Jump to content

VOIP - சகாய விலையில்


Recommended Posts

VOIP - சகாய விலையில் இந்தியாவிற்கு தொலைப்பேச

இந்த பதிவு techie ஆர்வலர்களுக்கு மட்டுமாக இருக்கலாம்.

வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் யாஹூ மெஸென்ஜரிலோ அல்லது ஸ்கைப் (SKYPE) வழியாகவோ கணனி டூ கணனி வழியாக பேசிக் கொள்வது. இது 100% இணையத்தை பயன்படுத்தி டெலிபோன் எக்ஸேஞ்ச்கள் இல்லாமல் குரலை பரிமாறிக் கொள்வது. குரல்கள் இணையத்தில் பாக்கெட்டுகளாக போகிறது, மூட்டைகளாக போகிறது என்று நுணுக்கி ஆராய அல்ல இந்த பதிவு. எளிய வழியில் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். கணனி குறுக்கீடு இல்லாம் இணையத்தின் வழியாக மட்டும் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். இந்தியாவிற்கு குறைந்த முதலீட்டில்/விலையில் எப்படி வாய்ப்-பின் வழியாக பேசலாம் என்பதை சிறிது அலசலாம்.

Head phone & USB phone & SKYPE phone

packet8_setup_diagram.jpg

ஸ்கைப் வழியாகவோ அல்லது அதைப் போன்ற வேறு ஏதாவது மென்பொருள் மூலமாகவோ கணனி டூ கணனி வழியாக இந்தியாவிற்கு பேசுகிறீர்களா? அப்போ நீங்க கட்டாயம் மைக் சிண்ட்ரோமால் பதிக்கப்பட்டு இருப்பீர்கள். கணனியில் மைக்கை இணைத்து ஹெட்போஃனை வைத்து ஊரில் உள்ளவர்களிடம் பேசுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஹெட்போனே வேண்டாமென்று நினைப்பர்வர்களுக்கு இந்த மாதிரி USB போன்கள் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. அதுவும் ஸ்கைப் பிரபலம் அடைந்த பிறகு ஸ்கைப் போஃன், ஸ்கைப் கர்சீப், ஸ்கைப் ட்ரவுசர் என்று ஏகப்பட்ட அயிட்டங்கள் கிடைக்கிறது. என்ன தான் பிரபலமாக இருந்தாலும் கணனியை ஆன் செய்து மென்பொருளை இயக்கி தான் பேச வேண்டும். கணனி தெரிந்தவர்கள் என்றால் பரவாயில்லை. ஊரில் இருக்கும் கணனி தெரியாத அம்மா அப்பாக்கள் ஸ்கைப் மாதிரியான மென்பொருள்கள் வழியாக பேச வேண்டுமென்றால் ரொம்பவே கஷ்டப்படுவர்கள். இந்த தொல்லைகளே வேண்டாமென்று மகன்களும்/மகள்களும் பழையபடி calling card-களுக்கு சென்று விடுவதுண்டு

Vonage & Sun rocket

அடுத்த வழி மேல் சொன்ன வழியை விட நல்ல வழி. Vonage, sunrocket, packet8 என ஏகப்பட்ட வாய்ப் போஃன் கம்பெனிகள் இருக்கின்றன. வழக்கமான போன் கால்களின் விலையை விட மிக குறைந்த விலைக்கு வாய்ப் கம்பெனிகளால் போன் கால்களை கொடுக்க முடியும். Vonage $24.99/மாதம் -க்கு அமெரிக்கா, கனடா, போர்டோரிக்கோ, சில ஐரோப்பா நாடுகளுக்கு unlimited-ஆக பேச முடியும். அதற்கு ஒரு படி Sunrocket போய் $199-க்கு ஒரு வருடம் முழுவது மேல் சொன்ன இடங்களுக்கு unlimited-ஆக பேசிக்கிட்டேடேடேடேடே இருக்கலாம். இந்த வாய்ப் போன்களால் பெரிய சுதந்திரம் நமக்கு கிடைக்கிறது. உங்களிடம் அகலப்பட்டை (Broadband) இணைய வசதியிருந்தால் போதும். முக்கியமாக கணனி தேவையில்லை. அவர்கள் கொடுக்கும் adapter-ஐ உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் கொண்டுப்போய் adapter-இன் ஒரு முனையை அங்குள்ள அகலப்பட்டையில் இணைத்து, மறுமுனையை ஒரு தொலைப்பேசிக் கருவியுடன் இணைத்து பேசலாம்.

நிறைய நண்பர்கள் ஊருக்கு செல்லும் போது வீட்டில் அகலப்பட்டை இணையத்தை வாங்கி அமெரிக்காவிலிருந்து vonage, sunrocket போன்றவற்றின் adapter-களை இணைத்து விடுகிறார்கள். வழக்கமாக வாய்ப் adapter-களுடன் அந்நாட்டின் உள்ளூர் தொலைப்பேசி எண்ணும் கொடுப்பார்கள். அந்த adapter இந்தியாவில் அகலப்பட்டை இணையத்தில் இணைக்கப்பட்டால் வெளிநாட்டின் உள்ளூர் தொலைப்பேசி எண் வீட்டில். adapter சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருக்கும் வரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு லோக்கல் கால் விலையில் பேசலாம்.

இதில் என்ன குறை என்றால் மாதா மாதமோ இல்லாவிடில் வருசத்திற்கு ஒரு தடவையோ நிறைய பணம் கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் ஊருக்கு வாரம் அரைமணி நேரம் பேசுபவராகயிருந்தால் மாதம் $24.99 + tax கட்டிக் கொண்டிருக்க முடியுமா? அதைவிட calling card-களே மேல் என்று தோன்றும். நீங்கள் தினமும் மணிக்கணக்காக பேசுபவர் என்றால் இந்த ஆப்ஷனை கண்டிப்பாக நாடலாம்.

SIP (Session initiation Protocol) Telephoney

இப்படி மாதக்கணக்கிலோ அல்லது வருடகணக்கிலோ பணம் கட்டாமல் நமக்கு தேவைப்படும் போது மட்டும் பணம்(Prepaid) கட்டி பேசிக்கொள்ளும் வாய்ப் provider-ஐ தேடிக் கொண்டிருந்தேன். இணையத்தில் மேய்ந்ததின் பலனாக வாய்ப் பற்றி நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. SIP protocol என்ற internet protocol-ஐ பயன்படுத்தி ஏகப்பட்ட சர்வீசுகள் கிடைக்கின்றன. இதில் என்ன வசதி என்றால் ஸ்கைப் மாதிரி டெலிபோன் எக்சேஞ்ச் வழியாக போகாத இணைய peer to peer கால்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அதில் அகப்பட்ட ஒரு விசயம் ipvaani. ஒரு analog phone adapter (ATA)-க்கு $85 செலுத்தி இரண்டு adapter-கள் வாங்கி இரு வேறு இடங்களில் அகலப்பட்டை இணையத்தில் இணைத்தால் (கணனி இல்லாமல்) ஹாட்லைன் போல் இந்த இருவரும் எப்போது வேண்டுமானாலும் உரையாடி மகிழலாம். நான் மேல் குறிப்பிட்ட இருவேறு இடங்கள் வெளிநாடு & இந்தியா, சென்னை & திருநெல்வேலி, 7 மேற்குத் தெரு & 8 மேற்குத் தெரு என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இருக்கவேண்டியதெல்லாம் வெறும் அகலப்பட்டை வசதியும், இரு ATA adapter மட்டுமே.

ATA-286.jpg

இப்படியே இன்னொரு நண்பர் இந்த ATA adapter-ஐ வாங்கி இணைத்துக் கொண்டால் அவரிடமும் இலவசமாக பேசலாம்.

IPVanni-யின் குறை: இதில் இன்னும் குறை இருக்கிறது. 1. ATA adapter-ன் விலை கொஞ்சம் அதிகம். one time investment-ஆக எடுத்துக் கொண்டாலும் இன்னும் வளைந்துக் கொடுக்காத சில குறைப்படுகள் இருக்கிறது. 2. இந்த ATA adapter -ன் வழியாக சாதாரண தொலைப்பேசிகளுக்கு (அதாவது எக்சேஞ்ச் வழியாக வரும் தொலைப்பேசிகளுக்கு) பேச முடியாது. அதற்கான வசதியையும் அவர்கள் செய்துக் கொடுக்கவில்லை.

vonage, sunrocket, lingo போன்றவர்கள் அவர்கள் கொடுக்கும் ATA adapter-களை பூட்டி (lock) வைத்து விடுவதால் அந்த ATA adapter-களை வேறு விசயத்திற்கு பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. மேல் சொன்ன வாய்ப் provider-களும் SIP protocol-களை தான் பயன்படுத்துகிறார்கள். இவர்களை போல் அல்லாமல் இன்னும் நிறைய வாய்ப் கம்பெனிகள் “உங்கள் இஷ்டப்பட்ட ATA adapter-ஐ கொண்டு வாருங்கள். எங்களுடன் இணையுங்கள்” என்ற உரக்க கூவி அழைக்கிறார்கள். அவற்றில் சில பேர்

www.fonosip.com

www.gizmoproject.com

www.sipphone.com

www.callcentric.com

www.voipcheap.com

www.webcalldirect.com

இவற்றில் எந்த வாய்ப் கம்பெனியை தேர்ந்தெடுப்பது என்பதற்குள் மண்டை காய்ந்து விடுகிறது. ஒருவர் ஒரு வசதி கொடுத்தால் இன்னொருவர்

அந்த வசதிக் கொடுப்பதில்லை. சிலவற்றில் payment பிரச்சனை என ஏகப்பட்ட குழப்பங்கள். சில ஏமாற்று வேலை செய்யலாம் எனவும் உள்ளுணர்வு சொல்லும்.

இந்த இணையத்தளத்தில் அந்த நாட்டில் இருக்கும் வாய்ப் கம்பெனிகளை பட்டியலிடுகிறார்கள். இந்தியாவில் ஒரு ரூபாய் திட்டத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் முறையை அறிமுகப்படுத்திய கம்பெனிகளும் இருக்கின்றன. அதற்கான பட்டியல் இங்கே.

vonage, sunrocket என்று போகாமல் உங்கள் வீட்டிலும் வாய்ப் இணைப்பு கொடுக்க செய்ய வேண்டியது இது தான்:

1. நீங்கள் செலவழிக்கும் திறன் பொறுத்து ஒரு ATA adapter-ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அந்த ATA adapter வாங்க இந்த தளங்களை நாடலாம். 1 & 2

2. மேல் சொன்ன ஏதாவது வாய்ப் கம்பெனி தளத்தில் கணக்கு தொடங்குங்கள். அந்த தளங்களின் உதவி பக்கத்தில் எப்படி நீங்கள் வாங்கிய adapter–ஐ நிறுவுவது என்ற விளக்கங்கள் கிடைக்கும்.

3. நீங்கள் சாதாரண தொலைப்பேசிகளுக்கு (PSTN lines) பேச வேண்டுமென்றால் கொஞ்சம் பணத்தை உங்கள் கணக்கில் நிரப்பிக் கொள்ள வேண்டியிருக்கும். இது மிக மிக சகாய விலையிலே கிடைக்கும்.

இப்போது உங்கள் வீட்டில் வாய்ப் ரெடி. அதே போல் ஊரில் அகலப்பட்டை வாங்கி மேல் சொன்னப்படி இன்னொரு adapter-ஐ நிறுவுங்கள். அப்புறம் பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கள். adapter to adapter எப்போதுமே இலவசம் தான். நீங்கள் வீட்டில் இல்லாத போது இந்தியாவிலிருந்து யாராவது உங்கள் மொபைலில் பேச வேண்டுமென்றால் அதிகபட்சம் 1 நிமிடத்திற்கு 2 காசு சார்ஜ் பண்ணுவார்கள். So easy.

வாய்ப் போன் பயன்பாட்டில் என்னுடைய அனுபவம்:

பலவித ஆராய்ச்சிக்கு அப்புறம் அமெரிக்காவில் பயன்படுத்த கண்டெடுத்த இரண்டு

1. Grandstream Telephone adapter

2. Callcentric - SIP Provider

இதை சோதித்துப் பார்ப்பதற்கு grandstream phone adpter-ஐ வாங்கினேன். அப்புறம் ஒரு டெலிபோன் கருவியை வாங்கிக் கொண்டேன்.

அப்புறம் www.callcentric.com இணைய தளத்திற்கு சென்று ஒரு கணக்கு தொடங்கினேன். கணக்கு தொடங்கியவுடன் 1777****** என்று ஒரு எண்ணை எனக்கு ஒதுக்கினார்கள். உதாரணத்துக்கு 17772345678 என்று வைத்துக் கொள்வோம். அவர்களுடைய உதவி பக்கத்தில் என்னுடைய Grandstream adapter-ஐ எப்படி நிறுவுவது என்பதை விரிவாகவே கொடுத்திருக்கிறார்கள். அகலப்பட்டை இணையத்துடன் இணைத்து அவர்கள் சொன்னபடி configure செய்ய வேண்டியது தான். adapter-உடன் இணைந்த தொலைப்பேசி கருவியில் டயல் டோன் கேட்டால் நீங்க வெற்றிகரமாக voip-ஐ இணைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அவர்கள் சொல்லியிருக்கும் மாதிரி எண்ணுக்கு அழைத்து எண்ணுடைய தொடர்பு சரியாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் $5 என் கணக்கில் சார்ஜ் செய்தேன். இப்போது என்னால் எந்த ஊருக்கும் இந்த வாய்ப்-பின் மூலம் அழைக்க முடியும். சிங்கப்பூருக்கு 2 காசு, அமெரிக்கா உள்ளூர் அழைப்புக்கு 2 காசு, இந்தியாவின் சாதாரண தொலைப்பேசிக்கு 8.2 காசு என்ற விலையில் அழைக்கலாம். அவுட் கோயிங் ஒகே.

இப்போ இன்கமிங் எப்படி வேலை செய்யும். இதிலிருக்கும் சிக்கல் அவர்கள் கொடுக்கும் 17772345678 என்ற எண்ணை மற்ற தொலைப்பேசியிலிருந்து அழைக்க முடியாது. அதற்கு இருக்கவே இருக்கு sipbroker.com. இந்த இணையதளத்தில் ஏகப்பட்ட தொடர்பு எண்களை அதாவது வேறு வேறு நாடுகளின் தொடர்பு எண்கள் கிடைக்கும். நீங்கள் பண்ண வேண்டியதெல்லாம் ஒரு எண்ணை அழைத்து callcentric-ன் code *462. அதனால் *462 என்பதை உள்ளிட்டு பிறகு எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணை அழுத்தினால் (அதாவது *46217772345678) போதும், இன்கமிங் கால் வர ஆரம்பித்து விடும். callcentric-க்கு *462 என்ற ஆரம்ப எண் இருப்பது போல பலவிதமான வாய்ப் கம்பெனிகளுக்குரிய ஆரம்ப எண்களும் இங்கே கிடைக்கும். ஆகவே எந்த போனிலிருந்தும் உங்கள் வாய்ப் adapter-ஐ அழைக்கலாம்.

இதெல்லாம் வேலைக்காவாது. எனக்கு தனி ஒரு போன் நம்பர் அந்த adapter-க்கு தேவை என்றால் அதற்கு மாதம் $2 முதல் $5 வரை செலவழிக்க வேண்டும். அதுவும் என்னால் முடியாது இலவசமாக தான் வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு www.ipkall.com. இந்த தளத்தில் ஒரு கணக்கு தொடங்கினால் 360 என்று ஆரம்பிக்கும் ஒரு அமெரிக்கா நம்பரை கொடுப்பார்கள் [ஓசியிலே கொடுப்பதால் நீங்க கேட்கும் நம்பர் எல்லாம் கெடைக்காதுங்கோ]. அந்த தளத்தில் போய்

SIP PROXY; in.callcentric.com

SIP number: 17772345678 [உங்க SIP எண்]

என்று உள்ளிட்டு சேமித்து வைத்தால் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கும் கொடுக்கப்படும் 360-***-**** என்ற அமெரிக்கா நம்பரை அழைக்க ரெடியாகிவிடும். அப்புறம் என்ன? எந்த தொலைப்பேசியிலேயிருந்து அந்த எண்ணை அழைத்து ஜமாயுங்க.

எல்லாம் சரி. இதனால் என்னால் எப்படி இந்தியாவிற்கு சீப்பா பேச முடியுது. அது தானே மேட்டரே. நான் செய்ததெல்லாம் இது தான்.

1. நெல்லையில் உள்ள என் வீட்டாரிடன் Rs. 250-க்கு BSNL கிடைக்கும் அகலப்பட்டை இணைப்பை வாங்க சொன்னேன். DSL modem அது இதுவென ஒரு சில ஆயிரம் ஆகியது. ஒகே.

2. வீட்டிற்கு இன்னொரு Grandstream Telephone adapter-ஐ வாங்கினேன்.

3. callcentric.com-ல் இன்னொரு கணக்கு ஆரம்பிக்க இன்னொரு voip எண் கிடைத்தது. எடுத்துக்காட்டுக்கு 17772223456 என்று வைத்துக் கொள்வோமே.

4. அந்த adapter-ஐ சொன்னபடி configure செய்தேன். அதில் $5 சார்ஜ் செய்தேன்.

5. அப்படியே ipkall.com போய் இன்னொரு கணக்கு 17772223456-காக தொடங்க இன்னொரு அமெரிக்கா நம்பர் 360-***-**** என்று கிடைத்தது.

6. ஊருக்கு சென்ற சமயத்தில் அகலப்பட்டை modem-வுடன் இந்த adapter-யும் ஒரு தொலைப்பேசி கருவியும் இணைக்க நெல்லையில் ஒரு அமெரிக்கா நம்பர் (அது தான் அந்த 360-***-****) ரெடி.

7. சில நண்பர்களை 360 எண்ணுக்கு அழைக்கச் சொல்லி இன்கமிங், அவுட்கோயிங்கை உறுதி செய்தேன்.

All set. என் வீட்டில் உள்ளோர் என்னுடன் பேச கனணியை ஆரம்பிக்க வேண்டியதில்லை. என்னுடன் அவர்கள் பேச வேண்டுமென நினைக்கும் போது DSL modem-ஐ சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும் கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் phone adapter-ஐ சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும். சில வினாடிகளில் அதில் இணைக்கப்பட்ட போனில் டயல் டோன் கேட்கும். என் voip எண் 17772345678 அழுத்தினால் மறுகண்டத்தில் இருக்கும் எனக்கு டெலிபோன் மணி ஒலிக்கும். இது முற்றிலும் இலவசம். மணிக்கணக்காக பேசலாம். ஒரு வேளை நான் வீட்டில் இல்லையானால் 1-***-****-**** என்று என் செல்லை அவர்கள் தொடர்புக் கொள்ளலாம். பேசலாம். அவர்கள் அங்கிருந்து என் செல்பேசிக்கு பேசினால் சார்ஜ் பண்ணிய $5 குறைய தான் செய்யும். அதையும் தவிர்க்க செய்ய அவர்களை போனை வைக்க சொல்லி விட்டு அவர்களுக்குரிய 360 எண்ணை என் செல்பேசியிலிருந்து அழைக்கலாம் அல்லது sipbroker முறைப்படி கூட அழைக்கலாம். இப்போது வீட்டில் உள்ளோர் கணனி குறுக்கீடு இல்லாமையால் வெகு இலகுவாக பயன்படுத்த முடிகிறது.

இன்னும் சிக்கனம் பிடிக்க நினைத்தால் ஒரே ஒரு phone adapter-ஐ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு ipkall எண்ணை வாங்கிக் கொண்டு நீங்கள் மறுமுனையில் எந்த தொலைப்பேசியிலிருந்தும் வீட்டிற்கு அழைக்கலாம்.

BSNL Rs 250 ரூபாய் அகலப்பட்டை வசதிக்கு 1GB தகவல் பரிமாற்ற அளவு கொடுக்கிறார்கள். adapter-ல் நீங்க கொடுக்கும் vocoder [voice encoder decoder] பொறுத்து செலவாகும். உங்கள் காலின் வாய்ஸ் குவாலிட்டி நல்ல இருக்க வேண்டுமென்றால் கொஞ்ச அதிகப்படியான தகவல் அளவாக மாறும். எப்படியிருந்தாலும் சராசரியாக 1GB தகவல் பரிமாற்ற அளவில் குறைந்தது 20 மணி நேரமாவது பேசமுடியும் [கணனியில் இணைக்கப்படாமல் இருந்தால்]. அதிக நேரம் பேசுவேனென்றால் Rs 500 திட்டத்திற்கு மாறலாம். 2.5 GB தகவல் பரிமாற்ற அளவுடன் night unlimited என்ற போனஸ் கிடைக்கிறது. இதெல்லாம் இல்லாம உங்களிடன் unlimited அகலப்பட்டை திட்டம் வீட்டில் வைத்திருக்கிறீர்களா? எந்த பிரச்சனையுமில்லை. விடிய விடிய விடிந்த பின்னும் பேசிக்கொண்டேயிருக்கலாம்.

SIP & மென்தொலைப்பேசி

நான் அடிக்கடி பயணம் செய்கிறேன். என்னுடன் மடிகணனி எப்போது இருக்கும். ஹோட்டலில் அடிக்கடி தங்க நேரிடும் போது என் voip எண்ணை என்னுடன் எடுத்துச் செல்ல முடியுமா? என்று கேட்டால் முடியும் என்று சொல்லுவேன். அதற்கு தீர்வு X-lite என்ற மென்பொருள். மேல் சொன்ன adpter–ல் என்ன என்ன configure செய்ய முடியுமோ அதையெல்லாம் இந்த மென்பொருளிலும் பண்ணலாம். என் மடிக்கணனியில் x-lite நிறுவியிருப்பதால் 17772345678 என்ற எண்ணும் எப்போது பயணப்படும். இந்த மென்பொருள் வழியாக என்னால் போன்கால்களை பெறவும் முடியும் போன்கால்களை பண்ணவும் முடியும்.

Disclaimer: நான் voip பற்றி அறிந்ததையும் தெரிந்ததையும் நடைமுறைப்படுத்தியதையும் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். ATA adpter configuration நினைத்த மாதிரி இல்லாமல் சில சமயம் router-களால் பிரச்சனைகள் வரவும் வாய்ப்புள்ளது. மேல் சொன்னவை எல்லாம் உங்கள் சொந்த Risk-ல் செய்து பார்த்துக் கொள்ளவும். பதிவில் சொல்லியபடி செய்து பார்த்து உங்கள் voip முயற்சி எதுவும் வேலை செய்யவில்லை என்றால் நானோ,halwacity.com-ஒ பொறுப்பாக முடியாது. Technical சார்ந்த கேள்விகள் எதாவது வந்தால் எனக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து பின்னூட்ட பதிலாகவோ, பதிவாகவோ சொல்ல முயல்கிறேன். அதுபோல் இணையத்தில் இதைப் பற்றிய விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளும் உங்களுக்கு உதவலாம்.

thanks to http://halwacity.com/blogs/?p=256

படங்கள் என்னால் இணைக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

  • 2 months later...

நன்றி நுணாவிலான் உங்கள் இணைப்பிற்கு

இன்றுதான் உங்கள் இணைப்பைப் பார்த்தேன். நீங்கள் மேலே சொல்லியுள்ள வழிமுறைகளை விட இலகுவான வழிமுறைகள் ஐரோப்பாவில் கைக்கொள்ளப்படுகின்றன. கூடுதலாக ஜேர்மனியில் தயாராகும் Fritzbox Router இதற்கு உதவியாக இருக்கின்றது. அதில் Router உடன் Adapter உம் சேர்ந்து இருக்கின்றது. அதனால் ADSL இணைப்பை Router க்கு இணைத்து Programm செய்து விட்டாலே போதுமானது. Fritzbox Router இல் இரண்டு voip தொலைபேசி இணைப்புக்கள் கொடுக்க முடியும். ஒன்றை உள்வரும் இணைப்பாகவும் மற்றயதை வெளிச் செல்லும் இணைப்பாகவும் பாவிக்க முடியும். உள்வரும் இணைப்பிற்கு voip இன் சில தளங்களில் புதிய தொலைபேசி எண்களைப் பெற்று அதை பதிந்துவிட்டால் போதும். பின்பு கணனியைப் போடாமலேயே சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொள்வது போல் மேற்கொள்ளலம். voip பின் ஏதாவது தளத்திற்குகுச் சென்று 10 Euro கட்டி ஒரு கணக்கை ஆரம்பித்தால் 120 நாட்களுக்கு ஐரோப்பா, கனடா, அமெரரிக்கா போன்ற நாடுகளுக்கு இலவசமாாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்்ளலாம். ஆனால் வாரத்தில் 5 மணித்தியாலம் தான் இலவசம். மேலதிகமாகக கதைப்பதற்கு நிமிடத்திற்கு 1 Euro Cents செலவாகும். ஏனைய நாடுகளுக்கான கட்டன விபரங்கள் அவர்களின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக இலங்கைக்கு நாம் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள விரும்பினால் சாதாரண தொலைபேசிக்கு நிமிடத்திற்கு10 Euro Cents உம் கைத்தொலைபேசிக்கு நிமிடத்திற்கு 09 Euro Cents உம் முடியும்.

பி.கு: வேறு Router பாவிப்பவர்கள் Linksys Adapter வாங்கி பாவிக்கும் Router க்கு இணைப்புக் கொடுத்து Programm செய்து விட்டாலும் கணனி போடாமல் சாதரண தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளலாம். தற்போது Linksys Router இலும் Adapter சேர்ந்தபடி வரத்தொடங்கியுள்ளது. இதுவரை Router வாங்காதவர்கள் இதனை வாங்கினாலும் மேலே சொன்னது போல் பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

என்னதான் சொல்லுறியல் நான் பாவிக்கிற தொலைபேசி ஜரோப்பா முழுவதும் இலவசம் அதோடு அமெரிக்கா,கனடா, அவுஸ்ரேலியா,தாய்லண்ட்,சிங்கப

்பூர்,போன்ற நாடுகளுக்கும் இலவசம், அதோடு இலங்கைக்கு ஒருமாதத்திற்கு 50 நிமிடம் இலவசம் அதற்கு மேல் 0,1யூரோ தான் , இந்தியாவிற்கு ஒருமாதத்திற்கு 100நிமிடம் இலவசம் பின் 0,1யூரோதான் இப்படி பல உள்ளது இதற்கு வீட்டிற்கு internet இருக்கவேண்டும் ஆனால் கணிணிக்கும் இதற்கும் சம்பந்தம்மில்லை வீட்டிற்கு இணைப்பு இருந்தல் சரி.

ஆனால் இவ் இணைப்பிற்கு மாதம் 16யூரோ கட்ட வேண்டும்.... கீழ் உள்ள இணைப்பினுடாக போனால் அது தொடர்பாக அறியலாம்....

http://www.telio.ch/

Link to comment
Share on other sites

கனடாவில் நம்மவர் வளங்குகிறார்கள். மாதம் 9.99 டொலர்

www.sunsonic.ca

நன்றி நுணாவிலான் உங்கள் இணைப்பிற்கு

இன்றுதான் உங்கள் இணைப்பைப் பார்த்தேன். நீங்கள் மேலே சொல்லியுள்ள வழிமுறைகளை விட இலகுவான வழிமுறைகள் ஐரோப்பாவில் கைக்கொள்ளப்படுகின்றன. கூடுதலாக ஜேர்மனியில் தயாராகும் Fritzbox Router இதற்கு உதவியாக இருக்கின்றது. அதில் Router உடன் Adapter உம் சேர்ந்து இருக்கின்றது. அதனால் ADSL இணைப்பை Router க்கு இணைத்து Programm செய்து விட்டாலே போதுமானது. Fritzbox Router இல் இரண்டு voip தொலைபேசி இணைப்புக்கள் கொடுக்க முடியும். ஒன்றை உள்வரும் இணைப்பாகவும் மற்றயதை வெளிச் செல்லும் இணைப்பாகவும் பாவிக்க முடியும். உள்வரும் இணைப்பிற்கு voip இன் சில தளங்களில் புதிய தொலைபேசி எண்களைப் பெற்று அதை பதிந்துவிட்டால் போதும். பின்பு கணனியைப் போடாமலேயே சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொள்வது போல் மேற்கொள்ளலம். voip பின் ஏதாவது தளத்திற்குகுச் சென்று 10 Euro கட்டி ஒரு கணக்கை ஆரம்பித்தால் 120 நாட்களுக்கு ஐரோப்பா, கனடா, அமெரரிக்கா போன்ற நாடுகளுக்கு இலவசமாாக தொலைபேசி அழைப்பை மேற்கொள்்ளலாம். ஆனால் வாரத்தில் 5 மணித்தியாலம் தான் இலவசம். மேலதிகமாகக கதைப்பதற்கு நிமிடத்திற்கு 1 Euro Cents செலவாகும். ஏனைய நாடுகளுக்கான கட்டன விபரங்கள் அவர்களின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக இலங்கைக்கு நாம் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள விரும்பினால் சாதாரண தொலைபேசிக்கு நிமிடத்திற்கு10 Euro Cents உம் கைத்தொலைபேசிக்கு நிமிடத்திற்கு 09 Euro Cents உம் முடியும்.

பி.கு: வேறு Router பாவிப்பவர்கள் Linksys Adapter வாங்கி பாவிக்கும் Router க்கு இணைப்புக் கொடுத்து Programm செய்து விட்டாலும் கணனி போடாமல் சாதரண தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளலாம். தற்போது Linksys Router இலும் Adapter சேர்ந்தபடி வரத்தொடங்கியுள்ளது. இதுவரை Router வாங்காதவர்கள் இதனை வாங்கினாலும் மேலே சொன்னது போல் பாவிக்கலாம்.

Linksys 2100 (router with voip)

Link to comment
Share on other sites

http://www.telio.ch/ : இது என்ன மொழியில எழுதி இருக்கிது கிருபா?

அதுக்கு உள்ள போனால் விளங்கிது இல்ல.

அது நோர்வே மொழியில் உள்ளது நோர்வே நாட்டினருக்கு மட்டும் தான் இவ் வசதியாக இருக்கிறது இதை ஆங்கிலத்தில் இணைய மொழி மாற்றப்பட்டு இந்த தொடரியில் உள்ளது பாருங்கள்.....

http://66.249.91.104/translate?u=http%3A%2F%2Fwww.telio.ch%2Fprivat%2Fhva_er_telio_bredbaandstelefoni&hl=en&ie=UTF8&sl=no&tl=en

Link to comment
Share on other sites

நன்றி கிருபா. நானும் நோர்வே மொழி எண்டுதான் நினைச்சன். எங்களுக்கு அப்ப இதால பயன் இல்லப்போல. நான் வீட்டில வச்சு இருக்கிறது: VOICECHEAP எண்டு ஒண்டு.

Link to comment
Share on other sites

நன்றி கிருபா. நானும் நோர்வே மொழி எண்டுதான் நினைச்சன். எங்களுக்கு அப்ப இதால பயன் இல்லப்போல. நான் வீட்டில வச்சு இருக்கிறது: VOICECHEAP எண்டு ஒண்டு.

நான் voipdiscount என்பதை வைத்திருக்கிறேன் ஏன் என்றால் VOICECHEAP இல் தாய்லாந்து , சிங்கப்பூர்போன்ற நாடுகளுக்கு கைத்தொலைபேசிக்கு காசு, voipdiscount இல் இலவசம் என்பதால் சிறிலங்காவுக்கு VOICECHEAP தான் இலாபம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.