விகடகவி

தினசரி தூறல்கள்...

507 posts in this topic

17 hours ago, விகடகவி said:

வெளிச்ச வீடுகள்
பார்த்து
இருண்டு
போகிறது மனது
ஒரே ஒரு நாள்
உயரம் தொடர்ந்தாளே
என்னோடு!

 

வாவ் சூப்பர்....! tw_blush:

உண்மையாகவே உடலை உரசி மனசை வருடிச் செல்கின்றது வாசனை. அபாரம்....!

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

வந்தும் வராததுமாக
இரவு கூட
தூங்க.. என்
இதயம் மட்டும்
ஏனோ தூங்காமல்
கிடைக்காது என்று
தெரிந்தும்
இருட்டுக்குள்
கண்ணை விட்டு
தேடிக்கொண்டிருக்கிறது
உன்னை..

நீ ..விடியல்
கொண்டு வந்து
இரவு மூடி வைத்துபோன
வெளிச்சம் போல

எனக்குள் உட்கார்ந்து
பிரகாசிக்கிறாய்
உன்னால்தான்
உண்ணவோ
உறங்கவோ
முடியாமல்..சுத்தி
சுழல்கிறேன்..
ஊரே பரிகாசித்தும்
உன்னன்பை 
யாசிக்கிறேன்..
..
வாசித்து அறிவாயென
கண்ணிமைகள் திறந்து வைத்தும்
நேசிக்க மறுத்துவிட்டு
நெடுந்தூரம் போனாயே
வழி அறிந்தாலும் வரமாட்டாய்
வலி அறிந்தாலும் வரமாட்டாய்..

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்
கண்கள் வலியாகி
தூங்கச்செல்லும்

Share this post


Link to post
Share on other sites

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்
கண்கள் வலியாகி
தூங்கச்செல்லும்

வலியுள்ள கண்களால் தூங்க முடியாது கவிஞரே......!

கண்கள் வலியாகி கண்ணீர் சொரியும் .... சரியாய் வரும் என நினைக்கின்றேன்....!  tw_blush:

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் நான் கடன் வாங்கமாட்டேன்tw_blush:tw_blush: lol

நன்றி சுவி 
கருத்து பிழையை திருத்தியமைக்கு 

 

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்

கண்கள் வலியாகி
தூக்கம் கொல்லும்

Share this post


Link to post
Share on other sites

அபாரம் கவிஞரே .... நான் சொல்லியதை விட உங்கள் வரி மிக வலிமையாய் உள்ளது.....!  tw_blush:

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

காற்றே நீ
டாவின்சி
கை தவழ்ந்த
தூரிகையையா..
நீல வானம் மேல்
வெண்முகிலை கலைந்து-இப்படி
வரைந்திருக்கிறாயே
அழகோவியம்!!!

Share this post


Link to post
Share on other sites