Jump to content

பீஜிங்க் ஒலிம்பிக் 2008


Recommended Posts

உதைப்பந்தாட்ட முடிவில் யமுனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். கந்தப்பு 2ம் இடத்தையும் இரசிகை 3ம் இடத்தையும் பிடித்துள்ளார்கள். இம்மூவர் மட்டுமே ஆர்ஜென்ரினா தங்கப்பதக்கத்தைப்பெறும் எனச் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439577

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

7 போட்டியாளர்கள் இம்முறை சீனா அதிக தங்கப்பதக்கங்களைப் பெறும் எனச் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். யமுனா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். 2ம் இடத்தில் கந்தப்பு தொடர்ந்து இருக்கிறார். 3ம் இடத்தை அமுதன் கைப்பற்றியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439586

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி: 'சத்தமே' காரணம்-வில்வித்தை பயிற்சியாளர்

ஜாம்ஷெட்பூர்: இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் ஜொலிக்க முடியாமல் போனதற்கு ஸ்டேடியங்களில் காணப்பட்ட ரசிகர் கூட்டமும், அவர்கள் எழுப்பிய பெரும் சத்தமுமே காரணம் என இந்திய வில்வித்தைப் பயிற்சியாளர் சஞ்சீவ சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டிகள் நடந்த ஸ்டேடியத்தில் பெரும் கூட்டம் கூடியது. அவர்கள் எழுப்பிய பெரும் சத்தமே, நமது வீரர்கள் சரிவர கவனம் செலுத்தி வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம்.

தங்களது இலக்கில் நமது வீரர், வீராங்கனைகளால் கவனம் செலுத்த முடியவில்லை. இதுவே நமது தோல்விக்கு முக்கிய காரணம் என்றார்.

சஞ்சீவ சங்கின் கருத்தை பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளரான பூர்ணிமா மஹதோவும் ஆமோதித்தார். நமது வீரர், வீராங்கனைகள் மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பும் விளையாடக் கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

சஞ்சீவ சங்கின் கருத்தை பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளரான பூர்ணிமா மஹதோவும் ஆமோதித்தார். நமது வீரர், வீராங்கனைகள் மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பும் விளையாடக் கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதுவும் பயிற்சியின் ஒரு பகுதி. குறை கூறுவதை விட்டு விட்டு சீனா, அமெரிக்க போன்ற நாடுகளை போல் வர முயற்சிக்க வேண்டும்.முக்கியமாக நாடகங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் பயிற்சியின் ஒரு பகுதி. குறை கூறுவதை விட்டு விட்டு சீனா, அமெரிக்க போன்ற நாடுகளை போல் வர முயற்சிக்க வேண்டும்.முக்கியமாக நாடகங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும். :):lol:

சரியாகச் சொன்னீர்கள் நுணாவிலான் .

இல்லாவிட்டால் , இவர்களுக்காக ஆட்கள் இல்லாத இடத்தில் ஒலிம்பிக் நடத்த வேண்டும் . :D

Link to comment
Share on other sites

quote name='தமிழ் சிறி' date='Aug 23 2008, 01:02 PM' post='439607']

சரியாகச் சொன்னீர்கள் நுணாவிலான் .

இல்லாவிட்டால் , இவர்களுக்காக ஆட்கள் இல்லாத இடத்தில் ஒலிம்பிக் நடத்த வேண்டும் . :D

அடுத்த முறை லண்டனில் எங்கேயாவது பாலைவனப்பக்கம்(இருந்தால்) போட்டியை வைக்கச்சொல்லி ஒலிம்பிக் குழுவினரை கேட்க ஆலோசனை வழங்கலாம். அப்பாடா 3 பதக்கத்துகே இந்த துள்ளல் என்றால் சீனா என்ன செய்யவேண்டும்?? :):lol:

Link to comment
Share on other sites

யாழ்களப்போட்டியில் 13 போட்டியாளர்கள் சரியாக இம்முறை ஒலிம்பிக்கில் முதல் இரண்டு இடங்களை சினா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிடிக்கும் எனப் பதில் அளித்துள்ளார்கள். இதனால் நுணாவிலான், வாசகன் ஆகியோர் 8ம், 9ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439689

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூடை பந்தாட்டத்தில் அமெரிக்கா 38 - ஸ்பெயின் 31

Link to comment
Share on other sites

ஜேர்மனி கொக்கிப் போட்டியில் வெற்றிபெறும் என்பதை இணையவன் மட்டுமே சரியாகப் பதில் அளித்துள்ளார். இதனால் அவர் 12ம் இடத்தில் இருந்து 7ம் இடத்துக்கு தாவியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439760

Link to comment
Share on other sites

6 போட்டியாளர்கள் இம்முறை பாகிஸ்தான் ஒரு பதக்கத்தையும் பெறாது என சரியாகக் கணித்திருக்கிறார்கள். ரமா, இணையவன்,கறுப்பி ஆகியோர் முறையே 6ம்,7ம், 11ம் இடத்தில் இருந்து 5ம், 6ம், 10ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439765

Link to comment
Share on other sites

கறுப்பியும், தமிழ்சிறியும் மட்டுமே டென்மார்க் 2 தங்கப்பதக்கங்களைப் பெறும் எனச் சரியாகக் கணித்திருக்கிறார்கள். முதல் இடத்தை கந்தப்பு பிடித்துள்ளார். 2ம் இடத்தில் யமுனா இருக்கிறார். 3ம் இடத்தில் தொடர்ந்து அமுதன் இருக்கிறார். 9ம் இடத்தில் இருந்த நுணாவிலான் இப்பொழுது 8ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439774

Link to comment
Share on other sites

யமுனா, கந்தப்பு, தமிழ்சிறி, நுணாவிலான், ரமா ஆகிய 5 போட்டியாளர்கள் சரியாக இம்முறை நியூசிலாந்து 3 தங்கப்பதக்கங்களைப் பெறும் எனக் கணித்திருக்கிறார்கள். 4ம் இடத்தில் இருந்த தமிழ்சிறி 3ம் இடத்தைப் பிடித்துள்ளார். 8ம்,10ம்,13ம் இடத்தில் இருந்த நுணாவிலான், கறுப்பி,ஈழப்பிரியன் ஆகியோர் முறையே 6ம்,8ம்,12ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439781

Link to comment
Share on other sites

கனடா இம்முறை 3 தங்கப்பதக்கங்களைப் பெறும் என்பதனை கந்தப்பு. மணிவாசகன், சுப்பண்ணை ஆகியோர் சரியாகக் கணித்திருக்கிறார்கள். 9ம்,10ம்,13ம் இடத்தில் இருந்த மணிவாசகன், இரசிகை, சுப்பண்ணா ஆகியோர் முறையே 5ம், 8ம்,11ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439783

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஐரோப்பிய நேரம் மதியம் இரண்டு மணிக்கு ஒலிம்பிக்கின் நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறும் .

நிச்சயம் நன்றாக இருக்கும் , உங்கள் தொலைக்காட்சியில் பார்க்க தவறாதீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு இன்றுடன் நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 24, 2008

பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

உலகில் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் இந்தாண்டு சீனாவில் நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

உலகின் பார்வையை தன் வசம் வைத்திருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, ரித்மிக் ஜின்னாஸ்டிக், கால்பந்து, வாட்டர்போலோ ஆகிய பிரிவுகளில் 12 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடக்கின்றன.

அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு (சீன நேரப்படி இரவு 8 மணி) நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 2 மணி நேரம் நடக்கும் கோலாகல நிகழ்ச்சியில் கண்கவர் வாண வேடிக்கைகளும் இடம் பெறுகின்றன.

தொடக்க நிகழ்ச்சியில் 15,000 கலைஞர்கள் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி பிரமிக்க வைத்தனர். நிறைவு விழாவில் 7,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவு விழாவின்போது இந்திய கொடியை ஏந்தி செல்கிறார் வெண்கலம் வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர்குமார்.

நிறைவு விழாவின் முக்கிய அம்சமாக, ஒலிம்பிக் கொடி, அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் நாட்டிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. பெய்ஜிங் மேயர் ஜின்லாங்கிடம் இருந்து லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் ஒலிம்பிக் கொடியை பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம் கலந்து கொள்கிறார்.

இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்திய சீனா 49 தங்க பதக்கங்களுடன் முதல் இடத்தை வகிக்கிறது. 2வது இடத்தில், 33 தங்கங்களுடன் அமெரிக்கா உள்ளது. இதில் 8 தங்கங்களை வென்றார் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்.

இந்தியா சார்பில் 56 பேர் பங்கேற்றனர். இதில் இந்தியாவுக்கு ஒரு தங்கமும், 2 வெண்கலமும் கிடைத்தது. அபினவ் பிந்த்ரா, சுஷில்குமார், விஜேந்தர் ஆகியோர் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

பெய்ஜிங்: கடந்த 16 நாட்களாக உலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வைத்திருந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து கோலாகலமான நிறைவு விழா நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கில் நடந்தன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.

கடந்த 8ம் தேதி கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உலக நாடுகளின் அணிகளின் அணிவகுப்புடன் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்.

204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

உலகின் பார்வையை தன் வசம் வைத்திருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, ரித்மிக் ஜின்னாஸ்டிக், கால்பந்து, வாட்டர்போலோ ஆகிய பிரிவுகளில் 12 தங்க பதக்கங்களுக்கான போட்டிகள் நடந்தன.

அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு (சீன நேரப்படி இரவு 8 மணி) நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. 2 மணி நேரம் நடக்கும் கோலாகல நிகழ்ச்சியில் கண்கவர் வாண வேடிக்கைகளும் இடம் பெற்றன.

தொடக்க நிகழ்ச்சியில் 15,000 கலைஞர்கள் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி பிரமிக்க வைத்தனர். நிறைவு விழாவில் 7,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

நிறைவு விழாவின்போது மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. கென்ய வீரர் வன்சிரு தங்கப் பதக்கம் வென்றார்.

நிறைவு விழாவின்போது இந்திய கொடியை ஏந்தி சென்றார் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த விஜேந்தர் குமார்.

நிறைவு விழாவின் முக்கிய அம்சமாக, ஒலிம்பிக் கொடி, அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் நாட்டிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. பெய்ஜிங் மேயர் ஜின்லாங்கிடம் இருந்து லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் ஒலிம்பிக் கொடியை பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காம் கலந்து கொள்கிறார்.

பதக்கங்களை வாரிய சீனா ...

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனாவே முதலிடம் பிடித்துள்ளது.

51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை சீனா வென்றது.

தங்கப் பதக்கங்களின் அடிப்படையில், பட்டியலில் அமெரிக்காவுக்கு 2வது இடம் கிடைத்தது. அமெரிக்கா 36 தங்கம், 38 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 110 பதக்கங்களைப் பெற்றது. மொத்தப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.

23 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலத்துடன் மொத்தம் 72 பதக்கங்களுடன் ரஷ்யா 3வது இடத்தைப் பிடித்தது.

ஒலிம்பிக் துளிகள்...

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முக்கிய அம்சம் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைத்தது.

- பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் விசேஷமாக அமைந்தது. இதுவரை இல்லாத அளவு ஒரு தங்கம், இரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது இந்தியா.

இந்தியா சார்பில் 56 பேர் பங்கேற்றனர். இதில் அபினவ் பிந்த்ரா தங்கமும், சுஷில்குமார், விஜேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பெருமை சேர்த்தனர்.

- 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஆடவர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் போல்ட்டுக்கு தங்கம் கிடைத்தது.

- மாரத்தான் போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றை ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே வென்று சாதனை படைத்தனர்.

- கால்பந்தில் அர்ஜென்டினா தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

- ஜிம்னாஸ்டிக்ஸில் சீனாவின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. மொத்தம் உள்ள 18 தங்கப் பதக்கங்களில் சீனா 11ஐ அள்ளியது.

- நிறைவு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் கலந்து கொண்டன.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டியில் நோர்வே 3 தங்கப்பதக்கங்களை இம்முறை கைப்பற்றும் என ஒரு போட்டியாளர்களும் சரியாகக் கணிக்கவில்லை. 7ம்,12ம் இடத்தில் இருந்த ரமா, வாசகன் ஆகியோர் முறையே 6ம், 10ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். முதல் இடத்தில் கந்தப்புவும், 2ம் இடத்தில் யமுனாவும், 3ம் இடத்தில் தமிழ்சிறியும், 4ம் இடத்தில் அமுதனும், 5ம் இடத்தில் மணிவாசகனும் இடங்களில் மாற்றமின்றி தொடர்ந்து இருக்கிறார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439932

Link to comment
Share on other sites

ஜேர்மனி 16 தங்கங்களைப் பெறும் என்பதையும் ஒரு போட்டியாளர்களும் சரியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் சண்முகி 15 தங்கங்களைப் பெறும் என்று பதில் அளித்திருக்கிறார். 4ம் இடத்தில் இருந்த அமுதன் மீண்டும் 3 ம் இடத்துக்கு வந்துள்ளார். தமிழ்சிறி 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 7ம் இடத்தில் இருந்த நுணாவிலான் தற்பொழுது 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439938

இதுவரை 26 வினாக்களில் 13 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டிருகின்றது.

Link to comment
Share on other sites

பிரித்தானியா 19 தங்கப் பதக்கங்களைப் பெறும் என்பதனை ஒரு போட்டியாளர்களும் சரியாகக் கணிக்கவில்லை. 12ம் இடத்தில் இருந்த சுப்பண்ணா 11ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439948

Link to comment
Share on other sites

சீனா,அமெரிக்கா, இரஸ்யா ஆகிய நாடுகள் ஒலிம்பிக்கில் இம்முறை முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் என 12 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். 12ம் இடத்தில் இருந்த கறுப்பி 11ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை 15 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 11 வினாக்கள் இருக்கின்றன. விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439975

Link to comment
Share on other sites

நெதர்லாந்து இம்முறை 7 தங்கப்பதக்கங்களைப் பெறும் என யமுனாவும், இணையவனும் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். 9ம் இடத்தில் இருந்த இணையவன் 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439982

Link to comment
Share on other sites

தென் கொரியா 13 தங்கங்களைப் பெறும் என்பதனை ஒரு போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளிக்கவில்லை. 11ம், 12ம் இடத்தில் இருந்த கறுப்பி, சுப்பண்ணா ஆகியோர் முறையே 7ம்,10மிடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439990

இன்னும் 9வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படவில்லை.

Link to comment
Share on other sites

யப்பான் 9 தங்கப்பதக்கங்களைப் பெறும் என ஒரு போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளிக்கவில்லை. வாசகன் 8 தங்கப்பதக்கங்கள் பெறும் எனப் பதில் அளித்திருந்தார். இதனால் வாசகன் 11ம் இடத்தில் இருந்து 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரமா 9ம் இடத்தில் இருந்து 8ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=439995

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா 14 தங்கப்பதக்கங்களைப் பெறும் என வாசகன், கந்தப்பு, சண்முகி ஆகியோர் சரியாகக் கணித்திருக்கிறார்கள். இவ்வினாவுக்கு வழங்கிய புள்ளிகளின் முடிவில் பலரின் இடங்கள் இடமாறியுள்ளன. கந்தப்பு தொடர்ந்து முதலாம் இடத்திலும், யமுனா தொடர்ந்து 2ம் இடத்திலும் , தமிழ் சிறி தொடர்ந்து 4ம் இடத்திலும் இருக்கிறார். 7ம் இடத்தில் இருந்த வாசகன் 3ம் இடத்துக்கும், 6ம் இடத்தில் இருந்த இணையவன் 5ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். 9ம்,10ம்,12ம்,14ம் இடங்களில் இருந்த கறுப்பி,மணிவாசகன், இரசிகை, சண்முகி ஆகியோர் முறையே 8ம், 9ம், 10ம், 12ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=440005

இன்னும் 7 வினாக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.