Jump to content

உயிரை உருக்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை....,

மனம் திறந்து,

வரவேற்றவர்கள் நீங்கள்!

 

சில கறுப்பாடுகள்,

உங்களுக்குக் கரி பூசுகின்றன!

 

கடந்து சென்ற பாதை நிறைய..,

கற்களும், குழிகளும் தான்!

 

மாற்று வழி இன்றித் தானே,

காற்றோடு கலந்தீர்கள்!

 

வேற்று மனிதர்களாக்கி,

விலத்தி வைக்க முயல்கின்றார்!

 

புனிதர்களே!

உங்களைப் பூசிக்கப்,

பூவரசம் பூக்கள் கூட இல்லை!

 

விடுதலையின் வேங்கைகளே !

வீர வணக்கங்கள்!

 

 

நன்றி.. புலவர்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணை மீட்க புறப்பட்ட நாயகர்களுக்கு சிரம்சாய்ந்த வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் மண்ணில் நாம்

இழந்த உரிமைகளைமீள

கண்ணில் அயர்வின்றிக்

களம் காத்த வீரர்களே

தலை வணங்குகின்றோம்

உம் நினைவுகளோடு

 

காரிருளிலும் கடுங்காற்றிலும்

பேரிடியாய் வரும் கந்தகப் புயலிலும்

பெரு நெருப்பாய் வீசும் கரு மழையிலும்

ஈழக் கனவுகள் சுமந்து

 

போரிலும் எதிரியின் பாங்கிலும்

மனித மாண்புகள் விழைந்து

இன்று வானத்தின்

நட்சத்திரங்களாய் வாழ்கின்றீர் எம் மனங்களிலே

 

எண்ணித் துணிந்த கருமம் எளிதாய் முடித்து

கண்ணில் தெரியும் கனவுகளுடன் களத்தில்

சென்னீராகி விண்ணில் நீந்தும் பூக்களாய்

மண்ணின் விடுதலைக்கு ஒளி சேர்த்து

 

எம் மக்கள் மனதை வென்ற மாவீரர்களே

வணங்குகின்றோம் உம் நினைவுகளோடு

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!!

காலத்தின் தேவை கருதி இத்திரி புதுப்பிக்கப்படுகிறது.,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூக்கள்போல் உங்களின் கவிதைமலரும் வருடம் தவறாமல் மலர்ந்து மணம் வீசுகின்றது. ஆம், காலாகாலத்துக்கும் பொருந்தி வருதலால்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களே வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.