Jump to content

பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?


Recommended Posts

இந்த தலைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் "பாரதியின் உயிர்மூச்சு தமிழா ஆரியமா" என்னும் கட்டுரை ஒரு ஆய்வுக்கட்டுரையின் அடிப்படை தகுதிகளை கூட கொண்டிருக்கவில்லை]

ஒரு கட்டுரை, ஆய்வு கட்டுரையாக இருப்பதற்கு என்ன என்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்? தயவு செய்து விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

பாரதியை இங்கே சிலர் விடுதலைக் கவி என்று சொன்னார்கள். அதன்பொருட்டே இவற்றை இங்கே இணைத்தேன்.

அத்துடன் பாரதி பற்றி நாம் நூறு தலைப்புகளை திறப்பதை விட, இதிலேயே பாரதியின் மற்றைய சிந்தனைகள் பற்றியும் விவாதிக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஒண்டு விழங்கிது பாரதியும்சரி பெரியாரும்சரி வெள்ளைக்காரனையும் அவனின்ரை ஆட்சியையும் ஆதரிச்சிருக்கினம் எண்டு விளங்கிது பிறகெதுக்கு பிரச்சனை.பாவம் பாரதிக்கு வெளிநாடு வாறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கேல்லை கிடைச்சிருந்தால் அவரும் தன்ரை கிழிஞ்ச கோட்டை தூக்கி எறிஞ்சு போட்டு பெரியார் மாதிரி நிர்வாண சங்கத்திலை சேர்ந்திருப்பார்.ஆனால் வெள்ளைக்காரனை எதிர்த்த பாரதியார் அந்த வெய்யில் வெக்கைக்குள்ளையும் வெள்ளைக்காரனின்ரை கோட்டை போட்டபடி அலைஞ்சிருக்கிறார்.ஆனால் பெரியார் வெள்ளைக்காரனை மாதிரியே வளத்த புள்ளையை கலியாணம் கட்டி வாழ்க்கையை கொண்டு போட்டார். அந்த நேரம் வயாகராவும் கண்டு பிடிக்கேல்லை. ஆனால் ஒண்டுமட்டும் உண்மை வெள்ளைக்காரன் 'இங்கிலாந்து"வந்ததாலைதான் இந்தியா எண்டு ஒரு நாடே இருக்கிது. :)

Link to comment
Share on other sites

கவிதையோ கட்டுரைகளோ சிந்தனைகளோ அந்தந்த எழுத்தாளர்களின் ஆசைகள் விருப்பங்கள் கற்பனைகள் சிந்தனைகள் அவ்வளவுதான்.

அவர்களின் எழுத்துக்களுக்கு ஏற்ற படிதான் அவர்களும் வாழ வேண்டும் என நினைப்பது அடிமுட்டாள்தனம்.

அதைவிட அவர்களை பெரியாராக கடவுளாக வைத்து பூசிப்பது........................ :o

Link to comment
Share on other sites

பாரதி விடுதலை கவி எண்டது தேச விடுதலைக்காக பாடு பட்டார், கவி எழுதினார் என்பதுக்காக அல்ல...!!!! சமூக விடுதலைக்காக பாடினார் என்பதுக்காக...!!

38 வயது பாரதியின் மரண சடங்குக்கு செய்ய கூடிய பார்ப்பணர்களின் எண்ணிக்கை சொன்னது பாரதி ஒரு பார்ப்பண வாதி என்பதை....!!

பாரதியை அண்றும் புரிந்து கொள்ள அனேகர் முயலவில்லை இண்றும் சிலர் புரிய முனையவில்லை...!!

Link to comment
Share on other sites

பாரதி சமூக விடுதலைக்கு பாடுபட்ட ஒருவர் என்பதை கேள்விக்கு உள்ளாக்குகின்ற காத்திரமான ஆதாரங்கள் இருக்கின்றன.

பாரதியை புரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய கட்டுரைகளை அதிகம் படிக்க வேண்டும். அதுவும் சரியான வரிசைக் கிரமத்தில் படிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பாரதியிடம் பல முற்போக்குச் சிந்தனைகள் இருந்தன. ஆனால் பிற்காலத்தில் இந்துத்துவ சக்திகளுடன் ஏற்பட்ட தொடர்பு அவரை பிற்போக்குப் பாதைக்குள் தள்ளிவிட்டன.

நாம் ஒரு பக்கத்தை மட்டும் பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

பார்ப்பணரின் நெருக்கம் தான் பாரதியின் மரணவீடு, கிறிஸ்தவ பாதிரியார் தலைமையில் 12 பேருடன் நடந்ததாம்...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியை பார்பானி தான் ஒதுக்கிவிட்டான் ... சரி.. ஆனால் அவர் யாருக்காக்க குரல் கொடுத்தாரோ அவர்களும் கண்டு கொள்ளவில்லையே...

Link to comment
Share on other sites

ஒரு கட்டுரை, ஆய்வு கட்டுரையாக இருப்பதற்கு என்ன என்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்? தயவு செய்து விளக்க முடியுமா?

ஆங்கிலத்தில் இது போன்ற ஆய்வறிக்கை Literature Review எனப்படும்

A literature review is an evaluative report of information found in the literature related to your selected area of study. The review should describe, summarise, evaluate and clarify this literature. It should give a theoretical base for the research and help you (the author) determine the nature of your research.

Works which are irrelevant should be discarded and those which are peripheral should be looked at critically

A literature review is more than the search for information, and goes beyond being a descriptive annotated bibliography. All works included in the review must be read, evaluated and analysed (which you would do for an annotated bibliography), but relationships between the literature must also be identified and articulated, in relation to your field of research.

*** It should identify the strengths and weaknesses of a published work and clearly justify Author's claims ***

ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் அந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட விடயத்தின் பலம், பலவீனம் இரண்டுமே சரிசமமாக ஆராயப்படவேண்டும். அத்தோடு அந்த ஆய்வை நடத்துவதற்கு உசாத்துணையாக உபயோகிக்கப்பட்ட வேறு ஆதாரங்களின் பட்டியல் ஆய்வறிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அப்படி இணைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒன்று இரண்டு ஆதாரங்களின் பிரதிகள் நேரடியாக இணைக்கப்படுவதும் முக்கியம்.

அதிலும் பாரதி போன்ற ஒரு யுகக்கவிஞனை (Heavy Subject) பற்றிய எதிர்மறை கருத்துக்களுடன்

ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது இவை இணைக்கப்படுவது மிக முக்கியம்!!!

உதாரணத்திற்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில பகுதிகளை மீளாய்வு செய்தோமென்றால்........

பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா.குறிப்பிடுவதாவது : “தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர் வ.ரா என்பவர் யார் என்று தெளிவுபடுத்தப்படவில்லை. வ.ரா என்பவர் எங்கே எப்போது அப்படி குறிப்பிட்டார் என்பதற்கு ஒரு ஆதாரமும் தரப்படவில்லை. அத்தோடு அந்த வ.ரா என்பவரின் நம்பகத்தன்மை என்ன? ஒரு யுகக்கவிஞனான பாரதியின் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் ஏன் பொய்யாக இருக்கக் கூடாது என்னும் வாதங்களை உடைக்க கட்டுரையாளர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக்கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா எவ்வளவு உண்மை” (22) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்.

மேலே உள்ள குற்றச்சாட்டுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. அத்தோடு குறளின் ஒவ்வொரு வரியையும் மனப்பாடம் செய்து வைத்திருப்பவர்கள் தான் தமிழ்ப்பற்று கொண்டவர்கள் என்று எழுதுவது சுத்த கோமாளித்தனம்

இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து.

ஆரிய என்னும் சொல்லுக்கு உயரிய (Noble) என்னும் அர்த்தமும் உள்ளது. ஆகவே ஆரிய சம்பத்து என்பதற்கு 'உயரிய செல்வம்' என்னும் அர்த்தமும் வரும்.

' ஆரிய சம்பத்து' என்னும் சொல்லுக்கு தான் நினைக்கும் அர்த்தத்தை எழுத கட்டுரையாளருக்கு உரிமை இருக்கும் அதே சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தைக்கு 'உயரிய செல்வம்' என்னும் இன்னொரு அர்த்தமும் உள்ளது என்று சொல்லாமல் இருட்டடிப்பு செய்துவிட்டார். ஆகவே கட்டுரையாளர் தான் எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை நடுநிலையில் நின்று ஆராயவில்லை என்பது தெளிவாகிறது

ஒரு ஆய்வறிக்கையின் அடிப்படை விதிகளை கூட இந்த தலைப்பில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரை பின்பற்றவில்லை என்பதற்கு வேண்டுமென்றால் இன்னும் பல உதாரணங்களை இந்த கட்டுரையில் இருந்து காட்டலாம்.

Link to comment
Share on other sites

மூன்று பக்க விவாதம் வரை பாத்துக்கொண்டிருந்திட்டு இந்தக் கட்டுரையை இணைத்த இளங்கோவிட்டை ஒரு கேள்வி என்னவெனில் இந்தக் கட்டுரையை நீங்கள்இணைத்ததன் நோக்கம் என்ன பாரதியார் ஆரியத்தை ஆதரித்த ஒருவர் திராவிடத்தை கை விட்டிட்டார்.தமிழ் தமிழ் எண்டு சொல்லி இடையிலை தமிழை கைவிட்டிட்டு சமஸ்கிருதத்தினை விரும்பினார். அல்லது விடுதலை எண்டிட்டு வெள்ளைக்காரனை வாழ்த்திப்பாடினார். என்று நிறுவுவதா ?? பதில் தந்தால் நான் தொடர்ந்து எனது கருத்தக்களை வைக்க இலகுவாக இருக்கும் :huh:

Link to comment
Share on other sites

பாரதியின் பாடல்வரிகளை அரைப்படித்து விட்டு, திராவிட பித்தம் தலைக்கேறிப் போய் திரு. கருணாநிதியின் மகள் கவிஞர் (???! :wub:) கனிமொழி சமீபத்தில் உளறிய உளறலும் அதற்கு நடிகர் சரத்குமாரின் பதிலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கனிமொழி Vs சரத்குமார்: பாரதியை பழி சுமத்துவதா?

சென்னை: மகாகவி பாரதியாரை பழி சுமத்தும் வகையில் கவிஞர் கனிமொழி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர் கனிமொழி. "தமிழ் மெல்லச் சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல். தமிழ் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பாரதியின் பாடலை பழுதுற படித்துவிட்டு, அந்த பழுத்த கவிஞன் மீது பழி சுமத்தி இருக்கும் செயல் கண்டு நடுக்கமுற்றேன். தமிழால் பாரதி தகுதி பெற்றதும், தமிழ் பாரதியால் தகுதி பெற்றது என தமிழ் கூறும் நல்லுலகம் ஏகோபித்த குரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்துவதாகும்.

பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில், தாயுமாணவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான்.

அப்பாடல் வரிகள் இதோ...

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி

ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்

கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்

புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை

சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை

மெல்லத்தமிழினிச் சாகும் அந்த

மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்றந்தப்பேதை உரைத்தான்ஆ

இந்த வசை எனக்கெய்திடலாமோ!

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

இது தான் அந்தப்பாடல்

இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த் தாய் தமிழ் மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவி மீது பாய்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்'

என்றவன் பாடலை பிழையுற உணர்ந்து கொண்டு, ஒரு பெருங்கவி மீது கரும்பழி சுமத்தியிருப்பது கவலைக்குறியது.

அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

http://thatstamil.oneindia.in/art-culture/...i-for-talk.html

எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள ஒரு கவிதை வரிகளின் அர்த்தத்தையே திரித்துப்பேசும் கனிமொழியின் உளறலின் தரத்தில் தான் இந்த தலைப்பில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரையும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது! :huh:

பாரதி பாடலை கனிமொழி சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதை விட, பாடலின் அர்த்தம் தெரிந்திருந்தும் அதை திரித்துக் கூறி மக்களை மடையர்களாக்கும் இவர்களின் பித்தலாட்டத்தின் ஒரு பகுதி என்றே இதை சொல்ல வேண்டும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீள்வாசிப்புச் செய்து என்னத்தைக் கண்டீர்கள்..??! கார்ல் மார்க்ஸின் கொள்கைகளில் திருத்தங்களை புகுத்தினீர்களா.. அல்லது லெனின் கொள்கைகளை மாற்றி எழுதி வைத்தீர்களா..??! அல்லது இராமசாமி சொன்னவை உளறல்கள் தான் என்பதை ஏற்றுக் கொண்டீர்களா.. இல்லையே..!

தேசிய தலைவரை யாரும் மீள்பார்வை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவரே தன்னை மீள்பார்வை செய்து கொண்டுதான் இருக்கிறார். அவர் மீது தப்புக்கள் காட்டப்படுகின்றனவே தவிர அதன் பின்னால் உள்ள நியாயங்கள் திட்டமிட்டு வெளியில் உள்ளவர்களால் மறைக்கப்படுவதே தொடர்கிறது. அதுவே வெளியில் உள்ளவர்கள் அவர் மீது செய்யும் மீள்பார்வையாகவும் இருக்க முடியும். அதிலும்.. அவரே தன்னைப் பற்றிய மீள்பார்வையைச் செய்வது.. சிறந்தது என்று நினைக்கிறேன். கொள்கை வகுத்தவனுக்குத்தான் தெரியும் அதன் சரியான நியாயப்பாடு.

பாரதிக்குத்தான் தெரியும்.. அவனின் கவி வரிகளின் உண்மையான நியாயப்பாடு. வள்ளுவனின் குறள் வரிகளில்.. விளக்கம் கொடுத்தவர்கள் செய்த திரிபுகளைக் காட்டினும்.. வள்ளுவனே அதற்கு விளக்கம் கொடுத்திருப்பின்.. அதுவே திறமையான விளக்கவுரையாக அமைந்திருக்கும்..!

மருதங்கேணி..

நீங்கள் சந்தடி சாக்கில் இராமசாமியாரை.. பெரியவர் என்ற நிலைக்கு இங்கு புகுத்துவதையே நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

அடிப்படையில் இராமசாமி.. ஒரு சமூகக் குழப்பவாதி. அதன் மூலம் தனது அரசியல்.. தனிப்பட்ட செல்வாக்கை நிறுவ முற்பட்டதே அவரின் நோக்கம். அதில் சமூக அக்கறையோ.. சமூக விடுதலையோ முதன்மையல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை.. இந்திய தேச விடுதலையோடு.. தமிழகத்தில் சமூக விடுதலைக்காக பாடுபட்டவன் பாரதி. அவனுடைய கவி வரிகள்.. இராமசாமியின்.. உளறல்களை விட மிக மிக வலிமையானவை. மக்கள் அனைவரினதும் மனதை.. காயப்படுத்தாமல்.. அடையக் கூடியவை. இராமசாமி அப்படிப்பட்டவர் அன்று. அவருக்கு மக்கள் நாகரிகம் என்பதே தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரின் கொள்கைகள்.. கூற்றுக்கள் மக்கள் ஆதிக்கம் பெறுமென்று எதிர்பார்க்க முடியாது.

அடிப்படையில் பாரதியே தமிழகத்தில்.. பெண் விடுதலையின்.. சாதி அழிப்பின்.. சின்னமாக உள்ளான். இராமசாமி அடிப்படையில் சமூகவியலாளன் அல்ல. அவர் ஒரு அரசியல்வாதி. அவர் தத்துவஞானியல்ல.. சந்தர்ப்பவாதி. பாரதி அரசியலுக்கு வெளியில் நின்ற சமூகக் கவிஞன். சமூக விடுதலைக்குரிய கருத்துக்களை எல்லா மக்களிடமும் எந்தப் பாகுபாடும் காட்டாத வகைக்குக் கொண்டு செல்ல முற்பட்டவன்.

இராமசாமி அப்படிப்பட்டவர் அன்று. பாரதிக்கு இணையாக இராமசாமியை ஒப்பிடுவதே தவறு. பாரதி இமயம் என்றால் இராமசாமி.. மரியானா ஆழி..! ஒரே சமூகத்துள்.. பிரிவினைகளை வளர்த்துக் கொண்டு.. சாதி அழிப்பு என்பது.. என்றுமே சாத்தியமற்ற ஒன்று. இராமசாமியின் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலனுக்காக திணிக்க முனைந்ததன் விளைவே... இன்றும் தமிழகம் சாதியைக் காவிக் கொண்டிருக்க வேண்டியதாகி இருக்கிறது.

ஒருவேளை பாரதியின்.. சாதி அழிப்பை.. பெண் விடுதலையை.. இன்னும் தீவிரமாக முன்னிலைப்படுத்தி இருப்பின்.. தமிழகத்தில்.. முழுமையான சமூகப் புரட்சியை இன்று கண்டிருக்க முடியும்..! :huh:

நான் சிவப்பு வர்ண்ணத்தால் சுட்டிகாட்டிய உங்களுடைய சொந்த கருத்தும்.....

பின் தொடர்ந்து நீங்கள் எழுதிய கருத்தும் ஒன்றொடு ஒன்று முரன்படுகின்றன..... காரணம்??

உங்களுக்கு சரியெனபட்டவர்களை துற்ற துடிப்பதும்.... உங்களுக்கு விழங்காது போன சித்தார்த்தங்களை புதைக்கவும் நீங்கள் முயற்சி செய்கின்றீர்களோ என்றுதான் என்னால் எண்ண முடிகின்றது.

ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு ஒருவரை சாடும் உங்களுடைய தந்திரோபாயம்தான் உங்களின் பதிலலில் மீண்டும் காண கூடியதாக இருக்கின்றதே தவிர. இந்த தலைப்புக்கும்.... உங்களுடைய ஆரம்ப கருத்துக்கும் எனது வேண்டுகோளுக்கும். நீங்கள் எனக்கு தந்த பதிலுக்கும் எந்த தொடர்பையும் காணகூடியதாக இல்லை.

பாரதி பற்றி இந்த கருத்தை இணைத்த இளங்கோவின் கருத்துலும் விட(பாரட்டு புகழ்சி) உங்களின் கருத்தில் துளியளவும் பாரதியின் தமிழ் பற்றோ அன்றி சமூகமேம்பாடடடாளன் என்பதை துணைநீறுத்தும் வாக்கயமோ இல்லலை.

உங்களின் பதிலுக்கு நன்றி அண்ணா. நீங்கள் என்னை தவறாக புரியலாம். ஆனாலும் எனது நிலைப்பாடு பாரதி பெரியார் தேசியதலைவர் யார்பற்றியெனிலும் உங்களிக் கருத்தினுடாக அறிவதே தவிர பட்டிமன்றம்போல் கருத்தாடி வெல்வதல்ல.... அப்படி போட்டி வைத்தால் வெற்றி உங்களுக்கே. எனக்கு இன்னமும் அந்த அளவிற்கு அறிவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரா சொன்னீங்கண்ணா...!!

மேலை இருக்கும் கட்டுரையை சரியா படித்தீர்களோ...???? அங்கே பாரதி செந்தமிழ் நாடெனும் போதினிலே எனும் தமிழ் நாட்டு வாழ்த்தை யாரோ ஒரு ஐயரின் வற்புறுத்தலுக்காக ஒரு பத்திரிக்கைக்கு எழுதியதாக சொல்லி இருக்கிறார்களே.... அதனால பாரதிக்கு தமிழ் மேலை பற்று இல்லையாம்...

பாரதி அந்த ஐயர் சொல்லாமலே கவிதையை பத்திரிகைக்கு எழுதி இருந்தால் பார்ப்பணன் பாரதி பரிசுக்காக தான் தமிழ்நாட்டை போற்றி பாட்டு எழுதினார், தமிழ் பற்றினால் இல்லை எண்று இந்த உலக்கை கட்டுரை எழுதி இருக்கும்....!!

எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கு முயண்றுஇருபக்கத்தையும் பாருங்கள்....

தயாண்ணா எனக்கு புத்திசொல்லும் போது உங்களுக்கு தெரிகின்றது நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது.

ஆனால் நீங்கள் கருத்தை முன்வைக்கும்போது அதை மறந்து நாணயத்திற்கு ஒரபக்கம்தான் என்று அடம்பிடிக்கின்றீர்கள் காரணம்?

நான் பாரதி தமிழ்பற்று அற்றவன் என்றோ அன்றி அவனது கவிதைகள் வரிகள் பார்பானியத்தை வளர்த்தென்றோ எங்கும் சொல்லவில்லை அப்படியான எண்ணமும் என்னிடம் இல்லை. கவிதைகள் கற்பனையினால் வடிவம் பெறுபவை அங்கே மிகுந்து நிற்பது கற்கனைதான் அதிகம். கவியோட்டத்தை நடையோட்டத்துடன் கொண்டுசெல்ல கவிஞர்களால் தகுதியான சொற்கள் பாவிக்கப்படுகின்றன அது பாவித்த கவிஞனுக்கே உண்மைநிலை புரியுயும். பிறருக்கு அது பலமாதிரி புரியும் ஆகவே கவிதைகள் பெரும்பாலும் தர்க்கத்திலும் காட்டி ரசனைக்கே உரியவை. ஆகவே பாரதியின் கவிதைகளை மட்டும் வைத்து பாரதியை புரிந்துவிட முடியாது. இந்த உண்மை நிலையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே இந்த தலைப்பு தேவையானவை பாரதியின் வாழ்கையும் நோக்கமும் காலகட்டமும்தான்.

அங்கேயும் பாரதி தமிழ்பற்றாளனாகவே இருந்தான்....

சமூக நற்சிந்தனையை நிலைநிறுத்தினான்.....

மனிதர்களிடம் இருந்த வர்க்க பாகுபாட்டை வெறுத்தான்.....

இவற்றை எடுத்துகாட்டகூடிய கருத்துக்களும் உண்மைகளும் தான் வெளிப்படவேண்டியவை. (பெரியார் பற்றிய காழ்புணர்ச்சி அல்ல)

பாரதியின் பாடல்வரிகளை அரைப்படித்து விட்டு, திராவிட பித்தம் தலைக்கேறிப் போய் திரு. கருணாநிதியின் மகள் கவிஞர் (???! :wub:) கனிமொழி சமீபத்தில் உளறிய உளறலும் அதற்கு நடிகர் சரத்குமாரின் பதிலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கனிமொழி Vs சரத்குமார்: பாரதியை பழி சுமத்துவதா?

சென்னை: மகாகவி பாரதியாரை பழி சுமத்தும் வகையில் கவிஞர் கனிமொழி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர் கனிமொழி. "தமிழ் மெல்லச் சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல். தமிழ் வாழும், அதை யாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பாரதியின் பாடலை பழுதுற படித்துவிட்டு, அந்த பழுத்த கவிஞன் மீது பழி சுமத்தி இருக்கும் செயல் கண்டு நடுக்கமுற்றேன். தமிழால் பாரதி தகுதி பெற்றதும், தமிழ் பாரதியால் தகுதி பெற்றது என தமிழ் கூறும் நல்லுலகம் ஏகோபித்த குரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்துவதாகும்.

பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில், தாயுமாணவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான்.

அப்பாடல் வரிகள் இதோ...

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி

ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்

கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்

புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை

சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை

மெல்லத்தமிழினிச் சாகும் அந்த

மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்

என்றந்தப்பேதை உரைத்தான்ஆ

இந்த வசை எனக்கெய்திடலாமோ!

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

இது தான் அந்தப்பாடல்

இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த் தாய் தமிழ் மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவி மீது பாய்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்'

என்றவன் பாடலை பிழையுற உணர்ந்து கொண்டு, ஒரு பெருங்கவி மீது கரும்பழி சுமத்தியிருப்பது கவலைக்குறியது.

அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

http://thatstamil.oneindia.in/art-culture/...i-for-talk.html

எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள ஒரு கவிதை வரிகளின் அர்த்தத்தையே திரித்துப்பேசும் கனிமொழியின் உளறலின் தரத்தில் தான் இந்த தலைப்பில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரையும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது! :huh:

பாரதி பாடலை கனிமொழி சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதை விட, பாடலின் அர்த்தம் தெரிந்திருந்தும் அதை திரித்துக் கூறி மக்களை மடையர்களாக்கும் இவர்களின் பித்தலாட்டத்தின் ஒரு பகுதி என்றே இதை சொல்ல வேண்டும்!!!

நன்றி வெற்றி-வேல் அண்ணா

மறந்து போன கவிதைகள் பலதை மீண்டும் படிக்க கூடியதாக இருக்கின்றது....

பாரதியின் கவிதைகளில் தொலைவதும் ஒரு சுகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை (ஆதிசிவன்) அருள்வலியாலும் - முன்பு

சான்ற புலவர் தவவலியாலும்

இந்தக் கணமட்டும் காலன் - என்னை

ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்

என்ற பாரதி, பேதையுரைத்ததையும் கூறிவிட்டு மீண்டும்:

தந்தை அருள்வலியாலும் இன்று

சார்ந்த புலவர் தவவலியாலும்

இந்தப் பெரும் பழி தீரும் - புகழ்

ஏறிப் புவிமிசை என்றுமிருப்பேன்

என்னும் வரிகளால் தமிழ் ஒரு போதும் அழிந்துவிடாது என்றும் புகழோடு வாழும் என்று தீர்க்கதரிசன முரைக்கிறான்.

அவன் தமிழை வாழவைக்கத் துணைக்கழைப்பது இன்றைய புலவர்களையும் அவர்தம் தவவலிமையையுமே. ஒரு ஏழைக் கவிஞனால் வேறெதைச் செய்ய முடியும்.

பாரதியின் வார்த்தையைப் பலிக்கச்செய்து தமிழை நீடூழி காலம் வாழவைக்கவேண்டியது இன்றைய சந்ததியின் கடமையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிவப்பு வர்ண்ணத்தால் சுட்டிகாட்டிய உங்களுடைய சொந்த கருத்தும்.....

பின் தொடர்ந்து நீங்கள் எழுதிய கருத்தும் ஒன்றொடு ஒன்று முரன்படுகின்றன..... காரணம்??

உங்களுக்கு சரியெனபட்டவர்களை துற்ற துடிப்பதும்.... உங்களுக்கு விழங்காது போன சித்தார்த்தங்களை புதைக்கவும் நீங்கள் முயற்சி செய்கின்றீர்களோ என்றுதான் என்னால் எண்ண முடிகின்றது.

ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு ஒருவரை சாடும் உங்களுடைய தந்திரோபாயம்தான் உங்களின் பதிலலில் மீண்டும் காண கூடியதாக இருக்கின்றதே தவிர. இந்த தலைப்புக்கும்.... உங்களுடைய ஆரம்ப கருத்துக்கும் எனது வேண்டுகோளுக்கும். நீங்கள் எனக்கு தந்த பதிலுக்கும் எந்த தொடர்பையும் காணகூடியதாக இல்லை.

பாரதி பற்றி இந்த கருத்தை இணைத்த இளங்கோவின் கருத்துலும் விட(பாரட்டு புகழ்சி) உங்களின் கருத்தில் துளியளவும் பாரதியின் தமிழ் பற்றோ அன்றி சமூகமேம்பாடடடாளன் என்பதை துணைநீறுத்தும் வாக்கயமோ இல்லலை.

உங்களின் பதிலுக்கு நன்றி அண்ணா. நீங்கள் என்னை தவறாக புரியலாம். ஆனாலும் எனது நிலைப்பாடு பாரதி பெரியார் தேசியதலைவர் யார்பற்றியெனிலும் உங்களிக் கருத்தினுடாக அறிவதே தவிர பட்டிமன்றம்போல் கருத்தாடி வெல்வதல்ல.... அப்படி போட்டி வைத்தால் வெற்றி உங்களுக்கே. எனக்கு இன்னமும் அந்த அளவிற்கு அறிவில்லை.

நான் மேற்குறிப்பிட்ட கருத்தை "மீள் பார்வை" யாளர்களை நோக்கியே வைத்தேன். பாரதியைப் பற்றியல்ல. இராமசாமியைப் பற்றி "சோ" போன்றவர்கள் செய்யும் மீள் பார்வைகளை.. எப்படியெல்லாமோ சொல்லி.. அவை நியாயமற்றவை என்று சொல்ல சிலர் முண்டி அடிக்கிறார்கள். ஆனால் அவர்களே பாரதியை மீள் பார்வை செய்கிறேன் என்று அவனின் உயிர் மூச்சு தமிழா ஆரியமா என்று கேள்வியும் கேட்கின்றனர்.. இந்த வேடிக்கைத் தனத்தைத் தான் நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

பாரதி.. ஒரு காலத்தின் தேவை கருதி எழுந்த புரட்சிக் கவிஞன். அடிப்படையில் அவனிடம் சமூக விடுதலை.. தேச விடுதலை பற்றி அந்தக் கால எண்ண ஓட்டங்களை மக்களிடம் எளிய கவி வடிவில்.. எடுத்துச் செல்வதே நோக்கமாக இருந்தது.

பாரதி.. பாரத தேசத்தின் விடுதலையை பற்றிப் பேசினான். அவனுடைய கால அரசியல் சூழலில்.. அதுதான் பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடாக இருந்தது. அதையே அவன் பிரதிபலித்தான். ஆனால்.. அதுதான் அவனின்.. உள்ளார்ந்த நிலைப்பாடு என்று நாம் வரையறுக்க முடியாது. ஒருவேளை அவனிடம் தனித் தமிழ் நாடு என்ற நிலைப்பாடு கூட எண்ணத்தில் இருந்திருக்கலாம். ஆனால்.. தனது கருத்துருவாக்கம்.. சமூகத்தில் அவன் வேண்டி நின்ற பிற அடிப்படை மாற்றங்களை தகர்த்துவிடுமோ என்ற எண்ணத்தில் கூட அவன் அவற்றை வெளியே சொல்லாது விட்டிருக்கலாம். காலம் அவனைக் கட்டிப்போட்டிருக்கலாம்.

அதுமட்டுமன்றி..

பாரதிக்கும்.. புரட்சிக் கவிஞன் என்று பெயரிட்டவர்களும்.. அவனை மீள் பார்வை செய்தவர்கள் தான். பாரதி தன்னைத்தானே "புரட்சிக் கவிஞன்" என்று சொல்லிச் செல்லவில்லை. அல்லது.. என் உயிர் மூச்சு தமிழே என்று சொல்லிச் செல்லவில்லை. அவற்றை எல்லாம் பாரதிக்கு இட்டுக் கொண்டவர்கள் அவனை மீள்பார்வை செய்தவர்களே. இப்போ அதே மீள்பார்வையாளர்கள்.. பாரதிக்கு இட்டுக் கொண்டவற்றை.. தாமே நிராகரிப்பது.. வேடிக்கை விநோதமாகத் தெரிகிறது..! அதையே மேற்குறிப்பிட்ட பந்தியில் கூற முனைந்திருக்கிறேன்.

பாரதியின் கவிதைகளின் சமூக நோக்கம்... என்பது.. பெரும்பாலும்.. சமூக விடுதலை சார்ந்ததாகவே அன்றிருந்தது. பாரதியின் கவிதைகள்.. வெறுமனவே.. சிறிய வட்டத்துக்குள் தான் அடங்கி இருந்தன என்பது தவறு. அவனுடைய கவிதைகளில் வீச்செல்லை பரந்தது. இருப்பினும்.. அவனின் கவிதைகளில் அமைந்திருந்த சமூகப் புரட்சிக்குரிய.. தேச விடுதலைக்குரிய கவிதைகளே மக்களின் மனங்களில் ஆதிக்கம் பெற்றன. அதனால் அவன்.. அப்படி அழைக்கப்பட்டான்.

கவிப் பேரரசு.. என்று சொல்கிறோம்.. இன்னொரு 50 வருடங்களின் பின் வைரமுத்துவை மீள்பார்வை செய்யின்.. அவர் என்ன ஆங்கிலக் கவிஞரா அல்லது தமிழ் கவிஞரா என்று.. அவருடைய சினிமாக் கவிதைகளை மையமாக வைத்து கேள்வி கேட்கலாம். அது அவரின் தொழில்ரீதியான கவிதைகள். அவர் வாழ்ந்த, வாழ்கின்ற சமூகத்தின் தாக்கம்.. அவரின் கவிதையில் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. இன்றைய இளம் சமூகத்துக்கு.. அவர் ஆங்கிலம் கலக்காது கவிதை எழுதின்.. அது புரியாது என்ற நிலை இருக்கும் போது.. அவர் தூய தமிழில்.. பாட்டெழுதிக் கொண்டிருப்பின்.. அதைக் கேட்க.. யார் இருப்பார்..??! இது நியாயப்படுத்தல் அல்ல. சமூகத்தின் விருப்பு வெறுப்பு.. அதன் தற்காலப் போக்கு போன்றவற்றை மையமாக வைத்தே கவிஞன் எழுதுகிறான். அதற்கு பாரதி விதிவிலக்கல்ல. அவனிடம் உண்மையான தமிழ் பற்றிருந்திருக்கலாம். ஆனால் அதை கவிதைகளில் எப்போதும் வெளிக்காட்டக் கூடிய நிலை சமூகத்தில் இல்லாதிருந்திருக்கலாம்.

எங்கள் விடுதலைக் கவிஞன் புதுவையை எடுத்துக் கொள்ளுங்கள். தூய தமிழை முன் மொழியும் அதேவேளை அவருடைய கவிதைகளில் ஆங்கிலப் பதங்கள் இல்லாமல் இல்லை. அதற்காக.. அவரிடம் உண்மையான.. தூய தமிழ் என்ற அக்கறை இல்லை என்று மீள்பார்வை என்ற பெயரில் பிரகடனம் செய்ய முடியுமா..??! :huh:

அடிப்படையில்.. மேலுள்ள கட்டுரை எழுதப்பட்ட நோக்கத்தை ஆராய வேண்டும். அது சரியான நோக்கத்திலா எழுதப்பட்டிருக்கிறது என்பதை நோக்க வேண்டும். பாரதி மீதெழும் விருப்பில் அவனுக்கு.. பெயர் சூட்டுவதும்.. வெறுப்பில்.. இன்னொருவர் அதை மறுதலிப்பதுமல்ல.. மீள்பார்வை என்பது..! அது பாரதிக்கல்ல..எந்தக் கவிஞனுக்கும் பொருந்தாது.

கவிஞன் சமூகத்தைப் பிரதிபலித்துக் கொண்டே கவிதை எழுதுகிறான். அந்த வகையில்.. அவன் வாழ்ந்த சமூகத்தின் தாக்கம் என்பது நிச்சயம் அவனின் கவிதைகளில் இருக்கும். அதையே அவனின் மூல நோக்கம் என்று வரையறுப்பது தவறு. அவனுடைய கவிதைகள் பெரும்பாலானவற்றில் அவன் எதனை சமூகத்தின் முன்னேற்றம் அல்லது மாற்றம் கருதி முன்னிலைப்படுத்த விரும்புகிறான் என்ற அடிப்படையில் தான் பாரதி.. புரட்சிக் கவி.. விடுதலைக் கவி ஆகிறான். அது கூட அவன் சொல்லியல்ல. நாம் வரையறுத்துக் காட்டுவது. அவன்.. புரட்சி செய்தது.. கவி வடிவிலும்.. தான். மரபுக் கவி வடிவில் இருந்து.. புதுக் கவிதை வடிவுக்குள் கவி இலக்கணத்தை மாற்றி அமைத்து மக்களையே கவிஞர்களாக்கியவன் பாரதி.

கவியரசு கண்ணதாசனை.. எடுத்துக் கொள்ளுங்கள்.. அவரின் எழுத்துக்களில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை தந்த தாக்கங்களைக் காணலாம். தனது அனுபவங்களை சமூகத்துக்கான பாடமாக ஒப்பித்தார் அவர். ஆனால் அதை மட்டும் தான் செய்தார் என்பதல்ல.. அதன் பொருள். "குடி"யரசாக சமூகத்தில் உலா வந்த அவர்.. கவியரசாக இனங்காட்டப்பட எது ஏதுவானது..??!. அவர்.. சொல்லவில்லை.. தன்னைத் தானே கவியரசு என்று. நாம் தாம் அவரின் கவிதைகளை மீள்பார்வை செய்து.. கவியரசு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்.

அவரின் கவிதைகளில்.. மது.. மாது கையாளப்பட்ட வகையைக் கொண்டு.. அவரை.. "குடி"யரசு என்று இன்னொருவர் மீள்பார்வை செய்யலாம். ஆனால்.. அதுவா.. அவர் சமூகத்துக்குச் சொல்ல வந்ததன் உண்மைத் தன்மையைப் பிரதிபலித்து நிற்கப் போகிறது. இல்லை.

அதேபோலத்தான்.. மேல் உள்ள கட்டுரையும்.. பாரதிக்கு அவன் வாழ்ந்த காலத்தில் எழுந்த தேவைகள்.. சந்தர்ப்பங்கள் கருதி வந்த கவிதைகளை அடிப்படையாக வைத்து.. அவனின் பெரும்பாலான கவிதைகள் சொல்ல விளையும்.. தமிழ் பற்றையும்.. சமூக விடுதலையையும்.. தேச விடுதலையையும்.. புறந்தள்ளுவது.. மோசடியான ஒரு தேவை என்று தான் எண்ண வேண்டி இருக்கிறது. அது வெளிப்படையாகவும் தெரிகிறது. அதன் பின்னும்.. குறித்த கட்டுரையை.. ஒரு ஆய்வுக் கட்டுரையாக.. இனங்காண்கிறீர்கள் என்பது.. உங்கள் அறிதலின்.. நோக்கு.. ஆராய்வுக்கு உட்பட்டதா அல்லது உங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை பூர்த்தி செய்கிறது என்பதாலா.. என்ற கேள்வியை எழுப்புகிறது..! :wub:

Link to comment
Share on other sites

தயாண்ணா எனக்கு புத்திசொல்லும் போது உங்களுக்கு தெரிகின்றது நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது.

ஆனால் நீங்கள் கருத்தை முன்வைக்கும்போது அதை மறந்து நாணயத்திற்கு ஒரபக்கம்தான் என்று அடம்பிடிக்கின்றீர்கள் காரணம்?

நான் பாரதி தமிழ்பற்று அற்றவன் என்றோ அன்றி அவனது கவிதைகள் வரிகள் பார்பானியத்தை வளர்த்தென்றோ எங்கும் சொல்லவில்லை அப்படியான எண்ணமும் என்னிடம் இல்லை. கவிதைகள் கற்பனையினால் வடிவம் பெறுபவை அங்கே மிகுந்து நிற்பது கற்கனைதான் அதிகம். கவியோட்டத்தை நடையோட்டத்துடன் கொண்டுசெல்ல கவிஞர்களால் தகுதியான சொற்கள் பாவிக்கப்படுகின்றன அது பாவித்த கவிஞனுக்கே உண்மைநிலை புரியுயும். பிறருக்கு அது பலமாதிரி புரியும் ஆகவே கவிதைகள் பெரும்பாலும் தர்க்கத்திலும் காட்டி ரசனைக்கே உரியவை. ஆகவே பாரதியின் கவிதைகளை மட்டும் வைத்து பாரதியை புரிந்துவிட முடியாது. இந்த உண்மை நிலையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே இந்த தலைப்பு தேவையானவை பாரதியின் வாழ்கையும் நோக்கமும் காலகட்டமும்தான்.

அங்கேயும் பாரதி தமிழ்பற்றாளனாகவே இருந்தான்....

சமூக நற்சிந்தனையை நிலைநிறுத்தினான்.....

மனிதர்களிடம் இருந்த வர்க்க பாகுபாட்டை வெறுத்தான்.....

இவற்றை எடுத்துகாட்டகூடிய கருத்துக்களும் உண்மைகளும் தான் வெளிப்படவேண்டியவை. (பெரியார் பற்றிய காழ்புணர்ச்சி அல்ல)

நான் பெரியாய் பற்றி அந்த விளக்கத்தில் எங்கை எழுதி இருக்கிறேன்...??? அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்.... நான் என்ன எழுதினாலும் அது பெரியாரை எதிர்த்து என்பது உங்களின் நினைவாக இருக்கிறது...!!

மற்றது இந்த தலைப்பு கட்டுரையின் விளக்கத்தை தான் தங்களுக்கு சொல்ல முயன்றேன்... அறிவுரை எல்லாம் இல்லை... அதை தெளிவுர படித்தாலே புரிந்து கொள்ளலாம்...

இது எனது உறுதியான கருத்து

என்னாலை எதை செய்ய முடிய வில்லையோ அதை செய்பவந்தான் தலைவன், வளிகாட்டி, உதாரண மனிதன் எல்லாம்... அதை செய்வதால் தான் தலைவராக தேசியதலைவர் பிரபாகரன்... , என்னால் பாட முடியாததை பாடியதால்தான் அவன் பாரதி...

இன்னும் ஒருவரை காட்டி இவர் நான் நம்பும் தலைவரை விட சிறப்பாக செய்தார் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை... காரணம் தமிழரை வளிப்படுத்துவதில் திறமையான வராக தேசிய தலைவரை விட சிறப்பானவர் எனக்கு தெரிந்து எவரும் வந்து விடவில்லை....!! அதனால் அவர்களை எல்லாம் நான் ஏற்று கொள்ளவும் இல்லை....!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேற்குறிப்பிட்ட கருத்தை "மீள் பார்வை" யாளர்களை நோக்கியே வைத்தேன். பாரதியைப் பற்றியல்ல. இராமசாமியைப் பற்றி "சோ" போன்றவர்கள் செய்யும் மீள் பார்வைகளை.. எப்படியெல்லாமோ சொல்லி.. அவை நியாயமற்றவை என்று சொல்ல சிலர் முண்டி அடிக்கிறார்கள். ஆனால் அவர்களே பாரதியை மீள் பார்வை செய்கிறேன் என்று அவனின் உயிர் மூச்சு தமிழா ஆரியமா என்று கேள்வியும் கேட்கின்றனர்.. இந்த வேடிக்கைத் தனத்தைத் தான் நான் சுட்டிக்காட்டுகின்றேன்.

பாரதி.. ஒரு காலத்தின் தேவை கருதி எழுந்த புரட்சிக் கவிஞன். அடிப்படையில் அவனிடம் சமூக விடுதலை.. தேச விடுதலை பற்றி அந்தக் கால எண்ண ஓட்டங்களை மக்களிடம் எளிய கவி வடிவில்.. எடுத்துச் செல்வதே நோக்கமாக இருந்தது.

பாரதி.. பாரத தேசத்தின் விடுதலையை பற்றிப் பேசினான். அவனுடைய கால அரசியல் சூழலில்.. அதுதான் பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடாக இருந்தது. அதையே அவன் பிரதிபலித்தான். ஆனால்.. அதுதான் அவனின்.. உள்ளார்ந்த நிலைப்பாடு என்று நாம் வரையறுக்க முடியாது. ஒருவேளை அவனிடம் தனித் தமிழ் நாடு என்ற நிலைப்பாடு கூட எண்ணத்தில் இருந்திருக்கலாம். ஆனால்.. தனது கருத்துருவாக்கம்.. சமூகத்தில் அவன் வேண்டி நின்ற பிற அடிப்படை மாற்றங்களை தகர்த்துவிடுமோ என்ற எண்ணத்தில் கூட அவன் அவற்றை வெளியே சொல்லாது விட்டிருக்கலாம். காலம் அவனைக் கட்டிப்போட்டிருக்கலாம்.

அதுமட்டுமன்றி..

பாரதிக்கும்.. புரட்சிக் கவிஞன் என்று பெயரிட்டவர்களும்.. அவனை மீள் பார்வை செய்தவர்கள் தான். பாரதி தன்னைத்தானே "புரட்சிக் கவிஞன்" என்று சொல்லிச் செல்லவில்லை. அல்லது.. என் உயிர் மூச்சு தமிழே என்று சொல்லிச் செல்லவில்லை. அவற்றை எல்லாம் பாரதிக்கு இட்டுக் கொண்டவர்கள் அவனை மீள்பார்வை செய்தவர்களே. இப்போ அதே மீள்பார்வையாளர்கள்.. பாரதிக்கு இட்டுக் கொண்டவற்றை.. தாமே நிராகரிப்பது.. வேடிக்கை விநோதமாகத் தெரிகிறது..! அதையே மேற்குறிப்பிட்ட பந்தியில் கூற முனைந்திருக்கிறேன்.

பாரதியின் கவிதைகளின் சமூக நோக்கம்... என்பது.. பெரும்பாலும்.. சமூக விடுதலை சார்ந்ததாகவே அன்றிருந்தது. பாரதியின் கவிதைகள்.. வெறுமனவே.. சிறிய வட்டத்துக்குள் தான் அடங்கி இருந்தன என்பது தவறு. அவனுடைய கவிதைகளில் வீச்செல்லை பரந்தது. இருப்பினும்.. அவனின் கவிதைகளில் அமைந்திருந்த சமூகப் புரட்சிக்குரிய.. தேச விடுதலைக்குரிய கவிதைகளே மக்களின் மனங்களில் ஆதிக்கம் பெற்றன. அதனால் அவன்.. அப்படி அழைக்கப்பட்டான்.

கவிப் பேரரசு.. என்று சொல்கிறோம்.. இன்னொரு 50 வருடங்களின் பின் வைரமுத்துவை மீள்பார்வை செய்யின்.. அவர் என்ன ஆங்கிலக் கவிஞரா அல்லது தமிழ் கவிஞரா என்று.. அவருடைய சினிமாக் கவிதைகளை மையமாக வைத்து கேள்வி கேட்கலாம். அது அவரின் தொழில்ரீதியான கவிதைகள். அவர் வாழ்ந்த, வாழ்கின்ற சமூகத்தின் தாக்கம்.. அவரின் கவிதையில் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. இன்றைய இளம் சமூகத்துக்கு.. அவர் ஆங்கிலம் கலக்காது கவிதை எழுதின்.. அது புரியாது என்ற நிலை இருக்கும் போது.. அவர் தூய தமிழில்.. பாட்டெழுதிக் கொண்டிருப்பின்.. அதைக் கேட்க.. யார் இருப்பார்..??! இது நியாயப்படுத்தல் அல்ல. சமூகத்தின் விருப்பு வெறுப்பு.. அதன் தற்காலப் போக்கு போன்றவற்றை மையமாக வைத்தே கவிஞன் எழுதுகிறான். அதற்கு பாரதி விதிவிலக்கல்ல. அவனிடம் உண்மையான தமிழ் பற்றிருந்திருக்கலாம். ஆனால் அதை கவிதைகளில் எப்போதும் வெளிக்காட்டக் கூடிய நிலை சமூகத்தில் இல்லாதிருந்திருக்கலாம்.

எங்கள் விடுதலைக் கவிஞன் புதுவையை எடுத்துக் கொள்ளுங்கள். தூய தமிழை முன் மொழியும் அதேவேளை அவருடைய கவிதைகளில் ஆங்கிலப் பதங்கள் இல்லாமல் இல்லை. அதற்காக.. அவரிடம் உண்மையான.. தூய தமிழ் என்ற அக்கறை இல்லை என்று மீள்பார்வை என்ற பெயரில் பிரகடனம் செய்ய முடியுமா..??! :rolleyes:

அடிப்படையில்.. மேலுள்ள கட்டுரை எழுதப்பட்ட நோக்கத்தை ஆராய வேண்டும். அது சரியான நோக்கத்திலா எழுதப்பட்டிருக்கிறது என்பதை நோக்க வேண்டும். பாரதி மீதெழும் விருப்பில் அவனுக்கு.. பெயர் சூட்டுவதும்.. வெறுப்பில்.. இன்னொருவர் அதை மறுதலிப்பதுமல்ல.. மீள்பார்வை என்பது..! அது பாரதிக்கல்ல..எந்தக் கவிஞனுக்கும் பொருந்தாது.

கவிஞன் சமூகத்தைப் பிரதிபலித்துக் கொண்டே கவிதை எழுதுகிறான். அந்த வகையில்.. அவன் வாழ்ந்த சமூகத்தின் தாக்கம் என்பது நிச்சயம் அவனின் கவிதைகளில் இருக்கும். அதையே அவனின் மூல நோக்கம் என்று வரையறுப்பது தவறு. அவனுடைய கவிதைகள் பெரும்பாலானவற்றில் அவன் எதனை சமூகத்தின் முன்னேற்றம் அல்லது மாற்றம் கருதி முன்னிலைப்படுத்த விரும்புகிறான் என்ற அடிப்படையில் தான் பாரதி.. புரட்சிக் கவி.. விடுதலைக் கவி ஆகிறான். அது கூட அவன் சொல்லியல்ல. நாம் வரையறுத்துக் காட்டுவது. அவன்.. புரட்சி செய்தது.. கவி வடிவிலும்.. தான். மரபுக் கவி வடிவில் இருந்து.. புதுக் கவிதை வடிவுக்குள் கவி இலக்கணத்தை மாற்றி அமைத்து மக்களையே கவிஞர்களாக்கியவன் பாரதி.

கவியரசு கண்ணதாசனை.. எடுத்துக் கொள்ளுங்கள்.. அவரின் எழுத்துக்களில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை தந்த தாக்கங்களைக் காணலாம். தனது அனுபவங்களை சமூகத்துக்கான பாடமாக ஒப்பித்தார் அவர். ஆனால் அதை மட்டும் தான் செய்தார் என்பதல்ல.. அதன் பொருள். "குடி"யரசாக சமூகத்தில் உலா வந்த அவர்.. கவியரசாக இனங்காட்டப்பட எது ஏதுவானது..??!. அவர்.. சொல்லவில்லை.. தன்னைத் தானே கவியரசு என்று. நாம் தாம் அவரின் கவிதைகளை மீள்பார்வை செய்து.. கவியரசு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்.

அவரின் கவிதைகளில்.. மது.. மாது கையாளப்பட்ட வகையைக் கொண்டு.. அவரை.. "குடி"யரசு என்று இன்னொருவர் மீள்பார்வை செய்யலாம். ஆனால்.. அதுவா.. அவர் சமூகத்துக்குச் சொல்ல வந்ததன் உண்மைத் தன்மையைப் பிரதிபலித்து நிற்கப் போகிறது. இல்லை.

அதேபோலத்தான்.. மேல் உள்ள கட்டுரையும்.. பாரதிக்கு அவன் வாழ்ந்த காலத்தில் எழுந்த தேவைகள்.. சந்தர்ப்பங்கள் கருதி வந்த கவிதைகளை அடிப்படையாக வைத்து.. அவனின் பெரும்பாலான கவிதைகள் சொல்ல விளையும்.. தமிழ் பற்றையும்.. சமூக விடுதலையையும்.. தேச விடுதலையையும்.. புறந்தள்ளுவது.. மோசடியான ஒரு தேவை என்று தான் எண்ண வேண்டி இருக்கிறது. அது வெளிப்படையாகவும் தெரிகிறது. அதன் பின்னும்.. குறித்த கட்டுரையை.. ஒரு ஆய்வுக் கட்டுரையாக.. இனங்காண்கிறீர்கள் என்பது.. உங்கள் அறிதலின்.. நோக்கு.. ஆராய்வுக்கு உட்பட்டதா அல்லது உங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை பூர்த்தி செய்கிறது என்பதாலா.. என்ற கேள்வியை எழுப்புகிறது..! :o

நன்றி நெடுக்காலபோவான்!

உங்களுடைய இந்த கருத்து முற்றுமாக பாரதி ஒரு சமூகபற்றாளனாக... தமிழ் பற்று உடையவனாக இருந்தான் என்பதற்கு நிச்சயமாக வலுசேர்பதுடன் உண்மையை எடுத்து சொல்வதாகவுமிருக்கின்றது. இப்படியான கருத்தாடல்களையே நான் விரும்புகிறேன் யாரெனிலும் இதைதான் விரும்புவார்கள். பாரதியிடம் ஆரிய பற்று அதிகம் இருந்ததாக குற்றம்சாட்டுகிறார்கள்.... சில காரணங்களையும் உதாரணம் காட்டுகின்றார்கள். அது பொய்யான குற்றசாட்டே என்பதை நிருபிக்க கூடிய கருத்தாடல் உங்களிடமிருப்பின் அதை இணைத்தால் (நேரமிருப்பின்) என்னை போன்றோர் தெளிவுற வசதியாய் இருக்கும். மீண்டும் உங்களின் விளக்கத்துடனான நெடிய பதிலுக்கு நன்றிகள்!

நான் பெரியாய் பற்றி அந்த விளக்கத்தில் எங்கை எழுதி இருக்கிறேன்...??? அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்.... நான் என்ன எழுதினாலும் அது பெரியாரை எதிர்த்து என்பது உங்களின் நினைவாக இருக்கிறது...!!

மற்றது இந்த தலைப்பு கட்டுரையின் விளக்கத்தை தான் தங்களுக்கு சொல்ல முயன்றேன்... அறிவுரை எல்லாம் இல்லை... அதை தெளிவுர படித்தாலே புரிந்து கொள்ளலாம்...

இது எனது உறுதியான கருத்து

என்னாலை எதை செய்ய முடிய வில்லையோ அதை செய்பவந்தான் தலைவன், வளிகாட்டி, உதாரண மனிதன் எல்லாம்... அதை செய்வதால் தான் தலைவராக தேசியதலைவர் பிரபாகரன்... , என்னால் பாட முடியாததை பாடியதால்தான் அவன் பாரதி...

இன்னும் ஒருவரை காட்டி இவர் நான் நம்பும் தலைவரை விட சிறப்பாக செய்தார் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை... காரணம் தமிழரை வளிப்படுத்துவதில் திறமையான வராக தேசிய தலைவரை விட சிறப்பானவர் எனக்கு தெரிந்து எவரும் வந்து விடவில்லை....!! அதனால் அவர்களை எல்லாம் நான் ஏற்று கொள்ளவும் இல்லை....!!

தயாண்ணா!

நீங்கள் பெரியாரை இழுத்தீர்கள் என நான் பொருள்பட சொல்வில்லை. இந்த தலைப்புக்குள் பெரியார் வருவது அனாவசியமானது என்பதையே சுட்டிகாட்னேன். அப்படி பொருள்படும்படியிருந்தால் அது எனது தவறே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் எங்கே இருக்கிறார்?

"சொல்லடா!ஹரியென்ற கடவுள் எங்கே?

சொல்" லென் று ஹிரணியந்தான் உறுமிக் கேட்க,

நல்லதொரு மகன் சொல்வான் :- தூணி லுள்ளான்'

நாரா யணன் துரும்பி லுள்ளான்" என்றான்.

வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை

மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;

அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை;

அனைத்துமே தெய்வமென்றால் அல்லனுண்டோ?

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்

"கீழான்" பன்றியினைத் தேளைக் கண்டு

தாளைப்பார்த் திருகர முஞ் சிரமேற் கூப்பிச்

சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;

கூளத்தை மலத் தினையும் வணங்கல் வேண்டும்;

கூடிநின்ற பொருளைத்தின் கூட்டம் தெய்வம்

மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வான்;

விண்மட்டும் கடவுள் று மண்ணும் அஃதே,

சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்

சுத்த மண்ணும் சிவமென் றுரைத்தார் மேலோர்,

வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;

பித்தரே அனித்தியிருங் கடவு ளென்று

பேசுவது மெய்யானால் பெண்டி ரென்றும்

நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்

நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்ந்து வீரே?

உயிர்களெலாம் தெய்வமன்றோ நிகழ்ந்து வீரே?

உயிர்களெலாம் தெய்வமன்றிப் பிறவோன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;

பயிலுமுயிர் வகைமட்டு மன்றிப் பிறவொன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்

பார்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்.,மேகம்

மேலுமிங்கு பலபலவாம் தோற்றங் கொண்டே

இயலுகின்ற ஜடபொருள்கள் அனைத்தும் தெய்வம்;

எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!

பாரதியார் பெரியாருக்கு ஆதரவா சொல்லுறாறா இல்லை எதிரா சொல்லுறாறோ?கடவுள் இல்லை இயற்கை தான் கடவுள் என்பதனை இப்படி சொல்லுகிறாறா.

பெரியோரே எனக்கு தெரியாது நீங்க தான் பதில் சொல்லுங்கோ. :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன?

வாலாசா வல்லவன்

பாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்தபின், அவ்விதழின் ஆசிரியர் ஜி.சுப்புரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு விடுதலையுணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் 1905 இல் காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு பாரதி சென்று வந்தார். வரும் வழியில் கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம் உபதேசம் பெற்றார்.

நிவேதிதா தேவியின் அருளுரையும், வங்கப்பிரிவினையால் ஏற்பட்ட எழுச்சியும் பாரதியை ஒரு தீவிரமாதியாக மாற்றின. ‘சுதேசமித்திரன்’ மிதவாதப் போக்குடையது. பாரதியோ தீவிரவாதியாக மாறிவிட்டார். பாரதிக்கும், சுதேசமித்திரனுக்கும் கருத்து வேறுபாடு தோன்றவே, பாரதி அதிலிருந்து விலகி மண்டயம் சீனிவாசன் குடும்பத்தார் தொடங்கிய ‘இந்தியா’ வார ஏட்டின் ஆசிரியர் குழுவில் 1906 இல் சேர்ந்தார்.

1906 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் பாரதியார் பால பாரதச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இச்சங்கத்தின் சார்பில் அறைக்கூட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இச்சங்கத்தின் சார்பில் பாரதி விஜயவாடாவிற்குச் சென்று விபின் சந்திரபாலரைச் சந்தித்தார். அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து 1907 மே மாதத்தில் திருவல்லிக்கேணி கடற்கரையில் பேச வைத்தார். (1)

1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலா கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, இச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இச்சங்கத்தின் சார்பிலேயே 1907 சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூரத் மாநாட்டில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் குறைந்தபட்சம் 100 பிரதிநிதிகளையாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று வ.உ.சி.யுடன் கலந்து பேசி முடிவு செய்தார். சூரத் மாநாட்டுப் பிரதிநிதிகளின் பயணச் செலவின் ஒரு பாதியை வ.உ.சி.யும், இன்னொரு பாதியை மண்டயம் சீனுவாசனும் ஏற்கும்படிச் செய்தார் பாரதி. (2)

1907 இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கூட்டத்தில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கடுமையான மோதல் நடந்தது. மிதவாதிகள் சிலர் நாற்காலிகளைத் தூக்கி மேடையில் நின்ற திலகரை அடித்தனர். அவரைச் சென்னையிலிருந்து சென்ற தொண்டர்கள் கவசம் போல் சுற்றி நின்று தடுத்தனர். மிதவாதிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த அடியாட்கள் திடீரென்று பெரிய கம்பிகளுடன் மேடைக்கு வந்து சென்னைத் தொண்டர்களை நையப் புடைத்தனர். இதனால் ஆத்திரமுற்ற தீவிரவாதிகள் கால் செருப்பைக் கழற்றி மேடையில் நின்ற மிதவாதத் தலைவர்களை அடித்தனர். இதனால் மிதவாதத் தலைவர்கள் காவல்துறையை வரவழைத்தனர். மாநாட்டைக் கலைத்து விட்டதாகவும் அறிவித்தனர்.(3) காங்கிரசுக் கட்சியில் உட்கட்சிப் பூசல் என்பது இவ்வாறு 1907லேயே ஏற்பட்டது.

1907 சூரத் கூட்டம் காங்கிரஸ் சண்டையில் முடிந்து விடவே, தீவிரவாதிகள் மறுநாள் தனியாகக் கூடி தனிக் கட்சியாகச் செயல்பட முடிவு செய்தனர். சென்னை மாகாண புதிய கட்சியின் செயலராக வ.உ.சி. சூரத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். வ.உ.சி.யின் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணி கங்கை கொண்டான் மண்டபத்தில் ‘சென்னை ஜன சங்கம்’ என்ற அமைப்பு 11.1.1908 இல் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் நோக்கங்களாவன:

சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு குறித்துப் பிரச்சாரம் செய்தல், உடற்பயிற்சிக் கழகங்கள் நடத்துதல், சுதேசியப் பிரச்சாரத்துக்கு இளைஞர்களைத் தயார் செய்தல் முதலியன ஆகும். இச்சங்கம் ஏற்பட்ட பிறகு தான் சென்னை நகரில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் அதிகமாயின. இதனால் அரசின் பார்வை இவர்கள் மேல் விழுந்தது. (4) வ.உ.சி அவர்களின் முயற்சியால் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்’ என்னும் பெயரில் புதிய கம்பெனி அமைக்கப்பட்டது. கம்பெனியின் மூலதனம் ரூ.10,00,000. இதில் பங்கு ஒன்றுக்கு ரூ.25 வீதம் 40,000 பங்குகளைச் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. (5)

ஏட்டளவில் அமைந்த இத்திட்டத்தைச் செயலளவில் நிறைவேற்ற வேண்டி மூலதனத்தைத் திரட்ட பெரும்பாடுபட்டவர் வ.உ.சி. அவர்கள். வட இந்தியா நோக்கிச் சென்றபோது “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன். இல்லாவிட்டால் அங்கேயே கடலில் வீழ்ந்து மாய்வேன்” என்று வீரசபதம் செய்து புறப்பட்டார். வ.உ.சி. அவர்கள் பம்பாய் சென்றபோது, அவருடைய மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இருந்தார். மனைவியோ நிறைமாத கர்ப்பவதி. இந்தச் சூழலில் வ.உ.சி. ஊர் திரும்ப வேண்டும் என உறவினர்கள் வேண்டினர். வ.உ.சியோ ‘என் மக்களை இறைவன் பார்த்துக் கொள்வான்’ என்று கூறிவிட்டார். (6)

வ.உ.சி.யின் கடும் முயற்சியின் விளைவாக ‘எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ்.லாவோ’ என்னும் பெயர்கள் கொண்ட இரு ஸ்டீமர்கள் வெவ்வேறு தேதிகளில் 1907 மே மாதத்தில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன. வ.உ.சி.க்கு இருந்த தனிப்பெருஞ்செல்வாக்கு காரணமாக தூத்துக்குடி-கொழும்புவிற்கு இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக நடந்தது. (7) இதனால் ஆங்கிலேயர்களின் கப்பல் கம்பெனிக்கு இழப்பு ஏற்படவே அவர்களுக்கு வ.உ.சி.யின் மீது ஆத்திரம் அதிகமாயிற்று. வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதி இம்மூவரும் 1906 முதல் தமிழகத்தில் சுதேசி உணர்வை தீவிரமாக வளர்த்தனர். இருந்த போதிலும் வ.உ.சி. மீதுதான் ஆங்கிலேயருக்குக் கோபம் அதிகம்.

1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலர் கைது செய்யப்பட்டதை முன்னரே குறிப்பிட்டோம். அவருக்கு 6 மாதம் வெறும் காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. விபின் சந்திரபாலரைக் கைது செய்ததைக் கண்டித்து 17.9.1907 இல் ஒரு கண்டனக் கூட்டமும், 28.9.1907 இல் பாரதி தலைமையில் கண்டன ஊர்வலமும் நடைபெற்றன. (8)

விபின் சந்திரபாலர் விடுதலை செய்யப்பட்டபோது, அதைக் கொண்டாட 9.3.1908 இல் காவல்துறையின் இசைவுடன் சென்னையில் ஊர்வலமும் கூட்டமும் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தில் முடிவில் பாரதி கூறியதாவது: “நம் இயற்கை உரிமையில் குறுக்கிடாத சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுவோம். ஆனால் சட்டங்கள் நம் இயற்கை உரிமையில் குறுக்கிடுமேயானால் சட்டங்களை மீறுவோமாக” (9) என்று முழங்கினார்.

வ.உ.சி.யும் விபின் சந்திரபாலர் விடுதலை நாளைத் தூத்துக்குடியில் கொண்டாட ஏற்பாடு செய்தார். இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியன் வின்சிச் 8.3.1908 முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரை 11.3.1908 அன்று கைது செய்தான். அதனால் திருநெல்வேலியில் மக்கள் கொதித்தெழுந்தனர்.

பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் (40 ஆண்டுகள் ) விதித்தான். சுப்பிரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தான். உயர்நீதிமன்றம் வ.உ.சி.யின் தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. மேல் முறையீட்டின் பேரில் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அவர் பெற்றது கடுமையான கடுங்காவல் தண்டனை ஆகும். முதலில் சணல் உரிக்கும் எந்திரம் சுற்றும் வேலையில் விடப்பட்டார், வ.உ.சி.யின் கைகளில் தோல் உரிந்து புண்ணாகி விட்டன. பின்பு கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் என் செக்கை இழுக்கச் செய்தனர். சிறிது காலம் கல் உடைக்கச் செய்தனர். வ.உ.சி.யின் சிறைக்கொடுமைகள் சொல்லி மாளாதவை. (10)

‘இந்தியா’ இதழில் 1908 பிப்ரவரி முதற்கொண்டு வெளியிடப்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கருத்துப் படங்கள் ஆகியவை குறித்து தலைமைச் செயலருக்கு சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் ஒரு கடிதம் எழுதினார். ஆளுநர் மன்ற உறுப்பினர்களில் பலர், இந்தியா பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரினர். இதன்படி இந்தியா ஏட்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. (11)

‘இந்தியா’ இதழின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டுடன் ஒரு போலீஸ்காரன் இந்தியா அலுவலகத்திற்கு வந்து, அப்போதுதான் வெளியேறிக் கொண்டிருந்த பாரதியிடம் வாரண்ட் ஒன்றை நீட்டினான். அதைப் படித்த பாரதி, “இது, ஆசிரியருக்கா? ஆசிரியர் நானல்ல” என்று கூறிவிட்டு வெளியேறினார். (12)

பாரதிக்குச் சிறை செல்ல விருப்பம் இல்லை. எனவே வீட்டுக்குக் கூடச் செல்லாமல், தன் மனைவியிடம் கூடக் கூறாமல், அன்று இரவே இரகசியமாக யாருக்கும் தெரியாமல் தப்பி புதுச்சேரிக்குச் சென்று விட்டார். அவர் சிறைக்குப் பயந்து தான் சென்றார் என்பதை இந்தியா இதழின் உரிமையாளர் மண்டயம் சீனிவாசன் கூறியுள்ளார்.

“சிதம்பரம் பிள்ளையின் சிறைவாசத்தைக் கண்ட பிறகு பாரதியார் தாம் எக்காரணத்தாலும் அப்படிச் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ‘உருநிலை தவறி வெறிகொண்டு நம்மைத் துன்புறுத்தப் புகும் ஸர்க்கார் கையிலிருந்து நமக்குத் தப்ப வழியிருக்கும் போது நாம் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? துஷ்டனைக் கண்டால் தூர விலக வழியிருக்கும்போது, தூர விலகிப் போவோம்’ என்று சொல்லி அவர் புதுச்சேரி செல்லத் தயாரானார். புதுவையில் என் நண்பரான சிட்டி குப்புசாமி அய்யங்காருக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து அவரைப் புறப்படச் செய்தேன்.” (13)

பாரதியார் எப்படிப் புதுச்சேரி சென்றார் என்பதைப் பற்றி பாரதியின் நண்பர் நீலகண்ட பிரமச்சாரி கூறியுள்ளதாவது: “வழக்கமான தனது கிராப்புத் தலையை வைதீகக் குடுமித் தலையாக மாற்றிக் கொண்டு, எழும்பூரில் ரயிலேறினால் தெரிந்து விடுமென்று, சைதாப்பேட்டையில் ரயிலேறிப் புதுவை போய்ச் சேர்ந்தார். அவரது குடும்பம் சென்னையிலேயே இருந்தது.” (14)

பாரதியார் புதுவை சென்றபோது இரயிலில் அவர் மனம் என்ன பாடுபட்டது என்பதைப் பாரதியின் மனைவி செல்லம்மாள் கூறுகிறார். “பாரதியாருக்கு மனதில் ஏதேனும் ஒன்று தோன்ற ஆரம்பித்து விட்டால், அது கொஞ்ச நேரத்தில் போகாது. இரயில் ஏறிய பிறகும் போலீசாரிடம் அகப்படாமல் புதுவை போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டாராம். இரயிலில் யார் வந்து ஏறினாலும், டிக்கெட் பரிசோதகர் வந்தாலும், ஸ்டேஷன் மாஸ்டர் வந்தாலும், போலீசாரால் அனுப்பப்பட்டுத் தம்மைக் கவனிக்க வந்த நபர்களாகவே தோன்றுமாம். பின்பு அச்சமுற்றோன் அழிவான் என்ற மொழிகளை ஞாபகப்படுத்தி மனத்தைத் தேற்றிக் கொள்வாராம்.” (15)

மேலும் செல்லம்மா அவர்கள் கூறியதாவது: “பாரதியாருடன் புதுவை சென்ற நண்பர் அவரை புதுவையில் விட்டு விட்டு, கூடலூர் சென்று என் தமையனிடம் இந்த விஷயத்தைக் கூறினார். அதை என் தமையனார் கேட்டு, பாரதியாரைப் போய்ப் பார்த்து, அவருக்குத் தேவையான துணிமணி முதலியவற்றை வாங்கிக் கொடுத்து விட்டு சென்னைக்கு வந்து என்னை அழைத்துப் போய் எங்கள் ஊராகிய கடயத்தில் கொண்டு விட்டார்.” (16)

‘இந்தியா’ இதழின் பதிவு பெற்ற ஆசிரியர் முரப்பாக்கம் சீனிவாசன் என்பவர் 21.8.1908 இல் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உண்மையில் எதையும் எழுதத் தெரியாது. பெயருக்குத்தான் அவர் ஆசிரியர். எனவே 12.9.1908 இல் இந்தியா ஏட்டின் உண்மையான உரிமையாளர் எஸ்.என்.திருமலாச்சாரியும், உண்மையான ஆசிரியரான சி.சுப்பிரமணிய பாரதியும் விசாரணைக்குப் பயந்து புதுச்சேரிக்கு ஓடினர் எனக் காவல்துறை குறிப்பு எழுதி உள்ளனர். (17)

பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என்.திருமலாச்சாரியும் அங்கு சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910 இல் ‘இந்தியா இதழை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று. இந்தக் காலகட்டத்தில் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார். அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு. அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார். இவர்களை பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாக செல்லம்மாள் கூறுகிறார். (18)

புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911ல் வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராக குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு.அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார். (19)

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர். “புதுச்சேரி கிருஷ்ணப்பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதை பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார். (20)

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. “இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தார்” என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார். (21)

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. (22) பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது:

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்”

என்ற கடிதம் அவனது சட்டைப்பையில் இருந்தது. (23)

ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சிநாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும்.

ஆஷ் கொலைக்கும் பாரதிக்கும் தொடர்பு உள்ளது என்பதை முன்பு சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் பாரதியார் தண்டனைக்குப் பயந்து, தனக்கும் அக்கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என 8.4.1914 இல் இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டனால்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும், ஆனால் அவரைப் புதுவையில் பார்த்ததாகச் சாட்சியம் அளித்த தபால் ஆபீஸ் குமாஸ்தா கூட வாஞ்சி அய்யர் வீட்டுக்கு வந்தார் என்றோ... என்னைச் சந்தித்து என்னுடன் காணப்பட்டார் என்றோ சொல்லத் துணியவில்லை.” (24)

இக்கடிதத்தில் மேலும் பாரதி எழுதியிருப்பது என்னவென்றால், 1912இலேயே தன் நிலையை விளக்கி சென்னை கவர்னராக இருந்த லார்டு கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். (25)

சென்னை கவர்னராக லார்டு பெண்ட்லாண்டு வந்ததும் பாரதி தன் நிலையை விளக்கி அவருக்கும் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். (26)

“நான் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி மூன்று வருஷங்களுக்குப் பிறகு, தொலைதூரத்திலுள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் யாரோ ஒருவர், கொடுங்கோன்மைக்குப் பெயர் வாங்கிவிட்ட ஒரு கலெக்டரைச் சுட்டுக் கொன்றாரென்பதால், போலீஸ் கீழ்மட்ட ஆட்களது யோசனையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக்கி என் மீது வாரண்டு பிறப்பித்தது. ஆனால் மேன்மை தாங்கிய கவர்னரின் விருப்பம் கூட அவருடைய பிற்போக்கான சகாக்களால் தடுக்கப்படுகிறதென நான் கருத வேண்டியிருக்கிறது. ஆகையால் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராகிய உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை அனுப்புகிறேன்... எனக்கு லார்டு பெண்ட்லாண்ட் நீதி வழங்க நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.” (27)

பாரதியின் இக்கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்ன? பாரதி ஆங்கிலேயரின் தயவின் மூலம் வழக்கு எதுவும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். இப்போது அவரிடமிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே போய் விட்டது. மேலே கண்ட கடிதத்தை எழுதிய அதே 1914 ஆம் ஆண்டில்தான், பாரதி அச்சமில்லை என்ற பாடலை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதினும்

... ... ... ...

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! (28)

பாரதி ஆங்கிலேய ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தபோதுதான் இப்பாடலை அவர் இயற்றியுள்ளார். பெரும்பாலான தமிழறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும் இப்பாடலை மேற்கோள் காட்டி பாரதியின் வீரத்தைப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் பாரதி வீரமுடன் வாழ்ந்தாரா என்றால் இல்லை என்பதுதான் இதன் மூலம் நமக்கு விடையாகக் கிடைக்கிறது.

1916 மே 25ல் சுதேசமித்திரனில் ‘சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து வருமாறு:

“பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” (29) என்ற முடிவுக்கு வந்து விட்டார். பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916ல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார். 1916 டிசம்பர் 26ம் தேதி சுதேசிமித்திரன் ஏட்டில் அவர் எழுதுகிறார்:

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களுக்கும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம்.” (30)

பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் எனக்கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதி, கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914 ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச்சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (31) கடலூர் வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர்.

பாரதிக்குக் கடலூர் சப்-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். (32)

பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

Om Sakthi

District Jail, Cuddalore,

28 November-1918

To,

His Excellency Lord Pentland,

Governor,

Fort St.George, Madras.

The Humble petition of C.Subramania Bharathi,

May it please your excellency,

It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurance on my part as your excellency may well remember, the Dy.I.G (C.I.D) was sent by your Excellency’s Government a few months back, to interview me at Pondicheery. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.

I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding. I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain Your Excellency’s most obedient Servant

C.Subramaia Bharathi.

(G.O.No.1331 dt.18.12.1918 Public) (32)

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்கு கடிதம் எழுதி, சென்னை அரசு டி.ஐ.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார். (33)

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். (34) மாநில அரசு மீண்டும் டி.ஐ.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை:

1. நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

2. பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும்.

3. அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் எழுத்துப்பூர்வமாகப் பாரதி ஒப்புக்கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918 இல் பாரதியை விடுதலை செய்தார். (35) ஆகவே, பாரதி சிறையில் இருந்த மொத்த நாட்கள் 20.11.1918 முதல் 14.12.1918 வரையுள்ள 25 நாட்களேயாகும். அதற்குள் அன்றைய பார்ப்பன உலகமே அதிர்ந்து போய் அவருடைய விடுதலைக்குப் பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கண்ட நிபந்தனைகளைப் பாரதி ஏற்றுக் கொண்டு நேராகக் கடயம் சென்று விட்டார். அங்கே சமயத் தொடர்பாகப் பேசியும், எழுதியும் வந்தார். அரசியல் வாடை என்பதே அவரிடம் துளியும் இல்லை.

மேலே கண்ட நிபந்தனைகளைத் தாம் ஏற்றுக் கொண்டுள்ளதைப் பற்றிப் பரலி சு.நெல்லையப்பருக்குப் பாரதி எழுதியுள்ள கடிதத்திலும் குறித்துள்ளார். 21 டிசம்பர் 1918 இல் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு, நமஸ்காரம்.

நான் ஸௌக்யமாகக் கடயத்துக்கு வந்து சேர்ந்தேன்...

‘பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்து அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக் கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்...

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை; நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேகிதர். தங்கமான மனுஷன். ஆதலால் அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்பவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடங் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளுக...”

உனதன்புள்ள

சி.சுப்பிரமணிய பாரதி. (36)

பாரதி, காந்தியைச் சந்தித்தாரா?

முதலில், இது குறித்து வ.ரா. கூறுவதைப் பார்ப்போம்.

“1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜி கத்தீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் குடியிருந்தார். காந்தி வழக்கம்போல் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர். அந்தச் சுவருக்கு எதிர் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள். நான் வாயில் காப்போன் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.

அந்தச் சமயத்தில் பாரதியார் மடமடவென வந்தார். “என்ன ஓய்” என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

பாரதியார் : மிஸ்டர் காந்தி, இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி : மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ : இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி : அப்படியானால் இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?

பாரதி : முடியாது, நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், “இவர் யார்?” என்று காந்தி கேட்டார். ராஜாஜிதான் அவர் எங்கள் தமிழ்நாட்டுக்கவி என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா? என்றார் காந்தி” என்று வ.ரா. கூறுகிறார். (37)

காந்தி சென்னைக்கு வந்தது 18.3.1919 இல். அன்று மாலையே கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காந்தி பேசிய பின் மூன்று பேர் மூன்று மொழிகளில் சொற்பொழிவாற்றினார்கள். மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆங்கிலத்திலும், வ.உ.சி. தமிழிலும், ஹரி சர்வோத்தமராவ் தெலுங்கிலும் பேசினார்கள். (38)

20.3.1919 இல் காந்தியின் வருகைக்கு நன்றி தெரிவித்து கடற்கரையில் ஒரு பெரும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சரோஜினி நாயுடு, டி.வி.கோபாலசாமி முதலியார், எஸ்.சோமசுந்தர பாரதி (இவர் தமிழில் பேசினார்). சத்தியமூர்த்தி தீர்மானங் கொண்டு வந்தார். (39)

இந்தக் காலகட்டத்தில் பாரதியார் காவல்துறைக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி கடயத்தில் இருந்தார். 1919 மே மாதத்தில் தான் பாரதி அரசிடம் நிபந்தனை தளர்வு பெற்றதாக கோ.கேசவன் குறிப்பிட்டுள்ளார். (40) அப்படியிருக்கும்போது 1919 மார்ச்சில் காந்தி சென்னை வந்தபோது, பாரதி எப்படி சென்னைக்கு வந்திருக்க முடியும்? 1919 பிப்ரவரியில் பாரதி காந்தியைச் சென்னையில் சந்தித்தார் என்பது எப்படிச் சரியாகும்? பாரதி 1919 இல் சென்னை வந்தார் என்றால் எத்தனை நாள் இருந்தார்? எங்கே தங்கினார். என்பதற்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எங்குமே சான்றுகள் கிடைக்கவில்லையே!

மேலும் காந்தி வந்திருந்தபோது ராஜாஜி, சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் எல்லாரும் வீட்டில் இருந்தனர் என்றும் அதே நேரத்தில் அவர்கள் யாரையும் கேட்காமலேயே பாரதி நேரடியாக முன்பின் பார்த்திராத காந்தியிடம் தாம் பேசவிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்ததாகவும் வ.ரா.கூறுகிறார். அப்படியானால் சென்னையில் பாரதிக்குக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்தது யார்? பாரதிக்கு அப்போது எந்த வகையான அரசியல் உணர்வு இருந்தது? சென்னையில் தனியாகக் கூட்டம் நடத்த அவருக்கு என்ன வாய்ப்பு இருந்தது?

காந்திக்கு ராஜாஜிதான் பாரதியை அறிமுகப்படுத்தினார் என வ.ரா.கூறுகிறார். ஆனால் காந்தியோ ராஜாஜியைப் பற்றிக் கூறும்போது, சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால் அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டுபிடித்தேன். ஏனெனில் நாங்கள் தங்கியிருந்தது ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காருக்கு சொந்தமான பங்களாவாகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கியிருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால் மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தைக் கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் இராஜகோபாலாச்சாரியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். இராஜகோபாலாச்சாரியாரோ தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால் மகாதேவ தேசாய் இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருநாள் சொன்னார் என்று காந்தி கூறுகிறார். (41)

இதிலிருந்து காந்தியும், இராஜாஜியும் அப்போதுதான் முதல் முறையாகச் சந்தித்தார்கள்; எனவே சரியான பேச்சுப் பழக்கம் இல்லை என்பது தெரிகிறது. அப்படி இருக்கும்போது ராஜாஜி எப்படி பாரதியை காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்க முடியும்? பாரதி காந்தியைச் சந்தித்தார் என்றும் பாரதி ஒரு பெரிய மஹான் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி கூறினார் என்றும் வ.ரா. கூறுவது பாரதிக்குப் புகழ் வரவேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு கற்பனையேயாகும் என்றால் அது மிகையாகாது.

உண்மையிலேயே பாரதியை காந்தி அப்படிப் போற்றியிருந்தால், பாரதியின் மறைவு 11.9.1921இல் நேர்ந்த சில நாள்கள் கழித்து 15.9.1921 இல் காந்தி சென்னைக்கு வந்து 10 நாள்களுக்கு மேல் தமிழகத்தில் தங்கிப் பல இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசியிருந்தும், பாரதியைப் பற்றி காந்தி எங்குமே குறிப்பிடவில்லை எனத் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலாசிரியர் அ.இராமசாமி குறிப்பிடுகிறார். (42) உண்மையில் பாரதி மீது காந்தி உயர்ந்த மதிப்பு வைத்திருந்தால் அவரைப் பற்றிப் பேசியிருக்க மாட்டாரா?

திலகர் மறைந்த போது, 1.8.1920 இல் அங்கு சென்றார் காந்தி. திலகரின் பாடையைத் தூக்குவதற்குத் தோள்கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையைத் தொடக்கூடாது” எனக்கூறி, அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (43)

திலகரின் மறைவிற்குக் காங்கிரசில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தனர். காந்தியும் நேருவும் நேரில் சென்றிருந்தனர். ஆனால் இதுபோன்ற எதுவுமே பாரதிக்குக் காந்தியால் நடைபெறவில்லையே!

27.8.1920 இல் திருநெல்வேலியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாகாண மாநாடு நடந்தது. அப்போது பாரதி கடையத்தில் தான் இருந்தார். திருநெல்வேலி அங்கிருந்து மிக அருகில் தான் உள்ளது. எனினும் அம்மாநாட்டிற்கு பாரதியார் செல்லவில்லையே ஏன்? (44)

பாரதி காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டாரா?

பாரதி காந்தியைப் புகழ்ந்து பாடல் எழுதியுள்ளார் என்பது உண்மை. ஆனால் காந்தியின் ஒத்துழையாமைக் கொள்கையைப் பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. 12.8.1920 இல் காந்தி சென்னையில் பேசும்போது, ஒத்துழையாமையை மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். “பதினாறு வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தாய்-தந்தை அனுமதியளிக்காவிட்டாலுங் கூடத் தங்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்வதானால் கல்லூரிகளையும், பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டும்” (45) எனக் கூறினார்.

பாரதி இதை மறுத்து 30.12.1920 இல் சுதேசமித்திரன் ஏட்டில் எழுதியதாவது:

“இப்போது காண்பிக்கப்பட்டிருப்பதாகிய முதற்படியின் முறைகளால், அந்தப் பயன் எய்துவது சாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்டசபை ஸ்தானங்களைப் பகிஷ்காரம் செய்ய, மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களையெல்லாம் பிடித்துக் கொள்வார்கள். இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தியோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படிச் செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன் குறிப்பிட்ட பயனெய்தி விடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.” (46)

1921இல் பாரதி சென்னை மாகாணத்தில் அரசியல் வளர்ச்சி என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். அதில் புதுவையில் “நான் எவ்வளவோ தடுத்தும் கூட இந்தியா ஏட்டில் தீவிரமான கருத்துகள் வெளிவர அனுமதிக்கப்பட்டன” (47) என்று எழுதியுள்ளார்.

மேற்கண்ட சான்றுகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி 1906 முதல் 1908 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்றும் 1908 இல் புகலிடம் தேடிப் புதுவைக்குச் சென்றவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைய ஆரம்பித்து, பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்.

அடிக்குறிப்பு

1. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.76

2. மேற்படி நூல்.ப.77,78

3. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ) இரா.வெங்கடாசலபதி, மக்கள் வெளியீடு, சென்னை, ப.31,32

4. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும், ப.79

5. என்.சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.98

6. மேற்படி நூல் ப.102

7. மேற்படி நூல் ப 105

8. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.77

9. மேற்படி நூல் ப.80

10. என்.சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.173-183

11. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.108

12. பிரேமா நந்தகுமார், சுப்பிரமணிய பாரதி, ப.32

13. வ.உ.சி.யும் பாரதியும், ப.152

14. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ) இரா.அ.பத்மநாபன், ப.58

15. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.55

16. மேற்படி நூல், ப.57

17. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும் ப.209

18. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.65

19. V.V.S.Iyer. R.A.Padmanaban, P.111

20. தொ.மு.சி.ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும், ப.410

21. மேற்படி நூல், ப.411

22. பாரதி புதையல் பெருந்திரட்டு (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.22

23. ஆ.சிவசுப்பிரமணியன், ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், மக்கள் வெளியீடு, ப.30

24. பாரதியின் கடிதங்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.47

25. மேற்படி நூல் ப.51

26. மேற்படி நூல் ப.53

27. மேற்படி நூல் ப.55

28. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ.1994, ப.254

29. பாரதித் தமிழ் (தொ.ஆ) பெ.தூரன். ப.175

30. மேற்படி நூல் ப.223

31. கோ.கேசவன், பாரதியும் அரசியலும் ப.130

32. பாரதியின் கடிதங்கள், ப.57

33. ப.இறையரசன், இதழாளார் பாரதி, நி.செ.பு.அ. ப.396, 398

34. ரா.அ.பத்மநாபன், சித்திரபாரதி, ப.138

35. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.130,131

36. பெ.தூரன், பாரதித் தமிழ் (தொ.ஆ) ப.297, 298

37. வ.ரா, மகாகவி பாரதியார், பழனியப்பா பிரதர்ஸ், ப.163-165

38. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.235-237

39. மேற்படி நூல் ப.239

40. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.214

41. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.245

42. மேற்படி நூல், ப.319

43. தனஞ்செய்கீர் லோக்மான்ய திலகர், பாப்புலர் பிரகாசன், பம்பாய் (ஆங்கில நூல்) ப.442

44. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.214

45. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.274

46. பெ.தூரன், பாரதித்தமிழ் (தொ.ஆ) ப.340

47. பாரதிப் புதையல் பெருந்திரட்டு ப.553

(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் இரண்டாம் அத்தியாயம்)

http://www.keetru.com/literature/essays/va..._vallavan_1.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியின் பார்ப்பன இன உணர்வு

வாலாசா வல்லவன்

பாரதிக்கு இளமைக் காலம் முதலே பார்ப்பன இன உணர்வு இருந்து வந்துள்ளது என்பதை வாழ்க்கை வரலாறு, கவிதைகள், கதைகள், கட்டுரைகள் முதலியவற்றைப் படிக்கும் போது அறிய முடிகிறது. ஆகவே இவருடைய பார்ப்பன இன உணர்வு எத்தகையது என்பது இவண் ஆராயப்படுகிறது.

பாரதியார் தன்னுடைய சுயசரிதையைக் ‘கனவு’ என்ற தலைப்பில் 1910இல் வெளியிட்டுள்ளார். இதில் இவருடைய இளமைக் காலத்தில் தன்னுடைய தந்தைக்கு வறுமை நிலை வந்ததைக் கூறும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய

பாழடைந்த கலியுகம் ஆதலால்

வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே

மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன் (1)

எனக் கூறுகிறார். பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என்பது மனு தர்மத்தின் விதி. இந்தப் பாழாய்ப் போன கலியுகத்தில் தன்னுடைய தந்தை வியர்வை சிந்திப் பொருள் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேர்ந்தது என்று உளம் நொந்து கூறுகிறார்.

‘சமூகம்’ என்ற தலைப்பில் பாரதி நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடுகிறார்:

வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் - தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி

பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி

நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே - செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி (2)

இங்குப் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்கிறார். அப்படியானால் பார்ப்பானுக்கு என்றைக்கும் சூத்திரன் உழைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்; பார்ப்பான் கோவில் பூசை செய்து விட்டு நோகாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.

‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலிலும் பாரதி நால்வருணத்தைக் கெடுத்து விட்டார்களே எனக் கூறி வருந்துகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் - அதை

நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன் (3)

என்கிறார்.

பாரதி தமிழகத்தில் வாழ்ந்தாலும் வடவரின் ஆரியக் கலாச்சாரத்தை விரும்பினார் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது:

வேள்விகள் கோடி செய்தால் - சதுர்

வேதங்கள் ஆயிரம் முறைப்படித்தால்

மூளும் நற்புண்ணியந்தான் (4)

பாரதியின் பாடல்களில் சில பார்ப்பனர்களைக் கண்டிப்பது போலத் தோன்றும். அவற்றைப் படித்து விட்ட அறிஞர்களில் சிலர், பாரதி பார்ப்பனர்களை எப்படியெல்லாம் கண்டிக்கிறார் பாருங்கள் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளுவதோடு, பாரதியைப் பார்ப்பன எதிர்ப்பாளர் எனக் காட்ட முனைகின்றனர். உண்மையில் பாரதி அந்த எண்ணத்தோடு தான் அப்படிப் பாடினாரா என்பது ஆய்வுக்குரியதாகும்.

எடுத்துக்காட்டாக,

‘ஸ்வதந்திரப் பள்ளு’ என்ற பாடலில் பாரதி பின்கண்டவாறு எழுதுகிறார்:

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்

பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே (5)

இந்தப் பாடலைப் பாரதி பள்ளர்கள் களியாட்டம் ஆடுவதாகக் கருதி இயற்றியுள்ளார். எனவே பாரதி மகிழ்ச்சியோடுதான் இப்பாடலை இயற்றியுள்ளார் என எண்ணத் தோன்றும். பாரதியின் இப்பாடலுக்கு மயங்காத தமிழ் அறிஞர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இந்தப் பாடலை இவர் மகிழ்ச்சியோடு பாடவில்லை என ‘இந்தியா’ ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டயம் சீனிவாசன் கூறுகிறார்.

“எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும், தான் விசேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார். நான் என்ன வேலையாயிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது, தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார். அவருடைய ‘பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம்’ முதல்பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது.

‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே, அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிரேன் என்றார்” (6) எனப் பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார்.

அதைப் போல ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்ற பாடல். இந்தப் பாடலைப் படித்தவுடன் பாரதி பார்ப்பனர்களை எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் எனத் தோன்றும். இந்தப் பாடலை முழுமையாகப் படித்துப் பார்த்தால் தான் இதன் பொருள் நன்கு விளங்கும். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாளராக இருந்தபோது எழுதப்பட்டது இப்பாடல். அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும் தான் காவல்துறையில் பணியாற்றினார்கள். நம்மவர்களால் சாதாரணக் காவலர் வேலையில் கூடச் சேர முடியாத காலம் அது.

காவல்துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் பாரதிக்குச் சில துன்பங்களை விளைவித்து வந்தனர். (ஆதாரம்: பாரதி-காலமும் கருத்தும்; ஆசிரியர்: தொ.மு.சி.இரகுநாதன்) எனவேதான் பாரதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு - ஐயோ

நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு

பாயும் கடிநாய்ப் போலிசுக் - காரப்

பார்ப்பனுக் குண்டிதிலே - பிழைப்பு

பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்

பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை

இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்

மூன்றுமழை பெய்யுமடா மாதம்

இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் - இவர்

ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார் (7)

இப்பாடல் மூலம் பாரதி உணர்த்துவது என்ன? வேதம் ஓதும் பார்ப்பானை உயர்த்திப் போற்றும் பாரதி வெள்ளையனிடம் போலீசாக இருக்கும் பார்ப்பனர்களை மட்டுமே கண்டிக்கிறார். பார்ப்பான் மற்றவர்களால் அய்யர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே பாரதியின் உட்கிடக்கை என்பது இதன் மூலம் புலனாகிறது.

பாரதி புதுவையில் இருந்தபோது கனகலிங்கம் என்ற ஆதித்திராவிடருக்குப் பூணூல் மாட்டி விட்டு, “உன்னை இன்று முதல் பார்ப்பான் ஆக்கி விட்டேன்” என்று கூறினார். இதனால் பாரதி ஒரு சாதி ஒழிப்பு வீரர் என்று பலரும் கருதுகின்றனர். கனகலிங்கம் என்பவர் வள்ளுவர் சாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்கள்தான் ஆதித்திராவிடர்களின் வீடுகளுக்குப் புரோகிதம் செய்யச் சொல்வார்கள். பறைச்சேரிக்குப் பார்ப்பனர்கள் செல்வதில்லை. பார்ப்பனர்கள் மேல்சாதியினர் வீடுகளில் செய்யும் சடங்குகளைப் பறைச்சேரியில் வள்ளுவர்கள்தான் செய்வார்கள்.

எனவேதான் பாரதி கனகலிங்கம் என்ற வள்ளுவனுக்குப் பூணூல் மாட்டி விட்டு, ‘உன்னைப் பார்ப்பான் ஆக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். கனகலிங்கம் வள்ளுவந்தான் என்பதை பாரதியே உறுதிப்படுத்தியுள்ளார். “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு” (8)

இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜ்யம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஆதி திராவிடர்கள் பிற மதங்களுக்கு செல்லாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் செயல் இது. இதை எப்படிப் புரட்சிகரமானச் செயலாகக் கருத முடியும்?

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த

நாட்டினில் இல்லை; குணம் நல்ல தாயின்

எந்தக் குலத்தினரேனும்; உணர்

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். (9)

என்று பாரதி பாடியுள்ளதால், பாரதிக்குச் சாதி உணர்வு இல்லை எனப் பலர் கருதுகின்றனர். பாரதி நந்தனை ஏன் உயர்வாகப் பாடினார் என்றால், நந்தன் ஒரு பார்ப்பன அடிமை என்பதாலேயே. தில்லை நகருக்கு வந்தவன் ஊருக்குள் கூட நுழையவில்லை. பல நாட்கள் தில்லை நகரின் எல்லையிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். தீட்சிதர்கள் கனவில் சிவன் தோன்றி நந்தனைத் தீக்குளிக்கச் செய்து அழைத்து வரும்படி கூறியதாக நந்தனிடம் கூறி தீக்குளிக்கச் செய்தனர். நந்தன் தீயில் இறங்கிச் செத்தான். ஆனால் அவன் பார்ப்பன வடிவம் பெற்றுச் சிவனடி சேர்ந்ததாகப் பார்ப்பனர்கள் கதை கட்டி விட்டார்கள்.

நந்தன் புரட்சிகர குணமேதுமின்றி, பார்ப்பனர்கள் சொல்லியபடியெல்லாம் செய்ததால் தான் பாரதி நந்தனைப் புகழ்கிறார். குணத்தினால் ஒருவன் மேல்சாதி ஆக முடியாது என்று பாரதிக்குத் தெரியாதா என்ன? பாரதி மனுநீதி முதலான சாஸ்திரங்களை ஆழமாகப் படித்தவர். பாரதி நந்தனைப் பார்ப்பான் எனப் புகழ்வது ஒரு வஞ்சகமே. பாரதியின் சமகாலத்தில் இயக்கம் நடத்திய அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியவர்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே, ஏன்? அதற்குப் பதிலாக நந்தனையும் சாமி சகஜானந்தரையுமே பாரதி ஆதித்திராவிடர்களுக்கு வழிகாட்டிகளாகக் காட்டுகிறாரே, ஏன்?

பாரதி மீசை வைத்துக்கொண்ட காரணத்தினால் கூட சிலர் இவர் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பாக மீசை வைத்துக் கொண்டதாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அப்படி இல்லை. பாரதியே கூறக் கேட்போம்:

“வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா?’ என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்” (10) என்று பாரதி கூறியுள்ளார். பாரதி காசியில் படித்ததால் வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றி மீசையை வைத்துக் கொண்டார் என்பதே உண்மை.

சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.

“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.” (11)

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?” (12)

டாக்டர் நாயரின் ஸ்பர்டேங்க் உரையைப் படித்தால் அதில் அவர் பார்ப்பனர்களை அடியுங்கள் உதையுங்கள் என்று கூறியதாகத் தெரியவில்லை. அவருடைய கூட்டம் கேட்டுவிட்டு வந்த சிலர் ஆத்திரமுற்று ஒரு சில பார்ப்பனர்களை அடித்ததாகவே வைத்துக் கொள்வோம். சென்னையில் உள்ள பார்ப்பனரை அடித்தால் புதுவையில் உள்ள பாரதிக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாரதி 20.11.1918 வரை புதுவையில் இருந்தார். டாக்டர் நாயர் பஞ்சமர் மாநாட்டில் பேசியது 7.10.1917 இல். பெரியார் சொல்லுவாரே, “கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் காஷ்மீரிலுள்ள பார்ப்பானுக்கு நெறிகட்டிக் கொள்ளும்” என்று. அது பாரதிக்கு இங்கு முற்றிலும் பொருந்தி விடுகிறது.

ஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை பாரதி ஆய்வு செய்து எழுதுகிறார். “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை இழந்ததினால். அறிவை அபிவிருத்தி செய்தல், பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள் அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை அஞ்சாது போதனை செய்தல் முதலிய பிராமண தர்மங்களையும், வீரத்தன்மையை பரிபாலித்தல் முதலிய ஷத்திரிய தர்மங்களையும் வியாபாரம் கைத்தொழில் என்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்... இதுவே நமது வீழ்ச்சிக்குக் காரணம்” (13)

பாரதி தன் கதைகளில் கூட, பார்ப்பனச் சாதியின் உயர்வைப் பற்றியே கூறுகிறார். ‘பிராயச்சித்தம்’ என்ற கதையில் சாதிகெட்ட பார்ப்பனனைச் சாதியில் சேர்க்க ரூ.50,000 செலவு செய்யும்படிக் கூறி கதையை முடிக்கிறார். அக்கதையின் சுருக்கம் வருமாறு:

“ஆங்கிலம் படித்த ராமச்சந்திரய்யர் என்பவர் வெளிநாடு சென்று மேரி குட்ரிச் என்ற வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வருகிறார். இங்கு வந்தவுடன் அந்த வெள்ளைக்காரப் பெண் நம்ம ஊர் பார்ப்பனப் பெண்களைப் போலவே ‘மடிசார்’ புடவை கட்டிக்கொள்கிறாள். தன் பெயரையும் ஸீதாதேவி என்று மாற்றிக் கொள்கிறாள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு அசல் பார்ப்பனப் பெண் போலவே மாறிவிட்டாள். அவன் கடல் கடந்து வந்ததினாலும், வேறு இனத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாலும், அவனை மீண்டும் பிராமணர் சாதியில் சேர்க்க அவ்வூர் பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள். அப்போது மாஷாபூப் தீஷிதர் என்பவர், “பிராம்ஹணா மமதேவதா! (பிராமணர் எனக்குத் தெய்வம்) என்று ஸ்ரீமந் நாராயணனே சொல்லுகிறார்; அப்படியிருக்கையில் யாரும் பிராமணப் பதவியிலிருந்து நழுவக் கூடாது, நழுவினாலும் மறுபடியும் சேர்ந்து கொள்ள வேண்டும்” என்கிறார். இக்கதையின் முடிவில், ரூ.50,000 செலவு செய்து (ப்ராயச் சித்தம்) சாதி கெட்ட பார்ப்பனரான ராமச்சந்திர தீட்சிதரைப் பார்ப்பன சாதியில் சேர்த்துக் கொள்வதாகக் கதை முடிகிறது. (14)

பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தில் எழுதிய கதை ‘சந்திரிகையின் கதை’. இக்கதை முழுவதையும் எழுதி முடிக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். இக்கதையில் சுப்புசாமி கோனாருடைய மகள் மீனாட்சியின் மீது கோபால் அய்யங்காருக்கு காதல் ஏற்படுகிறது. அந்த அய்யங்கார் இடையர் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறார். அதற்கு அந்தக் கோனார், ‘நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். சூத்திரச் சாதியைச் சேர்ந்தவன் நான். என்னுடைய பெண்ணைப் பிராமணருக்குக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் வந்து சேரும். எனவே எனக்கு இதில் சம்மதம் இல்லை’ என்கிறார். இதைக் கேட்ட கோபால் அய்யங்கார் ‘நிஜமான பிராமணன் பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், என்னிடத்தில் தமிழில் மனு ஸ்மிருதி இருக்கிறது. உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள்’ என்கிறார். (15)

இக்கதையின் மூலம் பார்ப்பனர்கள் எந்தச் சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்பதைப் பாரதி மனுநீதியை ஆதாரம் காட்டி முடிக்கிறார். ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்று மூலம் அறியலாம்.

“பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, ‘பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, ‘கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.

நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்க ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம், “உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால் தானே நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று” என்று சொல்லி அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார்.

அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் பிள்ளை. பாரதி வீட்டில் ஒரே குழப்பம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.

பாரதி புறப்பட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது.” (16) எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார்.

பாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை. பார்ப்பனப் பெண்ணை கீழ்ச்சாதிக்காரன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, பார்ப்பன ஆண் எந்த சாதிப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதான் அவரின் கருத்தாக உள்ளது.

பாரதியார் ‘ஞானரதம்’ என்ற கதையில் நால்வருணத்தை வலியுறுத்தியுள்ளார். “ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரணமாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமல் பாதுகாப்பதே பிராமணன் கடமையாதலாலும் பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும். ஷத்திரிய தர்மத்திற்கும், பிராமண தர்மங்களுக்கும் ஊனம் நேரிடுமாயின் ஜன சமூகம் முழுவதுமே ஷீணமடைந்து போய்விடும்” (17) என்கிறார்.

இந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர 1917இல் பாரதி கூறும் வழி என்னவென்றால் மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்பதே:

“கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புதுயுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதாயுகம். அப்போது இந்த உலகமே மாறும். அநியாயங்களெல்லாம் நொறுங்கித் தவிடு பொடியாகி விடும். நாலு குலம் மறுபடியுமேற்படும். அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்ய மாட்டார்கள். அன்பே தெய்வமென்று தெரிந்து கொள்வார்கள். அன்பிருந்தால் குழந்தையும் தாயும் ஸமானம்; ஏழையும் செல்வனும் ஸமானம். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும், பஞ்சம் என்ற வார்த்தையே இராது. தெற்குத் தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனிவரும் அகப்பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம் செய்வார்கள், அவர்கள் ஊரூராகப் போய் ஜனங்களுக்குத் தர்மத்தைச் சொல்லி ஜாதி வழக்கை எல்லாம் தீர்த்து வைப்பார்கள். அப்போது தர்மம் நிலை பெறும்.” (18)

1919 ஜுன் மாதம் பாரதி கடையத்தில் இருந்தபோது அவர் மகள் தங்கம்மாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன் தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது. மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாத்துரைக்கு தூக்கமே வரவில்லை. விடியற்காலை 4 மணிக்குத் தங்கை செல்லம்மாளை அழைத்துக் கொண்டு பாரதியிடம் சென்று, ‘இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும்’ என்றார். பாரதியும் மகிழ்ச்சியுடன் சரி என்றார்.

அங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார். வழக்கமான தலைப்பாகை கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்ற பூணூலுடன் பஞ்ச கச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர். அதை விட ஆச்சரியம் தந்தது அவர் ஸம்ஸ்கிருத மந்திரங்களை அழுத்தந் திருத்தமாக அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும்.” (19)

கடைசிக் காலத்தில் எல்லோருக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவர் கூறுவதைப் பாருங்கள்:

“ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கி விட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பஷணத்தை நிறுத்தும்படிச் செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும்.” (20)

மேற்கண்ட சான்றுகளினால் பாரதிக்கு இளமையில் காசியில் படித்த காலந்தொட்டு கடைசிக்காலம் வரையிலும் பார்ப்பன இன உணர்வு மேலோங்கி இருந்தது என்பதை அறியலாம்.

அடிக்குறிப்பு:

1. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.311

2. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.371

3. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.566

4. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.233

5. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.83

6. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ.) இரா.வெங்கடாசலபதி, ப.141

7. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.22

8. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.395

9. பாரதியார் கவிதைகள், ப.277

10. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.29

11. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்

12. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394

13. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.458

14. மேற்படி நூல், ப.115-123

15. பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், ப.219

16. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164

17. பாரதியார் கவிதைகள், ப.72,73

18. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.244,245

19. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.148

20. பாரதியார் கட்டுரைகள், ப.401

(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் மூன்றாம் அத்தியாயம்)

http://www.keetru.com/literature/essays/va..._vallavan_2.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியின் பார்வையில் திராவிடர் இயக்கம்

வாலாசா வல்லவன்

1916 ஆம் ஆண்டின் கடைசியில் சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர்.சி.நடேசனார் மற்றும் பலர் ஒன்றாகச் சேர்ந்து அரசியலிலும், சமூகத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பார்ப்பனரல்லாதார் இயக்கமான “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த இயக்கம் பார்ப்பனரல்லாதார் உயர்விற்காகவும் உரிமைக்காகவும் பாடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் பாரதி இவ்வியக்கத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இங்கே காண்போம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றிப் பாரதியார் 1917 இல் சுதேசமித்திரனில் எழுதியதாவது:

“இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. இதில் உண்மை இல்லை. உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்து விட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும், ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிசிபாலிடி, சட்டசபை முதலியவற்றில் கவுரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.

‘பிராமணரல்லாதோர்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து கொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது; எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன. ‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு, இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்...”

“பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்” (1) என்று பாரதி கூறியுள்ளது எவ்வளவு பெரிய ஏமாற்று, புரட்டுத்தனம்! இந்தப் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி பொய்யான கிளர்ச்சியாம்; அதன் தலைவர்கள் பதவி வெறி பிடித்தவர்களாம்; ஆரியர்கள், திராவிடர்கள் என்று கூறி அபாண்டமான அர்த்தம் கற்பித்துக் கொண்டார்களாம். அந்தக் கிளர்ச்சியில் உண்மை இல்லாததால் விரைவில் அழிந்து விடும் என்று பாரதி கூறியுள்ளார்.

ஆனால் அவ்வியக்கம் அன்று தென்னாட்டில் மட்டும் தான் இருந்தது. இன்றோ அது இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் பாரதியின் கணிப்பில்தான் உண்மையில்லை என்பது தெரிகிறது. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சனை வந்தவுடன் பாரதி பார்ப்பனர்களைக் காப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். பாணியில் வேண்டுமென்றே ஒரு குழப்பமான கருத்தை எழுதுகிறார்.

பிராமணர் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு பாரதி எழுதியுள்ளார்:

“பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள். ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.

அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.” (2)

வேதம், உபநிடதம், மனுநீதி முதலியவற்றை நன்கு படித்த பாரதியாருக்குப் பிறப்பினால் தான் பிராமணன் என்பது தெரியாதா என்ன? தெரியும். நம் முன்னோர்கள் பிராமணர் அல்லாதார் வளர்ச்சிக்கு என ஒரு கட்சி வைத்தவுடன் நம் மக்களைக் குழப்பத்தில் தள்ளவே பாரதி இக்கருத்தை எழுதியுள்ளார். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாரதியின் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். பாரதியியைப் பின்பற்றித்தான் துக்ளக் சோ ‘எங்கே பிராமணன்?’ என்று எழுதினார் போலும்!

1920 டிசம்பர் 1 ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர்-திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்தவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார்.

“ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வேலை செய்து வரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்குப் பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படிச் செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம் மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாகப் பிராமணத் துவேசம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடையார் சென்னை நகரத்து முக்கியமான கல்விஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள்.

காமம், குரோதம் முதலிய தீய குணங்களை வேதம், அஸுரரென்று சொல்லி அவற்றைப் பரமாத்மாவின் அருள்வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுவதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப்பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸுரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவில் இருந்தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியாவின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு அதன் பூர்வ குடிகளைத் தாழ்த்தி விட்டனரென்றும் அபாண்டமான கதை கட்டி விட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்துவப் பாதிரிகள் மிக்க ஆவலுடன் மனனம் செய்து வைத்துக் கொண்டு தம்மிடம் இங்கிலீஸ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமணரைத் தவிர மற்ற வகுப்பினர் தென்னிந்தியாவில் மாத்திரம் அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்தில் (வேதமெழுதிய காலத்தில்) விரோதிகளாக இருந்தனரென்றும், ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸுரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்க வேண்டுமென்ன்றும் போதிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இதில் மற்றொரு விநோதமுண்டு. அஃதியாதென்றால் இந்தியாவில் பிராமணர்களிலேயே முக்கால் பங்குக்கு மேல் பழைய சுத்தமான ஆரியர்கள் அல்லரென்றும் விசேஷமாகத் தென்னிந்த்தியாவில் இவர்கள் பெரும்பகுதி அஸுர வம்சத்தாருடன் கலந்து போனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பியப் பண்டிதரும் தெரிவிக்கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப்போது உங்களைப் போல் அஸுரராய் விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்க வேண்டுமென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகின்றதன்றோ?

மேலும் இந்தத் திராவிடர் என்போர், அஸுர, ராஷஸர்களின் ஸந்ததியாரென்பதும், அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக்கைக்காக ஒரு ஷணம் பாவனை செய்து கொள்வோம். அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தின் பிராமணரின் மந்திரத்தால் அஸுரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ்முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரியவில்லை. பிராமணர்களையடுத்து ஷத்திரியர்களே ராஜ்யமாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. இது நடந்தது ஐரோப்பிய பண்டிதரின் கணக்குப்படிப் பார்த்தாலும் எண்ணாயிர வருஷங்களுக்குக் குறையவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டை மறுபடி மூட்டுவது என்ன பயனைக் கருதி?” (3)

இப்போது தெரிகிறதா பாரதி எந்த முகாமில் இருந்தார் என்று? அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் சாதிக்கு உயர்வு வேண்டும் என்கிற போது மூச்சுக்கு முந்நூறு தரம் ஆரியர் வீரத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிர்ப்பாகத் திராவிடர்கள் கட்சியைத் தொடங்கியவுடன் ஆரியர்-திராவிடர் போராட்டம் பொய்க்கதை என்றும் கிறித்துவப் பாதிரிகளின் தூண்டுதல் என்றும் கதை அளக்கிறார்.

பாரதிக்குத் திராவிடர் இயக்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பதை, அவர் நண்பர் ஆர்.சீனிவாசவரதன் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. அவர் 1920 இல் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் கடயத்தில் பாரதியைச் சந்தித்தபோது நடந்த சம்பவம் இது.

“பாரதியிடம் அவ்வூர் அன்பர்கள் சிலர் வந்தனர். நடந்த சம்பாஷணையிலிருந்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போலத் தோன்றிற்று. ‘அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள்; அவர்களுக்கு முன்னால் ஆதித்திராவிடர்கள். அதற்கு முன் இருந்தது மிருகங்கள்; ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டிப் பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் அனைவரும் அவைகளிடம் விட்டு விட்டுப் போகவேண்டியதுதான்!” என்று பாரதி கூறினார்” (4) என்கிறார்.

டாக்டர்.எ.எம்.நாயர் ‘ஜஸ்டிஸ்’ இதழில் திராவிடருக்குத் தனிநாடு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதை கிண்டலடித்துப் பாரதி கூறியது இது. இப்படிப்பட்ட பாரதியைத்தான் நம்மில் பலர் போற்றுகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கஷியார் என்ற போலிப்பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது” (5) என்று கூறுகிறார் பாரதியார். டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்களெல்லாம் 1916 வரையில் காங்கிரஸில் இருந்தவர்கள்தான். அதில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கண்டு சகிக்க முடியாமல் தான் 1916 இல் திராவிடர் இயக்கத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். டாக்டர் நாயர் சுயநலமே இல்லாதவர் என்பதைப் பாரதியே 1906 இல் எழுதியுள்ளார்.

1906 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அன்று 32 உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களில் நால்வர் போட்டியிட்டனர். முதல் முறை ஓட்டு வாங்கிய விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் 10

பி.எம்.சிவஞானமுதலியார் 10

ஸர்.வி.ஸி.தேஸிகாச்சாரி 6

சர்.பிட்டி.தியாகராய செட்டியார் 5

கூடுதல் 31

16 ஓட்டுக்கு மேல் வாங்கினால்தான் ஒருவராவது சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே தியாகராய செட்டியார் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இரண்டாம் முறை ஓட்டுகள் பெற்ற விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் 14

பி.எம்.சிவஞான முதலியார் 11

ஸர்.வி.ஸி.தேஸிகாச்சாரி 7

கூடுதல் 32

சபைத்தலைவர், குறைவாக ஓட்டு வாங்கிய தேசிகாச்சாரியாரை விலகிக் கொள்கிறாரா என்றார். அவர் விலக மறுத்து விட்டார். இதேநிலை நீடித்தால் மாநகராட்சியின் சார்பாக ஒருவரும் சட்டமன்றம் செல்ல முடியாது. எனவே டாக்டர் டி.எம்.நாயர் அதிக வாக்குகள் பெற்றும் தான் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் பாரதி எழுதியதாவது:

“தக்க சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்டு) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையில் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் கார்ப்பரேஷனுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும். என்றபோதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்தமுண்டாக்குகிறது.”

இப்படி 1906 இல் டாக்டர் நாயரைப் பற்றிப் பெருமையாக எழுதிய பாரதி 1917 இல் நாயரைத் தேசவிரோதி என்று எழுதுகிறார் என்றால் என்ன காரணம்? திராவிடர்கள் தனிய இயக்கம் தொடங்கிவிட்டார்களே என்ற ஆத்திரம் தானே? வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 1916 காலக்கட்டத்தில் பாரதி பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரரா என்ன? இல்லையே! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 1916 டிசம்பர் 26 இல் பாரதி, சுதேசமித்திரன் ஏட்டில் ஆங்கிலேயர் வெளியேற வேண்டாம் என்றுதானே எழுதியுள்ளார்!

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான்; மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” (7) என்கிறார் பாரதி. 1916 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன பாரதி நீதிக்கட்சித் தலைவர்களைத் தேசவிரோதிகள் என்று கூறுவது பார்ப்பனச் சாதி வெறி ஒன்றைத் தவிர வேறென்ன?

நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்தபோது அதையும் கிண்டலாகவும், குத்தலாகவும் எழுதுகிறார் பாரதி.

“புதிய யுகம் வரப்போகிறது; மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டி போடப்போகிறார் என்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக வெங்கட்ட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராமராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள். இஃதென்ன விநோதம்!” என்கிறார் பாரதியார்.

பாரதியார் டிராம் வண்டியில் செல்வது போலவும் எதிரிலே இரண்டு பேர் உரையாடுவது போலவும் ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்துள்ளார். அதிலே ஒரு முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுகிறார். “பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.”

கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

“பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமண துவேஷம் ஒன்றையே பெருங்கடமையாகவும் பரம தர்மமாகவும், ஜன்ம லஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாரிலும் பிராமண துவேஷமில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்’ என்றார்.

மீண்டும் முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

‘இதுவரை பிராமணரைப் பகைத்துக் கொண்டிருந்த போதிலும் இப்போது மந்திரி ஸ்தானம் கிடைத்ததிலிருந்தேனும், இவர்கள் அதிகப் பொறுப்புணர்ச்சியுடன் விசால புத்தி உடையவர்களாய்த் தமது பெயரைக் காத்துக்கொள்ள வேணும். இயன்றவரை எல்லா வகுப்பினருள்ளும் பஷாபாதமில்லாமல் பொதுவாக நடந்து வர முயற்சி செய்வார்களென்று நம்புகிறேன்’ இவர் சொல்லியதில் ஒருவித உண்மையிருக்கக் கூடுமென்று என் புத்திக்குப் புலப்பட்டது” என்கிறார் பாரதி. (8)

இது நீதிக்கட்சி அமைச்சரவைக்குப் பாரதி விடுத்த எச்சரிக்கை என்றே கொள்ளலாம். வகுப்புரிமையைக் கண்டித்து பாரதி எழுதியதாவது: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முறையை ஒழித்து விடவேண்டும். அது வெறும் சதி, ஏமாற்றென்பது ருஸுவாய் விட்டது. பிராமணரல்லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டன்றி மாற்றில்லை” (9) என்கிறார் பாரதி.

பாரதி வகுப்புரிமையை எதிர்த்த காரணம் அது பார்ப்பனர்களுக்குப் பாதகமாக இருந்தது என்பதால்தான். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த காலத்தில் வகுப்புரிமையை எதிர்த்ததாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அக்காலக் கட்டத்தில் பாரதிக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பது துளியும் இல்லை. மாறாக வருணாசிரமத்தில் அக்கறையுள்ளவராய் இருந்தார்.

இவரை விடத் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த வ.உ.சி. 1920லேயே வகுப்புரிமையை ஆதரித்துத் திருநெல்வேலி காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அது வருமாறு : “இந்த மாநிலத்தில் நிலவும் தற்பொழுதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கவுரவ உத்தியோகங்களிலும் பிராமணன், பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்” (10) என்கிறார் வ.உ.சி. (இந்து 25.6.1920)

மேற்கண்ட ஆதாரங்களால் 1916 முதல் 1921 வரை (அதாவது அவர் சாகும்வரை) பாரதியார் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் வந்துள்ளார் என்பதை அறியலாம்.

அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.402,404

2. மேற்படி நூல், ப.404-407

3. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.349-351

4. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், ப.185

5. பாரதியார் கட்டுரைகள், ப.352

6. பாரதி தரிசனம் முதல் தொகுதி, நி.செ.பு.அ. ப.348,349

7. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.223

8. மேற்படி நூல், ப.381

9. மேற்படி நூல், ப.393

10. வ.உ.சிதம்பரம் பிள்ளை, என்.சம்பத்-பெ.சு.மணி, பப்ளிகேசன்ஸ் டிவிசன், 1995, புதுதில்லி- ப.224,225

http://www.keetru.com/literature/essays/va..._vallavan_3.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது?

வாலாசா வல்லவன்

1904 ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் இதழில் பாரதி மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபோது சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த வைத்தியநாத அய்யர் என்பவர் ‘சக்ரவர்த்தினி’ என்னும் பெயரில் பெண்களுக்கான மாத இதழை நடத்தினார். இந்த இதழில் பாரதியார் 1904 முதல் 1906 வரை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில்தான் பாரதியார் பெண் விடுதலைக்காக மிகத் தீவிரமாக எழுதியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் காணலாம்.

“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம் என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தகையோயாகினும், எத்தன்மை உடையனவாயினும் நாம் அஞ்சக்கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்” (1) எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட, பெண்களை அழைக்கிறார்.

மேலும் தீவிரமாகப் பாரதி கூறுகிறார். “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று ராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிடவும் வேண்டும்.” (2)

பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள் தான் ஒழுங்காக இருக்க வேண்டும் என்கிறார் பாரதி.

“அடப்பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்தீரிகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்தீரிகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது. சீச்சி! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு அநியாயமும், கொடுமையும் செய்து பயனில்லை.” (3)

தொடக்க காலத்தில் உடன்கட்டை ஏறும் சதியைப் பாரதி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

“எண்ணிறந்த ஸ்த்ரிஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம்மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா?” (4) எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.

பாரதியார் இன்னும் ஒருபடி மேலே போய் ஸதியின் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை(அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடையிருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராசபுத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலீம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையில் பாரதி கூறியுள்ளார்.

தொடக்கக் கலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார்; கலப்புத் திருமணங்களை ஆதரித்தார்; பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டுவிடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துக்களைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.

“கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு

கஷிக்கும் அஃதுபொதுவில் வைப்போம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்” (கும்மி)

இப்படிப் பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்வருமாறும் எழுதுகிறார்:

“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்ப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறாது. இம்மாதிரியான கற்புடை இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்.” (7)

மேலே, பாரதி மாதிரிக்குக் காட்டியிருக்கும் பெண்கள் தங்கள் கணவனுக்காகவே வாழ்ந்தவர்கள்; பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அவர்களைத்தான் பாரதி கற்புடைய பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறார்.

1908 வரை பெண்விடுதலை பற்றிப் பாடிய பாரதி, புதுவைக்குச் சென்று வாழ்ந்த காலத்தில், மதவாதியாகவும் பெண்விடுதலையுணர்வு அற்றவராகவும் வாழ்ந்ததைச் சில சான்றுகள் முலம் அறிய முடிகிறது. கற்பு என்பதை எப்பாடுபட்டாவது பெண்கள் காக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறார். “தமிழ்நாட்டு மாதர்க்கு மட்டுமேயன்றி உலகத்து நாகரிக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச் சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரி எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும்.”(8)

பாரதி ஒரு மதவாதி. எனவே பதிவிரதத் தன்மையில் அதிக நம்பிக்கை கொள்கிறார்.

“ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மை உண்டாகும். பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்திரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது” (9) எனக் கூறுகிறார்.

1906இல் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் துளஸிபாயி என்னும் கதையின் முலம் வன்மையாகக் கண்டித்த பாரதி புதுவை சென்ற பின், தீவிர மதவாதியாக மாறிய காரணத்தினால் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:

“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகவேத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரிகளே மஹா ஸ்திரிகளாவார்கள்.”(10) 1909 ஆகஸ்ட் ‘இந்தியா` இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும்போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்ரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரி ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு இவர்களை நமக்கு முன்மதிரியாக வைத்துக் கொள்ளலாம்”(11) என்கிறார்.

இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் ‘தேசிய கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும்போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து இவர் கூறுவதாவது: “காதல் விடுதலை வேண்டுமென்று கூறும் கஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாஷி வைத்து ‘உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை’ என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தாகாத பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்வதென்பதும், ஆதலால் ‘விவாகம் சாச்வபந்தம்’ என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கஷியார் சொல்கிறார்கள்...

...ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற்கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை... விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மணவாழ்க்கைக்கும் பொருந்தாது. மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால் குழந்தைகலின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரஷணை பண்ணமுடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்னு முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது.”(12)

இந்துக் கலாச்சாரத்தைக் காக்க வேண்டிய கடமையைப் பாரதி நம் நாட்டுப் பெண்களிடம் ஒப்படைக்கிறார். பிறகு அவர்கள் எப்படி விடுதலையடைய முடியும்? “தமிழ்நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய சகோதரிகளே! இத்தனைப் பழமையும், மேன்மையுஞ் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரிகத்தைக் காட்டிலும் கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆரிய, திராவிட நாகரிகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது. இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்கும் கடமை உங்களைச் சார்ந்தது.”(13)

தமிழர் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று கூற மனமில்லாமல் ஆரிய, திராவிட நாகரிகம் உங்கள் பாதுகாப்பில் உள்ளது என்கிறார். முன்பு ஆரியர்-திராவிடர் என்பதே பொய் என்று கூறியவர் இப்போது அதை எற்றுக் கொள்கிறார்.

பாரதியின் கதைகளில் கூடப் பெண்களுக்கு விடுதலை அளிப்பதாக இல்லை.

ஏழைப் பெற்றோர் வசதியின்மை காரணமாக ஒரு முதிய பிராமணனுக்குத் தம் மகளை மணம் முடித்து வைக்கின்றனர். முதிய வயதான கணவன் இருக்கும் போதே, கந்தாமணி என்ற அந்த பிராமணப் பெண் வேறு ஒரு கணவனைத் தேடிக் கொண்டு அவனுடன் வாழ்வதை பாரதியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவளைக் கிறித்துவ மதத்திற்ககு மாற்றி விடுகிறார் என்று பாரதியின் கதைமகளிரின் பாத்திரங்களை ஆய்வு செய்த வ.உமாராணி கூறுகிறார். (14)

பாரதி இறுதிக் காலத்தில் எழுதிய கதையாகிய ‘சந்திரிகையின் கதை’யில் வரும் விசாலாட்சி என்பவள் ஒரு இளம் விதவை. அவள் மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். அவ்வாறே மறுமணம் செய்து கொள்கிறாள். அவள் கணவன் பெயர் விசுவநாத சர்மா. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது. இருந்த போதிலும் அவள் கணவனுக்கு பணிவிடை செய்து வருகிறாள். இதைத் தெய்வீகக் காதல் என்கிறார் பாரதியார்.

இதில் என்ன தெய்வீகத் தன்மை இருக்கிறது?

அந்தக் காலத்திலேயே பாரதி இவ்வளவு முற்போக்காகப் பெண் விடுதலையைப் போற்றி இருக்கிறாரே என்று காட்டுபவர்கள் அவருடைய தொடக்க காலக் கட்டுரைகளையே காட்டுகின்றனர். அவருடைய பிற்கால எழுத்துகள் என்பவவை முழுக்க முழுக்க மதம் சார்ந்தவை. எனவே அதில் பெண்கள் விடுதலை குற்த்துச் சிறப்பாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றெ சொல்லலாம்.

பெண் விடுதலையைப் பற்றிப் பாட்டும், கட்டுரையும் எழுதிய பாரதி, தன்னுடைய குடும்பத்திலுள்ள பெண்களுக்கு விடுதலை கொடுத்தாரா? இதோ பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன் கூறுகிறார்: “மாதர் சுதந்திரம் பாடிய கவிஞர் வீட்டில் அவர் இட்டதே சட்டம். செல்லம்மா தவிப்பு சொல்லி மாளாது” (16) என்கிறார்.

“ஒருநாள் பாரதி, 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடையத்திலிருந்து ஐந்து மைலில் உள்ள ஒரு அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது...தங்கம்மா தயங்கி வரமறுத்ததால் பாரதிக்கு கோபம் வந்து விட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்து விட்டார். தடுக்க வந்த மைத்துன்ர் மீதும் இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்”.(17)

பாரதிதாசன் பெண் விடுதலைக்கு முதன் முதலாக ஓங்கிக் குரல் கொடுத்தவர் என்று கூறுவாருமுளர். ஆனால் அவருக்கும் முன்னால் தமிழகத்தில் 1882 இல் இந்து ‘சுயக்கியான சங்கம்’ (Hindu Free Thought union) என்ற ஒரு அமைப்பு பாடுபட்டு இருக்கிறது. இந்து மதத்தில் சீர்திருத்தம், பார்ப்பனர் புறக்கணிப்பு, விதவைத் திருமணம், கலப்புத் திருமணம், பெண்கல்வி பேணல் போன்றவை இச்சங்கத்தின் நோக்கங்களாக இருந்துள்ளன. அதற்காக இச்சங்கத்தாரால் ‘தத்துவவிசாரிணி’, தத்துவ விவேசினி’ என்ற தமிழ் ஏடுகளும்,ஆங்கிலத்தில் ‘The Thinker’ என்ற ஏடும் நடத்தப்பட்டுள்ளன.

விதவைத் திருமணம் குறித்து அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு : “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பினர் தவிர பிராமணர் முதலிய சில வகுப்பினர் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்தாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன...

யவ்வனப் பருவமடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புணர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!.” (18)

(‘தத்துவ விவேசினி’,17.2.1881)

இப்படிப் பாரதிக்கு முன்பே பு.முனிசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், ’தமிழன்’ ஏடு நடத்திய அயோத்திய தாசபண்டிதர் மற்றும் பலர் சேர்ந்து இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்து புதிய சமுகம் அமையவும் பெண் விடுதலையடையவும் படுபட்டனர். இந்து மதத்திலுள்ள ஆபாசங்களைப் படம் பிடித்துக் காட்டுகிற தன்மையில், ‘இந்துமத ஆசார ஆபாச தாசினி’ என்னும் கவிதை நூலை அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர் 1890 களிலேயே எழுதி வெளிப்படுத்தினார். ஆனால் பாரதியோ 1904 முதல் 1908 வரையில் பெண்விடுதலையில் தீவிரமாக இருந்தது,1908க்கு பிறகு மிதவாதியாகிவிட்டார்.

1920 கால கட்டத்தில் தீவிர இந்து மதவாதியாகிவிட்ட காரணத்தால் அவரால் பெண்விடுதலை குறித்து எதையும் எழுத இயலாமல் போய்விட்டது பாரதி கடைசிக் காலத்தில் பெண்விடுதலை பற்றிய நோக்கம் இன்றி இருந்ததோடு பெண்ணடிமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது.

அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.243

2. மேற்படி நூல், ப.258, 59

3. மேற்படி நூல், ப.245

4. மகாகவி பாரதியார் சக்ரவர்த்தினி கட்டுரைகள், (தொ.ஆ) சீனிவிசுவநாதன், வானவில் பிரசுரம், ப.95

5. மேற்படி நூல், ப.101

6. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி., ப.359

7. மகாகவி பாரதியார், சக்ரவர்த்தினி கட்டுரைகள், ப.87

8. பாரதியார் கட்டுரைகள், ப.271

9. பாரதியார் கட்டுரைகள், ப.244

10. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.331,332

11. மேற்படி நூல், ப.379

12. பாரதியார் கட்டுரைகள், ப.350, 351

13. மேற்படி நூல், ப.265

14. பாரதியின் கதை மகளிர், ப.36-38

15. பாரதியார் கதைகள், வானதி பதிப்பகம், ப.246-251

16. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.121

17. மேற்படி நூல், ப.140

18. 110 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைச் சிந்தனைகள், வே.ஆனைமுத்து, பெரியார் 115 வது பிறந்தநாள் மலர், 1993, ப.12,13

http://www.keetru.com/literature/essays/va..._vallavan_4.php

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.