Jump to content

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவு


Recommended Posts

பால்ராஜ் அண்ணாவிற்கு எனது அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:) வன்னி மண் தந்த ஒப்பற்ற தளபதி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், தலைவரின் நம்பிக்கை நட்சத்திரம் ! இனி என்ன செய்வோம் ?????

குடாரப்புத் தரையிரக்கத்துக்குப் பின் பால்றாஜ் அண்ணாவும் அவருடைய போராளிகளும் இடுப்பளவு நீரில் நடந்தபடி முன்னேறியதும், ஒற்றைக்கால் உபாதையுடன் போராளி ஒருவரின் துணை கொண்டு நீரினுள் நடந்தபடியே அன்று அவர் வழங்கிய தாக்குதல் உத்தரவுகள் இன்னும் எனது மனக்கண்ணின் முன்னால்.....!!!!!!

இறுதிவரை இருப்பாய் என்று நினைத்தோமே அண்ணா, இடை நடுவில் விட்டுச் சென்று விட்டாய் !

எம்மைத் தூக்கி நிறுத்திய தூண்களில் ஒன்றல்லவா இன்று உடை பட்டுப் போயிற்று ?!

மண்கிண்டி மலை முதல், ஆனையிறவு வரை உலவும் அந்தக் காற்றில் உணது சுவாசம் இன்னும் இருந்து கொண்டு இருக்கும் !

போய் வா அண்ணா, உன் நினைவு சுமந்தபடி முன்னேறி வருவோம்!

நீ நிம்மதியாய்ப் போய் வா!

.....நிகரற்ற எமது தளபதிக்கு வீரவணக்கம் !!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கங்கள் :)

Link to comment
Share on other sites

பால்ராஜ் அண்ணாவின் இழப்பு தாங்கமுடியாத துயரமாகவே இருக்கிறது. பால்ராஜ் அண்ணாவிற்க்கு எனது கண்ணீரஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

களம் பல கண்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களுக்கு எனது வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

இதை வேதனை என்பதா? சோதனை என்பதா?

என்ன கொடுமை....

அடுத்தடுத்து.....தொடர்கின்றதே...

சுய உடல் நலனில் அக்கறையின்றி..மண்ணையும், மக்களையும் காப்பதிற்காக தன்னையே அற்பணித்துக்கொண்ட

எங்கள் மைந்தனுக்கு எனது வீர வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம்!

வீரமறவன் பால்ராஜ் அண்ணா!

தமிழீழக் கனவிற்காய் வீரம்செறிந்த வாழ்வினனாய் வாழ்ந்து

வீரமறவனாய் பயணித்த நின் பணியைத் தொடர்வதென்பதே

உமக்கு நாம் செலுத்தும் வீரமரணம்.

உன் நெஞ்சில் கனன்ற கனவுகள் நிறைவுறும் காலம் வெகுதொலைவில் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூத்த வீரத் தளபதிக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

எங்கள் தளபதி "பால்ராஜ்" அண்ணாவே... இறுதி வரை இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தோம். நீங்களும் போய் விட்டீர்களா...

உங்களின் உணர்வு ஊட்டப் பட்ட எங்களின் தேசம் நிச்சயம் எழுந்து நிற்கும்...

ஊங்களின் மூச்சு காற்று பட்ட எம் தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் விடுதலை பெறும்...

இது

நீங்கள் வீரம் புகட்டிய இனம்,

உங்களின் காலடி தடங்கள் மீது

எமது விடியலுக்கான வீறூ கொண்டு நடக்கும் எம்மினம்..

போய் வா மண்ணின் மகனே...

சாவுக்கு அழும் இனமாக அல்ல

எம்மை நீ வளர்த்தாய்

சாவுக்கு அழுவதையே நீ வெறுத்தாய்

எம் மண் இருக்கும் வரை

காற்றாய், மூச்சாய்,

இருப்பய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி இவ்வாறு செய்தி வெளியிட்டிருக்கிறது.

Senior Tamil Tiger commander dies

A senior Tamil Tiger commander in Sri Lanka has died of a sudden heart attack, the rebels have announced.

Three days of mourning have been declared in honour of Brigadier Balraj, as he was known.

A short statement said he had passed away at rebel headquarters in northern Sri Lanka.

He was described as a man who had participated in many major confrontations with the army in the long war in the north of the island.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7411405.stm

Link to comment
Share on other sites

ஆனையிவு என்றவுடன் உங்கள் உருவமே என் கண்களில். ஒற்றைக் காலுடன் துணிவுடன் போரளிகளை வழிநடத்திய தமிழீழத்தின் தளபதியே விழி நிறைந்த நீருடன் வேதனை நிறைந்த உள்ளத்துடன் உமக்கு எனது இதயம் நிறைந்த அஞ்சலிகள்.

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தால்................ மாவீரர்கள் மரிப்பதில்லை!

எம் மண் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள்.

வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறிய வயதில் சாதனைபடைத்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பு ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பு. இப்பொழுது தான் தமிழ்ச்செல்வன் அவர்களை இழந்தோம். அதற்குள் பால்ராஜினை இழப்பு தாங்கமுடியவில்லை.கொடிய நோயினாலும், எதிர்ப்பார்க்காத தாக்குதலினாலும் நாம் இழந்தவை அதிகம். 2005ல் கெளசல்யன். 2006ல் அன்டன் பாலசிங்கம். 2007ல் தமிழ்ச்செல்வன். 2008ல் பால்ராஜ். களமுனையில் பால்ராஜ் நிற்கிறார் என்றால் வெற்றி நிச்சயம் என்று போராளிகள், புலத்தில் உள்ள தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் ,தமிழீழத்தின் மீது பற்றுள்ள உலகத்தமிழர்கள் தைரியத்துடன் இருந்தார்கள். ஊடருப்புத்தாக்குதல் என்றால் பால்ராஜ் என பெருமைப் பட்ட தலைவனை கொடிய நோய் பறித்துவிட்டதே. விதியே உனக்கு சாவு வராதா......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதிக்கு வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பால்ராஜ்ஜுக்கு வீரவவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.