nunavilan

பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா?

Recommended Posts

பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா?

baddreamsca7.png

உங்கள் வாழ்வில் எப்பொழுதாவது மிகப் பயங்கரமானதும், உங்கள் மனத்தில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான சம்பவம் எதையாவது எதிர் காண்டிருக்கிறீர்களா? நிச்சம் இருக்கும்! ஈழத் தமிழர்களது வாழ்வு சென்ற இருபது வருடங்களாக தினம் தினம் இடர்பாடுகளுக்கு ஊடாகத் தான் நகர்கிறது. குண்டு வெடிப்பு, விமானத் தாக்குதல், எறிகணைவீச்சு, அந்நிய இராணுவத்தினது அடாவடித்தனம், உடல் ரீதியான தாக்குதல், சிறையில் அடைபடல், பாலியல் பலாத்காரம் போன்ற ஏதாவது வன்முறை ஒன்றினால் எங்களில் எவராவது ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் அது அதிசயம்தான். உடல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டால் கூட உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பீர்கள். இவற்றில் சிலவாவது மரண பீதியை ஏற்படுத்தக் கூடிய பாரிய சம்பவங்களாக உங்களை உலுப்பியிருக்கும். அத்தகைய சம்பவங்களில் ஏதாவது ஒன்றாவது ஒன்று உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து, அழுத்தமான வடுவை ஏற்படுத்தி உங்கள் தினசரி வாழ்க்கையையும், குடும்பத்தினருடனும்

சமூகத்தினதும் ஆன உறவாடலில் சிக்கலை ஏற்படுத்துகிறது எனில் நீங்கள் Post traumatic stress Disorder (PTSD) என்று சொல்லப்படும் நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்.

இது ஏதோ கேள்விப்படாத புதினமான நோய் என்று எண்ணிகிறீர்களா?. பெயர் புதிதாக இருக்கலாம், ஆனால் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் திரும்பிப் பார்த்தால் எத்தனை பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கக் கூடம் என்பதை இக்கட்டுரையை வாசித்து முடிந்த பின் நீங்கள் உணர்வீர்கள்.

எந்த ஒரு சமூகத்தையும் எடுத்துக் கொண்டாலும் அதில் 10 சதவிகிதத்தினர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன. போர் வறுமை முதலியன அதிகம் பாதிக்காத அமெரிக்காவில் கூட வருடாவருடம் 5.2 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் அடக்குமுறையால் வெடித்த உள்நாட்டுப் போர் காரணமாக இழப்புகளும், துன்பங்களும், நெருக்கீடுகளும் மலிந்த ஈழத் தமிழ் மக்களிடையே இந்நோயின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருக்கும்!

இந்நோய் உங்களுக்கோ நீங்கள் அறிந்த ஒருவருக்கோ இருக்கக் கூடும் எனக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

குறிப்பிட்ட அந்தப் பயங்கரச் சம்பவம் மீண்டும் முழுமையாக, நிஜமாகவே நடப்பது போன்ற உணர்வு எழுகின்றதா? அதுவும் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி அவ்வுணர்வு திடீரென ஏற்படுகின்றதா? எந் நேரமும் ஆபத்து சூழ்ந்து வரக்கூடும் என்ற பயமும் பாதுகாப்பற்ற உணர்வும் எழக் கூடும். இதனால் வெளிப்படையான தூண்டுதல் எதுவுமின்றியே எரிச்சல், கோபம், பதற்றம் போன்றவை தோன்றி உங்களைப் பாதிப்பதுடன் மற்றவர்கள் மனத்தையும் நோகச் செய்யலாம். முன்பு நடந்த அந்தச் சம்பவம் தொடர்பான பயங்கரக் கனவுகள் உங்களைத் தொல்லைப்படுத்துகிறதா? அல்லது அந்தத் திகிலூட்டும் நிகழ்வு பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்து அல்லல்படுத்துகிறா? இதனால் அண்மையில் நடந்த சம்பவங்களை நினைவு படுத்த முடியாத ஞாபக மறதி ஏற்படக் கூடும். எந்த விடயத்திலும் முழுமையான அக்கறை எடுக்கவோ மனத்தை ஒருமுகப்படுத்தவோ முடியாதிருக்கும். நடந்த அந்தப் பயங்கரச் சம்பவம் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தோன்றுகிறதா. நீங்களாக வலிந்து யோசிக்காவிட்டால் கூட உங்களை மீறி அவ்வெண்ணம் பீறிட்டு எழுகிறதா? அந்தச் சம்பவம் தொடர்பான நினைவுகளைக் கிளறுகிற இடங்களுக்குச் செல்வதையும், அது சம்பந்தமான உரையாடல்களையும் நீங்கள் தவிர்க்க முனைகிறீர்களா? எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏதாவது சம்பவம் திடீரென நடந்தால் கூட நீங்கள் பதற்றம் அடைந்து நிலை தடுமாறி விடுகிறீர்களா? உதாரணமாக கதவு அடிபடுகின்ற சத்தமோ, ஆகாய விமான அல்லது கார்ச் சத்தமோ உங்களைப் பதற்றப்படச் செய்கிறதா? சிறுசிறு சம்பவங்கள் கூட உங்களை உணர்ச்சி வசப்படுத்தி தன்நிலை இழக்கவைக்கிறதா?

மற்றவர்கள் மரணித்துவிட்டபோது நீங்கள் மாத்திரம் உயிர் தப்பிவிட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆளாகின்றீர்களா?

மற்றவர்களில் நம்பிக்கை கொள்ளவோ, அவர்களிடத்தில் அக்கறை காட்டவோ, அவர்களுடன் உணர்வு பூர்வமாக நெருங்கிப்பழகவோ முடியாதிருக்கிறதா? சமுதாயத்திலிருந்து ஒதுங்கவும் தனிமையை நாடவும் முனைகிறீர்களா? உங்களுக்கு நித்திரைக் குழப்பம் ஏதாவது இருக்கிறதா? தூக்கம் கண்களைத் தழுவ நீண்ட நேரம் எடுக்கிறதா, அல்லது அடிக்கடி குழம்புகிறதா அல்லது வேளை கெட்ட நேரத்தில் கண்விழித்து மீண்டும் தூக்கம் வராமல் தொல்லைப்படுகிறீர்களா? வாழ்வில் ஆர்வமும், அக்கறையும் குறைந்து செல்கிறதா? எதையும் அப்புறமாகச் செய்யலாம் எனத் தள்ளி வைக்கத் தோன்றுகிறதா?

இவற்றில் ஒரு சில அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் நெருக்கிட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என எண்ணலாம். நீங்களாக முடிவு எடுக்க வேண்டாம். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசிப்பது முக்கியமானது.

மாறாக இவை எல்லாம் வெறும் மனப்பிரமைதானே? இவற்றை நோய் என்று எடுக்க வேண்டுமா என நீங்கள் எண்ணினால் மிகப் பெரிய தவறு செய்தவர் ஆகின்றீர்கள். உண்மையில் மனத்தில் ஏற்படுகின்ற அசெளகரியங்கள் உடல் நோய்களை விடப் பாரதூரமானவை. அவை நோயுற்றவரை மாத்திரமின்றி அவரது குடும்பத்தினரையும் சூழ இருப்பவர்களையும் கூடப் பாதிக்கிறது. தற்கொலை போன்ற ஆபத்தான முயற்சிகளுக்குக் கூட இட்டுச் செல்லக் கூடியவை.

இருந்தபோதும் இந்நோயைக் குணமாக்க மருந்துகளும் உளவளத் துணை உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பூரண குணமடையலாம்.

மாறாகச் சிலர் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மதுவையோ, போதைப் பொருட்களையோ நாடி அவற்றிக்கு அடிமையாகும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது. வேறு சிலர் சுயவைத்தியத்தல் இறங்கி ஆபத்தான மருந்துகளை தாமே உட்கொண்டு அழிந்து போவதுண்டு.

நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் முதன் முதலில்; வியட்நாமில் போரிட்டு பயங்கர அனுபவங்களைப் பெற்ற அமெரிக்க போர் வீரர்களில்தான் இனங் காணப்பட்டது. இன்றும் கூட போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

ஆனால் இது முழுமையாக போர் தொடர்பான நோய் அல்ல. வேறு பல நெருக்கீடுகளும் பயங்கர அனுபவங்களும் கூட இந்நோயைக் கொண்டு வரலாம். ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தால் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆழாக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் உள்ள ஒருவரினால் அடித்தோ துன்பப்படுத்தப்பட்டோ இருந்தால் கொலை, கொள்ளை, தீவைப்பு போன்ற ஏதாவது கொடூரமான குற்றச் செயலுக்கு ஆட்பட்டிருந்தால்

விமான விபத்து அல்லது வீதி வாகன விபத்துக்கு ஆளாகியிருந்தால் சூறாவளி, புயல், பயங்கரத் தீ விபத்து போன்ற ஏதாவது ஒன்றில் மாட்டுப்பட்டிருந்தால் நான் கொல்லப்படக் கூடும் இதிலிருந்து உயிர் தப்ப முடியாது என்பது போன்ற ஏதாவது ஒரு சம்பவத்தில் அகப்பட்டிருந்தால் நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அத்தகைய சம்பவம் நடக்கும்போது அவ்விடத்தில் இருந்திருந்தாலும் கூட இந் நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்நோய் எப்பொழுது வரும், யாருக்கு வரும்? எவருக்கும் வரலாம். எந்த வயதிலும் வரலாம், குழந்தைகளுக்குக் கூட வரலாம். ஆனால் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. சம்பவம் நடந்த பின் உடனடியாக ஆரம்பிக்கும் என்றில்லை. பெரும்பாலும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கலாம். ஆனால் சிலருக்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே வருவதுண்டு. நோய் வந்தால்கூட பெரும்பாலும் ஆறுமாத காலத்திற்குள் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை ஊட்டும் விடயமாகும். ஒரு சிலரில் சிகிச்சையை நீண்ட காலத்திற்குத் தொடர வேண்டியிருப்பதுண்டு.

இந்நோய்க்கான சிகிச்சையைப் பொறுத்தவரையில் இந்நோய் பற்றிய பயங்கள் நீங்கித் தெளிவு ஏற்பட்டாலே பெருமளவு குணமாகிவிடும். பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமே இதற்குக் காரணம் எனத் தெளிவுறுவதும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் பெருமளவில் இருப்பதை அறிவதும், அவர்கள் காலகதியில் குணமாகி மற்றவர்கள் போல சந்தோசமாக வாழ்வதை உணர்வதும் நோயாளியின் மனத்தில் நம்பிக்கையை ஊட்டி விரைவில் குணமாக்க உதவும்.

இதைத் தவிர எமது சமூகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமய, கலாசார ரீதியான பழக்கங்களும், நடைமுறைகளும் இந்நோயிலிருந்து விடுபடப் பெருமளவில் உதவி வருகின்றன. பகுத்தறிவு வாதம் பேசி அவற்றைக் கண்டிக்கவோ, பெறத் தயங்கவோ வேண்டியதில்லை. கோயில் செல்வதும், நேர்த்திக் கடன் வைப்பதும், மந்திரித்து நூல் கட்டுவதும், அபிஷேகம் செய்வதும் கூட நல்ல

பலனை அளிக்கக் கூடும். காய் வெட்டுதல், கழிப்புக் கழித்தல், பார்வை பார்த்தல், மருந்து விழுத்தல் போன்ற முறைகளை எமது பாரம்பரிய வைத்தியர்கள் மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலரைக் குணமாக்குகிறார்கள் என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது மதரீதியான, தமக்கு நம்பிக்கையுள்ள பாரம்பரிய முறைகளை பெறுவதே இதிலிருந்து விடுபட சிறந்த வழியாகும்.

இதைத் தவிர தனது குடும்பத்தில் அல்லது சமூகத்தில் உள்ள, அனுபவசாலியான முதியவரை அணுகி அவருடன் தனது பயங்கர அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தனக்றே;பட்ட மனப் பாதிப்பைக் குறைத்துக் கொள்ள முடியும்.

வைத்திய முறையைப் பொறுத்தவரையில் மருந்துகளுக்கு மேலாக உளவளத் துணையாளருடன் மனம் விட்டுப் பேசுவது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இது உள ஆலோசனையல்ல, உளவளத் துணையாளருடன் கலந்துரையாடுவதன் மூலம் தனக்கு ஏற்ற முறையைத் தானே சுயகண்டுபிடிப்புச் செய்யும் நம்பிக்கையான வழிமுறையாகும்.

மனத்தையும் உடலையும் தளரச் செய்யும் பயிற்சிகள் மூலம் மனஇறுக்கத்திலிருந்து விடுபடுவதும் கூட ஒரு வகைச் மருத்துவச் சிகிச்சை முறைதான். சுவாசப் பயிற்சி, சாந்தியாசனம், தியானம், மந்திரம் ஜெபித்தல் போன்ற வழிமுறைகள் நல்ல பலன் அளிக்கும்.

இத்தகைய எளிய வழிமுறைகள் மட்டுமே பெரும்பாலானவர்களைக் குணமாக்கப் போதுமானது. நித்திரையின்மை, கடுமையான மனச்சோர்வு, பயங்கரக் கனவுகள் போன்றவை ஒருவரைத் துன்பப்படுத்துமேயானால் சில மாத்திரைகளையும் சில காலத்திற்கு உபயோகிக்க நேரலாம்.

அடக்குமுறையால் வெடித்த உள்நாட்டுப் போர் காரணமாக இழப்புகளும், துன்பங்களும், நெருக்கீடுகளும் எமது மக்களை வதைக்கிறது. உயர் பண்பாடும், கலாசார மேன்மையும், கல்விச் சிறப்பும், அமைதியான வாழ்க்கை முறையும் கொண்ட எமது சமுதாயத்தின் கட்டுக்கோப்பு உடைந்து சிதிலமடைந்து வருகிறது. இடப்பெயர்வு தினசரிக் கடமைபோலாகியிருந்தது. இவற்றால் மேற் கூறிய நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் மாத்திரமின்றி மனப் பதகளிப்பு (Anxiety), மனச்சோர்வு (Depression) பீதிநோய் (Phobia) போன்ற வேறுபல உளம் சார்ந்த நோய்களுக்கும் எமது மக்கள் ஆளாகித் தவிக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

http://www.geotamil.com/pathivukal.htm

Share this post


Link to post
Share on other sites

போரால் எங்களுக்கு எத்தனை பாதிப்பிகள்...

Share this post


Link to post
Share on other sites

சொல்லணா துயரங்களை அனுபவிக்கும் எமது தாயக மக்களின் தியாகங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

சொல்லணா துயரங்களை அனுபவிக்கும் எமது தாயக மக்களின் தியாகங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

நினைத்தாலே நெஞ்சு எரியும்..

Share this post


Link to post
Share on other sites

அச்சோ..அச்சோ..உதில நுணா அண்ணா சொன்ன சில அறிகுறிகள் எனக்கு இருக்கிற மாதிரி தெரியுது என்ன கொடுமை இது.. :lol: (ஏன் எண்டா நம்மளிற்கும் உந்த நித்தா வருதில்ல இரவில)..ஆனா அப்படி ஒரு பயங்கர சம்பவும் நமக்கு ஏற்பட்ட மாதிரி தெரியல பாருங்கோ.. :wub:

எனக்கு நித்திரையில அடிகடி பாவனா அக்கா வந்து தொல்லை கொடுக்கிறா அதுக்கு என்ன செய்யலாம் எண்டும் ஒருக்கா சொன்னியள் எண்டா நன்னா இருக்கும் :lol: ..மற்றது என்னவெண்டால் நானும் கஜனி படத்தில வாற சூரியா அண்ணா மாதிரி பழச எல்லாம் மறந்து போட்டன்.. :wub: (யாருக்கு அதுகள பத்தி தெரிந்தா சொல்லுங்கோ என்ன)... :wub:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா உன் மனம் தெளிவா இருந்தா எதுவுமே உன்னை தொல்லை பண்ணாது" :wub:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

அச்சோ..அச்சோ..உதில நுணா அண்ணா சொன்ன சில அறிகுறிகள் எனக்கு இருக்கிற மாதிரி தெரியுது என்ன கொடுமை இது.. :( (ஏன் எண்டா நம்மளிற்கும் உந்த நித்தா வருதில்ல இரவில)..ஆனா அப்படி ஒரு பயங்கர சம்பவும் நமக்கு ஏற்பட்ட மாதிரி தெரியல பாருங்கோ.. :)

எனக்கு நித்திரையில அடிகடி பாவனா அக்கா வந்து தொல்லை கொடுக்கிறா அதுக்கு என்ன செய்யலாம் எண்டும் ஒருக்கா சொன்னியள் எண்டா நன்னா இருக்கும் :) ..மற்றது என்னவெண்டால் நானும் கஜனி படத்தில வாற சூரியா அண்ணா மாதிரி பழச எல்லாம் மறந்து போட்டன்.. :icon_idea: (யாருக்கு அதுகள பத்தி தெரிந்தா சொல்லுங்கோ என்ன)... :wub:

இதைத் தவிர எமது சமூகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமய, கலாசார ரீதியான பழக்கங்களும், நடைமுறைகளும் இந்நோயிலிருந்து விடுபடப் பெருமளவில் உதவி வருகின்றன. பகுத்தறிவு வாதம் பேசி அவற்றைக் கண்டிக்கவோ, பெறத் தயங்கவோ வேண்டியதில்லை. கோயில் செல்வதும், நேர்த்திக் கடன் வைப்பதும், மந்திரித்து நூல் கட்டுவதும், அபிஷேகம் செய்வதும் கூட நல்ல

பலனை அளிக்கக் கூடும். காய் வெட்டுதல், கழிப்புக் கழித்தல், பார்வை பார்த்தல், மருந்து விழுத்தல் போன்ற முறைகளை எமது பாரம்பரிய வைத்தியர்கள் மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலரைக் குணமாக்குகிறார்கள் என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது மதரீதியான, தமக்கு நம்பிக்கையுள்ள பாரம்பரிய முறைகளை பெறுவதே இதிலிருந்து விடுபட சிறந்த வழியாகும். இல்லாட்டி செய்வினைதான் செய்யோணும் :(

Share this post


Link to post
Share on other sites

இதைத் தவிர எமது சமூகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சமய, கலாசார ரீதியான பழக்கங்களும், நடைமுறைகளும் இந்நோயிலிருந்து விடுபடப் பெருமளவில் உதவி வருகின்றன. பகுத்தறிவு வாதம் பேசி அவற்றைக் கண்டிக்கவோ, பெறத் தயங்கவோ வேண்டியதில்லை. கோயில் செல்வதும், நேர்த்திக் கடன் வைப்பதும், மந்திரித்து நூல் கட்டுவதும், அபிஷேகம் செய்வதும் கூட நல்ல

பலனை அளிக்கக் கூடும். காய் வெட்டுதல், கழிப்புக் கழித்தல், பார்வை பார்த்தல், மருந்து விழுத்தல் போன்ற முறைகளை எமது பாரம்பரிய வைத்தியர்கள் மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி பலரைக் குணமாக்குகிறார்கள் என்பதையும் குறிப்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது மதரீதியான, தமக்கு நம்பிக்கையுள்ள பாரம்பரிய முறைகளை பெறுவதே இதிலிருந்து விடுபட சிறந்த வழியாகும். இல்லாட்டி செய்வினைதான் செய்யோணும் :unsure:

கு..சா தாத்தா அது என்ன செய்வினை எண்டா நான் தமிழில தான் செய்வினை,செயற்பாட்டு வினை எண்டு படித்தனான் உது என்ன புதுசா இருக்கு..?? :rolleyes: ..உதை செய்தா எல்லா பிரச்சினையும் போய் பாவனா அக்கா எனக்கு கிடைத்திடுவாவோ தாத்தா.. :o

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

கு..சா தாத்தா அது என்ன செய்வினை எண்டா நான் தமிழில தான் செய்வினை,செயற்பாட்டு வினை எண்டு படித்தனான் உது என்ன புதுசா இருக்கு..?? :rolleyes: ..உதை செய்தா எல்லா பிரச்சினையும் போய் பாவனா அக்கா எனக்கு கிடைத்திடுவாவோ தாத்தா.. :o

அப்ப நான் வரட்டா!!

:unsure: இருக்கிற அக்கா காணாது ஆக்கும்

இதுக்கை புதுசா வ்ஏறை பாவனா அக்கா தேவைபப்டுதாக்கும்

ஆமா பாவனா எப்ப இருந்து அக்கா ஆகினவா :lol:

Share this post


Link to post
Share on other sites

:lol: இருக்கிற அக்கா காணாது ஆக்கும்

இதுக்கை புதுசா வ்ஏறை பாவனா அக்கா தேவைபப்டுதாக்கும்

ஆமா பாவனா எப்ப இருந்து அக்கா ஆகினவா :lol:

கண்ணணுக்கு எல்லாருமே அக்கா தான் உது தெரியாதோ.. :unsure: (இதுவும் ஒரு வகை பாதுகாப்பு தான்)..பிறகு உதுக்காக என்னோட கோவிக்கிறதில்ல..நான் பகிடிக்கு..ஓ பாவனாவோ எப்ப புளிக்கும் எண்டு தெரிந்திச்சோ அப்ப இருந்தாக்கும் பாருங்கோ.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now