடங்களில பாடல்கள் பாடினது. நாங்கள் அங்கபாவிச்சது ஆக ரெண்டு தபேலா, ஒரு electric drum. எங்களுக்கு வயலின், வீணை எண்டு பக்கவாத்தியங்கள் எல்லாம் தேவை இல்ல பாடுறதுக்கு. கையில ஒரு அண்டா குண்டா ஒண்டு கிடைச்சால் போதும். நான் பொழுதுபோக்கிற்கு வீட்டில பாடுறது. எண்டபாட்டில பியானோ வாசிச்சுக்கொண்டும் பாடுறது. அது நல்லதொரு அனுபவம். இதுமாதிரி ஜேர்மனியில சோழியன் மாமாவோட சேர்ந்து சின்னக்கூத்து ஒண்டு அடிக்கவேணும் எண்டு ஒரு சின்ன ஆசை இருக்கிது. இடைக்கிடை சோழியன் மாமா மின்னஞ்சல் அனுப்புவார். சோழியன் மாமாவிண்ட சேவைகள் தொடர வாழ்த்துகள்!

கருத்துகளுக்கு மிகவும் நன்றி முரளி. எப்போ எல்லோரும் பதில் கருத்தெழுதுவார்கள் என பார்த்துக் கொண்டிருந்தேன் எனது கருத்தை பதிவதற்காக. இது தருணம் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு சந்திப்புகளும் ஒவ்வொரு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் புதுப்புதுப் படிப்பினைகளைத் தருகின்றன. தாயகத்திலே வாசிக்கும் பெரும்பாலான சஞ்சிகைகள் நூல்கள் தமிழகத்து இறக்குமதிகளாக இருந்த காரணத்தால், அப்போது எனது எழுத்துகளும் அவை சார்ந்தனவாகவே இருந்தன. பின்பு புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்து கிடைத்த சந்திப்புகள் எனது எழுத்தின் போக்கை மாற்றின. இணயத்தளங்களின் வருகைக்குப் பின் எனது எழுத்துகள் பரவலாவதற்கு யாழ் களம் வழி அமைத்துத் தந்தது. அதன் மூலம் ஏற்கெனவே நான் எழுதியவைகளைப் பகிர்ந்து கொண்டேன். யாழுக்காக ஒரு தொடர்கதையை மட்டுமே எழுதினேன் என நினைக்கிறேன். அதற்கு யாழுக்கப்பால் மெசன்சர் வழி நின்று முகம்தெரியாது உற்சாகப்படுத்தியவர்களும் கணனிப்பித்தன், இளைஞன், பரணி போன்ற யாழ்கள உறவுகள்தான். அதேபோல, தமிழமுதம் என்ற இணையத்தளத்தை ஆரம்பிப்பதற்கும் அந்த தேடலை தொடக்கி வைத்தவர்களும் யாழ் கள உறவுகள்தான். முதலில் யாகூவில் ஒரு பக்கத்தை எப்படி அமைப்பது என 'அ' எழுதி தொடக்கி வைத்தவர் யாழ்கள உறவு கணனிப்பித்தன். அவரே 'டைனமிக் போன்ற்' எப்படி உருவாக்குவது என்பதையும் மெசன்சர் மூலம் சொல்லித் தந்தார். அடுத்த படியாக இளைஞன் 'ஸ்கிரிப்ட்' மூலம் இணையத்தளம் உருவாக்கித் தந்ததோடு, அதைப்பற்றியும் எனக்கு புரியக்கூடிய தகவல்களை மெசன்சர்மூலம் சொல்லித் தந்தார். அதேபோல 'தமிழமுதம்' பிரிவுகளுக்கு.. இயலமுதம்.. செயலமுதம்.. அயலமுதம்.. இப்படி அமுதம் என முடியுமாறு பதங்களை தெரிவு செய்து தந்திருக்கிறார் குருவிகள். அதேபோல தூயவனும் அதற்கு சில உதவிகளைத் தந்துள்ளார்.. :D இவ்வாறு யாழ் களம் மூலம் நான் பெற்ற அனுபவங்களும், பயன்களும் பற்பல.

நானும் யாழில் உணர்ச்சிவசப்பட்டு வரம்புகளை மீறியதுண்டு. உதாரணமாக, திருமதி நளாயினி தாமரைச்செல்வனுடனான கருத்தாடலில்.. இரட்டை அர்த்த வசனங்களில் கருத்தாடல் செய்யப்போய் ஒரு கட்டத்தில் அது எல்லை மீறியதுண்டு. அது பலருக்கு பரியாவிட்டாலும் அவருக்கு புரிந்தது. ஆனால் அவர் நாகரீகமாக தொலைபேசியில் சுட்டிக்காட்டியபூது நான் வருத்தியதுண்டு. இப்படி சில பண்படுத்தல்களுக்கும் யாழ் காரணமாகியது. இதை ஏன் எழுதுகிறேன் என்றால், 'சோழியான் மாமா யாழில் நீதியின் தராசு' என்று பெரிய வார்த்தையால் என் மனதை குறுகுறுக்க வைத்துவிட்டார் முரளி. பிழைவிடுவது இயற்கை. ஆனால் அதை திரும்பவிடாதவாறு பார்த்துக் கொள்வதுதான் சிறப்பு. என்னாலியன்றமட்டும் இதையே கடைப்பிடிக்க விரும்புகிறேன்.

முரளி! பிறேமனில் பலதுறையிலும் வல்ல கலைஞர்கள் உள்ளார்கள். இசை, நடிப்பு, நடனம்.. இப்படியாக. நீங்கள் இங்கே வரும்போது எதை உருவாக்க நினைத்து வருகிறீர்களோ.. அதைப்பற்றி ஓரளவு கால இடைவெளியுடன் அறிவித்தால்... நாங்கள் றெடி. :D

Edited by sOliyAn

Share this post


Link to post
Share on other sites