Jump to content

இளம் காற்று


Recommended Posts

தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா இளையோர் அறிவியற்கழகத்தின் பராமரிப்பு நிதித்திரட்டலுக்காக ஒரு நகைச்சுவை நடன நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த்துள்ளது.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய படலைக்குப் படலை புகழ் சாரு அண்ணா அவர்கள்.

மற்றும் தமிழ் இளையோரின் மேற்கத்தைய நடன நிகழ்ச்சிகளுடன் கலக்கும் நகைச்சுவைகளும் உங்களை அசத்த வருகிறது.

webbanner.jpg

விளம்பர இணைப்பு: http://www.youtube.com/watch?v=85rI0NiLoSU

இணையத்தள முகவரி: http://www.tyo-uk.org/ilamkaatru

Link to comment
Share on other sites

நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகள்்

கறுப்பி அக்கா நீங்க போகவில்லையா புரோகிராம் பார்க்க... :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா நீங்க போகவில்லையா புரோகிராம் பார்க்க... :unsure:

அப்ப நான் வரட்டா!!

இந்த கறுப்பி இல்லாம ஒரு புரோகிராம் ஆ,,,,? கட்டாயம் போகனும்.

Link to comment
Share on other sites

இந்த கறுப்பி இல்லாம ஒரு புரோகிராம் ஆ,,,,? கட்டாயம் போகனும்.

அட....அப்ப கறுப்பி அக்கா இல்லாம ஒரு புரோகிராமும் நடக்காது என்று சொல்லுங்கோ இங்கிலந்தில :unsure: ....அப்ப நான் இங்கிலன்ட் வந்தா புரொகிராம் ஒன்றிற்கு வந்தா கறுப்பி அக்காவை காணலாம் என்ன கறுப்பி அக்கா.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் போக வேண்டும். சில இந்தியக் கும்பல்களும், சிங்களக் கும்பல்களும் குரைக்க வெளிக்கிட்டுள்ளார்கள். இளம் காற்று என்பதை, ஈழம் காற்று என்று படித்து புலிக்கு காசு சேர்ப்பதாக ஒப்பாரி வைக்கின்றார்கள்.

இதிலிருந்து,

மொழி பெயர்த்தவனுக்குத் தமிழ் ஒழுங்காகத் தெரியவில்லை என்பதையும், புலம்பெயர் நாடுகளில் தமிழருக்குள் நடப்பதைச் சிங்களப்படைகளும், இந்தியக் கும்பல்களும் அவதானிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதற்கும் அவதானமாக இருங்கள்.

LTTE front outfit attempts to raise funds in London

LONDON: Unfazed by two flopped attempts, a front organisation of the Liberation Tigers of Tamil Eelam is allegedly planning a new show in London to raise funds for the Tiger rebels.

The show called 'Illam Kaatru' (Wind of Eelam) :unsure: is scheduled to be held in the Great Hall in Hatch End in Harrow on March 1 by the Tamil Youth Organisation, which allegedly has links with the banned LTTE, sources said in London on Tuesday.

http://timesofindia.indiatimes.com/World/L...how/2814758.cms

Link to comment
Share on other sites

ஆதரவுக்கு நன்றி உறவுகளே.

பார்த்தோம் பொன்னையா, மேலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் எமக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்கள்.

LTTE front organizations in UK to raise funds for terrorists war against Sri Lankan citizens

பொய்யிலே பிறந்து பொய்யிலே வழர்ந்து.. இது எங்கே போய் முடியப்போகுது என்று தான் தெரியவில்லை. :unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அன்பான ஆதரவுக்கு நன்றி உறவுகளே,

இளம் காற்று எதிர் பார்த்ததை விட சிறப்பாக பிரித்தானியாவின் காவல் துறை மற்றும் Scotland yard இன் வலுத்த பாதுகாப்பின் மத்தியில் வெகு விமர்சையாக நடந்தது.

இளம் காற்றின் படங்கள் மற்றும் அது பற்றி விபரமாக பின்வரும் இணைப்பில் பார்கலாம்: http://www.tyo-uk.org/ilamkaatru

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.